Latest Episode paadal thedal- final

#91
Romba romba azhagana niraivu...

Jothi pola aalunga ipadi oru treatment thaan sari padum...

Chezhiyan...:love::love::love:..Nee sema pa...

Janu startingla un personal life avlo manasu vedhanai ya irundhuchu.. but ippo miga miga santhosama iruku....

Monisha unga magudhathula meendum padikapatta oru vairam indha kadhai
 

Maha

Author
Author
SM Exclusive Author
#92
அழாக ஒரு நிறைவு

நம்ப பக்கத்து வீட்டில் நடக்கும் ஒரு கதை போல அருகே இருந்து பார்த்த ஒரு பிலிங் குடுக்கும் உங்க கதைகள்

அதில் இந்த கதை இன்னும் ரொம்ப எதார்த்தமா இருக்கு

அதுவும் அந்த ரெண்டு பிஞ்சுங்க தான் ஹைய் லைட் குறிப்பா மீனு குட்டி ?

ஜானவி.....

இப்பிடி இருக்கணும், இருக்க கூடாதுன்னு அவங்க கேரக்டர் பத்து கத்துக்கலாம் தெரிச்சுக்கலாம்

ஆன இது போல பொண்ணுங்க நிறைய உருவாக்கிட்டு இருக்காங்க துணிச்சலா தன் வாழ்க்கையை தீர்மானிக்கும் முடிவை எடுக்கும் தைரியம் பெண்கள் தான் இப்போ,

ஜானவி கற்பனை மட்டுமில்ல அதில் நிஜமும் இருக்கு..
அன்பு....

இவரைப்போல ஒரு நல்ல கணவர் நண்பர் தோழர் கிடைச்சா ஒரு பொண்ணுக்கு அதை விட வேற என்ன வேணும்

இதுபோல ஆண்களை பார்க்கிறது தான் கஷ்டம் கிடைக்கிறது கஷ்டம் ஏதோ நூத்துல ஒரு இருபது பேர் இருக்கலாம்.

வாழ்க்கையில முதல்ல அமையும் வாழ்க்கை தோல்வியில் சோகத்தில் போய் விட்டால்

மறுபடியும் கிடைக்கும் வாழ்க்கை எப்படி சந்தோஷமா மாத்திக்கிட்டு வாழ்ந்து காட்டலாம் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு அன்பு ஃபேமிலி தான்

அன்பு போல ஒரு நல்ல தகப்பனே பார்க்கறதும் கஷ்டம்தான்

தன் குழந்தையை பார்க்காத சில தகப்பன் மத்தியில்

இரண்டாவது மனைவி குழந்தையும் தன் குழந்தையை விட அதிக பாசம் வைத்து பார்க்கும் அந்த மனப்பக்குவம் எல்லாருக்கும் வராது

இதில் அன்பு ஒரு எடுத்துக்காட்டு.


பெற்றோர்கள்.....


ஜானவியின் தாய் தந்தை போல் இருக்கக்கூடாது என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு

அன்புவின் தாய் தந்தை போல் வாழ கத்துக்கணும் அவங்கள போல அந்நியோன்னியமாக
எந்த வயதிலும் காதலோடு இருக்கலாம் என்பதற்கு அவர்களும் ஒரு நல்ல எடுத்துக்காட்டுஅந்த தம்பதி தான்

நல்ல ஒரு குடும்பக் கதை நிறைவான கதை வாழ்த்துக்கள் மா ????
 

Shalini01

Well-known member
#95
அழகான தலைப்பு. அருமையான கதை. வாழ்வின் யதார்த்த நிலையை தத்துருவமாக விளங்கியுள்ளீர்கள். குடும்பங்களில் கணவனை விட்டு பிரிந்திருக்கும் பெண் எதிர் நோக்கும் இன்னல்களையும், கணவனால் படும் அவலங்களையும் , பிரச்சனைகள் அனைத்தையும் தகர்த்தி விட்டு தன் காலில் சுயமாக செயல்படும் ஜானு கதாபாத்திரத்தை அழகாக படைத்துள்ளீர்கள். செழியன் உண்மையில் மனிதனுள் மாணிக்கம் போன்றவன். பிரச்சனைகளை கையாளும் விதம், தனது குழந்தைகளுக்கு சரி எது தவறு எது என புரிய வைக்கும் விதம், இறந்த பின்பும் மனைவி மேல் கொண்ட காதல் இழக்காமல் தனது மனதில் அதை அழகாக பதிய வைப்பதாகட்டும் தனது சம்பளத்தில் அனாதை பிள்ளைகளுக்கு உதவும் உயரிய குணத்திலாகட்டும் ஒரு சிறந்த மனிதனாக மிளிர்கின்றான். ஜானு திருமணம் புரிய கேட்கும் போது முதலில் மறுப்பதும் பின் மீனாவை பிரிய முடியாமல் திருமணத்திற்கு உடன்படுவதும் அதன் பின் ஜானுவை ரஞ்சனியாக நினைத்து உணர்ச்சி வசபட்ட தன் நிலையை நினைத்து வருந்துவதும் ஜானுவை நேர் கொண்டு பார்க்க முடியாமல் தடுமாறுவதும் அவளின் மனதில் தான் இருப்பதை அறிந்து பின் மகிழ்வுடன் காதல் மனைவியாக ஏற்று அவளின் துயரங்களையும் எல்லாம் களைந்து தன்னால் அவள் குடும்பம் அவளிற்கு ஏற்படுத்திய களங்கத்தை தகர்தெறிந்து அவளின் குடும்பத்தில் அவளை தலை நிமிர்ந்து நிற்க வைக்கின்றான் இப்படி ஒவ்வொன்றாக பல விடயங்களை சொல்லி கொண்டே போகலாம் மொத்தத்தில் அன்பு ஒரு சிறந்த மகனாகவும் , நல்ல கணவனாகவும் மற்றும் ஒரு நல்ல தந்தையாகவும் மிளிர்கின்றான். ஜானு , செழியன் இருவர்களுக்கிடையிலான காதல் மற்றும் புரிதலுடன் கூடிய இல்லற வாழ்க்கை மிக அழகு. குழந்தைகள் இருவரின் தோழமை அதில் ஏற்படும் சின்ன பிரச்சனைகள் அதை மறந்து மன்னித்து பின் ஒன்றாக் இணைவது என பிள்ளைகளுக்கு ஏற்புடைய குண இயல்புடன் படைத்திருக்கும் பாங்கு அழகு. ராஜன் போன்ற ஆண்கள் ஆண் இனத்திற்கே அவமானம் இப்படி பட்ட மனிதர்களை நினைக்கையில் மனம் குமுறுகின்றது. ஜானுவின் பெற்றோர் சராசரி மனிதர்கள் போல தனது பிள்ளையின் நிலையறியாது அவளை அவமான படுத்துவதும் பின் உண்மை தெரிந்து வருத்தமடைவது என படைத்திருப்பது உண்மை நிலமை. அருமையான எழுத்து நடை. வாழ்த்துக்கள் சகி???????????
 
#96
மோனி உங்களின் அடுத்த நாவலுக்காக ஆவலுடன் காத்திருக்கிறோம் சீக்கிரம் வாங்க.
 
#97
???படிக்க ஆரம்பித்ததிலிருந்து கீழே வைக்கவே முடியல......??? மென்மையான அழகான அன்பான கதை ???
??????
 
#98
அன்பு கிடைக்காமல்....யாருடைய சப்போர்ட்ட்டும் இல்லாமல்.... பல தோல்விகளுக்கு... அழுத்தங்களுக்கு நடுவில்... தனித்து தன்னோட குழந்தையோட வாழ்க்கையை தைரியமா எதிர்கொள்கிற ஜானு.....எல்லாமே கிடைக்க பெற்று.... ஒரே ஒரு தோல்வியில் மனைவியை இழந்து கஷ்டத்தை அனுபவிக்கிற செழியன்..... இவங்க இடையேயான மோதல்.... அழகான நட்பு....பூவாய் மலரும் காதல்....புரிதல்... எல்லாமே அழகு??...

மனதை தீண்டும் மெல்லிசையாய்.... அருமையான படைப்பு....சூப்பர் சிஸ்??....
 

Sponsored

Latest Episodes

Advertisements

New threads

Top