• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

NTK 8

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

revathi kayal

இணை அமைச்சர்
SM Exclusive
Joined
Apr 21, 2018
Messages
541
Reaction score
2,727
Location
madurai
அத்தியாயம் 8



விடிந்தும் விடியாத அதிகாலைவேளையில் ஆழ்ந்த தூக்கத்தில் சக்தி ஷெண்பகத்துடன் டூயட் பாடிக்கொண்டிருந்தவேளையில் அவனை யாரோ பலமாக உலுக்கி தூக்கத்திலிருந்தும் டூயட்டில் இருந்தும் வலுக்கட்டாயமாக எழுப்பினர்.

"சென் இரு டா...எங்கயும் போகிறாதே...மாமா என்னனு கேட்டுட்டு உடனே வந்துறேன்..."என்று கனவுலகில் இருந்த காதலியிடம் உத்தரவு வாங்கிக்கொண்டு நினைவுலகத்துக்கு அதாவது கண்களை முழித்தான்…

கண்திறந்த சக்தி தனக்கெதிரேயிருந்த உருவத்தை பார்த்து அரண்டு ஆஆஆ என்று கத்தினான்….அவன் வாயை அடைத்த குணா "டேய் நான் தான் டா...பக்கி...லூசு..."என்று அமைதியாக முணுமுணுத்தான்…சரி என்று சக்தி தலையாட்டியவுடன் வாயில் இருந்து கையெடுத்தான் குணா…

"மொத அந்த தலைபாக்கட்டை அவுரு டா டேய்….மேலே பொத்திருக்குற கருப்பு சாலை எடு டா...பயந்தே போய்ட்டேன் தெரியுமா...பேய் மாதிரி ஏன் டா இன்னியரத்துல வந்துருக்க ராஸ்கல்..."அவன் கூறியவாறே தலைபாக்கட்டையும் சாலையும் ஓரமாக கழட்டி வைத்தவாறு "நாயே மணி ஐஞ்சு ஆச்சு...எந்திரி...நீ சொன்னது எல்லாம் கரெக்ட் டா...நான் இனிமே அவளை தொல்லை பண்ணமாட்டேன்..."என்று தலையும் புரியாமல் வாலும் புரியாமல் பேசினான் குணா …

"நான் என்ன சொன்னேன்...நீ யாரை டா தொல்லை பண்ண..."என்று புரியாமல் கேட்டான் சக்தி…

"நீ நேத்து சொன்னில அவளுக்கான காதலை உன்னால கொடுக்கவே முடியாது…. அந்த பொண்ணை...விடு...உன்னை தவிர யாரை கல்யாணம் பண்ணாலும் எழில் நல்லா இருப்பா...அப்படினு..."என்று சக்தி சொன்ன அதே வார்த்தைகளை அச்சுப் பிசகாமல் அதே மாதிரி சொல்லி காமித்தான் குணா…

சக்தி குணாவை பரிதாபமாக பார்த்தான்... இந்தளவு ஒரு வார்த்தைக்கூட மாறாமல் அப்படியேக் கூறுகிறான் என்றால் இரவு முழுவதும் இதே தான் யோசித்திருக்க வேண்டும்...வாழ்கை யாருக்கு என்ன வைத்திருக்கிறது என்று யாருக்கு தெரியும்...இன்று வேண்டாமென்று எட்டி உதைத்த ஒரு பொருள் நாளை நம் உயிரினும் மேலாக நேசிக்க கூடிய பொருளாக மாறும் என்றும் அதை நாம் தேடியலைவோம் என்று யாராவது கூறினால் எவ்வளவு நன்றாக இருக்கும்…விசித்திரமான வாழ்க்கையில் நாமும் விசித்திரமானவர்கள் தான் போல...

"சரி...அதை ஏன் இப்ப என்கிட்டே வந்து சொல்லிட்டு இருக்க..."என்று கேட்டான் சக்தி…

"இல்லை டா...உனக்கே தெரியும்...எழிலை எனக்கு ரொம்ப பிடிக்கும்னு...அப்படி பார்க்காதே டா...அந்த மாதிரி இல்லை...நான் பார்த்து வளர்ந்த பொண்ணா...அப்படி...அவ யாரையோ லவ் பண்றேன் சொன்னா நாம அப்படியே விட்டுற முடியுமா...அவனை பத்தி நாம தெரிஞ்சுக்க வேணாமா...இந்த பொள்ளாச்சி மேட்டர் எல்லாம் தெரியும் தானே உனக்கு...அவளுக்கு என்ன தெரியும்...வாய்கிழிய பேச தான் தெரியும்..."என்று தன்னை குறுகுறுவென்று பார்த்துக்கொண்டிருந்த சக்தியை நோக்கிக் கூறினான் குணா…

"சரி அதுக்கு இப்ப என்ன பண்ணனும்..."என்று கேட்டான் சக்தி…

"இல்லை டா...இப்ப நீ எழிலுக்கு போன் பண்ணி எல்லாத்தையும் விசாரிக்கணும்...அவ்வளவு தான்...நான் கேட்டா சொல்லுவாளான்னு தெரில...ஆனால் உன்கூட நல்லாத்தானே பேசுவா..."என்று காதை தடவிக்கொண்டே தலையாட்டியவாறு கேட்டான் குணா…

"நம்பர் மாத்திட்டுதா நினைக்குறேன் டா...அவ கூட பேசியே ரெண்டு வருஷம் ஆச்சு...இப்ப எல்லாம் பேசுறது இல்லை..."என்று சக்தியும் பரிதாபமாக கூறினான் …

"ஓஒ...இப்ப நம்பர் யார்கிட்ட இருக்கும்...கருப்பாயி அக்கா நம்பர் இருக்குல்ல நீ போன் பண்ணி கேளு...அக்கா தரும்..."என்று யோசனை கூறினான் குணா...

"ம்ம்..சரி..."என்று கூறிவிட்டு கருப்பாயிக்கு அழைத்து அதை சின்னத்தம்பி எடுத்து அவரிடம் அதிகாலையில் அழைப்பு விடுத்ததுக்காக திட்டுவாங்கிவிட்டு எழில் அலைப்பேசி எண்ணை கேட்கப்போய் அதுக்கும் மனக்கேடாக பேச்சுவாங்கிவிட்டு என்னென்னமோ சொல்லி சமாளித்துவிட்டு ஒரு வழியாக அந்த கொம்பேறி முக்கனிடம் இருந்து எழிலின் எண்ணை வாங்கியிருந்தான் சக்தி…

"ச்சை...மனுசனா டா அவரு...அப்பப்பா எவ்வளவு கேள்வி கேக்குறார்...பாவம் டா நம்ம அக்கா...இவர் கூட எப்படி தான் இத்தனை வருஷம் குடும்பம் நடத்துதோ..."என்று புலம்பிவிட்டு எழிலுக்கு அழைப்பு விடுத்தான் சக்தி…

முதல் அழைப்பிலே எடுத்திருந்தாள் எழில்…

"ஹலோ...சொல்லு மாமா..."என்று எழில் பேச ஆரம்பித்தவுடன் குணா ஸ்பீக்கரில் போடுமாறு சைகை செய்யவும் ஸ்பீக்கரில் போட்டான் சக்தி…

"ஒய்...நான் தாணு எப்படி தெரியும்...என் நம்பர் உன்கிட்ட இருக்கா..."என்று உற்சாகமாக பேச ஆரம்பித்துவிட்டான்…

"ஹா ஹா ஹா..அதான் சின்னு அப்பா இப்ப வந்து உசுப்பி சொல்லிட்டு போனாரே...நீ நம்பர் வாங்கிருக்கானு….உனக்கு போன் போட வேற நேரமே கிடைக்கலையா..."

"எனக்கு காத்து வாக்குல ஒரு செய்தி வந்துச்சு அது உண்மையா இல்லையானு தெரிஞ்சுக்காட்டி தலையே வெடிச்சிரும் அதான்...இன்னியரத்துல போன் பண்ணிருக்கேன்..."என்று விளையாட்டுபோலவே கேட்க ஆரம்பித்திருந்தான்…

அவளும் அந்த விளையாட்டை கையில் எடுத்துக்கொண்டு பதில்கூற ஆயத்தமானாள் "என்ன நியூஸ்...மாமா...கேளு கேளு சொல்றேன்...உனக்கு இல்லாததா..."

"குணா வீட்ல இருந்து பேச வந்தும் நீ வேணாம்னு சொல்லிட்டியாம்ல...அப்டியா..."என்று கேட்டான் சக்தி...இருவரின் பேச்சு வார்த்தையையும் துல்லியமாகக் கேட்டுக்கொண்டிருந்தான் குணா...



"ம்ம்...ஆமாம் மாமா..."என்று உடனடியாக கூறினாள் எழில்…

"ஏன் டா மா...நீ இதுக்காக தானே இத்தனை வருசமா காத்திருந்த...என்ன ஆச்சு..."என்று உண்மையான வருத்தத்தில் கேட்டான் சக்தி…

"இல்லை மாமா..ஏழு வருசத்துக்கு முன்னாடி இருந்த சூழ்நிலை வேற...இப்ப இருக்குற சூழ்நிலை வேற..."

"குணா வேற என்னமோ சொன்னானே டா...வேற யாரையோ நீ காதலிக்கிறாயாமே...யாரு டா...ஏதோ மலேசியால இருக்காராம்...அப்படியா...சும்மா தானே சொன்ன..."என்று கேட்டான் குணா...இதில் உஷாரானாள் எழில்...சொன்னதை சொன்ன மாதிரியே திருப்பி சொல்ல ஆரம்பித்தாள்...குணாவிடம் சொன்னதில் ஒரு வார்த்தை கூட மாறாமல் சக்தியிடமும் கூறினாள்…

"ஓஹ்...வாழ்த்துக்கள் டா...பேர் என்ன டா...மலேசியா ல எங்கே இருக்காப்ல..."என்று கேட்க ஆரம்பித்தான் சக்தி…

"பேர் பிரவீன்...கோலாலம்பூர்ல இருக்காங்க...சாப்ட்வேர் டெவலப்பர்...ஆன் சைட் போயிருக்காங்க மாமா…****கம்பெனி... வேற என்ன தெரியணும் மாமா..."என்று நக்கலாக கேட்டாள் எழில்…

"ஹா ஹா ஹா...ஒன்னும் இல்லை டா...சரி டா...ஏதாவது ஹெல்ப் வேணும்னா கூப்டு...கண்டிப்பா செய்யுறேன்...அடிக்கடி போன் பேசுங்க மேடம்...சரி உங்க அம்மாச்சி கத்துது...நான் வைக்கட்டா...டாடா டா.."என்று எழிலிடம் பேசிவிட்டு அலைப்பேசியை வைத்தவன் குணாவை பார்த்தான்…

"அப்ப எல்லாம் உண்மை தான்...அவ உண்மையிலே ஒருத்தரை விரும்புறா...ஹான் அதே தான் நேத்தே சொல்லிட்டாலே...சரி நீ இந்த கம்பெனில யாராச்சும் தெரிஞ்சவங்க இருக்காங்களான்னு பாரு...நானும் பாக்குறேன்..."என்றவன் வேறு ஒன்றும் பேசாமல் எழுந்துச் சென்றுவிட்டான் குணா…

இவன் மனசுக்குள்ள என்ன நினைக்குறானே கண்டுபிடிக்க முடியலையே...முருகா...பாவமா வேற இருக்கு...என்று புலம்பிய சக்தி மீண்டும் செண்பகத்துடன் கனவு காணச் சென்றுவிட்டான்…



"வாங்க வாங்க…"என்று சுந்தரமும் சின்னத்தம்பியும் வாசலில் நின்று வந்த மாப்பிளை வீட்டு காரர்களை உள்ளே அழைத்துக்கொண்டிருந்தனர்...மாப்பிளை வீட்டு குடும்பம் மற்றும் இவர்கள் வீட்டு ஆட்கள் அவ்வளவு தான்…

மைதிலியும் கருப்பாயியும் உள்ளே வந்தவர்களை அமரவைத்துக் கொண்டிருந்தனர்...ராஜி அறையில் அவளின் தங்கை...பக்கத்துக்கு வீட்டு பெண்கள்...இதற்காக வந்திருந்த எழிலின் தங்கை மகா என்று அமர்ந்திருந்தனர்…

வீட்டு பின்கட்டில் ஆனந்த்...எழில்...ராஜியின் இரு குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர்…

அனைவரும் வந்த பின்பு சுந்தரமும் சின்னத்தம்பியும் உள்ளே வந்துவிட்டனர்...ராஜியில் ஆரம்பித்து பெண் வீட்டாரின் அனைவரின் பார்வையும் வாசலில் தான் இருந்தது...மாப்பிளை இன்னும் வரவில்லை...குடும்பத்தாரை முன் அனுப்பிவிட்டு ஒரு வேலையை முடித்து விட்டு பின்னாடியே வருவதாக சொல்லிருந்தான்..ஆனால் இன்னும் வந்த பாட்டை காணவில்லை…

சிறிதுநேரத்தில் மாப்பிளை முன்வாசல் வழியாக வரவும் பின்கட்டில் இருந்து எழில் வரவும் சரியாக இருந்தது…

"ஒரு மந்தையில் இருந்த இரண்டு ஆடுகள் வேறு வேறு பாதையில் சென்று விட்டன...இரண்டும் சந்தித்த போது பேச முடியவில்லையே…."என்று பின்னணியில் ஒலிக்க ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டிருந்த சசியும் எழிலும் சிரித்துவிட்டனர்….

"ஹா ஹா ஹா...என்னால நம்பவே முடில..."என்று வயிறை பிடித்து சிரித்துக்கொண்டு சசியும்…

"என்னாலையும் தான் சார்..."என்று எழிலும் சிரித்தனர்...சுற்றி இருந்தவர்களுக்கு தான் இதுங்க என்ன டா பைத்தியங்க என்று தோன்றியது...

"எழில் என்னோட ஸ்டுடென்ட் அம்மா..."

"இவர் என்னோட சார் அப்பா..."என்று இருவரும் தங்களது பெற்றோர்களிடம் கூறினர்...எழில் யூ ஜி படிக்கும் போது ஆங்கில வாத்தியாராக இருந்தவர் சசி...இருவருக்கும் நல்ல பழக்கம்...ரொம்ப ஜாலியான அரட்டை பேர்வழி சசி...மாணவர்களை நண்பர்களை போல் நடத்தும் மனப்பான்மை கொண்டவர்...அதனால் தான் இப்படி…

எழில் கையிலிருந்த இரண்டாவது குழந்தையை வாங்கியவன் அவளை மடியில் அமர்த்திக்கொண்டு சோபாவில் உட்கார்ந்துவிட்டான்...முதலாமவளை கூப்பிட்டு பார்த்தான் அவள் வரமாட்டேன் என்று தலையசைத்துக்கொண்டே எழிலின் காலை கட்டிக்கொண்டாள்…

சிரிப்புடன் தனது மடியில் இருந்த குழந்தையுடன் பேச ஆரம்பித்துவிட்டான் சசி...தனது காலை கட்டிக்கொண்டிருந்த குழந்தையை தூக்கிக்கொண்டு ராஜிடம் சென்ற எழில் அவளை கட்டிக்கொண்டாள்..

"உண்மையிலே எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு டி...மாப்பிளை என் இங்கிலிஷ் சார் தான்...ரொம்ப நல்லவர்,..உன்னையும் குழந்தைகளையும் நல்லா பார்த்துப்பார்..."என்று எழில் கூறவும் ராஜிக்கு மனதில் இருந்த சொல்ல தெரியாத பயம் அகன்றது என்று தான் சொல்லவேண்டும்...அடுத்து சசி வந்து குழந்தைகள் தங்கள் கூடவே இருக்கட்டும் என்று சொல்லவும் பேரானந்தம் அடைந்தாள் ராஜி…

அடுத்து அடுத்து நடக்கவேண்டிய அனைத்துக்காரியங்களும் நடந்துமுடிந்து திருமணத்தேதி இன்னும் பதினைந்து நாட்களில் என்று குறிக்க பட்டு சுபநிகழ்ச்சி எந்த தடையும் இல்லாமல் மகிழ்ச்சியாகவே நிறைவுற்றது...
 




revathi kayal

இணை அமைச்சர்
SM Exclusive
Joined
Apr 21, 2018
Messages
541
Reaction score
2,727
Location
madurai
எந்தவிதமான முன்னேற்றமும் இல்லை...குணாவை பொறுத்தவரை வேற ஒருத்தரை காதலிக்கும் பெண்ணை கட்டாயப்படுத்தி திருமணம் செய்யும் உத்தேசம் இல்லை...அவன் குடும்பத்திலும் இதை ஏற்றுக்கொள்ளப்போவது இல்லை...அப்படியே இதை விட முடிவு செய்தான்...ஆனால் நடுவில் அந்த பிரவீனை பற்றி அறிய தெரிந்தவர்களிடம் சொல்லி கொண்டிருந்தான்...அப்படி விசாரிக்கும் போது சக்தியின் நண்பரின் நண்பர் அங்கே வேலை செய்வதாக தெரிய வந்தது...ஆனால் அவரை தான் பிடிக்க முடியவில்லை...சமூக வலைத்தளங்கள்...போன் என்று தொடர்ச்சியாக முயன்றுக் கொண்டே இருக்கின்றனர்…

"குணா...உன்கிட்ட கொஞ்சம் பேசணும்..."என்று குணாவின் தந்தை வேலு கூறவும் வெளியே கிளம்பிக்கொண்டிருந்த குணா "சொல்லுங்க அப்பா..."என்றவாறு அவர் முகத்தை பார்த்து நின்றான்…

"கவிதாவுக்கும் உனக்கும் பொருத்தம் பார்க்கலாம்னு இருக்கோம் பா...நீ என்ன சொல்ற..."என்று வேலு கேட்டு முடிப்பதற்குள் இடையில் புகுந்த சிவகாமி "அவன் என்னச் சொல்ல இருக்கு...அவன் பேச்சுக்கு போய் ஆடி முடிச்சுட்டு வந்தாச்சு...இனி அவன் நாம சொல்லறதை தான் கேக்கணும்...கேட்பான்..."

"ம்ம்…சரிங்க பா...பாருங்க...எனக்கு ஒன்னும் இல்லை...இந்த லீவு முடியறதுக்குள்ள கல்யாணம் முடியுற மாதிரி பாருங்க..."என்றவன் சென்று விட்டான்…

கவிதா குணாவின் அத்தை பெண்...அருகிலிருக்கும் மருத்துவமனையில் செவிலி பணி புரிகிறாள்…. ஒரே ஊர் தான்..

அன்று காலையில் விடிந்ததில் இருந்தே எழில் அறையை விட்டு வெளியே வரவே இல்லை...அவளை வீட்டில் இருந்த யாரும் சென்று கூப்பிடவும் இல்லை...அவள் அறையை கடக்கும் போது ஒரு பெருமூச்சுடன் கடந்து சென்றனர்…

"அம்மா...எழிலை கூப்பிட்டு சாப்பிட சொல்லு மா...எத்தனை வருசத்துக்கு தான் இதையே நினைச்சுட்டு இருப்பா...ப்ரண்டு தான்...இது நல்லா இல்லை அம்மா..."என்ற மகா எழிலின் அறையை தட்டினாள்…

ஆனால் அவள் திறக்கவே இல்லை...தட்டி தட்டி பார்த்தவள் வெறுப்பாகி...ஹாலில் அமர்ந்திருந்த மூவரையும் பார்த்து"நீங்க இவளுக்கு ரொம்ப செல்லம் கொடுத்து கெடுத்துட்டு இருக்கீங்க அவ்வளவு தான் சொல்லுவேன்...எல்லாத்தையும் தாண்டி தான் வரணும்..."என்று கத்தியவள் அவளது உடமைகளை எடுத்துக்கொண்டு யாரிடமும் சொல்லாமல் அவள் வீட்டிற்கு சென்று விட்டாள்…

"மகா சொல்றது தான் சரிந்தாங்க...என்னதான் பழக்கமா இருந்தாலும் இப்படியா...என்னமோ...இவளை நினைச்சா சாப்பிட்ட சாப்பாடு கூட செரிக்க மாட்டிங்குது...எல்லாம் என் தலையெழுத்து..."என்று புலம்பிய கருப்பாயியும் அவர் அறைக்குள் சென்று முடங்கிவிட்டார்…

சின்னத்தம்பியம் எழிலை நினைத்து கஷ்டப்பட்டவர் அமைதியாக அமர்ந்துஇருந்தார்...ஆனந்த் கைபேசியை நோண்டிக்கொண்டிருந்தான்…

அப்பொழுது அறையிலிருந்த சின்னத்தம்பியின் அலைப்பேசி ஒலியெழுப்பவும் கருப்பாயி எடுத்துவந்து அவரிடம் கொடுத்தார்…

வந்திருந்த எண்ணை பார்த்தவர் முகத்தை சுருக்கிவிட்டு அலைபேசிக்கு செவியை குடுத்தார்…

"சொல்லு பா...என்னது...எப்ப...இப்ப எப்படி இருக்காரு...இந்தா உடனே வரோம்..."என்று கைபேசியில் படபடப்பாக பேசினார் சின்னத்தம்பி…

அதில் பயந்து போன கருப்பாயி யாருங்க என்ன சொன்னாங்க….என்று வினவினார்

"உன் பெரிய அண்ணன் மகனுக்கு நேத்து ஆக்சிடென்ட் ஆயிருச்சாம்...மதுரை பெரிய ஆஸ்பத்திரில சேத்து இருக்காங்களாம்...இப்ப நல்லா தான் இருக்கான்...வா போய் பார்த்துட்டு வந்துருவோம்...".



என்று கூப்பிட்டார்…

"எழில் தனியா இருப்பாலேங்க...டேய் ஆனந்த் அக்காவை விட்டு எங்கயும் போக கூடாது...இங்கயே இருக்கனும் சரியா..."என்றவர் அண்ணன்மகனை காண கிளம்பினார்…

சின்னத்தம்பியும் கருப்பாயியும் ஆனந்திடம் ஆயிரம் பத்திரம் சொல்லிவிட்டு கிளம்பினர்…

******************************************************************************************

குணா இப்பொழுது கட்டிக்கொண்டிருக்கும் வீட்டு கட்டிடத்திற்கு வரவும் அலைப்பேசி அழைக்கவும் சரியாக இருந்தது...சக்தி தான் அழைத்திருந்தான்...

"சொல்லு சக்தி..."

"என்ன சொல்ற...நிஜமாவா..."

"இன்னைக்கு தானா...அவளுக்கு இருக்கு இன்னைக்கு...நேர்ல போய் வைச்சுகிறேன்..."என்றவன் உடனடியாக எழிலின் வீடுநோக்கி சென்று கொண்டிருந்தான்...
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top