• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Palagi Parkkalam - Chapter 8 - Part 1

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Vijiya lakshmi jagan

மண்டலாதிபதி
Joined
Jan 17, 2018
Messages
193
Reaction score
4,743
Hi friends,

8th chapter - part 1 is here.

அத்தியாயம்---8
“என்னடா என் கிட்ட விடு எல்லாம் நான் பார்த்துக்குறேன்னு சொன்ன என்ன இது……?” தன் கையில் உள்ள வக்கீல் நோட்டிசை காட்டி சூர்யா கேட்க.
அந்த நோட்டைசை வாங்கி பார்க்காது……
“ நான் பார்த்துகுறேன் நீ ஏன் கவலை படுற……”
தான் கொண்டு வந்த நோட்டிசை வாங்காது இருந்ததிலேயே அவனுக்கு முன்பே தெரியும் என்று தெரிந்துக் கொண்ட சூர்ய பிரகாஷ். “இதை நீ எதிர் பார்த்தியா……?”
“ம்…..” என்று சொன்னவனிடம்.
“அப்போ ஏன்டா எதுவும் செய்யாம இருந்த…..?”
“எதுவும் செய்யாம இருந்தேனா…..?சுடர் வீட்டுக்கு ஆள் அனுப்பிய அன்னிக்கு தான் எனக்கு இந்த விஷயம் தெரிய வந்துச்சு. அந்த வேதாச்சலம் நடவடிக்கை எடுக்க இருக்காருன்னு….
அதான் கதிர் இல்லேன்னா கூட பரவாயில்லேன்னு டேவிட்டை அனுப்பின்னேன், அதன் வின் விளைவு தான் உனக்கு தெரியுமே……?” விக்ரம் பேச்சை கேட்ட சூர்யா….
“அவங்க வீட்டில யாராவது தூக்க ஆள அனுப்பி இருக்கலாம்லே……” எப்போதும் மிரட்டுவதுக்கு என்றால்...ஒரு குரூப்பும், ஆளை கடத்துவதற்க்கு என்றால் ஒரு குரூப்பும் என்று தனி தனியாக ஆட்கள் இருப்பதால்... ஆள தூக்க அனுப்பி இருந்தால்...அன்னிக்கி அந்த பிரச்சனை நடந்தும் இருக்காது….
பயத்தில் நாம் சொன்ன படி கேசை வாபஸ் வாங்கி இருப்பாங்க. இன்னிக்கு தன் மருமகனுக்கு பிரச்சனை இல்லை என்று நினைத்து கேட்க.
“நீ அன்னிக்கி என்ன சொன்ன…..மடிலேன்னா தானே ஆள தூக்க சொன்ன. முதல்ல மிரட்டி பாக்கலாம் பிறகு மடியலேன்னா தூக்கலாமுன்னு நினச்சேன். எல்லாம் சொதப்பிடுச்சி…..” தலை கோதிய படி பேச.
விக்ரமுக்கு டென்ஷனகா இருக்கும் போது தான் இப்படி முடி கோதிக் கொண்டு இருப்பான்.
“ அடுத்த மூவ் என்ன விக்ரம்……?”
“அது தான்டா யோசிச்சிட்டு இருக்கேன்.”
“சீக்கிரம் ஏதாவது பண்ணு.” நோட்டிசை காமித்து….”இந்த விஷயம் அப்பாவுக்கு தெரியாது. இதை பார்த்துட்டு அக்கா ஒரே அழுகை. என் பையன் படிப்பு, அவன் எதிர்காலமுன்னு புலம்பி தள்ளிட்டா…..ஏதாவது பண்ணி தான் ஆகனும்.”
“பண்ணிடலாம் சூர்யா எனக்கு பண்றது எல்லாம் பெரிய விஷயம் இல்ல. ஆனா இதில்நமக்கு வேண்டியவங்களும் இருக்காங்கன்னு தான் யோசனையா இருக்கு.”
விக்ரம் சொல்வதும் சரி என்பதால்…..”நானும் அதான் பாக்குறேன். இல்லேன்னா இவ்வளவு பொறுமையாலாம் நான் இருந்து இருக்க மாட்டேன்.”
சூர்யாவின் பேச்சில் அவன் ஏதாவது எடுக்கு மடக்கா செய்து வெச்சிட போறான் என்ற பயத்தில் விக்ரம்….
“ஏய் அவசரப்பட்டு ஏதாவது செஞ்சி வெச்சிட போற…… சூர்யா.”
“நான் செய்யலேன்னாலும் நாளைக்கு வரப்போற எங்க அப்பா இது தெரிஞ்சா ஏதாவது செய்துடுவாரு…..”
“என்னடா சொல்ற…..?’ பதறி போன விக்ரம் கேட்க.
“ஆ சொல்றேன். நாளைக்கு அப்பா டெல்லியில் இருந்து வர்றாரு…..அக்கா இத பார்த்ததும் அப்பாக்கு தான் போன் போட போனா….நான் தான் நான் பாத்துக்குறேன் அப்பாவை டிஸ்ட்டப் பண்ணாதேன்னு சொல்லி தடுத்து வெச்சி இருக்கேன்.
அவளும் இன்னிக்கி ஒரு நாள் தான் டைம் நீயும் அந்த விக்ரமும் ஏதாவது செய்யுங்க. இல்ல அப்பா கிட்ட சொல்லிடுவேன். எனக்கு என் மகன் எதிர் காலம் தான் ரொம்ப முக்கியமுன்னு அழுத்தம் திருத்தமா சொல்லிட்டா….
எது செய்யிறது என்றாலும்...இன்னிக்கே செஞ்சாகனும். இந்த விஷயம் அப்பா கிட்ட போச்சி அவ்வளவு தான். தன் அரசியலை தக்க வெச்சிக்க அவர் என்ன வேணா செய்வாரு…..” மிரட்டுவது போல் சொல்லும் சூர்யாவின் பேச்சில்.
“என்ன வேணா என்றால் என்ன அர்த்தம் சூர்யா. அந்த வீட்டில் உன் மனசுக்கு பிடிச்ச பெண் இருக்கா….அதுவும் அவ தான் கேசு போட்டு இருக்கா……அவள ஏதாவது செய்தாலும் பரவாயில்லையா……?” என்று கேட்டதுக்கு.
சூர்யா போட்ட வெடி குண்டில் விக்ரம் பதறிய வனாய்…. “ என்னடா சொல்ற…..?”
“அது தான் அப்பா அவர் ஸ்டெப் எடுக்குறதுக்கு முன் நாம அந்த சூர்யா பொண்ணை தூக்கிடலாம்.” அலுங்காமல் சொன்ன அந்த வார்த்தை விக்ரமை ஆட்ட காண வைக்க.
“ஏ….ஏன் சூர்யாவை தூக்க சொல்ற…..”
“சுடரை விட்டா அவ தானே இருக்கா...வெண்ணிலா இன்னிக்கி ஏதோ இன்டெஸ்டியல் விசிட்டுன்னு ஐட்ராபாத் போய் இருக்கா….அதுவும் இல்லாம இந்த சூர்யா பொண்ணு தான் ரொம்ப பயந்தா மாதிரி இருக்கா…
அவள தூக்கிட்டா கண்டிப்பா அவ அம்மா சுடர் கிட்டேயும் அவ அப்பா கிட்டேயும் அழுது புலம்பியாவது இந்த கேச வாபஸ் வாங்க வெச்சிடுவாங்க.” என்று விளக்கியவனிடம்.
“வேண்டாம் சூர்யா இது சரிப்பட்டு வராது. வேறு ஏதாவது செய்யலாம்.” என்று சொன்னவனிடம்.
“வேறா………? வேறு என்னன்னு நீயே சொல்லு…..?” என்றவனுக்கு சட்டென்று என்ன சொல்வது என்று தெரியாது.
“யோசிக்கலாம்டா யோசிக்கலாம்.” எப்போதும் காலம் தாழ்த்தாது செய்யும் விக்ரம் இப்போது தான் வழி சொல்லியும் யோசிக்கலாம் என்று சொல்பவனை புரியாது.
“எது வரை...என் மருமகனை கோர்ட்டில் நிக்க வைக்கும் வரையா……?”
“ஏன்டா கோச்சிக்குற…..?”
“பின் என்ன விக்ரம்….. ?”
“இல்ல சூர்யா…..” என்று இழுத்தவனிடம்.
“மத்தவங்க கேசிலேயே அதிரடியா இருக்க நீயா என் விஷயத்தில் இப்படி மெத்தனம் காட்டுறேன்னு அதிசயமா இருக்கு விக்ரம். அதுக்கு காரணம் சுடருன்னா...நான் தான் சூர்யாவை தூக்க சொல்றேன்னே அப்புறம் என்ன…..?” கேள்வி கேட்பது சுலம் என்பதால் கேட்டு விட்டு அவன் பதிலுக்காக அவன் முகத்தை பார்த்த சூர்யாவிடம் கொஞ்சம் தயங்கிய குரலில்.
“அப்புறம் எப்படிடா அவங்க வீட்டு பெண்ணையே கட்டி கொடுப்பாங்க….? தன் காதல் விஷயத்தை சொல்லாது எப்படியாவது இந்த ஐடியாவை தவிர்க்க பார்க்க.
சூர்யாவோ…. “இப்போ நம் கண் முன்னாடி இருப்பது இந்த பிரச்சனைடா. முதல்ல இதை பார்ப்போம். இந்த பிரச்சனை கொஞ்சம் அடங்கிய பிறகு அதை பார்க்கலாம்.” அவன் சொல்வதும் விக்ரமுக்கு நியாயமாக தான் பட்டது.
முதலில் கண்ணுக்கு முன் நிற்க்கும் கத்தியைய் கவனிப்போம் அடுத்த பிரச்சனை பிறகு பார்க்கலாம்.
இதுவே சூர்யகலாவை பார்ப்பதற்க்கு முன் என்றால்….சூர்ய பிரகாஷ் சொல்லாமலையே அதை தான் செய்து இருப்பான் விக்ரம். ஆனால் இப்போது…
‘என்னடா யோசிக்குற…..?’
“இல்ல ஒன்னும் இல்ல….” என்று தயங்கிய விக்ரமை கூர்ந்து பார்த்த சூர்யா.
“என்னடா என் கிட்ட ஏதாவது சொல்லனுமா…..?” விக்ரமின் கண்ணை பார்த்து கேட்க.
“ம்….” என்று சொன்னவன்.பின் “எனக்கு என்னவோ சூர்யாவை விட சுடரை தூக்குறது பெட்டருன்னு தோனுதுடா….” தான் சொன்னதுக்கு சூர்யா அலருவான் என்று எதிர் பார்க்க .
அவனோ….” எப்படி சொல்ற….? என்று கூலாக கேட்டவனின் கண்ணை பார்த்து பேசாது பக்க வாட்டில் பார்த்து.
“ அந்த வீட்டில் சுடர் தான் தைரியமான பொண்ணு. அவளை தூக்கிட்டா வீட்டில் பெரியவங்க சூர்யா தான். கண்டிப்பா பயந்து நாம சொன்னது கேட்டுடுவாங்க. அதுவும் இந்த வேதாச்சலத்தை பார்த்து பேசுறது எல்லாம் இந்த சுடர் பொண்ணு தான்.
அந்த ஆள் தான் பணக்காரனுக்கு எதிரா போர் கொடி தூக்குறேன்னு எந்த பணக்காரனுக்கு எதிரா ஆதாரம் திரட்டாலாமுன்னு காத்துட்டு இருக்காரு.
அவர் தான் இந்த சுடரை ஏத்தி விடுறாரோ என்று சந்தேகம் எனக்கு இருக்கு. சுடரை தூக்கிட்டா நம்ம பிரச்சனை முடிஞ்சுடும் என்று தோனுது.” என்று இந்த பேச்சு அனைத்தையும் சூர்யா முகத்தை பார்க்காது ஜன்னல் , கதவு, அங்கு இருக்கும் ஷோப்பா இவை அனைத்துயும் பார்த்த வாறே விக்ரம் சொல்லி முடிக்க.
சிறிது நேரம் சென்ற பிறகு கூட….சூர்யா பேசாது அந்த இடமே அமைதியாக இருக்க.தலை நிமிர்ந்து பார்த்த விக்ரம். தன்னையே பார்த்துக் கொண்டு இருந்த சூர்யாவிடம்.
“என்ன சூர்யா…..?” என்று கேட்க.
“அது தான் என்ன…..?” விக்ரம் கேட்டதையே சூர்யா திரும்பவும் கேட்க.
“என்ன…?என்ன….?”
“புரியல…..?”
“சூர்ய கலாவை தூக்குவதில் என்ன பிரச்சனை…….?” என்று கேட்டவன்.
ஏதோ பேச வந்த விக்ரமை பேச விடாது தொடர்ந்து….”பயந்த சுபாவம். திரும்ப அந்த கத வேண்டாம்.” என்று சொன்னதும்.
திரும்பவும் அந்த இடம் சிறிது நேரம் அமைதியாகி விட….கொஞ்சம் நேரம் சென்று தன் தொண்டையைய் சரி செய்வது போல்….சரி செய்து கொண்ட விக்ரம் எந்த மேல் பூச்சும் இல்லாது….“நான் சூர்ய கலாவை விரும்புறேன்.” என்று போட்டுடைத்த விக்ரம் தோளில் கைய் போட்ட சூர்ய பிரகாஷ்….
“சரி சகல நீ சொன்னா மாதிரி என் ஆளையே தூக்கிடலாம்.” தன் காதலுக்கு ஏதாவது சொல்வான் என்று பார்த்தால்…
ஏதும் சொல்லாது தான் சொன்னது போல் சுடரையே தூக்க சொல்றானே ...ஏதாவது உள் குத்து இருக்குமோ…..? என்று சந்தேகத்துடன் பார்க்க.
அவன் சந்தேக பார்வையைய் சரியாக புரிந்துக் கொண்ட சூர்ய பிரகாஷ்…. “நான் உண்மையைய் தான் சொல்றேன் சுடரை தூக்கிடலாம்.” என்று சொன்னவன்.
“கூடவே சூர்ய கலாவையும் தூக்கிடலாம்.”
“ஏ..”ஏன்….?”
“ஏன்னா என் ஆளுக்கு போரு அடிக்கும்லே அதான். தூக்குறதுன்னு முடிவாயிடுச்சி இரண்டு பேரா தூக்கிடலாம்டா.” ஆடி தள்ளுபடியில் ஒன்று வாங்கினால் இன்னொன்று இலவசம் போல் பேசி வைப்பவனை கொலை வெறியோடு பார்த்த விக்ரம்.
“நான் சீரியசா போசிட்டு இருக்கேன் சூர்யா….”
“நானும் சீரியசா தான்டா சொல்றேன். இரண்டு பேரையும் தூக்கிடலாம்.”
இவ்வளவு நேரமும் விளையாடுகிறானோ…. என்ற கடுப்பில் பேசிக் கொண்டு இருந்த விக்ரம். அவன் குரலிலும் அவன் சொன்ன விதத்திலும் அவன் நேராக பார்த்து.
“யூ ஆர் சிரியஸ்…..?” என்று கேட்க.
“ஆம்…” என்பது போல் தலையாட்டியவனை பார்த்து…. “நீ இவ்வளவு நேரமும் விளையாடுறேன்னு நினச்சிட்டு இருந்தேன்டா…..”
“விளையாட்டா...?உன் கூடவா….? ஏன்டா அதுக்கு தான் உனக்கும் ,எனக்கும், ஆளு வந்துடுச்சிலே நாம இரண்டு பேரும் விளையாடி எண்ணத்துக்கு ஆக போகுது.”
“நீ ஒரு மார்க்கமாதா இருக்க…..” என்று சொன்ன விக்ரம். பின் ஆழ்ந்த யோசனைக்கு போக.
“என்ன விக்ரம் யோசிக்குற….?”
“இரண்டு பேர துக்குனா என்ன சட்ட சிக்கல் வருன்னு யோசிச்சிட்டு இருக்கேன்.” விக்ரம் இப்படி சொன்னதும்.
சிரிப்பை அடக்க முடியாது சிரித்த சூர்யாவை முறைத்த விக்ரம்.
“இப்ப என்ன சொல்லிட்டேன்னு இப்படி சிரிக்குற….”
“இல்ல... பொண்ண தூக்குறத சட்ட விரோதம். இதுல அதை சட்ட சிக்கல் வருமான்னு கேட்குறியே நிஜமா நீ வக்கீலான்னு கேட்டு இருப்பேன். ஆனா பாரு நீ படிச்சது எனக்கே நல்லா தெரியும் என்றதாலே அத கேட்க முடியாம போயிடுச்சி…” என்ற சூர்யாவின் பேச்சை அமைதியாக கேட்பதில் இருந்தே…
அவன் சிரியஸாக தான் யோசிக்கிறான்...என்று.
“இதில் என்ன சட்ட சிக்கல் ஏற்படுமுன்னு நீ நினைக்குற…..?” சூர்யாவின் பேச்சில் இருந்தே நிலைமையைய் உணர்ந்துக் கொண்டான் என்று புரிந்த விக்ரம்.
 




Jai

மண்டலாதிபதி
Joined
Feb 5, 2018
Messages
273
Reaction score
688
Location
India
Brothers ennamo chair, bench thookkara maathiri romba satharanama onnu vangina innonu nu pesittu irukkinga. ????athu ponnunga???athuvum neenga sight adikkara ponnunga. So paathu plan pannunga. Illa future la payangaramana damage varum☺☺☺☺☺nice epi ???
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
விஜி டியர்
 




sridevi

அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
4,750
Reaction score
7,120
Location
madurai
ponna thookuna mamaiyar veetuku than pokanum boss mappillaiya sudatr veetuku poga mudiyathu:p:p:p:p:p nice epi sis:):):):):)
 




Sameera

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
1,949
Reaction score
2,014
Location
Chennai
Dei rendu peraiyum thokka poringala..Over da
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top