Oh kadhal Kanmani - UD 16

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Naemira

SM Exclusive
Author
SM Exclusive Author
Joined
Mar 21, 2018
Messages
2,110
Reaction score
10,407
Points
113
Age
28
Location
Thovalai
வணக்கம் நட்பூஸ் ,

ஓ காதல் கண்மணியின் அடுத்த பதிவோடு உங்களை சந்திப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி ...
படித்துவிட்டு உங்களது கருத்துக்களை தெரிவியுங்கள் ...
 
Naemira

SM Exclusive
Author
SM Exclusive Author
Joined
Mar 21, 2018
Messages
2,110
Reaction score
10,407
Points
113
Age
28
Location
Thovalai
ஓ காதல் கண்மணி - 16

Ashlok3_zps0d6a7ae3.jpg

இதுவரை .....

அவளை நோக்கியபடியே முன்னேறி வந்தான் ... தன்னையும் மீறி எழுந்து நின்றாள் ... அவள் எழுந்து நிற்கும் காரணம் அறியாது ... "
அர்ஜுன் பார்த்துக்கொண்டிருக்கும் பொழுதே கிருஷ்" என்னாச்சு மோனிஷா " என்றபடி அவளது கரத்தை பிடிக்க துணிந்த மறுநொடி அர்ஜுன் மோனிஷாவின் கரத்தை இறுக்கமாக பற்றினான் ...
 
Last edited:

Naemira

SM Exclusive
Author
SM Exclusive Author
Joined
Mar 21, 2018
Messages
2,110
Reaction score
10,407
Points
113
Age
28
Location
Thovalai
இனி.....

"பேசணும் வா" என்றவன் மோனிஷா கூற வருவதை காதில் வாங்காது அவளது மென் கரங்களை பிடித்த அதே வேகத்துடன் அவளை அங்கிருந்து அழைத்து செல்ல முனைந்த நேரம் ,

லக்ஷ் அர்ஜுனை தடுக்க தன் பார்வையாலே அவனை அடக்கியவன்,

" நீ சீறி பாயிர அளவுக்கு இங்க ஒண்ணும் நடக்க போறதில்ல ஸோ உக்காரு" - சாதாரண வார்த்தைகள் தான். ஆனால், அதிகாரத்தோரணையோடு கட்டளையிட, வேறுவழியின்றி. அமர்ந்தான் லக்ஷ் .

"அர்ஜுன் கைய விடு வலிக்குது" அவனிடம் சிக்கிக்கொண்ட தன் கரத்தை விடுவிக்க முயற்சித்தாள்.

"எனக்கும் தான்" என்றவன் மேலும் தன் பிடியை இறுக்கினான். வலியில் துடித்தாள் .

கிருஷ் எதோ மாவீரன் போல அர்ஜுனை தடுப்பதாக நினைத்துக்கொண்டு அவனது முன்னால் வந்து நிற்க , எரிச்சலில் நெற்றியை நீவிய அர்ஜுன் ,

"காமெடி பண்ணாத கடுப்புல இருக்கேன்" கோபத்தை அடக்கியபடி கூற,

கிருஷோ முறைத்தபடி வழிமறித்துக்கொண்டு நிற்க , ஆத்திரம் கொண்ட அர்ஜுன் ,

"மூவ் தள்ளி போடா" கண்களை உருட்டி ஆக்ரோஷமாக உறுமியவன். கிருஷின் நெஞ்சை தள்ளியபடி மோனிஷாவை அழைத்துக்கொண்டு அங்கிருந்து சென்றான் .....

ஒரே ஒரு வார்த்தை தான் ஆனால் கிருஷ்க்கோ நாடி நரம்பெல்லாம் நடுங்கி போக, குப்பென்று வேர்த்து கொட்டியது ...

அர்ஜுனின் இந்த செயலால் புதிதாய் வந்த மாணவர்களின் முன்பு அசிங்க பட்ட கிருஷ்

" அர்ஜுன் இதே விட நூறு மடங்கு உன்னை அவமானப்படுத்தல நான் கிருஷ் இல்லை " என்று மனதிற்குள் எண்ணியவரின் முகம் கோபத்தீயில் சிவந்தது ...
 
Naemira

SM Exclusive
Author
SM Exclusive Author
Joined
Mar 21, 2018
Messages
2,110
Reaction score
10,407
Points
113
Age
28
Location
Thovalai
சுற்றி இருக்கும் யாரை பற்றியும் கவலை கொள்ளாதவன் மோனிஷாவை வேகமாக அழைத்து கொண்டு மென் பிளேயர்ஸ் ஓய்வெடுக்கும் அறைக்குள் தடாலடியாக நுழைந்தான் ...

அவன் நுழைந்த வேகத்தில் உள்ளே இருந்த சகமாணவர்கள் அதிர்ச்சியோடு பார்க்க ....
"' யே என்ன ?? அவுட் எல்லாரும் வெளியே போங்க " - சினமிகுதியால் சீறி பாய்ந்தான்...

பெரிய வகுப்பு மாணவர்கள் அமைதியாக அங்கிருந்து செல்ல புதிதாய் வந்த மாணவர்கள் மட்டும் முணுமுணுத்தபடி அங்கிருந்து கிளம்பினர்.

அவர்கள் சென்ற மறுநொடி தன் எரிக்கும் பார்வையை மோனிஷாவின் முகத்தில் பதித்த படி அவளை நெருங்கியவன் , கடுங்கோபத்துடன் கதவை அடித்து சாத்திவிட்டு அவளை நெருங்கினான் ...

கல்லூரியின் கட்டிடமே அதிரும்படி " டமார் " என்று ஓங்கி ஒலித்த சத்தத்தில் அதிர்ந்தவள் தன்னை நெருங்கும் அசுரனை நிமிர்ந்து பார்த்தாள்.

இதயம் " டம் டம் டம் "என்று வேகமாக அடித்து கொண்டது ... முகமெல்லாம் சூடாகி சிவக்க பயத்தில் முதுகுத்தண்டு சில்லிட்டது ...

அவன் நெருங்க நெருங்க இவள் அனிச்சையாய் விலகி சென்றாள். அவனது கத்தி முனை பார்வை அவளது நெஞ்சை துளைத்தது . அவன் நெருங்கிவிட்டான் உள்ளம் எச்சரித்தது விலக இடம் இன்றி சுவற்றோடு சாய்ந்தபடி நின்றிருந்தாள் ...

" டம்டம் டம் ... டம்டம்டம் ..."இதயம் அதீத வேகத்தில் துடித்தது ...உடம்பெல்லாம் நடுங்க அச்சத்தோடு நின்றாள் ...
 
Naemira

SM Exclusive
Author
SM Exclusive Author
Joined
Mar 21, 2018
Messages
2,110
Reaction score
10,407
Points
113
Age
28
Location
Thovalai
" என்ன நினைச்சுகிட்டு இருக்க ?" தீ பிழம்பாய் கொதித்துக்கொண்டிருக்கும் விழிகளுடன் அவளிடம் சீறினான் ...

" ஓ... ஓ .... ஒன்... செய்ய " வார்த்தைகள் மறந்துபோக உளறக்கூட முடியாமல் திண்டாடினாள்.

" ஏய் ஸ்டாப் இட் டோன்ட் ஆக்ட் லைக் இன்னொசென்ட் " அப்பாவி மாதிரி நடிக்கிறதை நிறுத்து அதட்டினான் ...

கனலை கக்கும் விழிகள் , அச்சுறுத்தும் முகம் என்று அவனை பார்க்கவே பயங்கரமாய் இருந்தது ...

"அதுவந்து அர்ஜுன் ... கை ... வலி " நா மேல் அன்னத்தில் ஒட்டிக்கொள்ள வலியில் முகத்தை சுளித்தபடி படி தடுமாறினாள் ...

"என்னை உனக்கு புடிக்கலைல "

"அர்ஜுன் " புரியாமல் பார்த்தாள் ...

" அவன் முன்னாடி பல்லக்காடிட்டு இருக்க சீ ..." எதற்கோ அழைத்து வந்து எதையோ கேட்டவன் ... பற்களை கடித்தபடி வெறுப்புடன் முகத்தை சுளித்தான் ...

வலி பாதி உடல் சோர்வு மீதி என்று அயர்வாய் இருந்தவளால் அவன் கூறும் எதையும் புரிந்து கொள்ள முடியவில்லை ....

" அர்ஜுன் நீ என்ன ..."எதோ விளக்கம் கொடுக்க முனைந்தாள்.

"ஷட் அப் " ஐவிரலை காட்டியபடி இடைமறித்தவன் .,

" யு ....ஜஸ்ட் ....ஷட்.... அப் ... ஓகே " என்று ஒவ்வொரு வார்த்தையையும் தீப்பிழம்பாக்கி அவள் மீது எறிந்தான் . இதயம் மேலும் எக்குத்தப்பாக துடித்தது .
 
Naemira

SM Exclusive
Author
SM Exclusive Author
Joined
Mar 21, 2018
Messages
2,110
Reaction score
10,407
Points
113
Age
28
Location
Thovalai
என்ன பேசுவது என்று புரியாமல் அவளையே பார்த்தான் ...செவ்வென சிவந்திருந்த விழிகள் அவளை ஆழதுளைத்து உயிர்வரை சென்றது ...

சொல்ல முடியாத உணர்ச்சி குவியலுக்குள் சிக்குண்ட இருவரும் இனம் புரியாத ஈர்ப்பில் சிக்கி தவித்தனர் ...


" ஏன் இப்படி பார்த்துட்டு இருக்கான் ?" புரியாமல் தனக்குள் புலம்பினாள் இருந்தும் அவளது பார்வையும் அவன் மேலே நிலைத்திருந்தது ..

தீதெறிக்கும் விழிகள் பல நாவல்களில் படித்திருக்கிறாள் ... ஆனால் நிஜத்தில் இப்பொழுது தான் பார்க்கிறாள் . பார்வையில் அப்படி அவ்வளவு கோபம் ....

'ஏன்' என்று புரியாமல் தவித்தாள் .. 'அப்படி என்ன தவறு நான் செய்தேன்?' 'என் மேல் ஏன் இவ்வளவு வெறுப்பு ?'மனம் ஏங்கியது விழிகள் கசிந்தன ...

அவன் உள்ளமும் கசிந்தது .... மருண்ட விழிகள் ...பொலிவிழந்த முகம் ..... பயத்தில் துடிக்கும் மென் அதரம் ... மேலும் வதனத்தில் குடிகொண்டிருந்த அப்பட்டமான அச்சம் ... அவனது கோபத்தை மேலும் தூண்டியது ...

'ஏன் என்னிடம் மட்டும் இத்தனை அச்சம் ?' உள்ளம் கனத்தது ..விழிகளை மூடி ஆழமாக மூச்செடுத்தவன் ... தன்னிடம் சிறைப்பட்டிருக்கும் அவளது மென் கரங்கள் நடுங்குவதை அப்பொழுது தான் உணர...

அவனது சினத்திற்கான காரணத்தை ஒருவழியாக யூகித்த மோனிஷா,

" நான் யார்கிட்டையும் எதுவும் சொல்லல அர்ஜுன்... என்னால முடியல வலி.... " என்று வார்த்தைகள் தடுமாற கூறிய , மறுநொடி அர்ஜுன் அவளது கரங்களை விடுவிக்க ...

விழிகள் உறங்க கீழே சரிய போனவளை பதற்றத்துடன் தன் மார்பில் தாங்கினான்...

- தொடரும்
 
Jothiliya

Well-known member
Joined
Aug 25, 2019
Messages
366
Reaction score
595
Points
93
Location
Madurai
கிருஷ் தடுக்க வந்த தை பார்த்து, கடுப்புல இருக்கேன் காமெடி பண்ணாதே என்று அர்ஜுன் சொல்லவது செம சிரிக்கிற மாதிரி இருந்தது அருமை???????, அர்ஜுன், மோனிஷாவிடம் தனிமையில் அவளிடம் என்ன உனக்கு புடிக்கல, என்னவோ இவன் லவ் சொன்ன மாதிரியும், அவள் மறுத்த மாதிரியும் எதையோ பேசவந்து, கோபத்திக் என்னமோ பேசிகிட்டுஇருக்கான், அவள் வலியில் துடிப்பதை பார்த்து கையை விட்டான், அவள் பயம், வலி அவளுக்கு மயக்கத்தை கொடுக்க அர்ஜுன் தாங்கி கொண்டான், இனி என்ன நடக்குமோ, காதலில் வந்த போறாமை எப்ப அர்ஜுன் னுக்கு புரியுமோ, இன்னும் மோனிஷாவை எத்தனை தடவை மயக்கமுற செய்ய போறானோ? ????♥♥♥♥????
 
stella

Well-known member
Joined
May 21, 2018
Messages
1,467
Reaction score
2,580
Points
113
Age
25
மிகவும் அருமையான பதிவு sis க்ரிஷ்கிட்ட மோனிஷா பேசியது அர்ஜுனுக்கு பிடிக்கவில்லை so அவளை அங்கிருந்து கூட்டிட்டு போறான் இந்த க்ரிஷ் இடையில் வந்து தானாக மானம் கெட்டு நிற்கிறான் அர்ஜுன் ?‍♂?‍♂?‍♂?‍♂?‍♂?‍♂?‍♂சொன்ன அந்த காமெடி பண்ணாம வழியை விடு சூப்பர் சூப்பர் ??????? அந்த கேடி க்ரிஷ் இதுக்கெல்லாம் சேர்த்து மோனிஷாவை வச்சு செய்யப்போறான் இவர்களுக்கு இடையில் மோனிஷாதான் மாட்டப்போறா அதுவும் இந்த க்ரிஷ் ரொம்ப கெட்டவன்?????????????? அவளை செய்துவிடப்போறான் அந்த krishaal மோனிஷாவுக்கு ஆபத்து நிச்சயம்.

அர்ஜுன் உனக்கு ஏன் இந்த வெறி அவளை யார்கூட பேசினால் உனக்கு என்ன பிரச்சனை அவள்கிட்ட நீ கேக்க வந்த விஷயம் ரோஹித்தையும் தர்ஷித்தையும் அவள்தான் தூண்டிவிட்டு பேசுறமாதிரி அவளை திட்டத்தானே வந்த ஆனா நீ அந்த விஷயத்தை பேசாம க்ரிஷ்கிட்ட பல்லைக்காட்டிட்டு இருந்தானு அவள் மேல் பழியை போடுற நீ திட்டுன சோகத்தை மறைக்கத்தான் பாவம் இப்போ தான் கொஞ்சம் சிரித்தாள் அது உனக்கு பொறுக்கவில்லையா

மோனிஷாவுக்கு புரிந்துவிட்டது அர்ஜுன் காரணம் இல்லாமல் தன்னை சந்தேகப்படுறானு அவள் நான் அப்படி இல்லைனு சொல்றா அதுக்கு அவள் இன்னொசென்ட் மாதிரி நடிக்கிறானு சொல்றான்

அவள் யாருகிட்டயும் எதுவும் சொல்லவில்லைனு சொன்னால்கூட நம்பமாட்டேங்கிறான் அவள் ஏன் உன்னிடம் நடிக்க வேண்டும் அவள் இதயத்தை இப்படி குத்திக்கிழிக்கிற??????? நீ பேசுற பேச்சுக்கு அவள் மயக்கம் போட்டுவிழுந்துவிட்டாள்?????? நெஸ்ட் எபி எப்போ அடுத்து என்ன நடக்கும் என்ற ஆவலை தூண்டிவிடுது அடுத்த பதிவு சீக்கரம் கொடுங்க sis ?????????????????????????????????????????????????????????????
 
stella

Well-known member
Joined
May 21, 2018
Messages
1,467
Reaction score
2,580
Points
113
Age
25
மிகவும் அருமையான பதிவு sis க்ரிஷ்கிட்ட மோனிஷா பேசியது அர்ஜுனுக்கு பிடிக்கவில்லை so அவளை அங்கிருந்து கூட்டிட்டு போறான் இந்த க்ரிஷ் இடையில் வந்து தானாக மானம் கெட்டு நிற்கிறான் அர்ஜுன் ?‍♂?‍♂?‍♂?‍♂?‍♂?‍♂?‍♂சொன்ன அந்த காமெடி பண்ணாம வழியை விடு சூப்பர் சூப்பர் ??????? அந்த கேடி க்ரிஷ் இதுக்கெல்லாம் சேர்த்து மோனிஷாவை வச்சு செய்யப்போறான் இவர்களுக்கு இடையில் மோனிஷாதான் மாட்டப்போறா அதுவும் இந்த க்ரிஷ் ரொம்ப கெட்டவன்?????????????? அவளை செய்துவிடப்போறான் அந்த krishaal மோனிஷாவுக்கு ஆபத்து நிச்சயம்.

அர்ஜுன் உனக்கு ஏன் இந்த வெறி அவளை யார்கூட பேசினால் உனக்கு என்ன பிரச்சனை அவள்கிட்ட நீ கேக்க வந்த விஷயம் ரோஹித்தையும் தர்ஷித்தையும் அவள்தான் தூண்டிவிட்டு பேசுறமாதிரி அவளை திட்டத்தானே வந்த ஆனா நீ அந்த விஷயத்தை பேசாம க்ரிஷ்கிட்ட பல்லைக்காட்டிட்டு இருந்தானு அவள் மேல் பழியை போடுற நீ திட்டுன சோகத்தை மறைக்கத்தான் பாவம் இப்போ தான் கொஞ்சம் சிரித்தாள் அது உனக்கு பொறுக்கவில்லையா

மோனிஷாவுக்கு புரிந்துவிட்டது அர்ஜுன் காரணம் இல்லாமல் தன்னை சந்தேகப்படுறானு அவள் நான் அப்படி இல்லைனு சொல்றா அதுக்கு அவள் இன்னொசென்ட் மாதிரி நடிக்கிறானு சொல்றான்

அவள் யாருகிட்டயும் எதுவும் சொல்லவில்லைனு சொன்னால்கூட நம்பமாட்டேங்கிறான் அவள் ஏன் உன்னிடம் நடிக்க வேண்டும் அவள் இதயத்தை இப்படி குத்திக்கிழிக்கிற??? நீ பேசுற பேச்சுக்கு பயம், வலி எல்லாம் மயக்கமாகிவிட்டாள்?????? நெஸ்ட் எபி எப்போ அடுத்து என்ன நடக்கும் என்ற ஆவலை தூண்டிவிடுது அடுத்த பதிவு சீக்கரம் கொடுங்க sis ?????????????????????????????????????????????????????????????
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top