• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Pesum silaiye..kattavizhkava..? - Episode - 3

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Thendral

Moderator
Staff member
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
4,900
Reaction score
23,832
Location
Phoenix
ஹாய் டியர்ஸ்.. அடுத்த எபி போடுறேன்... படிச்சு சொல்லுங்க.. நீங்க ஆவலுடன் எதிர்பார்த்த ஹீரோ வரவு கொஞ்சம் இதில்

இந்த எபியில் ஹீரோ வரவை கொஞ்சம் சொல்லிருக்கேன். கெஸ் பண்ணுங்க பார்ப்போம்...

கட்டு – 3

"சாமுண்டி "என்று சத்தம் கேட்கவும் அந்த புற்றை எட்டிப் பார்த்தார் அவர்..

அதில் இருந்து தான் குரல் வந்தது.. அப்பொழுது தான் சாமுண்டி சித்தருக்கு தெரிந்தது “ அவர் உயிர் இந்த புற்றில் தான் உள்ளது ” என்று...

அவர் தான் “ மகரிஷி ” சித்தர்... அவருக்கு எல்லா செயல்களும் அத்துபடி. அதிலும் இந்த கூடு விட்டு கூடு பாய்வது எல்லாம் அவருக்கு ஒரு பொழுதுபோக்கு.. நல்ல விஷயத்துக்கும் அதை பயன்படுத்துவார்.. அதே போல் பொழுது போக்குக்காகவும் செய்வார்..

இப்பொழுது இந்த புற்றில் இருப்பது ஒரு உதவி... அன்று ஒரு நாகபாம்பு இறந்துவிட்டது.. ஆனால் அதன் இணை கண்ணீர் விட்டுக் கொண்டு அதன் அருகில் நிற்கவும், மனது கேட்காத மகரிஷி தன் உடலை அந்த முட்புதரில் விட்டுவிட்டு அந்த பாம்பின் உடலில் புகுந்துக் கொண்டு அந்த புற்றில் வாழ்கிறார்....

இதை அறிந்த சாமுண்டி சித்தருக்கும் இவரை போல் எல்லா கலையையும் அறிய ஆசை... இந்த ஆசையை அவரிடம் கூறவும் மகரிஷி சித்தரும் கற்று தருவதாக கூறிவிட்டார்...

இன்றே அதன் படி தன் யாகத்தை ஆரம்பிக்க இடம் தேடினார் சாமுண்டி சித்தர்.. அவர் கூடவே நாகமாகிய நாகமாகிய சாமுண்டி சித்தரும் சென்றார். முட்புதரில் இருந்த தன் உடலை ஒரு பார்வை பார்த்துக் கொண்டே சென்றார்..

புற்று இருந்த இடத்தை விட்டு பல மையில் கல் அப்பால் உள்ள ஒரு இடத்தை கண்டுபிடித்தார்கள்... அந்த இடம் நிறைய கொடிகளும், சருகுகளுமாக இருந்தது...

அந்த இடம் வெளியில் இருந்து பார்த்தால் மிக மிக செழிப்பான இடமாக இருந்தது.. ஆனால் உள்ளே எல்லாம் செடிகள் எல்லாம் காய்ந்து இருந்தது...

ஆனால் பார்க்க ஒரு அழகான குகை போல் இருந்தது.. அது தான் இந்த இடத்தை மகரிஷி தேர்வுசெய்தார்.... அந்த மரத்தின் மேல் ‘மிக்கானியா மைக்ரந்தா’ என்னும் தாவரம்.. காடுகளில் மரங்கள் உட்பட பற்றுக்கோலாக எது கிடைத்தாலும் பற்றிக் கொண்டு வேகமாகப் படரும் ஒரு தாவரம். பெரிய மரங்களையும் பின்னிப்படர்ந்து சூரிய வெளிச்சத்திலிருந்து சத்துக்களை அந்த மரங்கள் சேகரிக்க விடாது தடுக்கும் தன்மையுடையது...

இந்த காடு, அருவின் நீரோட்டத்தில் மிக மிக செழிப்பாக நீக்கமற பசுமை போர்த்தி காண்பவர் கண்களை குளிரச் செய்யும் வகையில் இருக்கிறது..

அப்படிதான் மகரிஷி சித்தரையும் இந்த பசுமை இங்கு அழைத்து வந்துவிட்டது...

இத்தாவரம் 50 ஆண்டுகள், 100 ஆண்டுகள் பழமையான மரங்கள் மீது பற்றிப் படர்ந்திருக்கும் பச்சைப் பசேல் கொடிகளை பார்க்கும்போது, அழகாகவே இருக்கும். ஆனால், அந்த அழகே தான் ஆபத்து. இங்கும் அழகு தான் பெரும் ஆபத்து...

இந்த கொடித் தாவரம் ஒரே இரவில் 1 செ.மீ முதல் 5 செ.மீ வரை வளரக்கூடியது. பழமை மிக்க மரங்களை சூரிய ஒளி பட விடாமல் மறைத்துக்கொள்வதால், மரம் பட்டுப்போய் தானாக விழுந்துவிடும். அப்படிப்பட்ட கொடிய கொடிதான் இந்த ‘மிக்கானியா மைக்ரந்தா’ என்கின்றனர் இயற்கை ஆர்வலர்கள். அப்படி பட்டு போன ஒரு இடம் தான் இப்பொழுது மகரிஷி வந்து நிற்கும் இடம்...

மகரிஷி அந்த சருகுகளில் நடுவில் போய் தன் வாலை சுருட்டி அமர்ந்துக் கொண்டார்.. அவர் செயலை அமைதியாக பார்த்துக் கொண்டார்.. ஒரு குருவிடம் பயிலும் சீடர் நிலையில் இருந்து சாமுண்டி சித்தர் அவர் செய்கைகளை கவனித்துக் கொண்டார்...

அமர்ந்த சித்தர் ஒரு நிமிடம் கண்ணை மூடி மூச்சை ஆழ்ந்து உள் இழுத்து, பல மடங்கு வேகத்துடன் தரையை நோக்கி ஊதினார்.. அதில் தரையில் இருந்த குப்பை எல்லாம் பலமடங்கு தூர விலகி... ஒரு வட்டம் போட்டு மதில் சுவர் போல் 3 அடி உயரம் உயர்ந்து அந்த இடத்தை சுற்றி அரணாக இருந்தது... எப்பொழுது அந்த இடத்தை ஏதும் தீண்டாத வகையில்...

அந்த மதில் சுவர் உள்ளே சாமுண்டி சித்தரை அழைத்தார் மகரிஷி சித்தர்.. அப்படியே காற்றில் நுழைவது போல் உள்ளே நுழைந்தார் சாமுண்டி சித்தர்.. இன்னும் பல வருடங்கள் கழித்து தான் சாமுண்டி சித்தர் அதை விட்டு வெளியில் வருவார்...

பின் பல மந்திரம் கூறி அவரை அங்கு இருக்க கூறிவிட்டு அவர் அவ்விடத்தை விட்டு வெளியில் வந்து மீண்டும் அந்த புற்றில் குடிப்புகுந்தார் மகரிஷி சித்தர்.. அதே நேரம் அவருள் பழைய நினைவுகள்...

வலுகட்டாயமாக அதை ஒதுக்கி வைத்து அந்த புற்றில் நுழைந்துக் கொண்டார்....

ஆனாலும் பழையன அவருக்கு நினைவில் வந்தது.. அப்படியே அவர் 3 வருடங்களுக்கு முன் பயணித்தார்...

அன்று எப்பொழுதும் போல் மகரிஷி சித்தர் ஆற்றில் குளித்து கொண்டு இருந்தார்... குளித்து முடித்து விட்டு அந்த ஆற்று தண்ணீரில் நின்று மேல் நோக்கி கையை வணங்கிக் கொண்டு மந்திரம் கூறிக் கொண்டு இருந்தார்...

அவருக்கு ஒரு ஆசை.. அதை ஆசை என்பதை விட பேராசை என்று சொன்னால் தான் சரியாக இருக்கும்... அந்த இறைவனை விட பெரிய ஆளாக வேண்டும் என்பது தான் அவர் ஆசை.. ஆனாலும் அதை அடைக்கிக் கொண்டு இருக்கிறார்.. எப்பொழுது அந்த பேராசை வெடித்து சிதறுமோ நான் அறியேன்...

இப்பொழுது தண்ணீரில் இருந்து கூறிக் கொண்டு இருக்கும் பொழுது, அவர் அருகில் ஒரு மீன் நின்று அவர் மந்திரத்தை உச்சரித்தது.. அவரை விட அதிக நம்பிக்கையில்...

அந்த நேரம் அவர் ஆற்று தண்ணீரை எடுத்து முகத்தை கழுவிக் கொண்டே அந்த கடைசி மந்திரத்தை உச்சரித்தார்... அவர் தண்ணீரை எடுத்து முகத்தில் அடித்ததில் அந்த மந்திரம் சரியாக அந்த மீனுக்கு கேட்கவில்லை..

சித்தர் உணர்ந்தார் ஏதோ நடக்க போகிறது என்று.. ஆனாலும் அவர் சூரிய உதயத்துக்கு முன் அவரின் தவத்தை ஆரம்பிக்க வேண்டும் என்று, “ பிறகு வந்து பார்த்துக் கொள்ளலாம் ” என்று அவசரமாக கிளம்பி சென்றார்....

அந்த நேரம், அந்த மீன் தவறுதலாக அந்த மந்திரத்தை கூறியது... தவறுதலாக மந்திரத்தை கூறவும், அந்த மந்திரம் அந்த சூரிய பகவானை மிகவும் கோபப்படுத்தியது...

அதே கோபத்துடன், மிக மிக உக்ரத்துடன் பூமியை நோக்கி உதயமாகியது... அதன் உக்கரத்தில் அந்த ஆற்று நீர் அப்படியே வற்றியது...

அதில் அந்த மீன் மிக பெரியதாக மாறி ஆற்றில் இருந்து துள்ளிக் குதித்து வெளியில் வந்து விழுந்தது..

அதே நேரம் அந்த ஊரில் உள்ள பெண்கள் குளிக்க அந்த ஆற்று பக்கம் வந்தனர்... மிக பெரிய மீனாக இருக்கும் அருகில் வந்துப் பார்த்தனர்.. அவர்கள் கூடவே அந்த ஊரின் பண்ணையார் மகளும் வந்தாள்...

அதே நேரம் அந்த மீன் வாலில் இருந்து கொஞ்சமாக மாறியது... அதை அந்த பெண்கள் மிகவும் அதிசயமாகவும், ஆச்சரியமாகவும் பார்த்துக் கொண்டு இருந்தனர்...

####$###

விண்பா இப்பொழுது தான் நடை பயில ஆரம்பித்தாள்... அவள் அந்த ஊரின் அழகி.. அந்த கோட்டையின் இளவரசி... அத்தனை பேரின் செல்லம்...

யார் வீட்டுக்கு வந்தாலும் தன் புன்னகையால் தன் வசப்படுத்தி விடுவாள்...

அவளின் ஒவ்வொரு செயலிலும் கோட்டை சந்தோசம் அடைவாள்... யாருக்குமே தன் சிறுவயது மீண்டும் வராது ஆனால் கோட்டைக்கு வந்தது....

விண்பா ஒவ்வொரு செயலிலும் கோட்டை அவளை மீண்டும் உணர்ந்தாள்... அவளை நல்லபடியாக பாதுக்காக்க வேண்டும் என்பது மட்டுமே அவள் நினைவில் இருக்கும்..

கோட்டையும் 2௦ வயதில் தான் பெரும் துன்பம் அனுபவித்தாள், மைத்ரேயியும் அந்த வயதில் தான் பெரும் துன்பம் அனுபவித்தாள்.. இப்பொழுது விண்பா கட்டமும் அது தான் சொல்கிறது... அவளின் 2௦ வயது மிக கொடுமையாக இருக்கும்.. கோட்டை, மைத்ரேயி இருவரையும் விட மிக கொடுமை அவளின் 2௦ வயது...

மைத்ரேயி விண்பாவை அடிக்கடி கோட்டைத்தாய் கோவிலுக்கு அழைத்து செல்வாள்... விண்பா கண்களுக்கு மட்டுமே கோட்டை காட்சி தந்தாள்... கோவிலுக்கு போனால் மட்டும் விண்பா கண் சிமிட்டாமல் அந்த சிலையையே பார்த்துக் கொண்டு இருப்பாள்...

கண்களை தட்டி விழிக்காமல் வாயில் கையை வைத்து சுவைத்துக் கொண்டும், “ ம்ம்.க்கக் “ என்று சிறு சத்தம் எழுப்பிக் கொண்டும், கன்னம் குழிய சிரிப்பாள் விண்பா...

அவளின் செய்கையை மைத்ரேயி புன்னகை முகமாக பார்த்துக் கொண்டு இருப்பாள்....

இவள் மகளின் ஒவ்வொரு செய்கையும், அவர்களுக்கு புன்னகையை வரவைக்கும்.. அத்தனை சந்தோசமாக குழந்தையை அவள் பெற்றோர் பார்த்துக் கொள்வதை விட கோட்டை பார்த்துக் கொள்வாள்..

குழந்தைக்கு பசித்தால் கூட அவளை அழவிடமாட்டாள் கோட்டை..

அவளுக்கு வரும் பசியை அறிந்து மைத்ரேயிக்கு உணர்த்துவாள் கோட்டை... இப்படி பார்த்து பார்த்து வளர்கிறாள் விண்பாவை... நாளை அவளின் கஷ்டத்தை உணர்ந்து தான் இன்று இப்படி பார்த்துக் கொள்கிறாளோ என்னவோ??

அக்ரதா அவன் முகத்தை கண்ணாடியில் பார்த்து மிகவும் வேதனை அடைந்தான்.. அவன் அம்மாவிடம் வந்து கேட்பான்.. “ அம்மா என் முகம் ஏன் இப்படி இருக்கு, ஸ்கூல்ல எல்லாரும் என்னை டே – நைட் என்று சொல்லுறாங்க ” என்று தினமும் ஸ்கூல் போயிட்டு வந்து அவன் அம்மாவிடம் கேட்பான் அவன்..

பாவம் முத்தம்மாள் என்ன சொல்லுவாள் “ நீ சித்தர் தந்த திருநீர், சாம்பல் வரம் என்றா சொல்லுவாள் ” ஏதும் கூறாமல் அவனை அருகில் அழைத்து அவன் கண்ணீரை துடைத்து கூறுவாள் “ நீ எனக்கு வந்த வரம் செல்லம்.. நீ அதிசய குழந்தைடா, அவங்க சொல்லுறதை நீ கண்டுக்காதடா செல்லம்.. அம்மா சொல்லுறதை கேட்டு நல்லா படிச்சு நீ பெரிய ஆளா வரணும் ” என்று அவனுக்கும், அவளுக்கும் சேர்த்து ஆறுதல் சொல்லிக் கொள்வாள்..

அவன் முகம் அவளுக்குமே கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும்... அவன் அப்படி தான் இருப்பான்.. அந்த நிற வேறுபாடு மட்டும் இல்லாமல் இருந்தால் அவனை போல் அழகன் இந்த உலகத்திலையே இருக்கமாட்டார்கள் அது தான் கடவுள் அவனை அப்படி படைத்து விட்டானோ என்னவோ....

அவளும் பல முறை நினைப்பாள் அவனின் அந்த வெள்ளை நிறம் கொஞ்சம் குறையாக இருந்திருந்தால் அத்தனை வித்தியாசம் தெரியாது... ஆனால் நினைத்து என்ன செய்வது அது தான் படைத்துவிட்டானே என்று நினைத்துக் கொள்வாள்...

இப்பொழுது எல்லாம் அவனை அவள் வெளியில் தான் விளையாட விடுகிறாள்.. அப்படியாவது அவன் நிறம் குறையாதா என்று.. ஆனால் நிறம் குறைந்த பாடு தான் இல்லை...

இங்கோ இவள் அவன் நிறம், முகம் பற்றி கவலைப் பட, அங்கு மைத்ரேயி தன் மகள் அழகை பற்றி பெருமை பட,,, விதியோ இவர்கள் இருவரும் நேரில் பார்க்க வைக்க, இவர்கள் வாழ்கையில் விளையாட ஆர்வம் கொண்டது...

விண்பா தன் குறும்பாலும், புன்னகையாலும் அனைவரையும் தன் பக்கம் ஈர்த்தாள்.., அக்ரதாவோ தன்னையே தாழ்த்தி அனைவரையும் விட்டு விலக ஆரம்பித்தான்...

இப்படியாக நாட்கள் கடக்க, விண்பா இன்று ஒன்றாம் வகுப்பு செல்கிறாள்.. காலையிலையே வீட்டை ஒரு வழி செய்துக் கொண்டு இருந்தாள்... LKG, UKG எல்லாம் கோட்டைநல்லூரில் உள்ள பள்ளியில் படித்தாள்... ஆனால் இப்பொழுதோ அவளை பெரிய ஸ்கூலில் சேர்ப்பதால் அட்டகாசம் செய்துக் கொண்டு இருந்தாள்...

Thendral

Moderator
Staff member
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
4,900
Reaction score
23,832
Location
Phoenix
தினமும் அவளை கிளப்பி கிட்ஸ் பள்ளியில் விடுவர்தற்குள் இரண்டு பே ரும் ஒரு வழி ஆகிடுவார்கள்... இந்த பக்கம் அவளை ரெடி செய்து விட்டு அந்த பக்கம் சென்றால், துணியை எல்லாம் கலைத்து விட்டு தண்ணிக்குள் இருந்து கும்மியடிப்பாள்..

இல்லை என்றால் ஏதாவது பொருளின் பின்னால் ஒளிந்துக் கொண்டு ரெண்டு பேரையும் அந்த கோட்டை முழுவதும் ஓட விட்டு அவர்களுக்கு முன்னே காரில் இருந்து கார் காரனை அழுத்தி அடிப்பாள்....

அவளுக்கு பயந்து இன்று கெளதம் அவளை ரெடி செய்து கையிலையே தூக்கிக் கொண்டு அலைந்தான்... கீழே விட்டு அவளை மீண்டும் பிடிப்பதற்குள் ஒரு வழி ஆகிவிடுவான் அவன்....

இவளின் சேட்டை எல்லாம் கோட்டை மிகவும் ரசிப்பாள்... கெளதம் – மைத்ரேயி இருவரும் இவளை சமாளிப்பதற்குள் தலையால் தண்ணி குடிக்க வைப்பாள் அவள்... கொழுக் மொழுக் என்று அங்கும் இங்கும் ஓடி அவள் செய்யும் சேட்டைகள் ரசிக்க தக்கதாக இருக்கும்...

இப்படியாக அந்த தேவதையின் சேட்டை அதிகமாகிக் கொண்டே வந்தது.. கூடவே யாரும் அறியா வண்ணம் அவளுக்கு பிடிவாதமும் அதிகரித்தது... அதை யாருமே கவனிக்கவில்லை... ஏன் கோட்டையே கவனிக்கவில்லை...

இந்த 5 வருடத்தில் கோட்டை அந்த தேவதையின் ஆசியை மறந்துவிட்டாள்...

எப்படியோ கிளப்பிக் கொண்டு அவளை அங்கு விட்டு வீட்டுக்கு வருவதற்குள் ஒரு வழி ஆகிவிட்டான் அவன்... அவன் வந்து அமர்ந்த நிலையை கண்ட மைத்ரேயி கிளுக்கி சிரித்தாள்... அவளை செல்லமாக முறைத்துக் கொண்டே தன் கைவளைவில் வைத்துக் கொண்டான்...

அக்ரதா இப்பொழுது 5 படிக்குறான்... அவன் பள்ளியில் தான் விண்பாவை சேர்த்திருகிறான் கெளதம்.... லஞ்ச் பெல் அடிக்கவே எப்பொழுதும் போல் கிளாஸ் ரூமை விட்டு வெளியில் வந்த அக்ரதா அவன் இடமான மரத்தின் கீழ் வந்து அமர்ந்துக் கொண்டான்....

விண்பா அவள் கிளாஸ் ரூமில் அமர்ந்துக் கொண்டு வெளியில் வேடிக்கைப் பார்த்துக் கொண்டே தன் உணவை கொறித்துக் கொண்டு இருந்தாள்.... வந்த கொஞ்ச நேரத்திலையே 2 பிள்ளையின் கையை கடித்து வைத்து விட்டாள் என்று அவள் மிஸ் அவளிடம் கொஞ்சம் கவனமாக இருக்க மற்ற பிள்ளைகளுடன் கூறவும் நமது குட்டிக்கு கோபம் வந்து அவளின் மிஸ்சை பார்த்து முகத்தை சுழித்து விட்டு அவள் இடத்தில அமைதியாக வந்து அமர்ந்துக் கொண்டாள்...

அவள் செயல் அந்த மிஸ்க்கு கவிதையாய் இருந்ததுவோ என்னவோ இத்தனை நேரம் அவளை தூக்கி வைத்து சமாதான படுத்தி விட்டு இப்பொழுது தான் வெளியில் சென்றார்... இவளை தூக்கி வைக்கவும் மற்ற பிள்ளைகளுக்கு இவள் மேல் கோபம் வர இவளிடம் பேசாமல் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டனர்.. அது தான் அமைதியாக இந்த வாலு வெளியில் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கிறது....

அதே நேரம் தான் அக்ரதா அவன் கிளாஸ் ரூம் விட்டு வெளியில் வந்து தனியாக அமர்ந்து இருப்பதை பார்த்த இந்த வாலு தனக்கு ஒரு துணை கிடைத்து விட்டது என்ற எண்ணத்தில் டிபன் பாக்ஸ் எடுத்து லஞ்ச் பாக்கில் வைத்து அதன் ரோப்பை பிடித்து இழுத்துக் கொண்டே வெளியில் வந்தது.. வந்து நேராக அக்ரதா அருகில் நின்றாள்...

தன் முன் ஒரு அழகான கவுண் ஓன்று தெரியவும் ஆசையாக தன் கண்களை மட்டும் தூக்கிப் பார்த்தான் அக்ரதா... பின் மீண்டும் அதே போல் குனிந்துக் கொண்டான்... அவனிடம் யாரும் பேசமாட்டார்கள்.. அப்படியும் இவனிடம் யாராவது பேசவந்தால் அவன் முகம் பார்த்ததும் விலகி போய் விடுவார்கள்... அப்படி நினைத்து தான் இப்பொழுதும் தலையை குனிந்துக் கொண்டான் அவன்...

ஆனால் அந்த வாலோ இவனை விடமாட்டேன் என்ற எண்ணியது போல்.. லஞ்ச் பேக் ரோப்பை கீழே போட்டு விட்டு, தன் முட்டில் கைவைத்து குனிந்து அவன் முகம் பார்த்து அரிசிப் பற்கள் தெரிய, கன்னம் குழிய சிரித்தாள் அந்த தேவதை...

அந்த தேவதையின் சிரிப்பில் முதல் முறையாக அக்ரதா அவளைப் பார்த்து சிரித்தான்....

கட்டவிழ்க்க வருவான்....
 
AnithaKarmegam

இணை அமைச்சர்
Joined
Jan 21, 2018
Messages
711
Reaction score
1,865
Age
27
Location
Thiruvarur

enna sha ore suspense ah iruku hero than antha fish ?????:unsure::unsure::unsure::unsure:
 
sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur

Priyapraveenkumar

அமைச்சர்
Joined
Feb 19, 2018
Messages
2,340
Reaction score
2,705
Location
Coimbatore
very nice ud..........Vinba romba cutea elllarayum cover pandra....akratha same opp...ine ivanga rendu perum sentha ennavagum........ivloda pidivatham nala akratha ivalukku problem varuma....
 
shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
தினமும் அவளை கிளப்பி கிட்ஸ் பள்ளியில் விடுவர்தற்குள் இரண்டு பே ரும் ஒரு வழி ஆகிடுவார்கள்... இந்த பக்கம் அவளை ரெடி செய்து விட்டு அந்த பக்கம் சென்றால், துணியை எல்லாம் கலைத்து விட்டு தண்ணிக்குள் இருந்து கும்மியடிப்பாள்..

இல்லை என்றால் ஏதாவது பொருளின் பின்னால் ஒளிந்துக் கொண்டு ரெண்டு பேரையும் அந்த கோட்டை முழுவதும் ஓட விட்டு அவர்களுக்கு முன்னே காரில் இருந்து கார் காரனை அழுத்தி அடிப்பாள்....

அவளுக்கு பயந்து இன்று கெளதம் அவளை ரெடி செய்து கையிலையே தூக்கிக் கொண்டு அலைந்தான்... கீழே விட்டு அவளை மீண்டும் பிடிப்பதற்குள் ஒரு வழி ஆகிவிடுவான் அவன்....

இவளின் சேட்டை எல்லாம் கோட்டை மிகவும் ரசிப்பாள்... கெளதம் – மைத்ரேயி இருவரும் இவளை சமாளிப்பதற்குள் தலையால் தண்ணி குடிக்க வைப்பாள் அவள்... கொழுக் மொழுக் என்று அங்கும் இங்கும் ஓடி அவள் செய்யும் சேட்டைகள் ரசிக்க தக்கதாக இருக்கும்...

இப்படியாக அந்த தேவதையின் சேட்டை அதிகமாகிக் கொண்டே வந்தது.. கூடவே யாரும் அறியா வண்ணம் அவளுக்கு பிடிவாதமும் அதிகரித்தது... அதை யாருமே கவனிக்கவில்லை... ஏன் கோட்டையே கவனிக்கவில்லை...

இந்த 5 வருடத்தில் கோட்டை அந்த தேவதையின் ஆசியை மறந்துவிட்டாள்...

எப்படியோ கிளப்பிக் கொண்டு அவளை அங்கு விட்டு வீட்டுக்கு வருவதற்குள் ஒரு வழி ஆகிவிட்டான் அவன்... அவன் வந்து அமர்ந்த நிலையை கண்ட மைத்ரேயி கிளுக்கி சிரித்தாள்... அவளை செல்லமாக முறைத்துக் கொண்டே தன் கைவளைவில் வைத்துக் கொண்டான்...

அக்ரதா இப்பொழுது 5 படிக்குறான்... அவன் பள்ளியில் தான் விண்பாவை சேர்த்திருகிறான் கெளதம்.... லஞ்ச் பெல் அடிக்கவே எப்பொழுதும் போல் கிளாஸ் ரூமை விட்டு வெளியில் வந்த அக்ரதா அவன் இடமான மரத்தின் கீழ் வந்து அமர்ந்துக் கொண்டான்....

விண்பா அவள் கிளாஸ் ரூமில் அமர்ந்துக் கொண்டு வெளியில் வேடிக்கைப் பார்த்துக் கொண்டே தன் உணவை கொறித்துக் கொண்டு இருந்தாள்.... வந்த கொஞ்ச நேரத்திலையே 2 பிள்ளையின் கையை கடித்து வைத்து விட்டாள் என்று அவள் மிஸ் அவளிடம் கொஞ்சம் கவனமாக இருக்க மற்ற பிள்ளைகளுடன் கூறவும் நமது குட்டிக்கு கோபம் வந்து அவளின் மிஸ்சை பார்த்து முகத்தை சுழித்து விட்டு அவள் இடத்தில அமைதியாக வந்து அமர்ந்துக் கொண்டாள்...

அவள் செயல் அந்த மிஸ்க்கு கவிதையாய் இருந்ததுவோ என்னவோ இத்தனை நேரம் அவளை தூக்கி வைத்து சமாதான படுத்தி விட்டு இப்பொழுது தான் வெளியில் சென்றார்... இவளை தூக்கி வைக்கவும் மற்ற பிள்ளைகளுக்கு இவள் மேல் கோபம் வர இவளிடம் பேசாமல் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டனர்.. அது தான் அமைதியாக இந்த வாலு வெளியில் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கிறது....

அதே நேரம் தான் அக்ரதா அவன் கிளாஸ் ரூம் விட்டு வெளியில் வந்து தனியாக அமர்ந்து இருப்பதை பார்த்த இந்த வாலு தனக்கு ஒரு துணை கிடைத்து விட்டது என்ற எண்ணத்தில் டிபன் பாக்ஸ் எடுத்து லஞ்ச் பாக்கில் வைத்து அதன் ரோப்பை பிடித்து இழுத்துக் கொண்டே வெளியில் வந்தது.. வந்து நேராக அக்ரதா அருகில் நின்றாள்...

தன் முன் ஒரு அழகான கவுண் ஓன்று தெரியவும் ஆசையாக தன் கண்களை மட்டும் தூக்கிப் பார்த்தான் அக்ரதா... பின் மீண்டும் அதே போல் குனிந்துக் கொண்டான்... அவனிடம் யாரும் பேசமாட்டார்கள்.. அப்படியும் இவனிடம் யாராவது பேசவந்தால் அவன் முகம் பார்த்ததும் விலகி போய் விடுவார்கள்... அப்படி நினைத்து தான் இப்பொழுதும் தலையை குனிந்துக் கொண்டான் அவன்...

ஆனால் அந்த வாலோ இவனை விடமாட்டேன் என்ற எண்ணியது போல்.. லஞ்ச் பேக் ரோப்பை கீழே போட்டு விட்டு, தன் முட்டில் கைவைத்து குனிந்து அவன் முகம் பார்த்து அரிசிப் பற்கள் தெரிய, கன்னம் குழிய சிரித்தாள் அந்த தேவதை...

அந்த தேவதையின் சிரிப்பில் முதல் முறையாக அக்ரதா அவளைப் பார்த்து சிரித்தான்....

கட்டவிழ்க்க வருவான்....
நன்றி அக்கா..
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top