• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode Nizhalin Nijam - 19

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Husna

இளவரசர்
SM Exclusive
Joined
Jan 20, 2018
Messages
13,618
Reaction score
27,088
Age
26
Location
Sri Lanka
ஹாய் ஹலோ பிரண்ட்ஸ்....
இத்தனை நாள் பொறுமையாக காத்திருந்த அனைவருக்கும் நன்றி;):love:
images (1).jpeg
43ddd22d4a1f378cf08424b07767a56a.jpgகையில் டிரிப்ஸ் ஏறி கொண்டிருக்க சரோஜா மயக்கத்தில் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள்.


அஜயோ அவளருகில் அவளது தலையை வருடிக் கொடுத்தவாறே கண்கள் கலங்க அமர்ந்திருந்தான்.
ஐந்து நிமிடங்களுக்கு ஒரு தடவை நர்ஸ் ஒருவர் வந்து சரோஜாவின் இதயத்துடிப்பு வீதம் மற்றும் டிரிப்ஸ் ஏறும் வீதத்தை பரிசோதித்து கொண்டிருக்க அஜய் தன் கலங்கிய கண்களை துடைத்து கொண்டே சரோஜாவின் கையை ஆதரவாக வருடிக் கொடுத்தான்.


சரோஜா வைக்கப்பட்டிருந்த அறைக்கு வெளியே வித்யா அழுத வண்ணம் அமர்ந்திருக்க அவரின் ஒரு புறம் கணேஷும் மறுபுறம் கனகாவும் சோகமே மறு உருவமாக அமர்ந்திருந்தனர்.


சற்று தள்ளி ராஜஷேகர் போனில் மும்முரமாக பேசிக்கொண்டிருக்க அஜய் சரோஜா வைக்கப்பட்டிருந்த அறைக்குள் இருந்து தன் முகத்தை அழுந்த துடைத்து கொண்டு வெளியேறி வந்தான்.


அஜயை பார்த்ததும் கணேஷ் வேகமாக அவனருகில் எழுந்து சென்று
"சரோஜா கண் முழிச்சுட்டாளா மாமா?" என ஆவலுடன் கேட்டான்.


இல்லை என்று தலை அசைத்த வண்ணம் அவனை கடந்து சென்ற அஜய் ராஜஷேகரின் அருகில் சென்று நின்றான்.


"டெட் பாடியை எல்லாம் போஸ்ட் மார்டத்திற்கு அனுப்பியாச்சு... இன்னும் ஒரு ஐந்து, ஆறு மணி நேரத்தில் ரிசல்ட் வந்துடும்..." என்று ராஜஷேகர் கூறவும்


"ருத்ரா ம்மா கிட்ட தகவல் சொல்லியாச்சா?" என முகத்தில் எந்தவித உணர்வையும் பிரதிபலிக்காமல் அஜய் கேட்டான்.


"சொல்லியாச்சுபா..."


"ஓஹ் சரி..." என்றவாறே ராஜஷேகரைக் கடந்து சென்றவன் அந்த ஹாஸ்பிடல் தோட்டத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.


சிறிது நேரம் கழித்து அவனின் பின்னால் வந்து நின்ற இன்ஸ்பெக்டர் டேவிட்
"ஸார் நவீன் கண் முழிச்சுட்டாரு..." என்று கூறவும் தன் கண்களை ஒரு முறை இறுக மூடித் திறந்து கொண்டவன் நவீன் வைத்திருந்த அறையை நோக்கி சென்றான்.


நவீன் மெல்ல கண் விழித்து சுற்றிலும் தன் பார்வையை சுழல விட்டு கொண்டிருக்க அவனருகில் சேரை இழுத்துப் போட்டு அமர்ந்து கொண்ட அஜய் டேவிட்டின் புறம் திரும்பி
"எல்லாம் ரெடி தானே?" என்று கேட்டான்.


"எஸ் ஸார்" என்ற டேவிட் நவீனின் புறம் திரும்பி


"நவீன் என்ன நடந்தது ஒரு விடயம் விடாமல் சொல்லுங்க" என்று கூற நவீன் இது வரையில் நடந்த விடயங்களை எல்லாம் மெல்ல மெல்ல கூறத் தொடங்கினான்.


" வாஞ்சிநாதன் ஸாரை எல்லோருக்கும் நல்லவரா, அதே நேரம் எந்த பிரச்சினைக்கும் போகதவராக தான் தெரியும்... ஆனா அது முழுமையாக உண்மை இல்லை...வெளியே எந்தளவுக்கு அவர் நல்லவராக தெரிந்தாரோ அதே அளவுக்கு உள்ளுக்குள்ள அவருக்கு வேற ஒரு கெட்ட முகம் இருக்கு...அரசியல்ல நல்ல பேர் சம்பாதிக்குறது கஷ்டம். வாஞ்சிநாதன் அதை ஈஸியாக சம்பாதித்தாரு...அது மத்தவங்களுக்கு பிடிக்கல அதனால தான் அவர் கட்சி ஆளுங்க அவர் கூட சண்டை போட்டாங்க...இப்படி தான் வெளி உலகிற்கு வாஞ்சிநாதன் கட்சியை விட்டு விலகினதற்கு காரணம் தெரியும்...உண்மையாகவே நடந்தது இது இல்லை...அவரோட ஸ்டீல் பக்டரி அவரோட பரம்பரை சொத்து...அங்கே நடக்குறது வெறும் ஸ்டீல் உற்பத்தி இல்லை போதை மருந்து உற்பத்தி...படிச்சு வேலை இல்லாமல் சுற்றி திரியுற பசங்களுக்கு வேலை வாங்கித் தர்றதா சொல்லி வாஞ்சிநாதன் கூட்டிட்டு போவாரு...சொன்ன மாதிரி வேலையும் வாங்கிக் கொடுப்பார்...ஆனா ஒரு கன்டிஷன் இருக்கும்..."


"என்ன கன்டிஷன்?" குழப்பமாக அஜய் கேட்டான்.


"எந்த இடத்தில் வேலை பார்த்தாலும் வாஞ்சிநாதனுக்கு சப்போர்ட்டா அவருக்கு உதவியாக இருக்கணும்"


"இதெல்லாம் உங்களுக்கு எப்படி தெரியும் நவீன்?"


"ஏன்னா நான் இப்போ பார்த்துட்டு இருக்குற வேலை வாஞ்சிநாதன் எனக்கு வாங்கி கொடுத்தது..." என்ற நவீனின் பார்வை சுவற்றை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தது.


நவீன் சிறு வயதிலேயே தன் தாய், தந்தையை இழந்தவன்.


குடும்பத்தினரும், உறவினர்களும் நவீனை ஓரங்கட்டி விட வாழ வழி இன்றி வீதி வீதியாக ஊர் ஊராக சுற்றி திரிந்தவன் இறுதியாக சென்னையை வந்து சேர்ந்தான்.


பத்து வயது மாத்திரமே ஆன நவீனுக்கு தான் எங்கே இருக்கிறோம் அடுத்து என்ன செய்ய போகிறோம் என்று எதுவுமே தெரியவில்லை.


ஒரு மாத காலமாக மழையிலும், வெயிலிலும் அலைந்து திரிந்தவனை வேலை விடயமாக தன் காரில் சென்று கொண்டிருந்த வாஞ்சிநாதன் கண்டு கொண்டார்.


வாஞ்சிநாதன் அரசியலில் கொடி கட்டிப் பறந்து கொண்டிருந்த காலம் அது.


பல பேர் பாராட்ட பல நல்ல செயல்களை செய்து கொண்டிருந்தவர் அன்று நவீனை பார்த்த மாத்திரத்தில் ஆதரவற்ற ஒருவனுக்கு உதவி செய்து இன்னும் தன் நன் மதிப்பை உயர்த்தி கொள்ளலாம் என்று எண்ணிக் கொண்டு அவனை ஓர் அனாதை இல்லத்தில் சேர்த்து படிக்க வைத்தார்.


உறவினர்களும், ஊரார்களும் ஒதுக்கி வைத்த தன்னை முன் பின் அறியாத ஒருவர் காப்பாற்றி படிக்க வைப்பதை பார்த்து வியந்து போன நவீன் வாஞ்சிநாதனை தன் மனதில் கடவுளுக்கும் மேலாகப் பார்க்கத் தொடங்கினான்.


நாட்கள் போகப் போக நவீனுக்கு உலகம் புரிபடத் தொடங்கியது.


அதிலும் முக்கியமாக வாஞ்சிநாதன் பற்றிய விடயங்கள்.


வீட்டை விட்டு வேலைக்காக ஓடி வந்தவர்கள், பெற்றோர் அரவணைப்பின்றி திரியும் வேலை இல்லாத பட்டதாரிகள் எல்லோரும் வாஞ்சிநாதனின் உதவியோடு பல நல்ல வேலைகளை பெற்றுக் கொண்டு நவீனைப் போலவே வாஞ்சிநாதனை அக மகிழ்ந்து ஒரு உயர்ந்த ஸ்தானத்தில் வைத்து பார்த்து கொண்டிருந்தனர்.


ஆனால் போகப் போக வாஞ்சிநாதனின் துணையால் வேலையில் சேர்ந்த பலர் மர்மமாக காணாமல் போகத் தொடங்கினர்.


நவீன் எம். ஆர் டிடெக்டிவில் இணைந்து கொள்வதற்கு முன்னர் சிறிது காலம் வாஞ்சிநாதனிடம் பி.ஏ வாக பணி புரிந்து வந்தான்.


அந்த சந்தர்ப்பத்திலேயே இந்த நபர்களின் மர்மமான மாயம் நவீனுக்கு தெரிய வந்தது.


வழக்கமாக ஒவ்வொரு மாதமும் வாஞ்சிநாதனைப் பார்க்க வரும் நபர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருவதைப் பார்த்து அங்கு இருந்தவர்களிடம் விசாரித்தவன் இந்த மாயமான செய்தியை அறிந்ததும் உடனடியாக வாஞ்சிநாதனிடம் இதை பற்றி தெரிவித்தான்.


வாஞ்சிநாதனோ அந்த செய்தியை ஒரு பொருட்டாகவே கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் இருந்து விட நவீனுக்கு வாஞ்சிநாதனின் மேல் சிறிது சிறிதாக சந்தேகம் எழத் தொடங்கியது.


ஒரு நாள் மறைந்து இருந்து வாஞ்சிநாதனைப் பின் தொடர்ந்து சென்ற நவீன் அவர்களது ஸ்டீல் பக்டரியின் பின் புறமாக ஒரு குடோனில் பல நபர்கள் சேர்ந்து எதுவோ பொடி போன்ற ஒரு பொருளை வைத்து கொண்டிருப்பதை குழப்பமாக பார்த்து கொண்டு நின்றான்.


அப்போது தான் அவர்கள் பேசுவதை கவனித்தவன் அது போதைப்பொருள் என்பதை கண்டு கொள்ள அந்த நொடி வாஞ்சிநாதன் மேல் அவன் வைத்திருந்த நன்மதிப்பு தவிடுபொடியாகி போனது.


வெளியில் நல்ல மனிதர் வேஷம் போட்டு கொண்டு இன்னொரு புறம் ஊரையும், சமூகத்தையும் ஏமாற்றி கொண்டு இருக்கும் ஒருவரை இத்தனை நாளாக நம்பி இருந்தோமே என்ற கழிவிரக்கம் நவீனின் மனதை ஆக்கிரமித்து கொண்டது.


சிந்தனை வயப்பட்டவனாக நவீன் நின்று கொண்டிருந்த வேளை திடீரென்று அவன் முன்னால் வாஞ்சிநாதன் வந்து நின்றார்.


அதிர்ச்சியோடும், பயத்தோடும் நவீன் வாஞ்சிநாதனைப் பார்க்க அவன் தோளில் தன் கையை போட்டு உள்ளே அழைத்து கொண்டு சென்ற வாஞ்சிநாதன் அவனை பார்த்து சிரித்துக்கொண்டே கேள்வியாக புருவம் உயர்த்தினார்.


"இங்க பாருங்க ஸார்...நீங்க ஏதோ தப்பான வேலை பார்க்குறீங்க...இது சரி இல்லை இதெல்லாம் எதுவும் வேண்டாம் ஸார்...நீங்க எப்போவும் போல நல்லவராக இருந்துடுங்க ஸார் ப்ளீஸ்..." தைரியத்தை வரவழைத்துக் கொண்டு வாஞ்சிநாதனின் கைகளை பற்றி கெஞ்சலாக கூறினான் நவீன்.


"இதோ பாரு டா என் கீழே இத்தனை நாளாக வேலை பார்த்தவன் இப்போ என் கையை பிடித்து எனக்கே புத்தி சொல்லுற அளவுக்கு போயிட்டானா?" கேலியாக வந்த வாஞ்சிநாதனின் வார்த்தைகளில் முகம் கறுத்து போக வாஞ்சிநாதனின் கையில் இருந்த தன் கையை விலக்கி கொண்டவன் தன் தோளில் இருந்த வாஞ்சிநாதனின் மறு கையையும் எடுத்து விட்டு விட்டு சற்று தள்ளி நின்றான்.


"இத்தனை நாள் நீங்க எனக்கு செய்த உதவி எல்லாவற்றுக்கும் நன்றி ஸார்...இனிமேல் ஒரு நிமிஷம் கூட நான் இந்த இடத்தில் வேலை பார்க்க மாட்டேன்... உங்களை கடவுளுக்கு மேலாக என் மனதில் வைத்து பார்த்தேன்...ஆனா ஒரு செக்கன்ல எல்லாவற்றையும் சுக்கு நூறாக உடைச்சுட்டீங்க...நான் வர்றேன் ஸாரி போறேன்..." என்று விட்டு நவீன் அந்த இடத்தை விட்டு வெளியே செல்ல போக அவன் முன்னால் நான்கு, ஐந்து நபர்கள் அவன் வழியை மறித்தவாறு வந்து நின்றனர்.


நவீன் குழப்பமாக தன் பின்னால் நின்ற வாஞ்சிநாதனை திரும்பி பார்த்தான்.


"அது எப்படி ராஜா அவ்வளவு சுலபமாக இந்த இடத்தை விட்டு நீ போக முடியும்? என் கிட்ட ஒரு தரம் வந்துட்டா அதற்கு அப்புறம் என்னை மீறி நீங்க யாருமே போக முடியாது. நீங்க எல்லோரும் பூமராங் மாதிரி...நானாக உங்களை தூக்கி போட்டாலும் சரி நீங்களாகவே என் கிட்ட இருந்து விலகி எங்கேயாவது ஓடி ஒழியப் போனாலும் சரி கடைசியாக ஆரம்பித்த என் கிட்ட தான் வந்து சேருவீங்க...அது தான் உங்க தலையெழுத்து...அதனால இந்த வீர வசனம் பேசுறதை நிறுத்திட்டு எனக்கு சார்பாக வேலை செய்யப் பழகு சரியா?" வாஞ்சிநாதன் புன்னகையோடு நவீனைப் பார்க்க


கோபமாக அவரை நெருங்கி வந்தவன்
"என் உடம்பில் உயிர் இருக்குற வரைக்கும் ஒரு நாளும் நான் இதை பண்ண மாட்டேன்" என்று கூற வாஞ்சிநாதன் சலித்து கொண்டே அங்கிருந்த சாய்வு நாற்காலியில் அமர்ந்து கொண்டார்.


"இதோ பாரு நவீன் சும்மா வம்பு பண்ணாதே...எனக்கு மற்ற பசங்க எல்லோரையும் விட உன் மேல ஒரு படி பாசம் அதிகம்...அது எதனாலனு எனக்கு தெரியாது...சித்துவுக்கு அடுத்ததாக நான் உன்னை தான் என் பையனாக பார்க்குறேன்... அதனால தான் இவ்வளவு பொறுமையாக உன் கூட பேசிட்டு இருக்கேன்...இதுவே வேற எவனாவது இங்க வந்து இருந்தா இப்படி பேசிட்டு இருக்க மாட்டேன் ஒரே வெட்டு தான்..." வாஞ்சிநாதனின் கோபமான வார்த்தைகளை கேட்டு நவீனுக்கு சர்வமும் நடுங்கி போனது.
 




Husna

இளவரசர்
SM Exclusive
Joined
Jan 20, 2018
Messages
13,618
Reaction score
27,088
Age
26
Location
Sri Lanka
"டேய் பசங்களா அவனுங்களை இழுத்துட்டு வாங்கடா..." என்று வாஞ்சிநாதன் கூறவும் நவீனின் பின்னால் நின்ற நபர்களில் இருவர் அங்கிருந்த ஸ்டோர் ரூமினுள் சென்று நான்கு, ஐந்து இளைஞர்களை இழுத்து கொண்டு வந்தனர்.


அரை மயக்கத்தில் நின்ற அந்த இளைஞர்கள் தள்ளாடியபடி வாஞ்சிநாதனின் கால்களின் அருகில் வந்து விழ நவீன் அதிர்ச்சியாக வாஞ்சிநாதனைப் பார்த்தான்.


நவீனைப் பார்த்து புன்னகத்த வாஞ்சிநாதன்
"என்ன நவீன் அப்படி பார்க்குற? இவங்களை எல்லாம் உனக்கு அடையாளம் தெரியலயா? நம்ம பசங்க நவீன்...நீ கூட காணாமல் போயிட்டாங்கனு கொஞ்ச பேரோட லிஸ்ட் கொடுத்தியே... மறந்துட்டியா?" என வாஞ்சிநாதன் கேட்கவும் நவீன் அவனை அறியாமலே இல்லை என்பதை போல தலை அசைத்தான்.


"இவங்களும் உன்னை மாதிரி தான் வேலை எடுத்தோமா, முதலாளிக்கு அடி பணிந்து போனோமானு இல்லாமல் ஓவரா சமூகத்தை பற்றி அக்கறை பட ஆரம்பித்தாங்க...அது தான் நம்ம தயாரிப்பு எப்படி வேலை செய்யுதுனு இந்த சமூக நலன் விரும்பிகளை வைத்தே டெஸ்ட் பண்ணிட்டேன்" என வாஞ்சிநாதன் கூற நவீன் அப்போது தான் நிலைமை தன் கை மீறி போய் விட்டதை உணர்ந்தான்.


வாஞ்சிநாதனிடம் இருந்து இனி அவனால் விலகி செல்ல முடியாது அதற்கு வழியும் இல்லை.


வாஞ்சிநாதனை எதிர்த்து போராடும் அளவுக்கு நவீனிடம் ஆள் பலமோ, உடல் பலமோ எதுவும் கிடையாது.


வாஞ்சிநாதன் தெரிந்தோ, தெரியாமலோ அவனுக்கு ஒரு மறு வாழ்வு ஏற்படுத்தி கொடுத்தவர்.


அவரை எதிர்த்து மறுபடியும் அநாதரவாக திரிவதை விட சரியோ, தவறோ அவர் வார்த்தைக்கு அடி பணிந்து போவதே மேல் என எண்ணி கொண்டவன்
"நீங்க சொல்ற மாதிரி நான் நடந்துக்குறேன் ஸார்...நான் இப்போ என்ன பண்ணணும்??" என்று கேட்டான்.


"சபாஷ்...சபாஷ் டா கண்ணா நீ பிழைச்சுக்குவ..."


"டேய் பசங்களா இவனுங்களை மறுபடியும் ஸ்டோர் ரூம்ல போட்டுடுங்க" என்ற வாஞ்சிநாதன் நவீன் அருகில் வந்து அவன் தோளில் தன் கையை போட்டு கொண்டார்.


"இப்போ கூட இருக்குற உங்களை மாதிரி சில்லறை பசங்களை எல்லாம் சமாளிக்குறது எனக்கு சும்மா தூசு தட்டுற மாதிரி சின்ன வேலை நவீன்...ஆனா அதே மாதிரி போலீஸையும், என் கட்சி ஆளுங்களையும் என்னால சமாளிக்க முடியுமா?"


"இல்லை ஸார்..."


"கரெக்ட் இப்போவே என் கட்சியில் என் மேல சந்தேகப்பட்டு என்னை கண்காணிக்க ஆரம்பிச்சுட்டாங்க...அதனால நாளைக்கே நான் என் கட்சியை விட்டு விலகப்போறேன்"


"ஸார்......."


"எதுக்கு இவ்வளவு ஷாக் ஆகுற! நானே கூலாக தானே இருக்கேன். என் கட்சி ஆளுங்களை எப்படி வாய் மூட வைக்குறதுனு எனக்கு தெரியும்...என் பதவி போயிட்டா அடங்கிடுவானுங்க...பதவியில் இருந்து செய்ய முடியாத எல்லாவற்றையும் பதவியை விட்டு விலகி நான் செய்வேன்"


"ஆனா இதுல நான் உங்களுக்கு எப்படி உதவி பண்ண முடியும்?"


"இது கேள்வி நேரடியாக விஷயத்திற்கு வந்துட்ட பார்த்தியா? இது தான் உன்னோட திறமை... இப்போ நான் தப்பு செய்தால் அதை வெளியில் வராமல் தடுக்க ஒரு ஆளு நமக்கு இருக்கணும் இல்லையா? போலீஸ்ல இருக்குறவங்களை சமாளிக்கலாம். ஆனா போலீஸ்க்கே வேவு பார்த்து கொடுக்க ஒரு கும்பல் இருக்கே"


"சி.பி.ஐ யா??"


"நீ ஏன்டா ராஜா அவ்வளவு பாரதூரமாக போற? போலீஸ் முடிக்காத கேஸை தான் சி.பி.ஐ எடுக்கும்...போலீஸ் அவங்க கிட்ட வர்ற கேஸை சி.பி.ஐ க்கு போகமா தடுக்க தான் பார்ப்பாங்க...அது தான் கால காலமாக நடந்துட்டு வர்ற நடைமுறை...இப்போ சந்தேகத்தின் பேரில் என் மேல எப்போ வேணா போலீஸ்க்கு கேஸ் வரலாம்...கேஸ் பைல் பண்ணவங்க எப்படியோ சுற்றி வளைத்து டிடெக்டிவ்க்கு போவாங்க...ஏன்னா சி.பி.ஐ க்கு போற அளவுக்கு நம்ம ஆளுங்க தைரியமானவங்க இல்ல...அதற்கு போலீஸும் அவ்வளவு ஈஸியாக அனுமதிக்காது...இதற்கு எல்லாம் அப்புறமாக போலீஸ்க்கு ஹெல்ப் பண்ண டிடெக்டிவ் ஜாயின் பண்ணுவாங்க...அங்க தான் நம்ம வேலை தொடங்குது...அதாவது அந்த டிடெக்டிவ்ல நீ ஜாயின் பண்ணணும்...நம்ம போலீஸ் டிபார்ட்மெண்ட்க்கு எப்போவும் ஹெல்ப் பண்ணுறது எம்.ஆர் டிடெக்டிவ் தான்...அது என் பிரண்ட் ராஜஷேகரோட ஆபிஸ்...அங்கே உனக்கு வேலை வாங்கித் தர்றது எனக்கு சுலபம்...பொய்யான ஒரு சர்டிபிகேட் போதும்...அதே மாதிரி நீ அங்க வேலைக்கு சேர்ந்து இந்த முதலாளிக்கு விஸ்வாசமாக இருக்கணும் புரியுதா?"
பாதி புரிந்தும் புரியாமலும் சரியென்று தலை அசைத்து வைத்தான் நவீன்.


மொத்தத்தில் வாஞ்சிநாதனுக்கு எதிராக ஏதாவது வழக்கு அல்லது குற்றம் முன் வைக்கப்பட்டால் அதை ஒன்றும் இல்லாமல் செய்ய வேண்டும் அது தான் நவீனுக்குரிய வேலை.


முதலில் பிடித்தம் இல்லாமல் அந்த வேலையை செய்ய தொடங்கியவன் பின்னாளில் வாஞ்சிநாதன் தனக்கு கொடுத்த சலுகைகள் எல்லாவற்றையும் பார்த்து வியந்து போய் மொத்தமாக வாஞ்சிநாதனுக்கு கட்டுப்பட்டு போனான்.


மொத்தத்தில் வாஞ்சிநாதன் ஆட்டுவிக்கும் பொம்மையாகி போன நவீன் பல தடயங்களை இல்லாமல் செய்து வாஞ்சிநாதன் பெயரளவில் கூட தவறானவர் இல்லை என்று இந்த உலகை நம்ப வைத்து கொண்டு இருந்தான்.


"எக்ஸ்கியுஸ் மீ ஸார்..." என்றவாறு நர்ஸ் ஒருவர் அவர்கள் இருந்த அறைக்குள் நுழைய தற்காலிகமாக நவீன் மற்றும் அஜய் தங்கள் பேசுவதை நிறுத்தி வைத்திருந்தனர்.


நர்ஸ் எல்லாவற்றையும் ஒரு தடவை பரிசோதித்து விட்டு வெளியேறி செல்ல மீண்டும் நவீனின் முகம் பார்த்த அஜய்
"இது எல்லாம் சரி...ஆனா திரு, லலிதா, ப்ரியா இவங்களுக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம்?? அவங்களை எதுக்கு கொலை பண்ணாங்க??" என கேட்டான்.


"லலிதா மேடம் தான் வாஞ்சிநாதனுக்கு பல அனாதை பசங்களை என்னை மாதிரி அடிமையாக அனுப்ப உதவி செய்யுறவங்க...என்னை ஒரு ஆசிரமத்தில் சேர்த்ததாக சொன்னேன் இல்லையா? அது தான் அன்னை இல்லம்...என்னை மாதிரி பல பசங்க அங்க வந்து இருக்காங்க...ஆனா என் மேல வாஞ்சிநாதன் வைத்த நம்பிக்கை, பாசம் இது வரைக்கும் வேற யாருக்கும் கிடைத்தது இல்லை. அதுக்கு காரணம் எனக்கும் தெரியாது, அவருக்கும் தெரியாது. கடவுள் போட்ட மர்ம முடிச்சு தான் வாஞ்சிநாதன் என் மேல வைத்த நம்பிக்கை. லலிதா மேடமோட ஆசிரமத்திற்கு ப்ரியா அடிக்கடி வருவாங்க...நிறைய ஹெல்ப் பண்ணுவாங்க...அப்படி ஒரு நாள் அவங்க வரும் போது ஒரு பையனை போதை மருந்து டெஸ்ட் பண்ண இழுத்துட்டு போறதைப் பார்த்துட்டாங்க...அதை பார்த்துட்டு லலிதா மேடமோட சண்டை போட்டாங்க...போலீஸ்க்கு போறதாக சொல்லிட்டு ப்ரியா போனதும் லலிதா மேடம் உடனே வாஞ்சிநாதன் கிட்ட இதை சொன்னாங்க...ஒரு இரண்டு நாள் கழித்து வாஞ்சிநாதன் எனக்கு போன் பண்ணி ஒரு கிஃப்ட் பார்சல் தர்றேன் நம்ம ஆசிரமத்தில் இருக்குற ஒரு பையன் கிட்ட கொடுத்து ப்ரியா வீட்டில் கொடுக்க சொல்லு காலையில் உன்னை பிக் அப் பண்ண நானே கார் அனுப்புறேன்னு சொன்னார்... நானும் ஏன், எதுக்குனு கேட்காமலேயே அவர் சொன்னதை பண்ணேன்...அடுத்த நாள் ப்ரியா கொலை செய்யப்பட்ட நியூஸ் எனக்கு கிடைத்தது...வாஞ்சிநாதன் ஸார் கிட்ட இதை பற்றி பேசலாம்னு போனா அவர் என் பேச்சை காதில் எடுக்கல...மறுபடியும் எனக்கு பழைய மாதிரி குற்றவுணர்ச்சி வந்தது...



இந்த நேரத்தில் தான் எனக்கு கார்த்திகா மேல லவ் வந்தது...அதை பற்றி சரோஜா கிட்ட சொன்னேன்...அவங்க என்னால எதுவும் பண்ண முடியாதுனு சொல்லவும் தான் நான் பண்ண தப்பு எனக்கு கொஞ்சம் கொஞ்சமாக புரியத் தொடங்கியது..."


"அதனால தான் எங்க நிச்சயதார்த்தம் அன்னைக்கு அவ்வளவு சோகமாக எங்களைப் பார்த்துட்டு போனிங்களா?"


"ஆமா ஸார்...ஒரே மன கஷ்டமாக இருந்தது...நான் சரியாக இருந்திருந்தால் எனக்கும் நல்ல வாழ்க்கை கிடைத்து இருக்குமேனு தோணுச்சு...உடனே அங்கே இருந்து கிளம்பிட்டேன்...அந்த இடத்தை விட்டு விலகின என்னால வாஞ்சிநாதனை விட்டு விலக முடியல...அவர் சொன்ன வார்த்தைகள் இன்னும் எனக்கு கேட்டுட்டே இருக்கு...அதனால அவருக்கே தெரியாமல் அவரை போலீஸ் கிட்ட மாட்டி விடனும்னு முயற்சி பண்ணேன்...ஆனா எதுவும் சரி வரல. அதற்கு அப்புறம் எனக்கு தெரியாமலே லலிதா,திரு இரண்டு பேரையும் கொன்னுட்டாங்க...என்னால முடிந்த அளவு தடயங்களை தேடுனேன் கிடைக்கல...அப்போ தான் உங்க கல்யாணத்துக்கு வந்து இருந்தப்போ சரோஜா வாஞ்சிநாதன் பற்றி சொன்னா... எனக்கு உடனே அவரை பாலோ பண்ணி போனா இந்த கொலை சம்பந்தமாக ஏதாவது தகவல் கிடைக்கும்னு தோணவும் சரோஜா கிட்ட கூட சொல்லாமல் வாஞ்சிநாதனை தொடர்ந்து போனேன்...ஆனா வாஞ்சிநாதன் மறுபடியும் என்னை கண்டுபிடித்து அந்த குடோனில் அடைச்சு வைத்துட்டாரு...அதற்கு அப்புறம் எனக்கு என்ன ஆச்சுன்னு தெரியல...கண் முழிச்சு பார்த்தப்போ சரோஜாவை நாலு பேர் இழுத்துட்டு வந்தாங்க அப்போ..."


"அஜய் சரோஜாவுக்கு சீரியசாக இருக்கு சீக்கிரமாக வா...." பதட்டத்துடன் அறை வாயிலில் நின்ற ராஜஷேகரை அதிர்ச்சியாக பார்த்த அஜய் வேகமாக சரோஜாவை வைத்திருந்த அறையை நோக்கி ஓடி சென்றான்.....
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top