• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Palagi Parkkalam - Chapter 7

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Vijiya lakshmi jagan

மண்டலாதிபதி
Joined
Jan 17, 2018
Messages
193
Reaction score
4,743
Hi friends,

7th chapter enga potruken, padichitu unga comments ah sollunga.

அத்தியாயம்----7​
சுடர் ஸ்தம்பித்து நின்றது ஒரு நொடி தான். பின் விரைந்து தன் தாய் அருகில் சென்றவள். அவள் கையை கீழே இறக்கி விட்ட பின் தான் தன் சகோதரியின் முகத்தையே உற்று பார்த்தாள்.
அவள் கன்னத்தில் கன்றி போய் இருப்பதை பார்த்து பதறியவளாய்….”சூர்யா என்ன இது….?” அவள் கன்னத்தை பற்றி அந்த பக்கம் இந்த பக்கம் திருப்பி கேட்க.
அந்த சூழ்நிலையிலும் சூர்ய பிரகாஷூக்கு சுடர் தன் சகோதரியைய் அழைத்த அந்த சூர்யா என்ற அழைப்பு தித்திக்க தான் செய்தது.
“அது ...அது…..” என்று இழுத்துக் கொண்டே விக்ரமை பார்த்த சூர்ய கலா அடுத்து பேசாது பயத்துடன் விக்ரமை பார்த்து கைய் நீட்ட.
சூர்ய கலா கைய் சென்ற திசையில் பார்வையைய் செலுத்திய சுடர்…. விக்ரமை காட்டி ”இவன் உன்னை அடித்தானா…..?” என்று கேட்டாள். அப்போது கூட வேறு மாதிரியாக சுடர் நினைக்கவில்லை.
சுடர் யார்…..? என்று அறிய அவர்களின் பேச்சை கவனமாக கேட்டுக் கொண்டு இருந்த விக்ரம். அப்போது தான் சூர்ய கலாவின் கன்னம் கன்றி சிவந்திருந்ததை பார்த்து வெறிக் கொண்டவனாய்….
அர உயிராய் இருக்கும் டேவிட்டை முழு உயிரும் எடுக்கும் நோக்கத்துடன் அடித்தவன்… “யார் மேல கைய் வைக்க பார்த்து இருக்க….?” கண்கள் சிவக்க கர்ஜித்தான்.
தான் சரியான நேரத்தில் வரவில்லை என்றால்…..? அதை நினைத்து பார்க்க கூட அவனால் முடியவில்லை
டேவிட்டிடம் வேலையைய் ஒப்படைத்து விட்டு தன் ஆபிசுக்கு வந்தவனிடம் அவன் ஜீனியர் ஏதோ கேட்க.
அவன் பேச்சை கேளாது ஏதோ நினைவில் இருந்தவனை…. “சர் உடம்பு சரியில்லையா….?” என்று கேட்டதும் தான்.
“ஒன்னும் இல்ல….” என்று சொல்லி அவன் செய்ய வேண்டிய வேலை சொல்லி அவனை அனுப்பிய பிறகும்….டேவிட்டை வயது பெண்கள் இருக்கும் வீட்டுக்கு அனுப்பியது தவறோ…..?”
என்று நினைத்துக் கொண்டு இருக்கும் போதே….சூர்ய பிரகாஷிடம் இருந்து போன் அழைப்பு வர.
அதை ஏற்றதும்…. “சுடர் வீட்டுக்கு யாரை அனுப்பி இருக்க விக்ரம்.”
சாதரணமாக இருந்து இருந்தால்….”நான் தான் என் கேசில் தலையிடாதே என்றனே …..” என்று சொல்லி இருப்பானோ….?என்னவோ….?
ஏற்கனவே குழப்பத்தில் இருந்ததால்…. சூர்யாவின் பதட்டமான குரலுக்கு தன்னால் ”டேவிட்டை தான் அனுப்பினேன்.” என்றது தான்.
அந்த பக்கத்தில் இருந்த சூர்யா கன்னா…. பின்னா…. என்று திட்ட ஆராம்பித்து இருந்தான்.
“என்ன காரியம் செய்து இருக்க. அவன் மேல இரண்டு ரேப் கேசு இருக்கு. அவனை போய் அங்க…..”
சூர்ய பிரகாஷ் தன் தொழிலுக்காக பயன் படுத்தும் அடியாட்களை தான் விக்ரமும் தன் கேசுக்காக பயன் படுத்திக் கொள்வான். அதனால் டேவிட்டை பற்றி சூர்யாவுக்கும் நன்கு தெரியும்.
ஏற்கனவே சஞ்சலத்தில் இருந்த விக்ரம்….”அதன்டா நானும் யோசிச்சிட்டு இருக்கேன்.”
“என்ன யோசிச்சிட்டு இருக்க….?முதல்ல அவன் கிட்ட ஏன் இதை கொடுத்த...உனக்கு வேறு ஆளே இல்லையே….இந்த விஷயத்துக்கு கதிர் செட்டாவனே…..நீ அவனை தான் அனுப்பி இருப்பேன்னு நினச்சேன்.” என்று பட படபடப்புடன் பேசிய சூர்யாவிடம்.
“நானும் முதல்ல அவனுக்கு தான்டா போன் போட்டேன். பசங்க எல்லாம் பாண்டிசேரி ட்ரீப் போயி இருக்காங்க. அதான் டேவிட்டை அனுப்பினேன்.” என்று தன் விளக்கத்தை சொல்லிக் கொண்டு இருந்தாலும் கைய் தன்னால் டேவிட் தொலை பேசிக்கும் அழைப்பு விடுத்துக் கொண்டு தான் இருந்தான்.
ஒவ்வொறு தடவையும்….”நீங்கள் தொடர்பு கொள்ள நினைக்கும் நபர்….தொடர்பு நிலைக்கு அப்பால் உள்ளார் .” என்று மீண்டும் மீண்டும் அதுவே வர.
சூர்யாவோ…..“யாரும் இல்லேன்னா ஒரு இரண்டு நாள் பொறுத்து செய்து இருக்கலாம்லே…..?” என்று சொன்னவன்.
பின் “ இன்நேரத்துக்கு போய் இருப்பாங்களா…..?” என்ற கேள்விக்கு.
“ம்…” என்றே பதிலை பெற.
“போன் போடேண்டா….”
“போட்டுட்டு தான் இருக்கேன் சூர்யா….கிடைக்கல.”
“டேவிட்டுக்கா….எனக்கும் கிடைக்கல. நீ வேற நம்பருக்கு போடு.”
“அவன் யாரை கூட்டிட்டு போய் இருக்கான்னு தெரியலையே…..” என்று சொன்னவனிடம்.
“விக்ரம் நீ இப்போ ஆபிசில் தானே இருக்க…..? என்று கேட்டதுக்கு.
“ஆமாம்…” என்றவன்.
உடனே விக்ரம்….”சூர்யா சுடர் வீடு பக்கம் தான். நான் போறேன்.”
“நீ போ நானும் வந்துடுறேன்….” என்ற சூர்யாவின் பேச்சை கூட கேட்காது விரைந்து வந்தான்.
நான் மட்டும் நேரத்துக்கு வரவில்லை என்றால்….? விக்ரமுக்கு அந்த நினைவு வரும் போது எல்லாம் பயத்தில் உடலில் தன்னால் ஒரு நடுக்கம் உண்டானது.
தன்னை அணைத்தவள் சுடரா….?இல்லை அவள் சகோதரியா….? என்று இப்போதும் தெரியவில்லை என்றாலும்….ஏதாவது நடந்து இருந்தால்….நினைத்துக் கொண்டே சூர்ய கலாவை பார்த்தான்.
சூர்ய கலாவோ….விக்ரம் தன்னை பார்ப்பதை பார்த்து தாய்க்கும் சகோதரிக்கும் நடுவில் கோழி குஞ்சு போல் வெட வெடக்க இருவர் கையையும் கெட்டியாக பற்றிக் கொண்டவள்.
விக்ரமை பார்ப்பதும் அவன் தன்னை பார்ப்பதை பார்த்து பயத்துடன் தலை குனிவதுமாய் இருந்தாள். சுடரின் நிலை அதை விட மோசமாக இருந்தது.
விக்ரம் டேவிட்டை அடித்துக் கொண்டே அவன் கேட்ட நீ யார் மேல கைய் வைக்க நினச்ச. அப்போ அவ அவன் சூர்யாவை பயத்துடனும் அச்சத்துடனும் அனைவரையும் பார்த்தாள்.
சுடர் ஜோதி பயந்த சுபாவம் உடையவள் தான். தன் அண்ணனின் இறப்பு அதுவும் தன் கண் எதிரில்….உண்மையான குற்றவாளி தப்பித்தது. தன் அண்ணா சொல்லும் பெண்கள் தைரியமாக இருக்க வேண்டும் என்று சொன்னது. இதெல்லாம் நினைத்து நினைத்து தான் தன்னை தைரியப்படுத்திக் கொண்டு இருந்தாள்.
ஆனால் இப்போது நடப்பது பிறப்பிலேயே தைரியமானவர்களையும் பயம் கொள்ள வைக்கும். வந்தவர்கள் உயிரை பறிப்பார்கள் என்றால் கூட தைரியமாக போராடலாம்.
வேறு ஏதாவது...அதுவும் ஒருவர் இருவர் என்றால் கூட பரவாயில்லை ஐந்து பேர் சூர்யாவுக்கு குறையாத பயத்துடன் தானும் சூர்ய கலாவின் கையைய் இறுகி பற்றிக் கொள்ள.
இரு ஆடவர்களும் தன் இணையின் துடிப்பை பார்த்திருந்தாலும் அருகில் சென்று பயப்படாதே...நான் இருக்கேன் என்று சொல்ல முடியாத சூழ்நிலையில் இருக்கும் நிலை நினைத்து நொந்தார்கள் .
விக்ரமோ…. அப்பெண் சுடரோ….சுடரோ….என்று அடித்துக் கொண்டது. அதுவும் சூர்ய கலாவும், சுடரும் அருகில் நின்றுப்பதால்….சூர்யாவின் பார்வை எங்கு செல்கிறது என்று சரியாக கணிக்க முடியாதது அது வேறு மண்டயைய் காய வைத்தது.
இது வரை யாரோ...எவரோ….? என்று பயந்திருந்த வசந்தி விக்ரம் டேவிட்டை….அடிக்கும் போது பேசிய வார்த்தையில் இருந்து தன் மகன் விபத்தின் விளைவு என்று புரிந்தவராய்…..
விக்ரமை அதிக நேரத்துக்கு மனஉளச்சளுக்கு உள்ளாக்காமல்….சூர்ய பிரகாஷ், விக்ரம் இருவரையும் ஒரு சேர பார்த்து….”நீங்க அந்த M.P நாரயணனுக்கு என்ன ஆகனும் என்று தெரியாது. ஆனா அது விஷயமா தான் இதுன்னா……” அங்கு இருந்த அடியாட்களை கைய் காட்டி சொன்னவர்.
“நாங்கா எந்த கேசும் போடல….. விட்டுடுங்க.” என்று வசந்தி பேசிக் கொண்டு இருக்கும் போதே….
சுடர்…. “முடியாது….என்னால் முடியாது.” இது வரை மானத்துக்கு என்ன ஆகுமோ என்று பயந்துக் கொண்டு இருந்தவள். அண்ணனின் மரணத்துக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்ற வெறியில்…..கத்திக் கொண்டே விக்ரமின் சட்டையைய் பிடித்து உலுக்க.
வேறு நேரம். இல்லை வேறு இடம் இருந்து இருந்தால்,….சுடரின் இந்த சட்டை பிடிக்கு விக்ரம் என்ன செய்து இருப்பானோ…..?
சுடரின் பேச்சில் இருந்து சுடரை கண்டு கொண்ட விக்ரமன் மகிழ்ச்சியில் திளைத்ததால்….இதை பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளாது அவளிடம் இருந்து தன் சட்டையைய் எடுக்கும் நோக்குடன் அவள் கைய் மீது தன் கைய் வைக்க வந்தவன்….
சூர்யாவை பார்க்கா…..சூர்யாவும் அப்போது விக்ரமை தான் பார்த்துக் கொண்டு இருந்தான்.காலேஜ் முழுவதும் சூர்ய பிரகாஷ், விக்ரமின் கோபம் பிரசித்து பெற்றது என்று கூட சொல்லலாம்.சூர்யாவாவது சூழ்நிலைக்கு ஏற்ப தன் கோபத்தை கட்டு படுத்திக் கொள்வான். அதற்க்கு தன் தந்தை அரசியலில் இருப்பதும் ஒரு காரணம் என்று கூட சொல்லலாம்.
இவன் அடிதடியில் இறங்கினால் அடுத்த நாள் செய்தி தாள்களில் தன் பெயரோடு தன் தந்தையின் பெயரையும் சேர்த்து நாராடித்து விடுவார்கள் என்று ஒரு அனுபவத்தில் தெரிந்து அடக்கி தான் வாசிப்பான்.
அந்த பிரச்சனை விக்ரமுக்கு இல்லாததால்…..எடுத்த உடன் அவனுக்கு கைய் தான் முதலில் பேசும்.அப்படி பட்டவன் சுடர் சட்டையைய் பிடித்தும் எந்த வித கோபமும் காட்டாது கைய் விலக்க கூட தன்னை பார்த்ததும் தனக்காக தான் தயங்குகிறான் என்று நினைத்து.
விக்ரமின் அருகில் சென்றவன் அவன் சட்டையில் இருந்து சுடரின் கையைய் விலக்க அவள் கைய் மீது கைய் வைத்ததும்.
கோபத்துடன் தன் பார்வையைய் சூர்யாவின் புறம் திரும்பிய சுடரையே ஆழ்ந்து பார்த்தான் சூர்யா. சூர்யா தான் சுடரை பார்த்து இருக்கிறானே தவிர இது வரை சுடர் சூர்யாவை பார்த்ததே இல்லை.
இதோ இப்போது கூட சுடர் வீட்டுக்கு வந்தும் கூட சூர்யாவிடம் நேரிடையான பார்வை பார்க்காது பொத்தாம் பொதுவாக தான் பார்த்துக் கொண்டு இருந்தாள்.
கோபத்துடன் என்றாலும்...தன்னை மட்டும் பார்க்கும் அந்த பார்வை அவனுக்கு பிடித்தே இருந்தது என்று கூட சொல்லலாம். அதை அனுபவிக்க விடாது.
“யார்….நீ….? முதல்ல கைய் எடு.” சுடர் தன் கைய் மீது வைத்திருக்கும் சூர்யாவின் கைய் காட்டி சொல்ல.
“பிடித்த கைய்ய விடுறதா இல்ல.”
“ஆ என்ன சொன்ன….? அப்போது தான் அவளின் ஒருமை அழைப்பை கவனித்தவன்.
“ஏய் மரியாதை தெரியாதா…..? இது தான் நீ படிக்குற லட்சணமா…..?” என்ன தான் சுடரின் மீது காதல் என்றாலும் சிறு வயது முதல கொடுக்க பட்ட அதிகபடியான மரியாதை வார்த்தையே கேட்டு வளர்ந்தவனுக்கு தன்னோடு சிறு பெண் அதுவும் தன்னிடம் கைய் நீட்டி பணம் வாங்குபவர்கள் முன் பேசியது அவமானமாகி விட.
அந்த கடுப்பில் எரிந்து விழுந்தவனிடம்….. “உனக்கு என்னடா மரியாதை வேண்டி இருக்கு.” என்று சொன்னது தான்.
“ஏய்…..” அவள் கைய் மீது இருந்து கைய் எடுத்து அவளை அடிக்கவே கைய் ஓங்கியதும் விக்ரமின் சட்டை மீது வைத்திருந்த சுடரின் கைய் தன்னால் விலகியது.
“அய்யோ தம்பி அவ சின்ன பொண்ணு விட்டுடுங்க.” என்று வசந்தி பதற.
“அது தான் சொல்றேன். சின்ன பொண்ணா பேச சொல்லுங்க….நடந்துக்க சொல்லுங்க…...அந்த கேசு விஷயத்தையும் சேர்த்து மறைமுகமாக சொன்னவனின் பேச்சு பாவம் அந்த தாய்க்கு புரியாது
“சரிப்பா...சரிப்பா நான் சொல்றேன்.” என்று சமாதானம் சொல்ல.
சூர்ய கலாவோ…..வீட்டில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சியும் இன்னும் பயம் கொள்ளும் படி இருக்க என்ன ஆகுமோ…..? ஏதாகுமோ…..?என்று ஒரு திகிலுடன் பார்த்துக் கொண்டு இருப்பதை பார்த்த விக்ரம் சூர்யாவிடம்.
“விடு சகல.” என்று சொல்பவனை சூர்யா ஆச்சரியத்துடன் பார்த்தான்.
முதல் ஆச்சரியம் நமக்கு முன் இவன் தானே பாய்ந்து இருப்பான் என்று. அடுத்த ஆச்சரியம்….சகல.
இது வரை விக்ரம் வாயில் இருந்து அந்த வார்த்தை கேட்டதே இல்லை. எப்போதும் நட்புக்குள் பேசும் மச்சி என்ற வார்த்தை கூட சொன்னது கிடையாது. பெயர் சொல்லி அழைப்பது. இல்லை வாடா...போடா என்று பேசிக் கொள்வது இப்படி தான் இருக்கும் அவர்களின் பேச்சு.
என்ன இது புதிதா...உறவு முறை….. சுடரிடம் இருந்து தன் மொத்த கவனத்தையும் தன் பக்கம் திருப்பிக் கொண்ட விக்ரம்.
சூர்யாவின் அதட்டலில் சூர்ய கலா பயப்படுவதை பார்த்து…. “சரி சூர்யா சின்ன பிள்ள ஏதோ பேசுச்சி இத ஏன் பெருசு படுத்துற….” என்று சொன்னவன்.
சுடரிடம்….”தோம்மா இது மாதிரி பெரியவங்கல மரியாதை இல்லாம பேச கூடாது. அது தப்பு.” ஏதோ சின்ன பிள்ளைக்கு அறிவுரை சொல்வது போல் சுடரிடம் பேசிக் கொண்டு இருந்த விக்ரமை பார்த்து.
“அவ உன் சட்டையைய் பிடிச்சாடா…..”
“அது தான் சின்ன பிள்ள தெரியாம பண்ணிச்சின்னு ஆன்டி சொன்னாங்கல விடுடா…..” என்று சொன்னவன்.
பின் வசந்தியைய் பார்த்து….”ஆன்டி ….” சூர்ய கலாவை காமித்து. “அவங்க ரொம்ப பயந்து போய் இருக்காங்க. முதல்ல அவங்கல பாருங்க.” என்று சொன்னவன்.
தொடர்ந்து….. “நீங்க நாங்க சொன்ன படி செய்யிறேன்னு சொன்னிங்கலே...அது உண்மை தானே……” என்று கேட்டவன்.
பின்….. “ உண்மையா இருந்தா உங்களுக்கு தான் நல்லது.” தான் வந்த வேலையிலும் கவனமாக இருந்தவனின் நடவடிக்கை இவன் நல்லவனா….?கெட்டவனா…..” என்ற ரீதியில் இருந்தது விக்ரமின் நடவடிக்கை.
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
விஜி டியர்
 




Last edited:

Jai

மண்டலாதிபதி
Joined
Feb 5, 2018
Messages
273
Reaction score
688
Location
India
Hi
Super episode. But story oda viruviruppa compare pannum pothu konjam kutty update ah irukku. Entha idathula sight adikarathunnu oru kanakku vendama surya??? ????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top