• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Palagi Parkkalam - Chapter 28 Part 1 - Final chapter

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Vijiya lakshmi jagan

மண்டலாதிபதி
Joined
Jan 17, 2018
Messages
193
Reaction score
4,743
Hi friends,

Pona epsiode ku comments potavangaluku romba thanks. Last chapter idhu dhan...

என்னடா இப்படி சட்டென்று முடித்து விட்டாளே என்று இருக்கிறதா….?இதற்க்கு மேல் வளர்த்தால் இழுப்பது போல் இருந்து விடும்ம் என்பதால் முடித்து விட்டேன். கதை முடிவடைந்த நிலையில் கருத்து தெரிவிக்காதவர்களும் கருத்து தெரிவிதால் மகிழ்ச்சி. உங்கள் கருத்துக்களுக்காக காத்திருக்கிறேன். நன்றிகள். அடுத்த கதையான வெற்றியா…..?தோல்வியா….?நாளையில் இருந்து. எழுத்து பிழை இருந்தால் மன்னிக்கவும்.

அத்தியாயம்----28​
தான் குளித்து முடித்து வரும் வரை விக்ரம், சூர்ய கலா விடைப்பெற்று போகும் போது எந்த இடத்தில் நின்றுக் கொண்டு இருந்தாளோ….அந்த இடத்திலேயே நின்றுக் கொண்டு இருந்த சுடரை ஓரே விழிப்பார்வை பார்த்துக் கொண்டே….தண்ணீர் சொட்டிக் கொண்டு இருந்த தலையை டர்க்கி டவலால் துடைத்துக் கொண்டு பார்த்திருக்க.
சுடரும் அப்போது சூர்யாவை தான் பார்த்துக் கொண்டு இருந்தாள்.பார்வை தான் சூர்யாவின் மேல் இருந்ததே ஒழியே நினைவு வேறு எங்கோ இருக்க அவன் மேல் வைத்த கண் அகற்றாமல் இருந்தவளின் அருகில் சென்றவன்.
தன் முடி மீது மிச்சம் இருந்த தண்ணீரை தலையை குலுக்கி அவள் மீது தெளித்ததும் தான் சுடரின் நினைவே இவ்வுலகுக்கு வந்தது.
தன் எதிரில் வெறும் டவலோடு வெற்று மார்பில் இருந்தவை பார்த்து…..அய்யோ சீ என்று முகத்தை சுளித்தவள்.
“என்ன இது கோலம்…..?” என்பது போல் அவளின் கை அவனின் மேலில் இருந்து கீழே காட்டி கேட்டதும்.
“ஓ….” என்று இழுத்தவன்.பின் “நமக்கு இன்னிக்கி பஸ்ட் நைட்டுல அதுக்கு காஸ்ட்டியூம்.” என்று சொல்லிக் கொண்டே கண்ணை சுழல விட்டவன்.
ஒரு டீபாயின் மீது இருந்த பட்டு வேஸ்ட்டி சட்டையை எடுத்துக் கொண்டு….”நான் இதை போட்டுக்குறேன்.” என்று சொல்லியதோடு மட்டும் அல்லாமல் தன் ட்ரஸ் வைத்திருந்த அருகில் இருந்த பட்டு புடவையைய் காமித்து….”நீயும் குளிச்சிட்டு அத போட்டுக்க.மாமன் அதுக்குள்ள இத டெக்ரேஷன் செஞ்சிடுறேன்.” என்று கட்டிலை காட்டி சொல்ல.
விக்ரமின் பேச்சிலேயே உழண்டுக் கொண்டு இருந்த மனதை சூர்யாவின் இந்த பேச்சு வெறிக் கொள்ள செய்ய…” அது ஒன்னு தான் குறச்சல்…” என்றதோடு மட்டும் அல்லாமல் தன் முகவாயைய் தன் தோள் மீது இடித்து விட்டு நகர பார்த்தவளை தன் கை கொண்டு தடுத்து….”ஏய்..ஏய் இன்னொரு வாட்டி அது மாதிரி செய்யேன்…..” என்று கேட்டவனை புரியாது.
“எது மாதிரி…..?” என்று கேட்டதும்.
அவள் செய்தது போல் செய்து காட்டியனின் செயல் பார்த்து சுடர் வாய் மூடி சிரித்தவளுக்கு கண்ணில் என்ன கட்டு படுத்தியும் கண்ணீர் தன்னால் வழிந்தோட.
“ஏய் இப்போ எதுக்கு அழற...நான் செஞ்சது அவ்வளவு கொடுறமாவா இருக்கு…..?” என்று கேட்டவனின் பேச்சை கேட்டவளுக்கு என்ன தோன்றியதோ…. தன் கையால் அவனின் நெஞ்சில் அடிக்க.
அந்த கை தன் நெஞ்சை விட்டு அகலாது தன் கைய் கொண்டு அதே இடத்தில் அழுத்தி பிடிக்க.
இது வரை இருந்த இலகு தன்மை இழந்தவளாய்… கையை அவன் பிடியில் இருந்து இழுத்தும் வராது இருக்கவே அவனை நேர்க் கொண்டு பார்க்க.
அதற்க்காகவே காத்துக் கொண்டு இருந்தது போல் சூர்ய பிரகாஷ் அவள் கண்ணை அங்கும் இங்கும் அசைக்க விடாது தன் கண்ணை மட்டுமே பார்க்கும் படி செய்ததோடு மட்டும் அல்லாமல்….
“ சுடர் இப்போ என்னை பாக்க பிடிக்குதா….?பிடிக்கலையா…..?” என்று கேட்டவனிடம் இருந்து கையைய் உருவிக் கொண்டவள்.
“ இந்த மெஸ்மரிசம் செய்யலாமுன்னு கனவுல கூட நினைக்காதிங்க.” என்று சொன்னவள்.
பின்… “ஏன்னா உங்களுக்கு வரல. பாக்கவே கண்றாவியா இருக்கு.” என்று சொன்னதோடு குளியல் அறைக்குள் நுழைந்துக் கொள்ள.
“சே….வெளியில் பாக்குறவன் எல்லாம் என்னை கண்டு அலருவான். ஆனா வீட்டுல ஒரே வார்த்தையில என்னை காமடி பீஸா ஆக்கிடறாளே…..” என்று சொன்னவன்.
அங்கு இருந்த பட்டு வேஷ்டியை ஏக்கமாக ஒரு பார்வை பார்த்தவன். எப்போதும் உடுத்தும் இரவு உடையை எடுத்து உடுத்தியவன்.
விக்ரமுக்கு அழைப்பு விடுக்க. மூன்று முறை அழைப்பு விடுத்தும் எடுக்காமல் இருக்க “சே….” என்று சொல்லியவனாய் செல்லை கட்டிலில் போட்டவனை பார்த்துக் கொண்டே வந்த சுடர்.
“யாருக்கு போன் போட்டிங்க…..” சுடரின் இந்த சாதரணமான பேச்சில் மனதில் எழுந்த சலிப்பு பறந்தோட.
“விக்ரமுக்கு தான். எடுக்கவே மாட்டேங்குறான்.” என்று சொல்லிக் கொண்டே “இரு திரும்பவும் கூப்பிடுறேன் எடுத்தா நீயும் கலா கிட்ட பேசுவ….” என்று சொல்லிக் கொண்டே போனை எடுத்தவனிடம் இருந்து அதை தட்டி பறித்தவள்.
“கொஞ்சமாவது அறிவு இருக்கா….?”
“என்னது அறிவா...எனக்கா இருக்கான்னு கேட்ட…..? அதுவும் சொந்தமா தொழில் நடத்தறவனை பார்த்து…..? சொல்லி சொல்லி ஆத்து போனவனிடம்.
“ஆமா உங்களுக்கு தான் அறிவு இருக்கான்னு கேட்டேன்.” ஏதோ தெரியாம சொல்லி இருப்பா இப்போ திருத்திப்பா என்ற ரீதியில் இருந்தவனிடம். திரும்பவும் அழுத்தம் திருத்தமாக சொல்லியவள்.
“டைம் பாருங்க. பத்துக்கு மேல ஆகுது. இன்னிக்கி தான் கல்யாணம் ஆனவங்கல இந்த டைமுல டிஸ்ட்டப் பண்ரோமேன்னு கொஞ்சம் கூட விவஸ்த்த இல்ல. இதுல தொழில் செய்யிறவன் என்னை பார்த்து அறிவு இருக்கான்னு கேட்குறியேன்னு பேச்சை பாரு பேச்சை.” திரும்பவும் முதலில் செய்தது போல முகவாயை தோளில் இடித்துக் கொண்டவளின் செயலில் ரசனை மிஞ்ச.
ஆனாது ஆகட்டும் என்று நினைத்தவனாய் எழுந்து பின்னால் இருந்து அணைத்துக் கொண்டவன். அப்போது தான் குளித்து விட்டு வந்தவளின் பின் கழுத்து பகுதியில் தன் முகத்தை பதித்த வாறே ஆழ மூச்செடுத்து விட.
அவனின் வெப்பமான காற்று மோதியதில் அந்த இடத்தில் உள்ள முடி சிலிர்த்தெழ.
“என்…. ன செய்யிறிங்க…..” இது வரை பேசிய வீராப்பு பேச்சு பறந்தோடி அந்த பேச்சு கிசு கிசு பேச்சாக மாறியதில் இன்னும் குஷியான சூர்யா. அந்த இடத்தில் இன்னும் ஆழமாக தன் முகத்தை புதைத்தவனாய்…..”நீ தானேம்மா சொன்ன….”
“என்ன சொ….ன்னேன்….?”
“அது தான் இன்னிக்கி கல்யாணம் ஆனவங்க என்ன செய்வாங்கன்னு. அது தான் செஞ்சிட்டு இருக்கேன்.” என்று சொல்லிக் கொண்டே இன்னும் ஆழமாக புதைய பார்த்தவனிடம் இருந்து தன்னை வெடுக்கென விடிவித்துக் கொள்ள.
குழந்தை ரசித்து ருசித்து உண்டுக் கொண்டு இருந்த ஐஸ்கிரீமை பிடுங்கினால் குழந்தையின் முகம் எவ்வாறு மாறுமோ அந்த நிலையில் முகத்தை வைத்துக் கொண்டு இருப்பவனை பார்த்து சுடருக்கே ஒரு மாதிரியாக தான் இருந்தது.
ஆனாலும் அவள் மனம் அவனை முழுமையாக ஏற்க மனம் வரவில்லை. விக்ரமின் பேச்சால் அவர்கள் மீது இருந்த கோபம் குறைந்ததே ஒழியே முற்றிலும் தீரவில்லை.
அஸ்வின் செயலுக்குஇவர்களுக்கு சம்மந்தம் இல்லை தான். தன் அண்ணன் இறப்பு ஒரு விபத்து . அஸ்வினும் அதை வேண்டும் என்று செய்யவில்லை. குடியின் தாக்கத்தில் தான் அந்த விபத்து நடந்தது.
ஆனால் இவர்கள் செய்தது…..? தன் அண்ணனின் இறப்புக்கு நீதி கிடைக்காமல் செய்ய பார்த்தார்கலே…..அதை எப்படி ஏற்றுக் கொள்வாள்.
அஸ்வினின் அந்த செயலுக்கு பெற்றோர்கள் தானே பொறுப்பு ஏற்க வேண்டும்.அவர்களின் தவறான வளர்ப்பால் அல்லவா அவன் அப்படி குடித்து விட்டு கார் ஓட்டியது.
அதனால் தானே அந்த விபத்தே….தன் அண்ணனின் உயிர் இழப்பு….இப்படி அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக அவள் மனதில் வலம் வர.
அவளின் முகத்தை பார்த்தே அவளின் எண்ணம் ஓட்டத்தை படித்த சூர்யா. இன்னிக்கி உனக்கு இல்ல உனக்கு இல்ல. என்று அவன் மனதில் அவன் திரும்ப திரும்ப அதையே பதிவு ஏற்றி விட்டு.
தன் ஒட்டு மொத்த உணர்ச்சியையும் அடக்கியவனாய்…. “சுடர் உன் விருப்பம் இல்லாம எதுவும் நடக்காது.” என்று சொல்லிக் கொண்டு வந்தவனின் பேச்சை இடையிட்டு ஏதோ சொல்ல வந்தவளின் பேச்சை தடுத்தவனாய்.
“நம்ம கல்யாணம் அதை விடு. அஸ்வினின் பிரச்சனையால் தான் என்னை பிடிக்காம போச்சு. இதே சாதரணமா உன் வீட்டுக்கு வந்து பெண் கேட்டு இருந்தா….பார்த்த உடன் என்னை பிடித்து இருக்கும்.” என்று தன்னம்பிக்கையுடன் சொன்னவனை பார்த்து உதடு சுழித்து.
“ஓ அவ்வளவு கான்புடன்ஸா…..?” என்று அவளின் கேள்விக்கு பதில் சொல்லாது சுழிக்கும் அவளின் உதட்டையே பார்த்தவனின் பார்வை பார்த்தவள்.
“இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்ன தான் எனக்கு பிடிக்காதது எதுவும் நடக்காதுன்னு சொன்னிங்க…..?” என்ற சுடரின் கேள்விக்கு ..
“ஆமா இப்போவும் அதே தான் சொல்றேன் உனக்கு பிடிக்காதது எதுவும் நடக்காது. “ என்று சொன்னவன்.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top