• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode Pesum silaiye..kattavizhkava..? -Epi - 21 (Final)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
ஹாய் டியர்ஸ். எல்லாரும் எப்படி இருக்கீங்க.. நான் ரொம்ப ஹாப்பியா இருக்கேன்.. இந்த கதை எப்படி ஆரம்பித்தேன்னு எனக்கே தெரியல.... பொதுவா எனக்கு சித்தர் பத்தி படிக்க ரொம்ப பிடிக்கும். அதிலும் அவர்களின் வாழ்க்கை முறையும், அவங்க ரகசியமும் ரொம்ப சுவாரஸ்யமா இருக்கும்... அதிலும் சித்தர்கள் பெரும்பாலும் நல்லவர்களாக இருப்பாங்க என்று தான் நான் இத்தனை நாள் படிச்சுட்டு இருந்தேன்...

அப்படி தான் ஒரு நாள் சித்தர் வாழ்க்கை படிச்சுட்டு இருக்கும் போது அதுல ஒரு சித்தர் ஒரு இளவரசி மேல் காதல் கொண்டு அவளை தன் பால் திரும்பி அவளை மணந்துக் கொண்டு, குழந்தையும் பிறக்கும் அதன் பிறகு இல்வாழ்க்கை அவருக்கு அவருக்கு சலிச்சுப் போக மீண்டும் காட்டை நோக்கி போவார்.. இதை படிச்சதும் ஷாக் ஆகிட்டேன். இப்படி சித்தர் இருப்பாங்களா? அப்படின்னு.... அது என் மனசின் ஓரத்தில் இருந்துட்டே இருந்திருக்கும் போல அது தான் இங்க ஒரே ஒரு சித்தரை கொஞ்சம் மோசமா காட்டிட்டேன் ஹா..ஹா... அதிலும் உண்மையா ஒரு சித்தருக்கு கடவுளை விட பெரிய ஆள் ஆக வேண்டும் என்று ஆசை இருந்ததாகவும், அவர்களை கடவுள் சபித்து இடைதட்டில் விட்டதாகவும் முன்னோர் கதை உண்டு... உண்மைய சொல்லனும்னா நம் முன்னோர் வாழ்க்கை முறை, சித்தர் வாழ்க்கை, பழங்கதைகள் எல்லாம் நாம் தெரிஞ்சு வச்சுக்கணும்... அது தான் எனக்கு தெரிந்ததைப் பற்றி தான் “ உன் உயிர் தா..! நாம் வாழ..!! “ கதையிலும் சொல்லிருப்பேன்... இந்த கதை “ பேசும் சிலையே.. கட்டவிழ்கவா..? “ இதுலயும் எனக்கு தெரிஞ்ச கொஞ்ச விஷயம் சொல்லிருப்பேன்....உங்களுக்கு சித்தர் பத்தி தெரியுமா என்று தெரியல... அப்படி தெரிந்தாலும் அவருடையல் பல நன்மை தரும் மூலிகை, அவர்களின் மந்திர, தவம் பற்றி தெரிந்திருக்கும்... மத்தபடி தெரிந்திருக்குமா என்று தெரியல... அப்படி தெரியலை என்றால் படித்து தெரிஞ்சுகிடுங்க என்று தான் இந்த கரு எடுத்தேன்.. இதில் வருவது நிறைய சித்தர் ரகசியங்கள் தான்....அதனால் தான் ஹீரோ, ஹீரோயினி அவ்வளவா வரமாட்டாங்க... நேரம் கிடைத்தால் அடுத்த கதை அழகான காதல் கதையா கொண்டு வருகிறேன்....

அழகா தளம் அமைத்துக் கொடுத்த @smteam அவங்களுக்கும் ரொம்ப ரொம்ப நன்றி...

அப்புறம் முக்கியமா என்னோட வாசகிகளுக்கு நன்றி சொல்லியே ஆகணும்.. தினமும் எபி படித்து அழகா உங்க கமண்ட்ஸ் சொல்லி.. அக்கியை திட்டி, சித்தரை திட்டி , அக்கியை பாராட்டி, எழிலை பாராட்டி, கோட்டையை பாராட்டி, விண்பாவை பாராட்டி என்று தினமும் வர உங்க கமெண்ட்ஸ் பார்த்து ரொம்ப சந்தோசமா இருக்கும்... மனசுல சொல்லிப்பேன் “ ஆஹா.. ஷாந்து உன் கதையையும் படிக்க மக்கள் இருக்காங்க “ என்று சந்தோசபடுவேன் ஹா..ஹா.. அது ஒரு தனி சந்தோசம்... சைலென்ட் ரீடர்ஸ் முகநூல் இன்பாக்ஸ் வந்து “ உங்க கதை அழகா இருக்கு... வித்தியாசமான திங்கிங் “ என்று சொல்லுறப்ப.. ஷாந்து ஒரே பிளையிங்க் தான்.... அப்படி இப்படி என்று எப்படியோ நல்ல படியா கதையை முடிச்சுட்டேன் என்று தான் நினைக்குறேன்....

ஒரே ஒரு ஆசை மட்டும் தான் எனக்கு “ இன்னைக்கு எபி படிகுறவங்க எல்லாரும் ஒரு லைக், அப்புறம் கதை நல்லா இருந்தா ” சூப்பர் “ என்றும், கதை நல்லா இல்லை என்றால் “ இன்னும் கொஞ்சம் நல்லா எழுதுங்க “ என்றும் கண்டிப்பா சொல்லுங்க “ சொல்வீங்க தானே???? இந்த பச்சபிள்ளையை ஏமாத்த மாட்டீங்களே..? நன்றி டியர்ஸ்....

sathya durai, vadivelammal, viha, suryas, Mathiman, Priyapraveenkumar, shalu, Sony, Nadarajan, GREENY31, sandhiya sri, radhaviswa, banumathi jayaraman, Radhadevi, Shanthi vairam, Riha, Pradeep, AnithaKarmegam
Snehasree, Sakthipriya, ashsuma, உங்க எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி டியர்ஸ்.... வேற யாரையாச்சும் விட்டுருந்தா உங்க வீட்டு பிள்ளையா நினைச்சு மன்னிச்சு விட்டுருங்க டியர்ஸ்.:(:(:(... ஹாப்பியா எபி படிங்க... என்ஜாய்..:love::love::love::love::love:
 




Last edited:

shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
கட்டு – 21

அவளின் அழுத்த திருத்தமான பதிலில் அவள் ஒரு முடிவுடன் தான் வந்திருக்கிறாள் என தெரிய அவளிடம் தன் நிலையை உரைக்க எண்ணினான்....

அவள் எவ்வளவு அழகானவளோ அதே அளவு பிடிவாதமும் கொண்டவள், தான் நினைத்ததை சாதிக்க தயங்காதவள்... அது தான் இப்பொழுதே இவனை தேடி வந்துவிட்டாள்....

மெதுவாக அவளை நிமிர்ந்துப் பார்த்தவனுக்கு அவளின் முறைப்பு பலனாக கிடைக்க.. தடுமாற்றத்துடன் “ விண்பா.. உன்னை அக்கி விரும்பினான் “ என..
அவனை முறைத்த அவள் “ அதுக்கு “ என கூர்மையாக பார்த்துக் கேட்க..,


“ அவன் உன்னை ரொம்ப விரும்பினான்.. அது எனக்கு தெரியும்... அதான்..” என இழுக்க.... ஒருவேளை பின்னாளில் இவளை அக்கி விரும்பின விஷயம் தெரிந்தால், தான் அவளை ஏமாற்றியதாக அவள் எண்ணிவிட்டாள் என்றால் தன்னால் தாங்க முடியுமா?? இப்படி பலதும் எண்ணி தான் அவன், அவளை விட்டு விலகி இருக்கிறான்....

“ சரி “ என சொல்ல, ” இது என்ன பதில் “ என்பது போல் அவளைப் பார்த்து நின்றான்...

“ அவன் கிட்ட இருந்து உன்னை தட்டி பறிச்சதுப் போல் இருக்கு எனக்கு.. அது தான்.. “ உன்னை விட்டு விலகிப் போறேன் என அவள் முகம் பார்த்து சொல்லும் தைரியம் இல்லாமல் தடுமாற...

“ ம்ம்.. அதுதான் நீ..” என எடுத்துக் கொடுத்து அசையாமல் நிற்க....

இதற்கு மேல் என்ன சொல்வது என தெரியாமல் நிற்க, “ம்ம்.. மேல சொல்லுங்க “ என பார்வைப் பார்த்து நின்றாள் அவள்...

“ அது தான் உன்னை ...” என இழுக்க..

“ ம்ம்.. என்ன விட்டு போயிரலாம்னு நினைத்து இங்க வந்து இருக்க.. அது தான சொல்ல வர “ என கோபமாக கேட்க...

“ இல்ல.. பிங்கி உன்ன விட்டு விலகி போகனும்னு நினைக்கல.. கொஞ்ச நாள் விலகி இருக்கலாம்னு நினைச்சேன் “ என கூற..

“ எனக்கு தெரியும் நீ எதுக்கு என்னை விட்டு விலகி இருக்கன்னு.. என்னை அவன் சிலையில் அடைச்சு வச்சுருந்தான்... அவனுக்கு நான் வேணும்னு.. என் மனசு அவன் பின்னாடி போச்சுன்னு தானே நீ என்ன அவாய்ட் பண்ணுற எனக்கு தெரியும், ஆனா அந்த சிலையில் இருந்த நாள் முதற்கொண்டு எனக்கு உன் நியாபகம் மட்டுமே இருந்துச்சு... அவன் என் பக்கத்துல வாரா நேரம் எல்லாம் நான் உன் மனசை நெருங்குனேன் இது உனக்கு தெரியவே இல்லையா..? இப்போ அக்கி என்ன லவ் பண்ணுனான் அது தான் விலகி இருக்கேன்னு சொல்லுற.. நீ என்ன தப்பா நினைசுட்டல..? போ.. போ.. நீ எனக்கு வேண்டவே வேண்டாம்... போ... “ என கண்ணை துடைத்துக் கொண்டு வெளியில் செல்ல முயல, அவளால் அங்கிருந்து அசைய முடியவில்லை...
“ எங்கே.., என்னை பார்த்து சொல்லு நான் உனக்கு வேண்டாமா ” என முரட்டுத்தனமாக கேட்டவன், அவளை தன் கைகளுக்குள் சிறைசெய்திருந்தான்....


“ ஏன் எழில் என்ன விட்டு வந்த “ என தளர்ந்துப் போய் அவள் கேட்க..

“ பிங்கி “ அவள் கலங்குவது தாங்காமல் இறுக்க அணைத்துக் கொண்டான்...

“ அக்கி, என்னை விரும்பினான் என்று என்னை விட்டு வந்த, சரி.., அதுல நான், என் மனசு உனக்கு புரியவே இல்லையா... அதிலும் நான் உன் மேல வச்சுருக்க காதல், எப்பொழுதும் உன்னையே நினைச்சுட்டு இருந்தேனே, அதிலும் உன்னை பத்தி நினைவு வந்ததும் உன்னை பார்க்க ஓடி வந்தேனே... இது எதுவுமே உனக்கு தெரியவே இல்லையா “ என வேதனையாக கேட்க... அவன் நெஞ்சை பிசைந்தது,

“ அதானே..? இதை எப்படி மறந்தேன், அவள் மன வேண்டுதல் தானே என்னை மீண்டும் உயிர்க்க வைத்தது.. அவள் காதலை சாதரணமாக எண்ணி விட்டேனா?இல்லை என் காதல் பொய்யானதா..? “ என தனக்கு தானே கேட்டுக் கொண்டான்.....

“ உன் நினைவு வந்ததும், உன்னை தான என் கண் தேடிச்சு, அதிலும் இந்த பச்சை கண்ணு தானே என் நினைவில் முதலில் வந்தது, அப்படின்னா.. நான் உங்க மேல உயிரா தான இருக்கேன்...,

நீ என்மேல உண்மையான பாசம் வைக்கல, அது தான் ஈசியா என்னை விட்டு வந்துட்ட.., என்னை பார்க்க வரல, என்னை பிரிய முடிவெடுத்துட்ட....
மனத்தால்.., தினமும் உன் நினைவோடு கூடி கலந்தேனே.., அதற்கு என்ன அர்த்தம், உன்னை உயிரா நினைச்சதுனால தான.., உன்னை விட்டு பிரிய கூடாதுன்னு தானே...?


ஒருவேளை கனவில் தானே இவள் கூட கூடி கலந்தேன், நிஜத்திலா அப்படி இருந்தேன் என நினைச்சு தான் என்னை விட்டு வந்தியா..? நானும் எனக்கு எல்லாம் நினைவு வரவும் நிஜத்தில் தான் அப்படி இருந்தேன்னு நினைச்சு தான் நீ என்னை தேடி வருவன்னு நெனைச்சேன்,, ஆனால் நீ வரவே இல்லை..., அதுக்கு பிறகு தான் எல்லாம் நினைவு வந்துச்சு... உன்கூட நான் இருந்தது எல்லாம் கனவுதான்னு..

அது தான் உன்னை நானே தேடி வந்தேன்.. ஆனா உனக்கு என்னை பத்தி, என் மனசை பத்தி எந்த கவலையும் இல்லாம பிரிய நினைச்சுட்ட..
சிறு விசும்பலுக்கு பின் அவன் நெஞ்சில் இருந்து எழுந்துக் கொண்டு,


கண்ணீரை துடைத்து விட்டு “ ஒரு வேளை, சித்தர் என்னை சிறைபிடித்து வைத்ததும், அக்கி என்னை காதலித்ததும், உன்கூட நான் கனவில் அப்படி இருந்ததும், எல்லாம் பார்த்து என்னை கேவலமானவள்ன்னு நினைச்சுட்டியா..? “ என கேட்க.... அவ்வளவு தான் அவனுக்கு எங்கிருந்து தான் அவ்வளவு கோபம் வந்ததோ..

“ பிங்கி...! இப்போ நீ வாயை மூடல.. நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது... வாய் இருக்குன்னா என்ன வேணா பேசுவியா நீ...? என்ன சொன்ன.. நான் உன்னை கேவலமா நினைப்பேனா...? ஓ.. காட்... ஏண்டி.. ஏன் இப்படி பேசி என்னை உயிரோட கொல்லுற...,

இப்போ தான் ஒருத்தன் அவன் உயிரை எனக்கு தந்து... நீ நல்லா இருடா மகாராசான்னு அவன் போய் சேர்ந்துட்டான், அந்த குற்றவுணர்ச்சியே இன்னும் போகல, இதுல நீ வேற ஏண்டி இப்படி கொல்லுற...

அக்கி.., ரொம்ப நல்லவண்டி., அத்தனை வருஷம் உன் கூடவே இருந்த அவனுக்கு, இத்தனை அழகான, அன்பான பொண்ணு மேல காதல் வருவது சாதாரணம் தான், அதிலும் அவன் உன் மேல மலையளவு காதல் வைச்சிருந்தும், உன் கிட்ட ஒண்ணுமே சொல்லாமல் உன் மனசுக்கு பிடிச்ச நல்ல நண்பனா இருந்தாண்டி...


ஆனா, நான் உன்னை பலமுறை என் மனசால தான் விரும்பி, அங்க வந்து, அவன் உன்னை விரும்புறான்னு தெரிஞ்சும் அவன் கிட்ட இருந்து உன்னை பிரிசுட்டேன்.., அப்படி இருந்தும் உன்னை என்கையை விட்டு போக வச்சுட்டேன். அந்த சித்தர் கையில நீ மாட்டுன... அப்படி இருந்தும் அங்க உன்ன கொண்டு சேர்த்தது அவனா இருந்தாலும்,

அவன் உயிரை கொடுத்து, என்னை வாழவைத்து உன்னை காக்க வைத்தவண்டி அவன்... அவனுக்கு எப்படி நான் துரோகம் பண்ணமுடியும் நீயே.. சொல்லு... நீ கேவலமானவ இல்லடி நான் தான் கேவலமானவன்... ஒரே ஒரு முறை நான் அக்கியை பார்த்து அவன் கிட்ட மன்னிப்பு கேட்டாதாண்டி எனக்கு இந்த குற்றவுணர்ச்சி போகும்... அதற்கும் வழியில்லாமல் ஆகிட்டே... டேய்... அக்கி நீ எங்கடா இருக்க... “ இயலாமையில் கைகளை முகத்தில் வைத்து அழுந்த துடைத்தவன் அப்படியே முழங்கால் போட்டு அமர.., அவன் அருகில் ஓடி வந்த விண்பா அவனை தன் நெஞ்சில் சாய்த்துக் கொண்டாள்....

விண்பா வரவும் அவள் பின்னே வந்தான் அக்கி. இவர்கள் பேசுவதை கேட்ட அவனுக்குள் பெரும் சூறாவளி.... எப்படியாவது ரெண்டு பேர் மனசையும் சரி பண்ண தான் இப்போ இவங்க முன்னாடி நிற்கணும் என எண்ணி “ ஒரே ஒரு முறை மட்டும் எனக்கு மனிதன் கண்களுக்கு தெரியும் சக்தியை எனக்கு கொடு, அதன் பிறகு நான் இவர்கள் முன் வரவே மாட்டேன் “ என கோட்டையிடம் வேண்டுதல் வைக்க..

அடுத்த நிமிடம் அவர்கள் முன் நின்றான் அக்கி... “ குட்டிம்மா “ என அழைக்க..

அந்த குரல், அவளின் அக்கியில் குரல்... “ அ.. அக்கி.. எங்கடா இருக்க “ என சந்தோஷ மிகுதியில் கேட்க... எழிலனும் ஆவலாக அந்த அறையை நோக்கி கண்களை சுழல விட்டான்...

அவர்களை நோக்கி “ உங்கள் முன் தான் நான் நிற்கிறேன் “ என கூற
ஆவலாக கண்களை சுழற்றிப் பார்த்தவர்களின் முன் ஒரு புகை மண்டலமாக நின்றான் அக்ரதா...


“ எனக்கு குட்டிம்மா எப்பொழுதும் சந்தோசமா, இருக்கணும்... அவள் சந்தோசமா இருக்க நீ அவளுக்கு வேண்டும்.. இதை அறிந்து தான் நான் என் உயிரை உனக்கு தந்து உன்னை எழுப்பினேன்... ஆனாலும் அதன் பிறகு என் உயிர் உனக்கு தேவை இல்லாமல் சென்று விட்டது... அது தான் நான் உன்னை விட்டு வெளியில் வந்தேன்.... குட்டிம்மாவின் மன பலமும், அவளின் வேண்டுதலும் தான் உன்னை இப்பொழுது இங்கு நிற்க வைத்திருகிறது...

உனக்கு இருக்கும் குற்றவுணர்ச்சி வீணானது... என்னிடம் நீ மனிப்பு கேட்கவேண்டாம் சகோதரா... உனக்கு அவள், அவளுக்கு நீ அது தான் விதி...
என் தவறுக்கு தண்டனையாக என் காலம் எடுத்துக் கொள்ளப்பட்டது.. அதற்கு காரணம் முழுக்க முழுக்க நானே.... அடுத்த பிறவி என்று ஓன்று எனக்கு இருந்தால் உங்களுக்கு மகனாக பிறக்கிறேன்... அப்பொழுது எனக்கு என் இந்த குட்டிம்மா மாதிரி ஒரு மனைவி வேண்டும்.. உங்களைப் போல் திகட்ட.. திகட்ட காதலில் திளைக்க வேண்டும்... நான் எப்பொழுதும் உங்களுக்கு துணையாக இருப்பேன். “ என்று கூறி காற்றாக சென்றான் அவன்...

செல்லும் பொழுது அவளின் கேடு காலத்தையும் எடுத்து சென்றான்.. இனி ஒரு காலும் அவனின் குட்டிம்மா அதை நினைத்து வருந்த கூடாது என்று... அவள் நினைவில் எழிலனும் – விண்பாவும் காதலர்களாக இருந்த அந்த பசுமையான நினைவு மட்டுமே....
 




shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
எத்தனை நேரம் அக்கியில் நினைவிலும், அவனின் வார்த்தைகளிலும் பிணைத்து இருந்தார்களோ தெரியவில்லை... இவர்களில் நிலையை கண்ட அக்கி வேகமாக காற்றை ஜன்னல் வழியாக இவர்களை நோக்கி அனுப்பி விட்டு, இவர்களை வாழ்த்தி சென்றான்...

தங்கள் நிலையை காற்று கலைக்க... இருவரின் கண்களிலும் அக்கியை நினைத்து கண்ணீர் துளி... எழிலன் மனதில் மிகவும் உயர்ந்து விட்டான் அக்கி... விண்பா மனதிலோ அவனின் மேல் பாசம் அதிகரித்தது....

இனியும் இப்படி இருந்தால் சரி வராது என எண்ணிய எழிலன் “ ஏண்டி இத்தனை நாளா என்னை தேடி வரலை “ என சிறு கோபம் காட்டி அவளை அணைக்க.......

அவனுக்கு தான் இப்பொழுது மனதில் ஏதும் இல்லையை.. இருந்த எல்லாத்தையும் அக்கி வந்து துடைத்து எரிந்து விட்டான்... அது தான் விண்பாவின் காதலனாக மாற அவன் ஆசைக் கொண்டான்...

கோபமாக அணைத்த அவனது கரங்கள் மொத்தமாக தழுவிக் கொண்டது, அவனின் கோபமும், அவனின் தழுவலும் கொஞ்சமும் அவளை அசைக்கவே இல்லை.... அவளின் அசையா நிலையை கண்ட அவன் “ ஆஹான்.. மேடம் கோபமா இருக்காங்களா..? “ என மனதில் எண்ணி...

“ ஏண்டி... என்னை இத்தனை நாளா பார்க்க வரலை “ என அவளை அணைத்துக் கழுத்தில் முகம் புதைத்து மீண்டும் கேட்க...

“ ஏன்... நீ என்னை எதுக்கு பார்க்க வரலை “ என அவனை தன்னில் இருந்து பிரித்துக் கேட்க..

“ நான் உன்னை பார்க்க வந்தா.. என்னால கையை வச்சுட்டு சும்மா இருக்க மாட்டேன்.” என கண்ணை சிமிட்டிக் கொண்டு அவள் நெஞ்சில் முகத்தை புதைத்துக் கொள்ள...

அவன் தோளில் கை வைத்து அணைத்துக் கொண்டவளை, கண்கள் மின்ன தலையை உயர்த்திப் பார்த்தவனின் கண்கள் அவள் மேல் பாய..,

அவன் பார்வை தன் மேல் தாறுமாறாக பதிய, வெட்கம் கொண்டவளை, அப்படியே அணைத்துக் கொண்டே அப்படியே படுக்கையில் அவளை தள்ளி, அவள் மேல் படுத்தவனின் இதழ்கள் அவள் கழுத்தில் புதைந்து, கன்னத்தில் பல் தடம் பதிய கடிக்க “ ஸ்.. ஆஆ... வலிக்குது மாமு “ என அவனை தன்னில் இருந்து பிரிதெடுத்தாள்...

இருவரின் பார்வைகளும் நேருக்கு நேராக சந்தித்துக் கொள்ள... அவனின் பார்வையோ அவளின் மாமு என்று உச்சரித்த இதழின் மேல் நிலைத்திருக்க... அவன் கண்களில் உள்ள யாசிப்பில் தடுமாறிப் போனாள்...

“ பிங்கி “ என புலம்பியவன் அவள் இதழ்களுக்குள் மூழ்கிப் போக, அவன் கரங்கள் கொஞ்சம் கொஞ்சமாக இடம் மாற....

அவன் மொத்தமாய் அவள் மேல் கவிழ்ந்திருக்க, அவன் உணர்வுகள் அவளை பலமாய் தாக்கியது... ஆனால் வெளியில் காத்திருக்கும் பெரியவர்களை நினைக்கும் பொழுது, பெரும் அவஸ்தையான உணர்வைக் கொடுத்தது...

அவன் மீண்டுமாக அவளுள் மூழ்க நினைக்க “ எழில்...! வெளிய அப்பா இருக்காங்க “ என மெதுவாக முணுமுணுக்க..

அவனின் உணர்வுகள் அணைத்தும் சட்டென வடிய அவளை விட்டு விலக.., அவள் கோலம் கண்டு அவளின் புடவையை எடுத்து அவள் மேல் போட வர... அவனை தடுத்தாள் அவள்..,

அவன் பார்வை அவள் மேல் பதிந்து தடுமாற, தன் பார்வையை வேகமாக திரும்பிக் கொண்டு தலையை அழுந்த கோதிக் கொண்டான்... அவனை தன் பக்கமாக திரும்பியவள் “ இதை எல்லாம் யார்... சரி பண்ணுவதாம் “ என அவன் முகம் பார்க்காமல் வினவ...

தன்னை கட்டுப் படுத்திக் கொண்டவன், “ சா.. சாரி. பிங்கி..! நா... நான் இப்படி எல்லாம்... “ சொல்ல வந்ததை சொல்லாமல் தடுமாற...

“ இவ்வளவு காதலை என் மேல வச்சுக்கிட்டு.. எப்படி என்னை விலகி வந்தீங்களாம்..? போ.. எனக்கு எதுவும் வேண்டாம் “ என அந்த பக்கம் திரும்பிக் கொள்ள...

அவளின் அந்த பக்கமாக அவளின் மேல் புரண்டு வந்தவன் அவள் கன்னம் தாங்கி, தன் முகம் காண வைத்தவன்,

“ என் பிங்கி.. என்னை தேடி வருவா என்ற நம்பிக்கையில் “ என அவள் கண்களைப் பார்த்து அழுத்தி சொன்னவனின் பார்வை உண்மையை உரைக்க.. (விட்டத்தைப் பார்த்து அவளுக்காக காத்திருந்த கதை அவனுக்கு தானே தெரியும்.. அது தான் பயபுள்ள உண்மையை பேசுது )

“ உண்மையை சொன்னதால். உங்களை விடுறேன்.. இல்லன்னா நடக்குறதே வேற..? “ என எழுந்துக் கொள்ளும் எண்ணமே இல்லாமல் அவள் உரைக்க அவன் தான் தடுமாறிப் போனான்.. “ கொல்லுரடி ராட்சசி..” மனது செல்லமாக சிணுங்கிக் கொண்டது...

“ பிங்கி... உங்க அப்பா, அம்மாவுக்கு நம்ம கல்யாணத்துக்கு சம்மதம் தானே, அதாவது நான் அங்கயே இருந்து இப்படி பண்ணிட்டேன்னு.. யாருக்கும் வருத்தம் இல்லை தானே “ என சிறு தவிப்புடன் வினவ...

“ உங்களுக்கு நிஜமாவே அவங்களைப் பத்தி புரியல எழில்.. என்னை இங்க அழைச்சுட்டு வந்திருக்காங்க இதுலையே அவங்க மனசு புரியலியா..

அவங்களுக்கு உயிரா இருந்த அவங்க பொண்ணை காப்பாத்த வந்த தெய்வம் நீங்க ” என அவள் உணர்ச்சி வயப்பட்டு பேச. அவளை வேகமாக இழுத்து அணைத்துக் கொண்டான்....

“ ஹையோ.. எவ்ளோ நேரம் ஆகிட்டு.. முதல்ல கிளம்பி வெளிய வா.. நான் வெளியில் இருக்கேன் “ என நகர பார்க்க..

அவனை பிடித்து தடுத்த அவள் “ இதை யார் சரி பண்ணுவா “ என படுத்துக் கொண்டே அவனைப் பார்த்து கேட்க..

“ அடியே.. ஒரு மனுசனை சும்மா இருக்க விடமாட்டியா..” என மனதில் அவளை செல்லமாக திட்டிக் கொண்டு அவள் அருகில் அமர்ந்தும், சில பல சேட்டைகள் செய்தும் அவள் கூறிய வேலையை செய்து முடித்தான் அவன்..
.
மெதுவாக கீழ் இறங்கிய அவள், கலைந்த தலையை நேராக்கி அவன் முகம் பார்க்கா அடக்க மாட்டாமல் சிரித்தாள் அவள்...


அவள் சிரிப்பை கண்ட அவன் “ என்னடி தனியா சிரிக்க “ என கேட்க..

அருகில் இருந்த கண்ணாடியை எடுத்து அவன் கையில் கொடுத்தாள் அவள்...

அதை பார்த்த அவன் வேகமாக தன் கையை கொண்டு அவன் வாயை மூடி.. பார்வையால் “ இப்படி தான் பண்ணுவியா ராட்சசி “ என அவளை மிரட்டிக் கொண்டு வாயை அழுந்த துடைத்தான்..

அவளின் உதட்டு சாயம் அவன் இதழில்... “ அவங்க இருக்காங்க என்று வந்ததும் சொல்லமாட்டியா பிங்கி.. அது தெரியாம உன்னை சீண்டி இப்போ பாரு “ என செல்லமாக முறைக்க..

“ உள்ள வந்த உடனே அப்படியே விழுங்குற மாதிரி பார்த்து வச்சா யாருக்கு தான் பேச்சு வருமாம்.. “ என கூறி அவன் சட்டை காலரைப் பிடித்து அவளை நோக்கி இழுக்க...

“ பிங்கி.. போ பேஸ் வாஷ் பண்ணிட்டு வா “ என வாஷ் ரூம் பக்கம் தள்ளியவனை தன்னோடு இழுத்து கதவை அடைத்துக் கொண்டாள் அவள்...

கதவை சாற்றி அதன் மேல், அவனை சாய்த்து, அவள் மேல் சாய்ந்து நின்று “ எப்போ மாமு, நாம கல்யாணம் பண்ணிக்கலாம் “ என அவன் சர்ட் பட்டனை பிடித்து திருகிக் கொண்டே கேட்டவளை நோக்கி..

“ நீ இன்னும் படிச்சே முடிக்கல பிங்கி.. என்ன ஆனாலும் சரி இன்னும் 1 வருஷம் கழிச்சு தான் கல்யாணம் “ என ஸ்ட்ரிக்ட் ஆபிசராக அவன் கூற.. அவனை முறைத்துக் கொண்டே முகத்தைக் கழுவிக் கொண்டு இருவரும் வெளியில் வர...

அவர்களை கண்டு ஓடி வந்த கெளதம் “ மாப்பிள்ளை.. இந்த மாமாவை மன்னிசுடுங்க.. அன்னைக்கு தெரியாமல் உங்களை அடிச்சுட்டேன் “ என கலக்கமாக வினவ..

“ அட.. அத விடுங்க மாமா... அன்னைக்கு அடிச்சதுக்கு எனக்கு ஒரு பரிகாரம் பண்ணனும் “ என முகத்தை சீரியசாக வைத்துக் கேட்க..

“ சொல்லுங்க மாப்பிள்ளை “ என கெளதம் கூற..

“ இன்னும் சரியா ஒரு வருஷம் கழிச்சு எங்க கல்யாணத்தை வைக்கணும் “ என சிரிப்புடன் கேட்க..

“ அவ்ளோ நாள் வெயிட் பண்ணணுமா “ என கெளதம் கேட்க..

“ ஆமா.. மாமா பிங்கி படிப்பை தொடரட்டும்... மனசு, உடல் எல்லாம் நல்லா நார்மலா ஆகட்டும் அதுக்கு பிறகு கல்யாணத்தை வச்சுப்போம் “ என அவளைப் பார்த்து கண்சிமிட்டிக் கூற...

“ சரி.. மாப்பிள்ளை “ என கூறி அவர் கிளம்ப..

அவன் அருகில் வந்த அவள் “ டேய்.. உன்னை பத்தி எனக்கு நல்லாவே தெரியும்டா.... கல்யாணம் முடியும் வரை என் பக்கமே நீ தலையை வைச்சு படுக்க கூடாது.... திருட்டு தனமா சைட் அடிக்கணும்னு காலேஜ் பக்கமோ, இல்லை வீட்டுப் பக்கமோ வந்த மவனே நீ கைமா” தாண்டா என கல்யாணம் தள்ளிப் போன கோபத்தில் அவனின் எண்ணத்தைக் கூற..

“ ஈஈஈ.. பிங்கி எப்படி கண்டுபிடிச்ச என் ஐடியாவ “ என பல்லை இளித்துக் கேட்க..

“ மொச பிடிக்க மூஞ்ச பார்த்தா தெரியாதா... இந்த மூஞ்சு என் பின்னாடி லோ... லோன்னு... அலைய ஆசைபடுதுன்னு உன்னை பார்த்ததும் கண்டு பிடிச்சுட்டேன் மாமு.. சும்மா... சும்மா... காலேஜ் பக்கம் வந்த மவனே வாச்மேனை விட்டு கல்லெடுத்து அடிக்க விடுவேன் “ என கண்ணை உருட்டி அவனை மிரட்ட....

அவனுக்கு அவளை நிறைய காதலித்து பின் கல்யாணம் பண்ணி திகட்ட.. திகட்ட வாழ ஆசை அது தான் அவளை காதலிக்க அவன் ஒரு வருடம் டைம் கேட்டான்.. அதையும் அவனின் பிங்கி கண்டுப் பிடித்து அவனை கலாய்க்க.. தடுமாறிப் போனான்... ஏற்கனவே இவர்கள் இருவரும் மனத்தால் இணைத்தவர்கள்.. இருவரின் மனத்தையும் படித்தவர்கள்.. ஈசியா ஒருவர் மனதை மற்றவர் படித்து விட்டனர்...

கௌதமைப் பார்த்து “ மாமா.... பிங்கியை கொஞ்சம் கழிச்சு வீட்டுல விடவா ” என தயங்கிக் கேட்க....

அவள் தோளில் தட்டிக் கொடுத்து “ சரி. கெளதம்.. ஆனா பத்திரம் “ என கூற...
“ மாமு.. கேட்டுக்கோ என்னை பத்திரமா வீட்டுல விடணுமாம் “ என அவனிடம் கூற


“ இல்லை குட்டி.. நான் கௌதமை பத்திரம் சொன்னேன் “ என கூறி அவளை விட்டு அவர் விலக...

“ டாட்..” என சிணுங்கலுடன் அவரை துரத்தை...

“ பிங்கி உனக்கு இந்த அவமானம் தேவையா “ என துரை வாயை வச்சுக்கிட்டு சும்மா இருக்காம அவளை சீண்ட..

“ டேய்.. மாமு.. நீ செத்தடா மகனே “ என கௌதமை விட்டு எழிலை துரத்த...

அவர்களின் சந்தோசத்தை கண்ட கெளதம் கண்களில் வழிந்த சிறு கண்ணீர் சொட்டை துடைத்துக் கொண்டு “ இதே சந்தோசத்துடன் என் குட்டி வாழ வேண்டும் “ என்று அவசர வேண்டுதல் வைத்து தன் காரில் ஏறி வீட்டை நோக்கி பறந்தான்...

எழிலை துரத்திய பிங்கி.. அதன் பிறகு முடியாமல் போக “ டேய்.. மாமு..முடியலடா “ என கூற..

சிங்கம் தானாக வலையில் சிக்கும் கதையாக “ என்னாச்சு.. பிங்கி “ என பதறி ஓடி வந்தவனைப் பிடித்து அவள் தலையில் “ நங் “ கென்று கொட்ட..

“ ஏய்.. பிசாசு.. ஏண்டி இப்படி கொட்டுற..” என தலையை தேய்த்தவனை “ சாரி..மாமு “ என கூறி அவளும் அவன் தலையை தேய்க்க..

“ பிங்கி “ என காதலுடன் அவளை அணைக்க... “ எனக்கு இப்போ கூட நம்பமுடியலை பிங்கி.. ஆனா நீ என் கைக்குள்ள இருக்க.. இப்போ எப்படி இருக்கு தெரியுமா.. அப்படியே வானத்துல பறக்குற மாதிரி இருக்கு “ என ரசனையாக, அணைத்துக் கொண்டே கூற....

கண்களை சுழல விட்டவளின் கண்களில் அவனின் ராயல் என்பீல்ட் பட “ மாமு.. ஒரு ரைட் போலாமா... அப்படியே உன் பீல் நானும் அனுபவிப்பேன் “ என அவன் முகத்தைப் பிடித்துக் கெஞ்ச......
 




shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
அவளின் ஆசையை நிறைவேற்ற எண்ணி, வீட்டில் சென்று கீயை எடுத்து வந்தவன், வண்டியில் ஏறி ஸ்டார்ட் செய்ய.. அவன் பின்னே ஏறி அவனின் தோளில் கை வைத்து பிடித்துக் கொண்டாள்...

“ அட பக்கி.. லவர் கூட போறோமே.. அப்படியே கிக்கா இடுப்பை பிடிக்காம.. ஆயா மாதிரி தோளை பிடிக்குற... இவளை வச்சு அக்கி மாதிரி பிள்ளையை பெத்துகணுமாம் “ என மானசீகமாக தலையில் கைவைத்தவன் வண்டியை வேகமாக எடுக்க...

தடுமாறிய அவள் தோளில் இருந்து கையை அவனின் இடுப்புக்கு இடம் மாற்றி, அவன் முதுகோடு சாய்ந்துக் கொள்ள... தன் தேகம் சிலிர்க்க.. கண்ணாடி வழியாக அவளைப் பார்த்து, ஒற்றை கண் சிமிட்டி அவன் தன் இடதுக் கையால் தலையை கோத..,

அவன் செய்கையில் மயங்கிய அவள் இன்னும் அவனுடன் நெருங்கி அமர.., அவளை கையைப் பிடித்து மீண்டும் தன் அருகில் நெருங்கி அமர வைத்தவனின் பைக் அசுர வேகம் எடுக்க...

அந்த அனுபவத்தை அவளும் உணர்ந்தாள்., வானத்தில் பறக்கும் உணர்வை.... அத்தனை சந்தோசமாக இருந்தது இருவருக்கும்... எத்தனை கஷ்டப்பட்டு இணைந்திருக்கிறார்கள்...

இவர்களின் சந்தோசத்தை காற்றாக மாறிய அக்கி பார்த்து நின்றான்... இவர்கள் சந்தோசத்தை அழியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணிக் கொண்டான்...

வீட்டுக்கு சென்ற கெளதம் கோட்டை முன் மைத்ரேயியை அழைத்து வணங்கி நின்றான்... இதே சந்தோசத்துடன் அவர்கள் வாழ வேண்டும் என்று... கோட்டையும் அவர்கள் இதே சந்தோசத்துடன் வாழ்வார்கள் என கோவில் மணியடித்து கூறினாள்.... மேலும்.. மேலும் அவர்கள் காதலில் திளைத்து வாழ நாமும் வாழ்த்தி விடை பெறுவோம்....

............................................................................நன்றி..........................................................................
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top