• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Parakkirama pandiyan kalam: aththiyaaytam 5.

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Srija Venkatesh

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
408
Reaction score
4,349
Location
chennai
அத்தியாயம் 5.

காலம் : இடைக்காலம்.

இளவரசன் மெல்லிய பாயில் உறங்கிக்கொண்டிருக்க அவனது அருகில் அமர்ந்து ஏதோ எழுத்தாணியால் எழுதிக்கொண்டிருந்தார் விந்தையன். மகனை முழுமையாக நல்ல நிலையில் கண்ட மகிழ்வில் அரசியார் தாவிச் சென்றார். அரவம் கேட்டுத் திரும்பிய விந்தையன் மௌனமாக இருக்கும்படி சைகை செய்தார். பின்னர் எழுத்தாணியை அப்படியே வைத்து விட்டு எழுந்து வந்தார்.

இளவரசன் பார்த்த அதே ஆலமரத்தின் கீழ விந்தையன் அமர்ந்து கொள்ள கீழே நின்றனர் அரசனும் அரசியாரும். இப்போது மற்ற பரிவாரங்களும் வந்து விட்டனர்.

"ஐயனே! என் பெயர் சடையவர்மன் சுந்தர பாண்டியன். நாடிழந்து தலை நகரத்தை விடுத்து இதோ காட்டில் அலைந்து கொண்டு இருக்கிறோம். எங்களுடன் இருந்த இளவரசனைக் காணவில்லை என்றதும் தவித்து விட்டோம்" என்றார் மன்னர்.

"நான் காட்டில் வாழ்ந்து வந்தாலும் நாட்டில் நடப்பதை அறியவே செய்கிறேன். வஞ்சனையால் நீ வெல்லப்பட்டாய்! உனக்கு நான் புதிதாக ஒன்றும் சொல்லப்போவது இல்லை. ஆனால் காலம் மாறி வருகிறது. கோள்கள் பெரும் பெரும் சோதனைகள் வர இருப்பதைத் தெரிவிக்கின்றன" என்றார்.

"இன்னும் என்ன சோதனைகளோ?" என்றார் அரசியார்.

"அம்மா! நீங்கள் அரசகுலத்தவரது வளர்ச்சியையும் வீழ்ச்சியையும் மட்டுமே பார்க்கிறீர்கள். ஆனால் என்னைப்போல முனிவர்களோ ஒட்டுமொத்த சமுதாயத்தின் எதிர்காலத்தை மனதில் கொண்டு பார்க்கிறோம்."

"ஐயா! எனது மகன் எப்படி இங்கே வந்தா? அவனது எதிர்காலம் எப்படி இருக்கும்? சொல்ல முடியுமா?" என்றார் மன்னர்.

"நான் வள்ளுவனோ, கணியனோ அல்லன்! இன்றைய சொல் வழக்கப்படி ஜோதிடனும் அல்லன்! எங்கோ காட்டில் இருந்து கொண்டு இயற்கையின் ஐந்திரனையும் புரிந்து கொள்ள முயலும் ஒரு சாதாரண மனிதன். மன்னர்களது எதிர்காலத்தைப் பற்றி என்னிடம் ஏன் கேட்கிறீர்கள்?"

இப்போது அமைச்சர் செண்பகப்பொழில் இளந்திரையனார் முன்னே வந்தார்.

"ஐயனே! வணங்குகிறேன்! இப்போது மன்னரும் அவருடன் வந்த மக்களும் திக்குத்தெரியாத காட்டில் இருக்கிறார்கள். வழி தெரியாதவர்களுக்கு வழி காட்ட வேண்டியது உங்கள் பொறுப்பு அல்லவா? அதனை தாங்கள் மறுக்கலாமா? "

"ஓ! இளந்திரையனா? நீயும் இவர்களுடன் தான் வந்தாயா?"

"ஆம் ஐயனே! மன்னர் இப்படி நாடிழந்து நிற்க நானும் ஒரு காரணம். மேலும் மேலும் மக்கள் சாகாதிருக்க மன்னரை அழைத்துக்கொண்டு வந்து விட்டேன்."

பெரிதாகச் சிரித்தார் விந்தையன்.

"நீ இன்னமும் அப்படியே தான் இருக்கிறாயா? உன்னாலா இவை நடந்தன? நீ ஒரு கருவி. அது கூட இல்லை! சிறு துரும்பு இளந்திரையா! காலம் இந்த இடத்தை எப்படியெல்லாம் மாற்றப் போகிறது அதற்கு அடிக்கல் நாட்டத்தான் இளவரசன் என்னைத் தேடி வந்தான்" என்றார்.

அரசனும் அரசியாரும் இவர் பெரிய ஞானி என்பதைப் புரிந்து கொண்டு பணிந்து வணங்கினர்.

"ஐயனே! எங்கள் குமாரன் மீண்டும் மதுரையில் பாண்டிய அரசை நிலை நிறுத்துவானா?" என்றார்.

"இதற்கு ஒரே வார்த்தையில் என்னால் பதிலளிக்க இயலாது மன்னா! இன்னும் எத்தனை காலத்துக்கு அரசும் மன்னர்களும் இருப்பார்கள் என்பதே நிச்சயமற்று இருக்கும் போது உனது மகன் மீண்டும் மதுரையில் பாண்டிய அரசை நிலை நிறுத்துவானா என்ற கேள்விக்கு என்னால் எப்படி பதிலளிக்க முடியும்?"

"ஐயனே! நாங்கள் சாதாரண மனிதர்கள்! உங்களைப் போல முக்காலமும் உணர்ந்த ஞானிகள் அல்ல! உங்களைப் போல மாய மந்திரங்கள் கைவரப் பெற்றவர்களும் அல்ல! அதனால் தயை கூர்ந்து எங்கள் மகனின் எதிர்காலம் குறித்துச் சொல்லலாகாதா?" என இறைஞ்சினார் அரசியார்.

"மாயம் மந்திரம்..,இந்தச் சொற்கள் மேலும் மேலும் வலுப்பெற்று வருகின்றவே தவிர குறையவே இல்லையே? காலம் செல்லச் செல்ல மக்கள் அறிவியல் தத்துவங்களைப் புரிந்து கொள்வார்கள் என ஆசான் அகத்தியர் நினைத்தது நடக்கவில்லையே? இல்லை ஒருவேளை அந்தக்காலம் இன்னும் வரவில்லையா?" என்று தனக்குள்ளே பேசிக்கொண்டார். அதனைக் கண்டு அவர் ஏதோ மந்திரம் தான் சொல்கிறார் என நினைத்து விலகி நின்றது கூட்டம். அவர்களது அறியாமையை நினைத்து சிரித்துக்கொண்டார் விந்தையன்.

"மக்களே! ஏதோ ஒரு சில சொற்களைச் சொல்வதன் மூலம் பாதிப்புகளை ஏற்படுத்த முடியும் என்று நீங்கள் நம்புகிறீர்களா?"

"நிச்சயமாக ஐயனே! அதைத்தானே ரிஷிகளும் உங்களைப் போன்ற முனி சிரேஷ்டர்களும் செய்ததாகப் புராணங்கள் கூறுகின்றன? அவற்றை எங்களால் எப்படி மறுக்க முடியும்?"

"ஹூம்! சாரத்தை விட்டு விட்டு சக்கைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சாதாரண மனிதர்களின் மனோபாவம் இன்னமும் மாறவில்லை. அதனை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும் கூட்டம் இருக்கும் வரை இவர்களது அறிவுக்கண் திறக்கப் போவதும் இல்லை" என்று நினைத்துக்கொண்டார் விந்தையன். தனது கடமையைச் செய்தாக வேண்டும் என்று மனதைத் தேற்றிக்கொண்டார்.

"மன்னா! இப்போது உங்களுக்கு என்ன தெரிய வேண்டும்?"

"என் மகன்! இதோ உங்கள் பாதுகாப்பில் நிம்மதியாக உறங்கிக்கொண்டிருக்கிறான். அவன் அரசனாக ஆவானா? அவன் ஆள்வதற்கு அரசு இருக்குமா? எங்கே இருக்கும்? மதுரைக்கு மீண்டும் எப்போது செல்வான்?"

கண்களை மூடி பேசாதிருந்தார் விந்தையன்.

"பாவம் இவர்கள்! அரசகுலத்தைத் தாண்டி மதுரையைத் தாண்டி சிந்திக்க இவர்களால் முடியவில்லை. அதற்காக இவர்களை அலட்சியப்படுத்துவதும் தவறு. கேட்கும் வினாவிற்குரிய விடையை அளிப்போம்" என்று நினைத்து ஏதேதோ கணக்குகள் போட்டார்.

"மன்னா! மதுரைக்கும் உங்களுக்குமான சம்பந்தம் அறுந்து விட்டது. இனி வரும் நாட்களில் வெவ்வேறு இனத்தவர் அதனை ஆளக்கூடும். அதனால் நீங்கள் அங்கே செல்லாமல் இருப்பதே புத்திசாலித்தனம்"

"அப்படியானால் பாண்டிய வம்சமே அற்றுப் போய் விடுமா?"

"இப்போதைக்கு இல்லை மன்னா! இன்னமும் சில காலம் பாண்டிய வம்சம் நல்லாட்சி புரியத்தான் போகிறது. உனது மகன் இந்த உலகத்தில் நீண்ட புகழையும் அடையத்தான் போகிறான். அவனது எதிர்காலம் ஒளி மயமாக இருக்கும்" என்றார்.

மகிழ்ந்து போன அரசர் தனது கைகளில் இருந்த வாகுவளையங்களில் ஒன்றை எடுத்து முனிவரின் காலடியில் வைத்தார்.

"ஐயனே! என்னால் இயன்ற சிறு காணிக்கை! நீங்கள் எங்கள் மனதில் குளுமை உண்டாக்கினீர்கள். இனி நான் என்ன செய்ய வேண்டும் என்பதையும் தயை கூர்ந்து தெரிவியுங்கள்" என்றான் பணிவாக.

"மன்னா! அது எனது வேலையல்ல என்றாலும் நாட்டின் நலம் கருதி சொல்கிறேன். இங்கிருந்து சற்று தொலைவில் தான் செண்பகப்பொழில் என்னும் அழகிய ஊர் இருக்கிறது. அமைச்சர் இளந்திரையரின் ஊர் அது தான். அதையே நீ தலை நகரமாகக் கொண்டு ஆட்சி புரியாவாயாக! சிற்றாறு பாய்ந்து வளப்படுத்தும் பூமி அது. அழகிய அருவிகள், செண்பக அடவிகள் நிறைந்து காணப்படும். வளத்துக்குப் பஞ்சமில்லை. உன்னுடன் வந்திருப்பவர்களுக்கு நிலங்களைப் பிரித்துக்கொடுத்து வாழ வைப்பாய்." என்றார்.

அதற்குள் இளவரசன் எழுந்து வந்து விட பின்னாலேயே வீர பத்திரனும் வந்தான். முனிவர் ஞானி என்ற எதுவும் தெரியாத அந்தக்குழந்தை நேராக சென்று விந்தையனின் மடியில் அமர்ந்தது. அரசியாரும் மன்னரும் திடுக்கிட்டு விட்டார்கள். அதனைச் சட்டை செய்யவில்லை விந்தையன்.

"மகனே! நீ அரசனானதும் எனக்காக சில பணிகள் உள்ளன அவற்றைச் செய்வாயா?"

"கட்டாயம் செய்கிறேன் ஐயா"

"நல்லது! மன்னா! நான் சொன்னபடி நீ அரசாண்டு வா! காலம் உன்னை வாழ்த்தும்" என்றபடி சிறுவனை இறக்கி விட்டார். அவன் ஓடி வந்து தாயை அணைத்துக்கொண்டான்.

"மன்னா! இனி நீயும் உன் மக்களும் புதிதாக ஒரு வாழ்க்கையைத்தொடங்குங்கள்! இந்தச் சிறுவனால் இந்தப்பகுதி வரலாற்றில் நிலைக்கப்போகிறது" என்றார்.

மீண்டும் அவரைப் பணிந்தான் அரசன்.

"ஐயனே! என்னை மன்னிக்க வேண்டும்! நாங்களோ புதிதாக ஒரு நாட்டை உருவாக்கும் முயற்சியில் இருக்கிறோம். பகைவர்களது தொந்தரவு அதிகமாக இருக்கும். படை வீரர்கள் இளவரசனைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருந்தால் மற்ற பணிகளில் சுணக்கம் ஏற்படும். அதோடு இளவரசனுக்கும் கல்வி கற்பிக்க வேண்டிய வயது வந்து விட்டது. ஆகையால் தாங்களே அவனுக்கு குருவாக இருந்து கல்வி கற்பிக்கலாகாதா?" என்றான்.

இந்த யோசனையை இத்தனை மகிழ்ச்சியுடன் விந்தையன் ஏற்பார் என மன்னரே கூட நினைக்கவில்லை. அவரது கண்கள் மகிழ்ச்சியால் மின்னின.

"மிகவும் நல்ல யோசனை தான் மன்னா! எனக்கும் இதில் மகிழ்ச்சியே! ஆனால் நான் உனது புதிய நாட்டிற்கு வர மாட்டேன். இளவரசன் தான் இங்கேயே தங்கியிருக்க வேண்டும். சில வேளைகளில் நானே அவனை உனது தலை நகரத்துக்கு அழைத்து வருவேன். நீங்கள் யாரும் இங்கே வந்து அவனைப் பார்க்கக் கூடாது சம்மதமா?" என்றார்.

அரசியாரால் இதனைத் தாங்க முடியவில்லை.

"மன்னா! நம் குழந்தை சின்னஞ்சிறுவன் பால் மணம் மாறாத பாலகன். இவனால் காட்டில் எப்படி முனிவருடன் கடின வாழ்க்கை வாழ முடியும்?"

"அரசியே! உன்னைப்போல பல அன்னையர் சிந்தித்ததன் பலன் தான் நமது நாட்டில் அறிஞர்களும் மேதைகளும் இல்லாமல் போய் விட்டனர். உன் மகன் உன் அருகிலேயே இருப்பது உனக்கு வேண்டுமானால் மகிழ்ச்சியாக இருக்கலாம். ஆனால் அவனது எதிர்காலத்துக்கு அது நல்லதா? கடின வாழ்க்கைக்குப் பழகி மனதையும் உடலையும் இரும்பு போல வைத்துக்கொண்டால் தானே உலகை வெல்ல முடியும்? அதற்கு இது தானே தக்க வயது?" என்றார்.

அரசியாரால் எதுவும் மறுத்துப் பேச முடியவில்லை. மன்னரும் பரிவாரங்களும் அன்றைய இரவை அங்கே கழித்து விட்டு மறு நாள் பொழுது புலரும் சமயம் செண்பகப்பொழிலை நோக்கிச் செல்க்வதாக ஏற்பாடு செய்து கொண்டனர். இளவசரசன் குருவான விந்தையனுடன் அங்கயே இருப்பதென்று முடிவானது. பின்னாட்களில் தென்காசி என்று புகழப்படும் அன்றைய செண்பகப்பொழிலை உருவாக்கப்போகும் அரசனான இளவரசன் குரு விந்தையன் குடிலில் நிம்மதியான உறக்கத்தில் இருந்தான்.
 




Saranya

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
1,524
Reaction score
1,341
Location
Coimbatore
Agathiyar kalathil etho seithi vantha thagha sonneergal aathi patri onrum sollavillaiye.. Continuation illa that mathiri feeling..
 




Srija Venkatesh

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
408
Reaction score
4,349
Location
chennai
Agathiyar kalathil etho seithi vantha thagha sonneergal aathi patri onrum sollavillaiye.. Continuation illa that mathiri feeling..
Agaththiyar kalam will continue after 3 more episodes Saranya. First you will read 3 episodes of Agathiyar kalam then parakkirama panidyan kalam then tharkaalam. this will continue for the rest of the story. The continuation will be there once you read Agththiyar kaalam again. Thank you.
 




sridevi

அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
4,750
Reaction score
7,120
Location
madurai
மாயம் மந்திரம்..,இந்தச் சொற்கள் மேலும் மேலும் வலுப்பெற்று வருகின்றவே தவிர குறையவே இல்லையே? காலம் செல்லச் செல்ல மக்கள் அறிவியல் தத்துவங்களைப் புரிந்து கொள்வார்கள் என ஆசான் அகத்தியர் நினைத்தது நடக்கவில்லையே? இல்லை ஒருவேளை அந்தக்காலம் இன்னும் வரவில்லையா?" என்று தனக்குள்ளே பேசிக்கொண்டார். அ
சாரத்தை விட்டு விட்டு சக்கைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சாதாரண மனிதர்களின் மனோபாவம் இன்னமும் மாறவில்லை. அதனை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும் கூட்டம் இருக்கும் வரை இவர்களது அறிவுக்கண் திறக்கப் போவதும் இல்லை"
arumaiyana varigal sis(y)(y)(y)(y)
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top