• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Palagi Parkkalam - Chapter 25 Part 1

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Vijiya lakshmi jagan

மண்டலாதிபதி
Joined
Jan 17, 2018
Messages
193
Reaction score
4,743
Hi friends,

Pona episode ku comments pannavangaluku thanks. Endha episode padichitu unga comments sollunga.

அத்தியாயம்------25​
சமீபத்தில் தான் அந்த வீட்டில் துக்கம் நடந்து இருந்தாலும் தன் ஒரே மகனின் திருமணத்தை ஆடம்பரமாகவே நடத்தி முடித்து விட்டார் நாரயணன்.
வீட்டுக்கு வந்த மருமளிடம் தான் அவரால் சாதரணமாக பேச முடியவில்லை. தன் நிலையில் இருந்து எப்போதும் கீழ் இறங்காதவர். இருந்தாலும் குடும்பம் பிள்ளைகள் என்று வந்து விட்டால் இறங்கி விடுவார். அப்படி தான் தன் மகளின் உடல் நிலையை கருத்தில் கொண்டு தன் நிலைக்கு கீழ் இருந்தாலும் தன் மச்சானுக்கே தன் மகளை மணம் முடித்து விட்டார்.
பின் தன் மகள் எந்த சூழ்நிலையிலும் கஷ்டப்படக் கூடாது என்று தான் வீட்டோடு வைத்துக் கொண்டதும் அல்லாமல் அவளுக்கு சேர வேண்டிய சொத்தை முதலிலேயே அவளுக்கு கொடுத்து விட்டார். நல்ல வேலை சொத்து தன் மகள் பேரிலேயே பதிவு செய்து விட்டது எவ்வளவு நல்லதாக ஆகி விட்டது என்று எண்ணாத நாள் இல்லை இப்போது.
இல்லை என்றால் இப்போது இருப்பது போல் உமா சந்தர் பல் பிடிங்கிய பாம்பு போலா இருப்பான். பணம் மட்டும் அவனிடம் இருந்து இருந்தால் இன்நேரம் கண்டிப்பாக அவன் தன் விஷத்தை கக்கி இருப்பான்.
தன் மகளின் வாழ்க்கை குறித்து யோசித்துக் கொண்டு இருக்கும் போது அருகில் வந்த சூர்யா… “அப்பா நான் என் வீட்டுக்கு போறேன்.” என்று ஒரு தகவல் போல் சொல்லியவனிடம் ஆதாங்கமான ஒரு பார்வை செலுத்தினாரே ஒழிய.
“இங்கேயே இரு….” என்று ஒரு வார்த்தை சொல்லவில்லை. தன் மகனின் விருப்பத்துக்கே விட்டு பழக்க பட்ட அவருக்கு அதை தடுக்க விருப்பம் இல்லாது அமைதியாக இருந்து விட்டார்.
இருந்தும் மனதில் வீடு இருக்கும் நிலைக்கு இப்போதும் அவன் விருப்பமே முதன்மை என்று கருத்துகிறானே…..அஸ்வினின் மறைவு, மகளின் எதிர்காலம் இப்படி பயத்தில் இருக்கும் சூழ்நிலையில் பெற்றோருக்கு இந்த சமயத்தில் தான் ஆறுதலாக இருக்க வேன்டும் என்று எண்ணாமல் இருக்குறானே...நானாவது பரவாயில்லை வெளியிடத்துக்கு செல்வதால் என் கவனம் கொஞ்சம் திசை மாறுகிறது.
ஆனால் ரேவதி அவளை நினைத்தால் தான் நாரயணனுன்னு கஷ்டம் என்பதை விட பயம் என்று சொன்னால் சரியாக இருக்கும். தன் தம்பிக்கு மணம்முடிக்க தான் தானே சொன்னோம். அதனால் தானே தன் கணவன் தன் தம்பிக்கு மகளை மணம் முடித்தார்.
தான் மட்டும் அந்த ஆலோசனை சொல்லாமல் இருந்து இருந்தால் தன் மகள் நன்றாக இருந்து இருப்பாளோ….?அதுவும் ஆண்டு கணக்கில் தன் மகளுக்கு உமா சந்தர் துரோகம் செய்து இருக்கிறான் என்று கேள்வி பட்டதில் இருந்து தானே தன் மகளின் வாழ்கையைய் கெடுத்து விட்டோமே என்ற குற்றவுணர்விலேயே எப்போதும் படுக்கையிலேயே இருந்த ரேவதி மகன் திருமணம் என்ற நிலையில் தான் கொஞ்சம் எழுந்து நடமாடுகிறார்.
மகன் சென்று விட்டால் கண்டிப்பாக முன் இருந்த நிலையில் தான் தன் மனைவி இருப்பாள் என்று தெரிந்தே மகனை தடுக்காது அமைதி காக்க.
சூர்யாவுக்கு பின் நின்ற சுடரோ….”நாம இங்கேயே இருக்கலாம்.” முதன் முறையாக தன்னை நேர்க் கொண்டு பார்த்து சாதரணமாக பேசிய பேச்சில் திரும்பிய சூர்யா அவளையே பார்த்திருக்க.
சூர்யாவின் முகம் தெரியாது அவன் முதுகை பார்த்திருந்த நாரயணன்.”இப்போ எதுக்கு அந்த பிள்ளைய முறைக்குற…..உன்னை பத்தி தெரியாம சொல்லிடுச்சி” தன் மனக் குமுறலை தன் மருமகளுக்கு சாதகமாக பேசுகிறேன் என்ற வகையில் வார்த்தைகளை விட.
அட எப்போது இருந்து மருமகளுக்கு சப்போட்டு என்று மனதில் கிண்டலாக நினைத்துக் கொண்டே தன் தந்தையை பார்த்தவனுக்கு அவர் முகத்தில் காணப்பட்ட அதிகப்படியான சோர்வில்… இந்த சோர்வு திருமண வேலையின் பொருட்டு வந்ததோ என்று நினைத்து.
“எதுக்கு எல்லாத்தையும் உங்க தல மேலே போட்டுக்கிறிங்க….? இத்தன வேல ஆள் இருக்காங்கலே அவங்க கிட்ட ஆளுக்கு ஒரு வேல பிரிச்சி கொடுக்குறத்துக்கு என்ன….?” என்று கேட்டதுக்கு.
எந்த பதிலும் சொல்லாது அமைதி காத்த தந்தையிடம் திரும்பவும் ஏதோ சொல்ல வந்த சூர்யாவை தடுத்து நிறுத்தியவர்.
“மருமகள கூட்டிட்டு நல்ல நேரத்தில் உன் வீடு போய் சேரு.” உன் வீடு என்றதில் அழுத்தம் கொடுத்து சொல்ல.
தன் மனதை புரிந்து தான் தனியாக இருக்க ஒத்துக் கொண்டாலும் ஒவ்வொரு முறையும் தான் செல்லும் போது தன் தந்தை வீட்டில் இருந்தால் அவர் முகம் கொஞ்சம் வாடி போவதை அவன் கண்டு இருக்கிறான்.
அதை பார்த்து மனது வருந்தினாலும் “மாமா தான் இருக்கிறாரே….” என்று நினைத்து ஒரு தோள் குலுக்கலோடு தன் வழி பார்த்து சென்று விடுவான்.
அப்படி இருக்கும் போது தானே வலிய “உன் வீட்டுக்கு போ….” என்பது மனதை நெருட.
போகும் எண்ணத்தை கைய் விட்டவனாய்….அவர் எதிர் இருக்கையில் அமர. இவ்வளவு நேரமும் அமைதி காத்த சுடர் அவர்களின் பேச்சுக்கு இடையூறு இல்லாது அந்த இடத்தை விட்டு அகல பார்க்க.
“இப்போ எங்க போற….?” என்ற கேள்விக்கு.
இது என்ன பேச்சு என்ற வகையாக அவனை ஒரு பார்வை பார்த்தாலும் தன் மாமனார் பொருட்டு அமைதியாகவே….”நீங்க ஏதோ பேச போறிங்கலேன்னு தான்.” என்று இழித்து நிறுத்தியவளை இப்போது ரசனையுடன் பார்த்தான் சூர்யா.
அட இது கூட நல்லா இருக்கே….இது வரை ஆசையாக பார்வை என்ன….? இது போல் கேட்டதுக்கு கூட ஒழுங்காக பதில் சொல்ல மாட்டாள் சுடர்.
எது கேட்டாலும் ஏட்டிக்கி போட்டி என்பது போல் தான் இருக்கும் அவள் பேச்சு. இல்லை ஏதும் பேசாது அமைதியாக சென்று விடுவாள்.
பேச்சு என்ன பேச்சு. பார்வையால் ஒருவரை அலட்சியம் செய்ய முடியுமா….?முடியும் என்று நிறுபித்தவள் சுடர். எப்போதும் சூர்யாவை நீ என்ன ஆளுடா என்பது போல் தான் இருக்கும் அவளின் பார்வை.
அவள் தன்னை ஆசையாக பார்க்க மாட்டாளா….? என்று நினைத்தாலே….. அவன் மனசாட்சி முதலில் உன் ஆள ஒழுங்கா பேசட்டும். அப்புறம் ஆசையா பாக்குறதை பத்தி யோசிப்ப. அவன் மனதே அவனை கொட்ட.
இவளின் இந்த தன்மையான பதிலில் அட இது கூட நல்லா இருக்கே இதுவே கன்டினியூ செய்ய என்ன செய்ய வேண்டும் என்ற நினைவில் சிந்திக்க ஆராம்பித்தவனுக்கு கிடைத்த பதில் இங்கேயே இருப்பது.
தன் தனிமைக்கு….? தனிமை விரும்பியான அவன் மனது எடுத்து கொடுக்க. எப்போ சுடர் கழுத்தில் தாலி கட்டினேனோ அப்புறம் என்ன தனிமை. அது தான் குடும்பஸ்தன் ஆயிட்டேன்லே...அவனுக்கு அவனே யோசனை செய்தாலும் அவன் பார்வை முழுவதும் சுடரிடமே நிலைத்திருந்தது.
சுடர் என்ன என்பது போல் புருவம் உயர்த்தி கேட்கவும் தான் சூர்யா இந்த உலகுக்கே வந்தான். பின் தான் தந்தையின் நினைவு வந்து அவரை பார்க்க. அவரோ இவனுக்கு மேல் இவ்வுலகில் நான் இல்லை என்ற வகையாக எங்கோ பார்வை நிலைத்திருப்பவரை பார்த்தவனுக்கு.
இது வேலையாள் வந்த கலைப்பு இல்லையோ…?என்று முதன் முறையாக ஒழுங்காக சிந்தித்தவன். தான் அமர்ந்து இருந்த இருக்கையை விட்டு தன் தந்தை பக்கத்தில் அமர்ந்து.
தான் அமர்ந்து இருந்த இருக்கையை காட்டி….சுடரிடம்.”உட்கார் சுடர் நீயும் இந்த குடும்பத்தில் ஒருத்தி தான்.” என்று சொல்லியவன்.
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
விஜி டியர்
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top