• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Pesum silaiye kattavizhkava..? - Episode - 5

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
ஹாய் டியர்ஸ்.. எல்லாரும் எப்படி இருக்கீங்க... ரொம்ப ரொம்ப சாரிப்பா... டைப் பண்ண கொஞ்சம் லேட் ஆகிட்டு... உங்களை காக்க வைக்குறது என் எண்ணம் இல்லை டியர்ஸ்
யோசிக்க மண்டையில் மசாலா இல்லை போல அது தான் இவ்ளோ லேட்.. லேட்டா எபி கொண்டு வந்திருக்கேன்... இந்த எபி படிங்க படித்து உங்க கமெண்ட்ஸ் சொல்லுங்க... ஏதாவது தவறுகள் இருந்தால் சொல்லுங்க திருத்திக் கொள்கிறேன்...படித்து கமெண்ட்ஸ் சொல்லுற உங்க எல்லோருக்கு ரொம்ப நன்றி...நன்றி டியர்ஸ்....


கட்டு – 5

View attachment 2695

அன்று கோட்டைத்தாய் கோவில் பூசாரி எப்பொழுதும் போல் கோட்டைத்தாய்க்கு பொங்கல் வைக்க அந்த காட்டுக்கு விறகு எடுக்க சென்றார்... அங்கு சென்று விறகு எடுத்து வருவதற்குள் நேரம் மாலையை நெருங்கியது.... அந்த நேரமே மிகவும் இருட்டாக இருந்தது அந்த அடர்ந்த காட்டில்...

அவருக்கு மிகவும் பயமாக இருந்தது... காட்டில் பயங்கர சத்தம் வித விதமாக வந்தது... எங்கோ தூரத்தில் கோட்டான் சத்தமும், பல வகை பறவைகளின் சத்தமும் அவர் மனதில் கிலியை ஏற்படுத்தியது...

பயத்துடனேமந்திரம் ஒன்றை உச்சரித்துக் கொண்டே நடந்து வந்தார்... கடவுள் மேல் நம்பிக்கையாக அந்த மந்திரத்தை உச்சரித்துக் கொண்டு வரும் பொழுது தூரத்தில் ஒருவர் படுத்திருப்பதை போல் பூசாரிக்கு தெரிந்தது....

பயத்துடனே, மந்திரத்தை சத்தமாக உச்சரித்துக் கொண்டே அதன் அருகில் சென்றுப் பார்த்தார் அந்த பூசாரி, அது ஒரு சித்தரின் உடல் என்று அறிந்ததும் அதிர்ந்த பூசாரி அவர் உடலை மெதுவாக அந்த முட்புதரில் இருந்து வெளியில் எடுத்தார்... உயிர் இருக்கிறதா என்று பார்க்க.. அப்படி பார்த்து உயிர் இல்லை என்றதும் அந்த இடத்தை விட்டு வேகமாக ஓட்டம் எடுத்தார்... எடுத்தஓட்டம் கெளதம் வீட்டின் முன் தான் நின்றது....

அவன் முன் வந்து நின்று “ ஐய்யா அந்த காட்டில் ஒரு சித்தர் உடல் கிடக்கிறது “ என்று கூறினார்......
அவர் கூறுவதை கேட்ட அவனுக்குஅதிர்ச்சியாக இருந்தது... பெரும்பாலும் அந்த காட்டுப் பக்கம் யாரும் அதிகமாக செல்வது கிடையாது.. விறகு எடுக்க மட்டுமே ஆண்கள் செல்வார்கள்.. ஆனால் அங்கு இறந்த உடல் கிடப்பது என்பது ஆச்சரியமாக ஒரு விஷயம்...


ஆனாலும் அங்கு சென்று பார்ப்பது தான் சரியாக இருக்கும் என்று அவனும், ஊர் மக்களும் அந்த காட்டை நோக்கி ஓடினார்கள்...

அங்கு சென்று அந்த உடலை பார்த்ததும், அவர்களுக்கு திகைப்பு அது ஒரு சித்தர் உடல் என்பதால்... அவர்களுக்கு யாருக்கும் அந்த சித்தரின் கலை பற்றி தெரிய வாய்ப்பில்லை... சிறிது யோசித்த அவன் “ அவர்உடலை ஊருக்கு எடுத்து வந்து நல்ல முறையில் தகனம் செய்ய கூறினான் “ கெளதம்....
அவன் கூறிய படி அந்த சித்தர் உடல் கோட்டைநல்லூர் ஊருக்கு கொண்டு வரப்பட்டு, அடுத்த நாள் நல்ல முறையில் தகனம் செய்யப்பட்டது..


சாமுண்டி சித்தருக்கு உணவு கொடுப்பது இது தான் கடைசி நாள்.. அடுத்த நாளில் இருந்து சாமுண்டி சித்தர் ஊன், உறக்கமின்றி, மனதைகட்டுபடுத்தி என்று கடும் பயிற்சியை ஆரம்பிக்க வேண்டும் கூடவே சில மந்திரங்களையும் கூறிய அவர் இனி உன் யாகத்தை முடித்து விட்டு வெற்றிகரமாக திரும்பி வா என்று அவருக்கு வாழ்த்து கூறி,கூடவேஅடுத்த நிலையை அடைய, அதாவது கூடுவிட்டு கூடு பாயும்கலையும், கூடு விடா கலையும் பற்றி எப்படி எல்லாம் தன்னை தயார் நிலையில் வைக்க வேண்டும் என்று அவருக்கு கூறி விட்டு,

வெளியில் வரவுமே அவருக்கு தெரிந்து விட்டது நடந்த விபரீதம்... அதை தடுக்க உக்ரத்துடன் கோட்டைநல்லூர் நோக்கிவந்தார்...

ஆனால் அவரோ பாம்பின் உடலில் இருப்பதால் அந்த ஊரின் உள்ளே வரமுடியவில்லை... அவர் சாதாரண மனிதராகவோ, சித்தராகவோ இருந்திருந்தால் ஊரின் உள்ளே வந்திருக்க முடியும்... அதிலும் இப்பொழுது அவர் உடலை அவர் மீட்க முடியாத பட்சத்தில் இருக்கும் பொழுது கஷ்டமே....

இப்பொழுது இந்த பாம்பின் உடலில் இருந்து அவர் ஊருக்குள் சென்றால் கண்டிப்பாக கெளதம் உயிருக்கு ஆபத்தாக முடியும்... இதை அறிந்தகோட்டைஊரில் பாதுகாப்பை அதிகரிக்க செய்தாள்...
அந்த பக்கம் இருந்த சித்தர் “ கோட்டை நீ பெரிய தப்பு பண்ணுற.. நீ என்னை அந்த பக்கம் விடு “ என்று இங்கிருந்து கோட்டையை நோக்கி கோபமாக கத்தினார்...


ஆனால் கோட்டையோ அவர் கூறுவது எதையும் காதில் எடுக்கவே இல்லை.. சித்தரை இந்த பக்கம் அவள் விடவே இல்லை... அந்த பக்கம் இருந்து உக்ரத்துடன் கோட்டைநல்லூரைபார்த்துக் கொண்டு இருந்தார் மகரிஷி சித்தர்.....

அப்பொழுது அவர் கண்ணில் பட்டது…, கோவில் அருகில் இருந்த ஊஞ்சலில் இருந்து ஆடிக் கொண்டு இருந்த விண்பாவும், அவளுக்கு பின்னே நின்று அவளை ஆட்டி விட்ட அக்ரதாவுமே....

" வருவான் அவன் வருவான்..
உன்னை மீறி அவளை அழைத்து வருவான் " என்று கோட்டைக்கு அவர் கூறினார்..


இவர் பார்வை அவர்களை வட்டமிடுவதும், அவர் கூறுவதையும் கேட்ட அவளுக்கு விண்பாவுக்கு வரும் பிரச்சனை கண்ணில் படமாக ஓடியது... அந்த நேரம் அவளின் பாதுகாப்பு வளையத்தை கலைத்தாள், ஆனால் சித்தரோ அவளோ ஏளனமாகப் பார்த்தார்....

கோட்டை முதலில் அவரை உள்ளே விட்டிருந்தால், அவர் இத்தனை கோபமடைந்திருக்க மாட்டார்... ஆனால் விதி வலியது என்று இந்த இடத்தில் காட்டியது...

சித்தர் கோட்டையை நோக்கி “ நான் அந்த ஊரில் இனி கால் வைக்க மாட்டேன், எனக்கு அந்த உடல் இல்லை என்றால் வேற உடல்,உங்களில் யாரும் இங்கு வர கூடாது, அப்படி வந்தால் விளைவு மிக மோசமாக இருக்கும், இப்பொழுது கூட என் இடத்துக்கு வந்து என் உடலை அழித்திருகிறான் அவன்... ஆனால் உனக்காக இப்பொழுது அவனை விடுகிறேன்... ஆனால் இனி யாரும் இங்கு வராத படி காத்துக் கொள்” என்று கூறி உரக்க சிரித்தார்.. கூடவே அங்கு இருந்து இங்கு அவள் வாரிசு வர காத்திருந்தார் தன் பழி வெறியை நீக்க...

அவரின் பயங்கரமான சிரிப்பு சத்தத்தில் மரத்தில் ஆங்காங்கே தங்கி இருந்த பறவைகள் சட சட என தன் சிறகை அடித்து வேகமாக அந்த இடத்தை விட்டு அகன்றது.. கோட்டை கண்களுக்கு அவர் " ஒரு நேரம் சீறும் பாம்பாகவும், மறு நேரம் கண்கள் சிவக்க பழிவாங்க துடிக்கும் அரக்கனாகவே தெரிந்தார் மகரிஷி சித்தர்..

அவரின் சிரிப்பு சத்ததுக்கு பின்னால் இருக்கும் காரணத்தை அறிய கோட்டை எண்ணினாள்... ஆனால் அவரோ அவரின் எண்ணத்தை அவள் அறியாத வகையில் தன்னை சுற்றி வளையம் இட்டார்....
அந்த வளையத்தில் தன்னை நிறுத்திக் கொண்டார்... அந்த இடத்தில் அமர்ந்து வரும் நாளுக்காய், அவருக்கு வேறு உடல் கிடைக்க காத்திருக்க ஆரம்பித்தார்....


கோட்டைத்தாய்க்கும், சித்தருக்கும் நடந்த வாக்குவாதத்தை கேட்டுக் கொண்டு இருந்த முக்கோடி தேவர்களும் இரண்டாம் முறையாக கோட்டைநல்லூர் நோக்கி பயணித்தனர்.. அன்று கொடுத்த வாக்கிற்காய்....

தங்களுக்கு சகோதரியாக இருக்கும் கோட்டைக்கும் அவர்கள் சார்ந்து பேசமுடியாது, சித்தருக்கும் சார்ந்து பேசமுடியாது... இருவருமே அந்த கடவுளை சேர்ந்தவர்கள், சார்ந்தவர்கள்..... அதனால் தான் அன்று கொடுத்த வாக்குக்காக வந்தனர்...

வந்து இங்கு உள்ள மக்கள், அங்கு செல்லாதபடியும், அங்கு இருந்து ஒரு தூசி துரும்பு கூட இங்கு வராத படி இருக்க பல யோசனைக்கு பின் வருணபகவான் கொடுத்த யோசனை படி பெரும் மழை கோட்டைநல்லூரை நோக்கி வரவைத்தார்....

மழை என்றால் அப்படி ஒரு மழை, இதுவரை வராத படி.. எங்கும் தண்ணீர் கூடவே இடி மின்னல் என்று நிற்காமல் மழை... எங்கும் வெள்ளக்காடு கெளதம் இதை கொஞ்சமும் எதிர் பார்க்கவில்லை... அவன் இந்த ஊருக்கு வந்த முதற்கொண்டு இப்படி ஒரு மழையை அவன் காணவில்லை.... ராட்சச மழை என்று தான் கூறவேண்டும்....

அப்பொழுது தான் மழை கொஞ்சம் நிற்கவும் ஊர் மக்கள் உறங்க ஆயத்தம் ஆகும் பொழுது மீண்டும் மழை தொடங்கியது, கண்ணை வெட்டும் மின்னலுடன்....

அப்பொழுது அது நடந்தது, பெரும் சத்தத்துடன், காதை கிழிக்கும் சதத்துடனும், பயங்கர வெளிச்சமாகவும் ஒரு மின்னல் வெட்டி ஒரு வெள்ளி துண்டு கோட்டைநல்லூரை நோக்கி பாய்ந்து வந்தது...

எல்லாரும் அந்த சத்தத்தை கேட்டு ஜன்னல் கதவை திறந்துப் பார்த்தனர், கூடவே கௌதமும் அவனது கோட்டையில் இருந்துப் பார்த்தான்..

வானில் இருந்து பாய்ந்து வந்த அந்த வெள்ளி துண்டு அந்த காட்டுக்கும், ஊருக்கும் இடையில் விழுந்து நேர் கோடாக சென்று அதற்கு இடையில் பெரும் பள்ளத்தை உருவாக்கி அடங்கியது..
அதே நேரம் மழை வெள்ளம் எல்லாம் அந்த பள்ளத்தை நோக்கி ஓடியது, மழையும் நின்றது, இடி, மின்னல் என்று எல்லாம் நின்றது. இதில் கோட்டை மிக மிக சந்தோசம் அடைந்தாள்... அந்த பள்ளத்தை தாண்டி யாரும் அங்கு செல்லமாட்டார்கள் என்று முழுமையாக நம்பினாள்... இனி விண்பாவுக்கு ஆபத்து இல்லை என்று முழுதாக நம்பி தேவதைகளுக்கும், தேவர்களும் நன்றி கூறி விடைகொடுத்தாள்..


ஆனால் அவர்களுக்கு தெரியும் மகரிஷி ஏதாவது செய்வான் என்று. ஆனால் கோட்டையின் இந்த சந்தோசத்தை அவர்களுக்கு அழிக்க மனதில்லை.. அவளிடம் ஏதும் கூறாமல் தங்கள் இடம் நோக்கி கிளம்பினார்கள்....

காலையில் அந்த பள்ளத்தை பார்த்த அனைவர்க்கும் ஆச்சரியம் இவ்ளோ பெரிய பள்ளம் ஏன் விழுந்தது என்று.. ஆனாலும் கௌதம்க்கு
 




Last edited:

shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
சிறு யோசனை.., யோசனையாக அந்த கோட்டைத்தாயை நோக்கி பார்த்தான்.. ஆனால் அவளோ எப்பொழுதும் போல் காட்சி அளித்தாள்....

மேலும் எந்த ஆபத்தும் வராதபடி அதை ஓடும் ஆறாக மாற்றினாள்... ஆற்றை தாண்டி அவர்கள் அங்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று எல்லார் மனதிலும் ஒரே நேரம் உணர்த்தினாள்... அந்த பயங்கர ஆற்றை கடந்து யாரும் அந்த பக்கம் செல்ல மாட்டார்கள் என்று எண்ணினாள்... எப்பொழுதும் தண்ணீர் ஆறாக பெருகி ஓடியது.. மீண்டும்
கோட்டைநல்லூர் செழிப்பாக மாறியது....


அந்த பள்ளத்தை, ஆற்றை பார்த்த மகரிஷிக்கு பெரும் கோபம் வந்தது “ கோட்டையை நோக்கி நீயா? நானா? “ என்று பார்போம் என்று கூறி சவால் விட்டார்... கடவுளுக்கும், அந்த சைத்தானுக்கும் இன்றில் இருந்து போட்டி ஆரம்பித்தது....பாம்பு உடலில் புகுந்ததும் அதன் நச்சு இவரின் நல்ல குணத்தை மளிக்கி விட்டது போல் நடந்துக் கொண்டார் மகரிஷி சித்தர்..

ஏற்கனவே கடவுளை விட எல்லாவற்றிலும் உயர்ந்தவனாய் மாறவேண்டும் என்பது தான் இவரின் பேராசை... அதை மீண்டும் இப்பொழுது நிறைவேற்ற எண்ணினார்....

அதற்கு இது ஒரு வாய்ப்பாக கருதினார் அவர்... எப்படியும் அந்த கடவுளையே வெல்ல வேண்டும் என்று... கோட்டை பற்றி நன்கு அறிந்து தான் இந்த காட்டை தேர்ந்தெடுத்தார் அவர்... அவருக்கான நாள் வர இத்தனை வருடம் காத்திருந்தார்.. ஆனால் இப்பொழுதோ எதிர் பாராத விதமாக அவருக்கு அந்த நாள் கிட்டியது.. இந்த வாய்ப்பை அவர் தவறவிட
எண்ணவில்லை…


கடவுளாகிய கோட்டைக்கும், பாம்பாகிய சித்தருக்கும் போட்டி ஆரம்பம் ஆகியது.... யார் வெல்வது..? என்று...

@@@@@@@@@@@@@@@@

“ பாப்பா, நீ எப்பொழுதும் எந்நிலையிலும் என்னை விட்டு போககூடாது சரியா? “ என்று அவன் கேட்க...

“ உன்னை தான் எனக்கு ரொம்ப பிடிக்குமே, நான் எதுக்கு உன்னை விட்டு போக போறேன் “ என்று அந்த குட்டியும் அவனை நோக்கி கேட்டது...

“ வேண்டாம்..., வேண்டாம் அவளை விட்டுரு.. அவள் சின்ன பொண்ணு, நீ ஒரு பாம்பு அவளை விட்டுரு...” எழிலன் கத்தவும்

“ டேய் எழிலா.... டேய் எழிலா..” என்றுதூக்கத்தில் உளறிக் கொண்டு இருந்த எழிலனை அவன் அன்னை எழுப்பிக் கொண்டு இருந்தாள்.....

அரை தூக்கத்தில் எழுந்த எழிலன் “ அம்மா அவன் அந்த குழந்தையை ஏமாத்துறான், அவன் ஒரு பாம்பு.., அவனை அவளை விட்டு போக சொல்லுங்க..., நான் அவளை காப்பாத்தனும்” என்று கூறி தன் படுக்கையை விட்டு எழுந்து கதவை நோக்கி ஓடினான் எழிலன்...

அவனை தடுத்த வதனா அவனை தட்டி சுய நினைவு வரவைத்தாள்.. “ டேய் எழில் என்ன ஆச்சுடா உனக்கு.. யாரு பாம்பு, ஏதாவது கெட்ட கனவு ஏதாவது கண்டியாடா ” என்று கேட்டாள்..

ஆனால் அவனோ சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டு இருந்தான் “ அந்த குட்டிம்மா எங்கே “ என்று முணுமுணுத்துக் கொண்டே...

“ டேய் என்னடா ஆச்சு “ என்று மீண்டும் கேட்கவும், ஒரு நிமிடம் யோசித்த அவன், எதுவும் இதுவரை அவளிடம் மறக்காத காரணத்தால் தனக்கு வந்த கனவை கூற ஆரம்பித்தான்..

“ அம்மா,, ஒரு அழகான இடம், அங்க அழகான ஒரு குட்டி பொண்ணும், பாம்பு முகம் கொண்ட ஒரு பையனும் பேசிட்டே போறாங்க... ஆனா அந்த பையன் பாம்பு என்று அந்த பொண்ணுக்கு தெரியலை, அந்தபையனும் அந்த பொண்ணுக்கு உணர்தல.. அந்த பொண்ணை ஏமாத்தி எங்கையோ அழைச்சுட்டு போறான்மா. பாவம் அந்த பொண்ணு அது தான் நான்காப்பாத்த போறேன் “ என்று கூறினான் எழில்...

அவன் கூறியதை கேட்ட அவளுக்கு பெரும் யோசனை “ இவனுக்கு அந்த பகவான் என்ன உணர்த்த போகிறான் ” என்று...

ஏற்கனவே இவன் பிறப்பு ஒரு வித்தியாசமானது, இப்பொழுது ஏதோ கூறுகிறான், ஆனால் இவன் கூறுவதைப் பார்த்தால் எங்கையோ யாருக்கோ ஆபத்து இருப்பது போல் தான் தெரிகிறது...

எங்கு எப்படி என்று யாருக்கு தெரியும் என்று யோசித்து “ எழில் அது வெறும் கனவுடா.. இங்க பாரு யாருமே இல்லை.. நீ ஏன் வீணா மனசை போட்டு குழப்பிக்கிற, இங்க வா” என்று அழைத்து..,

சாமி அறைக்கு சென்று அது“ கனவோ? நிஜமோ இனி என் மகனுக்கு வரகூடாது, அதை அவன் பேசக்கூடாது “ என்று மனதில் எண்ணி அவனுக்கு விபூதியை பூசி விட்டாள் அந்த தாய்....

இப்பொழுது தான் எழிலன் மனக்கட்டுப்பாடு பற்றி அறிந்துக்கொண்டும், கற்றுக் கொண்டு வருகிறான்... கூடவே முகத்தைப் பார்த்து மனதில் நினைப்பதை அறிவதையும் கற்றுக் கொண்டு இருக்கிறான் அவன் அம்மாவுக்கு தெரியாமல்.... இது எல்லாம் அவனே அவனுக்கு பழகிக் கொள்கிறான்...

அப்படி தான் இப்பொழுது அவன் அம்மாவின் எண்ணத்தை, அவளின் முகத்தைப் பார்த்து அறிந்துக் கொண்டான்... “ இனி மேல் கனவாக வரும் நிஜம் பற்றி தன் தாயிடம் பேசகூடாது “ என்று எண்ணிக் கொண்டு தன் தாயின் மடியில் தலை வைத்து படுத்துக் கொண்டான் அவன்...

“உன்னை காப்பாற்ற வருவேன் குட்டிம்மா ” என்று எங்கோ இருக்கும் அவனின் குட்டிம்மாவுக்கு உணர்த்த எண்ணினான்.. ஆனால் அவளோ அவளின் நண்பனின் கையை அவனை விடமாட்டேன் என்பது போல் இறுக்க கட்டிக் கொண்டு அவளின் ஊரை சுற்றிவந்தாள்...

கட்டவிழ்க்க வருவான்...
 




sakthipriya

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,855
Reaction score
5,222
Age
40
Location
coimbatore
அருமைடா ஷாந்தினி உன் சிந்தனையே தனிதான் எப்படிதான் இப்படி எல்லாம் சிந்திக்கிறாயோ சூப்பர்டா
 




viha

மண்டலாதிபதி
Joined
Mar 1, 2018
Messages
399
Reaction score
480
Location
mumbai
அழகான எபி ஷாந்தினி.. சித்தர் அக்ரதாவுக்காக தான் காத்து இருக்காரா? அவன் அவளை அங்கு அழைத்து செல்வானோ? எழில் எப்படி அவளை காப்பாத்துவான்.. ஆவலுடன் ......
 




shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
Nice ud sis(y)(y) vinba va agratha dhan andha pakkam koottittu poga pappana...andha sithar oda aanma agratha kulla poirumao_Oo_Oo_O. Very thrilling sis
நன்றி ரிஹா சிஸ்.. பார்ப்போம் அவன் என்ன பண்ணுறான் என்று.. :)
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top