Please advice

lakshmi2407

SM Exclusive
Author
SM Exclusive Author
#11
தோழி ... கடமைக்கு பிறகு கல்யாணம் என்று நின்று பெண்ணாலும் ஆணைப்போல் குடும்பத்தை தாங்க முடியும் என நிரூபித்து உள்ளீர்கள். வாழ்த்துகள்.

நிற்க .. இப்போது உங்கள் தங்கை பிரச்சனைக்கு வருவோம்.
காதலித்தவனுடன் பிணக்கு .. வேறு ஒருவருடன் திருமணமான தங்கை...கணவனுக்கு இவரது முந்தைய காதல் விவகாரம், இவராகவே அவருக்கு சொல்லி ... தெரிய வந்ததால் தற்போது உங்கள் தங்கை வாழ்விழந்து உங்கள் வீட்டில்..
கேள்விகள்:
1. பெற்றோர்கள் தங்கள் பராமரிப்பில்தான் உள்ளனரா? ஆரோக்யமானவர்களா?
2. தங்கை... ஓருயிரா? ஈருயிரா?
3. ஏன் அவருக்கு (தங்கைக்கு) வேலை ஒத்துவரவில்லை?
4. உங்கள் வீடு இன்னமும் அந்த முன்னாள் காதலரின் வீட்டின் அருகாமையில் தான் உள்ளதா?

தீர்வுகள் : [கருத்துக்கள்தான் தோழி ]

1. உங்கள் திருமணம் தடைபட வேண்டாம் 29 வயது என்பது சற்று அதிகமே.. பெற்றோர் பொறுப்புகளை சிறிது காலம் தங்கை தாங்கட்டும். தாங்களும் பண ரீதியில் உதவலாம்.. , கண்டிப்பாக நீங்கள் தனி குடித்தனம் செல்வதே நல்லது.
2. தங்கை வேலைக்கு செல்லட்டும், பொறுமையாய் இருந்தே தீரவேண்டிய நிலையில் உள்ளவர்.. இடையில் எக்காரணம் கொண்டும் முன்னாள் காதலனை சந்திக்க கூடாது... [சொல்வதற்கு வருத்தமாய் இருந்தாலும், சொல்லியாக வேண்டிய கட்டாயம்]
3. காலம் தங்கை கணவரின் மனதை மாற்றும் .. காத்திருங்கள்.. நல்லதே நடக்கும்...
 
Last edited:

Advertisements

Latest updates

Latest Comments

Top