• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

NTK 5

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

revathi kayal

இணை அமைச்சர்
SM Exclusive
Joined
Apr 21, 2018
Messages
541
Reaction score
2,720
Location
madurai
ஹாய்.. ஹாய் மக்களே.... எழில் குணாளன் பத்தி என்ன நினைக்குறிங்கனு ஒரு வார்த்தை சொன்னிங்கன்னா ரொம்ப சந்தோசமா இருக்கும்.. இது என்னோட முடிவுற்ற நாவல் தான்.. வேற ஒரு தளத்துல போட்டிக்காக எழுதியது.. கிட்ட தட்ட ஒரு வருடத்திற்கு மேல் ஆகி விட்டது.. இதை ஏன் இப்ப rerun பண்ணுகிறேன் என்றால் இந்த கதையோட தொடர்கதையா அதாவது இரண்டாம் பாகம் எழுத போறேன் அதான்.. இது படிக்காட்டியும் அடுத்து வரது புரியும்.. இருந்தாலும் முன்கதை இருக்கது நல்லது இல்லையா அதனால் தான்...





அத்தியாயம் 5

"அப்பா இந்த கல்யாணம் நடக்காது..."என்று தனக்கு நேரெதிரே நாற்காலியில் கால் மேல் கால் போட்டு ஒரு அரசனின் தோரணையில் அமர்ந்திருந்த குணாவை பார்த்துக்கொண்டே எழில் சின்னத்தம்பியிடம் கூறினாள்…

அங்கு அமர்ந்திருந்த யாருக்கும் இதற்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை...ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான அதிர்ச்சி...குணாவின் தாய்க்கு இது என்ன டா இந்த பெண் இப்படி பேசுகிறது...என்ன வளர்ப்பு இது...இவளை கட்டிக்கொண்டு போய் நாம் என்ன செய்வது என்பது போலவும்...கருப்பாயிக்கு ஐய்யயோ இவர்கள் முன் இவள் இப்படி பேசி வைக்கறாளே சொந்தபந்தத்துக்குள் எப்படி பேச்சு பரவப்போகுதோ என்ற படபடப்பு...குணா மட்டும் எந்த உணர்வுகளையும் வெளிக்காட்டாமல் அமைதியாக அமர்ந்திருந்தான்…

இதில் சின்னத்தம்பியின் நிலையைச்சொல்லி தான் தெரியவேண்டுமா...தீபாவளிக்கு பற்றவைத்த அணுகுண்டு போல் புஷ் புஷ்வென்று கோவ மூச்சுக்களை விட்டுக்கொண்டு அனைவர்க்கும் முன்னும் எழிலை அடித்துநொறுக்கும் முடிவுடன் எழிலை நோக்கி எட்டுக்களை எடுத்து வைத்தார்...நடக்க இருப்பதை ஊகித்த கருப்பாயி

இந்த பொம்பளை முன்னாடி என்னைய அசிங்கப்படுத்தாம அப்பனும் மகளும் அடங்க மாட்டாங்க போல என்று வாயை விட்டு முணுமுணுத்தவர் சின்னத்தம்பியை தடுக்க சென்றார்... இருவரும் எழிலை அடைவதற்கு முன் குணா அவளை நெருங்கிருந்தான்...

அவளை நெருங்கிய குணா "எப்பயுமே உனக்கு விளையாட்டு தான்…."என்று சிரித்தவாறு கூறியவன் விளையாட்டாக கொட்டுவதை போல் அவள் மண்டையில் நறுக்கென்று ஒரு கொட்டு வைத்துவிட்டு …."மாமா...நாங்க கொஞ்சம் தனியா பேசணும்..."என்று சின்னத்தம்பியை நோக்கி கூறியவன் அவர் மறுமொழி கூற வருவதற்குள் அவரது மகள் கையை பிடித்து இழுத்துக்கொண்டு அவள் காலையில் எழுந்து வந்த அறைக்குள் சென்று கதவை அடைத்திருந்தான்…

இத்தனைக்கு நடுவிலும் குணாவின் பார்வை அவன் தாய் சிவகாமியை சந்திக்கவே இல்லை...பார்க்காமலேயே அவர் என்ன நினைத்துக்கொண்டிருப்பார் என்று அவனால் உணர முடிந்தது...இந்நேரத்திற்கு இந்த திருமணம் வேண்டாம் என்று முடிவுக்கூட எடுத்து இருப்பார் யார் கண்டது…

உள்ளே வந்தவுடன் எழிலின் கரத்தை விட்டவன் அலமாரியில் அடுக்கி வைத்திருந்த புத்தகங்களை பார்வையிட ஆரம்பித்துவிட்டான் …

ஐந்து நிமிடங்கள் கழித்தும் அவனது பார்வை எழில் பக்கம் திரும்பவே இல்லை...எழில் செய்வது அனைத்தையும் தன்னை கவனிக்காத அன்னையிடம் அவரது கவனத்தினை தன்னை நோக்கி திருப்ப குழந்தைகள் செய்யும் விளையாட்டாக தான் நினைத்தான்... அதனால் அவள் சொன்ன திருமணம் வேண்டாம் என்பதை அவன் கணக்கில் எடுத்துக்கொள்ளவே இல்லை…

அவன் அப்படி நினைப்பதற்கு இவள் பொறுப்பாக முடியுமா... அவள் முடிவில் அவள் உறுதியாக இருக்க போகிறாள்... இவளை மலையிறக்க நாய் பாடு பேய்ப்பாடு என்பார்களே அத்தனை லோல் பட்டும் இவனால் அவளது முடிவிலிருந்து மாற்றமுடியாது என்பதை இவனுக்கு யார் கூற போகிறார்கள்...

எழில் தான் முழித்துக்கொண்டு நின்றிருந்தாள்...நாம கல்யாணம் வேணாம்னு சொன்னதுக்கு ஏதாச்சும் கேட்பான்னு பார்த்தா இப்படி ஒருத்தி இருக்கதே தெரியாதமாதிரி புத்தகத்தை பார்த்துட்டு இருக்கான்...நாம ஏதாவது சொல்லுவமா….ம்ம்ம்…

ஹலோ….

ஹட்ச்….

ஸ்ஸ்ஸ்…என்று எழிலின் எந்தவிதமான குரங்கு சேட்டைக்கும் குணா திரும்பி பார்க்கவே இல்லை...இந்த குணா என்ற பிறப்பு எடுத்ததே அவள் அறையில் அடுக்கிவைத்திருக்கும் புத்தகங்களை பார்க்க தான் என்பதுபோல் அதை விட்டு கண்கள் காதுகள் என்று இதுபோன்று இருக்கின்ற ஐம்புலன்களையும் இம்மிகூட அந்தப்புறமும் இந்தப்புறமும் அசையவிடாமல் புத்தகத்தையே பார்த்துக்கொண்டிருந்தான்...

என்ன இந்தாளு நம்மளை மதிக்கவே மாட்றான்...ஹான் என்னைக்கு நம்மளை மதிச்சான்...இன்னைக்கு மதிக்க என்று அவள் தனக்குள் சோகமாக நினைத்துக்கொண்டிருக்கும் போதே அவளது சிந்தனையில் குணாவின் குரல் இடையிட்டது...

"ஹேய் இந்த புத்தகம் யாருக்கு கொடுக்க வைச்சுருக்க...இல்லை யாரு உனக்கு கொடுந்தாங்க..."என்று அந்த அலமாரியின் மூலையில் பரிசுப்பொருட்களுக்கு கட்டப்படும் ரிப்பன் கட்டி பல நாட்கள் கவனிப்பின்றி கிடந்ததால் தூசுகள் படிந்து கிடந்த அந்த புத்தகத்தை கையில் எடுத்தவாறு எழிலை நோக்கி கேட்டான்..

"அறியாத பெண்ணின் அ..."என்று கையிலிருந்த அந்த புத்தகத்தின் தலைப்பை குணா வாசித்துக்கொண்டிருக்கும் போதே பாய்ந்து வந்து அவனின் கையிலிருந்த புத்தகத்தை பறிக்கமுயன்றாள் எழில்…

"கொடுங்க..."

"ப்ளீஸ்..."

"கொடுங்க..."என்று எழில் கெஞ்ச கெஞ்ச குணா அவளிடம் விளையாட்டு காட்டிக்கொண்டிருந்தான்….கரங்களை தலைக்கு மேல் உயர்த்தி புத்தகத்தை வலக்கரத்திலிருந்து...இடக்கரத்திற்கும்...இடக்கரத்திலிருந்து...வலக்கரத்திற்கும் என்று மாற்றி மாற்றி அவள் பறிக்கமுடியாதவாறு செய்துக்கொண்டிருந்தான்…

"யாரு கொடுத்தா...இல்லை யாருக்கு நீ கொடுக்க போற..சொல்லு தரேன்..."என்று கூறியவனது கரங்களுக்குள் எப்படி எழில் வந்தாள் என்று அறியாமலே தனது கரத்திற்குள் கொண்டு வந்திருந்தான்….தற்பொழுது புத்தகத்தை அவளை சுற்றி வளைந்திருந்த கரங்களுக்குள் மாற்றி மாற்றி விளையாடி கொண்டிருந்தான்…

பார்க்க நீண்ட சிறகுகளை கொண்ட அல்பட்ரோஸ் பறவை ஒன்றிடம் மாட்டிக்கொண்ட மீன் போல் குணாவின் நீண்ட கரங்களுக்கிடையில் பாந்தமாக அடங்கி இருந்தாள் எழில்...அது என்றும் தப்பமுடியாத மீளமுடியாத வலை...

"ப்ளீஸ் கொடுங்க..."

"யாருக்குனு சொல்லு...மாமா கண்டிப்பா தரேன்..."

"கண்டிப்பா உங்களுக்கு இல்லை..."

இத்தனையும் இருவரும் புத்தகத்தை பறிக்க போராடிக்கொண்டே பேச்சுவார்த்தை நடந்துக்கொண்டிருந்தது...

குணாவின் மூச்சுக்காற்று அவளின் முகத்தில் விரவும் நெருக்கத்தில் இருவரும் நின்றிருந்தனர்…

"எனக்கு இல்லையா..."என்று செவிவழி நுழைந்து நரம்புகளின் வழி பயணம் செய்து இதயத்தை தீண்டி சிலிர்ப்பை ஏற்படுத்தத்தக்க அவளை இழுத்து ஆழிப்பேரலையில் அடித்துச்செல்ல வாய்க்கப்பெற்ற அவளுக்கே அவளுக்கென்று பிரேத்யேகமாக வெளிப்படும் குரலில் கேட்டான் குணா…

அந்த குரலில் சிலையாய் உறைந்து வெள்ளமாய் சிலிர்த்தவள் தன் நிலை மறந்து இருவருக்கும் இடையில் இருக்கும் ஒரு இன்ச் இடைவேளையை மேலும் அவனை நெருங்கி குறைத்து... கட்டி அணைக்காமலே அணைப்பது போன்ற உணர்வில் தத்தளித்தவள் தனது கரம் கொண்டு அவனின் பிரவுன் நிற கண்களை பிறந்த குழந்தையின் மென்சிவப்பு நிற பாதங்களை தடவி தொட்டு பார்க்கும் தன் கருவில் குழந்தையை சுமக்க முடியாத மலடியின் நடுக்கம் போல் இத்தனை வருடங்களாக கனவிலும் நினைவிலும் ஏங்கி தவிக்கவிட்டு...ஒரு பைத்தியக்காரியின் நிலைக்கு தன்னை கொண்டு சென்ற கண்களை நடுக்கத்துடன் கண்களில் நீர் வழிய தொட்டாள்…

எழில் ஒரு ஏகாந்தமான வேளையில் நீண்ட கடலுக்குள் வரும் மீளவே முடியாத ஒற்றை சுழலுக்குள் தனது சுயநினைவின்றி இழுத்து செல்லப்பட்டாள்...

எழிலின் கண்களில் வழியும் நீரை இடதுகை பெருவிரலால் துடைத்துவிட்டவன்...தொட்டாலே ரசகுல்லாவை ஞாபகப்படுத்தும் வெண்மை நிற கன்னத்தில் அவ்விரலாலே தடவினான்…

"ஏன் கல்யாணம் வேணாம்..."என்று அவன் கேட்டது தான் தாமதம்...தன்னை இவ்வளவு நேரம் இழுத்து சுழன்றுகொண்டிருந்த சூழல் திடிரென்று கீழேவிட்டு செல்ல குணாவிடமிருந்து விலகி நின்றாள் எழில்…

எழிலின் திடீர் மாற்றத்தினால் ஏற்பட்ட குழப்பத்துடன் மீண்டும் அதே கேள்வியை கேட்டான் குணா…

"ஏன் கல்யாணம் வேணாம் சொன்ன..."

"எனக்கு வேண்டாம்..."என்று வடிந்த கண்ணீரை துடைத்துவிட்டு நிமிர்வுடன் கூறினாள் எழில்…

அவள் உடலசைவுகளில் உண்டான மாற்றத்தை குறித்துக்கொண்ட குணா "அதான் ஏன் வேணாம்னு கேக்குறேன்…"என்று அழுத்தத்துடன் மீண்டும் அவளை தன் கைவளைவுக்குள் கொண்டு வந்து கேட்டான்…

"உங்களை கல்யாணம் பண்ணிக்க விருப்பம் இல்லை..."என்று உதட்டை சுளித்துக்கொண்டு கூறியவள் அவனிடம் இருந்து விடுபட எந்தவிதமான முயற்சியும் எடுக்கவில்லை…

ஏதோ நல்ல வடிவேல் காமெடி கேட்டதை போல் ஹா ஹா ஹாவென்று பெருங்குரல் எடுத்து சிரித்துவிட்டு "நல்ல ஜோக்...அப்பறம்..." "பாரு டா...சிரிச்சா...எனக்கு உங்களை பிடிக்கல..."என்று அவனது கண்களை பார்த்து திமிராகவே கூறினாள்…

"பிடிக்காம தான் மாமா மாமான்னு பின்னாடியே திரிஞ்சியா...இல்லை என்கிட்டே வந்து என்னை கட்டிக்கோ மாமா னு சொன்னியா..."என்று அவள் தன் கண்களை பார்த்து பிடிக்கவில்லை என்று சொல்லிய கோவத்தில் ஒரு புருவத்தை ஏற்றி நக்கலாக கேட்டான்…

அவனது நக்கலில் கடுப்பாகியவள் "அது அறியாத வயசு மாமா...இல்லாட்டி உங்க பின்னாடி லாம் நான் வந்துஇருப்பேனா..."என்று அவன் கரங்களுக்குள் இருந்தாலும் அவனை எற இறங்க பார்த்து நக்கலாக ஒரு முகபாவத்தை காட்டினாள்…

"ஆஹான்..."என்று வடிவேலிற்கு பிறகு அவ்வளவு அழகாக அந்த வார்த்தையை கூறியவன் "அப்பறம் ஏன் டி வருஷம் வருஷம் வரப்ப...என்னை எடுத்துக்கோ மாமான்னு சொல்ற மாதிரி…விட்டா என்னை கடிச்சு திண்ணுறவ மாதிரி...பார்வையாலே என்னை கற்பழிச்ச...உன்னாலே என் கற்பும் போயிருச்சு டி...இனிமே என்னை யார் கட்டிக்குவா சொல்லு பார்ப்போம்..."என்று இவ்வளவு நேரம் கரங்களுக்குள் சும்மா வைத்திருந்தவன் இடையோடு இறுக்கிப்பிடித்து அவள் கண்களுக்குளேயே சென்றுவிடுவான் போல் கேட்டான்….

"ச்சீ...ச்சீ...மொத கையை எடுங்க..."என்று அவள் திமிரவும் உடனடியாக அவளை விடுவித்தான்...அதில் எல்லாம் உத்தமன் தான்…

"பதிலை சொல்லு டி...எங்க அக்கா பெத்த முக்கா துட்டே..."என்று மீண்டும் அவள் மண்டையில் கொட்டியவாறு கேட்டான் குணா…

"அதெல்லாம் உங்க மனப்பிராந்தி மாம்ஸ்..."

"அப்டியா...ஒரு ஏழு வருசத்துக்கு முன்னாடி நீ வந்து என்கிட்டே ப்ரொபோஸ் பண்ற மாதிரி கனவு கண்டேனு சொல்லுற...அப்படி தானே..."என்று அவள் மறக்க நினைக்கும் மறக்க போராடி தினம் தினம் செத்து பொழைக்கும் ஒரு நிகழ்ச்சியை சர்வசாதாரணமாக கேட்டிருந்தான்…
 




revathi kayal

இணை அமைச்சர்
SM Exclusive
Joined
Apr 21, 2018
Messages
541
Reaction score
2,720
Location
madurai
அதில் சிறிது தடுமாறியவள் ஆழ்ந்த மூச்சை இழுத்து வெளியிட்டு "இங்கே பாருங்க...அது டீனேஜ் பப்பி லவ்...அதெல்லாம் போய் பெரிய மட்டர்னு சொல்லிட்டு இருக்கீங்க...” என்று ஏழு வருடத்திற்கு முன்பு அவன் சொன்ன அதே வார்த்தையை கூறியவள் சிறிது இடைவேளை விட்டு

“நான் இன்னும் அதே பதினேழு வயசு எழில் கிடையாது...இப்ப எனக்கு இருபத்திநாலு வயசு ஆச்சு...என் விருப்பம் காதல் ஆசை எல்லாம் மாறியிருச்சு...என் வாழ்க்கைல எதுலையுமே இப்ப நீங்க இல்லை...புரியுதா..."என்று நிமிர்வுடனே சொல்லி முடித்தாள்….

"அப்ப உன் மனசுல நான் கிடையவே கிடையாது..அப்படி தானே..."

"எஸ் மாம்ஸ்..."

"அப்பறம் என்ன இதுக்கு வர மாப்பிளை எல்லாரையும் ஓட ஓட விரட்டிட்டு இருக்க..."

"இப்படி கேளுங்க காரணத்தை சொல்லுறேன்…."என்று கூறியவள் நாற்காலியின் மீதிருந்த தனது கைபேசியை வேகமாக எடுத்து கடவுச்சொல் போட்டு திறந்தவள் கேலரியில் இருந்த ஒரு புகைப்படத்தை எடுத்து அவனிடம் காட்டினாள்…

"இந்த போட்டோல இருக்கான்ல இவன் தான் என் லவர்...நாலு வருசமா உயிருக்கு உயிரா லவ் பண்றோம்...இப்ப ஆன்சைட்காக மலேசியா போயிருக்கான்...அவன் ரிட்டர்ன் வந்தவுடனே கல்யாணம் பண்ணிக்குவேன்...புரிஞ்சதா...அப்புறம் ஒரு நிமிஷம்..."என்றவள் அவளது பீரோவை திறந்து ஒரு மோதிரத்தை எடுத்து குணாவிடம் காட்டினாள்...

"இது எனக்கே எனக்காக அவன் முதல் மாச சம்பளத்துல வாங்குனது... "என்று கூறியவள் மீண்டும் மோதிரத்தை பீரோ உள்வைத்து பூட்டினாள்…

கையிலிருந்த அலைபேசியில் எழில் ஒருவனின் தோள்பட்டையில் கைவைத்து முகமெல்லாம் புத்துணர்ச்சியுடன் அவளது அக்மார்க் கன்னக்குழி புன்னகையுடன் நின்றிருந்தாள் அதையே கண் இமைக்காமல் பார்த்தவன் சில நொடிகளில் மீண்டும் அவள் கையில் அலைபேசியை கொடுத்தான்…

அவள் அன்று கடைசியாக அவனிடம் கேட்ட கேள்வியை குணா இன்று கேட்டான்…

"நீ இருக்க சொன்னா இருப்பேன்...நீ போக சொன்னா போயிருவேன்...இருக்கவா...வேணாமா..."என்று அவள் கண்களை கூர்ந்து பார்த்து கேட்டான்…

எழிலின் கண்கள் அடைமழைக்கு தயாரானது...இது இவள் அழுகவேண்டிய நேரம் இல்லை...கண்களை இறுக்க முடியவள் "போயிருங்க..." என்று உதடை அழுந்த கடித்துக்கொண்டு மெல்ல தலையாட்டினாள்…

அவள் அல்லிமலர் விழிகளை திறந்தபோது அவன் அங்கில்லை...

கண்களை திறந்த எழிலின் முன் குணா இல்லை...தொண்டையடைத்து உயிருறுக்கி ரத்தத்தின் மொத்த வெப்பத்தையும் திரட்டி மேலெழும் கேவலை இருகரம் கொண்டு அடக்கி குளியல் அறையினுள் நுழைந்தாள்…

இது காதலில் மூழ்கி...தப்பிக்க சிறு கிளை கிடைக்க போராடி...அதனுள் அமிழ்ந்து போனவர்களுக்கு மட்டுமே சாத்தியமான...வாய்க்கப்பெற்ற போலி புன்னகையுடன் குளியல் அறையினுள் இருந்து வெளிவந்தாள் எழில்…

வெளியில் இருந்தவர்களின் மனநிலை படு ஜோராக இருந்தது என்று தான் சொல்லவேண்டும்...

சின்னத்தம்பிக்கு எப்பொழுது இருவரும் தனியாக பேச வேண்டும் என்று அறைக்குள் சென்றார்களோ அப்பொழுதே தெரிந்துவிட்டது..இந்த திருமணம் நடக்க வாய்ப்பே இல்லை என்று...அதான் அவர் மகளை பற்றி நன்கு அறிந்தவர் ஆயிற்றே…இருந்தாலும் குணா எப்படியாவது சம்மதிக்க வைத்திருப்பான் என்ற சிறிய நட்பாசை உள்ளுக்குள் ஊசலாடி கொண்டு இருந்தது...

கருப்பாயிக்கும் அதே எண்ணம் தான்...அதனால் உட்கார்ந்து இவர்களை போல் கதவையே வெறித்து பார்க்காமல் தன்னுடைய வேலையை பார்க்கச்சென்று விட்டார்…

சிவகாமிக்கு இந்த திருமணம் நடப்பதில் முதலே விருப்பம் இல்லை...தற்பொழுது தனது வருங்கால மருமகள் செய்த கூத்தை பார்த்து மொத்தமாக ஆசையை விட்டு போயிற்று அவருக்கு… தன் மகன் பேசி எழிலை திருமணத்துக்கு சம்மதிக்கவைத்து விட்டால் எப்படி இந்த திருமணத்தை நிறுத்துவது என்று சீரியல் வில்லிகள் போல் மனதிற்குள்ளையே இப்பவே திட்டங்கள் வகுக்க ஆரம்பித்துவிட்டார்...

வேலுவிற்கு பிடிக்காத பெண்ணை தான் மகன் சொல்லுகிறான் என்ற ஒரே காரணத்துக்காக கட்டி வைக்க அவருக்கு விருப்பம் இல்லை...எப்படியோ வெளியே இருந்த யாருக்கும் இந்த திருமணத்தின் மீதான உறுதித்தன்மை இல்லை...

நால்வரும் இல்லை இல்லை கருப்பாயி தவிர மூவரும் அவர்களின் வரவுக்காக ஆர்வமாக இருந்தனர்...

எழிலின் அறையில் இருந்து வெளியே வந்த குணா யாரையும் பார்க்கப்பிடிக்காமல் யாருடைய கேள்விகளுக்கும் ஆளாகப்பிடிக்காமல் வெளியேறிவிட்டான்…

குணா எதுவும் பேசாமல் வெளியேறிவிட்டதிலே சின்னத்தம்பிக்கும் கருப்பாயிக்கும் புரிந்துவிட்டது...இந்த சம்மந்தமும் கைநழுவி சென்றுவிட்டது என்று ….ஒன்னும் சொல்றதுக்கில்லை என்பது போல் கருப்பாயி அமைதியாகி விட்டார்…சின்னத்தம்பி தான் குணாவின் அப்பா வெளியேற காத்திருந்தார்…

குணா சென்றதும் சிவகாமியும் பின்னயே சென்றுவிட்டார்...வேலுவிற்கு ஒரு தர்மசங்கடமான நிலையாகி விட்டது...என்ன சொல்வது...எப்படி வெளியேறுவது என்று புரியவில்லை...சின்னத்தம்பிக்கும் கருப்பாயிக்கும் இது என்ன புதிதா...அவர்களுக்கு இது பத்தில் பதினொன்று…

"சரி மாப்பிளை...பார்ப்போம்..."என்று வேலு வெளியேற தயாராகவும்…

"மன்னிச்சுருங்க மாமா...வேற என்ன சொல்றதுன்னு தெரில..."என்று மென்று முழுங்கி பேசிய சின்னத்தம்பி கையெடுத்து கும்பிட்டு வழியனுப்பினார்…



அவர்கள் வெளியேறியது தான் தாமதம் சமயலறையுனுள் பாத்திரங்கள் பறந்தது…

"அப்பாவும் மகளும் என்ன நினைச்சுட்டு இருக்கீங்க...இல்லை தெரியாம தான் கேக்குறேன்…."

"அந்த பொம்பளை ஊருக்குள்ள என்ன என்ன சொல்ல போகுதோ...என்ன என்ன கதை கட்ட போகுதோ….ஒன்னை ஒம்பதா அள்ளி முடிப்பாளே…எய்ய எழில் வெளியே வா டி...காலை உடைக்குறேன்..."

"இந்த மனுஷன் என்னமோ…அதான் தான் பெத்த பிள்ளையோட வகுசி தெரியும்ல என்னத்துக்கு அவகிட்ட கேட்காம எல்லாம் பண்ணனும்...இப்படி அசிங்கப்படணும்...போகாத ஊருக்கு ஒம்பது வழியாம்..."

"இன்னும் ஒரு மாசத்துக்கு என் குடும்ப கதை தான் நான் வளர்த்த லட்சணம் தான் பேசுவளுகளே...நான் வாங்கி வந்த வரம் அப்படி...வாச்சது தான் கூமுட்டைனு பார்த்தா...வகுத்துள்ள பிறந்தது கேனை முட்டையாவுல இருக்கு…."

"என்னை தான் பல்லுல வைக்க போறாளுக….உங்க சங்காத்தமே வேணாம்...உன் மகளுக்கு இங்குட்டும் பார்த்து கட்டி வை...அதுக்கு முன்ன என்னை அத்துவிடு...நான் எங்க அப்பன் வீட்டுக்கே போறேன்...முடியாது பே….இதுக்குமேல ஒருநிமிசம் இங்கே உங்களோட வாழ முடியாது..."

என்று அவ்வளவு நேரம் உள்ளே பாத்திரங்களை தூக்கி போட்டு கத்திக்கொண்டிருந்த கருப்பாயி கடைசி வாக்கியத்துக்கு சின்னத்தம்பியின் முன் வந்து நின்றார்…

சின்னத்தம்பியே ஆடி போய்விட்டார்...அவர் மனைவி இப்படியெல்லாம் பேசுபவரே கிடையாது...கணவன் போட்ட கோட்டை தாண்டாதவர்...அவர்க்கு தெரியாமல் கோட்டை அழித்து விட்டு போவார்...அது வேறு விஷயம்...ஆனால் இப்படி கோவப்பட்டு இதுவே முதல் முறை...

"அப்பா சரினு சொல்லுங்க...எனக்கும் சித்தியை பாக்கணும்னு ஆசையா இருக்கு…."என்று கருப்பாயி பாத்திரங்களை தூக்கிப்போடும் போதே அறையில் இருந்து வெளியே வந்துவிட்ட எழில் சின்னத்தம்பியிடம் கூறினாள்...

"அடியே உன்னை நான் கல்யாணம் பண்ணி அனுப்பணும்னு பார்த்தா...உன் அப்பாவுக்கு நீ பொண்ணு தேடுறியா...உன்னை இன்னைக்கு விளக்கமாத்தால சுங்கு பரத்துனா தான் டி சரியாய் வருவ...கொஞ்சமாச்சும் அறிவு இருக்கா டி உனக்கு..."என்று எப்போதும் சின்னத்தம்பி செய்யும் வேலையை கருப்பாயி ஆரம்பித்துவிட்டார்...
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top