• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Poorva jenmam - Last Episode

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

rekhamuralinathan

புதிய முகம்
Joined
Jan 30, 2020
Messages
14
Reaction score
20
Location
Chennai
மருத்துவர்கள் அனைத்து பெரிய மருத்துவமனைகளிலும் தெரியப்படுத்தினர். டிரஸ்ட் போன்ற நிறுவனங்களிலும் பதிவு செய்தனர்.

மறுநாள் அதிகாலை 3 மணியளவில் ரித்திகாவுக்கு போன் வந்தது. கோபி தான் பேசினான். வரும் வழியில் விசாகப்பட்டினத்தில் உள்ள மருத்துவ மனையில் தன்னை அனுமதித்து இருப்பதாகவும் அவனுடைய தந்தையையும் நேத்ரனையும் கூடி கொண்டு வரவும் என்று கூறினான். தலையில் லேசான அடிதான் வேறு ஒன்றும் இல்லையென கூறினான். ரித்திக்காவிற்கு பதற்றத்தில் ஒன்றும் புரியவில்லை. தனஞ்செயன் கொடுத்த அதிர்ச்சியிருந்தே இன்னும் மீளவில்லை அதற்குள் இன்னொன்றா. அவள் அப்பா அம்மாவிடம் கூறி விட்டு இருவரும் கோபியின் தந்தையை கூப்பிட சென்றனர்.

மூவரும் விரைவாக கிளம்பினர். மருத்துவமனைக்கு சென்று சேர அன்றிரவு ஆகிவிட்டது. இரவு 8 மணிக்கு reception ல் விசாரித்தனர். அப்பெண்மணி முதலில் டாக்டரை பார்த்துவிட்டு செல்லவும் என்று கூறினார்.

டாக்டரை பார்க்க 2 வது மாடி செல்ல வேண்டும். அதற்குள் தங்கள் இதயம் வெளியே வந்து விழுந்து விடுமோ என்று இருந்தது மூவருக்கும்.

டாக்டர் கண்ணாடியை கழட்டி கொண்டே, I am சாரி என்றார். அந்த வார்த்தையிலேயே அனைவருக்கும் புரிந்து விட்டது. அவனுடைய தந்தையும் ரித்திகாவும் உடைந்துவிட்டனர். நேத்ரன் தான் விசாரித்தான். தலையில் அடிபட்டதால் மெல்ல மெல்ல நரம்புகளில் இரத்தம் கட்ட ஆரம்பித்து கோமாவிற்கு போனதாக கூறினார். 5 மணி வரை செயல் பட்டுக்கொண்டிருந்த மூளையின் செயல்பாடுகள் நின்றுவிட்டதாகவும் மருத்துவ உபகரங்களின் செயற்கையாக உயிர் ஓடிக்கொண்டிருக்கிறது என்று அனைத்தையும் ஆங்கிலத்தில் கூறினார்.

Organs டொனேட்செய்ய விருப்பம் இருந்தால் தெரியப்படுத்தலாம் என்றனர். ரித்திகா அவன் ஏற்கனவே பதிந்து வைத்திருப்பதாக கூறினாள். மருத்துவர் நீங்கள் ஒரு தரம் பார்த்துவிட்டால் அதற்கான வேலைகளை தொடங்கலாம் என்றார். இட் ஐஸ் already கெட்டிங் லேட்டா என்று கூறிவிட்டு எழுந்து நடந்தார். மூவருக்கும் இது கனவு போல் இருந்தது. அழக்கூட தோன்றவில்லை. Formalities முடிந்து உடலை ஒப்படைத்தனர். கோபியின் தந்தை கேட்டார் யாருக்கு கொடுத்திருக்கிறது organs என்று. அதற்கு மருத்துவர் அதை வெளியே சொல்லக்கூடாது. எங்களுக்கு அந்த செய்திகளை கொடுக்கமாட்டார்கள். அதுமட்டுமின்றி இது ஒரு நபருக்கு மட்டும் அல்ல. பலர் பயனடைவார்கள் என்றார்.

Mr Raguraman ன் உதவியால் சீக்கிரமாக சென்னை வந்து சேர்ந்தனர். அனைத்து சடங்குகளும் முடிந்தது. ரிதிக்காவிற்க்கு தன்னையே தொலைத்து விட்டது போல் இருந்தது. அதுமட்டும் அல்லாமல் கோபியின் அக்கா சொன்ன வார்த்தை நீயும் அவனை விரும்புகிறாய் என்று சொல்லியிருந்தால் இந்த ட்ரிப்புக்கே அவன் சென்றிருக்கமாட்டான்.

அது அவள் மனதை குடைந்தது. கோபிக்கு தன் மீது காதலை நான் அவனிடம் அதைவிட உயர்வான நேசம் வைத்திருந்தேனே, அதை அவன் புரிந்துகொள்ளவில்லையா நான் அவனை ஏமாற்றி விட்டேன் என்று நினைத்தானோ என்று பலவாறு குழம்பி போனாள். அவள் அறையை விட்டு வெளியே வருவதில்லை. உத்தியோகத்தையும் ராஜினாமா செய்துவிட்டாள். வீட்டில் இருப்பவர்களிடமும் சரியாக பேசுவதில்லை. பெற்றோர்கள் இவள் போக்கை நினைத்து மிகவும் கவலைகொண்டனர்.

இப்படியே இரண்டு மாதங்கள் ஆயிற்று. அங்கு தனஞ்செயனின் உடலில் நல்ல முன்னேற்றம் இருந்தது. மனது தான் இன்னும் ஒன்றவில்லை. அவன் வீட்டிலேயே விருந்தாளி போல் இருந்தான். ஒருநாள் தான் எதாவது வேலை செய்ய விரும்புவதாக தந்தையிடம் கூறினான். முதல்முறையாக சந்தோஷப்பட்டார். தோட்டங்களையும் தோப்புகளையும் சுற்றி காண்பித்தார். ஒரு கரும்பு ஆலையை நிறுவ வேண்டும் என்ற தன் ஆசையையும் தெரிவித்தார்.

பிறகு அவனுடைய லட்சியத்தையும், அதற்கு முன்னால் அவன் பேசிய கட்சி கூட்டங்களின் பதிவுகளையும் போட்டு காட்டினார்.

தனஞ்செயன் சொன்னான் இதற்கு மேல் அரசியல் சரிவராது என கூறினான். அவன் சொன்னதும் சரியென பட்டது அவருக்கு. ஆனால் வாழ்க்கையில் ஒரு பிடிப்பு இல்லாமல் இருக்கிறானே என்ற கவலை. தங்கையின் கல்யாணத்தை பற்றி பேசினார். அவனும் இதற்கு மேல் தள்ளி போடவேண்டாம் முடித்துவிடலாம் என்று கூறிவிட்டு சென்றுவிட்டான்.

அவருக்கு ஒரு யோசனை தோன்றியது. சென்னையில் பார்த்த பெண்ணை விரும்புவதாக சொன்னானே பேசி பார்க்கலாமா என்று தோன்றிற்று. சம்பந்தி வீட்டுக்கு விஷயத்தை சொல்லிவிட்டு அப்படியே அவர்கள் வீட்டுக்கும் சென்று பார்த்துவிடலாம். முகவரியை கண்டுபிடிக்க வேண்டுமே எனவே அவள் வேலை செய்யும் செய்தித்தாள் நிறுவனத்திற்கு போன் செய்தார். அவள் தற்போது வேலையில் இல்லைஎனக்கூறி வீட்டு முகவரியை கொடுத்தனர் பல கேள்விகளுக்கு பிறகு.

மறுநாளே கிளம்பினார் சென்னைக்கு. சம்பந்தி வீட்டில் வேலை முடிந்தபிறகு, முகவரியை கண்டுபிடித்துக்கொண்டு ரித்திகாவின் வீட்டுக்கு சென்றார் . அவளுடைய தந்தை இருந்தார். ரித்திகாவை பார்க்கவேண்டும் என்று கேட்டார். தன்னையும் அறிமுகப்படுத்தி கொண்டார். ரித்திகாவை அழைத்தனர் பெற்றோர்.

ரித்திக்காவிற்கு பார்த்தவுடன் அடையாளம் தெரிந்தது. அவருக்கு தான் அவளை பார்க்க என்னவோபோல் இருந்தது. தனஞ்செயனை பற்றி விசாரித்தாள். பெற்றோரை அழைத்தாள். நடந்தது அனைத்தையும் கூறினாள். தனஞ்செயனின் இப்போதைய நிலைமையும் கூறினார். பெற்றோர்கள் ஸ்தம்பித்து நின்றனர். தங்களுக்கு இதுவரை ஒன்றுமே தெரியாதே. ரித்திகா ஏன் சொல்லவில்லை என்ற காரணத்தையும் கூறினாள். பேசும்போது இதயமாற்று அறுவை செய்ததாக கூறியவுடன் அவரிடம் கேட்டாள் எப்படி கிடைத்தது யாரிடம் இருந்து பெற்றது என்று. அவர் ஆந்திராவில் இருந்து கிடைத்ததாகவும் அவர்கள் வீட்டு முகவரியில்லை இருந்தால் நேரில் சென்று நன்றி சொல்ல விரும்புவதாகவும், பெயர் கோபி என்று சொன்னதாக கூறினார்.

ரித்திகாவிற்கு வார்த்தையே வரவில்லை. அவளின் பெற்றோர்கள் மொத்த விவரங்களையும் சொல்லினர் . உடனே அந்த குடும்பத்திற்கு நன்றி சொல்லவேண்டும் என்று முகவரியை கேட்டார். ரித்திக்காவின் தந்தை தான் அழைத்து செல்வதாக கூறினார். வீட்டுக்கு சென்று நன்றி சொல்லிவிட்டு வந்தனர்.

பிறகு தயங்கி தயங்கி அவர்களிடம் ஒரு கோரிக்கையை வைத்தார். தான் ரித்திகாவை அழைத்து செல்ல விரும்புவதாகவும், அவளால் மட்டுமே அவனை பழைய நிலைக்கு கொண்டுசெல்ல முடியும் எனவும் கூறினார். ரித்திகாவுக்கும் உடனே செல்லவேண்டும் என்றுதான் இருந்தது அது கோபிக்காகவா அல்லது தனஞ்செயனுக்காகவா என்று கேட்டால் பதில் சொல்லமுடியாது. ஆனால் அவளின் பெற்றோர்கள் தயங்கினர். உடனே அதை புரிந்து கொண்டு, வெற்றிலை பாக்கு, பழம், பூ வைத்து திருமணத்திற்கு உறுதி மொழி கொடுத்தார்.

நேத்ரனை உடன் அனுப்பினர். ரித்திகாவை கண்டதும் பார்த்த பார்வை கொஞ்சம் வித்தியாசம் இருந்தது. பழகும்போது இருந்த பார்வையும் இல்லை, அன்று மருத்துவ மனையில் பார்த்த பார்வையும் இல்லை. ஆனால் யார் என்று கேட்க தவறவில்லை. அதை கேட்டதும் அவள் கண்ணில் கண்ணீர் எட்டி பார்த்தது. நேத்ரன் இவற்றை பார்த்துவிட்டு எப்போது இவரை மாற்றி உனக்கு திருமணம் நடந்து என் ரூட் clear ஆகும் என்று நொந்து கொண்டான். தனஞ்செயனின் தந்தை உறவுக்கார பெண் என்றும் இங்குதான் தங்கப்போகிறாள் என்றும் கூறினார். உடனே தன் பெண்ணை கூப்பிட்டு அவளை பற்றி உண்மையை கூறினார். அவள் மிக்க மகிழ்ச்சியுடன் அழைத்து சென்றாள்.

தங்கையின் திருமணத்திற்கு கடைக்கு செல்வது, மற்ற ஏற்பாடுகளிலும் அவனை ஈடுபடுத்தினாள். அவனுக்கு என்னவோபோல் இருந்தாலும் அவள் சொல்லை மறக்கமுடியவில்லை. அடிக்கடி அவன் எடுத்துக்கொடுத்த சேலையை அணிந்து கொண்டாள். திருமணத்திற்கும் தன் பெண்ணுக்கு நிகரான விலையில் புடவை எடுத்தார் ரித்திகாவிற்கும். திருமணமும் இனிதாக முடிந்தது. அனைவரிடமும் உறவுக்கார பெண் என்று அறிமுகப்படுத்தினார். சிலர் பெண் நன்றாக இருக்கிறாள் தனஞ்செயனுக்கு முடித்துவிடலாமே என்றனர். அனைவருக்கும் பார்க்கலாம் என்ற ஒற்றை வார்த்தையை பதிலாக கொடுத்தார். ரித்திகாவும் அந்த மிக அழகாக காட்சி அளித்தாள். தனஞ்செயனின் மனமும் ஆட்டம் கண்டது.

திருமணம் நன்றாக நடந்து முடிந்தது. வீட்டில் இவர்கள் மூவர் மட்டுமே. ரித்திகாவிக்கு பொழுதே போகவில்லை. தனஞ்செயனே முன்வந்து அந்த ஊரில் உள்ள பள்ளிக்கூடத்தில் ஆசிரியர் வேலை காலியாக இருப்பதாகவும் விருப்பம் இருந்தால் சேரலாம் எனவும் கூறினான். இவளும் உடனே சரி என்றாள். மறுநாளே அழைத்து சென்றான். வேலையும் கிடைத்தது. அவளுக்கும் அது பிடித்தமான வேலையாக இருந்தது.

தினமும் அவனே அழைத்து சென்று அழைத்து வந்தான். சில நாட்கள் கழித்து புடவைகள் சில எடுத்து வந்திருந்தான். தன் தந்தையிடம் கொடுத்து கொடுக்கச்சொன்னான். அதற்கு அவர் அவனையே கொடுக்கச்சொன்னார். தான் கொடுத்தால் மறுத்து விட்டால் என்ன செய்வது என்று கொடுக்கவில்லை. அந்த வார ஞாயிறுக்கிழமை வீட்டை சுத்தம் செய்யலாம் என்று இறங்கியவள் அவனுடைய அறையையும் சுத்தம் செய்தாள். அங்கு இருந்த புது புடவைகளை பார்த்துவிட்டு அனைத்தையும் பிரித்துப்பார்த்தாள். அழகாக இருந்தது. சற்றே விலையும் அதிகம்தான். உடனே கோபியின் ஞாபகம் வந்தது. எங்கு சென்றாலும் அவளுக்கு எதாவது ஒன்று வாங்கி வந்துவிடுவான். அவள் அணியும் களிமண் அணிகலன்கள் அவன் அறிமுகப்படுத்தியது தான் பிறகு அவளுக்கும் பிடித்து போயிற்று. இதையெல்லாம் ஒளிந்திருந்து பார்த்து கொண்டிருந்தான். அவள் பழையபடி அனைத்தையும் மடித்து அவன் அலமாரியில் வைத்தாள். உடனே இவனுக்கு தோன்றியது அவளுக்கு பிடிக்கவில்லையோ, ஆனால் அவள் முகத்தில் இருந்த திருப்தி பிடித்தது மாதிரிதானே இருந்தது. சட்டென்று உள்ளே நுழைந்தான், என்ன தேடுகிறாய் அலமாரியில் என்று கேட்டான். ஒன்றும் தேடவில்லை, இங்கே சில புடவைகள் இருந்தன அதை எடுத்து வைத்தேன் என்றாள். நான் புடவை கட்டுவதில்லையே என்றான். அதற்கு அவள் பின் புடவை எதற்கு வாங்கவேண்டும் அதுவும் தங்கையின் திருமணம் முடிந்தபிறகு என்றாள்.

உனக்குத்தான் வாங்கினேன் ஆனால் கொஞ்சம் பயமாக இருந்தது மறுத்துவிடுவாயோ என்று. ஆண்பிள்ளை பயப்படலாமா அதுவும் தவிர உங்களுக்கு உரிமை இருக்கிறது என்பதை நீங்களே என்னிடம் கூறியிருக்கிறீர்கள் என்றாள். நானா எப்போது என்று கேட்டான். பிறகு அவன் எடுத்து கொடுத்த புடவையை காண்பித்தாள். அதிகம் குழப்பாமல் சிற்சில விஷயங்களை சொன்னாள்.

தனஞ்செயன் அவளிடம் மன்னிப்பு கேட்டான். அவள் உடனே எதுவும் தெரிந்து நடக்கவில்லையே அதனால் மன்னிப்பு கேட்கவேண்டிய அவசியம் இல்லை என்றாள்.

தனஞ்செயன் தந்தையிடம் பேசுவதாக உறுதி மொழி கொடுத்தான். அன்றே தந்தையிடம் பேசினான். திருமணத்திற்கான ஏற்பாடுகளை செய்யலாம் எனவும் கூறினான். உடனே அவர் நான் நினைத்தேன் அவளால் மட்டுமே உன்னை மாற்றமுடியும் என்று. இப்போதே திருமணத்திற்கான ஏற்பாடுகளை ஆரம்பிக்கிறேன் என்றார். உடனே அவளின் பெற்றோருக்கு தெரியப்படுத்தினார். அவர்களும் வந்தனர். இன்னும் 10 திருமணம் நாள் குறிக்கப்பட்டது. ரித்திகாவை அவளின் பெற்றோர் சென்னைக்கு நான்கு நாட்கள் அழைத்து செல்ல விரும்பினர். ஆனால் தனஞ்செயனின் தந்தை இன்னும் 10 நாட்களே இருப்பதால் இப்போது வேண்டாம் என்றும், திருமணம் முடிந்ததும் தாராளமாக கூட்டி செல்லலாம் என்றும் கூறினார். அதுவும் சரியென பட்டதால் அவர்கள் மட்டும் கிளம்பினர்.

திருமணம் இனிதாக முடிந்தது. சென்னைக்கு செல்வதற்கு தயாராயினர். இவர்கள் இருவரும் தனியாக வருவதாக கூறினர். அதன்படி ஜீப் மாடல் suv , இரவு நேரம், இளைய ராஜாவின் பாட்டு, நேத்ரனுக்கு புரிந்தது (எங்கேயோ படித்தது போல் உள்ளவா - அனைவருக்கும் புரிந்திருக்கும் ) . மனதிற்குள் சிரித்து கொண்டான். அக்காவின் வாழ்க்கை இனிதாக இருக்கும்.

சுபம்.
 




Yuvakarthika

இளவரசர்
SM Exclusive
Joined
Apr 18, 2019
Messages
15,688
Reaction score
35,222
Location
Vellore
அருமையான கதை... வாழ்த்துக்கள் சகி ???
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top