• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

NTK 6

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

revathi kayal

இணை அமைச்சர்
SM Exclusive
Joined
Apr 21, 2018
Messages
541
Reaction score
2,727
Location
madurai
hai frnds.. happy reading





அத்தியாயம் 6



வெள்ளை பகலும்...கருப்பு இரவும் புணர்ந்து பிறந்த மாலை மங்கிடும் வேளையில் வேப்பமரத்தின் கீழிருந்த கயற்றுக்கட்டிலில் படுத்திருந்தவனின் நினைவு முழுதும் நிகழ்காலத்தில் இல்லை…

தாய் தந்தை...தங்கைகள் என்று யார்கேட்ட கேள்விக்கும் பதில்சொல்லாமல் மதியம் போல் வீட்டைவிட்டு வந்து இங்கே படுத்தவன் தான்...மாலை ஆறுமணி ஆகியும் இங்கயே யோசனையுடன் கிடக்கிறான்…

இங்கே தானே இதே இடத்தில் தானே ஏழு வருடங்களுக்கு முன்பு வந்து என்னை காதலிக்கிறேன்...நீங்க இல்லாமல் என்னால் வாழ முடியாது என்று கூறினாள்...என்று நினைத்தவனின் மூளை ஏழு வருடங்களுக்கு முன்பு நடந்ததை நினைவுமீட்பு செய்ய ஆரம்பித்திருந்தது…



ஏழு வருடங்களுக்கு முன்பு…

"டேய் இங்கயே நில்லு...எங்கயும் போக கூடாது சரியா...நான் உடனே வந்துருவேன்…."என்று குணாவை பிடித்து அந்த வேப்பமரத்துக்கு அடியில் நிற்பாட்டிவிட்டு தோட்டத்தை நோக்கி ஓடினான் சக்தி...குணாவின் சித்தி மகன்…

"இந்த லூசு பையன் எதுக்கு நம்மளை இங்கே நிக்க சொல்லிட்டு இவன் இப்படி ஓடுறான்..."என்று யோசித்தவாறு எப்போதும் போல் ஒரு சிகரெட்டை எடுத்து பற்றவைத்து புகையை இழுத்து விட்டுக்கொண்டிருந்தான்’ குணா…

அப்பொழுது பின்புறமிருந்து மெல்லிய கொலுசொலி சத்தம் கேட்டது...கொலுசொலியில் திரும்பி பார்த்தவன் குழப்பத்துடன் புருவத்தை சுருக்கினான்......எழில் அவனை நோக்கி வந்துகொண்டிருந்தாள்...வெள்ளைநிற பாவாடை சட்டை...பேபி பிங்க் நிற தாவணி அணிந்திருந்தாள்...அவளது நிறத்துக்கும் உடைக்கும் வித்தியாசமே தெரியாத அளவு அனைத்தும் ஒன்றாய் இருந்தது…

"இவ எப்படி இங்கே வந்தா... ஆமாம் எதுக்கு வாரா...அக்கா என்ன ஊருல இருந்து வந்துருக்கா என்ன…ஆனாலும் இந்த மத்தியான வெயிலையும் நல்ல பிரிட்ஜ்ல வைச்ச ஆப்பிள் மாதிரி பிரெஷா இருக்காளே பா…."என்று தன்னை நோக்கி வருபவளை பற்றி மனதிற்குள் ஆராய்ந்து கொண்டிருந்தான் குணா….

எழிலும் சிரித்தவாறு அவனின் அருகில் வந்து நின்றிருந்தாள்...என்னதான் சிரித்தமாதிரி இருந்தாலும் அவளது முகம் ஏதோ சரியில்லை என்று காட்டிக்கொடுத்தது...

"நீ என்ன இந்த பக்கம்...அக்கா மாமா வந்துருக்காங்களா…"என்று புகையை பிடித்து வெளியேவிட்டவாறுக் கேட்டான்…

ஆமாம் என்பதுபோல் தலையசைத்தவள் சிகரெட்டை கீழே போடுங்கள் என்பது போல் சைகை செய்தாள்...அதற்கு பின்பு தான் எழில் முன்னாடி புகை பிடித்து கொண்டிருக்கிறோம் என்று உணர்ந்தவன் மன்னிப்பு கேட்கும் பாவனையில் முகத்தை வைத்துக்கொண்டு லேசாக கண்ணை சுருக்கி அவளை பார்த்துவிட்டு சிறிது தூரம் தள்ளிச்சென்று முழுதாய் புகைத்துவிட்டு மீண்டும் அவள் அருகில் வந்தான்…

"ஐஞ்சு ரூபாய்...வேஸ்டா போகக்கூடாதுல அதான்...நீ வர்றத பாத்திருந்தேனா சிகரெட் எடுத்திருக்க மாட்டேன்...தப்பா நினைச்சுக்காதே..."என்று தன்னிலை விளக்கமாக கூறியவன் சிறிது இடைவேளை விட்டு"ஆமாம் நீ எதுக்கு இந்த பக்கம் வந்த...இந்த சக்தி பையன் வேற வரேன்னு சொல்லிட்டு கருப்பையா வீட்டு பூச்செடி பக்கம் ஓடிட்டான்..."என்று அவளிடம் குழப்பத்துடன் கூறிக்கொண்டிருந்தான்..

சக்தியிடம் பேசி குணாவை இங்கே கூட்டிக்கொண்டு வரச்சொன்னதே இவள் தானே...

"ஓஒ...நான் உங்களை பார்க்க தான் வந்தேன்..."என்று தலையை குனிந்துக்கொண்டு எண்பதுகளின் கதாநாயகி போல் கால் கட்டைவிரலால் தரையில் கோலம் போட்டுக்கொண்டிருந்தாள்...வெட்கமாம்...

எழிலின் குனிந்திருந்த தலையையும் கால் கட்டைவிரல் படும் பாட்டையும் பார்த்தவன் "என்கிட்டே பேசணும்னு சொல்லிட்டு தலையை கவிந்துகிட்டு எதையோ தேடுறாளே...ஏதோ சரி இல்லாத மாதிரி இருக்கே…என்னவா இருக்கும்...யாரையும் லவ் பன்றாளோ...ஓடி போகுறதுக்கு ஹெல்ப் கேட்டு வந்துருப்பாளோ...ஒரு நிமிஷம்...ஒரு நிமிஷம்…சக்தி தான் இங்கே கூட்டிட்டு வந்தான்...இங்கயே நிக்க சொல்லிட்டு ஓடிட்டான்...அப்புறம் தான் இவ வந்தா...என்கூட பேசணும்னு சொல்லுறா...அப்ப இந்த சக்தி பையனை தான் இவ லவ் பன்றாளோ....கொஞ்ச நாளாவே அவன் போக்கு சரி இல்லைனு நினைச்சேன்...ஆனாலும் அந்த கருவாயனுக்கு இந்தப்பிள்ளை கொஞ்சம் அதிகம் தான்...படிச்சு முடிச்சவுடனே நாமளே சேர்த்துவைப்போம்னு சொல்லி அனுப்பி வைப்போம்..."என்று தனக்குள்ளே கேள்விகேட்டு அதுக்கும் தானே பதில்சொல்லி...முடிவும் எடுத்துவிட்டான்...

என்ன அவனிடமிருந்து பதிலே வரவில்லையே என்று நிமிர்ந்து பார்த்தாள் எழில்...குணா ஏதோ யோசனையில் இருக்கவும் மாமா என்று அழைத்து அவனின் சிந்தனையை கலைத்தாள்…

"நீ என்ன பேசணும்னு சொன்னேன்னு எனக்கு புரிச்சுருச்சு...போ..நான் எல்லாத்தையும் பார்த்துகிறேன்...உங்க அப்பாகிட்ட கூட நானே பேசிக்கிறேன்...இப்ப நீ ஒழுங்கா படி..."என்று அன்று போல் இன்றும் அவளை நெருங்கி வந்து...அவனுக்காகவே காற்றில் உதட்டில் பட்டவாறு இருந்த முடி கற்றையை காதுக்கு பின்னாடி ஒதுக்கியவாறு அவள் கண்களை பார்த்து கூறினான்…

குணா நெருங்கி வந்ததில் அவளது தேகம் மெலிதாக நடுங்கியது...கண்ணை இறுக மூடியிருந்தாள்...பாவம்…அவளின் தேகத்தின் நடுக்கம் அவன் உணரவில்லை...கண்ணை மூடியிருந்ததில் "தூசி பட்டுருச்சா..."என்று கேட்டான்…

அதற்கு பின்பு தான்...தான் எதுவும் சொல்லாமலே குணா அனைத்தையும் புரிந்துகொண்டான்…தனது இத்தனை வருட காதலையும் தான் சொல்லாமலே புரிந்துகொண்டான் என்பதில் இறக்கை இல்லாமல் வானத்தில் பறந்துகொண்டிருந்தாள்...அப்படியென்றால் அவனும் தன்னை விருப்புவதாக தானே அர்த்தம் என்று நினைத்தவள் தான் இந்த உலகத்தில் பிறந்ததற்கான பிறவி பயனை அன்று தான் அடைந்ததுபோல் சந்தோஷப்பட்டாள்…இருந்தாலும் குணாவுக்கு எப்படி தான் அவனை காதலிப்பது தெரியும் என்று தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில் கேள்விகள் கேட்க ஆரம்பித்தாள்…

"நான் சொல்லாமலேயே உங்களுக்கு எப்படி தெரியும்..."என்று சிரிப்புடன் கேட்டாள்...ஏனோ அவளது சிரிப்பில் சிறிது எரிச்சல் அடைந்தான் குணா..

"தெரியும்...தெரியும்..."என்று வெளியில் கூறியவன் இப்ப எதுக்கு நமக்கு எரிச்சல் ஆகுது...என்று உள்ளுக்குள் கேள்வி கேட்டான்…

"அதான் எப்படி...சக்தி மாமா சொன்னாங்களா..."

இந்த வார்த்தையில் மிகுந்த எரிச்சல் அடைந்தான்...படிக்குற வயசுல இதெல்லாம் என்ன இது என்று மனது எரிச்சலுக்கான விடையை சரியாக எடுத்து அவனிடம் கொடுத்தது…

"நானா கண்டுபிடிச்சேன்...இப்ப அதுக்கு என்ன..."என்று மனதில் இருந்த எரிச்சல் வார்த்தைகளிலும் முகத்திலும் வெளிப்பட ஆரம்பித்து இருந்தது…

அவனது முகபாவனையிலும் தன்னை இழுக்கும் பிரவுன் நிற கண்களிலும் ஒவ்வாமையை எரிச்சலை கண்டவள் தானாக இரண்டு அடி அவனை விட்டு தள்ளிநின்றாள்...

எழிலின் விலகளில் தன்னிலை அடைந்தவன் முயன்று முகத்தில் மலர்ச்சியை வரவழைத்துக்கொண்டான்…

சிறுவயதில் இருந்தே எழில் என்றால் இவனுக்கு கொள்ளைவிருப்பம்...அவனின் அக்காவின் மீது இருந்த பாசம் அப்படியே எழில்மீது கடத்தப்பட்டது என்று தான் சொல்லவேண்டும்...கருப்பாயி சிறு வயதில் இருந்தே குணா மீது அதிக பாசத்தை செலுத்துவார்...அவர் திருமணம் ஆகி போகாதவரை கருப்பாயியின் மகனாக தான் குணா இருந்தான்...அவன் இன்று பட்டாளத்தில் இருப்பதுக்கு கூட அவர் தான் காரணம்...அவருக்கு பட்டாளத்து காரர்கள் என்றால் ஒரு தனிமரியாதை விருப்பம் அதிகம்...அதனால் குணா சிறுவயதில் இருக்கும்போது நீ பட்டாளத்துல போய் பெரிய பதவில இருக்கனும் என்று சொல்லி சொல்லி வளர்த்தார்..அதனாலே ஆர்மி செல்வது என்பது அவன் கனவாகவே மாறிவிட்டது...

அப்படிப்பட்ட அக்காவின் மகள் மீது எவ்வளவு பாசம் செலுத்திருப்பான்...இவனுக்கு எட்டு வயது இருக்கும் போது எழில் பிறந்தாள்...அந்த வட்டாரத்திலே இவ்வளவு அழகான குழந்தையை அவன் பார்த்ததே இல்லை அந்த எட்டு வயதில்...ரோஜா பூ நிறத்தில் நீண்ட கண்கள் என்று பொம்மையை போலவே இருந்த அக்கா மகளை கொஞ்சியே தீர்த்து விட்டான்......அவளே கீழே விடவே மாட்டான்...அடுத்து தாய்வீட்டு சீராட்டு முடிந்து கருப்பாயி சின்னத்தம்பி வீட்டுக்கு சென்றபிறகு திருவிழா...விசேஷம்...என்று சுபநிகழ்ச்சிகளுக்கு வரும்போது எழிலை கொஞ்சி செல்வான்...பிறகு பத்தாம் வகுப்புக்கு பிறகு மேற்படிப்புக்கு டவுன் சென்றவிட்டு பின்பு பார்ப்பது என்பது அரிதிலும் அரிதாகி விட்டது...இப்படியே சில வருடங்கள் ஓடி ஆர்மியில் தேர்வு செய்யப்பட்டதற்கு பின்பு தான் ஊருக்கே அவனது வீட்டிற்கு வந்தான்...

அப்போது வந்து குணா எழிலை பார்த்தபோது அவள் பருவமடைந்த பதினைந்து வயது பெண்...அடையாளமே தெரியாத அளவு மாறிப்போயிருந்தாள்...ரோஜா நிறம் சிறிது வெளுத்திருந்தது...நீண்ட கண்கள் அல்லி மலரை போல் சிறிது நீண்டிருந்தது...கவுன் போட்டு சுற்றி கொண்டிருந்தவள் இப்பொழுது சுடிதார் போட்டு துப்பட்டாக்கு பின் செய்திருந்தாள்….முழுதாக மாறியிருந்தாள்...என்னமோ அவளுடன் பேச எதுவோ தடுத்தது...அதனால் சகஜமாக அவளுடன் பேசமாட்டான்...சிறிய சிரிப்புடன் கடந்துசென்று விடுவான்..இந்த வருட திருவிழாவுக்கு வந்தபோது தான் எழில் வழுக்கி விழுந்து இவன் தாங்கி பிடித்து என்று கொஞ்சம் பேசினான்…

ஆனால் எப்பொழுதும் எழிலை பிடிக்கும்...அவர்கள் மொத்த குடும்பத்தின் முதல் குழந்தை அல்லவா அவள்...அதைவிட்டு தாண்டி அவன் மனம் வேறு எதுவும் யோசித்தது இல்லை...ஆனால் சில நேரங்களில் அவன் கட்டுப்பாட்டை தாண்டி அவள் அழகை அவன் கண்கள் வர்ணித்துவிடுகிறது...அவ்வளவு தான்…

"இல்லை...எனக்கு தெரியும்...நானா கண்டுபிடிச்சேன்...கொஞ்ச நாளா அவன் போக்கே சரியில்லை..."என்று சிரிப்புடன் கூறினான் குணா…

இந்த ஆளு என்ன லூசா என்பது போல் பார்த்தவள் "எவன் போக்கு..."என்று குழப்பத்துடன் பார்த்தாள்…

"சக்தி போக்கு தான்..."

"ஏன் அவங்களுக்கு என்ன ஆச்சு..."இவன் என்னதான் சொல்ல வருகிறான் என்று புரியாமல் கேட்டாள் எழில்…

குணாவோ இவ யாருடா நொய் நொய்யுன்னு கேள்வி கேட்டுட்டு இருக்கா ரெண்டு பெரும் தானே விரும்புறாங்க...இது என்ன கேள்வி என்பதை போல் பார்த்தவன்"லவ் வந்தா இப்படி தான் பசங்க மாறிருவாங்க..."என்று கூறினான் குணா…

"சக்தி மாமா யாரை லவ் பண்றாங்க,..."என்று எழில் துள்ளி கொண்டு கேட்டதும் குணா கடுப்பாகி விட்டான்…

"உன்னை தான் பண்றான்...அதை என் வாயால வேற சொல்லணுமாக்கும்..."என்று குணா கூறியவுடன் இருவருக்கும் பின் இருந்து "என்னது..."என்ற சத்தம் கேட்டது..இருவரும் திரும்பி பார்த்தபோது நெஞ்சில் கைவைத்து சக்தி நின்றுகொண்டிருந்தான்...
 




revathi kayal

இணை அமைச்சர்
SM Exclusive
Joined
Apr 21, 2018
Messages
541
Reaction score
2,727
Location
madurai
"டேய் அண்ணன்னு பாக்குறேன்...இல்லை இல்லை அசிங்கம் அசிங்கமா கேப்பேன்...நாயே...எருமை மாடு...பன்னி மாடு..."என்று வாய்க்கு வந்ததை எல்லாம் திட்டிவிட்டு எழில் புறம் திரும்பி "இவன் ஒரு லூசு டா...அப்டிலாம் எதுவுமே இல்லை..நீ எதுவும் நினைச்சுக்காதே என்ன டா தங்கம்...ஆனாலும் நீ கொஞ்சம் யோசிச்சுக்கோ மா...பெட்ரமாஸ் லைட்டே தான் வேணுமா..."என்று கேட்டான்...

"டேய் அப்பறம் என்ன இதுக்கு நீ என்னை இங்கே கூட்டிட்டு வந்துட்டு நீ ஓடி போன..அப்புறம் இவ வந்தா..நானா எல்லாத்தையும் சேர்த்து நீ இவளை லவ் பன்றேன்னு நினைச்சுக்கிட்டேன்...அப்புறம் நான் மாமா கிட்ட பேசுறேன் சொன்னதுக்கு கூட நீ சந்தோசம் பட்டில...எதுக்கு...எப்படி தெரியும்னு கூட கேட்டில...நான் தெரியும்னு சொன்னதுக்கு கூட சக்தி மாமா சொன்னாங்களானு கேட்டில..." என்று தான் தவறாக நினைத்ததுக்கு தான் காரணம் இல்லை நீங்கள் இருவரும் தான் காரணம் என்பது போல் பேசினான்...

அவன் பேச பேச சக்தியும் எழிலும் குணாவை இப்டியே அடிக்கலாமா இல்லை ஓட விட்டு அடிக்கலாமா என்பது போல் பார்த்துக்கொண்டிருந்தனர்…

"அடேய் ராஜா மகாராஜா...நான் உன்னை இங்கே கூட்டிட்டு வந்ததுக்கும்..இவ உன்கிட்ட ஒருவிஷயம் பேசணும்னு சொன்னதுக்கும் நீ எங்கே எங்கே முடிச்சு போட்ருக்கானு உனக்கே புரியுதா...எதை வைச்சு நீ அப்டி நினைச்ச..."என்று சக்தி குணாவிடம் கேட்டான்…

"எழில் ஏதோ வெட்கபட்டுக்கிட்டே பேசுச்சு...அதனால கண்டிப்பா இது லவ் மேட்டரா தான் இருக்கும்னு நினைச்சேன்...நீ தான் இங்கே என்னை கூட்டிட்டு வந்தியா...நீ வேற கொஞ்ச நாளா சரி இல்லையா...ஒருவேளை மாமாக்கு பயந்து என்கிட்டே உதவி கேட்டு வந்தியோனு நினைச்சேன்...இது ஒரு தப்பா..."என்று விளக்கம் கூறினான் குணா…

இருவரது பேச்சு வார்த்தையும் மாற்றி மாற்றி கேட்டவாறு நின்றிருந்தாள் எழில்…

"என் பெரியாத்தா பெத்த பின்லேடனை இது லவ் மேட்டர் தான்...ஆனால் அது என்னது இல்லை...உன்னது...எழிலு உன்னை விரும்புதாம்...நீங்க பார்த்து பேசி முடிங்க..."என்று கூறியவன் மீண்டும் ஓட ஆரம்பித்துவிட்டான்...நின்றால் யாரு குணாவிடம் அடிவாங்குவது "கடைசில என் வாழ்க்கைல மண்ணள்ளி போடா தெரிச்சானே...இந்த விஷயம் காத்து வாக்குல செண்பகத்துக்கு தெரிஞ்சா கூட

கண்ணகி மாதிரி என்னை எரிச்சுப்புடுவாளே..."



சக்தி கூறிய செய்தியில் அதிர்ந்த குணா உண்மையா என்பது போல் எழிலை பார்த்தான்…

அவன் கண்களின் கேள்விக்கு ஆம் என்பது போல் தலையாட்டியவள் நான்கு விரல்களை காட்டினாள்…

"என்ன..."என்று ஒரு அதட்டல்…

"இந்த அதட்டுற வேலையெல்லாம் வேணாம்...நான் உங்களை நாலு வருசமா நினைச்சுட்டு இருக்கேன்..."என்று எழில் மூக்கையும் உதட்டையும் நானி கோணிக் கொண்டுக் கூறினாள்…

"என்னது...நாலு வருசமா...உன் வயசு எத்தனை மொத...என்ன படிக்குற..."என்று முற்றிலுமாக அதிர்ந்து போய் கேட்டான் குணா…

இந்த கேள்வியில் தலை குனிந்தவள் "பதினேழு இந்த ஆகஸ்ட் வந்தா..12 த் படிக்குறேன்...நான் நல்லா தான் படிப்பேன்..."

"நாலு வருஷம் என்ன கணக்கு...அப்ப உனக்கு பதிமூணு வயசு என்ன...இதெல்லாம் லவ்னு என்கிட்டே சொல்ல வந்துருக்க...அப்படி தானே..."என்று அவனின் மனரிஸமான காதை தடவிக்கொண்டு தலையாட்டிக்கொண்டே கேட்டான்…

"ஆமாம்...ஏன் என் லவ்க்கு என்ன குறைச்சல்...ஏன் இந்த வயசுல லவ் வரக்கூடாதா...வரது லவ் கிடையாதா..."என்று தனது காதலை பிழையாக சொன்னதில் கோவம் வர பெற்றவள் ஆத்திரத்துடன் கேட்டாள்…

"உனக்கு பதிமூணு வயசுல வந்தது லவ் கிடையாது...வெறும் இனக்கவர்ச்சி புரியுதா...இதெல்லாம் சும்மா...இந்த வயசுல இப்படி தான் இருக்கும்...போக போக சரி ஆகிரும்..."என்றான் குணா…

"நானும் அப்படி தான் நினைச்சேன்...இதெல்லாம் சும்மா வெறும் attraction தான் போக போக சரி ஆகிரும்னு...ஆனால் எதுவுமே நாலு வருசமா மாறலை...என் மொத்த எண்ணமும் உங்களை சுத்தி தான் இருக்கு...எந்திரிச்சா...தூங்குனா...சாப்பிட்டா...படிச்சா...எல்லாமே நீங்க தான் இருக்கீங்க...இப்படி இருக்குறது எனக்கே பிடிக்கல...ரொம்ப சுமையா இருக்கு...எனக்கு இந்த ரகசியம் காக்குறது எல்லாம் தெரியாத விஷயம்...அதான் உங்ககிட்டயே சொல்லலாம்னு வந்துட்டேன்….ஒவ்வொரு தடவையும் ஊர்க்கு வரும் போது உங்களை பாக்கணும் பாக்கணும் னு மனசு அடிச்சுக்குது...நீங்க போன வருஷம் ஒரிசா ல இருந்தப்ப அங்கே பயங்கர மழை பெஞ்சு வெள்ளம் போனப்ப நீங்க என்ன பன்றிங்களோ எப்படி இருக்கீங்களோனு தெரியாம எனக்கு சாப்பாடு கூட இரங்கலை….உங்களை எப்படி காண்டாக்ட் பண்றதுன்னும் தெரில...ரொம்ப கஷ்டமா இருந்துச்சு...அப்ப தான் சக்தி மாமா கிட்ட சொல்லி உங்ககிட்ட பேச சொன்னேன்..."

"இந்த வருஷ திருவிழாக்கு வந்தப்ப நீங்க கூட என்னை வயல்கிட்ட பார்த்து எங்கே போய்ட்டு வரேன்னு கேட்டீங்களா அன்னைக்கு உங்க வீட்ல போய் உங்க போட்டோவை திருடிட்டு வந்தேன் தெரியுமா...இன்னும் நிறைய நிறைய இருக்கு...இதெல்லாம் உங்களுக்கு வெறும் இனக்கவர்ச்சினு தோணுச்சுனா அதுக்கு நான் ஒன்னும் பண்ண முடியாது"என்று மூச்சு வாங்க கூறினாள் எழில்...

"நீ இவ்வளவு பேசுவியா..."என்று சம்மந்தமில்லாமல் கேட்டான்...

"நான் இதுக்கு மேலையும் பேசுவேன்..."இவ்வளவு சொல்லியும் சம்மந்தமில்லாமல் கேள்வி கேட்குறானே என்று கோவத்தில் இருந்தாள் எழில்…

"ஓஹ்...நீ எவ்வளவு சொன்னாலும் இது லவ் கிடையாது சரியா...ஒழுங்கா படி...அதுக்கு அப்பறம் எல்லாம் பாக்கலாம்..."

"அப்ப உங்களுக்கு என் மேல எந்த பீலிங்கும் இல்லையா..."என்று கலங்கி விட்ட கண்களுடன் கேட்டாள்எழில்…

"ஐயோ இப்ப எதுக்கு அழுற...கண்ணை துடை..."என்று கூறியவன் அவனே துடைத்தும் விட்டான்...அவள் கண்ணீரை...முகச்சுளிப்பை...முகவாட்டதை தாங்கும் அளவுக்கு அவனிடம் பலம் கிடையாது…

"நான் அப்படி சொல்லல...சின்ன பொண்ணு நீ...சரியா...வாழ்கை இன்னும் நிறைய இருக்கு…பார்ப்போம்..."

"நீங்க உங்க கூட இருக்க சொன்னா இருப்பேன்...போக சொன்னா போயிருவேன்...இப்ப இருக்கவா போகவா…."என்று உயிரை கண்களில் தேக்கி கொண்டு கேட்பார் என்பார்களே அதை அன்று தான் எழிலின் கண்ணை பார்த்து உணர்ந்தான் ...அதற்கு எந்த பதிலும் சொல்லாமல் அவள் தோள் மீது கை போட்டவாறு கூட்டி சென்றான்…

எழிலின் அம்மாச்சி வீடு வந்தவுடன் கையை எடுத்தவன் சென்று வா என்பது போல் தலையசைத்தான்...எழிலும் சிறிது தூரம் சென்றவள் திரும்பி வந்து "ஐ லவ் யூ மாமா...நீங்க என்ன சொன்னாலும் என் காதல் உண்மையானது...ஒரு நாள் அதை நீங்களும் புரிஞ்சுக்குவீங்க…."என்று கூறியவள் சென்று விட்டாள்…

அதற்கு பிறகு இருவரும் பேசி கொள்ளவே இல்லை...ஒவ்வொரு வருட திருவிழாவிற்கும் வருவாள்….இதயத்திற்குள் கையை விட்டு அதை வருடி குடுக்கிற மாதிரி ஒரு பார்வை பார்ப்பாள்...அந்த பார்வைக்காக எது வேண்டுமானாலும் செய்யலாம்...ஒரு நான்கு நாட்களுக்கு தூக்கத்தை தொலைக்க வைக்கும் பார்வை...



என்று யோசித்துக்கொண்டிருந்தவன் மேலே விழுந்துகொண்டிருந்த மழைத்துளிகளால் நிகழ்காலத்திற்கு வந்தான்…

"ஆமாம் அவ சொன்னது மாதிரி லாஸ்ட் ரெண்டு வருசமா அவ பார்வை வேற மாதிரி இருந்துச்சு...ஏதோ நாம மேல கோவமா இருக்குற மாதிரி...ம்ம்ம்..."என்று மழையில் நனைந்துகொண்டே மீண்டும் எழிலை நோக்கி சென்றுவிட்டான்…

வாசலில் தான் அணிந்திருந்த காலணியை கழட்டிக்கொண்டிருந்த ஆனந்த் அதாவது எழில்மதியின் தம்பி பயங்கர குழப்பத்தில் இருந்தான் என்று தான் சொல்ல வேண்டும்...அவனது குழப்பத்துக்கு காரணம் இல்லாமல் இல்லை...ஏனெனில் அந்த கருப்பாயி இல்லம் வரலாறு காணாத வகையில் அன்று மிகவும் அமைதியாக இருந்தது...

இது தனது வீடு தானா...அல்லது வேற எதுவும் வீடு மாறி வந்துவிட்டமோ... பின்னே ராகுவும் கேதுவும் வீட்டில் இருந்தும் என்றும் இல்லாத திருநாளாக வீடு அமைதியாக இருக்கிறதே என்ற யோசனையுடனே வீட்டிற்குள் நுழைந்தான்...அங்கு அவன் கண்ட காட்சி அவனது உயிரையே உறைய வைக்க போதுமானதாக இருந்தது…

அவர்கள் வீட்டு அல்லிராணி திருநிறைச்செல்வி எழில்மதி கண்களில் வழியும் நீரை துண்டினால் துடைத்தவாறு சோபாவில் அமர்ந்திருந்தாள்...சின்னதம்பியோ ஏதோ சி எஸ் கே மற்றும் மும்பை அணி மோதும் மேட்சின் லாஸ்ட் ஓவரை பார்க்கும் ரசிகனை போல் கண் இமைக்காமல் கர்மசிரத்தையாக அவளையே பார்த்தவாறு அவளுக்கு எதிரே அமர்ந்திருந்தார்…

எழில் அவ்வளவு எளிதில் அழுபவள் எல்லாம் கிடையாது...விளையாட்டு பெண் போல் தெரிந்தாலும் உணர்வுகளை ஆள தெரிந்தவள்...அவளே இப்படி நடுவீட்டில் அமர்ந்து அழுகிறாள் என்றால் விஷயம் ஏதோ பெரிது என்று பதறியவன்...தமிழ் திரைப்பட கதாநாயகர்களை போல கல்லூரி பையை கழட்டி ஸ்லொவ் மோஷனில் விட்டு எறிந்தவன் தனது தமைக்கையை நோக்கி அதே ஸ்லொவ் மோஷனில் சென்றடைந்தான்…(குறிப்பு:அவன் வேகமாக தான் சென்றான்...ஆனால் நம்மளை மாதிரி தமிழ் சினிமாவில் ஊறியவர்களுக்கு அது ஸ்லொவ் மோஷன் தான்...)
 




Geethazhagan

அமைச்சர்
Joined
Aug 16, 2018
Messages
3,909
Reaction score
4,843
Location
Chennai
நல்ல கலகலப்பா இருக்கு உங்க எழுத்து.சூப்பர் சிஸ் :love: :love: :love:
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top