• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Porkalathil oru pen pura (part-4)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Sri Sathya

நாட்டாமை
Joined
Mar 17, 2018
Messages
65
Reaction score
569
Location
Chennai
போர்க்களத்தில் ஒரு பெண்புறா ...(பகுதி -4)

மகேசின் பெயர் பொறித்த சவப்பெட்டியை சுற்றி ஏற்றப்பட்டிருந்த ஊதுவத்தியின் வாசம் நிறைந்திருந்தது!

அழுது,அழுது வீங்கிப் போயிருந்தது மகாவின் முகம் ...
கிட்டத்தட்ட அரை உயிரை தொலைத்திருந்தாள் மகா ...

"பச்ச உடம்புக்காரி இப்படி அழக்கூடாது தாயீ ...
உனக்கு ஜன்னி வந்து ஏதாச்சும் ஆகிடுச்சினா இந்த பிஞ்சி உசுருக்கு யாரு தாயீ நாதியிருக்கா ..."என்று காதில் இருபத்தைந்து கிராம் எடையை தாங்கியிருந்ததால் அறுந்துப் போன காதோடு இருந்த பாட்டியின் சொற்கள் மகாவின் அழுகையை மேலும் அதிகமாக்கியது!

"என் பிள்ளை ...அய்யோ மகேஷ் நம்ம பிள்ளைய பாருடா ...
டேய் மாமா நம்ம பிள்ளை வந்திருக்கான்டா எழுந்து பாருடா ...
குட்டிமா நம்ம பையனுக்கு அது வாங்கி கொடுப்பேன், இது வாங்கி கொடுப்பேன்னு சொல்லுவியே மாமா ...
இப்போ நம்ம பிள்ளை அப்பா வேணும்னு கேட்குறான் மாமா ...எழுந்து வா மாமா ...எழுந்து வா ...."என்று கதறியழுதபடி மகா சவப்பெட்டியை தட்டி தட்டி அதன் மேலே மயங்கி சரிந்தாள்!

"என்ன தம்பி ...எப்படி தம்பி உங்க பிரண்டை விட்டுட்டிங்க ..."என்று கணேசன் கேட்க கதறியழுதான் திலீப்!

"சார்...நாங்க ரெண்டு பேரும் ஒண்ணாதான் ஸ்கூல் சேர்ந்தோம் ...
ஒண்ணாதான் காலேஜ்ல சேர்ந்தோம் ...
ஒண்ணாவே ஆர்மியிலேயும் சேர்ந்தோம் ...ஆனா பாவி இப்போ தனியா ...தனியா ..."அதற்கு மேல் பேச முடியாமல் கதறியழுதான் திலீப்!


"ராகு காலம் வரப்போகுது அய்யா ...
ஆக வேண்டிய காரியத்தை பார்க்கணும் ..."என்று வெட்டியான் வந்து கணேசனின் காதில் கிசுகிசுக்க தன் சட்டை பாக்கெட்டிலிருந்து கத்தையாய் ரூபாய் கட்டை எடுத்து அவனிடம் கொடுத்து ஆகட்டும் என்பதை போல் கைகளால் சைகை செய்தார் கணேசன்!
மகேசிற்கு சொந்தமென்று பெரிதாய் யாருமில்லை ..
தாயையும்,தகப்பனையும் ஒரு சேர ஒரு விபத்தில் இழந்த மகேசிற்கு அடைக்கலம் கொடுத்தது ஒரு அநாதை விடுதி தான்!

அங்கிருந்து படித்து முன்னேறியவன்தான் மகேஷ் ...

மகாவை காதலித்து திருமணம் செய்து தனக்கான ஒரு குடும்பத்தை மகேஷ் ஏற்படுத்தி கடந்த வாரம்தாம் ஒரு வருடம் ஆகியிருந்தது!

அலங்கரிக்கப்பட்ட தேரில் சவப்பெட்டி ஏற்றுவதற்காக தூக்க முயன்ற தருணம் மகா பெட்டியின் மேல் படுத்துக் கொண்டு ...

"நான் என் மாமா முகத்தை பார்க்கணும் ...நான் என் மாமா முகத்தை பார்க்கணும்..."என்று கதறினாள்!

"இல்ல முகம் பார்க்குறாப் போல இல்லை ...முழுசா சிதைஞ்சிருக்கு ...
நேரா சுடுகாட்டுக்கு கொண்டு போய் அடக்கம் பண்ண சொல்லிதான் ஆர்டர் ...திலீப் கேட்டதுக்காதான் வீட்டிற்கு கொண்டு வரவே அனுமதி வாங்கினோம் ..."என்று இராணுவ பணியாளர்கள் இந்தியில் கூற அதை மொழி பெயர்த்தான் திலீப்!

"அய்யோ மாமா ...முத்தம் கொடுடினு கேட்பியே மாமா ... ஆயிரம் முத்தம் கொடுக்குறேன் மாமா எழுந்து வா மாமா ...வா மாமா ..."என்று மகா கதற இரண்டு பெண்கள் மகாவை அணைத்துக் கொண்டனர்!

"அய்யா கொள்ளி போடணும் ...கொள்ளி போடப் போறது யாருனு சொன்னிங்கனா அதுக்கான சாங்கியமெல்லாம் முடிச்சிடலாம் ..."என்று கணேசனிடம் வெட்டியான் கூற ...

"அவருக்கு சொந்த பந்தமெல்லாம் நாங்கதான் ...
நானே கொள்ளி போடுறேன் ..."என்று கணேசன் கூற கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது!

"அதெப்படி சாமி மாமனார் மருமகனுக்கு கொள்ளி போட முடியும் ...அப்பாவோ, அண்ணன் தம்பியோ,இல்ல பங்காளிங்க கொள்ளி போடணும் ...இல்லனா மகன் ..."என்று வெட்டியான் இழுக்க ...

"யோவ் அது பச்சக் குழந்தைய்யா ...பொறந்து முழுசா ஒரு நாள் கூட ஆகல ..."

"இருக்கலாம் சாமி ஆனா பிள்ளைனு ஒண்ணு இருக்கும் போது மத்தவங்க கொள்ளி போட்டா அந்த ஆன்மா நிம்மதியா இருக்காது சாமி ...மாமனார் கொள்ளி போடுறது நம்ம ஊர் பழக்கமும் இல்ல ..."என்று வெட்டியான் கூற கூட்டத்திலிருந்த அனைவரும் அதையே சொல்ல கணேசன் அழுதுக் கொண்டே அந்த பிஞ்சிக் குழந்தையை கொண்டு வர அதன் உச்சியிலிருந்து ஒரு கற்றை முடியை வெட்டியெடுத்து விட்டு சட்டியில் அடுக்கி வைக்கப் பட்டிருந்த வறட்டியின் நடுவேயிருந்த கற்பூரத்தை அந்த பிஞ்சி விரல்களின் இடையே மெழுகு வர்த்தியை கொடுத்து கணேசன் பிடித்தபடி பற்ற வைக்க ஊரே கதறியழுதது!

இராணுவ மரியாதையோடு சவப்பெட்டி ஊர்வலம் துவங்க ஊரிலுள்ள அத்தனை ஆண்களும் அதன் பின்னால் கனத்த மனதோடு சென்றனர்!



**************************************************

"சார்...என்ன சார் நான் உயிரோட இருக்கும் போதே நான் இறந்துட்டேன்னு டி.வியில போடுறாங்க ...
அய்யோ இதைப் பார்த்தா என் மனைவி செத்தே போயிடுவா சார் ..."என்று மகேஷ் அலற ...

"ரிலாக்ஸ் மகேஷ் ...ரிலாக்ஸ் ...
உங்க வீட்டுக்கு விசயத்தை சொல்லிடலாம் நீங்க உயிரோடதான் இருக்கிங்கனு ...ஆனா அதுக்கு முன்னால நீங்க எனக்கு ஒரு வாக்குறுதி கொடுக்கணும் ..."

"என்ன சார் ...என்னனு சொல்லுங்க நான் செய்யுறேன் ...என் உயிரை காப்பாத்தியிருக்கிங்க நீங்க எது சொன்னாலும் செய்ய நான் தயாரா இருக்கேன் ..."

"நீங்க எனக்காக எதுவும் செய்ய வேணாம் ...நம்ம தேசத்துக்காக ஒண்ணு செய்யணும் ..."

"சொல்லுங்க சார் ...அதுக்காகத்தானே சார் இந்த வேலையிலேயே சேர்ந்திருக்கேன் ..."

"குட் மகேஷ் ... அன்னைக்கு பூஞ்ச்ல உங்க மேல தாக்குதல் நடத்தினது யாருனு உங்களுக்கு தெரியுமா? ??"

"பாகிஸ்தான் ராணுவம் தானே சார் ..."

"இல்ல மகேஷ் ...பாகிஸ்தான் இராணுவமும், நம்ம இராணுவமும் அத்து மீறி தாக்குதல் நடத்தறதில்லைனு ஒப்பந்தம் செஞ்சிருக்கோம் ...
பாகிஸ்தான்ல இருக்க "அல் உமர் " ன்ற தீவிரவாத குரூப்தான் இந்த தாக்குதலை நடத்தியிருக்கு ...

இது போல ஒப்பந்தம் கையெழுத்தாகியிருக்க நிலையில அவனுங்க உள்ளே புகுந்து அமைதியை கெடுத்து நாட்டுல சட்டம் ஒழுங்கு பிரச்சனையை கொண்டு வருவாங்க ...
வருத்த பட வேண்டிய விசயம் என்னனா இதை அந்த நாட்டு அரசும் கண்டும் காணாம இருக்கும் ...

இதை நாமதான் தடுத்தாகணும் ..."


"சார் ...நீங்க என்ன சொல்றிங்கனு புரியலை ...நாம ...நாம எப்படி தடுக்க முடியும் ..."


"நீங்கதான் தடுக்கப் போறிங்க ..."

"நானா??? நான் எப்படி சார்? ??"


"நீங்கதான் மகேஷ் ...நீங்க அந்த வேலையை செய்யணும் ..."

"என்ன நானா? ?? என்னால எப்படி சார் முடியும் ..."

"கண்டிப்பா நீங்க மனசு வெச்சா முடியும் மகேஷ் ...
அன்னைக்கு பூஞ்ச்ல ஹெலிகாப்டர் ரவுண்ட்ஸ் வரும்போது நீங்க பதுங்கு குழியில உயிருக்கு போராடிகிட்டு இருக்கறதா எனக்கு நியூஸ் வந்துச்சி ...

நான்தான் ஹெலிகாப்டரை திரும்ப வர சொல்லிட்டு உன்னை மீட்டு நம்மகிட்ட இருக்க நம்பிக்கையான ஆளுங்களை விட்டே அந்த இடத்தை தரமட்டமாக்க சொன்னேன் ...
அதுக்கப்புறம் நிலமை சகஜமாகியிருக்கும் இப்போ போய் பாருங்கனு சொல்லும் போதுதான் இரண்டாவதா ஹெலிகாப்டர் ரவுண்ட்ஸ் போனாங்க ...அப்பவும் தாக்குதல் நடத்தினாப் போல ஒரு டிராமா கிரியேட் பண்ணது நான்தான் ...

இதெல்லாம் ஏன் பண்றேன்னு கேட்குறியா? ??

ரெகார்ட்படி நீ இறந்துட்ட உன்னை வெச்சிதான் இப்போ நம்ம தேசத்துக்குள்ள ஊடுருவுற சில தீய சக்திகளை அழிக்கணும் ...
அதுக்கு நீ ஒத்துழைப்பு கொடுப்பனு நம்புறேன் ..."

" சார் நீங்க சொல்றது சரியா எனக்கு புரியலை ..."

"புரியறப்போல ஒரு வார்த்தையில சொல்லணும்னா நீ பாகி்ஸ்தான் தீவிரவாதியாகணும் .. "என்று சுக்வீந்தர் கூற மகேசை குழப்பம் ஆட்கொண்டது!


"சார் நான் தீவிரவாதியாகணுமா? ??
நான் தேசத்தை காக்கதான் சார் இந்த உடுப்பையே போட்டேன் ...
என் தேசத்தை அழிக்க இல்ல..."

"தேசத்தை காப்பாத்த தான் மகேஷ் இந்த வேலையை செய்ய சொல்றேன் ...
நம்ம ஆர்மியிலே பாகிஸ்தான் கைக்கூலிங்க எவ்ளோ பேரு இருக்காங்கனு உனக்கு தெரியுமா? ??
ஸ்விஸ் பேங்க்ல பணம் கூட இங்கே நம்ம தேசத்தோட அமைதியை குறைக்க நிறைய பேரு இருக்காங்க ...

நீங்க பாகிஸ்தான்ல இருக்க அல் உமர் தீவிரவாத குரூப்ல சேரணும் ...
நம்ம உளவாளியா ..."

"சார் முடியாது சார் ...
நான் போகணும்..."என்று எழ முயன்ற மகேசை கையமர்த்தினார் சுக்வீந்தர்!

"நம்ம தேசத்தை காக்கதான் நீ இந்த உடுப்பை போட்டேன்னு இப்போதான் சொன்னே ...
இப்போ அதெல்லாம் எங்கே போச்சி ..."

"சார் அதுக்காக தீவிரவாதியாகணுமா? ??
நான் ஆர்மியில இருக்கதான் விரும்பறேன் ..."

"இருந்து ...இருந்து என்ன பண்ண போற ...
அவன் தாக்குவான் பதிலுக்கு நாம தாக்குவோம் அவனுல பத்து பேரு நம்ம ஆளுங்கள்ல பத்து பேர் சாவோம் ...வேற என்ன பண்ணிட முடியும் ...
இதைவிட அப்படியொரு தாக்குதல் நிகழ்வே நடக்காம தடுக்கறது புத்திசாலிதனம்னு உனக்கு தெரியலையா மகேஷ் ..."

"சார் நீங்க சொல்றது சரிதான் ...ஆனா நான் எப்படி பாகிஸ்தான்ல ...
முகமும், பாஷையும் நான் இந்தியன்னு காட்டிக் கொடுக்காதா? ?"

"ம்ம்ம் ...சரிதான் மகேஷ் ...
அதுக்காகத்தான் பாரின்லயிருந்து முக சீரமைப்பு நிபுணரையும், மொழி பயிற்று விக்கும் ஆசிரியரையும் வர சொல்லியிருக்கேன் ...

உங்க முகத்தை கம்ப்ளீட்டா பாகிஸ்தானி போல மாத்திடலாம் ...மொழியும் கத்துக்கலாம் இதுக்கெல்லாம் ஒரு ஆறு மாசமாகும் ...
அதுக்கப்புறம் உங்க உடம்புல ஜிபிஎஸ் மைக் இன்ஸ்டால் பண்ணி பாகிஸ்தான்ல விட்டுட்டா ... பாகிஸ்தான்ல அந்த தீவிரவாத இயக்கத்துல நீங்க சேர்ந்திங்கனா அவங்களோட ஒவ்வொரு மூவ்மென்ட்டும் என் கண்ட்ரோல்ல இருக்க ஜிபிஎஸ் ல சேவ்வாகிடும் ...
நான் இங்கேயிருந்து அவங்க ப்ளானையெல்லாம் முறியடிப்பேன் ..."

"சார் நீங்க சொல்றதெல்லாம் நடக்குறாப் போலவா இருக்கு ...
நான் வருவேன்னு என் பொண்டாட்டி காத்துகிட்டிருப்பா ...
எனக்கு குழந்தை பிறக்க போகுது நான் போகணும் சார் நீஙிக வேற ஆளை பார்த்துக்கங்க ..." என்று கூறி மகேஷ் எழ முயல சுக்வீந்தரின் கைத்துப்பாக்கி மகேசின் நெற்றிப்பொட்டில் அழுத்தியது!

(தொடரும்)

-சத்யா ஸ்ரீராம்
 




Renuga stalin

புதிய முகம்
Joined
Mar 23, 2018
Messages
9
Reaction score
8
Location
dindigul
கண் முன்னால் நடப்பது போல பிரமை தோன்றுகிறது, சுவாரஸ்யம் குறையாம எழுதுவதில் உங்கள மிஞ்ச ஆளே இல்ல சத்யா superb Semma story
 




sridevi

அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
4,750
Reaction score
7,120
Location
madurai
so interesting:):):):):)ulavaliya al.umaril sera porana:unsure::unsure::unsure::unsure:avan wife idam avanuyiroda irupathai theriya paduthuvara major:unsure::unsure::unsure::unsure::unsure:action movie pakra effect sago......... what next... waiting
 




Sowdharani

அமைச்சர்
Joined
Feb 7, 2018
Messages
1,438
Reaction score
1,923
Location
Chennai
wow sir romba different ya iruku sir..... interesting...... ud mattum konjam seekiram kudunga sir......
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top