• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode Pesum silaiye.. Kattavizhkava..? Epi ~ 18

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
ஹாய் டியர்ஸ்.. எல்லாரும் எப்படி இருக்கீங்க... அடுத்த எபி கொண்டு வந்திருக்கேன்... இன்னைக்கு எபி படிங்க.." கோட்டை எப்படி விண்பாவை சித்தரிடம் இருந்து காப்பாத்துறா என்று தெரிந்துக் கொள்ளுங்கள்.. கோட்டையம்மாய் - சித்தர் நேரடி சந்திப்பு இன்று எபியில்.".. படித்து உங்க கமெண்ட்ஸ் எதுனாலும் சொல்லுங்க...நன்றி...

sathya durai, vadivelammal, viha, suryas, Mathiman, Priyapraveenkumar, shalu, Sony, Nadarajan, GREENY31, sandhiya sri, radhaviswa, banumathi jayaraman, Radhadevi, Shanthi vairam, Riha, Pradeep, @ Anithakarmegam, Snehasree [B][B][B]உங்க எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி டியர்ஸ்:love::love:... [B]யாரையாச்சும் விட்டிருந்தா சாரிய்யா..[/B] :cry::cry:[/B][/B][/B]

கட்டு – 18

எழிலன்மயங்கி சரியவும் அவனை தாங்கிப் பிடித்த சாமுண்டி அவனை கை தாங்கலாக பிடித்துக் கொண்டார்...

எழிலனை பார்த்த கோட்டை, அவளுடன் வந்த தேவதைகளை பார்த்து எழிலனை பார்த்து கண்ணை அசைக்கவும், அவனை நோக்கி வந்து அவன் முன் ஊதவும் எழிலன் மெதுவாக கண்களை திறந்தான்... எழிலன் கண்களை திறக்கவும், மகரிஷியை நோக்கி திரும்பினாள் கோட்டை...

யாரும் யாரையும் பகைக்க முடியாது.... சித்தர்கள் தவம் யாரையும் ஒரு நொடியில் அவர்கள் வசம் திருப்பி விடும் வல்லமை படைத்தவர்கள்... அதனால்அவரிடம்மெதுவாகபேசவே எண்ணினாள்...

“ சித்தரே... தங்களின் நோக்கம் என்ன ” என வினவ...

“என் எண்ணம் அறிந்த நீயே.. மீண்டும் கேள்வி கேட்பது என்னவோ “ என அவர் அவளையே திருப்பிக் கேட்க....

அதற்குள் இதை பார்த்துக் கொண்டு இருந்த அக்ரதா கோட்டைநல்லூரை நோக்கி கிளம்பினான்... விண்பா இன்னும் எழவில்லை.... அவளை இன்னும் சித்தர் கட்டுபாட்டுக்குள் வைத்திருந்தார்... அவளை மீட்கவே கோட்டையும் அமைதியாக பேசிக் கொண்டு இருக்கிறாள்...

அவராக மனது வைத்தால் மட்டுமே விண்பா எழ முடியும், அவளின் நினைவும் வரும்... தண்ணீராக இருக்கும் பொழுது இருவரும் சிதறவும் அவளின் நினைவை முற்றிலுமாக அவள் இழந்து விட்டாள்... அதை அறிந்த கோட்டை, சித்தரிடம் அமைதியாகவே செல்ல எண்ணினாள்...

அப்பொழுது தான் ஊர் ஜனங்களை அனுப்பிக் கொண்டு இருந்தான் கெளதம்... எல்லாரும் வீட்டுக்கு செல்லும் வரை காத்திருந்த அக்ரதா கெளதம் அருகில்சென்றான்....

அக்ரதாவை கெளதம் அறியவே இல்லை... இருமுறை கெளதமை சுற்றி சுற்றி வந்தான் அவன்... அப்பொழுதும் கௌதம்க்கு அவனின் வருகை தெரியவே இல்லை...

அதற்குமேல் பொறுக்க முடியாத அக்ரதா அவன் காதின் அருகில் சென்று “ விண்பாவை கொண்டு வா “ என கூறினான்...

அந்த குரலில் ஒருமுறை நின்ற கெளதம் சுற்றி எங்கும் பார்த்தான்... யாரும் அருகில் இல்லை என்றுதும் மீண்டும் ஒரு அடி எடுத்து வைக்கவும்,

மீண்டும் அவன் காதில் “ விண்பாவை கொண்டு வா “ என கூற...

இப்பொழுது கெளதம் காதில் தெளிவாக விண்பா என்று விழவும், நின்ற கெளதம் “ நீ... யாரு.. விண்பா எங்க இருக்கா....சொல்லு” என கேட்க

அப்பொழுது தான் அக்ரதாவுக்கு தெரிந்தது, கௌதமுக்கு விண்பா இருக்கும் இடம் தெரியாது என்று... இப்பொழுது சத்தமாக “ விண்பா முத்தம்மாள் வீட்டில் இருக்கிறாள்.., அவளை சீக்கிரம் அழைத்து வா “ என கூற....

கெளதம் முத்தம்மாள் வீட்டை நோக்கி ஓடினான் என்று தான் கூற வேண்டும்... கெளதம், விண்பா உடலை எடுக்க செல்லவும், அக்ரதா மீண்டும் காட்டுக்கு சென்றான்...

கோட்டை தன்னை சுற்றி நின்றவர்களை நோக்கி “ தாங்களின் உதவிக்கு மிக்க நன்றி ‘ என கூறி வந்த தேவிமார்களை அனுப்பினாள்... அவர்கள் செல்லவும்

“ சித்தரே.. உன் ஆசை அர்த்தமில்லாதது, இப்படி ஆசை கொண்டவர்கள் பலரின் முடிவு எப்படி என்று நீர் அறிந்தே இப்படி செய்யலாமோ “ என சிறு கோப குரலில் கோட்டை கேட்க..

இப்பொழுதுமகரிஷி, சாமுண்டியை முறைத்துக் கொண்டு நின்றார்.... சாமுண்டியை நோக்கி “ சாமுண்டி உன்னால் என் அளவுக்கு வர முடியாது.. உன் குரு நானே..., என்னை எதிர்த்து நீ இப்படி ஒன்றை செய்யலாமா“ என பேசி சாமுண்டியை தன் பக்கம் இழுக்க நினைத்தார்...

அப்பொழுது“ அக்ரதா.... அக்ரதா.... “ என கெளதம் ஆற்றின் அந்த பக்கம் நின்று குரல் கொடுத்தான்...

குரல் வந்த பக்கம் திரும்பிய கோட்டை, அந்த ஆற்றை பார்க்கவும் ஆறு இரண்டாக பிரிந்து கௌதம்க்கு வழி விட்டு நிற்கவும் ஆச்சரியமாக பார்த்த கெளதம் அவளை கொண்டு காட்டின் உள் சென்றான்...

அவன் மகளை பார்த்த அவனுக்கு ரத்த கண்ணீர் வடிவதாய்.. பட்டாம் பூச்சியாய் சுற்றி திரிந்தவள், பேச்சு மூச்சு இல்லாமல், வெளிறிப் போய் படுத்திருந்தது அவனால் தாங்கவே முடியவில்லை....

அங்கு காட்டில் அவன் போய் நிற்கவும் அவனை நோக்கி சாமுண்டியும், எழிலனும் ஓடி வந்தனர்... கெளதம் அங்கு சுற்றிப் பார்த்தான் அங்கு அவர்களை தவிர யாருமே கண்ணுக்கு தெரியவில்லை...

கெளதம், விண்பாவை தூக்கிக் கொண்டு வந்ததை கண்ட மகரிஷிக்கு கோபம் பெருக்கெடுத்தது... அப்பொழுது யாரையும் பொருட்படுத்தாமல், தான் செய்ய போகும் காரியத்தால் தான் அழிந்து போவேன் என்பதையும் அறியாமல், அவரின் அவசர புத்தியால், இங்கிருந்து சர்ரென எழுந்து கெளதம் உடலில் புகுந்துக் கொண்டார்....

அவர் செயலை கோட்டை முற்றிலும் எதிர்பார்க்கவில்லை... சித்தரை நோக்கி திரும்பவும் அவளை தடுத்த சாமுண்டி.. மகரிஷியை நோக்கி திரும்பினார்..,

கெளதம் உடலில் புகுந்த சித்தர் கோபமாக சாமுண்டியை நோக்கி திரும்பினார்.. முதலில் சாமுண்டியை ஏதாவது செய்து, பிறகு கோட்டையை பார்த்துக் கொள்வோம் என்று எண்ணினார்... சாமுண்டிக்கு துணையாக இருப்பது கோட்டை, அதே போல் கோட்டை எண்ணத்தின் பிரதிபலிப்பு சாமுண்டி..

அது தான் இவரை முதலில் கவனிக்க எண்ணினார்... சாமுண்டியை எதிர்க்க ஒரு மனித உடல் வேண்டும் அப்பொழுது தான் தன் கலையை வைத்து அவரை தன் பால் இழுக்க முடியும் என்று, இப்படி பலவாறாக யோசித்து தான், வரும் பிரச்சனையை எண்ணாமல் அவன் உடலில் புகுந்தார்...

சாமுண்டியை நோக்கி “ நீ.. என்ன விட எதில் உயர்ந்து இப்படி என்னை எதிர்க்க வந்திருக்கிறாய் “ என சாமுண்டியை நோக்கி கேலியாக வினவ...
 




Last edited:

shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
இறந்துபோகும்உடலில்பற்றுக்கொண்டுள்ளவரைமதித்துசொல்லதக்கதுஒன்றுமில்லை “ என அதே கேலி குரலில் கூற..

அதில் கோபமான மகரிஷி “ யார்.. இறந்து போகும் உடலின் மேல் பற்றுக் கொண்டுள்ளவன் “ என கெளதம் உடலில் புகுந்திருந்துக் கொண்டே அதை கூறுவதை கேட்ட சாமுண்டிபெரும்குரலேடுத்து சிரித்தார்...

“ நீர் தான் சித்தரே.., இறந்துபோகும் உடலில் குடி இருந்துஅவனை (அக்கி) அழித்து இப்பொழுது இவளையும் (விண்பா) அழிக்கஅழைத்து வந்துவிட்டு, இப்பொழுது இதோ இவன் (கெளதம்)உடலில் புகுந்திருக்கும் உம்மை மதித்து யாம் கூற தேவை இல்லை “ என ஏளனமாக கூற...

சாமுண்டியை பார்த்துபல்லைக் கடித்த அவர் தன் வலிமையால் ஒரு வாளை கையில் எடுத்தவர் சாமுண்டியை நோக்கி “ நீ.. என்னை விட எப்படி உயர்ந்தவன், என்னை நீ இவ்வளவு பேச உனக்கு என்ன தகுதி இருக்கு என்று இப்பொழுது அறிவோம் சாமுண்டி“ என கூறி அவரை நோக்கி வாளை நீட்டினார்....

அவரை தடுத்த சாமுண்டி “ நீர்.. என்ன கூறவருகிறீர் “ என கேட்க..

“ நான், என்குரு சாணக்கியரின் அருளால் காயசித்தி பெற்று எக்காலத்திலும் அழியா உடலைப் பெற்றவன் நான் “ என கர்வமாக கூற...

அவரை பார்த்து சிரித்த சாமுண்டி “ காயசித்திப் பெற்றால் வாழும் நாட்கள் அதிகமாகுமே தவிர... அது நிலைத்திருக்காது... அழியும் உடலை அழியா உடலாக கூறுவது வீண்.. அதிலும் நீ உமது உடலை இழந்து, வாழும் நாட்களை மட்டுமே அதிகமாக்கி வைத்துள்ளீர்கள் “ என, மகரிஷியின் நிலையை எடுத்துக் கூற....

அப்பொழுது அவருக்கு கெளதம் மீது தான் கோபம் வந்தது, ஆனாலும் தாம் இப்பொழுது இருபது அவன் உடல் தான் என எண்ணி சாமுண்டியை நோக்கி “ வீண் தர்க்கம் வேண்டாம் சாமுண்டி, நீஅழியா வரம் பெற்றவனா? நான் அழியா வரம் பெற்றவனா? எனவீண் தர்க்கம் வேண்டாம் நிரூபித்து காட்டுகிறேன்“ என கூறி ஏளனமாக அவனைப் பார்த்தார்...

சாமுண்டியிடம் தன் கையில் இருந்த கூர் வாளை கொடுத்து என தோளில் வெட்டு என்றுக் கூறினார் மகரிஷி...

மகரிஷி செயலை கோட்டை தடுக்க வர, அவள் தடுக்க காரணம் மகரிஷி இருப்பது கெளதம் உடல், ஏற்கனவே மகரிஷி உடலை கெளதம் எரித்தால் அவர் மேல் சிறு கோபம் உண்டு அந்த கோபத்தை இப்பொழுது தீர்க்க பார்த்தால், அழிவது அவள் வாரிசு அது தான் தடுக்க வந்தாள்...

ஆனால்சாமுண்டியோஅவளைதடுத்து மகரிஷியிடம் இருந்து அந்த வாளை வாங்கினார்...

அவர் வாங்குவதை கண்ட அக்ரதாவும், எழிலனும் தடுக்க வர அவர்களை பார்வையால் எட்டி நிற்க கூறிய மகரிஷி“ ம்ம்.. வெட்டு‘ என கூற....

வாளை ஓங்கிய சாமுண்டி, மகரிஷி மேல் வெட்டினார்.. உடலின் மேல் பட்ட வாள்“ கிண்“ என்ற ஒலியுடன் தெறித்து விலகியதே தவிர அவர் உடலில் எந்த வித காயமும் ஏற்படவில்லை... அதை கண்ட மகரிஷி “ பார்த்தாயா.. என் வலிமையை “என செருக்குடன் சாமுண்டியை நோக்க....

அவரை கண்ட சாமுண்டியோ “ சரி உன் திறமையை நீ காட்டிவிட்டாய்.. என் திறமையை நீ அறிவாயாக.” என கூறி கையில் இருந்து வாளை அவர் நோக்கி வீசினார்...

அதை பிடித்த மகரிஷியை நோக்கி “ ம்ம்ம்... என்னை வெட்டு “ என கூற...

மகரிஷியும், சாமுண்டியை வாள் கொண்டு வெட்டினார்.. “ மகரிஷி வெட்டிய வாள், சாமுண்டி உடலில் புகுந்து வெளி வந்தது.. மீண்டும் மீண்டும் வெட்டினார் மகரிஷி... காற்றை வெட்டுவது போல் உடலில் புகுந்து வெளி வந்தது... மகரிஷியை விட மிக்க சக்தி வாய்ந்த சாமுண்டியை கண்டு கோபமான மகரிஷி...

அந்த தேவதைகள் மூட்டிய யாககுண்டத்தில் தன்னை அழிக்க பார்த்தார்... அப்பொழுதும் அவர் செய்வது அவருக்கு தவறு என்று தோணவில்லை...

கெளதம் உடலுடன் அந்த யாக குண்டத்தில் விழ போனவரை கடைசி நேரத்தில் கோட்டை கௌதமை தன் கையால் பிடித்து இழுத்ததில் கெளதம் உடலில் இருந்த, மகரிஷி ஆன்மா மட்டும் தனியாக பிரிந்து யாககுண்டத்தில் விழுந்து எரிந்தது...

அவர் எரியவும், விண்பா அருகில் சென்ற கோட்டை அவளை பார்த்து நின்றாள்...

அப்பொழுதுமழை நின்றதின் அடையாளமாக, மரத்தில் இருந்து விழுந்த ஒரு சொட்டு எழிலன் கையில் விழுந்தது...,

அது விழவும், சாமுண்டியை பார்த்து கோட்டை கண்ணை அசைக்க... எழிலன் விண்பா ஆன்மா நீர் திவலைகளுடன் தன் மேல் விழுந்த நீரை அதனுடன் சேர்த்தான்... சேர்ந்த அடுத்த நிமிடம் அவளின் ஆன்மா மீண்டும் உயிர் பெற்று எழுந்து தன் உடலுக்காக நின்றது...

அடுத்த 3௦ செகண்டில் அவள் தன் உடலில் புகவில்லை என்றால் அதன் பிறகு எப்பொழுதும் அவள் உடலை அவள் சேர்வது என்பது முடியாத காரியம்....

அவள் ஆன்மா எழுந்த அடுத்த 2௦ நிமிடத்தில் எழிலனை அவள் கண்டாள், அவனை காணவும் அவளுக்கு அவன் நினைவு வர..,

அடுத்த நொடி யாககுண்டத்தில் விழுந்து எரிந்த மகரிஷி பெரும் சிரிப்புடன் அவர்களை நோக்கி புகையாக எழுந்து வந்தார்...

அதை கண்ட கோட்டை உக்ரமாக அவரை நோக்கி முறைத்துக் கொண்டே பெரும் காற்றை உண்டு பண்ணினாள்.. காற்று வேகமாக வீசியதால் அந்த புகை மண்டலம் அந்த காடு முழுவதும் பரவி, அந்த மரம் எங்கிலும் புகுந்து சுற்றிலும் இருந்து அவர்களைப் பார்த்து ஏளனமாக சிரித்தார் மகரிஷி....

எழிலனோ விண்பாவை மடியில் படுக்க வைத்துக் கொண்டு அவள் கன்னத்தை தட்டி “ பிங்கி.. பிங்கி“ என எழுப்பிக் கொண்டு இருந்தான்...

அவனின் பிங்கி என்ற அழைப்பில் அவள் உடலை தேடி வந்த அவள் ஆன்மா அந்த உடலுடன் இணைந்தது... இணையவும்“ ஹக்“ என்ற சத்தத்துடன் விண்பா மீண்டும் மயங்கினாள்....

சாமுண்டியோ மயங்கிய கௌதமை எழுப்பிக் கொண்டு இருந்தார்... அக்ரதாவோ அனைத்தையும் பார்த்துக் கொண்டு இருந்தான்... சீக்கிரம் விண்பா எழ அவன் வேண்டிக் கொண்டு இருந்தான்...

கோபமான கோட்டை அருகில் இருந்த மரத்தைப் பார்க்க அந்த மரம் வெடித்து சிதற, அந்த மரத்தில் இருந்து அருகில் இருந்த மரத்துக்கு தாவினார்...

இப்படியாக அவர் கோட்டைக்கு போக்கு காட்ட..., அந்த காட்டில் இருந்து பெரும்பான்மையான மரம் எல்லாம் தானாக வெடித்து சிதறியது... ஆனாலும் மகரிஷியை கோட்டை அழித்த பாடு இல்லை...

இதில் எரிச்சலான கோட்டை சாமுண்டியை நோக்கி “ நீங்கள் ஊரை நோக்கி கிளம்புங்கள்“ என கட்டளையிட...

அக்ரதா, விண்பா பின்னே சென்றான்... அவள் எப்பொழுதும் விண்பாவுக்கு துணையாக இருப்பேன் என்று அவன் பின்னே சென்றான்...

அவர்களை ஊரை அடைந்ததை அறிந்த கோட்டை, மகரிஷியை நோக்கி கோபமாக திரும்ப, அவரோ மணலை கிழித்துக் கொண்டு, சீறி வெளியில் வந்தார்...

அவர் ஒரு கரையில் நின்றால்மட்டுமே கோட்டை அவரை பிடித்து அழிக்கவோ, எதுவோ பண்ண முடியும்.. ஆனால் அவரோ அவளிடம் அகப்படாமல் போக்குக் காட்டிக் கொண்டு இருந்தார்...

காட்டில் மரம் அழிந்தும், பூமியில் பிளவு பல ஏற்பட்டும் அவரை கோட்டையால் பிடிக்க முடியவில்லை.... அப்பொழுது தான் அவள் கண்ணில் அந்த சிலைபட்டது...

அவரை பார்த்து பெரும் குரலெடுத்து சிரித்த கோட்டை அவளின் வேலையை முடித்துக் கொண்டு காலையில் சூரியன் உதிக்கும் தருணம் கெளதம் கோட்டையில் நின்று மயங்கி இருக்கும் விண்பாவை பார்த்துக் கொண்டு நின்றாள்....

கட்டவிழ்க வருவான்...
 




Priyapraveenkumar

அமைச்சர்
Joined
Feb 19, 2018
Messages
2,340
Reaction score
2,705
Location
Coimbatore
Payangara ud:eek::eek::eek::oops::oops::oops:(y)(y)(y)(y)...maharishi,samudi and kottai ellarume thangaloda sakthiya veachu poradinathu romba thrillera iruntahthu......
Maharishi rombave attam katraru,athuku silaya veachu kottai enna pannirkanga......
venba pilaichittala........waiting for next ud....
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top