• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Pesum silaiye kattavizhkava..? - Episode - 11

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
ஹாய் டியர்ஸ்...
நான் வந்துட்டேனே...சாரி... நேத்து தாரேன்னு சொல்லிட்டு இன்னைக்கு கொண்டு வந்திருக்கேன்... இன்னிக்கு எபி படிங்க படித்து உங்க கமெண்ட்ஸ் சொல்லுங்க.. சித்தர் விண்பாவை சிலையில் அடைக்க காரணம் என்ன? சித்தருக்கும் - கோட்டையம்மாளுக்கும் இடையில் என்ன கோபம் என்று இந்த எபியில் படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்.. அப்படியே உங்கள் கம்மெண்ட்ஸ் சொல்லுங்க.. நன்றி டியர்ஸ் உங்களின் ஆதரவுக்கு :love::love:

கட்டு - 11


View attachment 3083

மகரிஷி சித்தர் தன் ஆசை, லட்சியம், அழிந்த, அழிக்கப்பட்ட நாளுக்கு சென்றார்...
பூதபாண்டியன்,மகரிஷி இருவரும் நண்பர்கள்.. இருவரும் தான் பல காடு, மலைகள் என்று சென்று பல வருடங்கள் தவம் இருந்து பெரும் சக்தி பெற்றவர்கள்...


இவர்களின் குருஜி தான் சாணக்கியர்.. இவரிடம் தான் இருவரும் பல கலைகளை கற்றுக் கொண்டனர்.... அப்பொழுது தான்சாணக்கியர் இருவரின் பேராசையைக் கண்டுக் கொண்டார்.... அவர்களின் ஆசை தவறு என்று உணர்த்த எண்ணினார்.... அதாவது பூதபாண்டியனின் என்றும்உடல் அழியா வரமும், மகரிஷியின் கடவுளைவிட பெரியவனாக வேண்டும் என்ற ஆசையை கண்டு அவர்களை நல்வழிப் படுத்த எண்ணினார்...

பூதபாண்டியனை நோக்கி அங்கிருந்த மரங்களில் ஒன்றைக்காட்டி “பூதபாண்டியா! அந்தமரத்தின் பழங்களில்ஒன்றைச்சாப்பிட்டால்போதும்ஆயுள்முழுவதும்பசிக்காது, முடிநரைக்காது, பார்வை மங்காது, இவ்வளவு ஏன்? எல்லோருக்கும் அச்சம் தரும் முதுமை என்பதும் வரவேவராது. தவம் செய்பவர்க்கு ஏற்ற துணை செய்யும்” என்றார்.

அவர் கூறவும் பூதபாண்டியன் அந்தப் பழத்தைச் சாப்பிட்டார். பழத்தின் சுவையில் தன்னையும் மறந்தார்.

அதே போல் மகரிஷியை நோக்கி புலித்தோல்ஆசனம்ஒன்றைக்கொடுத்து, “இது உனக்கு தவம் செய்ய உதவும்” என்றார்.

அந்த சமயத்தில் பதுமை (பெண்) ஒன்று அவர் எதிரில் தோன்றவே “பூதபாண்டியா! இனி உனக்கு தேவையானவைகளை இந்த பதுமை சொல்லும்!” என்று சொல்லிவிட்டு மறுபடியும் தியானத்தில் மூழ்கிவிட்டார் சாணக்கியர்.

அந்த பதுமை மூலிகை ரகசியங்கள், உயிரின்தோற்றம், அது உடல் எடுக்கும் விதம், அந்தஉடலில் அது படும் துன்பம் ஆகிய நிலைகளைத் தெளிவாக உணர்த்தியது. அதைக்கேட்டு ஆச்சரியத்தில் இருக்கும் போது பதுமை வந்தது போலவே மறைந்தும்விட்டது.

அதன் பிறகு பூதபாண்டியன் அவர் தோற்றத்தில் இருந்து மாறவே இல்லை... மகரிஷியும் அந்த பழங்களை உண்டு இளம் வயதாக இருந்தார்... பல நூறு வருடங்கள்...

அதன் பிறகு மீண்டும் மகரிஷிக்கு தன் ஆசை நினைவு வந்தது அதே போல மீண்டும் தவம் இருந்து அந்த பதுமையை அழைத்தார், அப்பொழுது அவர்கள்முன் தோன்றிய பதுமை அவரை நோக்கி “ இன்னும் 2௦ ஆண்டுகள் கழித்து வானில் தோன்றும் ஒரு அதிசயம் 3 வெள்ளி ஓன்று கூடும் நாள், அந்த நாளில் நீங்கள் பெரும் யாகத்தை தொடர வேண்டும், இங்கு இருக்கும் கஞ்சா செடிகளின் இலைகளை பறித்து யாக குண்டத்தில் வைத்து எரிக்க வேண்டும். உங்கள் யாகம் செய்ய இந்த கஞ்சா செடிகளை மட்டுமே நீங்கள் பயன்படுத்த வேண்டும். அப்படி எரிந்து அதில் வரும் புகை மண்டலம் தேவர்களை மயக்கி உங்கள் முன் அழைத்து வரும்... அந்த கஞ்சா புகை மறையும் முன்னே நீங்கள் கேட்கும் வரத்தை தருவான் “ என்று கூறி வந்தது போலவே சென்றது....

அந்த2௦வருடமாக அவர்கள் பெரும் கஞ்சா இலை கூட்டம் சேர்த்தனர்... பதுமை கூறிய நாளும் வந்தது... அன்று காலையிலையே எழுந்து ஆற்றங்கரைக்கு சென்று குளித்து தங்கள் யாகத்தை செய்ய வந்துவிட்டனர்.....

மகரிஷியும்,பூதபாண்டியன் இருவரும் பெரும் யாகம் ஒன்றை ஆரம்பித்தனர். அவர்களின் ஆசையை நிறைவேற்ற...

அன்று 3 வெள்ளி ஒண்ணு கூடும் நாள்...எது ஆசைபட்டாலும் இந்த நாளில் அதற்கான வேலைகளை செய்தால் கண்டிப்பாக அது அவர்களுக்கு கிட்டும்... அந்த பதுமை கூறியது போலவே ஆரம்பித்தனர்,
அது தான் அந்த நாளில் யாகத்தை செய்ய இருவரும் ஆரம்பித்தனர்... நடுசாமத்தை இருவரும் தேர்வு செய்தனர். யார் இடையூறும் இல்லாமல் செய்யவேண்டும் என்று அடர்ந்த காட்டில் இடத்தை தேர்வு செய்து ஆரம்பித்தனர்...


இவர்களின் யாகத்தையும், தவத்தையும் கண்ட மரம் கூட தன் கிளைகளை அசைக்காமல் அப்படியே அவர்களுக்கு கட்டுப்பட்டு நின்றது....

எந்த இடையூறும் இல்லாமல் அவர்கள் யாகம் நடந்துக் கொண்டு இருந்தது... யாக குண்டத்தில் போட்ட கஞ்சா இலைகள் கொஞ்சம் கொஞ்சமாக எரிந்து பெரும் புகை மண்டலத்தை ஏற்படுத்தியது,
கொஞ்சம் கொஞ்சமாக வான் நோக்கி சென்றது கஞ்சா வாசனை.. இந்த வாசத்தில் இந்திர லோகமே மயங்கி ஒருவிதமாக கட்டுண்டு இருந்தது... அப்பொழுது தான் மகரிஷியின் அழைப்பு அவர்கள் காதை எட்டவும் இவருக்கு வரம் தர சந்தோசத்துடன் சித்தர்களை நோக்கி கிளம்பும் நேரம்,
வானில் தோன்றிய 3 வெள்ளியும் ஓன்று சேர்ந்து விண்பாவுக்கு ஆசி வழங்கியது,அதை கண்டுஅதிசயித்தஅந்த முக்கோடி தேவர்களும் தங்கள் மயக்கத்துடன் நேராக விண்பாக்குஆசி வழங்கிய இடத்திற்கு வந்தனர்....


அவளை கண்டு தாங்கள் கஞ்சாவில் மயங்கி சந்தோசமாக இருக்கவும் அந்த சித்தர்களுக்கு தர வேண்டிய ஆசியை இந்த குழந்தைக்கு அளித்து, கோட்டைக்கு சத்தியம் செய்து அவர்கள் மீண்டும் வான்லோகம் நோக்கி செல்லவும் மீண்டும் சித்தர் அழைப்பு அவர்கள் செவியை எட்டியது......
சித்தர்கள் அவர்களின் வருகையை அறிந்து மந்திரங்களை ஓங்கி ஒலித்தனர், ஆனாலும் இன்னும் இவர்கள் இருக்கும் இடமா வராததால் அந்த பதுமையை மீண்டும் அவர்கள் அழைத்தார்... இவர்கள் அழைக்கவும் அவர்கள் முன் வந்து இன்ற பதுமை அவர்களை நோக்கி “ தாங்கள் அழைத்ததின் நோக்கம் என்னவோ..? “ எனவும்,


“ தேவர்கள் இன்னும் எங்களை வந்தடையவில்லை, இடையில் ஏதேனும் நடந்துவிட்டதா? “ என சித்தர்கள் கேட்க.

ஒரு நிமிடம் கண்களை மூடிய பதுமை “ ஆம், அவர்கள் ஒரு குழந்தைக்கு ஆசி வழங்கிக் கொண்டு இருக்கிறார்கள், அவள்தெய்வ அருள் பெற்ற குழந்தை. மிகவும் ராசியான குழந்தை அவளை நீங்கள் உங்கள் வசபடுத்திவிட்டால் உங்களின் எண்ணம் எல்லாம் ஈடேறும், அவளை வைத்து மிக பெரிய யாகம் ஓன்று அவளின் முழு மனதுடன் செய்தால் அவளின் ராசிக்கும், தெய்வ அருளுக்கும் நீங்கள் நினைத்த காரியம் நடக்கும், இப்பொழுது உங்களுக்கு கிடைக்கும் ஆசியை அவள் பெற்றுவிட்டாள் அதனால் அவளை வைத்து உங்கள் யாகத்தை செய்யுங்கள் “ எனவும்,

“ அவளை எப்படி எங்கள் வசபடுத்துவது “ என்றுஅவர்கள் கேட்க

“ அதை நான் பார்த்துக் கொள்கிறேன், நீங்கள் அவளை நெருங்க மட்டுமே செய்யுங்கள்” என்று கூறி அவள் மறைந்தாள்...

அவள் தான் அந்த நேரம் அந்த தேவதையின் உருவில் குழந்தைக்கு ஆசி வழங்கினாள்...
பதுமை அவள் அந்த சித்தருக்கு என்ன உதவி என்றாலும் செய்வது தான் அவளின் வேலை... இவள் பல மாய மந்திரத்தால் உருவானவள்.. கடவுளின் எதிரானவள்... இவ்வுலகில் கடவுள் இருக்கிறார் என்பதை எத்தனை உண்மையோ அதே போல் மாய மந்திரமும் உண்மையானது.


மனிதர்களுக்கு உலகில் சோதனைகள் உள்ளதுப் போல் கடவுளுக்கும் இதேபோல் மாய மந்திரத்தால் உருவான பல சைத்தான்களின் சோதனைகளும் உண்டு... இதை யாவரும் நாம் அறிந்ததே... இதை தான் பல விதமாக, பல வரலாறு கூறுகிறது... இதை தான் பகவத் கீதையும், பைபிளும் கூறுகிறது.... உலகில் தெய்வ சக்தி எத்தனை உண்மை என்று நாம் நம்புகிறோமோ அதே போல சைத்தான்களின் லீலைகளையும் நாம் நம்பவேண்டும்.... அதை போல் தான் இந்த பதுமை...
 




Last edited:

shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
பல சித்தர்கள் தங்களுக்கு தேவைக்காக இப்படி பதுமைகளை உருவாக்கி பாதியில் விட்டு சென்றுவிடுவார்கள்... அந்த பதுமைகள் இப்படி கடவுளுக்கு எதிராக செயல் படுபவர்களுக்கு உதவிகள் செய்து தங்கள் காலத்தை கழித்துக் கொண்டு இருக்கிறார்கள்...
அவர்கள் இருக்கும் இடம் யாருக்கும் தெரியாது... இப்படி யாகம் செய்யும் பொழுது அந்த புகை மண்டலத்தில் இருந்து உருவாகுபவர்கள் அவர்கள்... நிரந்தர வாழ்வு இல்லாத அற்ப வாழ்வு ஆன்மாக்கள்...

மீண்டும்இவர்களின் அழைப்பை ஏற்ற, இவர்கள் செய்யும் யாகத்தை கண்ட அவர்கள் இவர்களை நோக்கி வந்து சுற்றி நின்றனர்....

அன்று மன்னன் அரிச்சந்திரனை சோதிக்க தேவலோகம் விட்டு இந்த பூலோகம் வந்தார் விஷ்வாமித்திரர்... அவனை பல வலையில் சிக்க வைத்து அவன் அரியணையைப் பறித்தார்....

ஆனால் இன்றோ சித்தர்கள் கஞ்சாவை வைத்து தேவர்களை மயக்கி, ஏமாற்றி அந்த அரியணையை பறிக்க எண்ணினார்....

தேவர்கள் வந்ததை கண்டு சந்தோசம் அடைந்த சித்தர்கள் மீண்டும் அந்த யாக குண்டத்தில் கஞ்சா இலைகளை போட்டனர்.... எப்படியாவது அவரிடம் வரம் வாங்கி விட வேண்டும் என்று ஆசையில்..

ஆனால் தேவர்களோ இவர்கள் இட்ட புகை தங்களை பாதிக்காத வண்ணம் அவற்றை தடுத்து நிறுத்தி விட்டு அவர்களை நோக்கி “ தாங்கள் அழைத்ததின் நோக்கம் என்னவோ “ எனவும்

“ சுவாமிஜி நாங்கள் எப்பொழுதும் உங்கள் அருகில் இருக்க வேண்டும், உங்களை போலவே இருக்க வேண்டும், நீங்கள் செய்வதை நாங்கள் செய்ய வேண்டும்” என்று அவர்களை வணங்கிக் கேட்கவும்.

சித்தர்களின் யாகம் மிக பெரிய அளவில் இருந்தது... இவர்களின் தவமும் அந்த கடவுளை அடையும் வழி ஒத்து இருந்தது... பல யாகங்களையும், தவத்தையும் செய்து சிவபெருமானை அடைவது தான் இந்த சித்தர்களின் இன்றைய ஆசை அவர்களுக்கும் அந்த லோகத்தில் இடமுண்டு இந்த தேவர்களைப் போல.....

ஆனால் இவர்கள் குறுக்கு வழியில் கஞ்சாவை வைத்து யாகத்தை தொடர்ந்து சிவபெருமானை அடைவது மிக பெரிய குற்றமாகும், இவர்களின் ஆசை பேராசை... இதை நிராசையாக மாற்ற தான் சாணக்கியர் அவர்கள் முன் அந்த பதுமையை அறிமுகபடுத்தினார்... அவர் எண்ணியதுப் போலவே இந்த தேவர்கள் இவர்களுக்கு பாடம் நடத்துவார்கள் என்று எண்ணி அவர் தேவர்களுக்காய் காத்திருந்தார்....

“ தேவலோகம் வர தாங்கள் இப்படி குறுக்கு வழியை தேர்வுசெய்ய என்ன அவசியம் வந்தது மகரிஷி.... நீங்கள் முழுமனதுடன் தியானத்தையும், யாகங்களையும் செய்தால் தேவலோகம்வந்து எங்களைப் போல் தேவர்களாய் இருக்கலாமே “ என்று அவர்களை நோக்கி வினவவும்

“ நான் உங்களைப் போல் தேவர்களாய் இருக்க எண்ணவில்லை தேவர்களே.. ! உங்களையே ஆட்டிவைக்கும், உங்களுக்கே கட்டளையிடும் பெருமானாக இருக்க எண்ணுகிறேன்” என்று இறுமாப்பாக கூறினார்..

அவர் பதிலில் வெகுண்டெழுந்த தேவர்கள் “ நீ என்றும் உன் ஆசையை அடைய மாட்டாய் ” என்று கூறி அவர்களை சபித்து அவர்கள் தங்களை மயக்கிய கஞ்சா செடியாக மாற்றி அவர்கள் தேவலோகம் கிளம்பினார்கள்.....

அவர்கள் கிளம்பவும் கஞ்சா செடியை நோக்கி வந்த சாணக்கியர் “ மகரிஷி நான் உன்னை இக்கட்டில் இருந்து விடுவிக்கிறேன் நீ உன் ஆசையை விடுவாயா “ என்று கேட்டார்.
“தன்னை விடுவித்தால் போதும்” என்று எண்ணிய மகரிஷி அவரிடம் “சரி” என்று கூறவே சில மந்திரங்களை கூறி அவர்களை விடுவித்தார்... அவர்களை விடுவித்து அவர் மீண்டும் தவத்தை ஆரம்பித்தார்....

மீண்டும் கடும் தவத்தில் ஈடுபட்டார். தவ ஆற்றலிலின் காரணமாக ரசமணிக் குளிகை களை உருவாக்கினார். அந்தக் குளிகைகள், வாயிலிலிட்டுக் கொண்டால் நினைத்ததை எல்லாம் செய்யவல்லவை.

சாணக்கியருக்கு இரும்பைப் பொன்னாக்கு வது உள்படப் பல்வேறு அற்புதங்களைச் செய்யக்கூடிய ஆதிரசம் மேலும் அதிகமாகத் தேவைப்பட்டது. தன்வசமிருந்த ஆதிரசம் அவருக்குப் போதவில்லை. ரோமாபுரியில் ஒரு கிணற்றில் ஆதிரசம் அபரிமிதமாக இருப்பதாக ஞான திருஷ்டியால் அறிந்தார். உடனே ரோமாபுரி சென்று அந்த ரசத்தைப் பெற்றுவர விரும்பினார்….

ரசமணிக் குளிகைகளில் ஒன்றை வாயிலிலிட்டுக் கொண்டார். அடுத்த கணம் ரோமாபுரி யில் இருந்தார் அவர்! ஒரு சுரைக்குடுவை நிறைய ஆதிரசத்தை நிரப்பிக்கொண்ட அவர் விண்ணில் பறந்தார்…

கஞ்சா செடியில் இருந்து விடுவிக்கப்பட்ட பூதபாண்டியன் தன் தவறை உணர்ந்து அவர் குரு சாணக்கியரை நோக்கி சென்று அவருடன் தவத்தை ஆரம்பித்தார்....

மகரிஷி விண்பா பற்றி அறிந்து எங்கும் தேடி இந்த கோட்டைநல்லூரில் உள்ள காட்டில் தங்கினார். விண்பாவை தன்வசபடுத்தும் நாளுக்காய் காத்திருந்தார்..

அவரின் ஆசை தடைபட காரணம் விண்பா என்று முழுதாக எண்ணினார்... அதனால் தான் அவளை தேடி வந்தார்... அவளை காக்கும் கோட்டையை அதனால் தான் எதிர்த்தார்.... அந்த பதுமை அன்று தேவதைக்கு பதிலாக அவளுக்கு சாபம் வழங்கி அவளுக்கு பெரும் ஆபத்தை உண்டுபண்ணிவிட்டாள்.. அதை சித்தர் பயன்படுத்துகிறார்...

அவர் எண்ணியதுப் போல் அந்த நாளும் வந்தது.. மீண்டும் அவர் ஆசை நிறைவேற்ற ஆசையாக காத்திருக்கிறார் அந்த சிலையுடன்... அவளை அந்த சிலையில் அடைத்து அவளை வைத்து தான் அவரின் யாகத்தை செய்யவேண்டும்....

அதற்கு தான் அவர் காத்திருந்தார்... ஆனால் அவள் மேல் காதல் வந்தது அவர் கனவிலும் எண்ணாதது... அக்ரதாவின் உடலில் அவர் தன் ஆன்மாவைப் பொருத்திக் கொண்டதால் அவனின் மனதுடன் இவர் மனம் பொருந்தி அவள் மேல் காதலாக மாறியது....

அந்த காதலும், அவர் ஆசைக்கு ஒரு செங்கலாக இருக்கவும் அதை பயன்படுத்த எண்ணினார்... மகரிஷி விண்பாவின் வருகைக்காய் காத்திருந்தார்.. அணிலாக மாறி அந்த சிலையின் அருகில் இருந்தார்....

#########################

எழிலனுக்கு அந்த விண்பாவின் மேல் துளியும் நம்பிக்கை இல்லை.. அன்று கனவில் வந்த அருவி கோட்டைநல்லூரில் இருக்கவும் அவனுக்கு இதை எல்லாம் தனக்கு இதை எல்லாம் உணர்த்துவது யாராக இருக்கும் என்று எண்ணினான்....இப்படி எண்ணி அவன் படுத்திருக்கும் பொழுது மீண்டும் கோட்டை அவன் கனவில் வந்து நேரடியாக வந்து உணர்த்தினாள் “ தான், தான் எல்லாம் செய்கிறேன்” என்று..

அதைஉணர்ந்த எழிலன் எப்படியாவது விண்பாவை இந்த இக்கட்டில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று எண்ணி கோட்டைநல்லூர் நோக்கி கிளம்பினான்....

அங்கு சென்று கௌதமிடம் “ சார் நான் உங்ககிட்ட இருந்து பூச்சி கொல்லி மருந்து தயாரிப்பை கத்துக்க வந்திருக்கேன் எங்கு கத்துக் கொடுப்பீங்களா?” என்று கேட்கவும்
மனதார “சரி” கூறினான் கெளதம்... அவனின் உயிரை வளர்க்க இன்னும் ஒருவர் ஆசை கொண்டது அவனுக்கு சந்தோசமே அதன்படி எழிலன் இங்கு முழுநேரமும் தங்கும் படியானது....

எழிலன், அக்ரதா இருவரும் கௌதமின் மாணவர்களாக மாறினார்கள்.... எழிலன் தங்குவது எல்லாமே கௌதமின் கோட்டையில்.... மாலை விண்பா காலேஜ் விட்டு வந்ததும் எழிலனிடம் கொஞ்ச நேரம் இருந்து பேசுவாள்.. ஆனாலும் அக்கியை பற்றி பேசுவதை முற்றிலுமாக தவிர்த்து விடுவாள்... அவளின் முதல் நண்பன் அவன் தான்...
விண்பா தன்னுடைய பேச்சால் எழிலனை மிகவும் கவர்ந்தாள்.... அவளை கனவில் கண்டு காதலில் விழுந்தவன் அவன். இப்பொழுது முழுவதுமாக அவள் பேச்சில் மயங்கினான்....
அப்படி அவன் கூடவே இருந்து எழிலன் அவள் மனதில் இன்னும் புகவில்லை... அக்கி விண்பாவை பார்க்க வரும் நேரம் எல்லாம் எழிலன் அவனை ஏதாவது வேலைகள் செய்ய அனுப்பிவிடுவான்...

அந்த இடத்தில மட்டும் எழிலன் முதலாளியாக மாறினான்... பண்ணையார் வீட்டு வாரிசு என்று தான் கௌதமும் அவனை வீட்டில் அனுமதித்தான்.... அக்கி ஒரு வேலைக்காரியின் மகன்.. இதை அடிகடி எழிலன் அவனுக்கு உணர்த்த எண்ணினான்.. விண்பாவின் நலன் கருதி....

என்ன முயன்றும் எழிலனால் விண்பாவிடம் அக்கியை பற்றி அவனால் ஏதும் கூறமுடியவில்லை... முடியவில்லை என்பதை விட அவள் அனுமதிக்கவில்லை....
அதே நேரம் சாமுண்டி சித்தர் தன் தவத்தை முடித்து வெளியில் வந்தார். வந்தவர் மகரிஷி செயலை கண்டு அதிர்ந்துவிட்டார்..

கட்டவிழ்க வருவான்...
 




shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
எப்படிப்பா ஷாந்தினி இதல்லாம் அருமைடா இதை பற்றி ஆராய்ச்சி பன்றியா நீ
நன்றி சக்திக்கா... ஆராய்ச்சி எல்லாம் பண்ணல.. எனக்கு தெரிந்ததை இந்த கதையின் மூலம் சொல்லுறேன்... இது எல்லாம் நாம் பிறக்கும் முன்னே பல நூறு வருடங்களுக்கு முன் உண்மையில் நடந்த நிகழ்வுகள்.. அது தான் எல்லாரும் தெரிந்துக் கொள்ள சொல்லுறேன்.... இன்னும் சித்தர்கள் எங்கோ ஒரு மூலையில் இருப்பதாக சொல்லுறாங்க சரியா தெரியல எனக்கு... அதே போல் அவர்கள் வருகையும் இருக்குன்னு சொல்லுறாங்க..... இது எல்லாம் நமக்கு தெரிய வாய்ப்பே இல்ல தானே... :).. அவர்கள் நமக்கு நிறைய நன்மைகள் செய்திருக்காங்க.. அவங்க மூலமா நிறைய மருந்து எல்லாம் நமக்கு தெரிய வந்திருக்கு...:)
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top