• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Operation Red 2.1

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

snehasree

SM Exclusive
Joined
Mar 31, 2018
Messages
3,416
Reaction score
7,755
Location
comibatore
சில நிமிடங்களில் அந்த இடம் போர்க்களம் போல் காட்சி அளித்து விட்டது.

வீரலட்சுமியும், சியாமளாவும் எழுந்து மணலைத் தட்டி விட்டு கொண்டிருந்தார்கள். தங்கள் துப்பாக்கிகளை பாக்கெட்டில் வைத்தார்கள் குருபிரசாத் மற்றும் நரேன்.

அவர்களின் பார்வை மணலில் விழ அவர்களால் இழுத்து விடப்பட்ட பெண் மணலில் அப்படியே கிடந்தாள். அவளின் சுடிதார் பல இடங்களில் கிழிக்கப்பட்டு அவளின் அழகை வெளிச்சம் போட்டு காட்டியது.

மணலில் கவிழ்ந்து கிடந்த பெண்ணை சியாமளா திருப்பி போட்ட போது அவள் மயக்க நிலையில் இருப்பதை நால்வரும் உணர்ந்தார்கள்.

வீரலட்சுமி உடனே தண்ணீரை கொண்டு வந்து அவள் முகத்தில் தெளிக்க மெல்ல மெல்ல கண் விழித்தாள்.

தன்னை சுற்றி நால்வர் அமர்ந்து இருப்பதை பார்த்து மெல்ல எழுந்து உட்கார்ந்தாள்.

"குரு... நீயும் சியாமளாவும் இந்த பெண்ணை பக்கத்தில் இருக்கும் உன் பீச் அவுசிற்கு அழைத்து போங்க. நானும் வீராவும் கடைக்கு சென்று இந்த பெண்ணுக்கு புது டிரஸ் வாங்கி கொண்டு உடனே அங்கே வந்து விடுகிறோம்" என்றான் நரேன்.

"சரிப்பா" என்று குருபிரசாத் சொல்ல அங்கிருந்து கிளம்பி அனைவரும் பைக் நிற்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தார்கள்.

குருபிரசாத்தும் சியாமளாவும் அந்த பெண்ணுடன் குருவின் பீச் அவுசிற்கு வந்து சேர்ந்தார்கள்.

குருபிரசாத் பிரபல தொழிலதிபர் விஸ்வநாத்தின் ஒரே மகன். இது போல் பல ஆடம்பர சொகுசு பங்களாக்கள், பல கம்பெனிகள் என்று பல கோடி ரூபாய் மதிப்பு உடைய சொத்துகளுக்கு அதிபதி.
ஆடம்பர பங்களாவின் உள்ளே நுழைந்தவளை விலை உயர்ந்த சோபாவில் அமர சொல்ல சற்று பயந்தபடி அமர்ந்தாள் அந்த அப்பாவி இளம்பெண்.

தன் உடை கிழிசலை பார்த்து கூச்சத்தால் மறைக்க முயல அதை உணர்ந்த சியாமளா போர்வை ஒன்றை தர போர்த்தி கொண்டு நன்றி என்றாள்.

பிரிட்ஜிலிருந்து ஐஸ் வாட்டரை கொண்டு வந்த தர தாகம் தீர குடித்து கொண்டு தன்னை ஆசுவாச படுத்தி கொண்டாள்.

அவள் கண்களில் பய உணர்வு போகவில்லை என்பதை நன்கு உணர்ந்த இருவரும் நரேன் வீரலட்சுமி வரும் வரை காத்திருக்க முடிவு செய்து எதுவும் கேட்க அமைதியாக இருந்தார்கள்.

சில நிமிடங்களில் புது துணி பை உடன் வந்தவர்கள் அந்த இளம் பெண்ணிடம் தந்து அணிந்து வர சொன்னார்கள்.

சில நிமிடங்களில் புதிய சுடிதார் அணிந்து அழகாக வந்து நின்ற இளம்பெண்ணின் அழகை கண்டு வியந்தார்கள்.

நல்ல சிகப்பு நிறம். அளவான உயரம். ஸ்டைலாக வெட்டிய தலைமுடி. அழகான மிரண்ட விழிகள். புன்னகை வறண்ட இதழ்கள், கீரல் கண்ட இரண்டு கன்னங்கள் என்று சோகத்தின் உருவாய் இருந்தாள்.

அந்த பெண் சற்று அமைதியாக இருப்பதாக உணர்ந்த வீரலட்சுமி அவளிடம் மெல்ல பேச ஆரம்பித்தாள்.

"பயப்படாதேம்மா. ரிலாக்ஸாக இரு. இனி உன்னை யாரும் எதுவும் செய்ய முடியாது."
என்றாள் வீரலட்சுமி.

சரிங்க என்று தலையசைத்த இளம்பெண்ணிடம் தொடர்ந்து பேச ஆரம்பித்தாள் வீரலட்சுமி.

"சரிடா... உன் பெயர் என்ன?"
"மஞ்சுளா மேடம்"
"உன் வயசு"
"இருபது"
"உன் சொந்த ஊர்"
"சென்னை"
"அப்பா என்ன செய்கிறார்"
"அப்பா,அம்மா இல்லை. நான் ஒரு அனாதை மேடம். கருணை மலர் இல்லத்தில் வளர்ந்தவள்"

"இந்த உலகில் அனாதை என்று யாரும் இல்லை மஞ்சுளா. இனி உனக்கு நாங்கள் துணையாக இருப்போம்" என்று வீரலட்சுமி கூற மஞ்சுளா சிரித்தாள்.

"மஞ்சுளா... நீ சிரித்தால் ரொம்ப அழகாக இருக்கிறாய்" என்று வீரலட்சுமி கூறினாள்.

"அதுதான் பெரிய ஆபத்தில் என்னை தள்ளி விட்டது" என்று விரக்தியாக பதில் சொன்னாள் மஞ்சுளா.

"நீ என்ன படித்திருக்கிறாய்?"
"பிஏ இங்கிலிஷ்"
"வேலை ஏதாவது?"
"பியூட்டிசியனாக இருந்தேன்"
"எங்கே வேலை பார்த்தாய்"
"கோல்டன் ஆஞ்சல் பார்லர்"
"இப்பொழுது அங்கே நீ வேலை பார்க்கவில்லையா?"
"இல்லை மேடம்."
"ஏன் பிடிக்கவில்லையா?"
"இல்லை... என்னை நீக்கி விட்டார்கள்."
"ஏன் நீக்கினார்கள் மஞ்சுளா"
"நான் கஸ்டமரை சரியாக கவனிக்கவில்லையாம் மேடம். என்னால் பெரிய கஸ்டமர் போய்விட்டார்களாம் அதனால் என்னை டிஸ்மிஸ் செய்து அனுப்பி விட்டார்கள்."

"உன்னை பார்த்தால் எனக்கு அப்படி தெரியவில்லையே. நீ நல்ல வேலை செய்கிற பெண் மாதிரிதான் தோன்றுகிறது" என்றாள் வீரலட்சுமி.

"நான் சரியாகதான் வேலை செய்தேன் மேடம். அவர்கள் என் மேல் அபாண்ட பழி போட்டு டிஸ்மிஸ் செய்து அனுப்பி விட்டார்கள்" என்றாள் மஞ்சுளா.

"நல்லவர்களுக்கு இப்பொழுது எல்லாம் காலம் இல்லைடா. என்ன செய்வது?"
"அது எங்கள் தலைவிதி" என்று சலித்தபடி கூறினாள் மஞ்சுளா.

"நீ அங்கே எவ்வளவு நாட்கள் வேலை செய்தாய்?"
"படிப்பு முடிந்து நான்கு மாதமாக வேலை பார்த்தேன்."
"இப்பொழுது ஆசிரமத்தில் தங்கி இருக்கிறாயா இல்லை வெளியே எங்காவது தங்கி இருக்கிறாயா"
"ஆசிரமத்தில்தான் தங்கி இருக்கிறேன் மேடம்"

Message…
 




Last edited:

snehasree

SM Exclusive
Joined
Mar 31, 2018
Messages
3,416
Reaction score
7,755
Location
comibatore
"உன்னை அவர்கள் எங்கே எப்படி கடத்தினார்கள் மஞ்சுளா"
"ஆசிரமத்தில் இருந்து என்னை கடத்தி கொண்டு வந்து கெடுக்க முயற்சி செய்தார்கள்"

"எப்படி கடத்தினார்கள் என்று கொஞ்சம் சொல்ல முடியுமா?"
"நான் ஆசிரமத்திற்காக நிதி வாங்க சென்று கொண்டு இருந்தேன். நான் பஸ்சுக்காக நின்றபொழுது ஒரு ஆள் வந்து அருணா அக்காவுக்கு பயங்கர ஆக்சிடென்ட். ஹாஸ்பிடலில் அட்மிட் செய்து இருக்கிறார்கள். நீங்கள் உடனே வாங்க என்று சொன்னான். நான் பதறி போயி அவனுடன் காரில் ஏறினேன். அங்கிருந்து என்னை கடத்தி கொண்டு வந்து இங்கே ஒரிடத்தில் வைத்து கெடுக்க முயற்சி செய்தார்கள். நான் அவர்களிடமிருந்து தப்பி ஒடிவந்தேன். அதற்குபின் என்ன நடந்ததுதான் உங்களுக்கே தெரியுமே மேடம்" என்றாள் மஞ்சுளா.

"யார் அந்த அருணா அக்கா? அவர் என்ன செய்கிறார் மஞ்சு" என்றாள் வீரலட்சுமி.

"அருணா அக்காதான் கோல்டன் ஆஞ்சல் பார்லர் மேனேஜர்" என்றாள் மஞ்சுளா.

"உன் அக்கா ஏன் உன்னை டிஸ்மிஸ் செய்தாள்?"
"அக்கா ரொம்ப நல்லவங்கதான் மேடம். பார்லர் ஒனர் முடிவாக சொன்னால் அவள் என்ன செய்ய முடியும்"

"நீ காரில் ஏறியவுடன் உன் அக்காவுக்கு போன் செய்தாயா?"
"இல்லை" என்றாள் மஞ்சுளா.

"ஏன் போன் செய்யவில்லை அம்மு" என்றாள் வீரலட்சுமி.

"அக்காவுக்கு ஆக்சிடென்ட் என்று அவர்கள் கூறியதும் நான் பதறி விட்டேன். அக்காவை பற்றிய நினைப்பில் எனக்கு எதையும் யோசிக்க தோணலை. ECR ரோடு வந்ததும் நான் சந்தேகபட்டு அவனிடம் தான் எங்கே போகிறோம் என்று கேட்டேன். அவன் பக்கத்தில் என்று மழுப்பினான்.
நான் பயந்து போய் காரை நிறுத்த சொல்லி தகராறு செய்ய என்னை மிரட்ட ஆரம்பிக்க நான் தப்பிக்க முயற்சி செய்தேன். அவர்கள் என்னை" என்று நிறுத்திவிட்டு அழுதாள் மஞ்சுளா.

"ரிலாக்ஸ் அம்மு" என்று கூறிய சியாமளா அவள் முதுகில் வருடி விட்டாள்.

மஞ்சுளா அதில் நிதானமாகி பின்னர் "அவர்கள் என்னை ரேப் பன்ன முயற்சி செய்தார்கள். நான் பலம் கொண்டவரை எதிர்த்து போராடினேன். அவர்களை அடிக்க முயற்சி செய்தேன். என்னால் அவர்களை எதுவும் செய்ய முடியாத காரணத்தால் முகத்தில் காரி துப்பினேன். அதில் கோபமாகி என்னை பலமாக அடிக்க நான் விழுந்தேன். நான் அவர்களிடம் தப்பிக்க மயங்கியதை போல் நடித்தேன்" என்றாள் மஞ்சுளா.

"அப்புறம் என்னாச்சு அம்மு" என்றாள் வீரலட்சுமி.

"நான் மயங்கியதும் அவர்கள் பதறி காரை நிறுத்தி விட்டு தங்களுக்குள்ளே பேசி கொள்ள ஆரம்பித்தார்கள். இறுதியாக சரக்கடித்து விட்டு வந்து என்னை காரில் வைத்து ரேப் பன்ன முடிவெடுத்து காரை விட்டு இறங்கி சென்றார்கள். நல்லவேளை கார் கதவை அழுத்து மூடி விட்டு செல்லாத காரணத்தால் நைசாக கார் கதவை திறந்து கொண்டு கீழே இறங்கினேன். அவர்கள் வேறு இரு ஜோடிகளிடம் தகராறு செய்து கொண்டிருந்தார்கள். நான் அங்கிருந்து மெல்ல தப்பிக்க ஆரம்பிக்க என்னை பார்த்து துரத்த ஆரம்பித்து விட்டார்கள். நான் உதவி கேட்டு கத்தியபடி ஒடி வந்தேன்" என்றாள் மஞ்சுளா.

"நாங்கள் உன்னை பார்த்து காப்பாற்றி விட்டோம். அம்மு நீ கிரேட்டா. ஆபத்தான நேரத்தில் இப்படித்தான் சமயோசிதமாக நடந்து கொள்ள வேண்டும்" என்று பாராட்டினாள் சியாமளா.

Write your reply...
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
நான்தான் First,
சினேகா ப்ரோ
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சினேகாஸ்ரீ பிரதர்
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top