• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Palagi Parkkalam - Chapter 6

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Vijiya lakshmi jagan

மண்டலாதிபதி
Joined
Jan 17, 2018
Messages
193
Reaction score
4,743
Hi friends

6th chapter is posted here. padihcitu unga comments sollunga.

அத்தியாயம்---6
குடி நீர் போரில் ஒரு பெண் குடிப்பதற்க்காக தண்ணியை குழாயில் அடித்துக் கொண்டு இருக்க. அதன் பக்கத்திலேயே மூன்று வயதான தன் மகனுக்கு குலுப்பாட்டிக் கொண்டு இருக்க. அந்த தண்ணி சாரலாய் குடி நீர் குடத்தில் தெளிப்பதை பார்த்த அந்த பெண்.
“யக்கா பையனை அந்தாண்ட இட்டுக்கின்னு போய் தான் ஊத்தேன்.” என்று சொன்னது தான்.
“ஏ...எமவன அங்கு இட்டுக்கினு போனோ….நீ போயே…….” தன் காரை அந்த தெருவில் நுழைய முடியாது இந்த தெரு முனையிலேயே நிற்க வைத்து விட்டு நடந்து வந்துக் கொண்டு இருந்த விக்ரம் அந்த சண்டையைய் வேடிக்கை பார்த்துக் கொண்டே வந்ததை பார்த்த இன்னொரு பெண்.
“அய்யே இங்க என்ன அவுத்து போட்டா ஆடிட்டு இருக்காங்க. அப்படியே வாயபொளந்து பாத்துக்குனு கீர….”என்று அந்த பெண் பேசிய பேச்சுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாது முதன் முதலாக முழித்துக் கொண்டு நின்றுருந்தான் அந்த புகழ் பெற்ற வக்கீல்.
“ஏ கசுமாலம் யாராண்ட என்ன பேசுதுன்னு தெரியாது.” என்று வசைபாடிய டேவிட்.
விக்ரமை பார்த்து….”என்ன சார் நீங்க எல்லாம் இங்க வந்துன்னு...ஒரு போன் போட்டா உங்க இடத்துக்கு நான் ஓடியாரப் போறேன்.” என்று சொன்னவனுக்கு பதில் பேச்சு பேசாது.
கண் அசைவில் பின் தொடரும் மாறு சொல்லி விட்டு தன் காரில் ஓட்டுனர் இருக்கையில் வந்து அமர.
விக்ரமை பின் தொடர்ந்து வந்த டேவிட்டும் அவன் பக்கத்தில் அமர்ந்து கொண்டு…..”என்ன சார் நீங்கலே வந்து இருக்கிங்க. முக்கியமான விஷயமா சார்.” என்ற அவன் கேள்விக்கு பதில் அளிக்காது.
“மத்த பசங்க எல்லாம் எங்கே….?போன் போட்டா எல்லோருடையதும் சுச் ஆப் என்று வருது” என்ற கேள்விக்கு.
“ஒரு ஜோலியா பாண்டிச்சேரி வரையும் போய் இருக்காங்க சார்.” என்ற பதிலில் கிண்டலாக சிரித்தவன்.
“சரி சரி அவங்க அந்த ஜோலிய பார்த்துட்டு பொறுமையாவே வரட்டும்.” என்று சொல்லிக் கொண்டே…
ஒரு முகவரியைய் எடுத்துக் கொடுத்த விக்ரம்…”இந்த வீட்டில் இருப்பவங்களை மிரட்டிட்டு வரனும். நல்லா கேட்டுக்க மிரட்டினால் மட்டும் போதும்.” என்றவனிடம்.
“என்ன சொல்லி மிரட்டுனும் சார்.”
“பைய்ய போயிட்டா…. இருக்கவங்க பத்துரமா இருக்க வேண்டாமான்னு. “
“அது மட்டும் சொன்னா போதுமா சார்.”
“போதும்...போதும்….” என்று சொல்லியும் தலை சொறிந்து நின்றுக் கொண்டவனிடம் இரண்டு கத்தை நோட்டை நீட்டியவன்.
ஏதோ சொல்ல வந்து…. “ ரொம்ப பேர கூட்டிக்காத . முடிச்சிட்டு அந்த நம்பருக்கு போன் பண்ணு.” என்றதை கேட்டு காரை விட்டு இறங்கிய டேவிட்.
“நீங்க போங்க சார் அது காரியம் எல்லாம் பக்காவா முடிஞ்சுடும்.” என்று டேவிட் கூறியதை கேட்டுக் கொண்டே காரை விரட்டிய விக்ரமுக்கு மனம் ஏதோ ..ஏதோ...தவறாய் நடந்து விடுமோ…மனது பட படத்தது.
“அம்மா கார் புக் பண்ணிட்டேம்மா…..வாங்க.” என்ற சூர்ய கலா கைய் தாங்களாக தன் அன்னையைய் ஹாலுக்கு அழைத்து வரவும் வீட்டின் அழைப்பு மணி கேட்கவும் சரியாக இருந்தது.
“கார் காரானாய் இருக்குமோ…..?” என்ற அன்னையின் கேள்விக்கு…
“அவங்க போன் தானே செய்வாங்க….” என்று சொல்லிக் கொண்டே வீட்டின் கதவை திறந்த சூர்ய கலா என்ன ஏது என்று உணரும் முன்னவே நான்கு பேர் உள் நுழைய தன்னால் இரண்டடி எடுத்து வைத்து சூர்ய கலா தன் வீட்டுக்குள் நுழைந்தது டேவிட்டுக்கும் அவன் அழைத்துக் கொண்டு வந்த மற்றவர்களுக்கும் வசதியாகி விட.
வீட்டில் நுழைந்து கதவை அடைத்ததும் பயத்தில் வசந்தி எழுந்து…”என்னப்பா யாரு என்ன பண்றிங்க.” வயது பெண் இருக்கும் போது பார்க்கவே ரவுடி என்று முத்திரை குத்தாத குறையாக தோற்றத்தில் இருப்பவர்களை பார்த்த வசந்தி பயந்து போய் உடல் முடியாத நிலையிலும் எழுந்து நின்று பேசுபவரிடம்.
டேவிட் கூட வந்த ஒரு ஆள்… “தோ பாரும்மா நாங்க ஒன்னும் பண்ண மாட்டோம். “ என்று சொன்னவன்.
பின்…”ஆ நாங்க சொல்றதை கேட்டாக்கா….” என்று சொன்னதிலேயே அண்ணாவின் மரணத்துக்கு காரணமாய் இருந்தவன் தான் இவர்களை அனுப்பி இருக்கிறான் என்பதை புரிந்துக் கொண்ட சூர்ய கலா.
“ அதெல்லாம் ஜட்ஜ் சொல்லுவாரு...நீங்க முதல்ல வெளியே போறிங்களா….?” இளம் ரத்தம் பயம் அறியாது என்பது போல் வாசல் கதவை கைய் காட்டி சொல்பவளை அப்போது தான் உற்று பார்த்த டேவிட்.
தன்னால் விசில் வர….சூர்ய கலாவின் கன்னத்தை தட்டி…. “அட குட்டி சொக்கா கீது.” அவனின் கன்ன தட்டலிலும் அவன் கண் தன் மேல் கண்ட மேனி ஊடுருவதிலும் இது வரை இல்லாத பயம் வர.
அச்சத்துடம் தன் அன்னையைய் பார்க்க. வசந்தி நிலமையின் தீவிரம் உணர்ந்து…”சரிப்பா நீங்க சொன்னதை கேட்குறோம் நீங்க போங்கப்பா….” இப்போதைக்கு அவர்கள் சென்றால் போதும் என்று எண்ணத்தில் சொல்ல.
டேவிட் அழைத்து வந்த ஆட்களில் ஒருவனான வேலன் …வேலை சுளுவா முடிந்த சந்தோஷத்தில்….டேவிட்டிடம்…”என்ன அண்ணாத்தே அது தான் அந்த அம்மா சொல்லுதே….” என்று சொன்னதுக்கு பதில் இல்லாது போக.
“என்ன அண்ணாத்தே ஏதாவது கைய் பட எழுதி வாங்க சொன்னாரா….சாரு….?” என்று கேட்டதுக்கும் பதில் இல்லாது போக தான் டேவிட்டை பார்த்து.
“என்ன அண்….” வார்த்தை முடிக்கும் முன் டேவிட்டின் கண் சூர்ய கலாவின் மேனியில் காமத்துடன் விழுவதை பார்த்து.
“அண்ணாத்தே வேண்டாம் இது தப்பு நம்ம வக்கீல் அய்யாவுக்கு தெரிஞ்சது அவ்வளவு தான்.” என்று சொல்பனின் பேச்சு ஒன்று கூட காதில் வாங்காது.
“அதெல்லாம் நான் பாத்துக்குறேன்.” என்று தன் அடியாளிடம் பேசும் போதே….வசந்தி சூர்ய கலாவின் கைய் பற்றி இழுத்துக் கொண்டு படுக்கை அறையில் கதவடைக்க முயல.
அதை சடுதியில் புரிந்துக் கொண்ட டேவிட் அந்த அறையில் வசந்தியைய் மட்டும் பிடித்து தள்ளியவன் மற்றொரு அறையில் சூர்ய கலாவை இழுத்துக் கொண்டு கதவை சாத்தியதும்.
வேலன் கதவை தட்டி…”அண்ணாத்த வேண்டாம் வேண்டாம்.” என்று கத்த.
“சே சும்மா இரு ஒரு பத்து நிமிஷம் வேலைய முடிச்சிட்டு வந்துடுறேன்.” என்பவனை இனி மேல் தடுக்க முடியாது என்று நினைத்து விக்ரமுக்கு அழைப்பு விடுக்க.
சுடர் வீட்டுக்கு வந்துக் கொண்டு இருந்த விக்ரம் போன் அழைப்பு எடுக்காது தன் வண்டியைய் வேக படுத்த.
தொடர்ந்து போன் அழைப்பு எரிச்சல் மூட்டியதில் அதை ஏற்றவனிடம் அந்த பக்கம் அழைப்பில் இருந்த வேலன்.
“சார் சார் டேவிட் “ டேவிட் என்ற வார்த்தையில் தன்னால் கால் ப்ரேக்கில் வைத்தது.
“டேவிட்டுக்கு என்ன…..?”
“சார் டேவிட் அந்த பொண்ண ரூமுக்குள்ள….” அதற்க்கும் மேல் கேட்காது அழைப்பை துண்டித்தவனுக்கு தானும் சூர்யாவும் நினைத்தது போல்…
அதற்க்கு மேல் யோசிக்காது சுடர் வீட்டின் அடுத்த தெருவில் இருந்த விக்ரம் சிறிது நேரத்திலேயே வீட்டின் முன் காரை நிறுத்தியவன் புயல் வேகத்தில் உள் நுழைந்தான்.
அவனை பார்த்த வேலனின் கைய் தன்னால் டேவிட் கதவை அடைத்த அறையைய் நோக்கி காட்ட. பழைய வீடான அந்த வீட்டின் கதவு விக்ரமின் இரண்டாம் உதையிலேயே விரிய திறந்தது. அங்கு கண்ட காட்சியில் உரைந்து போய் நின்றது ஒரு நிமிடம் தான்.
சூர்ய கலாவின் அங்கம் சிறிது கூட தெரியாது தன் ஆஜான் பாகுவான உடலைக் கொண்டு கவிழ்ந்திருந்தவனை ஒரு உதையில் தள்ளியதும் படுக்கையில் இருந்து விரைந்து எழுந்த சூர்ய கலா அந்த பக்கம் விழுந்து கிடந்த டேவிட் எழுவதை பார்த்து பயந்து போய் விக்ரமின் முதுகு பின் மறைந்ததோடு இன்னும் … இன்னும்…. அவன் முதுகில் ஒன்றி மறைந்தவளின் மென்மை தன் முதுகில் உரச.
தீக்குச்சி இல்லாது தீ மூட்ட முடியுமா….?முடியும் என்பது போல் விக்ரமின் உடல் முழுவதும் தகிக்க. தங்களை நோக்கி வரும் டேவிட்டை கூட கவனியாது கண் மூடி அந்த சுகத்தை அனுபவித்துக் கொண்டு இருந்தவனை.
“சார்...சார்...அவ...ன்.” என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே…..அருகில் வந்த டேவிட்.
“சார் மன்னிச்சிக்க சார். இனி ஒரு தபா இது மாதிரி செய்ய மாட்டேன்.” என்ற டேவிட்டின் மன்னிப்பு வேண்டலில்….அதிர்ச்சியில் விக்ரமின் அண்மையில் இருந்து விலகிய சூர்ய கலா இது வரை விக்ரமை தன் குல தெய்வம் போல் பார்த்திருந்திருந்தவள் அருவருக்கத்தக்க பார்வை பார்க்க.
டேவிட்டின் பேச்சில் பாதி மயக்கம் கலைந்த விக்ரம் சூர்ய கலாவின் விலகலில் மீதி மயக்கமும் கலைய….கண் திறந்து சூர்ய கலாவை பார்த்தான்.
டேவிட்டை உதைத்ததும் தன்னை கண்டவளின் பார்வைக்கும், இப்போது தன்னை பார்க்கும் பார்வைக்கும் உள்ள வித்தியாசத்தை உணர முடியாத முட்டாள் இல்லையே விக்ரம்.
அவளின் பார்வை பாதி கொன்றது என்றால்...மீதி இவள் பெயர்….சுடரோ...நண்பனின் காதலியைய் தானும் அந்த எண்ணமே என்னமோ போல் இருக்க.
பின் இது பிறகு யோசிக்க வேண்டிய விஷயம். முதலில் எதிரில் இருப்பனை பார்ப்போம் என்று டேவிட்டை ஒரு அரை விட்டவன்.
“நான் என்ன செய்ய சொன்னா நீ என்ன செய்ய பார்த்த….?நான் என்ன சொன்னேன்….? என்று ஒரு ஒரு கேள்விக்கும் அடித்து நெருக்கியவனை பார்க்க பார்க்க சூர்ய கலாவுக்கு அருவருப்பு தான் அதிகமாகியது. கூடவே பயமும் தான்.
இவன் என்ன செய்ய சொல்லி அனுப்பினான். கைய் கால் உடைக்கவா….? என்று யோசித்துக் கொண்டு இருக்கும் வேளயில் தன் அன்னை அடுத்த அறையில் அடைப்பட்டு தன் மகளின் நிலை என்னவோ என்று பதரி கதவை தட்டும் ஒலி அவள் காதில் எட்ட.
“அய்யோ அம்மா….?” என்று அலறிக் கொண்டு கதவை திறந்து விட. ஒரே நிமிடத்துக்குள் தன் மகளின் மேனி முழுவதும் தன் பார்வையைய் செலுத்திய வசந்திக்கு தன் மகளுக்கு தவறாய் ஒன்னும் நடக்கவில்லை என்றதில் நிம்மதி அடைந்தாலும் இன்னமும் வீட்டில் வெளியாட்கள் இருப்பதில் அச்சம் அடைந்தவள்.
அங்கு இருக்கும் வேலனிடம்…. “தயவு செய்து போயிடுங்கப்பா….உங்கல கைய்யெடுத்து கும்பிடுறேன்.” என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே… அங்கு சூர்ய பிரகாஷும் வந்து சேர.
சூர்ய பிரகாஷின் மதிக்க தக்க தோற்றம் அளித்த நம்பிக்கையில் அவனிடம் பேச முற்பட்ட போது. டேவிட்டை அடித்து முகம் முழுவதும் ரத்த காயத்துடன் விக்ரம் இழுத்து வரவும் சரியாக இருந்தது.
அப்போது தான் விக்ரமை பார்த்த வசந்தி பயந்து போய்….”யாருப்பா நீங்க. அய்யோ எனக்கு பயமா இருக்கே என்று தன் மகளை சேர்த்து அணைத்துக் கொண்டு …
“தயவு செய்து போயிடுங்க...இப்போ தான் ஒரு பெரிய இழப்பை பார்த்துட்டு நிக்கறேன். ப்ளீஸ் என்று கைய்யேந்தும் சமயத்தில் அன்று நடக்க இருக்கும் டெஸ்ட் ஏதோ காரணத்தால் தடை பட. சரி வீட்டுக்காவது போகலாம் என்று வீட்டுக்கு வந்த சுடருக்கு முற்றிலும் புதியவர்கள் நின்றுக் கொண்டு இருக்க அவர்களிடம் தன் அன்னை கைய்யேந்தும் காட்சியைய் பார்த்து ஸ்தம்பித்து நின்று விட்டாள்.
 




Saranya

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
1,524
Reaction score
1,341
Location
Coimbatore
Vikram vandhangatiku paravala illana suryakala oda nilamai.. Surya thannoda akka maganukaga romba over a poitu irukapdi.. Aduthu enna nadakkum nu waiting..
 




Chitra srinee

இணை அமைச்சர்
Joined
Jan 19, 2018
Messages
674
Reaction score
2,741
Location
Chennai
Viji ennama sema unexpecting twist sema wow surya sudar straight a pathukka poranga sudar reaction eppadi erukka poguthu and vikram enna sir panna poringa suryakala manasula first a bad impression hmmmmmm Surya and vikram oda next move Enna semaaaaa interest a erukku waiting viji keep rocking
 




Rani

மண்டலாதிபதி
Joined
Jan 17, 2018
Messages
234
Reaction score
661
சூர்யகலாவை ,விக்ரம் கடத்த மாட் டானா...?
போன எபியில் அப்படி படித்ததாக தான் ஞாபகம்....?
சூர்ய பிரகாஷ் ம் வந்தாச்சு....
சுடரும் வந்தாச்சு.....
சூர்யனும்,சுடரும் ஒன்றை ஒன்று தகிக்குமோ...?
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top