• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

OVOV 9

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
சரண் மூன்று பள்ளி செல்லும் பிள்ளைங்களின் மரணத்திற்கு விடை தேடும் விதமாய் ,தன்னிடம் மாட்டி இருந்தவனை விசாரிக்க செல்ல ,அதே சமயம் அர்ஜுன் ,அமர்நாத்தை சுமந்த அந்த கார் ,நகரத்தின் ஜன நடமாட்டம் ,கான்கிரீட் காடுகளை தாண்டி , பச்சை பசேல் என்ற வயல் வெளிகளை நோக்கி சென்று கொண்டு இருந்தது.

field-3130604__340.jpg

அங்கொன்றும் இங்கொன்றுமாய் இருந்த வீடுகள் ,இன்னும் ரியல் எஸ்டேட் என்ற அரக்கனின் அகோர பசிக்கு இரையாகாமல் தன் பழமையை ,செழுமையை காப்பாற்றி ,இந்தியாவின் முதுகெலும்பு கிராமத்தில் என்ற பெருமையை கட்டியம் கூறி கொண்டு இருந்தது .

படிப்பு ,வேலை ,திருமணம்,மருத்துவம் என்று எந்த காரணத்திற்காக வெளியூர் சென்றாலும், மீண்டும் நாம் பிறந்து வளர்ந்த ஊரின் மண்ணை மிதிக்கும் போது கிடைக்குமே ஒரு நிம்மதி -தாயின் மடி இருந்த நாட்களின் அரவணைப்பு அந்த நிம்மதி ,அரவணைப்பை உணர்ந்தார் அமர்நாத் .அவரையும் அறியாமல் கண் மூடி ஆழ்ந்து காற்றினை சுவாசித்து வெளியிட்டவர் ,முகத்தில் அத்தனை பரவசம் .

"என்ன மாமா ...ஓவர் பீலிங்ஸ் சா இருக்கு .என்ன மாமி நினைப்பா ?"என்றான் புன்னகையுடன் .

"அட போ படிஜா ....அவளை நினைச்சிட்டாலும் ...."என்று அலுத்து கொண்டார் .

"என்ன மாமா எப்படி சொல்றீங்க .மாமி உங்க மேல் எவ்வளவூ லவ்ஸ் விட்டுட்டு இருக்காங்க .அவங்களை பத்தி நினைக்கமா zamina பத்தி நினைக்கறீங்க .மாமிக்கு தெரிந்தால் எவ்வளவூ வருத்த படுவாங்கன்னு கொஞ்சம் யோசிங்க ."என்றான் அர்ஜுன் அடக்கி வைத்த புன்னகையுடன் .

"படிஜா !உங்க மாமி கிழவி /Buḍhī aurata.ஆனா ஜெமினாவை பாரு எவ்வளவூ இளமையுடன் இருக்கு .கண்ணுக்கு குளிரிச்சியா ,மனசை அப்படியே சுண்டி இழுக்குது .இருந்தா இங்கே இருக்கனும் .அதை விட்டு உன் மாமி கிழவி கூட இருக்கும் இடம் ."என்று அவர் முடிப்பதற்குள் காரில் இருந்து அமானுஸ்யமாய் ஒலிக்க ஆரம்பித்தது அவர் மனைவி பர்கிதா குரல்

"Chitta Baandarr/வெள்ளை குரங்கே ! Shaitaan Diyaan Poonch!/சைத்தானின் அவதாரமே , Maiṁ āpaṇā ciharā tōṛa di'āṁ/உன் முகத்தை உடைக்கிறேன் .Jō ki naraka hai zamīnā Mālakaṇa/ஜெமினாவா யாரு யா அந்த சக்களத்தி ?"என்று பத்து நிமிடம் பத்து நிமிடத்துக்கு குறையாம ,அவரை பேச விடாமல் அர்ச்சனை பொழிந்தது .

அலண்டு போன அமர்நாத் சுற்றும் முற்றும் பார்க்க ,நமுட்டு சிரிப்புடன் தன் மொபைல் எடுத்து காட்டினான் அர்ஜுன் .

(மாப்பு வச்சிட்டாண்டா ஆப்பு )

"மேரி ஜனா /ஸ்வீட் ஹார்ட் !இந்த பாடிஜா வேலைடீ .அவனுக்கு லவ்ஸ் செட் அகலைனு ,லவர்ஸ் ஆனா நம்மை பார்த்து பொறாமை டீ அவனுக்கு .நான் சொன்ன ஜெமினா ,நம்ம மண்ணுடீ .அவனை பத்தி தான் தெரியுமே அவன் ஒரு வெள்ளை சிம்பன்சி ,ரத்த காட்டேரி ,ஓநாய் மனிதன் .நம்மை பிரிக்க பிளான் போடறான் சுனோ ."என்று கெஞ்ச ஆரம்பித்தார் அவர் .

"beewakoof /முட்டாள் ,பூந் /கழுதை, உம்மை பத்தி எனக்கு தெரியாதா என்ன ! என்னை பொண்ணு பார்க்க வந்துட்டு என் தங்கைகளை பார்த்து ஜொள் விட்டவர் தானே.என்னை லவ் செய்துட்டு லவ் லெட்டரை மாடி ஏறி வந்து என் அம்மாவிடம் கொடுத்தவர் தானே .உங்களை நம்ப கூடாதுன்னு எங்க வீட்டு ஆளுங்க அப்பவே சொன்னாங்க .பாவி நான் தான் உங்க மேல உசுரை வச்சிட்டேன் .வீட்டுக்கு வாங்க இருக்கு .உங்களுக்கு ."என்றவர் அழைப்பை துண்டிக்க அமர்நாத் வீட்டுக்கு போனால் நாம கைமா என்பதை நினைத்து அப்பவே முகம் வெளுத்து போனார் .

"ஏண்டா ...உனக்கு நல்லது செய்ய தானேடா அமிர்ஸ்டர் விட்டு வந்தேன் .அதுக்கு உன் கைமாறு எனக்கு டைவோர்ஸ் தானா ?நல்ல வருவேடா நீ ."என்றார் தன் எதிர்காலத்தை நினைத்து பயந்தவராய் .
 




anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
"சும்மா சொல்ல கூடாது .காதல் சக்ரவர்தியாய் சாலிங்க /மனைவியின் தங்கைகளையும் செட் செய்ய முயன்று இருக்கீங்க போல் இருக்கே .அதை கூட ஒத்துக்கலாம் .ஏதோ வயசு கோளாறு என்று .ஆனா சாஸ் /மாமியாரையும் விடலையா ?"என்றான் அர்ஜுன் .

"அட நீ வேற ...பொண்ணு பார்க்க போன இடத்தில் அவ அப்பா வகை தொகை இல்லாமல் பெத்து போட்டு இருப்பான் என்று யார் கண்டது .ஒரு மணி நேரத்திற்கு மாத்தி மாத்தி அவ தங்கசீங்க உள்ளே வந்து வந்து போய்ட்டு இருந்தது .ஒரு பொண்ணு மட்டும் பால் எடுத்து வந்து வைத்தது .அது தான் எனக்கு பார்த்த பொண்ணு என்று ,"நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க "என்று பேச ஆரம்பித்தேன் .என் போதாதா காலம் அந்நேரம் பார்த்து உன் மாமி உள்ளே வந்துட்டா .கையில் காலில் விழுந்து அவளை சரி கட்டி திருமணத்திற்கு சம்மதம் வாங்குவதற்குள் எனக்கு பாதி உயிர் போய்டுச்சு .சரி கொஞ்சம் ரொமான்டிக் கா ஏதாவது அவ பொறந்தநாளுக்கு செய்யலாம் என்று சாலிங்க ஹெல்ப் கேட்டேன் .சைத்தான்கள் உன் மாமி ரூம்க்கு வழி சொல்வதற்கு பதில் அம்மா ரூமிற்கு வழி சொல்லி ,அது அவங்கன்னு தெரியாம நான் லவ் சொல்லி ,லெட்டர் கொடுத்து ,கட்டி பிடிக்க போய் அவங்க பயந்து அலறி ,ஊர் மொத்தத்தையும் கூட்டி என் மானம் மரியாதை எல்லாம் டைட்டானிக் கப்பல் முழுகியது போல் முழுகியது தான் மிச்சம் ."என்றார் அமர்நாத் .

"ஓஹ் நல்லா ரொமான்டிக் ஆளு தான் மாமா நீங்க ."என்றான் அர்ஜுன் .

SB collage-NB-min.jpg

"ஏன்டா .உனக்கு வேலை வெட்டி இல்லை என்றால் அந்த அமன் கூட விளையாடு .இந்த ஆட்டத்திற்கே நான் வரலை .ஏதோ பசங்க வளர்ந்ததற்கு பிறகு தான் உன் மாமி புலம்பல் நின்றது .அதற்கும் தி எண்டு போட்டுட்டே .கடைசியா என்னை நல்ல்லா பார்த்துக்கோ ."என்று புலம்பியவரை கண்டு வாய் விட்டு நகைத்தான் அர்ஜுன் .

அமர்நாத் காலை வாரி கொண்டே அர்ஜுன் வண்டி "ரப்தார் பாட்டியா இன்க்/raftaar bhatiya incorporation "என்ற பெயரின் இரு புறம் சிங்கங்கள் கர்ஜிப்பது போன்ற அமைப்பில் இருந்த ஆர்ச் உள்ளே நுழைந்து 10 நிமிட பயணத்தில், வயல்களின் நடுவே பிரமாண்டமாய் உயர்ந்து நின்ற அந்த மாளிகையின் முன் சென்று நின்றது.

46557902.jpg

சுற்றிலும் பசுமை நிறைந்த வயல். ரோட்டினை ஒட்டியவாறு அமைக்க பட்டு இருந்த சிமெண்ட் கால்வாய்களில் ஓடிய தண்ணீரில் மோதிய காற்று தேகத்தை வருடி சென்றது .மினி சோலார் தெரு விளக்குகள் வழி எங்கும் அமைக்க பட்டு இருந்தது .

village-life-punjab.jpg

மஞ்சள் பூக்கள் பூத்து குலுங்கி நின்ற கடுகு தோட்டம் ஒரு பக்கம். கரும்பு, கோதுமை மற்றொரு பக்கம்.வீட்டின் பின் புறம் குளம் அமைக்க பட்டு இறால் பண்ணை,மாட்டு தொழுவம் -அங்கு 200க்கு குறையாத பசுமாடுகள்,எருமைகள் வளர்க்க பட்டு வந்தன.ஆயில் விட்ட மெஷின் போல் அவரவர்கள் அவரவர் வேலையை பார்த்து கொண்டு இருந்தனர்.இன்னொரு பக்கம் உருளை,முள்ளங்கி,கேரட்,பசலை கீரைபயிர் இட பட்டு இருந்தது .

காரை விட்டு இறங்கிய அர்ஜுன்,இடுப்பில் கைகளை வைத்து கொண்டு,கால்களை அகல விரித்து நின்று ஆழந்த மூச்சை எடுத்து விட்டான்.பூமி தாயின் வாசனை.எத்தனை திரவியம் வந்தாலும் தாய் பூமியின் வாசத்திற்கு ஈடு ஆக முடியாது.நெற்றி வியர்வை வழிய வேலை செய்தால்,அள்ளி அள்ளி தருவதில் இந்த அன்னை பெற்ற அன்னை போல் உயந்தவள் இல்லையா.கண்ணுக்கு எட்டியவரை அவன் உழைப்பு.செயற்கை ரசாயனம் போட்டு மலடாகி இருந்த நிலங்கள் இன்று அமிர்த கலசமாய் அல்லவா மாறி இருக்கிறது.
 




anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
குழந்தைகள் முதல் பல் போன கிழவிகள் வரை கூட தங்களால் முடிந்த அளவூ வேலை செய்து கொண்டு இருந்தனர்.ஒரு பக்கம் வேலை செய்பவர்களுக்கான சமையல்,இன்னொரு புறம் பறிக்க பட்டகாய்,கனி,தானிய வகைகள் மார்கெட்டுக்கும்,ஏற்றுமதிக்கு தயாராய் இருந்தன.இன்னொரு பக்கம் செக்கில் கடுகு,,சூரியகாந்தி,கடலை எண்ணெய் ஆட்ட பட்டு கொண்டு இருந்தது.ஒவ்வொன்றையும் மேற்பார்வை இட்ட படி குடும்ப உறுப்பினர்கள்.

"ஒஹ்ஹஹ்...காகா...எப்போ வந்தே...பர்கிதா, பசங்க எங்கே ?வா வா."என்றபடி வந்தார் அர்ஜுன் அம்மா ரஷ்மிந்தேர் பாட்டியா /(உங்களை ராஷ்மி ஆண்ட்டி என்று கூப்பிடுறோம் )

"sat sri கால் பெஹன்ஜீ...எப்படி இருக்கீங்க? “"என்ற அமர்நாத் தன் சகோதரியின் காலினை தொட்டு வணங்கினார் .

"கடவுள் என்றும் உனக்கு துணை இருக்கட்டும் /Paramātamā sadā tuhāḍē nāla hōvē."என்றார் சகோதரனை ஆசீர்வதிக்கும் விதமாக,"கடவுள் அருளால் எந்த குறையும் இல்லை காகா.வா வா.என்ன சாப்பிடுறே."என்றார் ராஷ்மி.

அர்ஜுன் அம்மா சட்டென்று பார்க்க டிம்பிள் கபாடியா -கமல் நடித்த " விக்ரம்" படத்தில் ராஜஸ்தான் இளவரசியாக வருவாரே அவரை போல் இருந்தார் .இளமை காலங்களில் பலரின் கனவு நாயகியாக இருந்து இருப்பார் ராஷ்மி .

Akshay and Dimple.jpg

சொந்தமாய் போட்டிக் வைத்து அதை வெற்றிகரமாய் நடத்துபவர் .கணவர் யதுவீர் தங்கைகளுடன் /Nanaan சேர்ந்து அர்ஜுன் ஹோட்டலின் கேட்டரிங் மேற்பார்வையாளராக இருக்கிறார்.

வீட்டு காய்கறிகளை கொண்டு பெண்கள் மட்டுமே நடத்தும் கேட்டரிங் அது .பெண்கள் அன்னபூரணிகள் அல்லவா !பார்த்து பார்த்து ,பதமாய் ,பக்குவமாய் ,அன்பினை கலந்து செய்வதில் இவர்களுக்கு நிகர் வேறு யாரு ?ஹோட்டல் உணவு என்று நினைக்க முடியாத அளவிற்கு வீட்டு சாப்பாட்டினை மிஞ்சும் சுத்தம் ,சுகாதாரம் ,நாவினில் நிற்கும் சுவை ,தர கட்டுபாடு என்று பெண்களே ராணிகளாய் இருக்கும் சமையல் அறை தர்பார் அது .

அடுப்பங்கரையில் பெண்களை பூட்ட நினைக்கும் மூடர் கூட்டத்தினை ஆட்டம் காண வைக்கும் வெற்றி திருமகள்கள் இவர்கள் .மனம் ,திட்டம் இருந்தால் அடுப்பாங்கரையும் வெற்றி படியாக்க முடியும்,சாதிக்க முடியும்,அதனையும் ஒரு தொழிலாய் செய்து விஸ்வரூபம் எடுக்க முடியும் என்று கிளம்பி இருக்கும் பெண்களின் கைவண்ணம் அந்த சமையல் கூடம் .அங்கு இருந்து அலுவலகங்கள் ,பார்ட்டி,என்று எல்லா விதமான கொண்டாட்டங்களுக்கு உணவு செய்து தர படும் .

"என் அம்மாவின் கைப்பக்குவத்திற்கு ஈடு எதுவும் இல்லை"

அம்மா !உன் சமையல் சாப்பிட்டு என் என் கிளாஸ் மொத்தம் இம்ப்ரெஸ் ஆகிட்டாங்க"

" நாளைக்கு இதை செய்து கொடு அம்மா"

நம் பாராட்டுதல்கள் இத்தோடு முடிந்து விடும் . அதுவும் ஒரு திறமை ,ஒரு கலை என்ற உணர்வே நமக்கு இருக்காது .வயசான பிறகு எதுக்கு இது எல்லாம் என்று குருட்டு சமாதானம் வரும் .இன்னும் சில வீடுகளில் நேரம் தவறினால் தட்டு நெற்றிகளை பதம் பார்க்கும் .

"எப்படி இருக்குங்க "என்று வாய் விட்டு கேட்டாலும் பதில் வராது .அவர்களின் திறமையை நாம் உண்டு முடித்த தட்டினில் கழுவ படும் ஒன்றாகி விடும்.

தன் அன்னையின் கைப்பக்குவம் அறிந்தவன் அர்ஜுன் .அவன் கணிப்பு சரியாகி இன்று பஞ்சாப் முழுவதும் இந்த பெண்களின் சாப்பாடு,கை பக்குவம் பேமஸ் .அர்ஜுன் உருவாக்கி தந்தது போன்ற வாய்ப்பினை எத்தனை பேர் நமது அம்மா ,சகோதரி ,மனைவிக்கு அமைத்து தருகிறோம் ?

அர்ஜுன் அம்மா முழுமையான பெண் தொழிலதிபர் .ஜீன்ஸ் டீ ஷர்ட் அணிந்து வெளிநாடுகளுக்கு பறக்கவும் செய்வார் ,சுடிதார் ,புடவை அணிந்து கார்வ சவுத் பூஜையும் செய்வார் .மொத்தத்தில் அர்ஜுனுக்கு அக்காவா என்று கேக்கும் வண்ணம் பிட்டான நவீன மாடல் அம்மா ராஷ்மி .

"இப்போ தான் நம் ஹோட்டலில் சாப்பிட்டேன்.பர்கிதா,பிள்ளைங்க ஒரு திருமணத்திற்கு போய் இருக்காங்க.மூன்று நாள் ஆகும் வருவதற்கு."என்றவாறு உள்ளே நுழைந்தவனை 20-30 பேர் வரவேற்று,உபசாரம் முடிக்க ஒரு அரை மணி நேரம் ஆனது.
 




anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
அமர்நாத் வருகைக்காக ஸ்பெஷல் ஸ்னாக்ஸ்-போஹா ஆலு பகோடா /பாணி பூரி ,பேசன் டா புடா,குர் பாரா, செய்ய பட்டு இஞ்சி தேநீர் கொடுக்க பட்டது .அனைவரும் மிக பெரிய ஹால் /லிவிங் ரூமில் வந்து அமர்ந்தனர் .

26238_37825_7c393802c26fb6b3d9983235099c7f3b.jpeg
"என்ன எப்போ பார்த்தாலும் காலில் சக்கரம் கட்டிட்டு சுத்துவே.இந்த பக்கமே வராமல் அமிர்தசரஸில் இருப்பே.இப்போ என்ன ?'என்றார் அர்ஜுன் அப்பா யதுவீர்

யதுவீர்,-ஹிந்தி நடிகர் ரிஷி கபூர் ஜாடையில் இருந்தார் .வயது 55 ஆனாலும் இன்னும் விவசாயத்தை செய்து கொண்டு இருக்கும் இளைஞ்சர் .அமுல் பேபி போன்ற முகம் .சற்று கரடு முரடாக தெரிந்தாலும் வெள்ளை மனசுக்காரர் .அதிகமாய் பேச மாட்டார் .குடும்பம் ,தன் கிராமம் ,சொந்தம் என்று வாழும் அந்த நல்லவர் .யாருக்கு எந்த பிரச்சனை என்றாலும் முதல் ஆளாய் நிற்கும் உயர்ந்தவர் .


rishi-kapoor-1544421181.jpg

"போங்க ஜீஜாஜி (சகோதரி கணவன் )உங்களுக்கு எப்பவுமே கிண்டல் தான்.வேலை,வேலைன்னு ஓடிட்டே இருக்கேன்."என்றார் அமர்நாத்

"ஆமா ஓடி ஓடி ஊர் உலகத்திற்கு எல்லாம் விவாஹ (திருமணம் )செய்து வை காகா.என் புத்தர்/putar (மகன்)மட்டும் உனக்கு கண்ணுக்கு தெரியாது."என்றபடி வந்தார் ராஷ்மி.

"அப்படி எல்லாம் இல்லை பெஹன்.இந்த தடவை பெண்ணோடு தான் வந்து இருக்கேன்.ஆனா...."என்று அமர்நாத் இழுக்க,

"எதற்கு இவ்வளவூ தயக்கம்?என்ன என்று சொல்லு."என்றார் அர்ஜுன் தாத்தா/தாதாஜி உபிந்தர் பாட்டியா .
1448039096-4989.jpg

"பொண்ணு பெயர் ப்ரீத்தி.ரெண்டு தலைமுறைக்கு முன்பே தமிழ்நாடு போய் செட்டில் ஆகிட்டாங்க.நம்ம பக்கம் பொண்ணு அப்பா.அம்மா தமிழ்நாட்டு பெண்.இப்போ மருமகளுக்கு /நூ பிரசவம் என்று அமெரிக்கா போய் இருக்காங்க.தாதாஜி உங்களுக்கு தெரிந்து இருக்கும்,பகத் சிங்ஜீ கூட சுதந்திர போராட்டத்தில் உடன் இருந்த குடும்ப."என்று மேலும் அவர் சொல்வதற்குள்

தாதாஜி,"விவாஹ எப்போ என்று நாள் சொல்லு அமர்நாத் ."என்றார்.

"பகத் சிங்" என்றால் பஞ்சாபிகளின் உயிர்,வீரம்.கையில் பச்சை குத்தி கொள்ளும் அளவூ வெறி."inquilab சிந்தாபாத்,ஹிந்துஸ்தான் ஜிந்தாபாத்" என்று தூக்கு மேடையில் முழங்கிய சிங்கம் அல்லவா?அவர் கூட போராட்டத்தில் கலந்து கொண்ட குடும்பத்தின் மகள் என்றால் வேறு எந்த விவரமும் தேவை இருக்க வில்லை.
 




anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
"பாபி /அண்ணி குழந்தையை பார்த்துட்டு ப்ரீத்தி தீ /மகள் மட்டும் தமிழ்நாட்டிற்கு ரெண்டு நாளுக்கு முன் தான் திரும்பி இருக்காங்க.நாளைக்கு தோழி திருமணம் என்று இங்கே பதிண்டாவுக்கு தான் வர போறாங்க.அர்ஜுன் போய் பார்க்கட்டும்.ரெண்டு பேருக்கும் பிடித்து இருந்தால் மேற்கொண்டு பேசலாம்.ஒரே ஒரு பிரச்சனை.பெண்ணிற்க்கு பஞ்சாபி மொழி தெரியாது.ஆங்கிலம்,தமிழ் நல்லா பேசும்.ஹிந்தி பத்தி கேட்கலை.மொழி பிரச்சனை ஆகுமா?நம்ம பழக்கவழக்கம் எல்லாம் தெரியுமா என்று தெரியலை."என்றார் அமர்நாத்.

"இதில் என்ன இருக்கு.அர்ஜுன் ஆங்கிலம் கத்துக்கட்டும்.நூ /மருமகள் பஞ்சாபி கத்துக்கட்டும்.நம்ம பழக்க வழக்கம் தெரிலை என்றால் சொல்லி கொடுப்போம்.இல்லை அவங்க பழக்கத்தை நாம கத்துக்கலாம்.இந்த வீட்டுக்கு வரும் நூ/மருமகள் எங்களுக்கு தீ /மகள் தானே."என்றார் யதுவீர்.

"அப்போ நாளை மாலை ரெடியா இரு அர்ஜுன்.பதிந்தா ரயில் நிலையத்திற்க்கு போகணும் . போய் பார்த்து,பேசி பிடித்து இருக்கிறது என்றால் இங்கே கூட்டி வரலாம்."என்ற அமர்நாத் "நானும் இந்த சம்மந்தம் கொண்டு வந்த என் சென்னை நண்பனிடம் பேசி ப்ரீத்தி இங்கே நாளை கண்டிப்பா வாரங்களோ என்று confirm செய்துக்கறேன்."என்றவர் போன் செய்து சென்னை நண்பரிடம் கேட்க,ப்ரீத்தி பஞ்சாப் வருவது உறுதி என்று சொன்னார்.

"அது என்ன பிடித்து இருந்தால் இங்கே அழைத்து வருகிறேன் என்கிறாய் .தமிழ்நாட்டில் இருந்து, தனியாக திருமணத்திற்கு இங்கே வரும் பெண் ஹோட்டலில் தங்க வைப்பாயா என்ன அமர் ?கடல் போல் இவ்வளவூ பெரிய வீடு இருக்கும் போது அந்த பெண் எதற்கு ஹோட்டலில் தங்க வேண்டும் ?நேராக இங்கேயே அழைத்து கொண்டு வந்து விடு ."என்றார் ராஷ்மி அன்னையாக .

இது தான் பஞ்சாபி கலாச்சாரம் .தெரிந்தவர் ,தெரியாதவர் எல்லாம் பார்க்க மாட்டார்கள் .பெண் என்றால் அத்தனை மரியாதை .இந்த மரியாதை பெற அவர்கள் வீட்டு பெண்ணாய் தான் இருக்க வேண்டும் என்ற அவசியமே இல்லை .யாருக்கு கொடுத்து வைத்து இருக்கிறதோ இத்தகைய குடும்பத்தில் மகளாய் வர

"சோராஜி (மாமனார் )!பொண்ணு போட்டோ கொண்டு வரலையா ?"என்றார் ஜோனகிஷா -சரண் மனைவி -அர்ஜுன் அண்ணி .

"ஸ்ஸ்ஸ் ...ஏதோ மறக்கிறேன் என்று நினைத்தேன் நூ /மருமகளே .போட்டோ எடுத்து வர மறந்துட்டேன் .தவிர இருந்த கவரை பர்கிதா மாத்தி எடுத்துட்டு போய்ட்டா ."என்றார் சங்கடத்துடன் .

"பரவாயில்லை நாளைக்கு தான் நேரிலே பார்க்க போகிறோமே ."என்றார் யதுவீர் .

பற்களை அர்ஜுன் நற நறவென கடித்த சத்தம் கேட்டு அமர்நாத் அதிர்ந்து போனார் .இவன் கையில் தனியாக சிக்க அவருக்கு என்ன மூளை கோளாறா?சும்மாவே டைவோர்ஸ் வரை கொண்டு போவான் .அவன் கையில் சிக்காமல் எப்படி எப்படியோ ஓடி,ஒளிந்து பார்த்தார் .ஹ்ம்ம் நோ யூஸ் .இரவு உணவிற்கு கியான்தீப் வேறு வந்து விட அவரை வளைத்து கட்டி சப்பாத்தி மாவு பிசைந்து ,நீச்சல் குளத்தில் முக்கி எடுத்தார்கள் .

screen-shot-2012-09-04-at-5.06.21-pm.png

நீச்சல் குளத்தின் அருகேயே மூச்சு வாங்க அமர்ந்து விட்டனர் மூவரும் .கியான்,அமர் இருவரின் கையிலும் வைன்.அர்ஜுன் கம்ப்ளீட் டீடோட்லர் என்பதால் கீர் பாயசத்தை சுவைத்து கொண்டு இருந்தான் .

"நீ எல்லாம் என்ன கல்யாண தரகர் ?எந்த ஊரில் பொண்ணு போட்டோ இல்லாம திருமணம் பேச வருவாங்க தரகருங்க .உங்க ஆபீஸ்க்கு போன் செய்து உங்க ஆளுங்க கிட்டே வாட்ஸாப்ப் ,ட்விட்டர் ,இன்ஸ்டாகிராம் அக்கௌன்ட் வாங்கு மாமா .பொண்ணை பத்தி முழு டீட்டைல் நாங்களே எடுத்துக்கறோம் ."என்றான் கியான்தீப் கடுப்பில்

"டேய் நான் என்னடா செய்வேன் .போட்டோ கூரியர்ல வந்தது .வாங்கி வச்ச உன் மாமி ஊருக்கு போகும் அவசரத்தில் அதையும் எடுத்துட்டு போய்ட்டு ,கூல்லா போன் செய்து விஷயத்தை சொல்றா .டைம் இருந்து இருந்தா நானே போய் வாங்கி வந்து இருப்பேன் .இல்லை என்றால் ஆளையாவது அனுப்பி வாங்கி இருப்பேன் .எதுக்கும் வழி இல்லை ."என்றார் அமர்நாத் .

"இந்த உபநிஷத் எல்லாம் இங்கே வேண்டாம் .பொண்ணு பேஸ்புக் id சொல்லு மாமா ."என்றான் கியான்தீப் விடாமல் .

" கியான் "என்ற சரணின் சிம்ம குரல் நீச்சல் குளத்தின் அருகே ஒலித்தது .

"வீர்ஜி !"என்று பதறி அடித்து எழுந்து நின்றான் கியான் .

"பெரியவங்க என்ற மரியாதை கிடையாதா ?என்ன வேலை இது எல்லாம் ?அந்த பெண் பத்தி இப்போ தான் பேச ஆரம்பித்து இருக்காங்க .முதலில் அர்ஜூனுனும் அந்த பெண்ணும் நேரில் சந்தித்து பேசட்டும் .அந்த பெண் தன் சம்மதத்தை முதலில் சொல்லட்டும் .ரெண்டு வீட்டு பெரியர்வகளும் சந்தித்து பேசட்டும் .அந்த பெண் கிட்டே பேசி,அவங்க ஒகே சொன்னால் அவங்க id போய் பாரு .பேசி வைக்கிறார்கள் என்பதற்கு எல்லாம் அந்த பெண்ணின் அனுமதி இல்லாமல் அவங்க பத்தி அறிய முயல்வது சரி இல்லை .நாளை இது ஒத்து வரவில்லை என்றால் அது அந்த பெண்ணிற்கு மனதளவில் பாதிப்பு ஏற்படுத்தும் .ஒரு நாள் உங்களால் பொறுக்க முடியாதா என்ன ?நீயுமா அர்ஜுன்! .அவனுக்கு புத்தி சொல்வதை விட்டுட்டு ...நம்ம வீட்டிலும் திருமண வயதில் பெண் பிள்ளைங்க இருக்காங்க அதை மனதில் வையுங்க .கோ ஸ்லீப் நௌ ."என்ற சரண் பேச்சில் இருந்த நியாயம் அவர்களை தலை ஆட்ட வைத்தது .

சரண் சொல்வதிலும் ஒரு நியாயம் இருக்கிறது .இது போல் விளையாட்டாக தொடங்கும் ஆர்வம் பல சிக்கல்களை ஏற்படுத்தி, சில சமயம் உயிர் எடுத்து விடுகிறது .வீட்டு பெரியவர்கள் பேச ஆரம்பிக்க ,பெண்ணை அறிந்து கொள்ள போகிறேன் ,மாப்பிள்ளையை தெரிந்து கொள்ள போகிறோம் என்று உடன் பிறந்தவர்கள் ,நட்பூக்களின் தூண்டுதலால் முகநூல் போன்ற சமூக வலைத்தளத்தில் நட்பாகி ,போட்டோ பதிவு இட்டு ,அதன் பின் திருமணம் நின்ற கதைகள் ஏராளம் .

ஜோடிகளே மாறிய கதைகள் பல உண்டு , பொய் புரளி பரப்பப்பட்டு,போட்டோ மார்பிங் செய்யப்பட்டு போன உயிர்கள் ஏராளம் .இவர் தான் ,இவள் தான் என்று மனதில் பதிந்து விடும் போது அது நடக்காத போது அதை தாங்கி கொள்ளும் மனோசக்தி இன்றைய தலைமுறைக்கு இல்லை .

சமூக வலைத்தளத்தில் யாரையும் நம்ப முடியாத சூழ்நிலை .முகமூடி அணியாமல் உலவும் விக்கிரங்கள் இங்கு அதிகம் என்னும் போது , பொது ஊடகத்தில் வேலி இன்றியமையாததாகி விடுகிறது.தீயவர்களை நாம் வீட்டிற்குள் விடுவதில்லை தான் .ஆனால் இந்த சமூக வலைத்தளங்கள் மூலம் இந்த மனித மிருகங்களை நாம் நம் அறைக்குளேயே விட்டு விடுகிறோம் .

அர்ஜுன் முகம் அறியா தன்னவள் எப்படி இருப்பாள் என்று தான் இதுவரை சந்தித்த பெண்களுடன் கற்பனையில் ஒப்பிட்டு பார்த்து கொண்டு இருந்தான் .தூக்கம் வந்தால் தானே !

மவனே இனி நீ நிம்மதியா தூங்குவே என்று cupid /காதல் தேவதை அவனை பார்த்து சிரித்து கொண்டு இருந்தது .
 




anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
இடம் -மீனம்பாக்கம் விமான நிலையம்,TAMILNADU
இரவு -மணி 8.00pm

7-anna-international.jpg

அந்த இரவு நேரத்தில் விமான நிலையம் செயற்கை விளக்குகளால் இரவினை பகலாக்கி கொண்டு இருந்தது .கார்கள் வருவதும் ,வெளி மாநிலம் ,வெளிநாடு செல்லும் பயணிகள் வருவதும் ,போவதுமாக பரபரப்பாய்,கண் கொள்ளா காட்சியாய் இருந்தது அந்த இடம் .எத்தனையோ வித மனிதர்கள் ,குடும்பங்கள் .ரசிக்க எத்தனையோ விஷயங்கள் அந்த நுழைவாயிலில் அரங்கேறி கொண்டு இருந்தது .

அங்கு ஏர்போர்ட்டினுள் சென்று கொண்டு இருந்த ,அங்கு இருந்து வெளியே வந்து கொண்டு இருந்த அனைவரின் பார்வையும் அங்கு நின்று கொண்டு இருந்த இரு பெண்களின் மேல் தான் இருந்தது .ஒரு பெண் இன்னொரு பெண்ணை அணைத்து அழுது கொண்டு இருந்தாள் .அணைத்து இருந்தவளோ அவளை சமாதானம் செய்து கொண்டு இருந்தாள் .

வாங்க கிட்டே போய் பார்ப்போம் .யாராவது அழுதால் ,முக்கியம் பெண் குலம் அழுதால் நம்ம லிட்டில் ஹார்ட் ,சின்ன இதயம் தான் தாங்காதே .

(தோடா ...forumல புதுசா போதி மரம் உனக்கு முளைச்சுதா என்ன) .

அருகே சென்ற நமக்கு அணைத்து ஆறுதல் செய்து கொண்டு இருந்த பெண்ணை எங்கோ பார்த்த ஞாபகம் வருதுப்பா .உங்களுக்காவது யாருன்னு தெரியுதா .இவள் தன் வாழ்வை மட்டுமல்ல மற்றவர் வாழ்வினையும் வரமாக்கியவள் .பல்பு எரிஞ்சுச்சா ?

எல்லாம் நம்ம மதுராக்ஷி விஜய் செல்லம் தான் அது .அருகே மூன்று குழந்தைகளை தனி ஆளாய் நின்று சமாளிக்க போராடி கொண்டு இருப்பது நம்ம விஜய்யே தான் .அவன் அருகே அவன் படும் அவஸ்தையை விட பலமடங்கு அனுபவித்து நிற்பது நம்ம சின்ன தம்பி சூர்யா .அவன் அருகே நின்று கையை பிசைந்து கொண்டு நிற்பது அவன் மனைவி மேக்னா.

44166789532_115ef4552e_b.jpg

(எல்லாம் இங்கே என்ன செய்யறாங்க ஹனி ?)

மதுராவின் தோளில் சாய்ந்து அழும் இந்த இந்தியன் பார்பி பொம்மை யாரு ?

யப்பா என்ன அழகு இந்த பொண்ணு ?உலகில் எது எல்லாம் மனதிற்கு இதம் தருகிறதோ ,கண்களுக்கு பார்க்க அழகாய் இருக்கிறதோ அந்த அழகினை எல்லாம் எடுத்து செய்த ஸ்ட்ராபெர்ரி சிற்பம் அவள் .ஸ்ட்ராபெர்ரியே தான் .பால் ரோஜா நிறத்தில் ஐந்து அடி நன்கு அங்குல வெண்ணை சிற்பம் .பூனை நிற கருப்பு கண்கள் .55 கிலோ எல்லோரா சிற்பம் .மாசு மருவற்ற சருமம் பளபளத்து கொண்டு இருந்தது .34-28-34. ஆஷ் நிற ஜீன்ஸ் ,வெள்ளை டீ ஷர்ட் அவள் வளைவு ,நெளிவுகளில் அழகாய் பொருந்தி இருந்தது .

Asin-New (1).jpg

அங்கு வந்து போனவர்களின் பார்வை அவள் மீது தான்.ஏதோ ஒரு ஆகர்ஷணம் நிச்சயம் அவளிடம் இருந்தது.அவள் அழகா,முகத்தில் தென்பட்ட குழந்தை தனமான களையா ஏதோ ஒன்று மற்றவர்களின் கவனத்தை அவள் மீது திருப்பியது.

புற அழகை விட பெண்களின் நிமிர்வு,கனிவு,பாசம்,மற்றவர்களுக்கு உதவும் குணம்,எது வந்தாலும் எதிர்த்து நிற்கும் குணம் ஒரு தனி தேஜஸ் கொடுக்கும்.அது ப்ரீதியிடம் மிக அதிகமாகவே இருந்தது.பல ஆண்களின் "வருங்கால மனைவி "என்ற கற்பனையை நிச்சயம் பூர்த்தி செய்து கொண்டு இருந்தாள்

“"ப்ரீத்தி !ப்ரீத்தி ....போதும் அழுதது .என்ன ஏது என்று நீ சொன்னால் தானே எங்களுக்கு விஷயம் புரியும் .அதை விட்டுட்டு இப்படி அழுது கொண்டே இருந்தால் பிரச்சனை தீர்ந்து விடுமா என்ன ?"என்றாள் மதுராக்ஷி பத்தாவது முறையாக .

பிறக்கும் போதே டூத் பேஸ்ட் விளம்பரத்திற்கு சிரிப்பது போல் சிரித்து கொண்டு பிறந்த குழந்தை ப்ரீத்தி .அவள் அழுது யாருமே பார்த்ததில்லை.அந்த அல்லி ராணி இப்படிபொது இடத்தில் அழுவது மதுவை திகைக்க வைத்து இருந்தது

"இங்கே பாரு ப்ரீத்தி ....ஒரு மாசம் முன்பு திடீர் என்று போன் செய்து உனக்கு நிச்சயம் என்றே ...என்ன ஏது என்ற விவரம் நமது நெருங்கிய நட்பு படை யாருக்குமே தெரியலை .நீயும் எதையும் சொல்லை .வந்தோம் ,நிச்சயமும் நல்லாவே நடந்தது .ஊரே வியக்கும் வண்ணம் தான் அப்பா எல்லாத்தையும் செய்தார் .” என்றாள் மதுரா

(என்னது.....நிச்சயம் ஆகி போச்சா....ஹனி வேலை ஆரம்பித்து விட்டாயா...போச்சு போச்சு)

பயணம் தொடரும் ...
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top