• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Pesum silaiye..kattavizhkava..? - Episode - 4

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli

shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
Ezhilan pirappu semma sis.. villanum heroine iruvarum ore idathilaa..? antha sithar samundiyin udalai puthathu thavaro..? aduthu enna nadakkum..?! whiting for nxt ud..
நன்றி சிஸ்.. அந்த உடலை புதைப்பதால் நிறைய விளைவுகள் வரும்.. :)
 




shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
EZHILAN name very nice and different.......
Ezhilanum oru hero va?
Vinba,Akratha and ezhilan ivanga moonu perkkum edum sambantham irukka?
நன்றி பிரியா சிஸ்.. அக்ரதா யார்? அகலெழிலன் யார் என்பது வரும் எபியில் பார்ப்போம்..;););) ஆனால் ஹீரோ அகலெழிலன் தான் :)... ஆம் 3 பேருக்கும் சம்மந்தம் இருக்கு..
 




AnithaKarmegam

இணை அமைச்சர்
Joined
Jan 21, 2018
Messages
711
Reaction score
1,865
Age
27
Location
Thiruvarur
அன்று பள்ளியை விட்டு வந்ததில் இருந்து விண்பா மிகவும் கவலையாக முகத்தை தூக்கி வைத்து, கன்னத்தில் கை வைத்துக் கொண்டு சோகமே உருவாக ஷோபாவில் அமர்ந்தாள்....

அவளை பார்த்துக் கொண்டே கெளதம் வீட்டின் உள்ளே நுழைந்தான்.. அவன் சின்னுவோ மகளின் அருகில் அவளைப் போலவே கன்னத்தில் கைவைத்துக் கொண்டு மகள் வாயில் இருந்து முத்து உதிர்ந்து விழுகாதா என்று ஆவலுடன் பார்த்துக் கொண்டு இருந்தாள்...

கெளதம் அவளை வீட்டில் இறக்கி விட்டு விட்டு அவன் தோட்டம் பக்கம் சென்று விட்டான். மகளை சரியாக கவனிக்கவில்லை... அது தான் தோட்டத்துக்கு சென்று செய்ய வேண்டிய வேலைகளை எங்கு இருபவர்களிடம் கூறிக் கொண்டு மகளை காண ஓடி வந்தால், இவளோ கவலையின் உருவமாக அமர்ந்து இருக்கிறாள்.. தினமும்அவன் வீட்டுக்கு வரும் பொழுது மகளை, சின்னு சமாளிக்க முடியாமல் அவனை அழைப்பாள் ஆனால் இன்றோ எல்லாம் தலை கீழ்...

சின்னுவும் கிட்ட தட்ட 1 மணி நேரமாக கேட்டுக் கொண்டு இருக்கிறாள். “ ஏன் இப்படி இருக்கிறாய் என்று “ ஆனால் வாயை திறக்கவே இல்லை அப்படியே அழுத்தமாக, வாயை இறுக்க மூடிக் கொண்டு இருக்கிறாள்..

“ இருந்தாலும் இந்த குட்டி பிசாசுக்கு இப்படி இருக்க கூடாது “ என்று விண்பா செல்லத்தை மனதில் திட்டிக் கொண்டு இருக்கிறாள் சின்னு.. வாய் விட்டு திட்டினால் கௌதமிடம் வாங்கி கட்டி கொள்வது யாராம்...?

ரெண்டு பேரையும் நோட்டம் விட்டுக் கொண்டே வந்த கெளதம், அறைக்கு சென்று ரெப்ரெஷ் செய்துக் கொண்டு அவர்களுக்கு முன் இருந்த சோபாவில் வந்து அமர்ந்து இருவரையும் பார்த்தான்...

அவனின் பார்வையை உணர்ந்த சின்னு “ அவளிடம் என்ன என்று கேளுங்கள் “ என்று கண்ணால் செய்கை காட்டினாள் அவள்...

அதை உணர்ந்த அவனும் “ குட்டிம்மா ஏன் இன்னைக்கு இப்படி இருக்கீங்க... ஸ்கூல்ல மிஸ் அடிச்சாங்களா?” என்று தன் மகளை அறிந்துக் கொடுஅறியாமல் கேட்டான் அவன்...

அவன் அப்படி கேட்கவும் அவனை முறைத்த சின்னு “ ஆமா அப்படியே மிஸ் அடிசுட்டாலும் மிஸ்க்கு பயந்துட்டு தான் உங்க பொண்ணு மறுவேலை பார்ப்பா... மிஸ் அடிச்சா கிளாஸ் விட்டு வெளியில் வந்து பிரின்சிபால் அறைக்கு சென்று மிஸ் மேல கம்பிலைன்ட் செய்வா உங்க பொண்ணு.. இவளை பார்த்து மிஸ் தான் வருத்த படணும், இவள் இல்லை “ என்று நினைத்து அவனைப் பார்த்து நொடித்தாள் அவள்....

“ சரி... சரி.... கூல்... சின்னு, இப்போ பாரு நான் கேட்டதும் உன் பொண்ணு பதில் சொல்லுவா ” என்று அவளை நோக்கி கெத்து பார்வை ஒன்றை வீசி மகள் பக்கம் திரும்பினான் அவன்...

சத்தமில்லாமல் ஒரு சிரிப்பை உதிர்த்த சின்னு மகள் பக்கம் பார்வையை திருப்பினாள்..

“ குட்டிம்மா, எதுக்கு இப்படி இருக்கீங்க?என்ன ஆச்சு கண்ணா.? ஸ்கூல்ல யாராவது உன்னை அடிச்சுடாங்காளா?? இல்லை நீ இன்னைக்கு யாரையும் கடிக்கலியா..?“ என்று தன் மகளை பற்றி அறிந்தவனாய்கேள்விக் கணைகளை தொடுக்க....

அவனின் சின்னுவோ அடக்க மாட்டாமல் சிரித்துக் கொண்டு இருந்தாள்,“ சும்மாவே மகள் முறைத்துக் கொண்டு இருக்கிறாள், இதில் மாமா வேற அவளை இன்னும் ஏத்தி விடுறாங்களே “ என்று பார்த்துக் கொண்டு இருந்தாள்...

அவன் அப்படி கேட்கவும் அவனை நோக்கி திரும்பிய விண்பா தன் குட்டி கண்களை பெரிதாக விழித்துஉருட்டி முறைத்தாள் அவள்...

அவளின் முறைப்பை கண்ட கெளதம் மெதுவாக சின்னு பாகமாக பார்வையை திருப்பினான் “ இவளுக்கு என்ன ஆச்சு “ என்று...

அதற்க்கு அவள் “ அட மக்கு மாமா... நானும் இதை தான் இத்தனை நேரமாக அவளிடம் கேட்டேன் “ என்று பதில் பார்வை தந்தாள்...

“ நீயும் அதை தான் இத்தனை நேரம் செய்தியா “ என்று “ சுமால் கன்பியூஸ் “ என்று அவளை பார்த்து கூறி விட்டு மகள் அருகில் சென்று அவளை தூக்கி தன் மடியில் வைத்துக் கொண்டு “ என் குட்டிமாக்கு என்ன ஆச்சு அப்பாகிட்ட சொல்லுங்க.... அப்பாவாலா முடியாதது ஏதும் உண்டோ என்றுக் கூறிக் கொண்டே அவன் சின்னுவைப் பார்த்தான் அவன்......

“ ஆம், அவனால் முடியாதது உண்டோ அவனின் சின்னுவுக்காக இறந்தும் பிறந்து வந்தவன் அவன்.. தன் மகளுக்காக எதையும் செய்வான் “ என்று அவனை பார்த்து சிரித்தாள் சின்னு.. கூடவேமகளை முதலிலையே இப்படி மடியில் தூக்கி வச்சு கொஞ்சி இருந்தா அப்போவே அவள் உங்களுக்கு பதில் சொல்லி இருப்பாள் அவள் கிட்ட கேவலமா ஒரு முறைப்பு வாங்கி இருக்க வேண்டாம் “ என்று அவனை கேலி பார்வை பார்க்கவும் தவறவில்லை அவள்...

அவளின் கேலியை உணர்ந்தாலும் “ மகளின் முறைப்பு வாங்க தான் வரம் வாங்கி இருக்க வேண்டும் “ என்று பெருமை பார்வை வேற அவளை நோக்கிவீசினான் அவன்... அவள்அவனின் கோட்டைத்தாய் அல்லவா.. அது தான் இப்படி....

அவன் மடியில் அமர்ந்த அவள்“ அப்பா என்னோட அக்ரதா பாவம்அப்பா அவனை நாம இங்க கூட்டிட்டு வருவோமா? என்று கேட்கவும் “ அவளின் அக்ரதாவா என்று கோட்டையை அதிர்ந்து விட்டாள்... அவள் சிறு பெண் தான் ஆனாலும் இப்படி அவன் நட்பு அவளுக்கு தேவையா என்று தான் யோசித்தாள்...

கெளதம் “ சரி “ சொல்ல கூடாது, அவன் வாயில் விழும் வார்த்தை என் வார்த்தையாக தான் இருக்க வேண்டும் என்றுஎண்ணி கோட்டை வார்த்தையை உதிர்க்கும் முன் கெளதம் “ சரி “ என்று வார்த்தையை உதிர்த்து விட்டான்...

கோட்டைஉதிர்த்த வார்த்தை அப்படியே மாறி சின்னு வாயில் இருந்து உதிர்த்தது “ வேண்டாம்“ என்று.....

அவள் வேண்டாம் என்று கூறவும் கெளதம் யோசனையாக அவளைப் பார்த்தான்... கெளதம் எது சொன்னாலும் “ சரி “ என்று கூறும் சின்னு இன்று “ வேண்டாம் “ என்று கூறுகிறாள் என்றால் ஏதோ இருகிறதே என்று அவ யோசித்துக் கொண்டு இருக்கவும்,

அவனை மேலும் யோசிக்க விடாமல் அவனை இழுத்துக் கொண்டு அவனை கார் நோக்கி சென்றாள் விண்பா..

இனி ஓன்றும் செய்ய முடியாது நடப்பதை பார்போம் என்று எண்ணி கோட்டை அமைதியாகி விட்டாள்.....

அக்ரதாவின் வீட்டுக்கு சென்று அவன் அம்மாவை எப்ப்படியோ பேசி, அவளை இங்கு கோட்டை மாளிகைக்கு வீட்டு வேலை செய்ய அழைத்து வந்துவிட்டார்கள் தந்தையும், மகளும் சேர்ந்து.... அதன் பிறகு கெளதம் சின்னு கூறிய “ வேண்டாம் “என்பதை அறவே மறந்து விட்டான்.. விதியின் விளையாட்டால் அவளுக்கு மறந்துப் போனது அது கோட்டை கூறிய வார்த்தை தான் என்று அவனிடம் கூற....

அந்த பூவரசம் மரத்தில் இருவரும் ஊஞ்சல் கட்டி விளையாடுவதும், ஒன்றாக படிப்பதும் என்று அவர்கள் நாட்கள் வண்ணமயமாக சென்றது....

அக்ரதா, விண்பா இருவரும் இப்பொழுது ஒரே போல் தான் காரில் தங்களது பள்ளிக்கு செல்கின்றனர்... இதை கோட்டை மிகவும் வருத்தமாக பார்த்துக் கொண்டாள்....

அகனெழிலன் வளர வளர மிக மிக அழகான ஆண்மகனாக வளர்ந்தான்... வளரும் பொழுதே பல கலைகளை கற்றுக் கொள்கிறான்... பண்ணையார் இப்பொழுது உயிருடன் இல்லை.. மகள் திருமணம் செய்யமாட்டேன் என்று கூறியதில் அந்த வருத்திலையே அவர் மரணத்தை தழுவினார்...

அகனெழிலனுக்கு இப்பொழுது 13 வயது... அவனின் அம்மா தான் அவனின் முதல் தெய்வம்... அவனின் பிறப்பு அவனுக்கு நன்றாகவே தெரியும்... தன்னை இப்படி படைக்க ஏதோ ஒரு காரணம் கண்டிப்பாக இருக்கும் என்று எப்பொழுதும் நம்புபவன் அவன்....

அதிலும் எப்பொழுதும் அவனின் நெஞ்சத்து மச்சத்தை வருடிக் கொள்வான் அவன்.. அந்த மச்சத்தை வருடும் பொழுது அவனுக்கு ஏதோ ஒரு சக்தி வருவது போல் இருக்கும் அவனுக்கு...

அன்று கோவில் பூசாரி அவசரமாக கெளதம் நோக்கி ஓடி வந்தார் “ ஐய்யா அந்த காட்டில் ஒரு சித்தர் உடல் கிடக்கிறது “ என்று...

அவர் கூறுவதை கேட்ட அவனும், ஊர் மக்களும் அந்த காட்டை நோக்கி ஓடினார்கள்...

அங்கு சென்று அந்த உடலை பார்த்ததும் “ அதை ஊருக்கு எடுத்து வந்து நல்ல முறையில் தகனம் செய்ய கூறினான் “ கெளதம்....

அவன் கூறிய படி அந்த சித்தர் உடல் கோட்டைநல்லூரில் தகனம் செய்யப்பட்டது.. இதை அறிந்த பாம்பின் உடம்பில் இருந்த மகரிஷி சித்தர் ஆன்மா பெரும் உக்ரத்துடன் கோட்டைநல்லூர் நோக்கி கிளம்பியது..

அதன் வருகையை உணர்ந்து கோட்டை “ நடக்க கூடாதது நடக்க போகிறது “ என்று அறிந்துக் கொண்டாள்....அதன் அறிகுறியாக பெரும் மழையை உண்டு பண்ணினாள் அன்று போல் இன்றும்....

கட்டவிழ்க்க வருவான்.....
wow sha pr..hero name spr..ezhillll..........luvlyyy da
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top