Oh kadhal Kanmani - UD 12

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Naemira

SM Exclusive
Author
SM Exclusive Author
Joined
Mar 21, 2018
Messages
2,110
Reaction score
10,407
Points
113
Age
28
Location
Thovalai
ஓ காதல் கண்மணி -12

image.jpg
இதுவரை .....

ஒருவேளை அவ இன்னொசெண்டா இருந்தா அவளுக்கு பனிஷ்மென்ட் குடுக்குறதில்லை எனக்கு விருப்பம் இல்லை .. இதுல ஒரு பொண்ணுடைய வாழ்க்கை இருக்கு ஆனா அதுக்காக என்னால இதை அப்படியே கண்டும் காணாமலும் விட முடியாது .. அப்படி விட்டா அது மத்த ஸ்டுடென்ட்ஸ்க்கு தவறான முன்னுதாரணாமா ஆகிரும் ...
தப்பு யார் பக்கம் இருக்கு ரெண்டு பேர் மேலையும் இருக்கா இல்லை.... உங்களுக்கு புரிஞ்சிருக்கும்ன்னு நினைக்கிறன் .... ஸோ நீங்க உங்க ஸ்டுடென்ட் கிட்ட பேசி ஸ்டேட்மென்ட் வாங்குங்க ... டெசிஷன் மேக்கிங் காயத்ரி மேம் கிட்ட விட்ரலாம் " சிடுசிடுத்த படி தொடங்கிய முகத்தில் விஷப்புன்னகை தலைவிரித்து ஆட ...


" போன தடவை ஸ்போர்ட்ஸ் டே அப்போ இதே மாதிரி ஒருவிஷயம் அர்ஜுன் ஒரு ஸ்டுடென்ட்டை அடிச்சு பெரிய பிரச்சனையாச்சு ... நானும் நீங்க சொன்ன மாதிரி பண்ணினேன் ... கடைசி நேரத்துல உங்க சன் ரோஹித் தான் மேல பழியை போட்டுக்கிட்டாரு ... நீங்களும் அர்ஜுன் மேல எந்த ஆக்ஷனும் எடுக்காம விட்டுடீங்க ... " என்ற கிருஷை பார்த்து தீவிரமாய் முறைத்த,

மஹிமா
" எக்ஸ்க்யூஸ் மீ நான் உங்களை செய்ய சொல்லல ... செய்யணும்ன்னு சொல்றேன் அண்டர்ஸ்டாண்ட் ... "
" சாரி மேம் "
" யஸ் போங்க இந்த முறை எந்த பிரச்சனையும் வராது நீங்க அந்த பொண்ணை கன்வின்ஸ் பண்ணுங்க நான் என்ன பண்ணனும்ன்னு எனக்கு தெரியும் " ஆளுமையான கட்டளை .... பணிந்தாக வேண்டிய கட்டாயத்தில் கிருஷ் ... சரி என்பதாய் தன் தலை அசைத்துவிட்டு வெளியேறினார் கிருஷ் ....


 
Naemira

SM Exclusive
Author
SM Exclusive Author
Joined
Mar 21, 2018
Messages
2,110
Reaction score
10,407
Points
113
Age
28
Location
Thovalai
இனி ..........

" ஏய் மோனி இப்படி அழுதுட்டே நாங்க என்ன தான் பண்றது , நீ என்ன நடந்ததுன்னு சொன்னா தானே எங்களுக்கு தெரியும் " - என்று அழுது கொண்டிருந்த மோனிஷாவை அணைத்தபடியே ரக்ஷிதா கேட்க ...

மோனிஷாவும் முந்தின நாள் இரவு நடந்தது தொடங்கி மஹிமாவின் அறையினுள் நடந்தது வரை அனைத்தையும் கூறியவள் . அர்ஜுனின் தந்தையை பற்றிய உண்மையை மட்டும் மறைத்துவிட

" ஓ அப்போ தப்பெல்லாம் அவன் பண்ணிட்டு உன் மேல பழி போடுறானா அவனை " என்று கோபமுற்ற ரக்ஷிதாவை தடுத்த மோனிஷா

" அவனை சொல்லி என்ன பண்றது என் நேரம் , ரொம்ப பயமா இருக்கு அப்பாக்கு தெரிஞ்சா என்ன ஆகும் ... ரொம்ப அசிங்கமா இருக்கு யாரையும் பேஸ் பண்ணவே கஷ்டமா இருக்கு "

" மோனி எந்த தப்பும் செய்யாம நீ ஏன் இப்படி அழுதுட்டு இருக்க ... மஹிமா மேம் கிட்ட எல்லாத்தையும் சொல்லு கண்டிப்பா அவங்க உனக்கு ஹெல்ப் பண்ணுவாங்க " என்ற லக்ஷிடம்

" அப்போ , அர்ஜுன் மாட்டிக்குவான் லக்ஷ் " அந்த நிலைமையிலும் அர்ஜுனை விட்டு கொடுக்க மோனிஷாவால் இயலவில்லை

" நீ இங்க இப்படி பேசிட்டு இருக்க ஆனா அவனோ கொஞ்சம் கூட கவலையே இல்லாம உன்னை குறை சொல்லிட்டு இருப்பான் "

" அவனை சும்மா விட கூடாது ரக்ஷு " என்ற லக்க்ஷை தடுத்த மோனிஷா
" ப்ளீஸ் வேண்டாம் எனக்காக நீங்க எந்த பிரச்சனையிலும் மாட்டிக்காதீங்க " என்றாள்.

" அப்போ இதுக்கு என்னதான் வழி, இப்படி அழுதே இருக்க போறியா " அக்கறையோடு ரக்ஷிதா வினவினாள்.

" இல்லை அர்ஜுன் கிட்ட பேச போறேன் , இதெல்லாம் அவனுடைய திங்க்ஸ் இதெல்லாத்தையும் அவன்கிட்ட குடுத்து நேத்து நடந்ததை பத்தி பேச போறேன் ... கண்டிப்பா அவன் புரிஞ்சிக்குவான் இந்த பிரச்சனையில இருந்து அர்ஜூனால மட்டும் தான் என்னை காப்பாற்ற முடியும் "

" எங்களுக்கு சத்தியமா அப்டி தோணலை "

" எனக்கு நம்பிக்கை இருக்கு , அர்ஜுன் அவ்வளவு கெட்டவன் இல்லை "

" மால்ல உன்கிட்டையும் உன் அப்பாகிட்டையும் இவன் தானே பிரச்சனையை பண்ணினான் ... இவன் சரியான திமிரு பிடிச்சவன் இவன் கிட்ட கெஞ்சினா வேலைக்கு ஆகாது " சிடுசிடுத்த ரக்ஷிதாவை சமாதானம் செய்த மோனிஷா தன் நண்பர்களோடு அர்ஜுனை காண சென்றாள்.

பார்க்கிங் ஏரியாவில் ,

" டேய் ஏதாவது நியாபக படுத்தி பாருடா " என்ற ரோஹித்திடம்

" ரோஹித் ஏன் புரிஞ்சிக்க மாட்டிக்கிற ... தலையே வெடிக்கிற மாதிரி இருக்கு ... நேத்து நைட் பத்தி எனக்கு எதுவும் நியாபகத்துக்கு வரமாட்டிக்குது நான் என்ன பண்ணட்டும் " எரிச்சலோடு உரையாட

" அந்த பொண்ணை பார்த்தா பாவமா இருக்கு டா "

"ஸோ ... நான் என்ன பண்ணனும் " இருக்கரங்களையும் குறுக்கே கெட்டியவாறு அர்ஜுன் கேட்க ... ரோஹித்துக்கோ கோபமாய் இருந்தது ..
 
Naemira

SM Exclusive
Author
SM Exclusive Author
Joined
Mar 21, 2018
Messages
2,110
Reaction score
10,407
Points
113
Age
28
Location
Thovalai
" இங்க பாரு ரோஹித் ராத்திரி நேரத்துல அவளுக்கு அங்க என்ன வேலை ,
சரி கதவு உள் பக்கமா தானே பூட்டிருந்தது திறந்துட்டு வெளிய போயிருக்கலாமே,
அதை விட்டுட்டு நான் சுய நினைவுல இல்லாதப்போ என்கூட ஏன் இருக்கணும் ஐயம் ஸுயர் ஷி ஹவ் சம் மோட்டிவ் ...
ஸீ ஷி இஸ் நாட் அன் இன்னோசென்ட்" என்று முகபாவனையோடு கூறிய மறுநொடி ...

" அர்ஜுன் " கர்ஜித்தபடி லக்ஷ் அர்ஜுனின் சட்டை காலரை இறுக்கமாய் பற்றினான் ..

சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பார்களே ... அந்த பழமொழி இன்று லக்ஷ்க்கு கனக்கச்சிதமாய் பொருந்தியது ... யாரிடம் அவன் இதுவரை இப்படி நடந்து கொண்டதில்லை ..
ரக்ஷிதாவே ஒரு நொடி அதிர்ந்து போனாள்.ஓரிரு நாட்கள் பழகி இருந்தாலும் ஒரு நண்பனாய் அர்ஜுன் மோனிஷாவை பற்றி தவறாய் கூறியதை பொறுத்துக்கொள்ளாமல் லக்ஷ் அர்ஜுனிடம் கோபம் கொண்ட மறுநொடி ...

" ஹவ் டேர் யு " ரௌத்திரத்துடன் அர்ஜுன் முழங்கிய வார்த்தைகள் அனைவரையும் திகைப்படைய செய்தது ..

" அர்ஜுன் ப்ளீஸ் " அவனிடம் தெரிந்த வேகத்தை கண்டு ரோஹித் அவனை முயன்றான் .

" எவ்வளவு தைரியம்டா உனக்கு !"- லக்ஷ்ஷை தள்ளிவிட்ட படி அவனிடம் நெருங்கி அவன் கண்களை நேருக்கு நேர் பார்த்து உறுமினான் .

லக்ஷ் பதில் கூறாமல் நின்றான் ... ரோஹித்தும் தர்ஷித்தும் தடுக்க முயன்றார்கள் ... சூறாவளிக்கு அணைக்கட்டினால் தாங்குமா ?

" வேண்டாம் அர்ஜுன் "லக்ஷ் கோபத்தோடு கூறினான் ...

"என்னடா என்ன பண்ணுவ " என்று அதட்டியபடி அர்ஜுன் அவனின் சட்டையை பிடிக்க . கண் இமைக்கும் நேரத்தில் தள்ளுமுள்ளாகிவிட்டது .
லக்ஷ் நிலை தடுமாற வெறிபிடித்த மிருகம் போல் மாறிய அர்ஜுன் அவனை சரமாரியாக தாக்கினான் .

நண்பன் அடிவாங்குவதை பார்த்து ரக்ஷிதாவும் மோனிஷாவும் பதறி துடித்தனர் ...
அர்ஜுனின் ஐவிரல்கள் லக்ஷின் நாசியை தாக்க துணிந்த நேரம் ...

" ஐயோ ... ப்ளீஸ் விட்டுடுங்க .. விட்டுடுங்க " அர்ஜுனின் முன் கைகூப்பியபடி கெஞ்சினாள் மோனிஷா .

" தள்ளிப்போ " என்று சீரிய அர்ஜுனை கலவரத்தோடு பார்த்த மோனிஷாவின் விழிகளில் இருந்து சற்றன்று கண்ணீர் திரண்டது .

" நான் தப்பான பொண்ணு இல்லை ... நீங்க எப்படி அப்படி சொல்லலாம் " அழுதபடி கூறினாள்.

அவளது வார்த்தைகள் அவனை சுருக்கென்று குத்தியது ... சில நொடி அவளை கனிவாய் பார்த்தவனின் வதனம் மறு கணமே இறுகியது ..

தன் பார்வையாலே லக்ஷை எச்சரித்த அர்ஜுன் ...
மோனிஷாவின் கரங்களை அழுத்தமாய் பற்றி தன் பக்கம் இழுத்து
" ஆஹாங் " அவனது குரலில் விரவியிருந்த ஏளனம் மோனிஷாவின் மனதை காயப்படுத்தியது ...
" அர்ஜுன் " அழுதாள்
" நீ சொன்னாலும் சொல்லாட்டாலும், நீ தப்பான பொண்ணு தான் " விஷத்தை கக்கியபடி அங்கிருந்து சென்றான் ... கலங்கியபடி நின்றாள் மோனிஷா .
 
stella

Well-known member
Joined
May 21, 2018
Messages
1,467
Reaction score
2,580
Points
113
Age
25
மிகவும் அருமையான பதிவு sis இந்த அர்ஜுன் வாயை திறந்தால் தான் உண்மையே வெளிவரும் ஆனா அவனுக்ஜ் சுத்தமா ஞாபகம்??????? இல்லையே மோனிஷா மறுபடியும் அசிங்கப்பட்டுட்டு வரப்போறா லக்ஷ்க்கு மோனியை பற்றி சொன்னதும் கோபம் வருது அவள் தப்பான பொண்ணா நீ தானடா போறவளை கட்டிபிடிச்சிக்கிட்டு போகவிடாம பண்ணிட்டு இப்போ எதுவும் ஞாபகம் இல்லாம மோனியை தப்பானவள்னு சொல்ற ???????????
 
Last edited:

Naemira

SM Exclusive
Author
SM Exclusive Author
Joined
Mar 21, 2018
Messages
2,110
Reaction score
10,407
Points
113
Age
28
Location
Thovalai
மிகவும் அருமையான பதிவு sis இந்த அர்ஜுன் வாயை திறந்தால் தான் உண்மையே வெளிவரும் ஆனா அவனுக்ஜ் சுத்தமா ஞாபகம்??????? இல்லையே மோனிஷா மறுபடியும் அசிங்கப்பட்டுட்டு வரப்போறா லக்ஷ்க்கு மோனியை பற்றி சொன்னதும் கோபம் வருது அவள் தப்பான பொண்ணா நீ தானடா போறவளை கட்டிபிடிச்சிக்கிட்டு போகவிடாம பண்ணிட்டு இப்போ எதுவும் ஞாபகம் இல்லாம மோனியை தப்பானவள்னு சொல்ற ???????????
Thank you so much pa... Arjun ku check vachiralaam friends
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top