• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Poorva jenmam - Episode 19

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

rekhamuralinathan

புதிய முகம்
Joined
Jan 30, 2020
Messages
14
Reaction score
20
Location
Chennai
லாரி ஓட்டுனர் நிற்கவில்லை. ஆனால் கிடைத்த சந்தர்ப்பத்தில் லாரியின் எண்னை மனதில் குறித்து கொண்டான். அது அவனுக்கு பயனளிக்கவில்லை. சிறிது நேரத்தில் ஆம்புலன்ஸ் வந்தது. அருகில் இருந்த ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டான்.

போலீஸிக்கும் சொல்லியாகிவிட்டது. அரசியலில் இருப்பவன் என்பதால் சிகிச்சையும் இன்னபிற ஏற்பாடுகளும் துரிதகதியில் நடந்தன. கட்சி ஆட்களே அவனுடைய அப்பாவையும் தங்கையையும் வரவழைத்தனர். இந்த விவரம் தெரிந்தவுடன் கார் டிரைவர் ஊரைவிட்டு ஓடிவிட்டான். அவன் மீது சந்தேகம் வலுப்பெற்றது. வளைத்து பிடித்தார்கள். போலீஸ் உபசரணையில் பிரணவ் ன் தந்தை பெயர் வெளிவந்தது. கொலைமுயற்சிக்காக வாரண்ட் வழங்கப்பட்டது. மருத்துவர்கள் 48 மணி நேர கேடு கொடுத்திருந்தனர். 48 மணி மேற்கூறிய அனைத்து விஷயங்களும் நடந்து முடிந்துவிட்டது. அதுதான் அரசியலின் சக்தி. அவன் விரும்பியதும் அதுவே. ஆனால் நினைவில்லாமல் இருக்கிறான்.

ரித்திகாவுக்கு சொல்ல யாரும் இல்லை. செய்தி, நிறுவனத்திற்கு வந்தவுடன் இவள் விரைந்து சென்று பார்த்தாள். ஆனால் அவளுக்கு அவன் அப்பாவையும் தெரியாது, தங்கையையும் தெரியாது. திட்டப்போகிறாள் என்று எந்த போட்டோவும் அவளுக்கு அவன் அனுப்பவில்லை. விசாரித்ததில் 48 மணி நேரம் ஆகும் என்றவுடன் அங்கு தன்னை வெளிப்படுத்த இயலாமல் வெளியே வந்துவிட்டாள். இப்போது கோபியும் அவள் பக்கத்தில் இல்லை. டூர் சென்று இருக்கிறான். இவர்கள் இருவர் விவரமும் தெரிந்தவன் அவன் ஒருவனே.

48 மணி நேரமும் கடந்தது. அவனும் கண் விழித்தான். கேட்ட முதல் கேள்வி நான் யார் எப்படி இங்கு வந்தேன். மருத்துவர்கள் குழு அவனுக்கு தலையில் பலத்த அடி பட்டதில் மூளை நரம்புகள் சேதமடைந்து விட்டதால் பழைய நினைவுகள் எதுவும் இருக்காது எனவும் அதிகமாக யோசிக்கவோ டென்ஷனோ இருக்கக்கூடாது மற்றும் மார்பில் மரத்தின் கிளை குத்தியதால் ஆபரேஷன் செய்துள்ளதாகவும் இன்னும் 3 நாட்களில் டெஸ்ட் எடுத்து பார்த்தாள் தெரியும் என்றனர். வலது காலிலும் அடிபட்டு இருந்தது. தனஞ்செயனின் அப்பா இன்னும் 10 நாட்களில் பெண்ணின் கல்யாணம் வேறு இருக்கிறது. என்ன செய்வது என குழம்பி கொண்டிருந்தனர். உடல் பிரச்சனை என்றால் பரவாயில்லை தான் யாரென்றே அவனுக்கு தெரியவில்லை.

தனஞ்செயனின் தங்கை கொடிமலர் திருமணத்தை கொஞ்சம் தள்ளி போட்டுக்கொள்ளலாம் என்றாள் தந்தையிடம். அவ்வாறே மாப்பிள்ளை வீட்டாரிடம் பேசினார். அவர்களும் நிலைமை புரிந்து சரி என்றனர்.

எல்லா செய்தியும் வெளிவந்துவிட்டது. கட்சி தொண்டர்கள் அவனை பார்க்க ஆர்வம் கொண்டனர். கட்சியில் பெரிய புள்ளிகள் மட்டும் வந்து பார்த்தனர். வந்தவர்களை அவனுக்கு அடையாளம் தெரியவில்லை. அவர்கள் பேசியபோது முழித்தான். அவர்கள் வெளியே வந்து அவன் இடத்திற்கு வேறு ஆளை பார்க்க வேண்டும் என்று பேசிக்கொண்டே சென்றனர்.

ரித்திகாவுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. யாரிடம் சொல்வது, எப்படி அறிமுகப்படுத்திக்கொள்வது என்று புரியவில்லை. ஒரு செய்தியாளராக செல்லலாம் என்று முடிவெடுத்து சிரமப்பட்டு அனுமதி வாங்கினாள். அவனை பார்த்தபோது எப்போதும் தன்னை பார்க்கும்பார்வை இல்லை. தன்னையும் அடையாளம் தெரியவில்லை. அழுகை வந்தது. அவரின் அப்பாவுக்கு புரிந்தது தனஞ்செயன் சொன்ன பெண் இவள்தான் போலிருக்கிறது. ஆனாலும் வெளியே காட்டிக்கொள்ளவில்லை.

மறுநாள் கோபி போன் செய்தான். விஷயம் இப்போதுதான் அவனுக்கு தெரியவந்தது. ரித்திகாவிடம் ஒன்றும் கவலைப்பட வேண்டாம் என்றும் தான் பயணத்தை ரத்துசெய்துவிட்டு கிளம்பிவிட்டதாகவும் தைரியம் கூறினான். இப்போதுதான் அவளுக்கு உயிரே வந்தது.

இருதயத்தை பரிசோதனை செய்ததில் கொஞ்சம் பலவீனமாகத்தான் இருக்கிறது என்று கூறினர். பயணத்தைக்கூட தாங்கமுடியுமா என்பது சந்தேகம் தான் என்றனர். அவனுடைய அப்பா உடைந்து போய்விட்டார். கட்சி கூட்டமும் தலைவர்களும் பறந்து விட்டனர். இப்போது யாரும் துணைக்கு இல்லை. உடனடியாக தேவையில்லை என்றாலும் இதயமாற்று அறுவை சிகிச்சை செய்துதான் ஆக வேண்டும் என்றனர். அவனுடைய அப்பா பணத்தை பற்றி கவலைபடவேண்டாம் எனவும் உடனடியாக அதற்கான ஏற்பாட்டை கவனிக்கும் படி மருத்துவரிடம் கூறினார்.

தொடரும்....19
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top