Please advice

J

JaChi

Guest
#1
நான் என்னுடைய உண்மையான பெயரை மறைத்து இங்கு வந்ததன் காரணம் ஒன்று தான். என்னுடைய பிரச்னையை என்னுடைய அடையாளத்தோடு விவாதிக்க விரும்பவில்லை. BSc (computer science), படித்து, தனியார் நிறுவனத்தில் பணிபுரியும், 29 வயது, பெண் நான். என் பெற்றோருக்கு வயதான காரணத்தால் நான் மட்டுமே எனது குடும்பத்தின் வருமானத்திற்கு ஆதாரம். எனக்கு ஒரு தங்கை இருக்கிறாள், வயது இருபத்திஏழு.
என் தங்கைக்கு, சரியான வேலை அமையவில்லை. தங்கையின் திருமணம் முடிந்த பிறகே, நான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதில், உறுதியாய் இருந்தேன்.
எங்கள் வீட்டுக்கு அருகில் வசிக்கும் ஒருவரை, காதலிப்பதாக கூறினாள். அவரை பற்றி விசாரித்ததில், படித்து, நல்ல வேலையில் இருப்பதாக தெரிந்தது. எனவே, என் பெற்றோரை சமாதானப்படுத்தி, திருமணத்துக்கு சம்மதிக்க வைத்தேன்.
ஆனால், திருமணத்துக்கு முன், இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, பிரிந்து விட்டனர். இச்சமயத்தில், தங்கையை பெண் கேட்டு, துாரத்து சொந்தம் ஒருவர் வர, திருமணத்துக்கு சம்மதித்தாள்; திருமணமும் நல்லபடியாக முடிந்தது. இனி என் வாழ்க்கையை பார்க்கலாம் என்று நினைத்திருந்த போது, ஒரு நாள் நள்ளிரவு, கண்ணீருடன் வீட்டிற்கு வந்தாள், தங்கை. என்ன என்று விசாரித்தபோது, 'திருமணத்துக்கு முன் யாரையாவது காதலித்து இருக்கிறாயா' என்று கேட்டுள்ளார், அவள் கணவர். இவளும் முன்பின் யோசிக்காமல், தன் பழைய காதலை பற்றி சொல்லி, திருமணம் வரை வந்து, நின்று விட்டதாக கூறியுள்ளாள். அப்போது, பிடித்தது வினை.
தங்கையின் கணவர், தினமும் மது அருந்தி வந்து, அவளை அடித்து, உதைத்து, தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இறுதியாக, வீட்டை விட்டே துரத்தியும் விட்டுள்ளார்.
நாங்களும், உறவினர்களும், எவ்வளவோ சொல்லி பார்த்தும், அவர் சமாதானமாகவில்லை. இப்போது என்ன செய்வது என்று தெரியவில்லை. மனதளவில் பெரிய வருத்தத்தில் இருக்கிறோம். அதை மறக்க கதைகளை படிக்க இங்கு எப்பவும் வருவேன். அப்போதுதான் மணி sis யார் வேண்டுமானாலும் advice கேட்கலாம் என்று போட்டிருந்தார். அதனால் அறிவுரைக்காக போடலாம் என்று நினைத்து இங்கு என் பிரச்சனையை ஷேர் செயருக்கிறேன். நன்றி மணி sis.
 

KPN

Author
Author
#3
இந்த பிரச்சினையை சற்று ஆரப்போடுங்கள் தோழி.
சூடு குறைந்தால் நிலைமை மாறலாம்.
முன்பு இருந்ததை போலெல்லாம் இன்றைய காலம் இல்லை.
நல்ல மனிதராக பார்த்து, உங்கள் சூழ்நிலையை விளக்கி, திருமணம் செய்து கொள்ளுங்கள்.
கட்டாயம் அமையும்.
பிரச்சினையை எதிர்கொள்ள உங்களுக்கு ஒரு support கிடைக்கலாம்.
இதையே நினைத்து உழன்று கொண்டு இருக்காதீர்கள்...
இது என்னுடைய கருத்து.
 
#4
உங்கள் தங்கையை சொந்தக் காலில் நிற்க வைக்க ஏற்பாடு செய்யுங்கள். அது அவரின் தன்னம்பிக்கையை வளர்க்கும். அவர் உங்கள் பெற்றோரை கவனிக்க முடிந்தால் நீங்கள் உங்களை புரிந்துக் கொள்ளும் துணையை மணம் முடிக்கலாம். உங்கள் தங்கை என்ன படித்திருக்கிறார். வீடு சொந்த வீடா என்ற விவரங்கள் தரலாமே
 

KPN

Author
Author
#5
உங்கள் தங்கையை சொந்தக் காலில் நிற்க வைக்க ஏற்பாடு செய்யுங்கள். அது அவரின் தன்னம்பிக்கையை வளர்க்கும். அவர் உங்கள் பெற்றோரை கவனிக்க முடிந்தால் நீங்கள் உங்களை புரிந்துக் கொள்ளும் துணையை மணம் முடிக்கலாம். உங்கள் தங்கை என்ன படித்திருக்கிறார். வீடு சொந்த வீடா என்ற விவரங்கள் தரலாமே
அருமையா சொன்னீங்க சித்ராம்மா?
 

Nachuannam

Author
Author
SM Exclusive Author
#6
காயத்துக்கான சிறந்த மருந்து காலம் தான். இந்த விஷயத்தை சிறிது காலம் இப்படியே விடுங்கள்.உங்க தங்கை என்ன படிச்சு இருக்காங்க. அவங்கள சொந்த கால்ல நிக்க வைங்க அந்த தன்னம்பிக்கையே அவங்கள survey பண்ண வைக்கும். அவங்க husband உணர்வாங்க ஒரு பொண்ணு இல்லாம குடும்பத்தை ரன் பண்றது கஷ்டம்னு அவங்களே சீக்கிரமா வந்துடுவாங்கன்னு உங்க தங்கச்சி கிட்ட சொல்லுங்க அப்படி இல்லைனாலும் அவங்கனாள அவங்கள காப்பாத்திக்க முடியும்கிற நம்பிக்கையே முதல்ல கொடுங்க நீங்க. நீங்க ஃபர்ஸ்ட் உங்களை புரிஞ்சிக்கிற மாதிரி உள்ள வாழ்க்கைத் துணையை கல்யாணம் பண்ணிக்கோங்க இது என்னோட கருத்து மட்டும் தான்.
 

அழகி

SM Exclusive
Author
SM Exclusive Author
#7
எல்லா பிரச்சினைகளையும் முடித்து விட்டு உங்களுக்கான வாழ்க்கையை அமைக்க முனையும் போது இப்படி நடந்தது வருத்தத்தைத் தருகிறது சகோதரி. மனதைத் தளர விடாதீர்கள். இத்தனை தூரம் குடும்பத்தைத் தாங்கிய உங்களால் இதையும் நிச்சயம் கடந்து வர முடியும். கடவுள் எப்போதும் உங்கள் நல்ல மனதுக்குத் துணை இருப்பார்.
பொறுமையை விட்டு விடாதீர்கள். உங்கள் தங்கையின் வாழ்க்கை இது. அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க வேண்டாம். கொஞ்சம் ஆறப் போடுங்கள். தங்கைக்கும் கணவருக்கும் உடனடி சமாதானம் தீர்வாகாது. என்னைப் பொறுத்தவரை இப்போது அவர்கள் சேர்ந்து இருப்பது கூட காயங்களை பெரிதாக்கலாம். வெறுப்பை உருவாக்கலாம்.
ஒரு சிறிய இடைவெளி தங்கை கணவருக்கு நிதர்சனத்தைப் புரிய வைக்கும் என்று நினைக்கிறேன். உங்கள் தரப்பிலிருந்து யாரும் வார்த்தைகளைச் சிதற விடாதீர்கள். உங்கள் ஆதரவு இப்போது உங்கள் தங்கைக்கு மிகவும் அவசியம் என்று நினைக்கிறேன்.
இது என்னுடைய கருத்து. தவறாக நினைக்க வேண்டாம். உங்களுக்காகப் பிரார்த்திக்கிறேன்.
 

Sanshiv

Author
Author
SM Exclusive Author
#8
கொஞ்ச நாள் விஷயத்தை ஆறப் போடுங்கப்பா... அதுதான் சிறந்த தீர்வா இருக்குமுன்னு நினைக்கிறேன். உங்கள் தங்கையின் வாழ்க்கை சரியாவதற்கும், உங்களுக்கு ஒரு நல்ல துணை அமைவதற்கும் என்னுடைய பிரார்த்தனைகள்...
 
#9
உங்க தங்கைக்கு ஒரு மாரல் சப்போர்ட்டா இருங்க டியர், அவங்க மன அழுத்ததுல இருந்தாங்கனா , அந்த மன அழுத்ததிலிருந்து வெளி வர என்னச் செய்ய முடியுமோ அதைச் செய்ங்க. ஒரு மாற்றத்திற்காக உங்க தங்கையை வேலைக்கு போகச் சொல்லுங்க, காலம் தான் உங்க வேதனையைப் போக்கும். ஆன உங்க தங்கை பிரச்சனையில் உங்க திருமணத்த தள்ளி போடாதீங்க,

அவங்க வாழ்க்கை கண்டிப்பாக சரியாகும் நம்பிக்கை இருக்கனும், அந்த கடவுள் சரியாக்குவார் என்று இறைவனை வேண்டுவோம்.

உங்க பிரச்சனைகள் சரியாகி
நன்றாக இருக்கிறோம் நீங்க இன்னும் கொஞ்ச நாட்களில் சொல்லுவீங்கனு நம்பிக்கை இருக்கிறது சகோதரி
 

Maha

Author
Author
SM Exclusive Author
#10
கண்ணு இதை நினைத்து கவலைப்பட்டுக்கிட்டு இருக்கிறதை விட
அடுத்து என்னன்னு
போயிட்டே இருக்கணும் டா
கஷ்டம்தான் ஆனா முடியாதது எதுவும் கிடையாது மா

ஒரு கதவும் மூடினா கடவுள் இன்னொரு கதவு கண்டிப்பா திறந்து வைப்பார்
இந்த மடம் இல்லன்னா சந்த மடம் ஒரு பழமொழியே இருக்கு இது கலியுகம் டா

மாற்றுவதற்கு மாறுவதற்கு எவ்வளவோ வழிகளில் இருக்கு.

போனவங்க அப்படியே இருக்க முடியாது மறுபடியும் திரும்பி வந்து தான் ஆகணும்...
என்ன கொஞ்சம் டைம் எடுக்கும்.

பகவத் கீதையில் சொன்னது போல கடந்து போனது நல்லதுதான் இனி நடக்கப் போறது நல்லது தான்.

உன்னால எவ்வளவு முடியுமோ தங்கச்சிக்கு பூஸ்ட் பண்ணு கூடவே அப்பா அம்மாவுக்கும் கொஞ்சம் தைரியம் கூடும்

சுயநலம் புடிச்ச இந்த காலத்துல உன் நல்ல மனசுக்கு நல்லதே நடக்கும்
நல்ல வாழ்க்கை அமையும்

தங்கச்சி வாழ்க்கை சிறப்பாக மாறிவிடும் இதையும் கடந்து போ டா
தானா நம்ம வாழ்க்கைக்கு என்ன தேவை என்ன என்று தெரியவரும் தைரியம் தன்னம்பிக்கை வரும்

ஒருமுறைதான் பிறக்கிறோம் எல்லாத்தையும் ஒரு கை பாத்துட்டா போச்சு
நம்மால முடியாது எதுவுமே கிடையாது think positive பி-பாசிட்டிவ் மேக் others பாசிட்டிவ்
don't worry கண்ணா இதுவரை எந்த சக்தி உன்னை நடத்திக் கொண்டு போனதோ
இந்த சக்தியே எல்லா வழியும் காட்டும்
நீயும் உன்னால் ஆன எல்லா முயற்சியும் செய்டா காட் பிளஸ் யூ மை டியர்?????
 
Last edited:

Sponsored

Latest Episodes

Advertisements

New threads

Top