General Audience Pattimandram Discussion

#1
அன்பான வாசகர்களே! எழுத்தாளர்களே!

எழுத்து இது மட்டுமா நம்முள் இருக்கும் திறமை? பேச்சும் அன்றோ!
பரிசை நோக்கிப் பயணிக்காமல், நம் தோழி, தோழர்களின் பாராட்டை நோக்கி நம் கருத்தையும் பேச்சு திறமையையும் வெளிப்படுத்த இது ஒரு அழகிய தருணம்.
தலைப்பு : உங்கள் மனதில் நீங்கா இடம் பெற்றது
"அன்றைய கதைகளா? இன்றைய கதைகளா? "

mqdefault.jpg

Prerecorded என்பதால், இது வாக்குவாதம் போல் அல்ல. நம் கருத்துக்களை, பேச்சு திறமையை வெளிப்படுத்த ஒரு சந்தர்ப்பம்.

விதிமுறைகள்

1 . ஒவ்வொரு குழுவிலும் 5 நபர்கள். ஆக மொத்தத்தில் 10 நபர்கள் .
2 .ஜனவரி 15 ஆம் தேதிக்குள் பெயரைப் பதிவு செய்ய வேண்டும். முதலில் பதிவு செய்யும் 10 நபர்களுக்கு இந்த அரிதான மேடை. முதலில் பதிவு செய்யும் 5 நபர்களுக்கு, தாங்கள் விரும்பிய தலைப்பில் பேசும் சந்தர்ப்பம் அமையும். அதன் பின் சூழ்நிலைகளுக்கு ஏற்ப, குழுவின் எண்ணிக்கையைப் பொறுத்து வாய்ப்புக்கள் அமையும்.
3 . ஜனவரி 20 ஆம் தேதிக்குள் audio file யை அனுப்ப வேண்டும். ஒவ்வொரு நபரும், அதிகபட்சம் 5 நிமிடங்கள் வரை பேசலாம். நீங்கள் பேசி Record செய்யும் Audio file களை, எங்களுக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம். 5 நிமிடங்களுக்கு மேல் பேசி, Audio crop செய்யும் தர்ம சங்கடத்திற்கு எங்களை உள்ளாக்க மாட்டீர்கள் என்று நம்புகிறோம்.
4 . கதைகளையும், கதாப்பாத்திரங்களையும் குறிப்பிட்டுப் பாராட்டுவது உங்கள் பெருந்தன்மை. ஆனால், மேடை நாகரிகமற்ற கருத்துக்கள், விமர்சனங்கள், மற்றவர் மனதைக் காயப்படுத்தும் பேச்சுக்கள் ஏற்கப்படமாட்டாது.

பெயர்கள் பதிவு செய்த பின், Audio file யை யாருக்கு அனுப்ப வேண்டும் என்ற விவரத்தைத் தெரிவிக்கிறோம்.
இது ஒரு புது முயற்சி. போட்டி அல்ல. கொண்டாட்டம். மகிழ்ச்சியோடு கலந்து ஆரவாரத்தோடு அனுபவிப்போம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.

Dear Friends,
Share your Registration in my Inbox and here with the topic.Old or new.... So that I ll not miss the members...... :) And your doubts too.
 
Last edited:

Latest updates

Latest Episodes

Top