• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode Pesum silaiye kattavizhkava..? - Episode - 12

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
ஹாய் டியர்ஸ்.. எல்லாரும் எப்படி இருக்கீங்க... ரொம்ப ரொம்ப சாரிப்பா... டைப் பண்ண கொஞ்சம் லேட் ஆகிட்டு... லேட்டா எபி கொண்டு வந்திருக்கேன்... இந்த எபி படிங்க படித்து உங்க கமெண்ட்ஸ் சொல்லுங்க... ஏதாவது தவறுகள் இருந்தால் சொல்லுங்க திருத்திக் கொள்கிறேன்...படித்து கமெண்ட்ஸ் சொல்லுற உங்க எல்லோருக்கு ரொம்ப நன்றி...நன்றி டியர்ஸ்....

கட்டு – 12


தன் தவம், கலை எல்லா நிலையையும் முடித்துவந்த சாமுண்டி சித்தர் தன் குருவை நோக்கி வந்தார்... வந்தவர் அவரை கண்டு அதிர்ந்து விட்டார்...

அக்ரதாவுக்காகஅணிலாக மாறி சிலை அருகில் இருந்த மகரிஷி அந்த சிலையை வெறிக்க பார்த்துக் கொண்டு இருந்தார்... ஊரில் எழிலன் புது வருகையையும் அறிந்துக் கொண்டார்...

கோட்டை மிக தீவிரமாக விண்பாவை காக்க தவம் இருக்கிறாள்... அதற்க்கு முன் அவளை எப்படியாவது இங்கு அழைத்து வரவேண்டும் என்று எண்ணினார்..

அதன் படி தன் மந்திரத்தால் ஒருகறுப்பு துணியை கொண்டு வந்து அந்த சிலையின் கண்ணை கட்டி வைத்தார்... அதன் அருகில் அணிலாக இரு கைகளையும் தூக்கி மேல் நோக்கி வணங்கி நின்று மந்திரத்தை உச்சரித்துக் கொண்டு இருந்தார்... அது ஒரு கண்கட்டு துணி.. இந்த துணியில் மூலம் விண்பாவின் கண்ணை அவர் கட்டிவிட்டார்...

இனி அவளுக்கு கனவில் வந்து தன்னை உணர்த்தி சீக்கிரம் இங்கு அழைத்து வரவேண்டும் என்று எண்ணிக் கொண்டார்...

அவர் செயல் சாமுண்டிக்கு மிக பிரிய அதிர்ச்சியாக இருந்தது.... அவர் உச்சரித்த மந்திரம் எவராக இருந்தாலும் அவர்களை தன் கட்டுக்குள் கொண்டு வரும் மந்திரம்...

சாமுண்டி சித்தருக்கு தெரியவில்லை, “ குரு ஏன் இப்பொழுது இந்த மந்திரத்தை உச்சரிக்கிறார், அந்த சிலை யாருக்கு வடிவமைத்தது, இங்கு என்ன தான் நடக்கிறது இங்கு இத்தனை வருடமாக ” எண்ணி கண்களை ஒரு நிமிடம் மூடி இத்தனை வருடம் நடந்ததை அறிய எண்ணினார்...

“மகரிஷி உடலை எரித்தது, கோட்டைக்கும் – இவருக்கும் உள்ள போட்டி, இவர் ஆசை அழிந்தது, அக்ரதாவின் உடலில் பாயிந்தது, விண்பாவின் மேல் உள்ள காதல், அவளை வைத்து இவர் ஆசையை நிறைவேற்றுவது என்று எல்லாமே அவருக்கு மனகண்ணில் தெரிந்தது....

அவருக்கு அதிர்ச்சியாகஇருந்தது... முற்றும் துறந்தவர்கள் தான் கடவுளின் சீடராக முடியும். அப்படி எல்லாம் துறந்து வந்த மகரிஷி சித்தருக்குஏன் இப்படி ஒரு ஆசை வந்தது என்று எண்ணிக் கொண்டே அவரின் குருவை பார்த்துக் கொண்டு கோட்டைத்தாயிடம் ஆசி வாங்க ஊரை நோக்கி சென்றார்..

காலையில் எழும் எழிலன் அருவிக் கரைக்கு சென்று குளித்துவிட்டு புத்துணர்ச்சியுடன் விண்பாவை பார்க்க சென்றான்.... அவன் இங்கு வந்த இத்தனை நாளில் விண்பாவின் நெருங்கிய தோழன் ஆனான் எழிலன்...

விண்பாவின் மனத்தை கொஞ்சம் கொஞ்சமாக கோட்டை திறந்தாள், அந்த தருணத்தில் எல்லாம் எழிலன் கோட்டை உதவியுடன் அவள் மனதில் நன்றாக இடம் பிடித்து விட்டான்....

எழுந்து அவள் அறையின் முன் நின்ற எழிலன் கண்ணை அங்கும் இங்கும் சுழற்றி பார்த்தான்... சமையல் அறையில் மைத்ரேயி நிற்பதை கண்ட எழிலன்அவளை நோக்கிப் சென்றான்...

மைத்ரேயிக்கு அவனைப் பார்க்கும் பொழுது எல்லாம் மனதில் தோன்றுவது “ எவ்வளவு நல்ல பையன் இவன்.. இவனைப் போல ஒருவனை தான் தனக்கு மருமகனாக வரவேண்டும்” என்ற எண்ணம் அவளுக்கு எப்பொழுதுமே தோன்றும்....

அதற்கும் காரணம் இருக்கிறது “ காலையில் எழுந்து அருவியில் குளித்து வந்து, கோட்டைத்தாயை வேண்டிவிட்டு தான் வேற வேலையே செய்வான்.. எப்பொழுதாவது கௌதம்க்கு உதவியாகவும், மைத்ரேயிக்கு சமையலில் உதவி, விண்பாவுக்கு படிப்பில் உதவி என்று எப்பொழுதும் யாருக்காவது உதவி செய்துக் கொண்டே இருப்பான்...

அந்த விதத்தில் மைத்ரேயி மனதை பெரிதும் கவர்ந்துவிட்டான்... கெளதம் கூட எண்ணுவான் இவனை போல் ஒரு மருமகன் வேண்டும் என்று... இப்படி எல்லார் மனதையும் கவர்ந்த மகராசன் இப்பொழுது விண்பாவின் மனத்தை கவர தான் போராடிக் கொண்டு இருக்கிறான்...

“ சிறுத்தை கூட சிக்கும், இந்த சில்வண்டு சிக்காது “ என்பது போல சுற்றிக் கொண்டு திரிகிறாள் அவள்... இன்று கொஞ்சமேனும் அவள் மனத்தை அசைக்க வேண்டும் என்று மைத்ரேயியை தேடி வந்துவிட்டான்...

“ ஹாய் ஆன்ட்டி, என்ன பண்ணுறீங்க “ என்று சமையல் மேடையில் ஏறி அமர்ந்து... அருகில் இருந்த ஒரு கேரட்டை கடித்துக் கொண்டே கேட்கவும்..

“ ஒண்ணும் இல்லடா எழிலன், பாப்பா பொங்கல் கேட்டா, அது தான் பண்ணிட்டு இருக்கேன், இன்னும் எழுந்துக்காம இருக்கா? அவளை வச்சுக்கிட்டு நான் படுற பாடு இருக்கே முடியலடா எழில்” என்று சோக கீதம் வாசிக்கவும்,

அவனின்பேபியை நினைத்து சிரித்துக் கொண்டே “ பேபி சின்ன பொண்ணு ஆன்ட்டி, நீங்க தான் அவளை திட்டுறீங்க.. அவள் பேபி ஆன்ட்டி “ என்று கூறவும்,

“ ஆமாண்டா, உன் பேபியை நீ தான் மொச்சிக்கணும், மணி என்ன ஆகுது எழும்பனும்னு தோணுதா..? இன்னைக்கு அவளுக்கு காபி கிடையாது, அவளே வந்து போட்டுக் குடிக்கட்டும் அப்போ தான் அவளுக்கு அறிவு வரும்” எனவும்,

அருகில் இருந்த அக்கி அம்மா சிரித்துக் கொண்டார், இது தினமும் வீட்டில் நடப்பது தான், சமையல் எல்லாம் மைத்ரேயி தான் செய்வாள்... அக்கி அம்மா மைத்ரேயியின் உதவிக்கு... வீட்டை சுத்தம் செய்வது, துணி துவைப்பது இது எல்லாம் முத்தம்மாள் அக்கியின் அம்மாவின் வேலை..

தினமும் மைத்ரேயி விண்பாவை திட்டும் பொழுது எல்லாம் எழிலன் அவளுக்கு சப்போர்ட் பண்ணுவதும், மைத்ரேயி அவனை செல்லமாக முறைப்பது என்று எப்பொழுதும் நடப்பது தான்..
இவர்கள் பேசிக் கொண்டு இருக்கவும், முத்தம்மாள்விண்பாவுக்கான காபியை தயார் செய்ய வரவும்,அவர் அருகில் வந்தஎழிலன்“ நான்

இன்னைக்கு காபி போடுறேன் நீங்க எல்லாரும் என் காபியை குடிங்க” என்று கூறி உடனே செயலில் இறங்கினான் எழிலன்...

அவனின் போனை எடுத்து யூடியூப் சென்று காபி போடுவது எப்படி என்று பார்த்து செய்வதை கண்ட இருவருக்கும் சிரிப்பு வந்தது...

சத்தம் போட்டு சிரிக்கவும் அவர்கள் நோக்கி திரும்பிய அவன் “ ஆன்ட்டி இன்னைக்கு என் காபியை குடிச்சுட்டு தினமும் இந்த காபி தான் கேட்பிங்க, கிண்டல் பண்ணாதீங்க “ என்று செல்ல கண்டிப்புடன் கூறவும்

அவர்களும் கேலியுடன் வாயை கையால் மூடிக் கொண்டு ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்தனர்...
 




shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
அவர்களின் சிரிப்பை சிறுகேலியாக முறைத்த எழிலன் “ சிரிங்க நல்லா சிரிங்க உங்களுக்கு இன்னைக்கு காபி கட்” என்று கூறி அவனின் பேபிக்குஅவளின் கப்பில் ஊற்றிய அவன் ”முதல்ல பேபிக்குகாபியை குடுத்துட்டு வந்து உங்களை கவனித்துக் கொள்கிறேன்” என்று கூறி அவளின் அறை நோக்கி சென்றான்... அவன் செல்லவும் அவனைப் பார்த்து சத்தமில்லாமல் இருவரும் சிரித்துக் கொண்டனர்... விண்பாவை பற்றி நன்கு அறிந்தவர்களாக...

கதவை திறந்துக் கொண்டு உள்ளே சென்ற எழிலன் அவள் உறங்கும் அழகை கண்டு அப்படியே நின்றுவிட்டான்..

தலை முடிகள் கலைந்து, கணுக்கால்பளிங்கென வெளியில் தெரிய, கழுத்தில்போர்வையைஇறுக்க பிடித்துக் கொண்டு, கண்களை சுருக்கி குழந்தையென உறங்கிக் கொண்டு இருந்தாள் விண்பா,

எவ்வளவு நேரம் அவளை ரசித்துக் கொண்டு இருந்தானோ அவனே அறியவில்லை, அவள் அந்த பக்கம் திரும்பிப் படுக்க அசையவும் அவளின் அசைவில் சுயம்வந்தஎழிலன்
“ பேபி“ என அழைக்க


“ம்ம்ம்” என்றுதூக்க கலக்கத்தில் மீண்டும் திரும்பி படுத்தாள் அவள்..

“அடபாவி, இதுக்கு தான் ஆன்ட்டி அப்படி சிரிச்சாங்களா? இது தெரியாம வீணா கொண்டு தலையை விட்டுட்டியே ஏகாம்பரம்” என்று தனக்கு தானே தலையில் அடித்துக் கொண்டான்..
ஆனாலும்“ டேய்..., எழில் இன்னைக்கு அவளை எழுப்பியே ஆகணும்டா“ என்று தனக்கு தானே சூளுரைத்துக் கொண்டான்...


டபிள் மேல் காபியை வைத்த எழிலன் அவனின் மொபைல் போனை எடுத்து “ டங்காமாரி ஊதாரி “ பாடலைஹைய் டெசிபலில் ஒலிக்க விட.

அந்த பாடலைக் கேட்ட அவளோ இதழைசுழித்து மீண்டும் உறங்க ஆரம்பித்தாள்...
பாவம் அவனுக்கு தெரியவில்லைதூக்கத்தில் அவளை எழுப்புவது என்பது ஆனைமலையை புரட்டுவதுக்கு சமம் என்று அறியாமலே பாவம் சிங்கம்சிங்கிளாக யானை குகைக்குள் தலையை விட்டது...


அவனும்உருண்டு பிரண்டு என பலவகையில் அவளை எழுப்ப முயற்சிகள் செய்த மிகவும் களைத்துப் போனான், “ எப்படி தான் அவளை எழுப்புவது “ என்று அவனுக்கு பெரும் யோசனையாக இருந்தது...

அவனுக்கு தான் பெரும் டயர்டாக இருந்தது அவளை எழுப்ப போராடியதில், சரி காபி குடித்துவிட்டு தெம்பாக அவளை எழுப்புவோம் என்று எண்ணி காபியை கையில் எடுக்கவும் மனதின் ஓரத்தில் இருந்து” காபியை வைத்து அவளை எழுப்புடா மடையா“என்று அவனுக்கு ஒரு பட்சி சொல்லவும்,

கடைசி முயற்சியா காபியை அவள் மூக்கின் அருகில் கொண்டு சென்ற எழில் “ பேபி காபி குடிம்மா” எனவும்,

காபி வாசனை மூக்கை துளைக்க, கண்களை மூடிய படியே எழுந்த விண்பா அவன் கையை பிடித்து காபியேகுடித்து விட்டு அவன் கன்னத்தை பிடித்து அழுந்த முத்தமிட்டு “ ஐ லவ் யூ மம்மீ ” என்றுமீண்டும் படுத்துவிட்டாள்... அவளும் மைத்ரேயிக்கு எப்பொழுதும் குடுப்பதுபோல் முத்தம் கொடுத்துவிட்டு படுத்துவிட்டாள்...

முத்தம்வாங்கியவனோஅப்படியே சிலையென அமர்ந்துவிட்டான்.... அவளின் முதல் முத்தம், கூடவே“ ஐ லவ்யூ“ என்ற வார்த்தையும் அவனை அப்படியே ஜிவ்வென வானத்தில் பறக்க செய்தது...

அவள்உதட்டின்ஈரம் கன்னத்தையும், நெஞ்சையும் குளிரசெய்தது, அப்படியே கன்னைத்தை பிடித்துக் கொண்டு அமர்ந்துவிட்டான்...

விண்பாவை காண வந்த அக்கி இந்த செயலையும், எழிலனின் காதல் மயக்கத்தையும் கண்ட அவன் முகத்தில் கோபம் ஏற அவனின் குட்டிம்மாவை காணாமலே வெளியில் சென்று விட்டான்....

அதே நேரம் கோவில் மணி ஓங்கி ஒலிக்க மயக்கத்தை உதற செய்த எழிலன் என்னவோ ஏதோ என்று கோவில் நோக்கி ஓடினான்...

அங்கு சாமுண்டி சித்தர் நின்றிருந்தார்... ஊர் மக்கள் அனைவரும் அவரை சுற்றி இருக்க, மைத்ரேயி, கெளதம் இருவரும் அவரைப் பார்த்துக் கொண்டு இருக்க அவர்கள் அருகில் சென்ற அவன் “ ஆன்ட்டி யார் இவர் “ என கேட்க

“ தெரியலடா யாருனே தெரியல, ஏதோ சித்தர் போல இருக்கு, எதுக்கு வந்திருகார்ன்னு தெரியல” என்று கூறவும்

அவள் பதிலை கேட்ட அவர் சிரித்துக் கொண்டே அந்தபூவரசம் மரத்தின் அடியில் அமர்ந்துக் கொண்டார்.. இப்படி அடிக்கடி இங்கு யாராவது வருவது தான் என்று எல்லாரும் அவரவர் வேலையை பார்க்க சென்றனர்..

இப்படியாக நாட்கள் கடக்க “ அக்ரதா விண்பாவிடம் காதலை கூற வந்து தோற்றுப் போனான்...

எழிலன் இப்பொழுது எல்லாம் விண்பாவை “ பேபி “ என்று அழைத்து அவளின் மனதில் நீங்கா இடம் பிடித்தான்...

இப்படியாக நாட்கள் கடக்க விண்பாவுக்கு 2௦ வயது பிறக்க இன்னும் ஒரு மாதமே இருந்தது...

அக்ரதா ஊரின் உள் சென்று 2 வாரம் ஆன நிலையிலும் இன்னும் அவன் திரும்பி வரும் வழியை காணும் என்று மகரிஷி சித்தர் யோசித்துக் கொண்டு இருந்தார்..

அன்று அப்படி யோசித்துக் கொண்டு இருக்கும் பொழுது தான் அவருக்கு ஒரு யோசனை அந்த யோசனைப் படி தன் ஆத்மாவை அக்கி வேலை செய்யும்தோட்டத்தில் உள்ள மரத்தில் புகுத்திக் கொண்டார்...

மதியம் எப்பொழுதும் போல் அந்த மரத்தின் அருகில் படுத்த அக்கி அப்படியே தூங்கிப் போனான்... அந்த நேரம் அவன் உடலில் மீண்டும் ஈசியாக தன்னைப் பொருத்திக் கொண்டார் சித்தர்...

ஒரு உடலில் ஒரு முறை சென்று வந்த பின்னர், மீண்டும் அந்த உடலில் செல்வது என்பது மிகவும் சுலபமாகும், அப்படி தான் அவரும் இந்த முறை ஈசியாக அவன் உடலில் சென்றுவிட்டார்..

எழிலனுக்கு முத்தம் கொடுத்த அந்த நாளில் இருந்து விண்பா மனதில் ஒரு அலைபுறுதல், அந்த அலைபுறுதலே அவளை கடந்த ஒரு மாதமாக அவளை நிம்மதியாக இருக்க விடவில்லை...

அதிலும்இப்பொழுது எல்லாம் அவளால் எழிலனை பார்க்கவே முடியவில்லை ஏதோ ஓன்று தடுகிறது... இப்படி யோசித்துக் கொண்டே படுத்திருந்த விண்பா அப்படியே தூங்கவும், இந்தஒருமாதமாக வந்த கனவு மீண்டும்,

ஒரு அழகான இடம் அதை சுற்றிலும் ஆரஞ்சுநிற பூக்கள் பூத்திருக்க.. அதன் நடுவே ஒரு குட்டி வீடு அத்தனை அழகாக இருக்க,

அதன் அருகில் இவள் செல்லவும் இவளை ஒரு கரம் இழுத்து அணைத்துக் கொண்டது..... இப்படி கனவு வரவும் தினமும் எழுந்துக் கொள்வாள் அவள்... ஆனால் இன்றோ அவளால் முடியவில்லை... அந்த கரம் அப்படியே அவளைப் பிடித்துக் கொண்டது...

அந்த கரங்கள் அவளுக்கு மிகவும் பரிசயமான கரம், அந்த கரம் அவளின் இடையில் அழுத்தமாக பதியவும், அந்த இடத்தின் குளிர்ச்சியை அவளால் அறிந்துக் கொள்ள முடிகிறது,

ஆனால் அந்த அணைப்பில் இருந்து அவளால் விலக முடியவில்லை... அவளைஅணைத்த கைகள் இப்பொழுது அவளின் இடையை அழுந்தப் பிடிக்க, அந்த தாக்கம் இவள் அடி வயிறு வரைப் பரவ அந்த மயக்கத்தில் இவள் தானாக அவன் முகத்தைநோக்கி திரும்பவும் அந்த கரங்கள் இவளை டக்கென்றுவிட்டு விலகிக் கொண்டது...

அந்த கரங்கள் விலகவும் விலுக்கென்று எழுந்து அமர்ந்த விண்பா தன் இடையில் கைவைக்க இப்பொழுதும் அதன் கரங்களின் குளிர்ச்சி அவள் கரங்கள் உணர அப்படியே சிலையென அமர்ந்துவிட்டாள் அவள்... ஏதோ தவறு செய்வதாக மனம் உணரஆரம்பித்தது.,
உடல்வேர்க்க அப்படியே கண்களில் நீர் வழிய அமர்ந்திருந்தாள் அவள்... அவளின் வேதனை முகத்தை இரு கண்கள், வேதனையாக பார்த்து சென்றது,


அந்த நேரம் ஜன்னல் வழியாக வீசிய காற்றில் அவள் டேபிள் மேல் இருந்த பேப்பர் “ சட சட “ என அடித்து அவள் கவனத்தை ஈர்த்தது...

கட்டவிழ்க வருவான்...
 




Saru

அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
2,196
Reaction score
1,920
Location
Hosur
Akki ah vachi vinba va vara vaika plan ah
Samundi chithappu edum thadupara
Vinba manasula Ezhil vandachi
Y alugai
Anda kannal kottaithaiyodatha
 




shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
Akki ah vachi vinba va vara vaika plan ah
Samundi chithappu edum thadupara
Vinba manasula Ezhil vandachi
Y alugai
Anda kannal kottaithaiyodatha
நன்றி மோனிம்மா.. ஆமா அவர் பிளான் எல்லாம் இவனை வைத்து அவளை அழைப்பது தான்...அது யார் கண்கள் என்று அடுத்த எபியில் பார்ப்போம் :love:
 




Priyapraveenkumar

அமைச்சர்
Joined
Feb 19, 2018
Messages
2,340
Reaction score
2,705
Location
Coimbatore
wow reallly very interesting......Samundi siddhar makarish pandrathuku edum kottaikku udavuvara?????
Ezhil behavior rombave cute ah irukku....
Venbakku vantha kanavu yarala...illa ithu maharishi velaya.......
 




shalu

மண்டலாதிபதி
Joined
Feb 28, 2018
Messages
108
Reaction score
110
Location
chennai
wow wow superb epi.. ezhilan so cuteya... vinba kanavil vanthathu yaar? ezhilana? illai maharishi thannai avaluku unarthurara?? waitinga for next update.
 




shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
wow reallly very interesting......Samundi siddhar makarish pandrathuku edum kottaikku udavuvara?????
Ezhil behavior rombave cute ah irukku....
Venbakku vantha kanavu yarala...illa ithu maharishi velaya.......
நன்றி பிரியா சிஸ்... எழிலன் அவள் மனதில் இடம் பிடிக்க தான் போராடுறான்... சித்தரும் அது தான் செய்கிறார்... கண்டிப்பாக விண்பாவுக்கு சாமுண்டி உதவிகள் செய்வார்...:love:
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top