• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Palagi Parkkalam - Chapter 28 Part 3

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Vijiya lakshmi jagan

மண்டலாதிபதி
Joined
Jan 17, 2018
Messages
193
Reaction score
4,743
Chapter 28 continuation

“அப்போ உனக்கு எது தான்டா மேட்டரு….இரு இரு சுடரு கிட்ட சொல்றேன்.” என்று சொன்னதோடு மட்டும் அல்லாமல் அவள் இருந்த பக்கம் நகர பார்த்தவனின் சட்டையின் பின் பக்க காலரை பிடித்து இழுத்துக் கொண்டு மறைவான இடத்துக்கு தள்ளி சென்றவனிடம் இருந்து தன் சட்டையைய் பிரித்து எடுத்தவன்.
“அப்போ உனக்கு இது தான் மேட்டரா…..?” தன்னை தனியாக தள்ளிக் கொண்டு வந்ததை சுட்டி காட்டியவன்.
“அட்டப்பாவி உன்னை பத்தி தெரியாம உன் கிட்ட இத்தன வருஷமா நட்பு வெச்சிட்டு இருந்தேனடா….தோ பாருடா நான் என் பொண்டாட்டிக்கு துரோகம் செய்ய மாட்டேன்.” என்று உலறியவனை கொலை வெறியோடு பார்க்க.
“சரி சகல என்ன அப்படி பாக்காதே எனக்கு என்ன என்னவோ பண்ணுது.” அப்போதும் விடாது சூர்யாவை வம்பு இழுத்துக் கொண்டு இருந்தான் விக்ரம்.
“விக்ரம் விளையாட்ட விடு நான் வெண்ணிலா பத்தி உன் கிட்ட கொஞ்சம் பேசனும்….” என்று சூர்யா சொன்னதும். அடுத்த நொடியே தன் முகபாவத்தை மாற்றிக் கொண்டவனாய்…. “என்ன சூர்யா ஏதாவது பிரச்சனையா…..?” அவனின் பதட்டமுகத்தை பார்த்ததும்.
“ பயப்படதடா வெண்ணிலா பத்தி பேசனுமுன்னா அவளுக்கு ஏதாவது பிரச்சனையா தான் இருக்கனுமா என்ன….?சந்தோஷமான விஷயமா கூட இருக்கலாமுலா….?’ என்று கேட்டதும்.
மகிழ்ச்சியுடன்…. “ஏதாவது நல்ல இடம் வந்து இருக்கா…..?” ஆவாளுடன் கேட்டான்.
சுடர், கலா இருவருக்கும் இருக்கும் கவலை இது தான். மூன்று பேரும் ஒன்னா பிறந்தோம் எங்க இரண்டு பேருக்கு மட்டும் கல்யாணம் ஆகி அவ தனியா இருக்கிறது எங்களுக்கு குற்றவுணர்ச்சியா இருக்கு என்று சகோதரிகள் இருவரும் தத்தம் கணவன்மார்களிடம் சொல்லாத நாள் இல்லை என்று கூட சொல்லலாம்.
ஆனால் அந்த கவலையே இல்லாதது போல் வெண்ணிலா இருந்தால் இவர்கள் என்ன முயற்ச்சி செய்தாலும் அதற்க்கும் பலன் எங்கு இருந்து வரும்.
அண்ணனின் லட்சியத்தை நிறைவேற்றுகிறேன் என்று அமெரிக்காவில் M.S முடித்ததும் அங்கேயே ஒரு நல்ல வேலை கிடைத்து விட.
தொடர்ந்து அண்ணன் செய்ய நினைத்ததை நான் செய்கிறேன் என்று ஆறுமாதம் தந்த பெற்றோரை அழைத்துக் கொண்டு போனவள் இதோ குழந்தையில் பிறந்த நாள் தொட்டு அவள் பெற்றோரை அழைத்துக் கொண்டு வந்து இருக்கிறாள்.
“உன் வாழ்க்கை பத்தி நீ என்ன தான் முடிவு எடுத்து இருக்கே…..”இரு மாமான்களும் கேட்டதுக்கு….
“கல்யாணம் மட்டும் தான் வாழ்கையான்னு….? தங்களையே திருப்பி கேட்டால் அவர்களும் என்ன தான் செய்வார்கள்.
இதோ இப்போது கூட தன் கூட படித்த அசோக் வெண்ணிலாவை பார்த்து விட்டு தன்னிடம் வந்து….”என்னடா நாம கல்யாணம் செய்துட்டு ஒன்னுக்கு இரண்டா பிள்ளைய பெத்துக்கிட்டோமே...நம்ம கூட படிச்சவன் ஒன்டியா...அதுவும் வெளிநாட்டில் கஷ்டப்படுறானே ஏதாவது நல்லது செய்யலாமுன்னு உனக்கு இருக்கா…..?”
தன் மனைவியை எப்படி சமாதானம் படுத்துவது என்று நாக்கு தள்ளிக் கொண்டு நான் இருந்தா இவன் என்ன லூசு மாதிரி பேசறான்னேன்னு நிமிர்ந்து பார்த்தா….பேச்சு மட்டும் தான் தன்னிடம் பார்வை மொத்தமும் வெண்ணிலாவிடமே இருக்க.
“டேய்…..” என்று அழைத்தைவனை பார்க்காது இருக்க.
“மச்சான் அவ என் மச்சினிச்சி….”என்றவுடம் சூர்யாவை பார்த்த அசோக்…”அப்போ என்ன சகலன்னு கூப்பிடுடா…..” என்று சொன்னவனை நினைத்து வரலாறு திரும்புகிறதோ என்று நினைத்தவன்.
“நான் பேசி பாக்குறேன்….” என்றவனிடம்.
“பேசி பாக்குறேன்ல பேசி முடிக்கிறேன்னு சொல்லு….”சூர்யாவிடம் பேச்சு வார்த்தை முடிந்தது என்பது போல் வெண்ணிலாவை பார்வையிட . அதை பற்றி பேச தான் விக்ரமை தனியே தள்ளிக் கொண்டு வந்தது.
அசோக் விரும்புவதை பற்றி சூர்யா சொன்னதும். விக்ரமும்…”ஏய் நல்ல இடம் தானே...அவன் கூட அமெரிக்காவில் தானே இருக்கான். அப்புறம் என்னடா ஜாமிச்சிடலாம்.” என்று விக்ரம் குஷியாக.
சூர்யாவோ யோசனையிலேயே தான் இருந்தான்.அவன் மனதில் வெண்ணிலா அவ்வளவு சீக்கிரம் இந்த திருமணத்துக்கு சம்மதித்து விடுவாள் என்ற நம்பிக்கை அவனுக்கு இல்லை.
அவன் நினைத்தது போல் தான் ஆனாது.
“வேண்டாம் மாமா எனக்கு கல்யாணத்தில் விருப்பம் இல்லை. கடைசி வரை என் அம்மா அப்பாவை நான் பார்த்துக்கனும்.” என்றதும்.
சகோதரிகள் இருவரும்….” ஏன்….?நீ இப்படியே இருந்து எங்களுக்கு குற்றவுணர்ச்சி ஏற்படுத்தவா….?’ என்று கேட்டும் அவள் அசைந்துக் கொடுக்க காணும்.
முடிவில் அசோக்கே…..”விடு சகல.” என்றதும்.
“என்னடா இவன் லவ்வு அவ்வளவு தானோ…..?” என்று நினைக்கும் போதே….
“அவ எங்குடா போயிட போறா நான் வேலை பாக்குற கம்பெனி இன்னொரு பிரான்சில தான் அவ வேல பாக்குறா….” என்று சொல்லி விட்டு தன் கையை இருப்பக்கமும் ஆட்டி….”பழகி பார்க்கலாம்.” என்றதும்.
சுடர் கொலை வெறியோடு….”இதெல்லாம் வெளியில் சொல்லி திரிஞ்சிட்டு இருந்திங்களா…..?” என்று சொல்லிக் கொண்டே அவனி அடிக்க ஓட.
ரேவதியின்….”என்ன சுடர் சின்ன பிள்ள மாதிரி ஓடி பிடிச்சிட்டு விளையாடிட்டு இருக்கிங்க…..” அவர் அதட்டுவதற்க்கும் சுடரின் அடிவயிற்றில் சுலீர் என்று ஒரு வலி வந்து போகவும் சரியாக இருந்தது.
அவளின் முகத்தை பார்த்ததுமே புரிந்துக் கொண்ட சந்திரா….அவளை தாங்கிக் கொண்டு கவலை படாதே….”உனக்கு தில்லை வந்து பிறப்பான்.” என்று கூறி சூர்யாவிடம் வண்டி எடுக்க சொல்ல.
அந்த வலியிலும் ஆமா இதுவும் இவங்க கிட்ட கொடுத்துடுவேன்னு நினச்சிக்கிடாங்கலா….? என்று சிலுப்பிக் கொண்டு தான் மருத்துவமனைக்கே சென்றாள். பார்க்கலாம் தில்லை பிறப்பானா…..? இல்லை அவருக்கு துணையான பார்வதி பிறப்பாளா….? என்று….
நிறைவுற்றது.​
 




Sairam

மண்டலாதிபதி
Joined
Feb 17, 2018
Messages
327
Reaction score
392
Location
Tamilnadu
கதை நிறைவுக்கு வாழ்த்துக்கள்.:love::love::love:
 




Thara

மண்டலாதிபதி
Joined
Jan 21, 2018
Messages
461
Reaction score
600
Location
Chennai
மிகவும் அருமையான பதிவு.இன்னொரு பதிவு போட்டு இருக்கலாம்.
அருமையான கதை
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top