• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode Nizhalin Nijam - 20 [Pre- final]

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Husna

இளவரசர்
SM Exclusive
Joined
Jan 20, 2018
Messages
13,618
Reaction score
27,088
Age
26
Location
Sri Lanka
ஹாய் பிரண்ட்ஸ்....
இன்னும் இரண்டு, மூன்று நாட்களுக்கு கொஞ்சம் அதிகமாகவே வேலை இருப்பதனால் இன்னைக்கு ப்ரீ ஃபைனல் அப்டேட் போட்டுடுறேன்....
இறுதி அப்டேட்டோடு கூடிய விரைவில் உங்களை சந்திக்கிறேன் பிரண்ட்ஸ்.....
 




Husna

இளவரசர்
SM Exclusive
Joined
Jan 20, 2018
Messages
13,618
Reaction score
27,088
Age
26
Location
Sri Lanka
சரோஜாவின் இதயத்துடிப்பு வீதம் குறைந்து கொண்டே சென்று கொண்டிருக்க இரண்டு, மூன்று மருத்துவர்கள் சேர்ந்து சரோஜாவை பழைய நிலைக்கு கொண்டு வர போராடிக் கொண்டிருந்தனர்.


வித்யா பதட்டத்துடன் கணேஷின் கைகளை இறுக பற்றி கொள்ள கணேஷ் தவிப்போடு அஜயை பார்த்து கொண்டு நின்றான்.


உள்ளே என்ன நடக்கிறது என்று தெரியாமல் அஜய் பயத்தோடும், தவிப்புடனும் சரோஜா வைக்கப்பட்டிருந்த அறை வாயிலில் நின்று கொண்டிருக்க சரியாக ஒரு மணி நேரம் கழித்து மருத்துவர் ஒருவர் அந்த அறையில் இருந்து வெளியே வந்தார்.


"டாக்டர் சரோஜாவுக்கு என்ன ஆச்சு?? எதுவும் ஆபத்து இல்லை தானே??" பதட்டத்துடன் கேட்ட அஜயின் தோளில் ஆதரவாக கை வைத்த டாக்டர்


"ஐ யம் ஸாரி அஜய்..." என்று கூற சுற்றி நின்ற அனைவரும் அதிர்ச்சியாக அந்த டாக்டரைப் பார்த்தனர்.


"டாக்டர் என்ன சொல்லுறீங்க?? என் பொண்ணுக்கு என்ன ஆச்சு?? கணேஷ் அவங்க என்னடா சொல்லுறாங்க?? சரோஜாவுக்கு என்ன ஆச்சுனு சொல்ல சொல்லுடா?? என் பொண்ணுக்கு என்ன ஆச்சு?? சரோஜா....சரோஜா...." பதட்டத்துடனும், அழுகையுடனும் நின்ற தன் அன்னையை ஆதரவாக அணைத்துக் கொண்ட கணேஷ்


"ம்மா சரோஜாவுக்கு எதுவும் ஆகாது ம்மா...நீ கொஞ்சம் பதட்டப்படாம இரும்மா...." என சமாதானப்படுத்தியவன்


டாக்டரின் புறம் திரும்பி
"சரோஜாவுக்கு என்ன ஆச்சு டாக்டர்??" என்று கேட்டான்.


"அவங்களுக்கு ஓவர் டொக்ஷினான போதை மருந்து கொடுத்து இருக்காங்க....நாங்க அவங்களை இங்க அட்மிட் பண்ணதுமே அதை கண்டு பிடித்து அதற்கு மருந்தா அன்டி டொக்ஷின் கொடுத்தோம்....பட் அது அந்த டொக்ஷின் அளவை விட கம்மியாக இருந்திருக்கு....அதை நர்ஸ் சரியாக கவனிக்காம விட்டுட்டாங்க....அவங்க உடம்பில் எஞ்சி இருந்த அந்த போதை மருந்து தான் இப்போ அவங்க ஹார்ட் பீட்டை லோ ஆக்கிடுச்சு...இப்போ மறுபடியும் நாங்க அன்டி டொக்ஷின் கொடுத்தோம்...அவங்க பழைய நிலைக்கு வர்றதுக்கு எப்படியும் ஒரு 24 டூ 48 மணி நேரம் ஆகும்...எங்க மேல தான் பிழை...ஆரம்பத்தில் சரியான அளவில் மருந்து கொடுத்து இருந்தா இந்த கிரிடிக்கல் ஸ்டேஜ் வந்து இருக்காது...அதனால தான் நான் உங்க கிட்ட மன்னிப்பு கேட்டேன்....ஐ யம் ஸாரி அஜய்...." என்று அந்த டாக்டர் கூறவும் கண்கள் கலங்க அங்கிருந்த நாற்காலியில் கால்கள் தள்ளாட அமர்ந்தான் அஜய்.


ராஜஷேகர் அஜயின் அருகில் வந்து நிற்க அத்தனை நேரம் மனதிற்குள் வெதும்பி கொண்டிருந்தவன் அவர் வயிற்றில் முகம் புதைத்து கண்ணீர் விடத் தொடங்கினான்.


கனகா, வித்யா மற்றும் கணேஷ் கூட அஜயின் அந்த தோற்றத்தை பார்த்து மௌனமாக கண்ணீர் வடித்து கொண்டு நின்றனர்.


எதற்குமே கலங்காத தன் மகன் முதன்முதலாக கண்ணீர் விட்டு அழுவதை பார்த்த ராஜஷேகர் அந்த நொடி சரோஜாவின் மேல் அஜய் வைத்திருந்த அன்பை எண்ணி வியந்து போனார்.


தன் கண்களை துடைத்து கொண்டே அஜயின் முகத்தை நிமிர்த்தியவர்
"எல்லோரையும் தைரியமாக இருக்க சொன்ன நீயே இப்படி உடைந்து போகலாமா அஜய்?? சரோஜா ரொம்ப தைரியமான பொண்ணு...அவளுக்கு எதுவும் ஆகாதுனு கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நீ தானே சொன்ன....இப்போ நீ அழுவுறதை பார்த்தா அது உண்மை இல்லையோ??" கேள்வியாக அஜயை பார்க்க அவசரமாக தன் கண்களை துடைத்து கொண்டு எழுந்து நின்று ராஜஷேகரை நிமிர்ந்து பார்த்தவன்


"நான் அப்போ சொன்னது தான் இப்போவும் சொல்லுறேன்....சரோஜாவுக்கு எதுவும் ஆகாது...எதுவும் ஆக நான் விட மாட்டேன்....அம்மா, அத்தை நீங்க எல்லோரும் காலையில் இருந்து எதுவுமே சாப்பிடலயே....கணேஷ் நீ அம்மாவையும், அத்தையையும் வீட்டுக்கு கூட்டிட்டு போ....வீட்டுக்கு போய் குளித்து ப்ரெஸ் ஆகிட்டு ஈவ்னிங் அவங்களை கூட்டிட்டு வா....அப்பாவும், நானும் இங்க ஹாஸ்பிடல்ல இருக்கோம் நீங்க போயிட்டு வாங்க..." என்றவாறே மறுப்பு கூறிய கனகாவையும், வித்யாவையும் காரில் ஏற்றி அனுப்பி வைத்தவன் மறுபடியும் சரோஜா வைக்கப்பட்டிருந்த அறைக்கு முன்னால் வந்து நின்று அங்கிருந்த கண்ணாடி தடுப்பின் வழியாக சரோஜாவை பார்த்து கொண்டு நின்றான்.


சரோஜாவையே பார்த்து கொண்டு நின்ற அஜயின் நினைவுகளோ சுமார் பதினைந்து மணி நேரங்களுக்கு முன்னர் நடந்த நிகழ்வுகளை நோக்கி நகர்ந்து சென்றது.


சித்தார்த்திடம் போன் பேசி விட்டு வைத்த பின்பும் அஜயின் மனம் ஏதோ ஒரு இனம் புரியாத உணர்வில் சிக்கி தவித்தது.


சிறிது நேரம் கண்களை மூடி யோசித்தவன் சட்டென்று தன் கண்களை திறந்து
"வினோத்...சித்தார்த்தோட போன் நம்பரையும் ட்ரேஸ் அவுட் பண்ணுங்க....எப்படியும் வாஞ்சிநாதன் இருக்குற இடத்திற்கு கண்டிப்பாக சித்தார்த் போவான்....அவனை வைத்து தான் வாஞ்சிநாதனைப் பிடிக்க முடியும்..." என்று கூற
அஜயினால் வினோத் என்று அழைக்கப்பட்ட நபர்


"ஓகே ஸார்..." என அஜயை பார்த்து கூறி விட்டு சித்தார்த்தின் போன் நம்பரையும் கண்காணிக்க தொடங்கினர்.


அஜய் மும்முரமாக இந்த வேலைகளில் ஈடுபட்டு கொண்டிருக்க அவனது தொலைபேசியோ விடாமல் அடித்துக் கொண்டு இருந்தது.


வீட்டில் இருந்து அழைப்பு வருவதைக் கவனித்தவன்
"இப்போ எதுக்கு வீட்டில் இருந்து போன் பண்ணுறாங்க? இருக்குற டென்ஷன்ல ஏதாவது கத்தி வைத்தாலும் வைப்பேன்...கொஞ்ச நேரம் கழித்து போன் பண்ணி பேசலாம்..." என நினைத்து கொண்டு அந்த அழைப்பை கட் செய்தான்.


மறுபடியும் மறுபடியும் வீட்டில் இருந்து அழைப்பு வந்து கொண்டே இருக்க அஜயின் பொறுமை கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து செல்ல பார்த்தது.


ஆழ்ந்த மூச்சுக்களை விட்டு தன்னை சமன் செய்து கொண்டவன் போனை அட்டன்ட் செய்து காதில் வைத்ததும் தான் தாமதம் மறுமுனையில் கனகா பதட்டத்துடன் பேசத் தொடங்கினார்.


"டேய் அஜய் எங்கே டா போன? எவ்வளவு நேரமாக போன் பண்ணுறேன்...சரோஜாவும் போனை எடுக்க மாட்டேங்குறா...நீயும் எடுக்க மாட்டேங்குறா...எங்க இருக்கீங்க இரண்டு பேரும்?" என்ற கனகாவின் கேள்வியில் அதிர்ச்சியான அஜய்


"இரண்டு பேருமா? யார் இரண்டு பேர்? சரோஜா வீட்டில் தானே இருக்கா..." குழப்பமாக வந்த அஜயின் பதிலில் கனகா திகைத்து போய் நின்றார்.


"ம்மா...ம்மா...என்ன ஆச்சு? சரோஜா எங்கே?" அதட்டலாக வந்த அஜயின் குரலில் தன்னை மீட்டு கொண்ட கனகா


"டேய் அஜய் சரோஜா உண்மையாகவே உன் கூட இல்லையா? வீடு முழுவதும் தேடி பார்த்துட்டு வெளியே தோட்டத்திலும் சரோஜாவைப் பார்த்தேன்...அவ இல்லை...அவ ஸ்கூட்டரும் இல்லை...ஒரு வேளை அவங்க வீட்டுக்கு போய் இருக்கலாம்னு அங்கேயும் போய் கேட்டேன்...அங்கேயும் வரலனு சொன்னாங்க...ஒரு வேளை நீங்க இரண்டு பேரும் ஒண்ணா போய் இருக்கீங்களோ தெரியாதுனு தான் ஒரு மணி நேரமாக உனக்கு போன் பண்ணேன்...நீ என்னடானா இப்படி சொல்லுற...இப்போ சரோஜாவை எங்கேனுடா போய் தேடுறது? எங்கே போனாலோ தெரியலையே..." பதட்டத்துடனும், தவிப்புடனும் கூறி கொண்டிருக்க
அஜய் கனகா கூறிய சரோஜாவைக் காணவில்லை என்ற வார்த்தைகளிலேயே அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றான்.


எத்தனை நேரமாக அஜய் அவ்வாறே நின்றான் என்பது அவனுக்கே தெரியவில்லை.


ராஜஷேகர் ஸ்டேஷனுக்கு வந்து அதிர்ச்சியாக நின்ற அஜயின் தோளில் கை வைத்த பின்னரே அஜய் தன் சுய உணர்வை அடைந்தான்.


"என்னாச்சு அஜய்?" என ராஜஷேகர் கேட்கவும் தன் கையில் இருந்த போனை ராஜஷேகரிடம் கொடுத்தவன் அங்கிருந்த நாற்காலியில் தலையை இரு கைகளாலும் தாங்கிக் கொண்டு அமர்ந்தான்.


கனகா சொன்ன செய்தியை கேட்டு அதிர்ச்சியாக அஜயை நிமிர்ந்து பார்த்த ராஜஷேகர் கனகாவை சமாதானப்படுத்த ஓரிரு வார்த்தைகள் பேசி விட்டு அஜயின் அருகில் வந்து நின்றார்.


"அஜய்...." ராஜஷேகர் தவிப்போடு அஜயின் தோளில் கை வைக்க


எந்தவித உணர்வும் இன்றி அவரை நிமிர்ந்து பார்த்தவன்
"அடுத்து என்ன செய்யப்போறேன்னே தெரியலப்பா...." என்று கூற
அவனருகில் இருந்த மற்ற நாற்காலியில் அமர்ந்த ராஜஷேகர் அஜயை கூர்மையாக நோக்கினார்.


ராஜஷேகரையே சிறிது நேரம் பார்த்து கொண்டிருந்தவன்
"நான் ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டேன்...சரோஜாவை காணவில்லைனு சொன்னதும் ஒரு சராசரி ஹஸ்பண்டா நான் உடைந்து போய் இருந்துட்டேன்....நான் ஒரு போலீஸ் ஆபீஸராக தான் இனி இந்த கேஸை பார்க்கணும்....சரோஜாவோட ஹஸ்பண்டா இல்லை..." என்று கூற


அவனது தோளில் தட்டி கொடுத்த ராஜஷேகர்
"இதற்காக தான் நான் எதுவும் பேசாமல் உன்னை பார்த்துட்டு இருந்தேன்...எந்த ஒரு இக்கட்டான சூழ்நிலையிலும் நாம நம்ம பீலிங்க்ஸை வெளிக்காட்டி அது பின்னால் போக ட்ரை பண்ணா நிச்சயமாக நம்ம நினைச்சதை சாதிக்க முடியாது...அந்த பீலிங்க்ஸையே கட்டுப்படுத்தக் கூடிய ஒரே விஷயம் நம்ம மைண்ட் கிட்ட இருக்கு...." என்று கூறியவர்


அவன் நெஞ்சில் கை வைத்து சுட்டிக் காட்டி
"இங்க இருந்து யோசிக்காதே...."
"இங்க இருந்து யோசி...." என அவன் தலையில் ஒற்றை விரல் வைத்து சுட்டிக் காட்டினார்.


"வாஞ்சிநாதன் பற்றி டீடெய்ல்ஸ் கேட்டியே அது எல்லாம் இந்த பைலில் இருக்கு...இதை உன் கிட்ட கொடுத்துட்டு போகலாம்னு வந்தா இங்க பிரச்சினை ரொம்ப பெரிதாக போயிட்டு இருக்கு போல இருக்கு...இப்போ அடுத்து என்ன செய்ய போற அஜய்?" என ராஜஷேகர் கேட்கவும்


அவர் கொடுத்த பைலை வாங்கி பார்த்தவன் சட்டென்று அந்த பைலை மூடி விட்டு ராஜஷேகரின் புறம் திரும்பி
"எஸ் நான் கண்டுபிடிச்சுட்டேன்...சரோஜா இன்னைக்கு காலையில் என் கிட்ட பேசிட்டு இருக்கும் போது நைட் தோட்டத்தில் ஏதோ சத்தம் கேட்டதுனு சொன்னா...அது கண்டிப்பாக என்னை கண்காணிக்க வாஞ்சிநாதன் அனுப்பிய ஆட்களோட சத்தமாக தான் இருக்கும்...இன்னைக்கு காலையிலேயும் அதே சத்தம் அவளுக்கு கேட்டு இருக்கலாம்...ஒரு வேளை நான் கெஸ் பண்ணது கரெக்ட்னா சரோஜா இப்போ வாஞ்சிநாதன் கஸ்டடியில் தான் இருப்பா...அப்பா இனி ஒரு நிமிஷம் கூட நாம தாமதிக்க கூடாது...ஏற்கனவே நவீனையும் மிஸ் பண்ணிட்டோம்....இப்போ சரோஜா...அடுத்து வாஞ்சிநாதன் தவறான காரியம் எதுவும் செய்ய முன்னாடி நாம வாஞ்சிநாதனைக் கண்டு பிடித்தே ஆகணும்..." என்றவன்


"வினோத் இப்போ ஒரு நம்பர் தர்றேன்...அதோட முழு தகவலும் எனக்கு கொடுங்க..." என்று விட்டு அடுத்த கட்ட வேலைகளை மும்முரமாக கவனிக்க தொடங்கினான்.
 




Husna

இளவரசர்
SM Exclusive
Joined
Jan 20, 2018
Messages
13,618
Reaction score
27,088
Age
26
Location
Sri Lanka
ராஜஷேகரின் மனதிற்குள்ளும் ஒரு வித பதட்டம் இருந்தாலும் அதை வெளிக்காட்டி கொள்ளாமல் அஜயோடு இணைந்து உதவி செய்து கொண்டிருந்தவர் முகம் அவ்வப்போது ஏதோ ஒரு சிந்தனையில் மூழ்கிப் போவதை அஜய் கண்காணித்த வண்ணம் நின்றான்.


ராஜஷேகராக சொல்லட்டும் என்று காத்திருந்த அஜய் அவர் அதை பற்றி எதுவும் கூறாமல் இருக்க ராஜஷேகரின் அருகில் வந்து நின்றவன்
"என்ன விஷயம் சொல்லுங்கப்பா? எதற்கு இவ்வளவு தயங்குறீங்க?" என்று கேட்கவும்


பெருமிதத்துடன் அவனைப் பார்த்த ராஜஷேகர்
"நான் சொல்லாமலேயே என் மனசில் ஏதோ இருக்குன்னு கண்டு பிடிச்சுட்ட...சபாஷ்டா கண்ணா..." என்றவர்


சுற்றிலும் ஒரு பார்வை பார்த்து விட்டு
"அந்த நவீன் இருக்கானே...."


"ஸார் நீங்க சொன்ன நம்பரோட டீடெய்ல்ஸ் எடுத்தாச்சு..." என்றவாறு வினோத் வந்து நிற்க ராஜஷேகரின் பேச்சு தடைப் பட்டு போனது மட்டுமின்றி நவீனைப் பற்றிய உண்மை நிலை அஜய்க்கு அந்த தருணத்தில் தெரியப்படாமலே போனது.


"கடைசியாக தாம்பரத்தை ஒட்டி இருக்குற ஒரு வி.ஐ.பி ஏரியாவில் தான் இந்த நம்பருக்கு டவர் காண்பிக்குது...இப்போ போன் பண்ணா அந்த நம்பருக்கு ரிங்க் போகுது...ஆனா யாரும் அட்டன்ட் பண்ணல..." என வினோத் கூறவும்


சில நிமிடங்கள் யோசித்த அஜய்
"வினோத் நீங்க நான் கொடுத்த மூணு நம்பரையும் தொடர்ந்து பார்த்து அதோட மூவ்மெண்ட் பற்றி எனக்கு ஐந்து நிமிஷத்துக்கு ஒரு தடவை சொல்லிட்டே இருங்க...டேவிட்...சரவணன்...மருது...நீங்க எல்லோரும் என் கூட வாங்க...இன்னொரு ஜீப்பில் மற்ற கான்ஸ்டபிள்ஸை வரச் சொல்லுங்க...கம் ஆன் பாஸ்ட்..." என்றவன்


ராஜஷேகரின் அருகில் வந்து
"அப்பா நீங்க ஸ்டேஷனில் இருந்துக்கோங்க...ஏதாவது தகவல் உங்களுக்கு கிடைச்சா உடனே எனக்கு இன்பார்ம் பண்ணுங்க..." என்று விட்டு சென்று விட ராஜஷேகர் ஸ்டேஷனில் இருந்து வெளியேறி சென்ற அஜயையே பார்த்து கொண்டு நின்றார்.


சரோஜாவின் போன் இறுதியாக டவர் காண்பித்த இடத்திற்கு வந்து சேர்ந்த அஜய் கவனிப்பாரற்று விழுந்து கிடந்த சரோஜாவின் ஸ்கூட்டரின் அருகில் வேகமாக ஓடி வந்தான்.


சுற்றிலும் ஆள் நடமாட்டமே இல்லாத அந்த இடத்தில் வீதியின் ஒரு புறம் அடுக்கு மாடி வீடுகள் ஒரு சில இருக்க மறுபுறம் வெறும் மரங்களும், புதர்களும் நிறைந்து இருந்தது.


சுற்றிலும் தன் பார்வையை சுழல விட்ட அஜய் அங்கிருந்த வீட்டில் தெருவில் நடப்பவற்றை கண்காணிக்கும் வகையிலான சிசிடிவி கேமரா இருப்பதை பார்த்து விட்டு அந்த வீட்டை நோக்கி சென்றான்.


போலீசார் வந்து இருப்பதை பார்த்து அந்த வீட்டில் இருந்த நபர் எதுவும் மறுப்பு கூறாமல் சிசிடிவி பூட்டேஜ்களை காண்பிக்க அதில் தெரிந்த அந்த காட்சியை பார்த்து அஜயின் கை முஷ்டி இறுகியது.


சரோஜா தன்னுடைய ஸ்கூட்டரை ஒரு வேனின் முன்னால் வழி மறித்தவாறு வந்து நிற்க அதில் இருந்து இறங்கிய நான்கு, ஐந்து நபர்கள் சரோஜாவோடு எதுவோ கோபமாக பேசிக் கொண்டு நின்றனர்.


பேசி கொண்டு இருக்கும் போதே அந்த நபர்களில் ஒருவன் தன்னுடைய போனை எடுத்து பேசி விட்டு சரோஜாவின் அருகில் வந்து வேகமாக அவளை அறைந்தான்.


அவன் அறைந்த வேகத்தில் சரோஜா மயக்கமடைந்து கீழே விழ அந்த வேனில் சரோஜாவை ஏற்றிக் கொண்டு அவர்கள் சென்றிருந்தனர்.


பக்கப் புறமாக கேமரா இருந்ததனால் அந்த வேனின் எண் சரியாக கேமராவிற்கு தென்படவில்லை.


மிக அருகில் குற்றவாளியை நெருங்கி வந்தும் அவனை கை விட்டு விட்டோமே என்ற யோசனையோடு அஜய் நின்று கொண்டிருக்க ராஜஷேகரிடமிருந்து அஜய்க்கு அழைப்பு வந்தது.


"அஜய் நீ இப்போ இருக்குற ஏரியாவில் இருந்து இருநூறு மீற்றர் தள்ளி இருக்குற ஒரு ஏரியாவில் கடைசியாக சித்தார்த்தின் போன் அரை மணி நேரத்திற்கு முன்னாடி ஆன் ஆகி ஆஃப் ஆகி இருக்கு...எனக்கு என்னவோ சித்தார்த் இப்போ வாஞ்சிநாதன் கூட இருக்குறான்னு தோணுது...." என ராஜஷேகர் கூறவும்


"நாங்க உடனே அந்த ஸ்பாட்க்கு போறோம்....நீங்க லைன்லயே இருங்க..." என்ற அஜய் புளுடூத்தை எடுத்து தன் காதில் மாட்டி கொண்டு ராஜஷேகர் சொன்ன அந்த இடத்தை நோக்கி தன் ஜீப்பில் சக காவலர்களுடன் பயணித்தான்.


ராஜஷேகர் சொன்ன இடத்திற்கு வந்து சேர்ந்த அஜய் அந்த இடத்தை சுற்றி பார்க்க அங்கே வாகனம் வந்ததற்கோ, மனிதர்கள் வந்ததற்கோ எந்த அடையாளமும் இருக்கவில்லை.


சுற்றிலும் வெறும் காடாக ஓங்கி வளர்ந்த மரங்களும், முட்கள் நிறைந்த புதர்களுமே அந்த இடத்தில் நிறைந்து இருந்தது.


குழப்பமாக அந்த இடத்தை அஜய் பார்த்து கொண்டு இருக்க சற்று தள்ளி மரங்கள் நிறைந்த ஒரு பகுதிக்குள் இருந்து நான்கு, ஐந்து நபர்கள் வெளியேறி வருவதைப் பார்த்தவன் உடனே தங்கள் வாகனத்தை மறைவான ஒரு புறமாக நிறுத்தச் செய்தான்.


சுற்றிலும் அவர்கள் பார்த்து விட்டு தங்களுக்குள் ஏதோ பேசிக் கொண்டே மீண்டும் அந்த காட்டிற்குள் அவர்கள் நுழைவதை பார்த்தவன் மற்ற காவலர்களைப் பார்த்து சத்தம் எழுப்பாமல் வருமாறு சைகை செய்தவன் மெல்லமாக அந்த நபர்களைப் பின் தொடர்ந்து சென்றான்.


காட்டிற்கு நடுப்பகுதியில் தன்னந்தனியாக ஒரு பாழடைந்த குடோன் இருக்க அந்த நபர்கள் அந்த குடோனிற்குள் சென்றனர்.


புளுடூத் வழியாக ராஜஷேகரிடம் தாங்கள் இருக்கும் இடத்தை பற்றி கூறிய அஜய் சில காவலர்களை குடோனை சுற்றி நிற்குமாறு கூறி விட்டு மீதி காவலர்களை அழைத்து கொண்டு அந்த குடோனின் வாயிலை நோக்கி சென்றான்.


குடோனின் உள்ளே பல பேரின் பேச்சு குரல் கேட்க சற்று தள்ளி நின்ற சித்தார்த்தின் காரையும் அடையாளம் கண்டு கொண்ட அஜய் அடுத்த பத்தாவது நொடி குடோன் கதவை திறந்து கொண்டு குடோனிற்குள் நுழைந்தான்.


அஜயை அங்கு இருந்த யாருமே எதிர்பார்க்கவில்லை என்பதை அங்கிருந்த ஒவ்வொருவரின் முகத்திலும் தெரிந்த அதிர்ச்சியே அஜய்க்கு நன்கு பறைசாற்றியது.


வாஞ்சிநாதன் தன் கையில் இருந்த துப்பாக்கியில் சரோஜா, நவீன் மற்றும் சித்தார்த் இருந்த புறமாக குறி வைத்த வண்ணம் இருக்க அஜயின் துப்பாக்கி வாஞ்சிநாதனை குறி வைத்து இருந்தது.


நவீன் இரத்தம் சொட்ட சொட்ட சரோஜாவை ஒரு கையால் பிடித்து இருக்க சித்தார்த் ஒரு புறம் சரோஜாவின் கையை இறுக பற்றி இருந்தான்.


சரோஜாவோ அஜயை பார்த்த அதிர்ச்சியில் கண்கள் கலங்கி நிற்க வாஞ்சிநாதன் தன் டிரிக்கரை அஜயை பார்த்து புன்னகத்து கொண்டே அழுத்தினார்.


"சரோ..." என்ற கூவலோடு நவீன் தன்னால் முடிந்த மட்டும் பலமாக சரோஜாவை தன் புறமாக இழுத்து கொள்ள சரோஜாவின் கைகளை இறுக பற்றி இருந்த சித்தார்த்தோ சரோஜாவின் புறமாக இழுக்கப்பட்டான்.


சித்தார்த் இழுக்கப்பட்ட வேகத்தில் வாஞ்சிநாதனின் தோட்டா சித்தார்த்தின் நெஞ்சை பதம் பார்க்க அஜயின் துப்பாக்கி வாஞ்சிநாதனைப் பதம் பார்த்தது.


வாஞ்சிநாதன் அஜயை பார்த்து புன்னகத்தவாறே மயங்கி தரையில் சரிய மறுபுறம் சித்தார்த் அதிர்ச்சியாக வாஞ்சிநாதனைப் பார்த்த வண்ணம் மயங்கி சரிந்தான்.


நவீன் மற்றும் சரோஜா அங்கு என்ன நடக்கிறது என்று புரியாமல் அஜயை பார்க்க அஜய் வேகமாக சரோஜாவின் அருகில் ஓடி சென்றான்.


"சரோஜா..." என்றவாறே சரோஜாவை அஜய் இழுத்து அணைத்துக் கொள்ள


"அஜய்....." என்று முணுமுணுத்துக் கொண்டே சரோஜா மயங்கி சரிந்தாள்.....
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top