• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode Pesum silaiye.. Kattavizhkava..? Epi ~ 15

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
ஹாய் டியர்ஸ்.. எல்லாரும் எப்படி இருக்கீங்க... அடுத்த எபி கொண்டு வந்திருக்கேன்... அக்ரதா, விண்பாவை எப்படி சிலையில் அடைகிறான் என்று பாருங்க.. இந்த எபி படித்து உங்க கமெண்ட்ஸ் சொல்லுங்க... படிக்குறவங்க லைக் போட்டா ரொம்ப நன்னா இருக்கும. ?நன்றி...?

கட்டு – 15

View attachment 3269

எழிலன் சொல்வதில் ஏதாவது காரணம் இருக்கும் என அறிந்த மைத்ரேயி உடனே விண்பா அறையை நோக்கி சென்றாள்.. விண்பா அறையை ஓங்கி தட்டிக் கொண்டு இருந்தாள் “ விண்பா “ என அழைத்துக் கொண்டே....

எழிலனை மாமா அடிக்குறாரே என்ற கவலையில், கதவில் வெளியில் தாழ் போட்டிருப்பதையும் கவனிக்காமல் தட்டிக் கொண்டு இருந்தாள் மைத்ரேயி...

வெகு நேரம் தட்ட, கதவு திறக்க படாமல் இருக்க, குனிந்துப் பார்க்கவும் தான் தெரிந்தது கதவு வெளியில் தாழ் போட்டிருக்கிறது என்று.... மனதில்தன் மகளை பற்றிய பதட்டம் தெரிய வேகமாக திறந்துக் கொண்டு உள்ளே சென்றவளை.. வெறும் கட்டிலே வரவேற்றது....

அப்படியே கால்கள் தள்ளாட.., சீராட்டி, பாராட்டி வளர்த்த மகள் காணவில்லை என்றால் எந்த தாய் தான் நன்றாக இருப்பாள்... விண்பாவை காணவில்லை என்றதும்.. கால்கள் தள்ளாட, தலை சுற்ற மயங்கி விழபோனாள்...

அப்பொழுது தான் இவளுக்காக அங்கு ஒரு ஜீவன் அடி வாங்குகிறது என்பது மண்டையில் உறைக்க... மெதுவாக சுவற்றைப் பிடித்துக் கொண்டே கெளதம் அருகில் போகவும், எழிலன்தலையில் ரத்தம் கொட்ட துடிதுடிக்க கீழே விழுவதையும் கண்டமைத்ரேயி“ மாமாஆஆ” என்று அழைத்துக் கொண்டே கீழே சரிந்தாள்....
எழிலன் துடிப்பதைக் கண்ட சாமுண்டி அவனை தன் மடியில் ஏந்திக் கொண்டார்...

மைத்ரேயி விழவும்அவளை கைகளில் ஏந்தி “ சின்னு, சின்னு“ என அழைக்க..

மெதுவாககண்களை திறந்த அவள் “ மாமா குட்டிம்மா அங்க இல்ல..” என திக்கி திக்கி கூற...

ஓடி சென்று விண்பா அறைக்கு சென்ற கெளதம் மனதில் குற்ற உணர்ச்சி வருவதாய்..,

ஓடி வெளியில் வந்துப் பார்த்தால்,சாமுண்டி எழிலனை கைகளில் ஏந்திக் கொண்டு ஊரை விட்டு வெளியில் சென்றார்..

“ உன் மகளை முடிந்தால் காப்பாற்று.. அவளை காக்க வந்தவனை இந்த நிலைக்கு ஆளாக்கிய நீ உன் மகள் பிரிவில் நிறைய வருந்துவாய்... அவளை தேடி தெரு தெருவாக அலைவாய் ” என்று அவர் போக்கில் சொல்லி சென்றார்...

அந்த நடு இரவில் ஊர் ஜனங்கள் எல்லாரும் எழுந்து விண்பாவை எங்கும் தேடியும் அவள் கிடைக்கவில்லை.. கோட்டையின் கோபம் எல்லாம் ஆற்றில் வெள்ளம் சீறி ஓடியது....

காற்று வேகமாக வீசியும் அவள் கோபத்தைக் காட்டினாள்... மைத்ரேயி அப்படியே இடிந்து அமர்ந்து விட்டாள்...

ஆசையாக பாராட்டி, சீராட்டி வளர்த்த மகள் நடு இரவில் காணாமல் போனாள் என்றால் யார் தான் தாங்கிக் கொள்வார்கள்...


ஊர் ஜனங்கள் அனைத்தும்“ அவள் யாருடனோ, சென்று விட்டாள் “ என்றே பேசியது..

அதை கேட்ட கௌதமால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.. இதே ஜனங்கள் தான் “ குழைந்தையை நம்ம ஐயா மாதிரி வளர்க்க வேண்டும் “ என்று இவன் முன்னாடியே பேசினார்கள்...
ஆனால் இன்றோ இப்படி பேசவும் மிகவும் வலி, கோபம், அவமானம் எல்லாம் ஒரே நேரத்தில் உணர்ந்தான்...

தன் மகள் பொறுப்பு முழுவதுமாக அவன் கோட்டைத்தாய் வசம் தான் ஒப்படைத்து இருந்தான்... ஆனால் இன்றோ அவள் தன் மகளை கைவிட்டுவிட்டாள்...

தன் கோபம், எழிலன் மேல் இருந்த கோபம் எல்லாம் அப்படியே கோட்டைத்தாய் மேல் திரும்பியது...

வேகமாக எழுந்த கெளதம் கோபத்துடன் சென்று கோட்டைத்தாய் கதவை அறைந்து சாற்றினான்...

சுமார்100 வருடங்களாக கம்பீரமாக நின்ற கோட்டையை அந்த கோவிலில் வைத்து அடைத்து விட்டான் கெளதம்...

அவனுக்கு கோபம் அடங்க மறுத்தது அவள் குடும்பத்தையும், அவள் வாரிசையும் காக்க அவள் எத்தனை கஷ்டபட்டாள், ஆனால் இப்பொழுதோ அதை எல்லாம் மறந்து தன் மகளை அவள் தொலைத்து விட்டாளே என்ற கோபத்தில் என்ன செய்கிறோம், ஏது செய்கிறோம் என்று அறியாமலே கோவில் கதவை அடைத்து விட்டான்..

அப்படி அடைப்பது பெரும் தவறு என்று அறிந்தே அக்காரியத்தை செய்தான் அவன்... கோவில் கதவை திறக்கும் பொழுது நடக்கும் விபரீதம் எப்படி இருக்கும் என்று அறிந்தே அப்படி செய்தான் அவன்... தான் அவளின் கோபத்துக்கு ஆளாகுவோம் என்று அறிந்தே செய்தான்..
எல்லாம்.., எல்லாம் அறிந்தே செய்தான்.. தன் மகள் இல்லாத இடத்தில் தனக்கு என்ன வேலை, அவள்தன்னை அழித்தாலும் பரவாயில்லை என்று தான் அக்காரியத்தை செய்தான்...

விண்பாவை காட்டுக்கு அழைத்து சென்ற அக்ரதா“ குட்டிம்மா இங்க பாரு இந்த மரம் அழகா இருக்கு “ என்று அவளிடம் அது இது என்று காட்டிக் கொண்டே வந்த அக்ரதா...

அவளை அப்படியே அந்த மடபம் அருகே அழைத்து சென்றான்... அந்த மண்டபத்தைக் கண்ட அவள் அப்படியே அதிசயித்தாள்...

“ அக்கி.. இது யார் மண்டபம்டா அவ்ளோ அழகா இருக்கு... வாவ்.. அந்த சிலை செம “ என்று கூறிக் கொண்டே அவனை விட்டு ஓடி சென்று அந்த சிலையில் கைவைத்து அதை வருடிக் கொண்டே இருக்கவும்...

அவள் பின்னே வந்த அக்ரதாசில மந்திரங்களை கூறி, சில பூக்களை கையில் எடுத்து அவள் கையில் கொடுத்து அந்த சிலை மேல் தூவக் கூறினான்...

“ அக்கி.., எங்கடா எழில் இருக்கான் “ எனகேட்டுக் கொண்டே அந்த பூவை அந்த சிலை மேல் போட்ட அடுத்த நிமிடம் அவன் கையிலையே மயங்கி சரிந்தாள்...

அவள் அங்கு மயங்கி சரிந்த நேரம் தான் கெளதம் கோட்டைதாய் கோவில் கதவை அடைத்த நேரம்... கெளதம்மே தன் மகள் வாழ்கையை அழிக்கிறான் அவன் கோபத்தால்.... கோபம் என்பது மிக பெரிய உயிர் கொல்லி... கோபம் கொண்டவன் எங்கோ ஒருநாள் தன் நிலையை இழப்பான்... அதே நிலையை இழந்து விட்டான் கெளதம்...

அவள் மயங்கவும் அவளை அந்த சிலை முன் படுக்க வைத்த அக்ரதா.., அதன் முன் பெரிய யாகத்தை ஆரம்பித்தான்.., அந்த யாகம் செய்யும் பொழுது விண்பா கொஞ்சம் கொஞ்சமாக நினைவை இழந்துக் கொண்டு இருந்தாள்...

அவள் முழு நினைவையும் இழக்கும் முன்னே அந்த யாக புகையில் இருந்து எழுந்த பதுமை அவனை நோக்கி “ கோட்டை மிகவும் உக்ரமாக இருக்கிறாள்.. சீக்கிரம் அவளை சிலையில் அடைத்து உன் நினைவை அவளுக்கு ஏற்படுத்து... கோட்டை அந்த கோவிலில் இருந்து வெளியில் வரும் முன் உன் யாகத்தை முடித்துக் கொள் “ என்று கூறி வந்ததுப் போல் மறைந்து சென்றது..

பதுமை கூறி செல்லவும்., அவனுக்கும் அது சொல்வது சரி என்று படவே அவள் நினைவு முழுதாக மறையும் முன்னே அவள் உடலை விட்டு அவளின் ஆன்மாவை தனியாக பிரித்தான்...

அவளை விட்டு தனியாக பிரிந்த அவளின் ஆன்மா அவன் முன் எழுந்து நிற்கவும் அவளை அடுத்த நொடி அந்த சிலையில் குடிவைத்தான்... அவள் அந்த சிலையில் குடியேறிய அடுத்த நிமிடம் அந்த சிலை தன் கண்களை திறந்தது...


 




shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
கண்களை திறந்து அவனை பார்த்தாள்.. அச்செயலில் சந்தோசமடைந்த அக்ரதா, அவளை கட்டியணைத்துக்கொண்டான்... அச்செயல் அவளுக்கு எழிலனை நினைவு படுத்தியது... அதை அக்ரதா கவனிக்கவே இல்லை..

அவள் தன் அருகில் வந்துவிட்டாள் என்ற சந்தோஷத்தில் இருந்தார்.... சீக்கிரம் யாகத்தை ஆரம்பிக்க வேண்டும் என்று மனதில் எண்ணிக் கொண்டு இருந்தார்...

நேரம் விடியப் போவதை அறிந்த அக்ரதா அவள் உடலை அந்த சிலை அருகில் வைத்து விட்டு வெளியில் வந்து சில மந்திரங்களை கூறி அந்த மண்டபம் யார் கண்களுக்கும் தெரியாதபடி மறைத்து வைத்தார்...

நேராக தோட்டத்துக்கு சென்று, எதுவும் தெரியாததுப் போல் கெளதமை நோக்கி வந்தான்.. “ என்ன ஐயா கோவில் கதவை அடைத்து வைத்திருகீங்க... என்ன ஆச்சு. ” என கேட்கவும்..

“ அக்கி.., விண்பாவை காணும்டா ” என வேதனையாக கூற..

அவன் கூறுவதை கேட்ட அக்கி அதிர்ந்து “ என்ன... விண்பாவை காணுமா..? எனக்கு தெரியும் அவள் இந்த எழில் கூட பழகும் போதே தெரியும் அவன் தான் இவளை ஏதாவது செய்திருப்பான் “ என கூற..,

“ பச். இல்லடா அக்கி.., அவன் ஒண்ணும் செய்யல,, நான் தான் அவனை தப்பா புரிஞ்சுட்டு அடிச்சுட்டேன்... இப்போ அவன் எங்க இருக்கானும் தெரியல..? அந்த சித்தர் தான் அழைச்சுட்டு போனார்... விண்பாவும்எங்க என்று தெரியல..” என கவலையாக கூறிக் கொண்டு இருக்கும் பொழுது..

அவர்களை நோக்கி சாமுண்டி சித்தர் வந்தார்... அவர் வருவதைக் கண்ட அக்ரதாஉடனே அந்த இடத்தை விட்டு நகர்ந்து விட்டான்...

கெளதம் அருகில் வந்த சாமுண்டி “ கெளதம்.., உன் மகளுக்கு எதுவும் ஆகவில்லை..., அவளை கூடிய சீக்கிரம் நான் இங்கு அழைத்து வருவேன்... இங்கு நீ யாரையும் அளவுக்கு அதிகமாக நம்பாதே.., முதலில் உன் குடும்ப விஷயத்தை யாரிடமும் கூறாதே.., நான் இப்பொழுது கூறியதையும் யாரிடம் கூறாதே.... உன் மகளே உன்னை தேடி வருவாள்... அந்த நாள் தூரத்தில் இல்லை.., என்று கூறி அக்ரதாவையே பார்த்து சென்றார்..

அவர் செல்லவும் கெளதம் அருகில் வந்த அக்கி “ என்ன ஐயா அவர் சொல்லிட்டு போகிறார்“ என கேட்க...

அப்பொழுது தான் சாமுண்டி கூறியது நியாபகம் வர, அக்ரதாவை யோசனையுடன் பார்த்த கெளதம் “ கோவில் கதவை திறக்க கூறி செல்கிறார் “ என கூறவும்..

“ அப்படியா.. சரி ஐயா நான் தோட்டத்துக்கு போகிறேன் “ என்று யோசனையுடன் சென்றான் அக்ரதா..

அக்ரதாசெல்வதையே யோசனையாக பார்த்து நின்றான் கெளதம், இவனை கவனிக்க வேண்டும் என்று மனதில் எண்ணிக் கொண்டான்..

அவன் எண்ணியது உடனே அக்ரதாவுக்கு தெரிய மெலிதாக சிரித்துக் கொண்டான்...

அந்த நள்ளிரவு எப்பொழுதும் போல் கெளதம் தூங்கிய பொழுது அந்த காட்டுக்கு சென்றான்.. செல்லும் பொழுது மகரிஷி முதலில் குடி இருந்த பாம்பின் தோல் அந்த புற்று பக்கம் இருக்கவும்.. ஒரு யோசனை தோன்ற அந்ததோலை எடுத்துக் கொண்டு மண்டபத்தை நோக்கி சென்றார்..

நடு இரவு முழுவதும் பூஜைகள் செய்து அந்த பாம்பு தோலை ஒரு பாம்பாக மாற்றிய அவர், அக்ரதாஉடலில் இருந்து த ஆன்மாவை அந்த பாம்பில் புகுத்திக் கொண்டு அவனை அந்த மண்டபத்தை விட்டு வெளியில் எறிந்தார்...

அவருக்கு தெரிந்து விட்டது.. கௌதம்க்கு அவன் மேல் சந்தேகம் வந்து விட்டது என்று. இனியும் அவன் உடலில் நாம் இருந்தால் எண்ணம் ஈடேறாது என்று எண்ணி அவனை குப்பை என வீசினார்..

மண்டப்பதை விட்டு வெளியில் வந்த அக்கி அப்பொழுது தான் பழைய அக்கியாக தன் நினைவுகளை பெற முயற்சிக்கவும், அதை அறிந்த சித்தர்..

விண்பா உடலையும், அக்கி உடலையும் ஒரு சேர அந்த ஆற்றில் விட்டெறிந்தார்... அவருக்கு இனி அந்த உடல்கள் தேவை இல்லை..

இருவர் உடலும் அந்த ஆற்றில் கோட்டைநல்லூரை கடந்து ஆற்றின் போக்கில் சென்றுக் கொண்டு இருந்தது...

உயிருக்கு போராடிய அக்கி தன் குட்டிம்மாவை எப்படியாவது காக்க வேண்டும் என்று எண்ணி அவளை தன் கூடவே இழுத்து ஆற்றின் போக்கில் அதன் பின்னே சென்றான்...

கட்டவிழ்க வருவான்...
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
எழிலுக்கு என்ன ஆச்சு.. பாவம் விண்பா.. ஆக்கியும் பாவம்.. ஒருவர் வாழ மூவர் உயிரை எடுக்கும் சித்தரை உயிரோடு விடவே கூடாது அந்த கோட்டை தாய்..
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
எழில் மீண்டும் வருவானா..?! அப்பொழுது அக்ரதா எழிலை வில்லனாக நினைப்பானா..? குட்டிம்மாவை யார் காப்பாற்றுவார்..?
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top