• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Priyangaludan Mugilan 20

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Vathsala Raghavan

மண்டலாதிபதி
Joined
Jan 17, 2018
Messages
239
Reaction score
3,372
ப்ரியங்களுடன் முகிலன் – 20​

அன்று இரவு படப்பிடிப்பு முடிந்து முகிலனும் ஷ்யாமும் உதகமண்டலத்தின் அந்த ஐந்து நட்சத்திர ஹோடேலில் இரவு உணவை சுவைத்துக்கொண்டிருந்தனர்.

‘சார்...’ என்றான் முகிலன் அருகில் அமர்ந்திருந்த ஷ்யாம்.

‘சொல்லு ஷ்யாம்’

‘அப்பா அம்மா பார்த்து நாளாச்சு. இங்கே கோவையிலேதானே இருக்காங்க. நாளைக்கு கிளம்பி போய் அவங்களோட ரெண்டுநாள் இருந்திட்டு வரவா சார்?’

‘ஷூர் ஷ்யாம்’ ‘ரெண்டு நாள் என்ன? ஒரு வாரம் இருந்திட்டு வா. நான் மேனேஜ் பண்ணிக்கறேன்’ அவன் முதுகில் பாசத்துடன் தட்டினான் முகிலன்.

ஆனால் இந்த ஒரு வாரத்தில் அடுத்தடுத்து நடக்க போகும் சம்பவங்களை அப்போது இருவரும் அறிந்திருக்கவில்லை.

அப்புறம் இன்னொரு விஷயம் சார். நான் இப்போ கொஞ்ச நேரம் முன்னாடி தனாவை பார்த்தேன். நம்ம தலைவரோட பி.ஏ’

‘ம்...தெரியும் சொல்லு’

‘இங்கே நம்ம பக்கத்து வீட்டிலேதான் தலைவர் தங்கி இருக்கார்.’ ‘வெங்கட்ராமன் படம் ஷூட்டிங் வந்திருக்காங்க சார்’ அவன் சொல்ல

‘ஆஹான்.’ புருவங்கள் உயர கேட்டான் முகிலன்.

தட்டில் இருந்த உணவை வாயில் போட்டு சுவைத்துக்கொண்டே முகிலன் திரும்பிய நேரத்தில் அவன் கண்ணில் விழுந்தார் இன்னொரு மேஜையில் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்த வெங்கட்ராமன்.

படப்பிடிப்புக்காக உதகமண்டலம் வந்து சேர்ந்திருந்தார் அவர். அவரை பார்த்த ஷ்யாமின் முகமுமே மாற்றம் கொண்டது.

‘சார்... நாம சாப்பிட்டு கிளம்பிடலாம் சார்’ என்றான் அவன்.

‘ஏன் ஷ்யாம் பயமா இருக்கா?’ இதழோரம் தேங்கிய அலட்சிய புன்னகையுடன் கேட்டான் முகிலன்.

இல்ல சார் பப்ளிக் பிளேஸ்லே..’ அவன் முடிப்பதற்குள் அவர்கள் மேஜைக்கு வந்து அமர்ந்திருந்தார் வெங்கட்ராமன்.

‘முகிலன்’ என்றார் வெங்கட்ராமன் ‘முகிலன் தி கிரேட்’

‘நீங்களே ஒத்துகிட்டதுக்கு ரொம்ப சந்தோஷம்’ என்றான் அலட்டல் இல்லாத குரலில்.

‘குணத்திலே உன் சித்தப்பனை அப்படியே உரிச்சு வெச்சிருக்கேடா நீ. என்றார் வெங்கட்ராமன் ஒருமையில்.

‘அவன் கொஞ்ச வருஷம் முன்னாடி இங்கேதான் ஊட்டியிலே என்னை மன்னிப்பு கேட்க வெச்சான். அதுக்கு நான் பதில் கொடுக்க வேண்டாம். உன்னை வெச்சு கொடுக்கிறேன். பார்த்திட்டே இரு. இன்னும் கொஞ்ச நாளிலே இந்த கிரேட் முகிலன் என் காலிலே விழப்போறான். அப்போ அவனை நான் எட்டி உதைக்கணும்’ அவர் குரலில் வன்மம் மிகுந்திருந்தது.

அவரது பார்வையிலும் வார்த்தைகளிலும் முகிலனின் ஒவ்வொரு அணுவும் நெருப்பாக கொதித்தது. சுள்ளென பொங்கி எழுந்த ரௌத்திரத்தை அவரது வயதை கருத்தில் கொண்டு இறுக்கி கட்டியவனின் சுவாசம் இறுகி தடுமாறியது.

மற்றவர்கள் மீது வரும் கோபத்தை விட அவர் மீது வரும் கோபம் மூன்று மண்டங்காக இருக்கிறதே என்ன காரணம்? புரியவில்லை முகிலனுக்கு.

‘என் பொண்ணையும் உன் பக்கம் இழுத்துட்டே இல்ல நீ. இனி உன்னை சும்மா விட மாட்டேன். இதோ ரெண்டு நாளிலே நான் ஷூட்டிங் ஆரம்பிக்க போறேன். இந்த படம் முடியுற வரைக்கும் கூட காத்திருக்க வேண்டிய தேவை இல்லை. அந்த பரமசிவன் தயாரிப்பாளர் சங்க தலைவர் ஆகி இருக்கார். அவரை வெச்சு ஒரே வாரத்திலே உன் சினிமா வாழ்கையையே முடிச்சு காட்டறேன்டா நான். அப்புறம் என் பொண்ணு படம் இல்ல யார் படமும் நீ நடிக்க முடியாது’ அவர் பேசிக்கொண்டே போக

‘அவரை போக சொல்லு ஷ்யாம்’ வெறிக்கொண்ட சிங்கமாக உறுமினான் முகிலன் ‘நான் மனுஷனா இருக்கும் போதே போகச்சொல்லு’ அவனது முகம் முழுவதும் கோபத்தில் சிவந்து போய் கிடந்தது.

‘சார் ப்ளீஸ்... நீங்க கிளம்புங்க’ ஷ்யாம் வெங்கட்ராமன் கைப் பிடித்து எழுப்பினான்.

‘எனக்கு என்ன பயமாடா இவனை பார்த்தா?’ சீற்றத்துடன் கேட்டார் வெங்கட்ராமன்.

‘இல்ல சார் எங்க சாரை பார்த்தா எனக்குத்தான் பயம். உங்களாலே என்ன முடியுமோ செய்து பாருங்க. இப்போ கிளம்புங்க’ அவரை எப்படியோ எழுப்பி ஹோட்டலை விட்டு வெளியே அனுப்பிவிட்டு வந்து அமர்ந்தான் ஷ்யாம்.

அவன் வருவதற்குள் அங்கே ஒரு பாட்டில் தண்ணீர் முகிலனின் தொண்டைக்குள் இறங்கி இருந்தது. இன்னமும் தணியவில்லை அவன் கோபம். டேபிளின் மீது கையால் குத்தியபடியே அமர்ந்திருந்தான் முகிலன்.

அவன் அருகில் வந்து அமர்ந்து அவன் தோள் அழுத்தினான் ஷ்யாம். ‘சார் ப்ளீஸ் கொஞ்சம் கூல் ஆகுங்க’

‘நானா அடிக்க வேண்டாம் அடிக்க வேண்டாம்னு பார்த்திட்டே இருக்கேன். திரும்ப திரும்ப உரசுறாரே ஷ்யாம்’ என்றான் கன்னங்கள் கோபத்தில் இறுக

‘சரி சரி சார்... நாம அடுத்து என்ன செய்ய போறோம் அதை முடிவு பண்ணுங்க’

‘ம்? திரும்பி அவன் முகம் பார்த்தான் முகிலன்

‘நாம அடுத்து என்ன செய்ய போறோம் சார்?’

‘ஜெயிக்கபோறோம்’ என்றான் உறுதியான குரலில்.
 




Vathsala Raghavan

மண்டலாதிபதி
Joined
Jan 17, 2018
Messages
239
Reaction score
3,372
அது தெரியும் சார். ஆனா எப்படி?’

‘யோசிப்போம் ஷ்யாம்’ என்றான் ஒரு ஆழ்ந்த சுவாசத்துடன். அவன் கோபம் கொஞ்சம் மட்டுப்பட்டிருந்தது

‘சார் நான் ஒரு ஐடியா சொல்லவா சார்?’

‘சொல்லு’

‘இந்த படத்தோட ப்ரோடியூசர் பரமசிவன். ப்ரோடியூசர் சங்க தலைவர். அவரை வெச்சு விளையாடினா சரியா வரும்னு தோணுது சார்.. அவர் நினைச்சா வெங்கட்ராமனை சினிமாவை விட்டே தடை பண்ண முடியும்’

‘ஆஹான்...’. ‘அதுக்கு என்ன செய்யலாம்ங்கிற?’

‘சார் அவருக்கு அவர் குழந்தைகள்தான் உலகம்’ ஷ்யாம் சொல்லி முடிக்கவில்லை

‘ஷ்...யா....ம்’ வெடித்திருந்தது முகிலனின் குரல். ‘குழந்தைகளை வெச்சு விளையாடலாம்னு சொல்றியா ஷ்யாம்? நீ யார்கிட்டே பேசறேன்னு தெரியுதா? முகிலன்டா நான்!

‘சார் சார் சாரி சார். என்னமோ சட்டுன்னு தோணிடுச்சு அப்படி’ படபடத்தான் ஷ்யாம்

‘நோ...’ முகிலனின் ஆள்காட்டி விரல் இடம் வலமாக அசைந்தது ‘முகிலன்கிட்டே பேசும் போது கவனமா பேசணும். முகிலன் எப்பவும் முகிலனாதான் இருப்பான் அண்டர்ஸ்டாண்ட்?’

‘சார்... சாரி சார்..’ ரொம்பவுமே கீழே இறங்கியது ஷ்யாமின் தொனி. தணிந்தான் முகிலன்.

‘நீ தேவை இல்லாம உன் மூளையை ஓவர் டைம் வேலை பார்க்க விடாதே. நான் பார்த்துக்கறேன் இதெல்லாம். நீ சந்தோஷமா போய் உங்க அப்பா அம்மாவோட ஒரு வாரம் இருந்திட்டு வா.’ என்றபடியே தனது பாக்கெட்டிலிருந்து ஒரு கட்டு ரூபாய் நோட்டுக்களை எடுத்து அவன் கையில் திணித்தான் முகிலன்.

‘சார்... இதெல்லாம் வேண்டாம் சார் ப்ளீஸ்..’

‘அட வெச்சுக்கோ ஷ்யாம்’ அழகான புன்னகையுடன் செல்லமாய் அவன் முதுகில் தட்டினான் முகிலன் ‘நீயும் பைத்தியம் மாதிரி என் பின்னாலேயே சுத்திட்டு இருக்கே. இனிமே என்னை மறந்திட்டு நிம்மதியா இரு’

‘உங்களை மறக்கவெல்லாம் முடியாது சார்’ ஏனோ ஷ்யாமின் குரல் தழுதழுத்தது. பின்னால் நடக்கப்போவதை அவனது உள்மனம் உணர்த்தியதோ என்னவோ?

‘டேய்... டேய்... நோ... செண்டிமெண்ட்ஸ்... என்ஜாய்..’ சொல்லிவிட்டு கைப்பேசியை எடுத்துக்கொண்டு எழுந்தான் முகிலன். ‘நாம கிளம்பலாம் ஷ்யாம்’

அதே நேரத்தில் வருண் தங்கி இருக்கும் அந்த கெஸ்ட் ஹவுசுக்கு வந்து இறங்கினாள் மயூரா. பக்கத்து வீட்டில்தான் முகிலன் இருக்கிறான் என்பதை வருண் மயூரா இருவருமே அறிந்திருக்கவில்லை.

அணிந்திருந்த கிரே நிற ஸ்வெட்டர் அவனது நிறத்துக்கு மிக அழகாக பொருந்தி இருக்க உணவு மேஜையில் அமர்ந்து சப்பாத்தியை சாப்பிட்டுக்கொண்டிருந்தான் வருண். அவன் முன்னால் வந்து நின்று தொண்டையை செருமிக்கொண்டாள் மயூரா. நிமிரவில்லை அவன்.

‘நீ எங்கே இருக்கேன்னு தேடி பிடிச்சு வந்து நிக்கறேன். கொஞ்சம் நிமிர்ந்தாவது பார்க்குறியா நீ?’ என்றபடியே உரிமையுடன் ஒரு தட்டை எடுத்து அதில் இரண்டு சப்பாத்தியை எடுத்து போட்டுக்கொண்டு வருண் எதிரில் அமர்ந்தாள் மயூரா.

நிமிராமல் சாப்பிட்டுக்கொண்டே இருந்தான் வருண்.

‘என்னை சொல்லணும் உன்னை எல்லாம் ஒரு ஃப்ரெண்ட்.னு மதிச்சு பார்க்க வரேன் பாரு என்னை சொல்லணும்’ என்றாள் சப்பாத்தியை விண்டு வாயில் போட்டுக்கொண்டே. சற்று நேரத்துக்கு முன்னால்தான் தனா அழைத்திருந்தான் அவளை.

‘பாஸ் ரெண்டு மூணு நாளா ரொம்ப சிகரெட் பிடிக்கிறார் மேடம். நான் சொன்னா என்னையும் திட்டுறார். கொஞ்சம் வந்து என்னனு பாருங்க. நீங்க சொன்னா கொஞ்சம் கேட்பார்’

‘வரேன். வரேன் கண்டிப்பா வரேன்’ சொன்னாள் அவள் அவசரமாக. ‘இது என்ன புது பழக்கம்? என யோசனையாகத்தான் இருந்தது அவளுக்கு.

அதை பற்றி கேட்கத்தான் அவள் கிளம்பி வந்ததே. அவள் யோசித்து முடிப்பதற்குள் சாப்பிட்டு முடித்து எழுந்திருந்தான் வருண் அவன் கையை கழுவிக்கொண்டு வந்த நேரத்தில் ஒலித்தது இவள் கைப்பேசி.

இடக்கையால் கைப்பையை திறந்து இவள் கைப்பேசியை எடுத்த நேரத்தில் வெளியே வந்து விழுந்தது கைப்பையினுள் இருந்த அந்த புகைப்படம். கீழே விழுந்து அது அங்கே வந்த வருண் காலடியை தொட்டிருந்தது

அதை கவனித்தபடியே அவள் கைப்பேசியில் உரையாடிக்கொண்டிருக்க குனிந்து கையிலெடுத்தான் அந்த புகைப்படத்தை. அதில் மாதவனின் தோள்களை அணைத்துக்கொண்டு கண்ணன் நிற்க மகிழ்ந்து போனவனாய் சிரித்துக்கொண்டு நின்றிருந்தான் மாதவன்,

சென்ற வாரம் ஒரு நாள் முன்னால் அவளது வீட்டில் இருக்கும் பழைய பெட்டியை குடைந்துக்கொண்டிருந்தவளுக்கு கிடைத்தது இந்த புகைப்படம்.

‘யாரும்மா இது?’ அவளுடனே பெட்டியை குடைந்துக்கொண்டிருந்த அம்மாவிடம் கேட்டாள் மயூரா.

அவளுக்கு கண்ணனை தெரியவில்லை. ஆனால் மாதவனை மட்டும் தெரிந்தது. இவன் உங்க அப்பாவோட அக்கா மகன். பேரு மாதவன். எங்க கல்யாணத்துக்கு முன்னாடியே அவன் இறந்துட்டான்னு உங்க அப்பா சொல்வார்.

‘இறந்துட்டாரா?’

‘ஆமாம் எப்பவோ ஊட்டிலே இருக்கும் போது அவனுக்கு ஹார்ட் அட்டாக் வந்திடுச்சாம்’ சொன்னாள் அவள் அம்மா.

அந்த புகைப்படத்தை தனது அறைக்கு எடுத்துக்கொண்டு வந்தாள் மயூரா. மாதவனுக்கு அருகில் இருந்தவன் கண்களும், மூக்கும் அப்படியே முகிலனை நினைவூட்டுவதை அவளால் மறுக்கவே முடியவில்லை.

சட்டென மின்னல் தட்டியது இவன்தான் கண்ணனாக இருப்பானோ?

‘அவரோட ஃப்ரெண்ட் பக்கத்து வீட்டிலே இருந்தார்னு சொல்வாங்க எங்க அம்மா. இந்த புக்கெல்லாம் அவருக்கு ஒரு வேளை இவர் கொடுத்திருக்கலாம்’ அன்று பாரதியார் புத்தகங்கள் வாங்கிக்கொள்ளும் போது முகிலன் சொன்னானே அந்த நண்பன் மாதவன்தானோ? யோசித்தபடியே அந்த புகைப்படத்தை பார்த்துக்கொண்டிருந்தாள் மீரா.

அன்று இப்போது முகிலன் இருக்கும் கண்ணனின் அந்த பைக்காரா விருந்தினர் மாளிகையில்

‘ஹேய்,.. ரஸ்னா... இங்கே ஓடி வா அன்று ஊட்டியில் அமுதன் படப்பிடிப்பை பார்க்க போகும் முன் அன்று மதியம் மீராவை அழைத்தான் கண்ணன்.

அவள் அப்போதுதான் அவனுடைய காமெராவை வைத்து முதல் முறையாக படம் எடுக்க முயன்றுக் கொண்டிருந்தாள்.

‘எங்க ரெண்டு பேரையும் இங்கே நிக்க வெச்சு ஒரு போட்டோ எடேன் ரஸ்னா இது பல வருஷம் எங்க ஃப்ரெண்ட்.ஷிப்க்கு சாட்சியா இருக்கணும்.’ கண்ணன் சொல்ல அவனருகில் வந்தாள் மீரா.

‘இவன் எப்பவாவது என்னை மறந்திட்டானு வை அப்போ என்னை ஞாபக படுத்த இந்த போட்டோ தான் உபயோகமா இருக்கணும்’

‘யாரு மாதவ் உங்களை மறக்குறதா? இன்னும் ரெண்டு ஜென்மம் ஆனாலும் மறக்க மாட்டான்’ மீரா அவசரமாக சொல்ல

‘இவன் இருக்கானே இவன்’ என மாதவனின் முதுகில் செல்லமாக அடித்தான் கண்ணன் எங்க அண்ணன் மேலே இருக்குற பைத்தியத்திலே என்னை கண்டிப்பா ஒரு நாள் மறத்திட்டு போயிடுவான். அப்படி இருக்கும் போது இந்த போட்டோவை எடுத்து இவன் காலடியிலே போடு. அப்போவாவது இவனுக்கு என்னை ஞாபகம் வருதான்னு பார்ப்போம் என்றான் கண்ணன்.

சிரித்துக்கொண்டே அவர்கள் இருவரையும் நிற்க வைக்க அழகான பின்னணியை தேடி அங்கே தோட்டத்தில் இருந்த அந்த ஃபௌன்டனின் நடுவில் இருந்த அந்த குழலூதும் கண்ணன் சிலையின் பின்னணியில் இருவரையும் நிற்க வைத்து அழகாய் எடுத்தாள் இந்த புகைப்படத்தை. மீரா எடுத்த முதல் புகைப்படம் இதுதான்.

ஆனால் இது எதுவும் அறியாமல் அந்த புகைப்படத்தை பார்த்துக்கொண்டிருந்தாள் மயூரா. இதை முகிலனிடம் காட்ட வேண்டுமென்று தொன்றியது அவளுக்கு. அதனாலேயே இதை கைப்பையினுள் அவள் வைத்திருந்ததே.

இன்று அது அவளே எதிர் பாராமால் வருண் காலடியில் சென்று விழுந்திருந்தது. இத்தனை நேரம் வருண் முகத்தில் ஊறிக்கிடந்த பேரழுத்தம் சட்டென விலகி எங்கேயோ ஓடி இருந்தது. அவ கைப்பேசியில் பேசி முடித்த மறுநொடி

‘இது யாரு போட்டோ மயூரா?’ என்றான் மெதுவாக. கடந்த ஒரு வாரத்தில் அவன் இத்தனை நிதானமாக கேள்வி கேட்டது இதுவே முதல் முறை.

‘நீ யாரா இருக்கும்னு நினைக்கிறே?’ என்றாள் இன்னொரு விள்ளல் சப்பாத்தியை வாயில் போட்டுக்கொண்டே.

‘தெரியலை. ஆனா வலது பக்கம் இருக்குறவரோட முகம் எங்கேயோ பார்த்த மாதிரியே இருக்கு’ என்று கண்ணன் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தவன் திடீரென நிமிர்ந்து கேட்டான்

‘இவரை பார்த்தால் கொஞ்சம் கொஞ்சம் முகிலனை பார்த்தா மாதிரி இருக்கில்ல? அவன் கேட்க சாப்பிட்டு மடித்து புன்னகையுடன் எழுந்தாள் மயூரா. கை கழுவிக்கொண்டு அவனருகே வந்தவள்

‘எஸ்’ என்றாள் ‘இது முகிலனோட சித்தப்பா. கண்ணன்’

‘க...ண்....ணன் நல்ல பேரு’ சிலாகித்துக்கொண்டான் வருண்.

‘கூட இருக்கிறவர் பேரு மாதவனாம். அவரோட க்ளோஸ் ஃப்ரெண்டாம்.’

‘ஓ.....’ என்றவன் அந்த புகைப்படத்துடன் டைனிங் டேபிளின் நாற்காலியிலேயே அமர்ந்துவிட்டான். புகைப்படத்தில் இருந்த இருவரையும் மாற்றி மாற்றி பார்த்துக்கொண்டிருந்தன அவன் விழிகள்.

‘ஆக்சுவலி நான் இதை முகிலனுக்கு காட்டலாம்னு கொண்டு வந்தேன். அவர் இதை பார்த்தா ரொம்ப சந்தோஷப்படுவார்’ சொன்னாள் அவன் அருகில் இருந்த மயூரா

‘இல்ல இந்த போட்டோ என்கிட்டே இருக்கட்டும்’ அந்த போட்டோவை விட்டு விழியகற்றாமல் சொன்னான் வருண்

‘சரி அப்போ நான் அதை ஒரு போட்டோ எடுத்துக்கறேன் முகிலனுக்கு காமிக்க’ சொல்லியபடியே அதை வாங்கி அதை தனது கைப்பேசியில் பதித்துக்கொண்டாள் மயூரா.

‘ஆமாம் இந்த மாதவன் இப்போ எங்கே’ இது வருணின் அடுத்த கேள்வி

‘அவர் எங்க அப்பாவோட சொந்த அக்கா பையன். அவர் இப்போ உயிரோட இல்லையாம்

‘ஓ.. அப்படியா? அப்போ கண்ணன்?’

‘அவர் பத்தி சரியா தெரியலை.’ மயூரா சொல்ல அன்று அமுதன் தூக்கத்தில் புலம்பும் போது இந்த பெயர்களை சொன்னது நினைவுக்கு வந்தது. அவர் அந்த மாதவனுடன் அவனை தொடர்புப்படுத்தி பேசியதும் நினைவில் ஆடியது.

‘தனக்கும் இந்த மாதவனுக்கும் என்னதான் தொடர்பு?’ உள்ளுக்குள் உழன்றது கேள்வி.

‘ஆமா இந்த போட்டோ எடுத்தது யாரு நீயா? தன்னையும் அறியாமல் கேட்டான் வருண்.

‘ஹேய்.. நீ என்ன லூசு மாதிரி பேசறே? அந்த மாதவன் நான் பிறக்குறதுக்கு முன்னாலேயே எங்க அம்மா அப்பா கல்யாணத்துக்கு முன்னாலேயே இறந்துட்டார்’

‘ஓ... அப்படியா? எனக்கு ஏனோ நீதான் எடுத்திருப்பியோன்னு சட்டுன்னு தோணிச்சு’ என்றான் இன்னமும் புகைப்படத்தை விட்டு நிமிராமல் .

‘நீ சரின்னு சொல்லு நான் வேணும்னா உன்னையும் முகிலனையும் வெச்சு ஒரு படம் எடுக்கறேன்’ அவள் சட்டென சொல்ல அதற்கு அவனிடமிருந்து எந்த பதிலும் இல்லை. சில நொடிகள் அப்படியே அமர்ந்திருந்தவன் இருக்கையை விட்டு சட்டென எழுந்தான்

‘குட் நைட் மயூரா’ நகரப்போனவனை அவன் முன்னால் நின்று தடுத்து நிறுத்தினாள்

‘நான் உன்கிட்டே பேச வந்த விஷயமே வேறே’

‘என்ன சொல்லு?’

‘நீ சிகரெட் பிடிக்கறியாமே? என்ன வருண் புது பழக்கம் எல்லாம்?’

‘உனக்கு யார் சொன்னாங்க? அந்த தனா பயலா? அவனை...’

‘சும்மா அவனை திட்டாதே வருண். இல்லைன்னா எனக்கு தெரியாம போயிடுமா? எதுக்கு இதெல்லாம்?

‘என் நிம்மதிக்காக.

‘வருண் இங்கே பாரு அனுபமா பெரிய இழப்புத்தான். ஆனா அதுக்காக உன்னை நீ அழிச்சுக்கணுமா?

’என்னை அது வாழவைக்குதோ அழிக்குதோ எனக்கு தெரியலை மயூரா ஆனா யாருமில்லாத எனக்கு அது இப்போ பெரிய துணையா இருக்கு. நான் ரொம்ப தளர்ந்து போற நேரத்திலே எல்லாம் என்னை தூக்கி நிறுத்துது’

‘முட்டாள்த்தனமா இருக்கு. உனக்கு என்ன யாரும் இல்லைங்குற? நான்தான் இருக்கேன்ல?’ கேட்டாள் அவள்.

‘அப்படியா? நீ இருக்கியா? வெரி குட்.’ என்றபடியே பேன்ட் பாக்கெட்டுக்குள் கை விட்டுக்கொண்டு ஆழ் மூச்செடுத்துக்கொண்டு அவளை ஆராயும் பார்வை பார்த்தபடி ‘நீ அப்படி எப்பவும் இருக்கிறதானா நான் சிகரெட்டை விட்டுடறேன்.’ என்றான் அவன். ‘அப்புறம் பேச்சு மாறக்கூடாது. மாற மாட்டேதானே?

சட்டென அவள் உடல் ஒரு முறை குலுங்கி நின்றது.
 




Vathsala Raghavan

மண்டலாதிபதி
Joined
Jan 17, 2018
Messages
239
Reaction score
3,372
ஒரு மணி நேரம் கடந்திருக்க தான் தங்கி இருக்கும் அந்த ஹோட்டல் அறைக்கு வந்து படுக்கையில் சாய்ந்தாள் மயூரா வருணின் வார்த்தைகளுக்கான அர்த்தம் அவளுக்கு இன்னமும் பிடிபடவில்லை. அதற்குள் வீடு வந்து சேர்ந்திருந்தான் முகிலன்.

மயூரா கொடுத்த அந்த மூன்று பாரதியார் புத்தகங்களை புரட்டிக்கொண்டிருந்தான் முகிலன். தீராத விளையாட்டு பிள்ளை பாடலின் பக்கத்துக்கு வந்தான் அவன். பக்கம் முழுவதும் பாடல் போக மீதமிருந்த இடங்களில் கையால் எழுதப்பட்டிருந்தன அந்த வரிகள் ‘நீ என் கண்ணன். நான் உன் மீரா’. அந்த பெயர்கள் அவனை இன்று மாலை படப்பிடிப்பில் நடந்த நிகழ்வுகளுக்கு தள்ளிக்கொண்டு சென்றன.

‘ஏன் நான் அப்படி கலங்கிப்போனேன்?’ இன்னமும் அந்த கேள்விக்கான பதில் கிடைக்கவில்லை அவனுக்கு.

‘யாராம் அந்த மீரா? என் சித்தப்பாவின் காதலியாக இருக்குமா? ஏன் அந்த வீட்டிலே ஃப்ரெண்ட் மட்டும்தான் இருந்தாராமா? வேறே பொண்ணு யாரும் இருந்தா அவளுக்கு கூட கொடுத்திருக்கலாம் இல்லையா? அன்று மயூரா கேட்டாளே ஒரு வேளை அந்த பெண் மீராவாகத்தான் இருக்குமா?

அவன் தங்கி இருந்த அந்த அறையிலேயே இருந்தது அந்த புத்தக அலமாரி. அது கண்ணனின் பழைய புத்தகங்கள் இருக்கும் அலமாரி.

மனம் நிறைய கேள்விகளுடன் ஏதோ ஒரு உந்துதலில் அந்த அலமாரிக்கு வந்தான் முகிலன், முதலில் கண்ணில் பட்டது அந்த கேமரா. அதை ரசிப்பான பார்வையுடன் கையில் எடுத்து பார்த்தான் முகிலன்.

‘பழைய காலத்து கேமரா போலும். இதுவும் சித்தப்பாவினுடயதாக இருக்குமோ?’ அதை மெல்ல வருடின அவன் விரல்கள்.

அங்கே தூசி இல்லாமல் துடைத்து அடுக்கி வைக்கபட்டிருந்தன புத்தககங்கள். காமெராவை வைத்துவிட்டு சில புத்தகங்களை எடுத்து ஆராய்ந்துக்கொண்டிருந்த போது அந்த அதிலிருந்து கீழே விழுந்தது அந்த பழைய கவர் நிறம் மங்கி கிடந்தது அது

அதனுள் இருந்தன சில புகைப்படங்கள். அவை கண்ணன் மீராவை எடுத்த புகைப்படங்கள் அதை எடுத்து பார்த்தவனின் முகம் வியப்பில் விரிந்து போனது. மயூராவை பாவாடை தாவணியில் பார்ப்பதை போன்றதொரு உணர்வு அந்த புகைப்படங்களை பார்க்கும் போது.

‘யார் இந்த பெண் இவள்தான் மீராவாக இருக்குமோ?’ தனக்குதானே கேட்டுக்கொண்டான் முகிலன். ‘அப்படியே மீராவை உரித்து வைத்திருக்கிறாளே மயூரா?

இவளுக்கு அவள் சொந்தமாக இருக்க வேண்டும். ஒரு வேளை வெங்கட்ராமனின் அண்ணன் ஒருவர் அந்த வீட்டில் இருந்ததாக சொல்வார்களே. அவர் மகளாக இருக்குமோ? அவன் மனம் மடமடவென கணக்குகளை போட்டுக்கொண்டிருந்தது.

அதில் அவன் புருவங்களை உயர்த்திய இன்னொரு விஷயம் ஒவ்வொரு புகைப்படத்தின் பின்னாலும் எழுதப்பட்டிருந்த வரி ‘ஐ லவ் யூ ரஸ்னா நான் உன் கண்ணன்’. சின்னதாய் ஒரு புன்னகை கூட எழுந்தது அவன் இதழ்களில்.

‘இவை எல்லாம் கண்ணன் எடுத்த புகைப்படங்களாக இருக்குமோ? அவன் அவளை ரஸ்னா என்றுதான் அழைத்து பழக்கமோ?

இங்கே யோசனையுடனே கைப்பேசியை உருட்டிக்கொண்டிருந்தவளுக்கு கண்ணில் பட்டது கண்ணனும் மாதவனும் சேர்ந்திருக்கும் புகைப்படம். அடுத்த நொடி அது வாட்ஸ் ஆப்பில் முகிலனின் கைப்பேசியை அடைந்திருந்தது. கண்ணன் அண்ட் மாதவன் என்று புகைப்படத்தின் கீழே குறிப்பிட்டிருந்தாள் அவள்.

அதை எடுத்து பார்த்தவனின் இதழ்களில் பெரிதாக ஒரு புன்னகை கோடு. ‘கண்ணன் சித்தப்பாவை அவன் பல முறை புகைப்படங்களில் பார்த்திருக்கிறான். மாதவனை பார்ப்பது இதுவே முதல் முறை. அந்த புகைப்படம் இந்த வீட்டில்தான் எடுக்கபட்டிருக்கிறது என்று அந்த கண்ணன் ஃபௌன்டன். உறுதி செய்தது. இவர்கள் பற்றிய யோசனைகளுடனே அன்றைய இரவு கழிந்தது முகிலனுக்கு..

மறுநாள் காலை

அன்றைய படப்பிடிப்பு ஏரிக்கரையில்! ஊரை விட்டு சற்றே தள்ளி இருக்கும் அந்த ஏரிக்கரையில்! மீராவை கண்ணன் காப்பற்றிய அதே ஏரிக்கரையில். அதிக ஆள் நடமாட்டம் இல்லாத காட்டுப்பகுதி அது. படப்பிடிப்புகள் மட்டும் அடிக்கடி நடக்கும் அங்கே. அழகான கோணங்களை தேடி கமெராவுடன் விளையாடிக்கொண்டிருந்தவள் இவனை பார்த்ததும் இவன் அருகில் ஓடி வந்தாள்

‘ஹாய் முகிலன்...’ மயூரா முகம் நிறைய மலர்ச்சியுடன் வரவேற்றாள் அவனை.

கொஞ்ச நேரம் இமைக்க மறந்துதான் போனான் முகிலன். அந்த புகைப்படங்களில் தாவணியுடன் கோலம் போட்டுக்கொண்டிருந்த பெண் இன்று ஜீன்ஸ் டி ஷர்ட் தலையில் மாட்டப்பட்ட குளிர் கண்ணாடி சகிதம் அவன் முன்னால் வந்து சிரித்தது போன்றதொரு ஒரு உணர்வு.

அவளை பார்த்த மாத்திரத்தில் சில நொடிகள் அவன் விழிகளில் ஓடிய வியப்பையும் மகிழ்ச்சியையும் மறைத்துக்கொண்டிருந்தது அவனது கருப்பு கண்ணாடி. அதையும் தாண்டி எப்படி அவன் மனதை படித்தாளோ அவள்?

‘சார் ரொம்ப நல்ல மூட்லே இருக்கீங்க போல’ கேட்டும் விட்டிருந்தாள் அவள். சந்தோஷமாக படபடத்தன அவள் விழிகளும் உதடுகளும்.

அந்த புகைப்படங்களை பார்த்த பிறகு அவளை இன்னமும் அதிகமாக பிடிப்பது போலவே இருந்தது முகிலனுக்கு. ஒரு முறை அவளை ‘மீரா’ வென அல்லது ‘ரஸ்னா’ வென ஏனோ அழைத்து பார்த்துவிட வேண்டும் என்று கூட தோன்றியது.

ஆனாலும் அவனுக்குள் ஓடிக்கொண்டிருக்கும் இவை எல்லாவற்றையும் மறைத்துக்கொண்டிருந்தன அவனது கருப்பு கண்ணாடியும் இறுக்கமான பாவனையை பிடித்து இழுத்து வைத்திருக்கும் அவன் முகமும்.

‘இல்ல மயூரா வெங்கட்ராமன். நான் நல்ல மூட்லே இன்னைக்கு இல்ல’ என்றான் குரலிலும் அதே இறுக்கத்தை பொருத்திக்கொண்டு. ‘உங்கப்பாவை எப்படி அழிக்கறது அடி மனசிலே திட்டம் போட்டுட்டு இருக்கேன். சொல்ல முடியாது அப்படியே அவரை ஏரிலே தள்ளி கொன்னாலும் கொன்னுடுவேன்’

வேறில்லை! தன்னிடமிருந்து அவளை தள்ளி நிறுத்தும் ஆயுதம் வேறில்லை அவனிடத்தில். அவள் முகம் மாறும். சட்டென அவன் மீது வெடிப்பாள் என்றெல்லாம் அவன் எதிர் பார்த்திருக்க

‘அது உங்க பாடு எங்க அப்பா பாடு’ படு நிதானமாக. சொன்னவள் ‘அடுத்த சீன் என்னன்னா..’ வெகு இயல்பாக விளக்க ஆரம்பித்தாள்.

எல்லாம் விளக்கி முடித்துவிட்டு இரண்டடி அவனை விட்டு நகர்ந்தவள் மறுபடியும் அவனருகில் வந்தாள்

‘நான் சொன்ன வார்த்தைகளை எப்பவுமே திருப்பி வாங்கிக்குறது இல்லை. ‘என் முகிலனை எனக்கு தெரியும்’ சொல்லிவிட்டு அங்கிருந்து அவள் விருட்டென நகர்ந்து சென்றுவிட உள்ளுக்குள் சற்றே திகைத்துதான் போனான் அவன்.

அதே நேரத்தில்

அப்போதுதான் கண்விழித்து இருந்தான் வருண். அவன் நடிக்க போகும் அந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் இரண்டு குழந்தைகளுடன் வந்து இறங்கி இருந்தார் அந்த வீட்டுக்கு.

குளித்து காலை உணவை முடித்துக்கொண்டு அவன் பால்கனிக்கு வந்த நேரம் வெங்கட்ராமனின் கார் சத்தம் அவனது கவனத்தை கலைத்தது. அந்த தயாரிப்பாளரை பார்க்க வந்திருந்தார் அவர்.

‘இந்த தடவையாவது படத்தை முழுசா எடுத்து முடிச்சிடுவீங்களா வெங்கட்ராமன்?’ சற்றே சூடாகத்தான் கேட்டுக்கொண்டிருந்தார் அவர். ‘உங்க சவாலுக்கும் விளையாட்டுக்கும் நான்தான் கிடைச்சேனா?

அவர் தயாரிப்பாளர் பரமசிவன். சென்ற வாரம்தான் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்க பட்டிருக்கிறார் அவர். அந்த வகையில் திரைத்துறையில் அவருக்கு செல்வாக்கு அதிகம்தான்.

‘இல்ல சார் அந்த முகிலனாலேதான் இத்தனை பிரச்னையும்...’ என்றார் வெங்கட்ராமன் .

பரமசிவனுக்கும் முகிலன் கோபத்தை சந்தித்த அனுபவங்கள் உண்டுதான். அவன் அவமானப்பட்டால் ஒரு ரகசிய சந்தோஷம் அவருக்கும் வரும் என்பதும் உணமைதான். ஆனால் அதற்கும் மேலாக அவர் பணம் அவருக்கு மிகவும் முக்கியம்.

‘முகிலனோ வருணோ எனக்கு அதெல்லாம் தெரியாது. பணம் போடறவன் நான். எனக்கு படம் குறிப்பிட்ட நேரத்துக்குள்ள முடியணும். நீங்கதானே முகிலன் இந்த படத்திலே வேணும்னு பிடிவாதம் படிச்சு புக் பண்ணீங்க. நான் அவன் வேண்டாம்னு எவ்வளவு சொன்னேன்’ அவன் கோபக்காரன்ன்னு எல்லாருக்கும் தெரியுமே. அவன்கிட்டே வீண் பிரச்சனை பண்ணி இப்போ படம் அப்படியே நிக்குது. அடுத்து வருண்கிட்டே எதுவும் பிரச்சனை வெச்சுக்காம படத்தை முடிங்க’ என்றார் அவர்.

படு கறாராக பேசியவரின் மீது கோபம் பொங்கியது வெங்கட்ராமனுக்கு. அதே நேரத்தில் இந்த நிலையில் எதையும் அவரிடம் வெளிக்காட்டிக்கொள்ளும் சூழ்நிலை மட்டும் இல்லை என்பதும் அவருக்கு தெளிவாக புரிந்திருந்தது.

‘நீங்க கவலை படாதீங்க சார் வருண் நம்ம ஆளு. அதுவும் இப்போ இருக்குற சூழ்நிலையிலே முகிலனுக்கு அவன்தான் முதல் எதிரி. நாம சொல்லலேன்னா கூட அவனே முகிலனை அழிக்கத்தான் போறான். அதனாலே நம்ம படம் நல்லபடியா முடியும். கடைசியில் முகிலன் என் காலிலே வந்து விழுவான்.’ என்றார் வெங்கட்ராமன்.

இவர்கள் இருவரும் கீழே ஹாலில் நின்றுக்கொண்டு பேசிக்கொண்டிருக்க இவர்களுக்கு நேர் மேலே மாடியில் நின்றுக்கொண்டிருந்த வருணின் காதில் எல்லாம் தெளிவாக விழுந்துக்கொண்டிருந்தன.

‘விழட்டும் விழட்டும். அவன் உங்க காலிலே வந்து விழட்டும் நானும் சந்தோஷமா கை தட்டுறேன். ஆனா அதுக்கு முன்னாடி என் படத்தை முடிச்சு கொடுங்க. அதுதான் முக்கியம்’ குரலில் விரவியிருந்த சூடு மாறாமலே சொன்னார் தயாரிப்ப்பாளர்.

அதே நேரத்தில் அங்கே ஓடி வந்து அந்த தயாரிப்பாளரின் கால்களை கட்டிக்கொண்டன ஒரு ஆணும் ஒரு பெண்ணுமான அவரது இரண்டு குழந்தைகளும்.

ஒன்றுக்கு எட்டு வயது இருக்கும். இன்னொன்றுக்கு பத்து. அப்படியே அவர் முகத்தில் இருந்த கோபம் எல்லாம் காற்றில் பறந்து போயிருந்தது. அவரது குழந்தைகள்தான் அவரது உலகமென வெங்கட்ராமனுக்கு நன்றாக புரிந்திருந்தது. இரண்டு குழந்தைகளுக்கும் ஆசை தீர முத்தம் கொடுத்து விளையாட அனுப்பிவிட்டு நிமிர்ந்த தந்தையை பார்த்து

‘சாருக்கு பசங்கதான் உலகம் போல?’ கேட்டும் விட்டார் வெங்கட்ராமன்.

‘கண்டிப்பா வெங்கட்ராமன். அவங்க இல்லாம எனக்கு இந்த வாழ்க்கையிலே வேறே எதுவுமே இல்லை’ என்றார் அவர் நெகிழ்ச்சியாக. குழந்தைகள் என்ன மாயம் செய்தனவோ அவர் கோபம் போன இடம் தெரியவில்லை, சரி வாங்க சாப்பிடலாம்’ வெங்கட்ராமன் தோள்களை அணைத்துக்கொண்டு நடந்தார் அந்த தயாரிப்பாளர்.

மேலிருந்து எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்தான் வருண். மாடியின் கைப்பிடி சுவற்றை இறுக பற்றிக்கொண்டன அவன் கரங்கள். விழிகளில் தீவிரம்.

‘முகிலனுக்கு அவன்தான் முதல் எதிரி. நாம சொல்லலேன்னா கூட அவனே முகிலனை அழிக்கத்தான் போறான்’ வெங்கட்ராமனின் வார்த்தைகள் அவன் செவிகளில் மறுபடி மறுபடி ரீங்காரம்.

தொடரும்......
 




Rani

மண்டலாதிபதி
Joined
Jan 17, 2018
Messages
234
Reaction score
661
மாதவனின் காலில் விழ வேண்டிய படம்
வருணின், காலடியில் .....
முகிலன் மயூரா, மீராவைப் பற்றி சரியாக யூகித்து விட்டான்..

போன எபியில்...மீரா...
இந்த எபியில். மாதவனின் முடிவு...
அதுவும் இதே ஊட்டியில்...

ஷியாமின் ,உங்களை மறக்க முடியுமா...???
வருணின், நீ எப்பொழுதும், என்கூடவே இருப்பாயா...?
ஊட்டியில், தான் கிளைமேக்ஸா.....?

Past and present...,மாறி மாறி வந்து
கண்ணை கட்டுது....

நன்றி வத்சலா....
 




Bharathi

இணை அமைச்சர்
Joined
Mar 23, 2018
Messages
667
Reaction score
927
Location
Harlow
Muhilanuku ethuvum agida koodathu,kandipa varun avana thothu poga Vida matan.kannan,mathavan,meeraku enna nadanthuchu?ore suspense,but story sweet a poguthu.
 




sivamalar

மண்டலாதிபதி
Joined
Feb 1, 2018
Messages
105
Reaction score
252
Location
chennai
நிகழ்வும் கடந்ததும் பின்னி பிணைந்து முகிலனுக்கும் வருணுக்கும் வரும் உணர்வு குவியல் மயூராவை தாக்கவில்லை
 




Devi

மண்டலாதிபதி
Joined
Jan 17, 2018
Messages
323
Reaction score
1,366
Mukilan eppovum Mukilanathaan iruppaan.. awe some.. :love::love: enna nadakka pogudhu.. ? Nirya kelvigal.. padhil therindhu kolla aaval
 




sridevi

அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
4,750
Reaction score
7,120
Location
madurai
Superb epi sis mukilanuku mayura Mela viruppum irukku varunukuma sis
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top