• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Palagi Parkkalam - Chapter 2 Part 1

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Vijiya lakshmi jagan

மண்டலாதிபதி
Joined
Jan 17, 2018
Messages
193
Reaction score
4,743
Hi friends,

2nd chapter part1 post panren. Part 2 will be posted soon. Padichitu unga comments ah solunga.

அத்தியாயம்----2​

சுடர் ஜோதி என்ற பெயர் இடம் பெற்று இருந்த அந்த ஐடி கார்டை ஒரு நிமிடம் உற்று பார்த்தவன் பின் அதை பக்கத்தில் நின்றுக் கொண்டு அந்த கார்டை கொடுப்பார் என்று காத்துக் கொண்டு இருந்த S.I யிடம் கொடுத்து விட்டு.
“அதில் உள்ள நம்பருக்கு தகவல் சொல்லி விடுங்க.” என்று விட்டு ஸ்டீபனுக்காக காத்திருந்தவனை அதிக நேரம் காத்திருக்க வைக்காது வந்து சேர.
ஆக்ஸிடெண்ட் ஆனா காரை காட்டி கோவளம் பக்கத்தில் உள்ள வனாந்திர ஏரியாவை சொல்லி “எரித்து விடு…..” என்று சொல்ல.
அந்த வார்த்தையில் ஸ்டீபன் அதிர்ச்சி அடையவில்லை. ஏன் என்றால் தன் பாஸ் இது தான் சொல்வார் என்று முன்னமே தெரிந்து இருந்ததால் அந்த காரை நோக்கி சென்றான்.
ஆனால் நம் S.I…யோ...அதிர்ச்சியுடன்…. “சார்…..”என்று கூவியவர்.
அந்த காரை பார்த்துக் கொண்டே…. “எழுபது லட்சம் இருக்குமா…..?” என்று கேட்டதுக்கு.
“என்பத்தி ஐந்து லட்சம்….” என்று சொல்லோடு நிறுத்திக் கொண்டான்.
“என்பத்தைந்து லட்சமா…..” என்று வாயை பிளந்தவரிடம்.ரோடு டேக்ஸ், இன்கம் டேக்ஸ் எல்லாம் சேர்த்து ஒன்னுக்கு வந்துடுச்சின்னு சொன்னா என்ன செய்வாரோ…..?
“சார் காரை எரித்து தான் ஆக வேண்டுமா…..நான் எதுவும் ஆகாம பார்த்துக்குறேன் சார்.” என்று சொல்லி தலை சொறிவதிலேயே அவர் எண்ணத்தை புரிந்துக் கொண்ட சூரிய பிரகாஷ்.
“ இந்த இஷ்யூ எல்லாம் அடங்கிய பின் உங்க வீட்டுக்கு ஒரு காரை வந்து நிறுத்துறேன். ஆனா இது வேண்டாம். ஒரு சின்ன விஷயத்துல கூட என் மருமகன் மாட்ட நான் விரும்பல.” என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே….
S.I யின் போன் இசைக்க. அதை எடுத்து பேசியவர் பதட்டத்துடன். “சார் அந்த பொண்ணு கண்ணு முழிச்சிச்சா சார்.” என்று அதிர்ச்சியுடன் சொல்ல.
ஒரு நிமிடமே திகைத்த சூர்ய பிரகாஷ்….பின் “வாங்க போய் பார்த்துடலாம்.” என்று கூட கிளம்பியவனை பயத்துடன் பார்த்த அந்த S.I.
“சார் அந்த ஹாஸ்பிட்டல் டீன் ரொம்ப நேர்மையானவர் சார்.” என்று சம்மந்தமே இல்லாத பேசியவரை நெற்றி சுருங்க ஒரு நிமிடம் குழம்பி போய் பார்த்தவன்.
புரிந்த பின்…”என்னை என்ன முழுவில்லன் என்றே நினச்சிட்டிங்களா…..?”
“இல்லை….” என்று இழுத்தவரின் பேச்சை கைய் காட்டி தடுத்தவன்.
“எனக்கு என் மருமகன் முக்கியம். அதுக்கு உண்டானதை தான் செய்யிறேன். அதுக்காக கொலை அளவுக்கு எல்லாம்…..” என்று பாதியில் தன் பேச்சை முடித்தவன்.
“நீங்க உங்க ஜீப்பில் போங்க….” என்று சொல்லிக் கொண்டே தன் காரை எடுத்தவன். மறக்காது ஸ்டீபனுக்கும் போன் செய்து ஹாஸ்பிட்டலின் பெயரை சொல்லி “வந்து விடு.” என்று சொல்லோடு தன் காரை ஹாஸ்பிட்டல் நோக்கி பறக்க விட்டான்.
“உன் பெயர் என்னம்மா…..?” என்று கேள்விக்கு.
“சுட...ர் ஜோ...தி.” என்று அந்த பெண் சொன்னது புரியாது.
திரும்பவும்…அவள் முகத்துக்கு அருகில் தன் காதை கொன்டு சென்ற அந்த டாக்டரிடம் இப்போது முயன்று.
“சுட ர் ஜோதி.” ர்ன்று ஒழுங்காக சொல்ல.
“சுடர் ஜோதியா….நல்ல பெயர்.” என்று சொல்லியவர்.
“வலிக்குதாமா…..?” என்று கேட்டுக் கொண்டே தலை சுற்றி கட்டி இருந்த பேண்டேஜில் ஏதாவது ரத்த கசிவு இருக்கா என்று பார்த்துக் கொண்டே கேட்டவருக்கு பதில் அளிக்காது.
“அ...ண்ணா…..” என்று கேட்க.
அந்த பெண்ணின் அண்ணா இந்த ஹாஸ்பிட்டலின் பிணவரை கிடங்கில் தான் இருக்கிறான் என்று சொல்ல முடியாது.
“நான் கேட்டதுக்கு பதில் சொல்லலையேம்மா…..? தன் கேள்வியிலேயே குறியாக இருப்பதை போல் கேட்க.
சொல்லி விட்டால் தன் அண்ணா எப்படி இருக்கிறார் என்று சொல்வார் என்ற நம்பிக்கையில் “அவ்வளவா….வலி இல்ல டாக்டர்.” என்ற மூன்று எழுத்து பேச்சிலேயே முகம் முக்கோண வடிவில் இழுத்து தன் வலியைய் கட்டு படுத்தி சொல்ல.
வலி நிவாரணத்துக்கான இஞ்ஜெக்க்ஷன் பெயரை பக்கத்தில் உள்ள நர்சிடம் சொல்லி வாங்கியவர். அதை அவள் கையில் செலுத்த செல்லும் போது தடுத்த சுடர் ஜோதி.
வலியைய் பொறுத்துக் கொண்டு….”அண்ணாவை பாக்கனும்.” அழுத்தம் திருத்தமாக கேட்டவளிடம் எப்படி சொல்வது என்று பக்கத்தில் இருந்த இன்னொரு டாக்டரை பார்க்க. அவரோ சுடர் ஜோதியைய் பரிதாபமாக பார்த்தார்.
இவர்களின் பார்வையிலேயே ஏதோ பெரியதாக நடந்திருக்கிறது என்று அறிந்துக் கொண்ட சுடர் ஜோதி.
நேரிடையாக…. “அண்ணாவின் உயிருக்கு….ஆபாத்து இல்லையே…..?”
அப்போது கூட அண்ணா இறந்து இருப்பான் என்று நினைக்கவில்லை. பெரிய பிரச்சனையோ…. என்று தான் நினைக்க தோன்றியது.
எப்போதும் தன் அண்ணா தில்லை நடராஜ் தலை கவசம் இல்லாது வண்டி எடுக்க மாட்டானே என்று நினைக்கும் போதே…
அப்போது தான் மண்டையில் அடித்த மாதிரி இன்று அண்ணா வண்டி எடுக்கும் போது தன் தலை கவசத்தை தன்னிடம் கொடுத்து “நீஇ போட்டுக்க…..” என்று சொன்னதும்.
“எனக்கு எதுக்கு……?’ என்று கேட்கும் போதே...பக்கத்தில் தங்கள் வண்டியைய் எடுக்க வந்த அந்த நான்கு இளைஞர்கள் சுடர் ஜோதையைய் விழுங்குவது போல் பார்த்து வைக்க.
பல்லை கடித்துக் கொண்டே தில்லை…. “போடு…” என்று அதட்டியதும் சட்டென்று தலை கவசத்தை மாட்டிக் கொண்டாள்.
இரண்டு நாளில் மேல் படிப்புக்காக அமெரிக்கா செல்லும் தில்லையிடம் அவன் தோழர்கள்.
“மச்சான் மூன்று வருட விடா முயற்ச்சிக்கு வெற்றி அடைந்ததுக்கு எங்களுக்கு டீரிட்டு கிடையாதா…..?” என்று கேட்டவர்களிடம் மறுக்க முடியாது இவன் ஒத்துக் கொள்ள.
கோவளத்தில் உள்ள அநெத ரிசார்ட் பெயரை கேட்ட சுடர். “அண்ணா நாண்ணா நாண்ணா ….” என்று கெஞ்சியவளிடம்.
“சரி வா…..” என்றவுடன் பக்கத்தில் இருந்த அவர்கள் அன்னை வசந்தி. “என்னடா ஆம்பிள்ள பிள்ளைங்களா இருக்க இடத்துக்கு பொட்ட பிள்ளையே கூட்டிட்டு போற….” என்று மறுத்ததும்.
அய்யோ அம்மா சொன்னதை கேட்டு அண்ணா கூட்டிட்டு போக மாட்டாரோ என்று பயந்து போய் பார்க்கும் தங்கையிடம் வேண்டாம் என்று சொல்ல முடியாது.
“என் பிரண்சுங்க எல்லாரையும் சுடருக்கு தெரியுமேம்மா….அதுவும் இல்லாம என் பிரண்சுங்க எல்லோரும் நல்லவங்க தாமா….” என்று அன்னையின் பேச்சை கேளாது அழைத்து சென்ற தங்கைக்கு தன் தோழர்களால் ஒன்றும் இடைஞ்சல் இல்லை என்றாலும்….
அங்கு வந்து சென்ற ஒரு சிலர் சுடர் ஜோதியைய் வெறித்து பார்ப்பதை பார்த்த தில்லையின் நண்பர்கள்.
“மச்சான் நீ தங்கச்சிய கூட்டிட்டு போயிடு மிச்ச ட்ரீட்ட நாங்க பார்த்துக்குறோம்.”
அவர்கள் ட்ரீட் என்று அழுத்தி சொன்னதிலேயே எந்த ட்ரீட் என்று புரிந்துக் கொண்ட தில்லை தன் தங்கையைய் கைய் பிடித்து அழைத்து சென்றவனுக்கு வண்டி நிறுத்தும் இடத்திலுமே இது போல் தன் தங்கை மீது பார்வை படுவதை கண்ட பின் தான் தன் அன்னை சொல்வதை கேட்டு இருக்க வேண்டுமோ என்று நினைக்க தோன்றியது.
சுடர் ஜோதி அனைவரும் ஒரு முறைக்கு இரு முறை திரும்பி பார்க்கும் பொலிவோடு தான் இருந்தாள். அழகு என்ற ஒரு வார்த்தையில் அடக்கி விட முடியாது.
சுடர் ஜோதியைய் பார்ப்பவர்கள் வெள்ள நிறம் தான் அழகு என்று எவன் சொன்னான் என்று கேட்பார்கள். மாநிறத்தில் மாசு மருவற்ற சருமம் என்பார்களே அது போல் அவள் சருமம் மிளிரும்.
அவள் தோழியர்கள் அவள் அருகில் சென்றாலே...அவள் கன்னத்தை தேய்த்துக் கொண்டே ….”உனக்கு மட்டும் எப்படிடீ ஸ்கீன் இவ்வளவு ஸ்மூத்தா இருக்கு…..? இப்போவும் ஜான்சன் ஜான்சனை தான் யூஸ் பண்றியா…..?” என்று கிண்டல் செய்யும் அளவுக்கு அவள் சருமம் அவ்வளவு மென்மையாக இருக்கும்.
எந்த டையட்டும் இல்லாது இடை சிறுத்து ரவி வர்மா ஓவியம் போல் காட்சி தருவாள். உடை எடுக்க கடைக்கு சென்றால் அவள் மென கெட்டதே இல்லை.
அனைத்து உடையும் அவளுக்கு கச்சிதமாக பொருந்தும். நிறம் கூட அடிக்கிற கலரில் இருந்து சாயம் போன கலர் வரை எது போட்டாலும் அட்டகாசமாக பொருந்தும்.
இத்தனைக்கும் அவள் உயர்ந்த விலையில் கூட இடை எடுக்க மாட்டாள்.
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
விஜி டியர்
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top