• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Porkalatthil oru pen puraa 1

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Sri Sathya

நாட்டாமை
Joined
Mar 17, 2018
Messages
65
Reaction score
569
Location
Chennai
போர்க்களத்தில் ஒரு பெண் புறா...(பகுதி -1)

"சுற்றிலும் யாருமே இல்லை என்பதை என் மேல் வழிந்தோடி கொண்டிருக்கும் இரத்தம் உணர்த்துகிறது!

பனி விலகி மெல்ல சூரியக் கதிர்கள் என் மேல் படுவதை இன்னும் இறந்து போகாத என் தோளின் திசுக்கள் உணர்த்துகிறது ...

என் பேர் மகேஷ் ...
இந்திய எல்லை பாதுகாப்பு காவல் பணி ஊழியன்.

நேற்றிரவு சாப்பிட்டு முடிக்கும் வரை எனக்கு தெரிந்திருக்கவில்லை என் குடலை அடையப் போகும் கடைசி உணவு அதுவென்று ...

நானும் எங்க ஊரைச் சேர்ந்த திலீப்பும் சேர்ந்து விருப்பப்பட்டு தான் இந்த வேலைக்காக முயற்சி பண்ணோம் ...
திலீப் நல்ல உயரம் ...திடகாத்திரமான உடம்பு ...
அவன் எளிதில் தேர்வாகி விட நான் மட்டும் என் தேசத்தை காக்க சில தேசப்பிதாவை கையூட்டாய் கொடுத்து வேலையில் சேர்ந்தேன் ...

நான் படிச்சது மெட்ராஸ்ல இருக்க லயோலா காலேஜ்ல ...
விளையாட்டா நானும், திலீப்பும் காலேஜ் NSS ல சேர அதுவே நாங்க இங்க வந்து நிக்க அடித்தளமாகிப் போனது!

பி.ஏ எகனாமிக்ஸ் ... இந்திய பொருளாதாரம் நாங்க படிச்சது ...
ஆனா சத்தியமா எங்க பொருளாதாரத்தை உயர்த்திக்க நாங்க இந்த வேலையில சேரல ...

உங்களுக்கு ஒரு விசயம் தெரியுமா? ??
இன்னைக்கு என் மனைவி மகாவுக்கு சீமந்தம்!

மகா இப்போ கை நிறைய வளையோட மனசு நிறைய என்னை நினைச்சிகிட்டு இருப்பா ...

கடைசியா நான் அவளை பார்க்கும் போது வயிறு லேசா மேடு தட்டியிருந்தது!

மனசு முழுக்க பாரத்தை தாங்கிகிட்டு உதட்டுல சிரிப்பை வரவழைக்க அவளால மட்டும் எப்படி முடிஞ்ச வித்தை எனக்கு தெரியல.

நான் கிளம்பி வரும்போது அவ சிரிச்சிகிட்டே வழியனுப்ப முயல என்னால அழுகைய அடக்க முடியாம அவளை கட்டி பிடிக்கும் போதுதாங்க முதல் முறையா என் வாரிசு என்னை தொட்டது!

அவ வயிறை லேசா கையால வருடும் போது ஏதோ ஒரு வித அசைவு எனக்குள்ள சிலிர்ப்பை உண்டாக்குச்சி ...

இதோ நாலு மாசாமாச்சி அவளை பார்த்து. இனி அவ என்னை பார்க்க முடியும் என்னாலதான் அவளை பார்க்க முடியாது!

நேத்து நைட் சாப்பிட்டு முடிச்சவுடனே மேஜர் ஜெனரல்கிட்டயிருந்து ஒரு நியூஸ் வந்துச்சி ...

'பூஞ்ச்' மற்றும் 'மென்டார்' எல்லையில பாகிஸ்தான் ராணுவம் இன்னைக்கு தாக்குதல் நடத்த திட்டமிட்டிருக்கறதா வந்த நியூசை சிலர் தவறான வதந்தியென்றும், சிலர் உண்மையான செய்தியென்றும் வாதாடினர்!

காரணம் ரெண்டு நாளைக்கு முன்னாலதான் இந்தியா- பாகிஸ்தான் இரு நாட்டு இராணுவமும் இனி அத்துமீறி தாக்குதல் நடத்த போறதில்லைனு உடன்படிக்கையில கையெழுத்திட்டிருந்தாங்க!

இருந்தாலும் பாதுகாப்பு நடவடிக்கையாக ஒரு பத்து பேரை 'பூஞ்ச் ' எல்லைக்கும், ஒரு பத்து பேரை 'மென்டார் ' எல்லைக்கும் அனுப்பி வெச்சாங்க ...

அதுல பூஞ்ச்ல நானும் மென்டார்ல திலீப்பும் இருந்தோம்!

இதுக்கு முன்ன இது போல நாங்க ரெண்டு பேரும் தனித்தனியா டியூட்டி பார்த்ததேயில்லை ...

திலீப் ரொம்ப பாசமானவன் ... நான்னா அவனுக்கு உயிர் ...
இனி? ????


ஆமாங்க நைட் பதினோறு மணிக்கு நாங்க பூஞ்ச்க்கு வந்தோம்.

ரொம்ப அமைதியாயிருந்த இடத்தை பார்க்கும் போது வந்த சேதி பொய்யாகதான் இருக்கும்ற நம்பிக்கை எனக்குள்ள துளிர்விட ஆரம்பிக்க உடலெங்கும் பரவிய காஷ்மீர் குளிர் மெல்ல எனக்குள்ள உறக்கத்தை வரவழைக்க கண்ண மூடினேன் ...

சரியா எவ்ளோ நேரம் தூங்கியிருப்பேன்னு தெரியல ...கனவுல மகா அடிக்கடி வந்து போனா ...

நேத்து சாயங்காலம் போன் பண்ணும் போது நீங்க இல்லாம எனக்கு இந்த சீமந்தம் வேணாம்னு சொன்னா ..

நான் எவ்வளவோ சமாதானப்படுத்தி அவளை இந்த சீமந்தத்திற்கு ஒத்துக்க வெச்சேன்!

என் குட்டி பாப்பா எப்படியிருப்பானு நான் என் டைரியில வரைஞ்சிலாம் வெச்சிருக்கேங்க ...

திடீர்னு கேட்ட சத்தத்துல எழுந்து பார்க்கறதுக்குள்ள எங்கேயிருந்தோ வந்த தோட்டா என் பக்கத்துல இருந்தவரோட நெஞ்சில பட அவர் கீழே சரியவும் நாங்க எல்லோரும் எதிர்த்து தாக்க தொடங்கினோம்!

முடிஞ்ச மட்டும் முன்னேறி செல்ல முயல ஒவ்வொருவரையா நாங்க இழக்க ஆரம்பிச்சோம்!

மூன்று பேரை இழந்து விட நாலாவதா வந்த தோட்டா சரியா என் தோள்பட்டையை தாக்க நானே சுருண்டு கீழே விழவும் அடுத்தடுத்த தாக்குதல்ல மத்த எல்லோரும் என் கண்ணு முன்னாலேயே இறந்துப் போக நான் பதுங்கு குழியில மெல்ல போய் படுங்கிகிட்டேன்!

எங்ககிட்டேயிருந்து எந்த வித தாக்குதலும் வராம போகவே எதிர் முனையில நாங்க எல்லோரும் இறந்துப் போனதா நினைச்சி அவங்க தாக்குதலை நிறுத்த நான் பதுங்கு குழிக்குள்ள மனசு முழுக்க என் மகாவையும், என் குழந்தையையும் நினைச்சிகிட்டு வலியோட போராடிகிட்டிருக்கேன்!

இன்னும் கொஞ்ச நேரத்துல 'அட்டாரி வாகாவுலயிருந்து ' இந்திய இராணுவம் எங்களைத் தேடி ஒரு படையை அனுப்பும் ...அதுவரை நான் உயிர் பிழைப்பேன்ற நம்பிக்கை சுத்தமா எனக்கில்ல ...

என் குழந்தையை எந்த தோள்ல வச்சிகிட்டு எங்க ஊரு திருவிழாவுல நடக்கணும்னு நினைச்சேனோ. அந்த தோள் பிஞ்சிப் போய் அதுலயிருந்து வர்ற இரத்தம் இன்னும் உறையாம இருக்கு ...

என் தேசத்து மண் அந்த இரத்தத்தை நிறுத்த முயன்று தோற்று என் இரத்தத்தோடு கலந்து வழிந்துகிட்டிருக்கு!

'மென்டார்ல' இருக்க திலீப்க்கு மட்டும் எதுவும் ஆகியிருக்க கூடாதுனு வேண்டிக்கிறதை தவிர என்னால வேற ஒண்ணும் பண்ண முடியல.

என் கண்ணெல்லாம் மங்கலா தெரியுது ...அதுல என் மகாவோட உருவம் கை நிறைய வளையலோட என்னை பார்த்து சிரிக்குது ...
மகா ....மகா ......" கண்களை மகேஷ் மூடிக் கொள்ள ஹெலிகாப்டரின் சத்தம் மட்டும் அவன் செவிகளில் சன்னமாய் கேட்டது!

**************************

திலீப் கண் விழித்து பார்க்கும் போது மருத்துவமனையில் இருந்தான்!

நேற்று சண்டையில் தன் கணுக்காலில் தோட்டா பாயவும் தன்னை உடன் இருந்தவர்கள் ஸ்ட்ரெச்சரில் கொண்டு சென்ற வரை நினைவிருந்தது!

எழுந்து அமர முயன்றவன் தன் கணுக்காலின் வலியால் லேசாய் முகம் சுளிக்க நர்ஸ் ஓடி வந்தாள்!

"சார் ஸ்டெய்ன் பண்ண கூடாது ..."

"இட்ஸ் ஓகே மேடம் ..."என்று தன் முதுகை கட்டிலின் பக்கவாத்தில் சாய்த்து அமர்ந்தான் திலீப்!

"மேடம் ...என் கூட வந்தவங்கலாம் ..."

"ம்ம்ம் ...யாருக்கும் எதுவும் ஆகலை சார் ...சின்ன சின்ன இன்சூரிஸ் அவ்ளோதான் ..." என்று நர்ஸ் கூறவும் சற்றே நிம்மதியடைந்தான் திலீப்!

'பூஞ்ச்ல என்ன நிலமைனு தெரியலையே ...
மகேஷ் எப்படியிருக்கான்? ??
அங்கே ஏதாச்சும் சண்டை நடந்துச்சானு தெரியலையே ...'
மனதில் நினைத்தவன் நர்ஸை கேட்டு விடுவதென முடிவெடுத்து அழைத்தான்!

"நர்ஸ் ..."

"சொல்லுங்க சார் ..."

"பூஞ்ச்ல நிலவரம் எப்படினு உங்களுக்கு தெரியுமா? ??"

"சரியா தெரியலை சார் ...ஆனா யாரும் உயிர் பிழைக்கலைனு பேசிகிட்டாங்க ..."என்று நர்ஸ் கூறி செல்லவும் அதிர்ந்தான் திலீப்!


**************************************************

"என்னம்மா நல்லா நாளும் அதுவுமா இங்க வந்து உட்கார்ந்து அழுதுகிட்டிருக்க? ??"என்றவாறே தன் அருகில் வந்து அமர்ந்த கணேசனை கலங்கும் கணேகளோடு பார்த்தாள் மகா!

"புரியுதுமா ... மாப்ள இல்லைனுதானே நீ இப்போ அழறே ...
மாப்பிள்ளை இப்போ நம்ம கூட இருந்தா நீ, நான், நம்ம சொந்த பந்தம் மட்டும்தான்மா சந்தோசமாகவும், நிம்மதியாகவும் இருப்போம்.

ஆனா பார்டர்ல குண்டு சத்தங்களுக்கு நடுவுல தினம்,தினம் வாழ்க்கைய நகர்த்துற நம்ம தேசத்து உறவுகளெல்லாம் நிம்மதியா இருக்கணும்னா இந்த பிரிவு நமக்கு முக்கியம்தான்மா!"

"அப்பா இருந்தாலும் ... என் மனசு கேட்கலைப்பா ...
என் மனசு அவரை தேடுதுப்பா ..."என்று கூறி கதறியழுத மகாவை ஆறுதலாய் அணைத்துக் கொண்டார் கணேசன்!

"இவ்ளோதானேமா ... இந்த காலத்துலதான் எவ்வளவோ முன்னேற்றம் வந்துடுச்சே ...

போன்ல முகத்த பார்த்துகிட்டே பேசறாங்கலாம்ல ...

இப்பவே போன் பண்ணி பேசுமா ..."

"காலையில இருந்து அவர் நம்பர்க்கு ட்ரை பண்றேன்பா ...போன் எடுக்கல ...

எனக்கென்னமோ பயமாயிருக்குப்பா ..."

"பயப்படாதே மகாமா ...
மாப்பிள்ளைக்கு ஒண்ணுமாகாது ...நீ வீணா மனச போட்டுக் குழப்பிக்காதே அது உன்ன மட்டுமில்ல உன் வயித்துல இருக்குற குழந்தையையும் பாதிக்கும் ."என்று கணேசன் கூற மகா தன் வயிற்றை ஒரு முறை தன் கைகளால் தடவி பார்த்தாள்!


**************************************************

'வாகா இன்பர்மேஷன் சென்டர் ஆப் இந்தியன் ஆர்மி '

பரபரப்பாய் உள்ளே நுழைந்தார் மேஜர் சுக்வீந்தர் சிங்!


"நமஸ்தே சாப்..." என்று விரைப்பாய் சிப்பாய் ஒருவன் வைத்த சல்யூட்டை கடந்து உள்ளே சென்றார் சுக்வீந்தர்!

அங்கே பொட்டலம் போல் கட்டி வைக்கப்பட்டிருந்த சடலங்களுக்கு முன் சென்றவர்...

"கித்னா ஆத்மி மரேகா ..." என்றார்!

"தஸ் ஆத்மி சாப் ..."என்றார் அதிகாரி ஒருவர்!

(படிப்பவர்கள் புரிதலுக்காக இனி உரையாடல்கள் அனைத்தும் தமிழில்! )

"நேத்து பூஞ்ச்ல எத்தனை பேருக்கு டியூட்டி போட்டிங்க? ??"

"பத்து பேர் சார் ..."

"எல்லோருமே இறந்துட்டாங்களா? ??"

"ஆமாம் சார் ..."என்று அவர் கூற போர்த்தி வைக்கப்பட்டிருந்த ஒரு பிணத்தின் போர்வையை விலக்கி பார்த்தவர் ...
" என்னைய்யா இது அடையாளமே தெரியல? ??"

"சார் ஒருத்தர் மட்டும் சாகறதுக்கு முன்னாடி பூஞ்ச்ல நடந்த கொடுரத்தை பத்தி வாக்கி டாக்கில நியூஸ் சொன்னார் ...

நம்ம போர்ஸ் கூட்டிட்டு ஹெலிகாப்டர்ல போனோம். அப்பவே ஆல் மோஸ்ட் அந்த இடம் சுடுகாடு போலதான் இருந்துச்சி ...

நம்ம ஹெலிகாப்டர் வர்றதை பார்த்த பாகிஸ்தான் ஆர்மி ஹெலிகாப்டரை தாக்க முற்பட்டாங்க ...

ஹெலிகாப்டரை தரையிரங்க விடல ..
சரினு திரும்ப வர்றாப்போல வந்துட்டு கொஞ்ச நேரம் கழிச்சி தரைப்படை மூலமா ஸ்பாட்க்கு போறதுக்குள்ள அவங்க திரும்ப,திரும்ப வீசின பாம்ஸ் சடலங்களை உருத்தெரியாம அழிச்சிடுச்சி சார் ..."

"ஓ மை காட் ... ஓகே அந்த பத்து பேரோட புரோபைல் எனக்கு வேணும் ..."

அடுத்த இரண்டு நிமிடங்களில் சுக்வீந்தர் கையில் ஒரு பைல் வந்து சேர. பிரித்து ஒவ்வொரு பக்கமாய் பார்த்தார்!

கனிஷ் யாதவ் - பீகார்,

முகேஷ் - மும்பை

சர்வேஸ் - மும்பை

கிரண் ஜோசி - வாரணாசி,

விஜயராகவலு - தெலுங்கானா

அணில் சவுத்ரி - ராஜஸ்தான்.

மகேஷ் முருகேசன் - தமிழ்நாடு,

ஜோசப் - கேரளா

ஹரேந்திர சிங் - லூதியானா,

கம்சல் - காந்திநகர்.


ஒவ்வொன்றாய் பிரித்து பார்த்தவர் ...

"இவங்க பேமிலிக்கெல்லாம் இன்பார்ம் பண்ணிட்டிங்களா? ??"

"இன்னும் இல்ல சார் உங்களுக்காகதான் வெய்ட்டிங் ..."

"ஓகே பைன் ... நான் மினிஸ்டர்கிட்ட பேசிட்டு சொல்றேன். எல்லா பாடிலேயும் நேம் டேக் போட்டு பக்காவா பேக் பண்ணிடுங்க ...
சிதைஞ்ச பாகம் எதுவும் வெளியே தெரியக்கூடாது. அப்புறம் இது எங்க சொந்தக்காரன் பாடி இல்லைனு பேமிலில பிரச்சனை பண்ணா பெரிய இஷ்யூ ஆகிடும்!

அப்புறம் ஒரு விசயம் ..."

"என்ன சொல்லுங்க சார் ..."


"ஏர் போர்ஸ் போய்ட்டு தரையிரங்க முடியாம திரும்ப வந்துட்டதா சொன்னிங்கல ...அதுல ஒரு சின்ன சேஞ்ச் ...

ஏர் போர்ஸ் போனாங்க எதிரி தாக்குதல்ல நம்ம ஒரு ஹெலிகாப்டர் சுக்கு நூறா சிதறி அதுல இருந்த மூணு பேர் இறந்துட்டாங்க ...

ஸ்பாட்ல வச்சி ஒரு ஹெலிகாப்டர் கொளுத்திடுங்க. .

இதுக் கூட சேர்த்து ஒரு மூணு பொட்டலம் கட்டுங்க ...

இறந்து போனவங்க யாருனு புரோபைல் நான் கொடுக்குறேன்! !"

"சார் இதெல்லாம் எதுக்கு சார் ..."

"என்னய்யா விசயம் தெரியாத ஆளா இருக்கே ...

போனோம் பயந்து வந்துட்டோம்னு சொன்னா ...

சமூக வலைதளங்கள்ல கிழி,கிழினு கிழிச்சி தொங்க விடுவானுங்க ...

அது மினிஸ்டர் வரை பாதிக்கும். ஏன் எதுக்குனு கேட்காம நான் சொன்னதை மட்டும் செய் ...!" என்று கூறிவிட்டு வெளியேறினார் சுக்வீந்தர் சிங்!

**************************************************

திலீப் வாகா இன்பர்மேஷன் சென்டருக்குள் நுழையும் போது மணி மாலை ஐந்தைத் தொட்டிருந்தது!

தாங்கி, தாங்கி நடந்துச் சென்று உள்ளே அனுப்புவதற்கு தயாராயிருந்த சடலங்களின் பெட்டிகளின் மேலே மகேசின் பேரை தேடியவன் ஒரு பெட்டியில் மகேசின் பெயர் இருப்பதைக் கண்டு அந்த பெட்டியின் மேல் விழுந்து கதறியழுதான்!

"மகேஷ் ....மகாவுக்கு நான் என்னடா பதில் சொல்ல போறேன் ...
அவ வயித்துல இருக்க கருவுக்கு நான் என்னடா பதில் சொல்ல போறேன் ..." திலீப் கதறியழுதது அங்கிருந்தவர்களின் கண்களில் கண்ணீரை உண்டாக்கியது!

(தொடரும்)

-சத்யா ஸ்ரீராம்
 




Vijayasri Padmanaban

மண்டலாதிபதி
Joined
Feb 8, 2018
Messages
372
Reaction score
41
Location
chennai
வணக்கம்...ss bro

வாழ்த்துக்கள்..

உங்கள் எழுத்துக்கள்..முன்பே அருமை...

போட்டி கதை என்பதால்...பொன்னாய் மின்ன வாழ்த்துக்கள்....

வாழ்க வளமுடன்....!!!


மகேஷ் _ மகா விடம்...இன்னும் அதிகம் எதிர் பார்க்கிறோம்.... bro
 




Sri Sathya

நாட்டாமை
Joined
Mar 17, 2018
Messages
65
Reaction score
569
Location
Chennai
வணக்கம்...ss bro

வாழ்த்துக்கள்..

உங்கள் எழுத்துக்கள்..முன்பே அருமை...

போட்டி கதை என்பதால்...பொன்னாய் மின்ன வாழ்த்துக்கள்....

வாழ்க வளமுடன்....!!!


மகேஷ் _ மகா விடம்...இன்னும் அதிகம் எதிர் பார்க்கிறோம்.... bro
மிக்க நன்றி மேடம்
 




mahathipriya

மண்டலாதிபதி
Joined
Mar 2, 2018
Messages
153
Reaction score
281
Location
jayankondam
ராணுவ வீரர்கள் வாழ்க்கையை பிரதிபலித்த இந்த அத்தியாயம் அருமை

மகாவ நினைச்சாதான் பாவமா இருக்கு
அருமை ஆனால் சோகம்
 




Sri Sathya

நாட்டாமை
Joined
Mar 17, 2018
Messages
65
Reaction score
569
Location
Chennai
ராணுவ வீரர்கள் வாழ்க்கையை பிரதிபலித்த இந்த அத்தியாயம் அருமை

மகாவ நினைச்சாதான் பாவமா இருக்கு
அருமை ஆனால் சோகம்
நன்றி மேடம் ..
 




sridevi

அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
4,750
Reaction score
7,120
Location
madurai
சில தேசப்பிதாவை கையூட்டாய் கொடுத்து
nice(y)(y)(y)கதை தலைப்பு அருமை சகோ..:):)அடையாளம் தெரியாத சடலங்களா:unsure::unsure::unsure:மகேஷ் ஒரு வேலை உயிருடன் இருக்கிறானா:unsure::unsure::unsure:nice start sago:):):):)
 




Renuga stalin

புதிய முகம்
Joined
Mar 23, 2018
Messages
9
Reaction score
8
Location
dindigul
Hai sathya
All the best
miga sirappana kadhai kalam , raanuva veeragalin mana porattathai kanmun parpathu pola arumaiya eludhi irukringa first epidode semma
 




Joined
Feb 7, 2018
Messages
94
Reaction score
228
Location
Chennai
Hi சத்யா,

அருமையான ஆரம்பம். நினைத்தாலே நடுக்கம் கொள்ள வைக்கிறது. இப்படி எல்லாம் கூட நடக்குமா. ராணுவ வீரர்களின் வாழ்க்கை நிஜமாகவே போற்ற தக்கது தான். நமக்காக அவர்கள் இரவு பகல் குளிர் வெயில் பாராமல் பணியில் ஈடு படுகின்றனர். Hats off to them.

இனி மஹாவின்நிலை
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top