• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Pesum silaiye..kattavizhkava..? - Episode -1

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
ஹாய் டியர்ஸ்.. பேசும் சிலையே.. கட்டவிழ்கவா? முதல் எபி போடுறேன் படிச்சு சொல்லுங்க... இது முழுக்க கற்பனை என்று சொல்லமாட்டேன்.. ஆனாலும் கற்பனை கதை தான்...

கட்டு – 1

“அம்ம்ம்ம்ம்ம்மா” என்ற சத்தம் அந்த வானையே கிழித்தது... அந்த சத்தம் ஒரு பெண்ணின் குரல்.., அந்தசத்தம் ஊரில் நடுநாயகமாக வீற்றிருந்த அந்த கோட்டையின் உள்ளே இருந்து கேட்டது...

கோட்டைநல்லூர் என்னும் கிராமத்தின் நடுவே அமைந்திருக்கும் வீடு.. அது வீடு இல்லை கோட்டை என்று தான் சொல்ல வேண்டும்.. அத்தனை பிரமாண்டம்... அதன் அருகில் ஒரு கோவில்... அந்ததெய்வம் தான் இந்த கோட்டைநல்லூரை பாதுகாத்து வருவதாக கூறுவார்கள்.. அந்தஊர் மக்கள்...

அவர்கள் கூறுவது போல் தான் அந்த ஊரை செழிப்பாக வைத்திருந்தாள் அந்த தாய்.. அவள் தான் “ கோட்டைத்தாய்” என்று அந்த மக்களால் அன்பாக அழைக்கபடுகிறாள்...

இப்பொழுது அந்த கோட்டையில்தான் அந்த தாயின் வாரிசுகள் இருகிறார்களாம்...இப்பொழுது கேட்ட அந்த சத்தத்துக்கும் காரணம் அந்த கோட்டைத்தாயின் வாரிசு கெளதம் மனைவி மைத்ரேயியின் பிரசவ வலி...

கோட்டைத்தாய் ஒரு 15௦ வருடங்களுக்கு முன் வாழ்ந்தவள்.. இப்பொழுது தெய்வமாக இருந்து அவர்களை பாதுகாத்து வருகிறாள்.... அந்த தாயே கெளதம் – மைத்ரேயி தம்பதிகளுக்கு மகளாக பிறப்பேன் என்று வாக்கு கொடுத்திருக்கிறாள்...

கிட்டதட்ட 150 வருடங்களுக்கு பிறகு இப்பொழுது தான் பெண் வாரிசு அந்த கோட்டைத்தாய் வாரிசில் வரபோகிறது... ஆம்… கண்டிப்பாக அது பெண் குழந்தை தான் என்று நம்புகின்றனர் கோட்டைத்தாய் வாரிசுகள்...

ஆனால் மைத்ரேயியின் பிரசவ வலியை கேட்டு கோட்டைத்தாய்க்கு மிகவும் பயமாக இருந்தது.. காரணம் இன்று மட்டும் அவளுக்கு குழந்தை பிறக்கவே கூடாது என்று அவள் கணித்திருந்தாள்...
ஆனால் அவளுக்கு மேலே இருபவர்கள் கணித்தது வேறாக இருந்தது... இந்த நாளில் மைத்ரேயிக்கு குழந்தை பிறந்தால் குறிப்பிட்ட வயதில் அந்த குழந்தை மிக பெரிய கஷ்டத்தை அனுபவிக்கும் என்பது அவள் கணித்தது...


ஆனால் நடப்பதை பார்த்தால் அந்த குழந்தை கண்டிப்பாக கஷ்டத்தை அனுபவிக்கும் போலவே என்று எண்ணி நடப்பதை கவனிக்க ஆரம்பித்தாள் கோட்டைத்தாய்...

அதே நேரம் “ வீல்“ என்ற சத்தத்துடன் கெளதம் வாரிசு வெளியில் வந்தது.. மைத்ரேயி பிரசவத்துக்காக அந்த ஊரின் மருத்துவமனையையே அந்த கோட்டையில் கொண்டு வந்துவிட்டான் கெளதம்... பிறந்தது பெண் குழந்தையே... ஆம், அவர்கள் ஆசைப்பட்டபடியே..

அந்த குழந்தை பிறந்த நேரத்தை கணித்தாள் கோட்டை. பரணி நட்சத்திரத்தில் பிறந்திருந்தது அந்த குழந்தை... பரணி நட்சத்திரத்தில் பிறந்தால் அந்த குழந்தைக்கு தேவி ஸ்ரீ துர்கையின் அருள் எப்பொழுதுமே கிட்டும்... கோட்டைக்கு கிடைத்த அதே அருள்... அந்த நட்சத்திரத்தை அவள் கவனித்ததும் அவள் முகத்தில் பெரும் புன்னகை அதே புன்னகையோடு அந்த கோட்டையை நோக்கி சென்றாள்....

அங்கு குழந்தையை கைகளில் ஏந்தி கண்களில் காதலை தேக்கி மைத்ரேயியை பார்த்துக் கொண்டு இருந்தான் கெளதம்...

இன்று 3 வெள்ளி ஒண்ணு கூடும் நாள்... அந்த நாளில் குழந்தை பிறந்தால் தெய்வ கடாட்சம் இருக்கும் என்று கூறுவது ஐதீகம்... ஆனால் அதே அளவு பெரும் துன்பத்தையும் அந்த குழந்தை அனுபவிக்கும். அதனால் தான் கோட்டை இந்த நாளில் குழந்தை பிறக்க வேண்டாம் என்று எண்ணி இருந்தாள்....

அப்பொழுது அந்த நேரம்.. வானத்தில் மூன்று வெள்ளியும் ஓன்று சேர்ந்தது... ஓன்று சேர்ந்து அதன் ஒளியை ஜன்னல் வழியாக இந்த குழந்தையை நோக்கி வீசியது... இச்செயல் கோட்டைக்கு பெரும் சந்தோசம்.. யாருக்கும் கிட்டாத அருள் கிடைத்திருக்கிறது… ஆனாலும் சிறு பயம்... குழந்தையை நன்றாக பாதுகாக்க வேண்டுமே என்று..

அந்த ஒளியை கண்கள் கூச கண்களை பொடிய பொடிய சிமிட்டி, ஏற்றுக் கொண்டது அந்த குழந்தை... யாருக்கும் கிட்டாத, கோடியில் ஒருவருக்கு இந்த வெள்ளியின் ஆசிர்வாதம் கிட்டவும் அந்த வான் லோகமே ஒரு நிமிடம் அதிசயித்தது...

அவர்களுக்குள் ஒரு குழப்பம்.. " பூலோகத்தில் அப்படி என்ன அதிசயம் நடந்து விட்டது என்று இந்த
வெள்ளி ஆசிர்வதிக்கிறது " என்று.. அதே குழப்பத்துடன்…


அந்த அதிசயத்தை காண தன் தேவிகளுடன் அந்த முக்கோடி தேவர்களும் பூலோகம் நோக்கி கிளம்பினார்கள்...

அவர்கள் வருகையை உணர்ந்த கோட்டை மிக மிக சந்தோசம் அடைந்தாள்...
வந்தவர்கள் குழந்தையின் அழகை பார்த்து அதிசயிட்டனர்.. கூடவே கொஞ்சமே கொஞ்சம் பொறாமையாக உணர்ந்தனர்... அந்த பிரம்மன் மேலும் சிறு கோபம் எழுந்தது..


அந்த பிரம்மன் இந்த குழந்தையை படைக்கையில் பிரம்மா மிக மிக சந்தோசமாக இருந்தான்.. அந்த நிலையில் தான் இந்த குழந்தையை படைத்தான்.. அந்த குழந்தையின் அழகில் மயங்கிய பிரம்மா ஒரு நிமிடம் தடுமாறியதில் அவன் விரல்கள் அந்த குழந்தையின் கன்னத்தில் பட்டு அந்த குழந்தையின் கன்னத்தில் அழகான குழி விழுந்து மேலும் அழகாக்கியது....

இதுவரை இத்தனை அழகான குழந்தை அந்த வான்லோகம், இந்த பூலோகம் இரண்டிலுமே பிறந்திருக்கவில்லை.. முதல் முறையாக காண்கின்றனர்...

முக்கோடி தேவர்களின் தேவதைகள் குழந்தைக்கு தங்கள் ஆசிர்வாதம், அதாவது குழந்தைக்கு இருக்க வேண்டிய குணங்களை அந்த குழந்தைக்கு அருள ஆரம்பித்தனர்..

முதலில் வந்த தேவதை அந்த குழந்தைக்கு அன்பு, காதல் அளவுக்கு அதிகமாகவே அளித்தாள்... ரெண்டாவது தேவதை நல்ல பண்பு, அடுத்த தேவதை நல்ல குணம் இப்படி ஒவ்வொரு தேவதையும் தங்களது குணத்தை அந்த குழந்தைக்கு அருளினார்கள்..

ஒவ்வொருவரும் அந்த குழந்தைக்கு ஆசிர்வாதம் கொடுக்கவும், அந்த குழந்தை கண்கள் கூச கண்களை சிமிட்டியும், தன் பொக்கை வாயை திறந்தும், கன்னம் குழிய சிரித்துக் கொண்டும் உள்வாங்கியது...

குழந்தையின் செயலை பெற்றோர் இருவரும் ரசித்துப் பார்த்தனர்.. அவர்களுக்கு தெரியாதே இவர்கள் ஆசிர்வாதங்கள்....

கடைசியாக வந்தவள் தான் பிடிவாத தேவதை... அவள் முதலில் இந்த குழந்தையை பார்த்து, அதன் அழகை பார்த்து ஒரு நிமிடம் தடுமாறி, எப்பொழுதுமே குழந்தைகளுக்கு ஒரு கடுகளவு தான் பிடிவாத குணம் இருக்க வேண்டும்... அந்த பிடிவாதத்தையே பெற்றோர்களால் சமாளிக்க முடியாததாக இருக்கும்..

ஆனால் இந்த தேவதையோ நாளை நடப்பதை கணிக்காமல் அந்த குழந்தைக்கு நெல்லிக்கனி அளவுக்கு பிடிவாத குணத்தை அருளினாள்.. அந்த ஆசீர்வாததையும் அந்த குழந்தை கண்கள் கூச கண்களை சிமிட்டியும், தன் பொக்கை வாயை திறந்தும், கன்னம் குழிய சிரித்துக் கொண்டும் உள்வாங்கியது...

குழந்தை செயலில் தான், தான் அளித்த அருளால் நாளை நடப்பதை உணர்ந்தாள் பிடிவாத தேவதை.. ஆனால் அருளிய ஆசிர்வாதத்தை திரும்ப பெறமுடியாதே.. இவள் செயலில் கோட்டை மிகவும் அதிர்ந்துவிட்டாள்... இப்படி எல்லாம் நடக்கும் என்று தான் அவள் இந்த நாளில் குழந்தை பிறக்க வேண்டாம் என்று எண்ணினாள்...

இந்த தேவதை செயலால் அத்தனை தேவர்களும் ஒரு அதிர்ச்சியை முகத்தில் காட்டவும் தான் செய்த செயலின் வீரியம் தெரிந்தது அந்த தேவதைக்கு...

அந்த நேரம் அத்தனை தேவதைகளும் சேர்ந்து கோட்டைக்கு சத்தியம் செய்தனர்.. “ இந்த குழந்தைக்கு என்ன பிரச்சனை வந்தாலும் நாங்கள் துணை இருந்து இவளை காப்பாற்றுவோம் “ என்று...
அன்று 2௦ வயதில் கோட்டைத்தாய்க்கு கிடைத்த தெய்வ அருள் இப்பொழுது இந்த குழந்தைக்கோ அவள் கருவில் இருந்து வெளியில் வரவும் கிட்டியது...


இங்கு இத்தனை பிரச்சனை நடப்பது ஏதும் அறியாமல் குழந்தை கண்மூடி தூங்கியது.. அதன் பெற்றோர் கண்கள் புன்னகை சிந்த குழந்தையை பார்த்துக் கொண்டு இருந்தனர்...

கோட்டையும் சிறிது நேரம் அங்கு நின்று இவர்களை பார்த்து கொண்டு இருந்தாள்... அவள் வந்ததின் அடையாளமாக அவள் வருகையை அவள் வாரிசு கெளதம்கு உணர்த்த மெதுவாக அந்த குழந்தையின் அருகில் வந்து மெதுவாக அந்த குழந்தையின் பட்டு சருமத்தை மெதுவாக வருடி விட்டாள்..
ippadi varam koduthal naam avvalavuthan.. super epi sis padikkum poluthe vera logam senru vanthe.. nice epi sis..
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
இன்னும் ஒன்னு இருக்கு பானும்மா..
நீண்ட காலத்திற்கு பிறகு
ஒரு குடும்பத்தில், அம்மனின்
அருளால் ஒரு பெண் குழந்தை
No No ஒரு தேவதை அவதரித்து,
At the sametime, சித்தரின் அருளால்
ஒரு பெண்ணிற்கு பரிசு,
ஐந்து வயதில், ஒரு மகன்,
"அக்ரதா"(Superb name)
வாவ், ஆரம்பமே சூப்பர்பாக
இருக்கே, ஷாந்தினிதாஸ் டியர்?
 




shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
Haiyo enakku andha baby ah neenga explain pannadhu rommmmmba pidichudhu....lovely :love::love::love::love:....so sweet...chinna chinna expression ah kooda azhaga solliteenga.
At the same time agratha sidhu Velai moolama vandhurukkan...nice sis.....waiting for nxt ud eagerly
நன்றி சிஸ்.. உங்களுக்கு பிடிச்சதில் நான் ரொம்ப ஹாப்பி.. உங்க கமெண்ட்ஸ் பார்த்து மீ ஹாப்பியோ ஹாப்பி.. :love:
 




shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
நீண்ட காலத்திற்கு பிறகு
ஒரு குடும்பத்தில், அம்மனின்
அருளால் ஒரு பெண் குழந்தை
No No ஒரு தேவதை அவதரித்து,
At the sametime, சித்தரின் அருளால்
ஒரு பெண்ணிற்கு பரிசு,
ஐந்து வயதில், ஒரு மகன்,
"அக்ரதா"(Superb name)
வாவ், ஆரம்பமே சூப்பர்பாக
இருக்கே, ஷாந்தினிதாஸ் டியர்?
நன்றி பானும்மா... அக்ரதா பெயர் நல்லா இருக்கா.. அது என் தங்கச்சி சொன்ன பெயர்... :love:
 




shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
ippadi varam koduthal naam avvalavuthan.. super epi sis padikkum poluthe vera logam senru vanthe.. nice epi sis..
நன்றி சிஸ்.. எல்லாருக்கும் வரம் இப்படி தான் குடுப்பாங்கன்னு நினைக்கிறேன் ;).. அப்படி தான் நமக்கும் குணம் எல்லாம் வ்ருமா இருக்கும்..:)
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top