• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Priyangaludan Mugilan 06

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Vathsala Raghavan

மண்டலாதிபதி
Joined
Jan 17, 2018
Messages
239
Reaction score
3,372
ப்ரியங்களுடன் முகிலன் 06

“பள வேடிக்கை மனிதரைப் போல்

நான் வீல்வேன் என நினைத்தாயோ”

‘ஆண்டவா. பராசக்தி. என் பாரதி பாட்டை எல்லாரும் இப்படி கொன்னு எடுக்கறாங்களே’ வாய் விட்டு கத்தினாள் அவள். அவள் ஒரு இளம் தமிழ் திரைப்பட இயக்குனர்.

குர்தியும், அதற்கேற்ற லெக்கிங்சும் மொத்த கூந்தலையும் ஒரு கிளிப்புக்குள் அடக்கிய நேர்த்தியும், தலையில் மாட்டபட்ட குளிர் கண்ணாடியுமாக அவள்.

பல வேடிக்கை மனிதரைப் போல்

நான் வீழ்வேன் என நினைத்தாயோ

‘இந்த வரிகள் எப்படி பட்ட வரிகள் தெரியுமா. இதை உச்சரிக்கும் போது குரலிலேயும் முகத்திலேயும் எப்படி பட்ட கம்பீரம் இருக்கணும் தெரியுமா? ‘வீல்வேன்’ ங்கறீங்க ‘பள’ ங்கறீங்க. நிஜமா முடியலை என்னாலே. உங்களை எப்படி இந்த படத்திலே ஹீரோவா போடறது.’ கொதிப்பு மேலிட்ட குரலில் கூவினாள் அவள்.

அவள் அடுத்து இயக்கப்போகும் திரைப்படத்திற்கு ஹீரோவாக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தான் அவன். அவள் எழுதிய கதையின் படி அந்த திரைப்படத்தின் கதாநாயகன் ஒரு பாரதியார் அபிமானி. இந்த ஹீரோவை வைத்து முதல் நாள் ஒத்திகை நடந்துக்கொண்டிருந்தது.

‘கூல் டவுன்... கூல் டவுன்..’ என்றபடி அவள் அருகில் வந்தான் அந்த ஹீரோ.

‘உங்க தாய் மொழி தமிழ்தானே? அப்புறம் ஏன் இப்படி? அவள் மனம் ஆறவில்லை.

‘கூல் டவுன் பியூட்டி’ என்றபடி அவன் அவள் அருகில் வர சடாரென அவன் முன்னால் நீண்டது அவள் ஆள்காட்டி விரல்

‘இந்த பியூட்டி கீட்டினு கொஞ்சற வேலை எல்லாம் என்கிட்டே வேண்டாம்’ என்றாள் அழுத்தமாக.

‘இல்லமா. நீங்க ரொம்ப அளகா இருக்கீங்க..’ அவன் சொல்ல சுள்ளென்று பொங்கியது அவளுக்கு

‘இங்கே பாருங்க மிஸ்டர்’ என்றாள் அவள் சூடாக. ‘நான் எப்படி இருக்கேன்னு எனக்கு தெரியும் உங்களோட சர்டிஃபிகேட் எனக்கு தேவை இல்லை. அப்படியே நான் அழகாவே இல்லைனாலும் அதை பத்தி கவலை படற கேரெக்டர் நான் கிடையாது புரிஞ்சதா?’ அவனிடம் வெடித்துவிட்டு நேராக தயாரிப்பாளரிடம் வந்தாள்.

‘இங்கே பாருங்க சார். என்னாலே இவரை எல்லாம் வைத்து படம் எடுக்க முடியாது. இன்னும் நாலு நாள் டைம் கொடுங்க. நான் யாரவது ஒரு நல்ல ஹீரோ கொண்டு வரேன். புதுசா இருந்தாலும் பரவாயில்லை. கம்பீரமா இருக்கணும்.

அதுக்கும் மேலே என் பாரதியோட அபிமானியா நடிக்கிறவன் இப்படி பொண்ணுங்ககிட்டே பல்லை காட்டக்கூடாது’ அவரிடம் பொரிந்து விட்டு விடு விடுவென அங்கிருந்து வெளியேறினாள் அவள்.

சற்றே திகைத்து போனான் அந்த ஹீரோ. அவள் நிமிர்வில் கொஞ்சம் பின் வாங்கினான் அவன். இப்போதுதான் இரண்டு படங்கள் நடித்து, வளர்ந்துக்கொண்டிருக்கும் கதாநாயகன்.. அதற்கு மேல் அவள் பின்னணியும் அவனுக்கு தெரியும் என்பதால் மோதிக்கொள்ள தோன்றவில்லை அவளிடம் அவள் போன திசையை கொஞ்ச நேரம் பார்த்திருந்தவன் தயாரிப்பாளரிடம் மெல்ல கேட்டான்

‘இவங்க எப்பவுமே இப்படிதானா? என்றான் அவன் புன்னகைத்தார் தயாரிப்பளார்.

‘ஆமாம்பா. அவ அப்படிதான். அவளும் பாரதியாரோட அபிமானிதான். அவர் பொண்ணுங்களுக்கு வேணும்னு சொன்ன தைரியமும், தன்னபிக்கையும் இவகிட்டே நிறைய உண்டு.

அவ ஒரு முடிவு எடுத்திட்டானா யாருக்காகவும் அதை மாத்திக்க மாட்டா. ரெண்டு படம் கதை எழுதி டைரெக்ட் பண்ணி இருக்கா. காமெராமேனும் அவதான். ரெண்டுமே அவார்ட் வாங்கி இருக்கு. பெரிய ஹிட்டும் கூட. ரொம்ப தரமான படங்கள். இது மூணாவது. படம்’

ப்பா வீட்டை விட்டு கிளம்பி இரண்டு மணி நேரம் கடந்திருந்த நிலையில் விழுந்தடித்துக்கொண்டு முகிலனின் அறைக்கு வந்தான் ஷ்யாம். அங்கே பால்கனியில் நின்றுக்கொண்டு அருகே இருந்த மரத்தில் விளையாடிக்கொண்டிருந்த அணில்களையே பார்த்திருந்தான் முகிலன்

‘வா ஷ்யாம். நானே உன்னை கூப்பிடனும்னு நினைச்சேன். சச்சிதானந்தன் படத்துக்கு நாளையிலிருந்து டேட்ஸ் கொடுத்திருக்கோம் இல்லையா? அவனை திரும்பி பார்க்காமலே கேட்டான் முகிலன்

‘சார்.. அது இருக்கட்டும் சார் அப்பா அங்கே ப்ரெஸ் மீட்லே ஏதேதோ பேசப்போறாராம் சார்..’ ஷ்யாம் படபடக்க அதில் நூற்றில் ஒரு பங்கு படபடப்பு கூட இல்லை முகிலனிடத்தில். மெல்ல திரும்பி அவன் முகம் பார்த்தான் முகிலன்

‘ஷூட்டிங் கன்ஃபர்ம் பண்ணிட்டியா? அப்புறம் அந்த அவார்ட் ஃப்ங்ஷன் என்னைக்கு?’

‘முகிலன் சார்...’ என்றான் ஷ்யாம் பொறுக்க மாட்டாமல். அவன் ரொம்பவும் பொறுமை இழக்கும் போகும்போதுதான் பெயர் சொல்லி அழைப்பான்.

‘நான் அவார்ட் ஃப்ங்ஷன் எப்போன்னு கேட்டேன்’

‘நாளை கழிச்சு சார்..’ ‘அங்கே அப்பா இன்னும் கால் மணி நேரத்திலே ப்ரெஸ் மீட் ஏற்பாடு பண்ணி இருக்கார். என்ன பேசப்போறார்னு தெரியலை.

‘அப்படியா? என்றான் இதழோரம் தேங்கிய சின்ன புன்னகையுடன். இப்போ உங்க டி.வி காரங்க எல்லாரும் சும்மா இருக்க மாட்டங்களே அவர் பேட்டியை லைவா டி.வி.யிலே காட்டினாலும் காட்டுவாங்க. வா வா பார்க்கலாம் ‘என்றபடியே உள்ளே வந்து அங்கிருந்த சாய்வு நாற்காலியில் படு ஆயாசமாக சாய்ந்து கொண்டான் முகிலன்.

‘எங்கே டி.வி போடு பார்ப்போம்’ என்றான் கையை உயர தூக்கி சோம்பல் முறித்தபடியே.. உச்சகட்ட பதற்றத்தோடு டி.வியை உயிர்ப்பித்தான் ஷ்யாம்.

ஆனால் அங்கே செய்தி சேனல்களில் வலம் வந்துக்கொண்டிருந்தது வேறாரு செய்தி ‘நேற்று இரவு ஒரு வாலிபன் குடித்துவிட்டு நடு ரோட்டில் யாரோ ஒரு பத்திரிக்கையாளரை தகாத வார்த்தைகளில் பேசி அடித்து விட்டதாக ஒரு செய்தி அதற்கான வீடியோ ஆதாரத்துடன் வந்துக்கொண்டிருந்தது.’

பத்திரிக்கையாளர்கள் எல்லாரும் கொதிப்புடன் பேசிக்கொண்டிருந்தார்கள். எல்லா சேனல்களிலும் இதே செய்தி. சில நிமிடங்கள் அதையே பார்த்துக்கொண்டிருந்த பிறகுதான் அந்த வாலிபன் யார் என தெளிவானது ஷ்யாமுக்கு.

‘சார்..’ என்று திகைப்புடன் முகிலன் முகம் பார்த்தான் ஷ்யாம்.

‘செக் அண்ட் மேட்’ என்று கண் சிமிட்டினான் முகிலன். ‘நம்ம வெங்கட்ராமன் செக் அண்ட் மேட்’ அந்த வாலிபன் வேறே யாருமல்ல நம் வெங்கட்ராமனின் மகன் ஜெகன்.

‘சார்..இது உங்க வேலையா?’ வியந்து போய் கேட்டான் ஷ்யாம்

‘எஸ். மை பாய். அடிவாங்கின ரிப்போர்டர் நம்மாளு. அவனை வெங்கட்ராமன் பையன் இருக்கிற இடத்துக்கு அனுப்பினதே நான்தான்’ மலர்ந்து சிரித்தான் முகிலன் ‘கிட்டத்தட்ட பத்து வருஷமா சினிமாலே இருக்கேன் இது கூட சாதிக்கலைன்னா எப்படி?’

‘எப்போ சார் இதெல்லாம் பண்ணீங்க?’

நேத்து ராத்திரி யம்மா.... மொட்டை மாடியில் யம்மா...’ அழகாய் சிரித்தான் முகிலன் ‘இந்த செல்போன் மட்டும் வெச்சே எல்லாத்தையும் முடிச்சிட்டேன்’ என்றபடியே கையிலிருந்த கைப்பேசியை தூக்கி கட்டிலின் மீது போட்டான் முகிலன்

‘எங்கப்பாவை வெச்சு என்கிட்டே விளையாடி பார்க்குறார் ஷ்யாம் இந்த வெங்கட்ராமன். அதுதான் அவர் பையனை வெச்சு அவரை அடிச்சேன். சும்மாவே எங்கப்பாவுக்கு நானுன்னா வேப்பங்காய்தான். இதிலே கிட்டதட்ட ரெண்டு மூணு மணி நேரத்திலே பேசி பேசியே எங்கப்பாவை மொத்தமா எனக்கெதிரா திருப்பி இருக்கார் இந்த வெங்கட்ராமன்’ சொன்ன முகிலனின் கண்களில் இப்போது அப்படி ஒரு தீவிரம்.

இன்னமும் வியப்பிலிருந்து மீளாதவனாக முகிலனையே பார்த்திருந்தான் ஷ்யாம்
 




Last edited:

Vathsala Raghavan

மண்டலாதிபதி
Joined
Jan 17, 2018
Messages
239
Reaction score
3,372
‘நியாயமா எங்கப்பா ப்ரெஸ் மீட் வைக்கறதுன்னா நம்ம வீட்டிலே வெச்சிருக்கணும் இல்லைன்னா வருண் வீட்டிலே வெச்சிருக்கணும். ஆனா அவர் ஏற்பாடு பண்ண ப்ரெஸ் மீட் மகாலிங்கபுரத்திலே இருக்கிற எங்க தாத்தா வீட்டிலே. அதுக்கு பக்கத்து வீடு நம்ம வெங்கட்ராமன் பங்களா. அது வெங்கட்ராமன் அண்ணன் இருந்த வீடு அது. இப்போ அதை இடிச்சி பெரிய பங்களா கட்டி இருக்கார்’

வியப்பில் விரிந்துகிடந்த ஷ்யாமின் விழிகள் இன்னமும் முகிலனை விட்டு விலகவில்லை.

‘அங்கே ப்ரெஸ் மீட்னு கேள்வி பட்டதுமே எனக்கு பொறி தட்டிச்சு. எங்கப்பா படம் டைரக்ட் பண்ணுவார், நடிப்பார். ஆனா தனியா ப்ரெஸ்சை சந்திக்கிற அளவு தைரியம் கிடையாது. இதுக்கு பின்னாடி யாரோ இருக்கணும்னு உறுத்திச்சு. இந்த முகிலனுக்கு ஊரெல்லாம் கண்ணு, ஊரெல்லாம் காது. பத்து நிமிஷத்திலே விஷயம் புரிஞ்சிடுச்சு கடைசியிலே நம்ம வெங்கட்ராமன்தான் குதிருக்குள்ளே’ என்றான் கையிலிருந்த டி.வி ரிமோட்டை தூக்கி போட்டு விளையாடிக்கொண்டே.

‘சில வருஷங்கள் முன்னாலே வெங்கட்ராமன் முதல் படம் டைரக்ட் பண்ணது எங்கப்பாவை வெச்சுதான். எங்கப்பாவுக்கு வெங்கட்ராமன் மேலே எப்பவும் நம்பிக்கை உண்டு’ சொன்னான் முகிலன்.

‘வெங்கட்ராமன் பையன் நைட் பார்ட்டிலே குடிச்சுட்டு ஆட்டம் போடற விஷயம் எப்பவும் நடக்கறதுதான். நாம இப்போ அதுக்கு ஒரு விளம்பரம் கொடுத்திருக்கோம் அவ்வளவுதான்’ என்று கண்சிமிட்டி கலகலவென சிரித்த முகிலனை ரசிக்காமல் இருக்கவே முடியவில்லை ஷ்யாமால்.

‘இந்த ப்ரெஸ் மீட்லே நின்னு போன வருண் கல்யாணத்திலே ஆரம்பிச்சு எல்லாத்தை பத்தியும் எங்கப்பா வாயாலே சொல்ல வைக்கணும்ங்கிறது அவர் திட்டம். எங்கப்பாவை வெச்சு என்னை கார்னர் பண்ணனும் அவருக்கு. இதெல்லாம் வேடிக்கை பார்த்திட்டு இருக்க முகிலன் என்ன கிறுக்கனா?’ சொன்னபடியே டிவி. சேனலை மாற்றினான் முகிலன்.

அதிலே வெங்கட்ராமன் வீட்டு முன்பாக கூடி இருந்தனர் சில பத்திரிக்கையாளர்கள். வெங்கட்ராமனின் மகன் மன்னிப்பு கேட்க வேண்டுமென போராட்டம் செய்துக்கொண்டிருந்தனர்.

சில நிமிடங்கள் அதையே பார்த்திருந்தவன் திடீரென கலைந்து ஷ்யாமின் பக்கம் திரும்பினான். அவன் இதழோரம் சின்ன புன்னகை.

‘இப்போ நடத்த சொல்லுடா ப்ரெஸ்சையும் மீட்டையும்’ என்றான் அவன். ‘இப்போ வெங்கட்ராமனும், எங்கப்பாவும் அங்கே என் தாத்தா வீட்டுக்குளே போய் ஒளிஞ்சு உட்கார்ந்திருக்காங்க. வெளியே வர தைரியம் இல்லை’ சிரித்தான் அவன் ‘இன்னும் கொஞ்ச நாளைக்கு ப்ரெஸ் பத்தி யோசிக்கவே மாட்டார் வெங்கட்ராமன்’

‘நீங்க நிஜமாவே புத்திசாலிதான் சார்’ ஷ்யாம் ரசித்து சொல்ல

‘அஹான்...’ சிரித்தான் முகிலன். ‘நாம இன்னும் முழுசா ஜெயிக்கலை ஷ்யாம். என்றான் அவனை பார்த்து

’என்னை அவர் காலிலே விழ வைக்க கடைசி வரை முயற்சி பண்ணுவார் வெங்கட்ராமன். இப்போ இதை செய்தது நான்தான்னு அவருக்கு கண்டிப்பா தெரியவரும். அதுக்கு அப்புறம் கொதிச்சு போவார். என்னை தோற்கடிக்க இன்னும் தீவிரமா யோசிப்பார்.

‘யூ நோ சம்திங் போன வாரம் அவர் படம் நடிக்க கேட்டதுக்கு வருணும் மறுத்துட்டான். இப்போ எங்கப்பாவை வெச்சு அவனையும் கார்னர் பண்ணனும். இதுதான் அவரோட அடுத்த பிளான்.’ என்றான் நிதானமாக.

‘பார்க்கலாம் அவர் காய் நகர்த்தட்டும் அதுக்கு அப்புறம் நாம விளையாடுவோம்’ என்றபடியே ஏனோ டி.வியில் வந்த அந்த காட்சியை, வெங்கட்ராமனின் அந்த வீட்டை விழி அகற்றாமல் பார்த்திருந்தான் முகிலன்.

இன்று அந்த பத்திரிக்கையாளர்கள் நிற்கும் இடத்தில்தான் சில வருடங்களுக்கு முன் மீரா என்று ஒரு தேவதை தினமும் கோலமிடுவாள் என்றும் அதை இவனது தாத்தா வீட்டு மாடியிலிருந்து கண்ணன் எனும் அவள் காதலன் பார்த்து ரசிப்பான் எனவும் இவன் அறிந்திருக்கவில்லை இப்போது.

சில மணி நேரங்கள் கழிந்த பின்பும் இந்த பிரச்சனை தொடர்ந்து கொண்டுதான் இருந்தது. முகிலன் கண் அசைக்காமல் எப்படி முடியுமாம்? மகனை மன்னிப்பு கேட்க வைக்க வெங்கட்ராமனின் தன்மானம் இடம் கொடுக்கவில்லை.

மதிய உணவை முடித்துவிட்டு அறைக்கு வந்த முகிலனுக்கு இன்னும் சில நிமிடங்களில் அப்பா அவனை அழைப்பார் என தோன்றிக்கொண்டே இருந்தது. அவனது எண்ணத்தை பொய்யாக்காமல் அழைத்தும் விட்டார் அவர்.

‘ஹலோ’ இதழோரம் தேங்கிய ஒரு ஒரு ரகசிய புன்னகையுடனே துவங்கினான் முகிலன்

‘டேய்.... டேய்... டேய்... என்னடா.. என்னடா... பண்ணி வெச்சிருக்க?’ எடுத்த எடுப்பிலேயே பாய்ந்தார் தந்தை.

‘விஷயம் என்னனு சொல்லுங்க. சும்மா படபடன்னா என்ன அர்த்தம்?’ என்றான் கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல்.

டேய்... ஒண்ணுமே தெரியாத மாதிரி பேசாதே. அந்த ரிப்போர்ட்டர் உன் ஆளுதானே. நீ தானேடா அவனை அனுப்பினே. அவனை முதல்லே நிறுத்த சொல்லு எல்லாத்தையும். பாவம்டா ஜெகன். வெங்கட்ராமன் எனக்கு பல வருஷமா பழக்கம். இதுக்கு முன்னாடியும் அவர்கிட்டே ஏதோ பிரச்சனை பண்ணி வெச்சிருக்க. என்ன பிள்ளை வளர்த்து வெச்சிருக்கீங்கன்னு என்னை கேட்கிறார்டா வெங்கட்ராமன். எனக்கு மானம் போகுது’ என்றார் அமுதன்

‘ஆஹா,,,,,ன்?’ என்றவனின் குரலில் அப்படி ஒரு சூடு .

எப்படியாம்? எப்படியாம் அது? மானம் போகிறதாமா அவருக்கு? கொதித்தது அவனுக்குள்ளே.

இப்போதும் தான் செய்தது சரி என்று தோன்றவில்லை முகிலனுக்கு. ஆனால் அதே நேரத்தில் குடித்துவிட்டு நடு ரோட்டில் ஒரு மனிதனை அடித்த ஜெகனை பாவம் என இவர் எப்படி ஏற்றுக்கொள்கிறார் என புரியவில்லை இவனுக்கு. நீ என்ன மகன் வளர்த்து வைத்திருக்கிறாய் என வெங்கட்ராமனை திரும்ப கேட்க முடியவில்லையே இவரால் ஏன்?

‘என்னடா பேசாம இருக்கே அவன் உன் ஆளுதானே ?’

‘ஆ.. மா...ம்... என்... ஆளு...தான்’ அழுத்தம் திருத்தமாய் சொன்னான் சுறுசுறுவென ஏறிய கோபத்தை உள்ளுக்குள் தள்ளிக்கொண்டு. ‘எனக்கு ரொம்ப வேண்டியவன். அவனை ஜெகன் அடிச்சிருக்கான். அதனாலே ஜெகனை அவன்கிட்டே மன்னிப்பு கேட்க சொல்லுங்க. இல்லைனா நாளைக்கு அவன் என்கிட்டே கேள்வி கேட்பான். என் மானம் போயிடும். புரியுதா. நான் இப்போ வெச்சிடறேன்’ அதற்கு மேல் தன்னையும் மீறி வார்த்தைகள் வெடிக்கும் முன் அழைப்பை துண்டித்துத்திருந்தான் முகிலன்.

இன்னும் இரண்டு மணி நேரங்கள் கடந்தும் எதுவும் ஓய்வதாக தெரியவில்லை. கடைசியில் வேறு வழியே இல்லாமல் மன்னிப்பு கேட்க வெளியே வந்தான் ஜெகன். அவனுடனே வந்தார் வெங்கட்ராமனும்.

நடந்த தவறுக்கு எல்லார் முன்னிலையிலும் மன்னிப்பு கேட்டு முடித்தான் ஜெகன். விழிகளில் வெளிப்படையாக மின்னிய கோபத்துடன் அவனருகில் நின்றிருந்தார்

அவரை நோக்கியும் மைக்குகள் நீள ‘என்னை சுத்தி சூழ்ச்சி வலை பின்னிட்டிருக்கான் அந்த முகிலன்’ என்றார் கொஞ்சம் உறுமும் குரலில் ‘விழுவான் அவன். என் காலிலே வந்து விழுவான் ஒரு நாள் எல்லாரும் பார்ப்பீங்க அதை’

டிவியை பார்த்துக்கொண்டிருந்த முகிலன் இதழ்களில் அழகாய் ஒரு புன்னகை ‘பார்த்திடலாம் அதையும் பார்த்திடலாம்’
 




Last edited:

Vathsala Raghavan

மண்டலாதிபதி
Joined
Jan 17, 2018
Messages
239
Reaction score
3,372
முகிலன் விளையாடிய இந்த விளையாட்டை பற்றியும், அமுதன் அவன் வீட்டுக்கு வருவது பற்றியும் எதுவுமே அறியாமல் தனது வீட்டில் இருந்தான் வருண்.

பொதுவாக வருண் எதற்குமே பெரிதாக அலட்டிக்கொள்ளும் சுபாவம் இல்லைதான். இந்த அனுபமா விஷயத்தையுமே சட்டென மனதை விட்டு விலக்கிவிட்டு தன்னை இயல்புக்கு தள்ளிக்கொண்டிருந்தான் அவன். சந்தோஷமாக விசில் அடித்துக்கொண்டே வந்தவனை வியப்புடன் பார்த்தான் தனா.

‘பாஸ்.. நான் எதிர்ப்பார்க்கலை’ என்றான் ‘’நீங்க இவ்வளவு சீக்கிரம் இவ்வளவு கூல் ஆவீங்கனு எதிர்பார்க்கலை’ ஆற்ற மாட்டாமல் கேட்டே விட்டான் தனா. ‘உங்களுக்கு அனு மேடமை எவ்வளவு பிடிக்கும்னு எனக்கு தெரியும்’

‘இப்போ கூட எனக்கு அவளை ரொம்ப பிடிக்குமே’ என்றான் புன்னகையுடன். ‘அதுக்காக எங்க கல்யாணம் நடக்கலைங்கிறதுக்காக நான் சோகமா எல்லாம் திரிய முடியாது புரியுதா?’ அது முடிஞ்சு போச்சுன்னா முடிஞ்சு போச்சு அவ்வளவுதான் அதையே தலையிலே சுமந்திட்டு சுத்த முடியாது தனா’ என்று தனாவின் முதுகில் தட்டியவனை தனா வியப்புடன் பார்க்க

திடீரென அந்த நேரத்தில் அமுதன் அவன் வீட்டு வாசலில் வந்து நிற்க உற்சாகத்தில் திக்குமுக்காடிப்போனான் வருண். இதுவரை அவராக அவன் வீட்டுக்கு வந்த சந்தர்ப்பங்கள் மிகக்குறைவு.

‘சார்...... வெல்கம் சார்.... வாங்க.... வாங்க....’ கூவினான் அவன்.

‘நான் உன் கூடவே நிரந்தரமா இருக்கணும்னு வந்திருக்கேன்பா. உள்ளே வரலாமா?’ அவர் கொஞ்சம் கெஞ்சல் கலந்த குரலில் கேட்க பதறிப்போனான் வருண்.

‘சார்... என்ன சார் நீங்க?’ இது உங்க வீடு சார் வாங்க சார்.. உள்ளே வாங்க சார்..’

டிரைவர் எல்லா பொருட்களையும் உள்ளே கொண்டு வந்து வைக்க உடல் முழுவதும் ஏதோ ஒரு படபடப்பு தொற்றிக்கொண்டதை போலவே உள்ளே வந்து அமர்ந்தார்

‘வந்திட்டேன் வருண். வந்திட்டேன் மொத்தமா உன்கிட்டே வந்திட்டேன் வருண்’ மூச்சு வாங்க அதையே திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டிருந்தார் மனிதர்.

‘சார்...சார் ப்ளீஸ்.. கொஞ்சம்... கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணுங்க. இவ்வளவு எமோஷனல் ஆகாதீங்க’ என்றபடியே அவர் அருகில் அமர்ந்துக்கொண்டான் வருண். முகிலனோடு ஏதும் பிரச்சனையாக இருக்கும் என யூகித்தவன் எதையுமே கேட்காமல்

‘முதல்லே கொஞ்சம் ஜூஸ் குடிங்க’ என்றபடி உள் நோக்கி குரல் கொடுக்க சில நொடிகளில் பழச்சாறு வந்தது அவர்களை நோக்கி. அதை குடித்த பின்னரும் நிதானத்துக்கு வரவே இல்லை அமுதன்.

‘தப்பு செஞ்சிட்டேன் நான். தப்பு செஞ்சிட்டேன்.’ புலம்பிக்கொண்டே இருந்தார் அவர்.

‘நீங்க என்ன சார் தப்பு செஞ்சீங்க’ குரலில் நிறைந்த வாஞ்சையுடன் கேட்டான் வருண்.

‘இல்ல வருண். நான் முகிலனை கண்டிச்சு வளர்த்திருக்கணும். தப்பு பண்ணிட்டேன். திமிரு. அவனுக்கு உடம்பு முழுக்க திமிரு. அவனாலே என் மானம் போகுது உன் வாழ்கையையும் கெடுத்திட்டான். மன்னிச்சிடு வருண்’

‘அய்யோ... சார்.. ப்ளீஸ்.. ஏன் நீங்க இப்படி எல்லாம் பேசறீங்க.’ என்றபடியே அவர் கைகளை பிடித்துக்கொண்டான் வருண்.

என்னதான் முகிலன் மீது கோபம் இருந்தாலும் முகிலன் இந்த திருமணத்தை நிறுத்தியதில் ஏதோ ஒரு காரணம் இருக்குமோ என சொல்லிக்கொண்டே இருந்த உள்ளுணர்வை அவனால் புறந்தள்ளவே முடியவில்லை. அவள் மீது எந்த தவறும் இல்லை என்றால் இத்தனை நேரத்தில் அனுபமா அவனிடம் பேசி இருக்க வேண்டும் இல்லையா?’

‘வருண் எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணுவியா?’ கேட்ட அமுதனின் குரலில் கலைந்து நிமிர்ந்தான்

‘கண்டிப்பா. சொல்லுங்க சார்..’

‘இனிமே நீ என்னை நீ அப்பான்னு கூப்பிடறியா?’ அவர் கேட்க சில நொடிகள் உறைந்து போனான் வருண். ஏதோ பல வருடங்களாக இருந்த தவத்திற்கு வரம் கிடைத்தது போல் உணர்வு பரவியது அவனுக்குள்ளே.

ஆனால் இதுவரை இப்படி எல்லாம் நினைத்தே பார்த்தது இல்லையே ஏன் இப்படி ஒரு உணர்வு அவனுக்கே புரியவில்லை.

‘அப்பாவா? நீங்க எனக்கு அப்பாவா? நீங்க முகிலனுக்குதானே அப்பா’ உணர்ச்சி வசப்பட்டது போல் அவன் குரல் கொஞ்சம் நெகிழ்ந்து ஒலித்தது.

‘ஏன் ஏன் நான் எப்போதும் இப்படி எல்லாம் இல்லையே என்ன ஆகிறது எனக்கு? உள்ளுணர்வு தட்டிக்கொண்டே இருந்தது அவனை.

‘நீ முதல்லே என்னை அப்பான்னு கூப்பிடு வருண்’’

இல்லை கூடாது அவர் முகிலனுக்குதான் தந்தை என அவனது உள் மனம் கூவிக்கொண்டிருந்த போதிலும்

‘இல்லப்பா... அது எப்படிப்பா நீங்க முகிலனுக்குத்தான் அப்பா. நான் உங்களை அப்படி கூப்பிடக்கூடாதுபா’ உள்ளம் எதையோ சொல்லிக்கொண்டிருக்க உதடுகள் அவரை அப்பா அப்பா எனவே உரைத்துக்கொண்டிருந்தன.

எதுவுமே பேசாமல் சில நொடிகள் வருண் முகத்தையே பார்த்தார் அமுதன்

‘நிம்மதியா இருக்கு, ரொம்ப நாளைக்கு அப்புறம் இன்னைக்குதான் நிம்மதியா இருக்கு. இனிமே உன் கூடவே இருந்திடுவேன். உன் சந்தோஷம்தான் என் சந்தோஷம். இனிமே நீதான் என் பிள்ளை. முகிலன் இல்லை. சரியா சரியா வருண்’ எதிலேயோ கட்டுண்டவர் போல் அவர் பேசிக்கொண்டே போக’

சடக்கென எழுந்து விட்டான் வருண். ஏனோ இதை ஒப்புக்கொள்ளவே முடியவில்ல அவனால். என்ன செய்கிறேன் நான்? இது எப்படி? அவர் முகிலனுக்கு மட்டுமே தந்தை. நான் அவரை அப்படி அழைத்தால், நான் மட்டும் இவரை சொந்தம் கொண்டாடினால் அவன் உடைந்து போவான்

அங்கிருந்த ஜக்கிலிருந்து தண்ணீரை மடமடவென குடித்தான் வருண்.

வருண் அவர் மகன் இல்லை என்று அமுதனுக்கு நன்றாக தெரியும். மனைவியை தவிர வேறொரு பெண்ணை அவர் வாழ்க்கையில் தொட்டதும் இல்லைதான். ஆனால் வருணிடம் ஏன் இப்படி ஒரு உணர்வு தோன்றுகிறது இது அவருக்கே புரியாத புதிராகத்தான் இருந்தது.

அதே நேரத்தில் அந்த அப்பா என்ற வார்த்தையில் வருணும் ஏன் நெகிழ்ந்து போகிறான்? அதுவும் மிகப்பெரிய கேள்விக்குறியாகவே இருந்தது அவருக்கு.

சற்றே சுதாரித்துக்கொண்டு அவர் அருகில் வந்தான் வருண்.

‘சார்..’ என்றான் மறுபடியும் ‘உங்களை அப்பான்னு கூப்பிடறதை விட வேறே ஒரு பெரிய சந்தோஷம் எனக்கு இருக்குமான்னு தெரியலை. ஆனா முகிலன் வேண்டாம் நான் மட்டும் வேணும்ங்கிறதை என்னாலே ஒத்துக்க முடியலை. என்னை மன்னிச்சிடுங்க’ அவர் முன்னால் கரம் கூப்பினான் வருண்.

‘நாங்க ரெண்டு பேரும் எப்போதும் சண்டை போட்டுக்கறோம்தான். அது வேறே விஷயம். ஆனா என் மனசுக்கு அவனை நல்லா தெரியும். பாவம் சார் அவன்’ என்றான் நிதானமான குரலில்.

அவன் பேசியதில் கொஞ்சம் திகைத்துப்போனார் அமுதன். ‘இல்ல வருண்...’

‘இல்ல சார்... நீங்க அவனை எப்போ மனசார உங்களோட சேர்த்துக்கறீங்களோ அப்ப நான் உங்களை அப்பானு கூப்பிடறேன். அதுவரைக்கும் சார்தான். இது உங்க வீடு சார். நீங்க இங்கேயே சந்தோஷமா இருக்கலாம்.

உங்களுக்கு மாடியிலே ரூம் ரெடி பண்ண சொல்றேன் சாப்பிட்டு ரெஸ்ட் எடுங்க. நான் கொஞ்சம் வெளியே போயிட்டு வந்திடறேன்’ சொல்லிவிட்டு அங்கிருந்து விறுவிறுவென அகன்றான் வருண்.

மாடியிலே அறை! அமுதனுக்கு மாடியிலே அறை ஒதுக்க கூடாது. அது அவருக்கு ஆபத்தாக முடியும் ரொம்பவும் அவசியம் என்றாலொழிய அவர் மாடி ஏறுவதையே பொதுவாக தவிர்த்துவிடுவார் என்பதை அறிந்திருக்கவில்லையே வருண். என்ன செய்ய?

ஒரு நாள் கடந்திருந்தது . இன்று மாலையில் அந்த விருது வழங்கும் விழா. தனது அன்றைய படப்பிடிப்பை முடித்துக்கொண்டு மிக உற்சாகமாக வீடு வந்து சேர்ந்திருந்தான் நம் முகிலன்.

பொதுவாக காமெராவின் முன்னால் இருக்கும் போது மட்டுமே தனது உடை விஷயங்களில் கவனம் செலுத்துவான் முகிலன். மற்ற நேரங்களில் அதிலொரு அலட்சிய போக்குத்தான் இருக்கும் ஆனால் இன்று அவனே அறியாமல் அரை மணி நேரமாக கண்ணாடியின் முன்னால் நின்றிருந்தான் நம் தலைவன்.

மெரூன் நிற பைஜாமாவும் குர்தாவும் அணிந்து, கையில் பளபளக்கும் பிரேஸ்லெட், வாட்ச் சகிதம். ஒரு அரசனை போல் கம்பீரமாக நடந்து வந்த முகிலனை பார்த்து சில நொடிகள் நின்றே விட்டான் ஷ்யாம்.

‘சார்...’ என்றான் சந்தோஷ குரலில் ‘ஜம்முன்னு இருக்கீங்க சார்.. அப்படியே அங்கே அவார்ட் ஃபங்க்ஷன்லே ஒரு பொண்ணு பார்த்திடலாம் சார் உங்களுக்கு. நாம என்ன பாக்குறது எல்லாரும் உங்களை இப்படி பார்த்தா தன்னாலே ஓடி வருவாங்க’

‘அஹான்...’ சிரித்தான் முகிலன் ‘ஏன்டா நான் உங்களை எல்லாம் கட்டி மேய்க்குறது பத்தாதா. இன்னும் பொண்டாட்டி வேறே கட்டணுமா? வேறே வேலை இல்லை போடா டேய்..... வா வா நீயே வந்து இன்னைக்கு வண்டி எடு வா. டிரைவர் லீவு ’ என்றபடியே நடந்தான் முகிலன்.

இந்த விழாவுக்கு போவதில் ஷ்யாமுக்கு முதலில் விருப்பம் இல்லைதான். எப்படியும் பத்திரிக்கையாளர்கள் இவனை சூழ்ந்துக்கொள்வார்கள் வெங்கட்ராமனை பற்றி கேட்பார்கள் என நன்றாக தெரியும். ஆனால் எது செலுத்தியதோ பிடிவாதமாக கிளம்பிவிட்டான் முகிலன்.

‘அங்கே அவார்ட் ஃபங்க்ஷன்லே ஒரு பொண்ணு பார்த்திடலாம் சார் உங்களுக்கு’ ஷ்யாம் சொன்ன வார்த்தைகளே முகிலன் மனதில் ஓடிக்கொண்டிருந்தது.

‘திருமணமா எனக்கா?’ சிரிப்புதான் வந்தது அவனுக்கு. அம்மா அப்பாவின் வாழ்க்கையை பார்த்த பிறகு, அம்மா தினமும் வடித்த கண்ணீரை பார்த்த பிறகு திருமணம் என்ற விஷயத்தில் பெரிய நாட்டமில்லாமல் போனது முகிலனுக்கு.

‘எப்படி பார்த்தாலும் அப்பாவை விட மூன்று மடங்கு அதிக கோபக்காரன் நான். என்னை யாருக்காகவும் மாற்றிக்கொள்ளவும் முடியாது, யாரிடமும் அடங்கிப்போகவும் முடியாது. முகிலன் எப்போதும் முகிலன்தான்.’

‘இந்த நிலையில் திருமணம் என்ற பெயரில் ஒருத்தியை அழைத்து வந்து அவளுக்கு என்னாளும் சண்டை போட்டுக்கொண்டு அவளுக்கு தினமும் கண்ணீர் துளிகளை பரிசளிக்க வேண்டுமா என்ன? அப்படி ஒரு தவறை மட்டும் இந்த பிறவியில் செய்யப்போவதில்லை.’ அவன் தலை இடம் வலமாக தன்னாலே அசைந்தது.

‘என்ன சார்..’ காரை ஒட்டிக்கொண்டிருந்த ஷ்யாம் அவனை திரும்பி பார்க்க

‘ஒண்ணுமில்லை நீ ரோட்டை பார்த்து வண்டியை ஓட்டு’ ஷ்யாமை பார்த்து சொல்லிவிட்டு சாலையில் பார்வையை பதித்துக்கொண்டான் முகிலன்.

விழா அரங்கிற்கு வந்து நின்றது கார். கதவை திறந்துக்கொண்டு முகிலன் இறங்கியதுதான் தாமதம் அவனை சூழ்ந்துக்கொண்டனர் பத்திரிக்கையாளர்கள் ஷ்யாம் அவசரமாக அவர்களிடம் பேசி அவர்களை விலக்க முயல பதறவே இல்லை முகிலன்.

‘இரு இரு ஷ்யாம் என்னதான் கேட்குறாங்க பார்ப்போமே’’ என்றான் தான் எதற்கும் தயார் என்பதை போன்ற புன்னகையுடன்.

‘போச்சுடா..’ தனக்குள்ளே சொல்லிக்கொண்டான் ஷ்யாம்

‘சொல்லுங்க சார் என்ன விஷயம்?’ தான் அணிந்திருந்த குர்த்தாவின் முழுக்கையை சற்றே மேலே ஏற்றி விட்டுகொண்டபடியே பத்திரக்கையாளர்கள் முன் கம்பீரமாக நின்றான் முகிலன். படபடவென அவன் மீது விழுந்தன கேமரா வெளிச்சங்கள்.
 




Vathsala Raghavan

மண்டலாதிபதி
Joined
Jan 17, 2018
Messages
239
Reaction score
3,372
அப்போது அந்த அரங்கிற்குள் நுழைந்தது இன்னொரு கார். அது நேராக முகிலன் காருக்கு அருகில் சென்று நின்றது. அதில் டிரைவர் சீட்டிலிருந்து இறங்கினாள் அவள். அவளுடன் அவளது காரியதரிசியும். அவள்தான் நம் பெண் இயக்குனர், பாரதியாரின் அபிமானி.

‘சார்...உங்க அப்பா வருண் வீட்டுக்கு போயிட்டாரே அதை பத்தி என்ன நினைக்கறீங்க?’ ஒரு பத்திரிக்கையாளர் முகிலனிடம் கேட்டு முடிக்க

‘ஏன் வருண் வீடு அப்படி போகக்கூடாதா இடமா? என்றான் படு நக்கலாக .

‘இல்ல சார் அவர் உங்களுக்கு எதிரி இல்லையா?’

‘அப்படியா?’ என்றான் குரலில் கொஞ்சம் யோசனையை ஏற்றிக்கொண்டு தாடையை தடவியபடியே ‘அப்படியே இருந்தாலும் எங்க அப்பாவுக்கு அவர் எதிரி இல்லை இல்லையா? அதனாலே அவர் அங்கே போயிருக்கார். அடுத்த கேள்வி’

இல்லை வருண் கல்யாணம் நின்னதுக்கு நீங்கதான் காரணம். அதனாலேதான் அவர் அங்கே போயிட்டார்னு..’ அழகாய் தூண்டில் போட்டார் அந்த நிருபர்,

‘வருண் கல்யாணம் நின்னு போச்சா? அய்யோ பாவமே. எனக்கு தெரியாது சார். அடுத்த தடவை நீங்க அவரை பார்த்தீங்கன்னா நான் ரொம்ப வருத்தப்பட்டேன்னு சொல்லுங்க’ என்றான் கொஞ்சம் கூட அலட்டிக்கொள்ளாமல்.

அவன் பேசிய விதத்தில் பொங்கி வந்த சிரிப்பை அடக்கிக்கொள்ள ஷ்யாம் மிகவும் சிரமப்பட வேண்டி இருந்தது.

‘சரி ரெண்டு நாளைக்கு முன்னாலே நடந்த பிரச்னையை பற்றி என்ன நினைக்கறீங்க?’

‘இப்போ பல பிரச்சனைகள் நடக்குது நாட்டிலே. எதை பத்தி கேட்கறீங்க.?’ என்றான் ரொம்பவே இயல்பாக.

‘இறைவா. இத்தனை பொறுமையாக பதில் சொல்கிறானே. எப்போது வெடிப்பானோ படபடத்தது ஷ்யாமுக்கு.

என்னை சுத்தி சூழ்ச்சி வலை பின்னிட்டிருக்கான் அந்த முகிலன். அவன். என் காலிலே வந்து விழுவான் ஒரு நாள் எல்லாரும் பார்ப்பீங்க அதை’ ன்னு வெங்கட்ராமன் சார் சொல்லி இருக்கார் அதை பற்றி என்ன நினைக்கறீங்க? மெல்ல தட்ட வேண்டிய இடத்தில் தட்டினார் அந்த பத்திரிக்கைகாரர்

‘ஆஹா...ன்’ மெல்ல மாறிய முகிலனின் முகத்தில் கொஞ்சம் தீவிரம். சற்றே தொண்டையை செருமிக்கொண்டு நிமிர்ந்தான். அந்த நேரத்தில் அவன் அருகில் வந்தாள் நம் இயக்குனர்.

‘இந்த சூழ்ச்சி வலை பின்னுறது எல்லாம் விட எனக்கு நிறைய உருப்படியான வேலை இருக்கு. ஆனா என்னை சுத்தி பின்னப்படுற வலையிலே மாட்டிட்டு முழிக்குற அளவுக்கு முகிலன் பைத்தியக்காரன் இல்லை. கண்டிப்பா அந்த வலைகளை அறுக்கத்தான் செய்வேன். ஆமாம் அது எப்படி? அது எப்படி? அவர் காலிலே நான் விழுவேனாமா? என்று கேட்டவன் கம்பீரமாக கலகலவென சிரிக்க அந்த சிரிப்பொலியில் சட்டென அவன் பக்கம் திரும்பினாள் அவள்

பிறர் வாடப் பலசெயல்கள் செய்து - நரை

கூடி கிழப்பருவமெய்தி - கொடும்

கூற்றுக் கிரையென பின்மாயும் - பல

வேடிக்கை மனிதரை போலே - நான்

வீழ்வே னென்று நினைத் தாரோ? வெங்கட்ராமன்’

உறுமினான் முகிலன். அவன் ஆளுமையிலும் கம்பீரமான குரலிலும் சில பத்திரிக்கையாளர்கள் முகங்களில் கூட ரசிப்பின் பாவம் வந்திருந்தது.

‘முகிலன் எப்பவும் முகிலனாத்தான் இருப்பான்னு’ சொல்லுங்க அவர்கிட்டே. இதைத்தானே எதிர்பபார்த்தீங்க. நான் இப்போ சொன்னதை அப்படியே எழுதிக்கோங்க. நன்றி’ சொல்லிவிட்டு விறுவிறுவென நடந்தான் முகிலன். அவன் பின்னால் கிட்டத்தட்ட ஓடினான் ஷ்யாம்

அப்படியே கட்டுண்டதை போல் அவனையே பார்த்தபடி நின்றிருந்தாள் நம் இயக்குனர்,. அவள் நம் வெங்கட்ராமனின் தவப்புதல்வி

தொடரும்...
 




Vathsala Raghavan

மண்டலாதிபதி
Joined
Jan 17, 2018
Messages
239
Reaction score
3,372
So venkatraman kalil mappilaiyai mattum Dan vizhu Van mugilan;)
Thanks a lot Preethu. Yaaru first cmnt podaraanganu paarthitte irunthen hahaha. Athukkulle ippadi ellam mudivu pannitta eppadi? First mugilanuku kalyanam panra ideave illai. Second varun kalaynam vere niruthi irukkaan. so namma heroine yaarukku ;-) ;-)
 




Arya

மண்டலாதிபதி
Joined
Feb 4, 2018
Messages
353
Reaction score
681
Age
27
Location
Dharapuram
Sema sis
Mugilan last ah sonna bharathiyar patu apdiye kannukulaye vandhiruchu..
Seekiram next update thaanga sis..
Romba nall lam wait panna mudiyadhu plsss..
 




Vathsala Raghavan

மண்டலாதிபதி
Joined
Jan 17, 2018
Messages
239
Reaction score
3,372
Sema sis
Mugilan last ah sonna bharathiyar patu apdiye kannukulaye vandhiruchu..
Seekiram next update thaanga sis..
Romba nall lam wait panna mudiyadhu plsss..
Thanks a lot Arya for your sweet comment. Barathiyaar song naan rasichu ezhuthina scene. Thanks for quoting it. Seekiram next epi vanthidum. Have to finish the story before June 14th illaiyaa. (y)(y)(y)
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top