Oh Kadhal Kanmani - UD 15

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Naemira

SM Exclusive
Author
SM Exclusive Author
Joined
Mar 21, 2018
Messages
2,110
Reaction score
10,407
Points
113
Age
28
Location
Thovalai
வணக்கம் நட்பூஸ் ,

விட்டு விட்டு கொடுத்தாலும் என்னை விட்டு கொடுக்காது நீங்கள் தரும் ஆதரவுக்கு மிக்க நன்றி .

ஓ காதல் கண்மணியின் அடுத்த பதிவோடு உங்களை சந்திப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி ...

படித்துவிட்டு உங்களது கருத்துக்களை தெரிவியுங்கள் ...
 
Naemira

SM Exclusive
Author
SM Exclusive Author
Joined
Mar 21, 2018
Messages
2,110
Reaction score
10,407
Points
113
Age
28
Location
Thovalai
ஓ காதல் கண்மணி 15

ippknd2.jpg

இதுவரை .....

இவள் அனைவரிலும் தனித்து காணப்பட்டாள் அதுவே அவனை அவளோடு இன்னும் நெருக்கமாக்கியது அவளை அறிந்து கொள்ள அவன் மனம் ஏங்கியது மூளை எச்சரித்தும் விலகாமல் அவளை மேலும் ஆராய்ந்தபடி நின்றான்...

இனி.....

மீண்டும் இவனா உள்ளம் அழுதது ! ஏன் எனக்கு மட்டும் இப்படி நடக்குது " நீ தப்பான பொண்ணு தான் " மறக்க நினைத்த வார்த்தைகள் மீண்டும் அவளது செவியில் கேட்க ... விலகி சென்றிருந்த துக்கமும் .... பதற்றமும் மீண்டும் வந்து ஒட்டிக்கொள்ள சில்லென்று அடித்த தென்றல் காற்றிலும் வேர்வை முத்துக்கள் மோனியின் நுதலை அலங்கரித்தன .
எகிறி வெளியே குதிக்கும் அளவிற்கு இதயம் அடித்துக்கொண்டது . மூச்சை இழுத்து பிடித்தபடி அவனை எதிர்நோக்கினாள் .

அந்த நிலையிலும் அவளது மனம் ஒன்றை மட்டுமே நினைவு படுத்தியது . சூழ்நிலை எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் இவன் நல்லவனாகவே இருக்கலாம் , இவன் மனதில் ஆயிரம் வலிகள் இருக்கலாம் . இப்படி ஆயிரம் காரணங்கள் இவன் தரப்பில் இருந்தாலும் இன்று இவன் உன்னை இழிவாக பேசியது மிகவும் தவறு அதை மறந்துவிடாதே ! மறந்தும் அவன் முன்பு உன் சுயத்தை விடுத்து அழுதுவிடாதே... உன் பலவீனத்தை அவன் முன் காட்டாதே மனம் கடினமாய் எச்சரிக்க

" மோனிஷா இவன் முன்னாடி மட்டும் அழுதுறாத கண்ட்ரோல் பண்ணிக்கோ ... தயிரியமா காட்டிக்கோ ப்ளீஸ் யு கேன் " ,60 நொடிக்குள் ஒரு 30 தடவையாவது தனக்குள் கூறி இருப்பாள் ..

ஒருவழியாக தன்னை ஆசுவாசப்படுத்தியவள் தயிரியத்தை வரவழைத்து கொண்டு அவனை பார்த்து " அர்ஜுன் " என்று அழைத்தாள்...

" போச்சு மறுபடியும் அழ போறா ஓ காட் நோ ... அர்ஜுன் வேண்டாம் டா இதெல்லாம் உனக்கு சரி வராது ... அவ அழுதாலும் நீ நீயாவே தான் இருக்கணும் " தன்னைவிட்டு பறந்து செல்ல இருந்த மனதை தன் கட்டுக்குள் கொண்டுவந்து கடுமையாய் எச்சரித்தான் .

" வாட் ? " இறுகிய முகத்துடன் புருவத்தை உயர்த்தியபடி அவன் கேட்ட விதம் அவளை மீண்டும் கலவர படுத்தியது ..

இருந்தும் தனக்குள் தயிரியம் சொல்லிக்கொண்டவள் ...

" வழிவிடுங்க நான் போகணும் " நிமிர்ந்து அவனை நேருக்கு நேர் பார்த்த படி , கொஞ்சமும் அச்சமின்றி அளவான கோபத்தோடு சிறிதளவும் அலட்டிக்காமல் அவள் கூறியவிதம் ... அவனை மேலும் ஆச்சரியப்படுத்தியது ...

இதை அவன் அவளிடம் இருந்து சற்றும் எதிர்பார்க்க வில்லை ... ஆச்சரியமாய் பார்த்தான் ...

" ப்ளீஸ் போகணும் " நீ கூறிய எதுவும் என்னை பாதிக்கவில்லை என்பது போன்று ஒரு பார்வை பார்த்தாள் .... அவனது தாடை இறுகியது ... அவளுக்குள் ஒரு யுத்தமே நடந்தது ... வெளிகாட்டிக்காமல் முடிந்தளவு நடித்தாள் .

" அர்ஜுன் இங்க வா " என்று ரோஹித் அர்ஜுனின் கரம் பற்றி இழுக்க , மோனிஷா விட்டால் போதுமென்று அங்கிருந்து நகர்ந்தாள் .ஒரு நொடியில் அவன் அவளை பற்றி கணித்து வைத்தது அணைத்தும் பொய்யாகி போக ... மிகவும் கோபம் கொண்டான் ... அதிலும் அவனை அவள் பார்த்த விதம் அவனை மிகவும் ஆக்ரோஷப்படுத்தியது
 
Naemira

SM Exclusive
Author
SM Exclusive Author
Joined
Mar 21, 2018
Messages
2,110
Reaction score
10,407
Points
113
Age
28
Location
Thovalai
"வெளியே வரும்பொழுது அழுதுட்டு தானே வந்தா ... அப்புறம் நம்மள பார்த்த உடனே மட்டும் எப்படி எதுவமே நடக்காத நடந்துக்கிட்டா ... இதுல எது தான் உண்மை??" ... இந்த கேள்வி அவனது மனதை போட்டு உருட்டியது. "நான் அவளை பத்தி இவ்வளவு யோசிக்கிறேன் ... அவ என்னை ஒரு பொருட்டாவே நினைக்கலையே" மனம் வருந்திய ... மறுநொடி ...

" அர்ஜுன் அவ நினைச்சாலும் நினைக்காட்டாலும் நீ நினைக்காத ... இனி நீ வருத்தப்பட தேவை இல்லை ... உன்னை நீயே குற்றம் சுமதிக்காத ...அவ இதுல இருந்து ஈஸியா வெளிய வந்திருவா ... நீ நினைக்கிற மாதிரி ஒன்னும் அவ இன்னோசென்ட் கிடையாது ஸோ யு பெட்டெர் ஸ்டாப் திங்கிங் அபவுட் ஹேர் " மனதோடு யுத்தம் நடத்தி கொண்டிருக்க ...

" என்னடா ஆச்சு " ரோஹித் அதட்டியதில் தன் நினைவிற்குள் நுழைத்த அர்ஜுன் ..

" நத்திங் " என்று கூற ,

" நத்திங் , சரி வா உன்கிட்ட கொஞ்சம் பேசணும் " என்று அர்ஜுனை கையோடு அழைத்து கொண்டு அங்கிருந்து சென்றான் .

" என்னடா சீக்கிரமா சொல்லு " சலித்துக்கொண்டான் ...

" வெயிட் பண்ணு தர்ஷித்தையும் வர சொல்லிருக்கேன் "

" எனக்கு இதுக்கெல்லாம் டைம் இல்லை " ஆத்திரத்தை அடக்கியபடி கூறினான் .

" பேசிதான் ஆகணும் , இதோ தர்ஷித் கூட வந்துட்டான் பேசிட்டு எங்கனாலும் போ " பிடிவாதமாய் கூறினான்

" அப்படி என்ன தான் உங்களுக்கு என் கூட பேசணும் " கடுப்புடன் கேட்டான்

" நேத்து உனக்கும் அந்த பொண்ணுக்கும் என்ன தான் டா நடந்தது எங்க கிட்ட கூட சொல்ல மாட்டிக்கிற "

" ஆர் யு சீரியஸ் ரோஹித் .... மை காட் ... சொல்ற மாதிரி எதுவும் இல்லை என்னை ஏன் நம்ப மாட்டிக்கிறீங்க "

" சரி செயின் எங்க ?"

"அது எங்கையாவது மிஸ் ஆகியிருக்கும் " தடுமாற்றத்தை மறைத்தபடி கூறினான் .

" ஆஹான் ... செயின் ஓகே உன்னுடைய பர்ஸ் , கார்ட்ஸ் எல்லாமே ஒன்னாவே மிஸ் ஆகிருக்கே அது எப்படி ? " என்று புருவம் உயர்த்த .

பதில் எதுவும் பேசாமல் கடுமையாக முறைத்த அர்ஜுன் அங்கிருந்த செல்ல போக , அவனை தடுத்த ரோஹித் ரக்ஷிதா கொடுத்த பொருட்களை தர்ஷித்திடம் இருந்து வாங்கி அர்ஜுனிடம் நீட்டி

" உன் திங்ஸ் எப்படி மோனிஷா கிட்ட போச்சு " நிதானமாய் கேட்டான் ...

" டோன்ட் பார்கெட் தேட் யு ர் டாக்கிங் டு அர்ஜுன்! " அர்ஜுன் கிட்ட பேசிட்டு இருக்க ரோஹித் மறந்துராத என்று சீறினான் ...

" அர்ஜுன் ரிலாக்ஸ் " - நண்பனின் கரம் பற்றினான் தர்ஷித் .

" இது கூட கேட்க கூடாதா , நான் உன் தம்பி " உரிமையோடு கேட்டான் ..

" ஐயம் யுவர் பிரதர் " நான் உன் அண்ணன் டா என்று அதே உரிமையில் கோபித்தான் ..

" அர்ஜுன் "

" போதும் " என்று கூறி தர்ஷித்தின் கரத்தை உதறியவன் .." உங்களுக்கு ரொம்ப இடம் கொடுத்துட்டேன் ... என்னையே கேள்வி கேட்குறீங்க பாத்துக்குறேன் ... "

" எனக்கு தெரியும் இதெல்லாத்துக்கும் காரணம் மோனிஷா தானே முதல்ல அவளை கவனிச்சிக்கிட்டு , அப்புறம் உங்களை பாத்துக்குறேன் ... " தாறுமாறாய் கத்தியவன்

ரோஹித் தர்ஷித் இருவர் கூறவருதையும் காதில் வாங்காது, மோனிஷா தான் ஏதோ தன்னை பற்றி தன் நண்பர்களிடம் தவறாய் கூறிருக்கிறாள் என்று எண்ணி ஆத்திரத்தில் அவளை காண சென்றான் .
 
Naemira

SM Exclusive
Author
SM Exclusive Author
Joined
Mar 21, 2018
Messages
2,110
Reaction score
10,407
Points
113
Age
28
Location
Thovalai
" உனக்கு எத்தனை தடவ சொன்னாலும் ஏன் புரிய மாட்டிங்குது இந்த பிரச்சனைய இதோட விடு ரக்ஷு "

" எப்படி விட முடியும் அந்த அர்ஜுன் உன்னை அடிச்சிருக்கான் ... மோனிஷா பார்த்து தப்பா பேசிருக்கான் கண்டிப்பா கம்ப்ளெயிண்ட் குடுக்க தான் போறேன் "

" ரக்ஷிதா மோனிஷாவை பாரு அவ ரொம்ப கவலையா இருக்கா. ஸோ இந்த விஷயத்தை பெருசு பண்ண வேண்டாம் ...
எல்லாத்துக்கும் மேல நான் அர்ஜுன் சட்டைய புடிச்சேன் அவன் அடிச்சான். அவ்வளோ தான் இது எனக்கும் அவனுக்கும் உள்ள பிரச்சனை இதெல்லாம் பெருசாக்க கூடாது , இந்த வயசுல இதெல்லாம் சகஜம் ...
பசங்களுக்குள்ள நடக்குற பிரச்சனையில பொண்ணுங்க உள்ள வர கூடாது .. ஸோ ரிலாக்ஸ் " அந்த வயதிலும் மிகுந்த பக்குவத்தோடு பேசினான் ...

இருமானதாய் ரக்ஷிதா ஒத்துக்கொள்ள ... அப்பொழுது வகுப்புக்குள்ள நுழைந்த கிரிஷ் சார் ...

மாணவர்களிடம் முதல் வருட மாணவர்களுக்காக நடக்க விற்கும் பிரஷ்ஷர்ஸ் பார்ட்டியை பற்றி அறிவித்தார் ... பின்பு அவர் விழாவில் மாணவர்கள் தங்களின் திறமையை வெளிக்காட்டுமாறு அறிவுறுத்தி ...
மேலும் விவரத்திற்கு நோட்டிஸ்போர்டில் இருக்கும் அட்டவணையை பார்க்குமாறு கூறினார் . இதை கேட்ட மறுநொடி மாணவர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் இருக்க ...
மோனிஷா மட்டும் தன் வலகரத்தின் உள்ளங்கையில் இருந்த காயத்தை தடவியபடி கவலையோடு அமர்ந்திருந்தாள் . அதை கவனித்த கிருஷ் அவளின் அருகில் வந்து .

" என்ன மோனிஷா என்ன யோசிக்கிற "

" ஒன்னும் இல்லை சார் "

" ஆர் யு ஒகே "

" ம்ம்ம் யஸ் சார் "

" அர்ஜுன் விஷயத்துல என்ன முடிவு பண்ணிருக்கீங்க ... கம்ப்ளெயிண்ட் தரீங்களா ... பயப்படாதீங்க மோனிஷா நீங்க ஒரே ஒரு கம்ப்ளெயிண்ட் குடுங்க அப்புறம் அர்ஜுனுக்கு நான் சரியான பாடம் சொல்லிகுடுக்குறேன் " ஆதரவு கொடுப்பது போல் தந்திரமாய் பேசினான் அந்த கயவன் ...

" நானும் அதே தான் சொல்றேன் கேட்கவே மாட்டிக்கிறா சார் " வருத்தத்துடன் கூறினாள் ரக்ஷிதா .

" ரக்ஷிதா சும்மா இரு அதெல்லாம் வேண்டாம் சார் " தன் தோழிக்கு மறுப்பு தெரிவித்தபடி மெலிந்த குரலில் கூறினாள் மோனிஷா .

" சரி ஓகே உன் இஷ்டம் நான் இதுல உன்னை வற்புறுத்த மாட்டேன் ஆனா ஏன் சோகமா இருக்கீங்க ... இது உங்களுக்கு கொஞ்சம் கூட சூட் ஆகல " விழிகள் காமத்தீயை கக்கியது .... பாவம் சூழ்ச்சியை அறிந்து கொள்ளும் நிலையில் அவள் இல்லை ...
ஏன் ரக்ஷிதா கூட லக்ஷிடம் " பார்த்தியா லக்ஷ் சார் ரொம்ப நல்லவர் " என்று அவர் சுயரூபம் அறியாமல் கூற ...

ஆனால் லக்ஷ் மட்டும் " ஆமா " கிருஷ் மோனிஷாவிடம் பேசும் விதத்தை பார்த்தபடி கூறினான் ... கிருஷை எண்ணம் பற்றி அறியாவிடிலும் ஏனோ அவனுக்குள் கிருஷின் நடத்தை சரியாக படவில்லை ...

" கம் ஆன் மோனிஷா ... நீங்க கண்டிப்பா இந்த பார்ட்டில கலந்துக்கணும் "

" நோ சார் என்னால முடியாது "

" அதெல்லாம் இல்லை கலந்துக்கிட்டு தான் ஆகணும் இட்ஸ் மை ஆடர் "

" ட்ரை பண்றேன் சார் " சோகம் குறையாமல் கூறினாள் ..

" இப்போ நீங்க மட்டும் சிரிக்கலை நான் அழுதுருவேன் " முகத்தை கோணலாய் வைத்தபடி வழிந்தார் ...அதையெல்லாம் புரிந்து கொள்ளும் நிலையிலா அவள் இருக்கிறாள் .. நமக்காக சார் இவ்ளோ கஷ்ட படுறாரே என்று வருந்தினாள் .... மாணவர்களின் கேலி பேச்சு கலகலப்பான சூழ்நிலையை ஏற்படுத்த சற்று சமாதானம் அடைந்தவள் கிருஷ் முன்பு லேசாக தன் இதழ் இசைத்தாள்.
 
Naemira

SM Exclusive
Author
SM Exclusive Author
Joined
Mar 21, 2018
Messages
2,110
Reaction score
10,407
Points
113
Age
28
Location
Thovalai
"தட்ஸ் குட் எப்பவும் இப்படியே இருங்க " அளவுக்கு மீறி குழைந்தார்.

அவர் கேள்வி கேட்க இவள் பதிலளிக்க என்று இப்படியே இவர்களது சம்பாஷணை சிறு சிறு கேலி பேச்சோடு தொடர , அன்று நாள் முழுவதும் கலவரத்தோடே இருந்த மோனிஷாவின் மனம் ஆனது சற்று லேசாக .... கொஞ்ச நேரம் அனைத்தையும் மறந்தவள் ..
கிருஷ் மற்றும் ரக்ஷிதாவுடன் கலகலப்புடன் உரையாடிக்கொண்டிருந்தாள்.

நன்றாக சென்று கொண்டிருந்த வேளையில் சற்றென்று மாறிய வானிலை போல மோனிஷாவின் மனதிற்குள் ஏதோ ஒரு உறுத்தல் .... யாரோ தன்னையே பார்ப்பது போல தோன்ற ,சற்றென்று சுற்றும் முற்றும் பார்த்தாள்.
கண்ணில் யாரும் தென்படாமல் போக ,மீண்டும் அவர்களோடு இணைந்து கொண்டவளுக்கு மீண்டும் அதே நெருடல் .... மீண்டும் சுற்றிச்சுற்றி பார்த்தாள்.

" அர்ஜுன் " அவளையும் அறியாமல் அவளது நா உச்சரித்து ... " அவன் எப்படி இங்க இருப்பான் மோனி " தனக்கு தானே சொல்லிக்கொண்டாள் ...

ஆனாலும் யாரோ தன்னை பார்ப்பது போலவே உணர்ந்தாள் .

" நான் இங்க இருக்கேன் !நீ யாரை தேடுற?அதாவது 'நாங்க' " திடிரென்று கிருஷ் கேட்க தடுமாறிய மோனிஷா ... " சாரி சார் அதுவந்து " என்று தடுமாறினாள் .

" இட்ஸ் ஓகே ரிலாக்ஸ் மோனிஷா " ஆசுவாசப்படுத்தினான் ...

" ஐயம் ஓகே சார் " இயல்பாய் இருப்பது போல காட்டிக்கொண்டாள் . ஆனாலும் மீண்டும் அதே நெருடல் அவளை விடாமல் துரத்தியது .

மோனிஷாவை தேடி அழைந்து கொண்டிருந்த அர்ஜுனுக்கு மாணவர்களின் சிரிப்பு சத்தமும் பேச்சு சத்தமும் BSc விஸ்காம் முதலாம் ஆண்டு வகுப்பறையில் இருந்து சத்தமாக கேட்க அதை சிறிதும் கண்டுகொள்ளாதவன் , வேகமாய் நடந்துகொண்டிருக்க...
கிருஷ் மாணவிகள் இருக்கை பக்கம் நின்று பல்லைக்காட்டியபடி குலைந்து கொண்டிருப்பது கண்ணில் பட எரிச்சல் கொண்ட அர்ஜுன் கோபத்தோடு வகுப்புக்குள் நுழைந்தான் ...
 
Naemira

SM Exclusive
Author
SM Exclusive Author
Joined
Mar 21, 2018
Messages
2,110
Reaction score
10,407
Points
113
Age
28
Location
Thovalai
நுழைந்த மறுநிமிடம் அவன் கண்ட காட்சி அவனால் நம்பமுடியவில்லை .... கிருஷ் கேலியாக பேச சிரித்தபடி பதிலளித்து கொண்டிருந்தாள் மோனிஷா ... ' என்னை காணும் பொழுது இல்லாத மகிழ்ச்சி அவன் முன்பு மட்டும் எப்படி ?' விழிகள் கனலை கக்கியது . அதுவரை அவளை பற்றி அவன் மனதில் இருந்த கொஞ்சம் இருந்த பிம்பமும் சுக்குநூறாக உடைந்தது ... எவ்வளவு சிரிப்பு ... அதுவும்

இவனுடன் - முகத்தை சுளித்தான் ...

" இவளுக்கு சிரிக்க கூட தெரியுமா ?? " ஆத்திரம் பொங்கி வழிந்தது ...

மோனிஷா யாரோ !உனக்கும் அவளுக்கும் என்ன தொடர்பு ? அவள் யாருடன் சிரித்து பழகினால் உனக்கென்ன என்று கேள்வி கேட்ட மனதை

கடிந்துகொண்டான் .. . மனதிற்குள் ஒரு வித அழுத்தம் ... ஆத்திரத்தில் இதயம் எக்குத்தப்பாக துடித்தது ... இதெல்லாம் அர்ஜுனுக்கு புதிது ... எப்படி கையாள்வது என்பதை அறியாமல் உள்ளுக்குள் தவித்தான் ... இதயம் தாறுமாறாய் அடித்துக்கொண்டது ...அவர்கள் இருவரையும் தன் பார்வையாலே எரித்துக்கொண்டிருந்தான்

மீண்டும் அதே நெருடல் சற்று தலை சாய்த்து பார்த்தாள் ... பலியிட துடிக்கும் அரக்கனை போல கண்ணெதிரே நின்று கொண்டிருந்தான் ... விழிகள் கோபத்தை அள்ளி தெளித்தது ....

எங்கோ சென்றிருந்த கலவரம் மீண்டும் மோனிஷா முகத்தில் ஒட்டிக்கொள்ள ... உடல் தானே அதிர்ந்தது ... அது அவனை மேலும் கோபப்படுத்த ... அவளை நோக்கியபடியே முன்னேறி வந்தான் ...

தன்னையும் மீறி எழுந்து நின்றாள் ... அவள் எழுந்து நிற்கும் காரணம் அறியாது ...
அர்ஜுன் பார்த்துக்கொண்டிருக்கும் பொழுதே கிருஷ் , " என்னாச்சு மோனிஷா " என்றபடி அவளது கரத்தை பிடிக்க துணிந்த மறுநொடி அர்ஜுன் மோனிஷாவின் கரத்தை இறுக்கமாக பற்றினான் ...

- தொடரும்
 
stella

Well-known member
Joined
May 21, 2018
Messages
1,467
Reaction score
2,580
Points
113
Age
25
மிகவும் அருமையான பதிவு sis இந்த அர்ஜுன் முன்னாடி தன் அழுகையை??????? பாவம் கண்ட்ரோல் பண்றாள் ஆனால் அர்ஜுனுக்கோ அவள் டக்குனு முகத்தை மாற்றிய விதம் அவனுக்கு பொங்கிக்கிட்டு வருது ?????உன் முன்னாடி அழகூடாதுனு??????? தான் அவள் தன்னையே கண்ட்ரோல் பண்றாள் என்ன பேச்சு பேசுன அவளால் மறக்கமுடியுமா அர்ஜூன்க்கு அவளை பார்த்ததும் பத்திகிட்டு வருது டேய் அவள் இன்னொசென்ட் ?‍♀?‍♀?‍♀?‍♀?‍♀?‍♀?‍♀?‍♀?‍♀தான்டா தைரியமான பொண்ணா இருந்திருந்தால் உன்னோட கேவலமான பேச்சுக்கு நாலு அறை எப்பவோ விட்டு இருப்பா அவள் அப்பாவியாய் இருக்க போய்தான் நீ இப்படி பேசுற ரோஹித் and தர்ஷித் ரெண்டு பேரும் அர்ஜுனுக்கு அட்வைஸ் பண்ணக்கூடாது ரோஹித் கேட்டது கரெக்ட் தானே செயின், கார்ட்ஸ் எல்லாமே மோனிஷாகிட்ட எப்படி போச்சுன்னு கேட்டா சர்னு கோபம் வருதோ நீதான்டா எல்லாத்தையும் அவகிட்ட கொடுத்த பாவம் அவள் எவ்ளோ பொறுப்பா கொண்டுவந்து கொடுத்த பாவத்துக்கு தான் அவளை அப்படி பேசின ரக்ஷி கம்பளைண்ட் பண்ணலாம்னு சொல்றா ஆனால் லக்ஷ் மட்டும் வேண்டாம் என்று கூறுகிறான் இந்த க்ரிஷ் ஏன் மோனிஷாவை பார்த்து ரொம்பவே வழியுறான்????????? அவனுக்கு ஏற்கனவே அர்ஜுனை பிடிக்காது அதுனால மோனிஷாவை தூண்டிவிட்டு எப்படியாவது அர்ஜுன் careeryai ஸ்பாயில் பண்ணலாம்னு பார்க்கிறான் பாவம் மோனிஷாக்கு இந்த க்ரிஷின் கேடுகெட்ட ?????????????கேவலமான குணம் இப்படி இருக்குனு அவளுக்கு தெரியாதே அதனால் இந்த அக்கறையான பேச்சு அவளுக்கு சார் நம்மமேல் ரொம்ப அக்கறை காட்டுறார்னு நினைக்கிறாள் இவனால கண்டிப்பா மோனிஷா மிகப்பெரிய பிரச்சனையை சந்திக்கப்போறா எங்கே இருந்தாலும் அர்ஜுன் வருவதை அவள் உள்ளுணர்வு தெளிவா புரியவைக்குது க்ரிஷ் and மாணவர்களோடு மோனிஷா சிரிச்சு பேசுறதை பார்த்துட்டு அர்ஜுனுக்கு கண்மண் தெரியாத கோபம்??????? வருது அதே நேரம் அவன் வந்ததும் மோனிஷா தானாகவே எழுந்துவிட்டாள் பயத்தில் இது தான் சாக்குன்னு க்ரிஷ் ????????????????கையை பிடிக்க வாரான் அர்ஜுன் விட்டுடுவானா அவன் பிடிச்சுட்டான் ஆனால் அர்ஜுன் இப்போ கேவலமாய் கேக்கப்போறான் அவளை பார்த்து என்னமோ அவள்தான் க்ரிஷ்கிட்ட வழிஞ்சு மாதிரி மறுபடியும் கொடூரசொற்களா அவள் தாங்கமாட்டா டா ப்ளீஸ் அவளை விட்டுவிடு இந்த க்ரிஷ் மோனிஷாவை ஏதும் பண்ணாம பார்த்துக்கோங்க ஏன்னா அவள் அர்ஜுனுக்காக படைக்கப்பட்டவள் thank you so much sis நான் உங்ககிட்ட கேட்டேன் என்றதுக்காக தொடர்ந்து அப்டேட் கொடுக்குறீங்க ரொம்ப ரொம்ப நன்றி sis அடுத்த பதிவை சீக்கரம் எதிர்பார்க்கிறேன் ???????????????????
 
Naemira

SM Exclusive
Author
SM Exclusive Author
Joined
Mar 21, 2018
Messages
2,110
Reaction score
10,407
Points
113
Age
28
Location
Thovalai
மிகவும் அருமையான பதிவு sis இந்த அர்ஜுன் முன்னாடி தன் அழுகையை??????? பாவம் கண்ட்ரோல் பண்றாள் ஆனால் அர்ஜுனுக்கோ அவள் டக்குனு முகத்தை மாற்றிய விதம் அவனுக்கு பொங்கிக்கிட்டு வருது ?????உன் முன்னாடி அழகூடாதுனு??????? தான் அவள் தன்னையே கண்ட்ரோல் பண்றாள் என்ன பேச்சு பேசுன அவளால் மறக்கமுடியுமா அர்ஜூன்க்கு அவளை பார்த்ததும் பத்திகிட்டு வருது டேய் அவள் இன்னொசென்ட் ?‍♀?‍♀?‍♀?‍♀?‍♀?‍♀?‍♀?‍♀?‍♀தான்டா தைரியமான பொண்ணா இருந்திருந்தால் உன்னோட கேவலமான பேச்சுக்கு நாலு அறை எப்பவோ விட்டு இருப்பா அவள் அப்பாவியாய் இருக்க போய்தான் நீ இப்படி பேசுற ரோஹித் and தர்ஷித் ரெண்டு பேரும் அர்ஜுனுக்கு அட்வைஸ் பண்ணக்கூடாது ரோஹித் கேட்டது கரெக்ட் தானே செயின், கார்ட்ஸ் எல்லாமே மோனிஷாகிட்ட எப்படி போச்சுன்னு கேட்டா சர்னு கோபம் வருதோ நீதான்டா எல்லாத்தையும் அவகிட்ட கொடுத்த பாவம் அவள் எவ்ளோ பொறுப்பா கொண்டுவந்து கொடுத்த பாவத்துக்கு தான் அவளை அப்படி பேசின ரக்ஷி கம்பளைண்ட் பண்ணலாம்னு சொல்றா ஆனால் லக்ஷ் மட்டும் வேண்டாம் என்று கூறுகிறான் இந்த க்ரிஷ் ஏன் மோனிஷாவை பார்த்து ரொம்பவே வழியுறான்????????? அவனுக்கு ஏற்கனவே அர்ஜுனை பிடிக்காது அதுனால மோனிஷாவை தூண்டிவிட்டு எப்படியாவது அர்ஜுன் careeryai ஸ்பாயில் பண்ணலாம்னு பார்க்கிறான் பாவம் மோனிஷாக்கு இந்த க்ரிஷின் கேடுகெட்ட ?????????????கேவலமான குணம் இப்படி இருக்குனு அவளுக்கு தெரியாதே அதனால் இந்த அக்கறையான பேச்சு அவளுக்கு சார் நம்மமேல் ரொம்ப அக்கறை காட்டுறார்னு நினைக்கிறாள் இவனால கண்டிப்பா மோனிஷா மிகப்பெரிய பிரச்சனையை சந்திக்கப்போறா எங்கே இருந்தாலும் அர்ஜுன் வருவதை அவள் உள்ளுணர்வு தெளிவா புரியவைக்குது க்ரிஷ் and மாணவர்களோடு மோனிஷா சிரிச்சு பேசுறதை பார்த்துட்டு அர்ஜுனுக்கு கண்மண் தெரியாத கோபம்??????? வருது அதே நேரம் அவன் வந்ததும் மோனிஷா தானாகவே எழுந்துவிட்டாள் பயத்தில் இது தான் சாக்குன்னு க்ரிஷ் ????????????????கையை பிடிக்க வாரான் அர்ஜுன் விட்டுடுவானா அவன் பிடிச்சுட்டான் ஆனால் அர்ஜுன் இப்போ கேவலமாய் கேக்கப்போறான் அவளை பார்த்து என்னமோ அவள்தான் க்ரிஷ்கிட்ட வழிஞ்சு மாதிரி மறுபடியும் கொடூரசொற்களா அவள் தாங்கமாட்டா டா ப்ளீஸ் அவளை விட்டுவிடு இந்த க்ரிஷ் மோனிஷாவை ஏதும் பண்ணாம பார்த்துக்கோங்க ஏன்னா அவள் அர்ஜுனுக்காக படைக்கப்பட்டவள் thank you so much sis நான் உங்ககிட்ட கேட்டேன் என்றதுக்காக தொடர்ந்து அப்டேட் கொடுக்குறீங்க ரொம்ப ரொம்ப நன்றி sis அடுத்த பதிவை சீக்கரம் எதிர்பார்க்கிறேன் ???????????????????
மிக்க நன்றி பா இருவரின் மாறுபட்ட எண்ணங்களே இதற்கு காரணம். ஒருவரை பற்றி ஒருவருக்கு போதுமான அளவு புரிதல் இல்லை , அதனால் வந்த விளைவு தான் இது. மோனிஷா அப்பாவியாக இருப்பதால் தான் அர்ஜுன் திரும்ப திரும்ப அவளை பற்றி சிந்திக்கிறான் , ஒருவித குற்ற உணர்வோடு இருக்கிறான் .
இல்லையென்றால் அவனுக்கு இருக்கும் பணி சுமையில் இதையெல்லாம் அவன் நினைத்து கூட பார்க்கமாட்டான்.
ஒருவரை பற்றி ஒருவர் சரியாக அறியாத வரை இவர்கள் பிரச்சனை ஒரு முடிவுக்கு வருவது என்பது சாத்திய மில்லாத ஒன்று. எப்படியோ அவன் முன்பு எதுவும் பாதிக்காதது போல் நடந்து கொண்டாள் , ஆனால் அவனை மீண்டும் கண்டதும் அவளால் நடிக்க முடிய வில்லை உண்மையான குணம் வெளியே வர தானாய் எழுந்து நின்றாள் .
மோனிஷாவை அர்ஜுன் பத்திரமாய் பார்த்துக்கொள்வான் ஸோ நோ டென்ஷன் பா. நன்றி நான் தான் கூறவேண்டும் .
இரெண்டு முறை கிட்டத்தட்ட 3 வருடங்கள் எனது இயலாமையை காரணம் காட்டி முறையான அறிவிப்பு இன்றி பாதியிலே விட்டுவிட்டு சென்ற பிறகும் ,
நீங்கள் அனைவரும் அதே உற்சாகத்துடன் எனக்கு ஆதரவு கொடுப்பதற்கு மிக்க மிக்க நன்றி .
அதனால் இந்த முறை என்ன ஆனாலும் முடிக்கவேண்டும் என்ற முடிவுடன் வந்துருகிறேன் தோழி முடிந்தளவு விரைவில் புது அத்தியாயத்துடன் சந்திக்கிறேன் அடுத்த பதிவை புதன் கிழமை எதிர்பார்க்கலாம் . உங்களின் அயராத பாராட்டுகளுக்காக எனது மனமார்ந்த நன்றிகள் தோழி ஸ்டெல்லா .
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top