• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

NTK 4

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Imaiyi

அமைச்சர்
SM Exclusive
Joined
May 24, 2018
Messages
1,264
Reaction score
3,194
Age
33
Location
Sri lanka
சின்னத்தம்பி மறுமொழி கூற வருவதற்குள் அவரை தடுத்து நிறுத்தியவன் பேச ஆரம்பித்தான்...அவனின் மன பொக்கிஷங்களை...யாரும் அறியாததை...உரியவளே அறியாததை அவள் தந்தையிடம் கொட்டி கொண்டிருந்தான்…

"உங்க பொண்ணு என் கூட இருந்தா மட்டும் தான் சந்தோசமா இருப்பா...அவளோட சந்தோசம் நான் தான்...என்னோட சந்தோஷமும் அவள் தான்..."என்று கூறியவன் யோசிச்சு சொல்லுங்க என்பது போல் ஆள்க்காட்டி விரலை நெற்றியில் வைத்து தட்டி சொல்லுங்கள் என்பதாக வாய் அருகில் கையை கொண்டு சென்று ஆட்டினான்...

ஹிட்லரின் பேச்சை கேட்ட நாசிச படை எப்படி மகுடிக்கு ஆடிய பாம்பை போல் ஹிட்லர் சொன்னதை கேட்டதோ...அதை போல் குணாவின் பேச்சில் கவர்ந்து இழுக்க பட்டு அவனுக்காக தன் மகள் எழிலை அவனுக்கு மணம் முடிக்க நினைத்தார்…

சிரித்த முகத்துடன் திருமணத்திற்கு சம்மதம் சொன்ன சின்னத்தம்பி கையோடு அவர்களை அழைத்துக்கொண்டு திருமண நாள் குறிக்க சென்றார்...மகள் இன்னும் உறங்கிக்கொண்டிருக்க ...மருமகனை காவல் வைத்து விட்டு சென்றார் சின்னத்தம்பி...


ஜாதகம் பொருத்தம் ஏதும் பார்க்காமல் அடுத்த மாதத்தில் ஒரு நன்னாளில் நாள் குறித்துக்கொண்டு வந்திருந்தனர்...அப்பொழுது தான் வருங்கால மாமியார்...மாமனார் ஆனவர்களை வரவேற்காமல் எழில் முழித்துக்கொண்டிருக்கிறாள்...

"முழிக்காதே டி...வாங்கனு சொல்லு..."என்று பல்லை கடித்து கொண்டு எழிலிற்கு மட்டும் கேட்கும் படியாக கூறினான் குணா…

அதில் உணர்வு வர பெற்றவள் பிரசை குணாவின் கையில் கொடுத்துவிட்டு குணாவின் தந்தை...எழிலின் தாத்தா வேலுவிடம் "தாத்தா…"என்று சிரிப்புடன் வாஞ்சையாக அவர் அருகில் செல்ல அவர் தோளோடு அணைத்துக்கொண்டு தனது பாசத்தை வெளிக்காட்டினார்…குணாவின் குடும்பத்திலே குணாவிற்கு அப்புறம் இவரை தான் பிடிக்கும்...சிறுவயதில் இருந்து எங்கு பார்த்தாலும் தாத்தா என்று இவள் ஓடி போய் பேச அவர் இதே போல் தோளோடு அணைத்தவாறு வாஞ்சையாக பேசுவார்...

குணாவின் அம்மா சிவகாமியிடம் எப்பொழுதும் அளவாக தான் இருப்பாள்...அவர் முகமே எப்பொழுதும் கடுகடுவென்று தான் இருக்கும்...அவ்வளவாக அவர் சிரித்தே பேசமாட்டார்...அதனால் "வாங்க அம்மாச்சி..."என்றாள்...

வேலுவை தவிர அனைவரது பார்வையும் குணாவின் மீது தான் இருந்தது...அவனே முழித்துக்கொண்டு தான் நின்றான்..."என்ன டா இவ பொசுக்குன்னு கைல பிரஷை குடுத்துட்டு போய்ட்டா...ஐயோ ஆத்தா மொறைக்குதே..."

சின்னத்தம்பியின் பார்வையில் தன் மகளுக்கு இவன் தான் சரியான ஜோடி...எழிலை அனுசரித்து வாழ்ந்துவிடுவான்...என்ற நிம்மதி…

கருப்பாயியின் பார்வையில் சிரித்து கேலி...கிண்டல்...குணாவின் அக்காவாக...எழிலின் தாயாக சிறிது பதட்டம்...ஏதாவது சின்னமா நினைத்துக்கொள்வார்களோ என்று அவரையும் ஒரு பார்வை…

சிவகாமியின் பார்வையில் காலம் முழுக்க அவளுக்கு பல்லு விலக்கி விட தான் இப்படி போராடி கல்யாணம் பண்றியா என்பது போல் ஒரு கேள்வி...கேலி தொங்கி நின்றது...

யாருடைய பார்வைக்கும் பதில் சொல்லாமல் பிரசை அவள் அறைக்குள் சென்று வைத்துவிட்டு வந்தான்…(நல்ல மாப்பிள்ளை டா நீ...)

பிறகு சிறிது நேரத்தில் எழில் குளித்து உடைமாற்றி வர...வந்தவர்கள் சாப்பிட்டு முடித்து இவளுக்கு காத்திருந்தனர்...

எழிலுக்கு இதெல்லாம் ஏதோ கனவு போல் ஒரு எண்ணம்...இரண்டு வருடங்களுக்கு முன் வரை இப்படி ஒரு நிகழ்வு தன் வாழ்வில் நிகழாதோ என்று ஏங்கி இருக்கிறாள்..ஏக்கமெல்லாம் முடிந்து அவள் ஏங்கி தவித்த நாட்கள் கரைந்து மண்ணாக போனபின்பு இதெல்லாம் நடக்க அவளுக்கு ஏதோ ஒட்டாத தன்மையே அளித்தது...

எழிலுக்கு இன்னும் திருமணம் நாள் குறித்ததை பற்றி சொல்லவில்லை..சொன்ன பிறகு என்ன செய்ய காத்திருக்கிறாளோ......

வரும் வெள்ளி கிழமை போல் பூ வைத்து உறுதி செய்து விடலாம் என்று எழில் வரும் போது பேச்சு ஓடிக்கொண்டிருந்தது…
எழிலுக்கு பயங்கர அதிர்ச்சி ஆகி விட்டது...இவர்கள் யாரை கேட்டு தன் திருமணத்தை இவனுடன் நடத்த நினைக்கிறார்கள் என்று கோவப்பட்டு கத்த ஆரம்பித்தாள்…

"அப்பா இந்த கல்யாணம் நடக்காது..."என்று நாற்காலியில் அமர்ந்திருந்த குணாவை பார்த்துக்கொண்டே எழில் சின்னத்தம்பியிடம் கூறினாள்…

அங்கிருந்த யாருக்கும் என்ன சொல்வதென்றே தெரியவில்லை...
Kuttaiya kolappurale
 




Geethazhagan

அமைச்சர்
Joined
Aug 16, 2018
Messages
3,895
Reaction score
4,804
Location
Chennai
அச்சோ குணாக்கும் நோ சொல்றாளே. என்ன தான் நினைக்கிறா
Very interesting update sis
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top