• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

PRIYANGALUDAN MUGILAN 3

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Vathsala Raghavan

மண்டலாதிபதி
Joined
Jan 17, 2018
Messages
239
Reaction score
3,372
ப்ரியங்களுடன் முகிலன் 03

வருண் அப்படி படீரென அழுத்தம் திருத்தமாய் கேட்பான் என கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லைதான் வெங்கட்ராமன்.

‘அது இல்லை சார் வந்து..’ அவர் இழுக்க

‘அதுதான் நான் இல்லைன்னு சொல்லிட்டேனே. உள்ளதை சொல்லுங்க’ சொல்லிக்கொண்டே அவர் சொல்லும் அடுத்த கதைக்கு தயாராக இருப்பவன் போல் கைகளை மேலே தூக்கி சோம்பல் முறித்துவிட்டு கைகளை மார்புக்கு குறுக்கே கட்டிக்கொண்டு சாய்ந்தான் வருண்.

‘சரி சார் நான் நடந்ததையே சொல்றேன். உங்ககிட்டே சொன்னா நீங்க எப்படி எடுத்துப்பீங்கன்னு தெரியலை அதான் கொஞ்சம் வேறே மாதிரி சொன்னேன். அந்த படத்திலே முகிலனுக்கு வில்லன் ரோல்தான். அது பிடிச்சிருக்குன்னுதான் ஒத்துகிட்டார். ஆனா ஹீரோ ரோலுக்கு நான் தெரியாம வருண்னு பேர் வெச்சிட்டேன். அது அவருக்கு பிடிக்கலை. பேரை மாத்த சொல்லியிருந்தா கூட நான் செய்திருப்பேன் ஆனா சட்டுன்னு நாம முடிச்சுக்கலாம்ன்னு சொல்லிட்டார்.’

அவர் சொல்ல சொல்ல யோசனையில் முடிச்சிட்ட அவனது புருவங்கள் சில நொடிகளில் சீராகின.

‘வருண்ங்கிற பேர் மேலேயே அவருக்கு ஏன் அவ்வளவு கோபம். அதுதான் எனக்கும் பிடிக்கலை. அதனாலேதான் உங்களையே வெச்சே அந்த படத்தை முடிச்சிடலாம்னு ஒரு வேகம் எனக்கு.’ அவர் மெல்ல தூண்டில் போட கண்களை மூடி கைகளை தேய்த்து விட்டுக்கொண்டான் வருண்.

அவன் முகத்தில் இருந்த அந்த பாவத்திலிருந்து எதையுமே கண்டுப்பிடிக்க முடியவில்லை அவரால். மெல்ல கண்களை திறந்தான் வருண்.

‘என்னை பார்த்தா உங்களுக்கு எப்படி தெரியுது?’ சற்றே முன்னால் சாய்ந்து இதழோரம் மறுபடியும் வந்த புன்னகையுடன் அவர் கண்களை ஊடுருவியபடியே கேட்டான் அவன்.

‘சார்...’ அவர் சற்றே திகைக்க

‘நீங்க இதுவரைக்கும் நடந்த உண்மைகளை முழுசா சொல்லலை, நீங்க சொல்லலைனாலும் என்ன நடந்ததுங்கிறதை நான் தெரிஞ்சுக்க எனக்கு ரொம்ப நேரம் ஆகாதுன்னு உங்களுக்கும் தெரியும் இல்லையா மிஸ்டர் வெங்கட்ராமன்’? புருவம் உயர்த்தி சிரித்தான் வருண்.. பதில் பேசாமல் சட்டென அவன் பார்வையை .தவிர்த்தார் அவர்.

சட்டென அவன் முகம் மாற ‘வெரி சாரி சார். எனக்கென்னமோ என்னை வெச்சு நீங்க முகிலனோட விளையாடற மாதிரி தோணுது. எனக்கும் முகிலனுக்கு நடுவில் ஆயிரம் இருக்கும் தட்ஸ் நன் ஆஃப் யுவர் பிசினஸ் மிஸ்டர் டைரக்டர்.’ சூடான குரலில் நிதானமாக சொன்னான் வருண்.

விருட்டென நிமிர்ந்தார் அவர். அவன் சொன்ன விதத்தில் அப்படியே முகிலனை ஒரு முறை மறுபடியும் பார்த்தது போலேதான் இருந்தது அவருக்கு.

அவனுக்கு என்ன பதில் சொல்வது என அவன் யோசித்து முடிப்பதற்குள்

‘எனக்கு இந்த படம் பண்றதிலே இஷ்டம் இல்லை’ என்றான் வருண் தெள்ளத்தெளிவாக.

சினிமா துறையை பொறுத்தவரை இருவரும் பரம எதிரிகளாக இருந்தபோதிலும் இருவருக்கும் நடுவில் ஏதோ ஒரு மெல்லிய இணைப்பு நூல் இருப்பது போலவே தோன்றியது அவருக்கு.

நேற்று வரை இதை பற்றி எல்லாம் அவர் கவலைப்பட்டதில்லை. ஆனால் இன்று? எது எப்படிப்போனாலும் முகலனிடத்தில் மட்டும் தோற்றுப்போவதாக இல்லை அவர்.

சின்னதாய் ஏதோ ஒரு நம்பிக்கை அவருக்குள்ளே . இருவரையும் இணைக்கும் அந்த ஒரு மெல்லிய நூலை நாசூக்காய் வெட்டி விடலாம் என்று ஒரு நம்பிக்கை.

வருண் பேசிய விதத்தில் சட்டென உள்ளுக்குள் பரவி ஓடிய ஏமாற்றத்தை முகத்தில் காட்டிக்கொள்ளாமல் புன்னகைத்தார் வெங்கட்ராமன்.

‘நல்ல ரோல் சார். டைம் எடுத்துக்கோங்க. நான் வெயிட் பண்றேன். நீங்களே கொஞ்ச நாளிலே எனக்கு இது விஷயமா போன் பண்ணுவீங்க. எனக்கு நம்பிக்கை இருக்கு.’ என்றார் அவர்.

மெல்ல கோபம் உள்ளே அடங்க இதழோரம் தேங்கிய சின்ன சிரிப்புடன் மறுப்பாக அசைந்தது வருணின் தலை.

‘நோ! அது மட்டும் நடக்காது சார்.. நீங்க தேவை இல்லாமல் நம்பிக்கை வளர்த்துக்காதீங்க. வருண் ஒரு தடவை நோ சொல்லிட்டா அது எப்பவுமே நோ தான்’

‘சரி அதையும் பார்க்கலாம்.’ என்றவர் ‘இன்னும் பத்து நாளிலே உங்களுக்கு கல்யாணம் இல்லையா? நான்தான் அவசரப்பட்டு தப்பான டைம்லே வந்திட்டேன். என்றார் அவர் மெல்ல பேச்சை திசை திருப்பியபடியே

‘கல்யாணத்துக்கு உங்களுக்கு ஒரு மாசமாவது ப்ரேக் வேணுமில்லையா? முதல்லே அது நல்லபடியா முடியட்டும். அதுக்கு அப்புறம் இதை எல்லாம் யோசிப்போம். ஏன் சார் உங்க கல்யாணத்துக்கு எங்களுக்கெல்லாம் பத்திரிக்கை கிடையாதா சார்?’ அவர் குரல் நட்பு பாவத்தை தொட்டிருந்தது.

அவரது வார்த்தை ஜாலங்கள் புரியாமல் இருக்கும் அளவுக்கு வருண் ஒன்றும் பைத்தியக்காரன் இல்லைதான். இருப்பினும் அப்போதைக்கு எதையுமே வெளிக்காட்டிக்கொள்ளவில்லை அவன்..

‘எங்க ‘டைரக்டர் ஸார்’க்குத்தான் முதல் பத்திரிகை கொடுக்கணும். நான் இன்னும் அவருக்கு கொடுக்கலை.. அவருக்கு கொடுத்த பிறகுதான் மத்தவங்களுக்கு. கண்டிப்பா உங்களுக்கு இன்விடேஷன் வரும். அவசியம் நீங்க கல்யாணத்துக்கு வரணும்’ என்றான் வருண் புன்னகை சேர்ந்த முகத்துடன்.

அந்த ‘டைரக்டர் ஸார்’ அவரை கொஞ்சம் சுருக்கென குத்தியது. அந்த ‘டைரக்டர் ஸார்’ முகிலனின் தந்தை அல்லவா? அவர் இவனை அறிமுகப்படுத்தியவர் அல்லவா? சடசடவென ஏதேதோ கணக்குகள் வெங்கட்ராமனின் மனதிற்குள்.

‘கண்டிப்பா வருவேன். நான் இல்லாம உங்க கல்யாணம் நடக்காது. சரி சார் அப்போ நான் கிளம்பறேன்’ எழுந்து விட்டார் வெங்கட்ராமன். இவனும் எழுந்து கைகுலுக்கி அவரை வழி அனுப்பி வைத்தான்.

‘முகிலன்கிட்டே இவர் சவால் விட்டிருக்கார் சார். உங்களை வெச்சு இந்த படத்தை முடிச்சிட்டு அவரை காலிலே விழவைக்கிறேன்னு’ வெங்கட்ராமன் நகர்ந்ததும் சொன்னான் தனா. இவர்கள் இருவரும் பேசி முடிப்பதற்குள் விவரங்களை சேகரித்துவிட்டிருந்தான் அவன்.

‘முகிலன் காலிலே விழணுமா? சற்றே திகைத்து திரும்பினான் வருண். ‘இவர் காலிலேயா?’

‘ஆமாம் சார். அப்படித்தான் சவால் விட்டிருக்காங்க ரெண்டு பேரும்’ தனா சொல்ல

‘அப்படியா? கேட்டவனின் குரலில் இருந்தது வியப்பா? கோபமா? அதிர்ச்சியா? மகிழ்ச்சியா? புரியவேயில்லை தனாவுக்கு.

அது ஏனோ நம் கைக்கெட்டும் தூரத்தில் இருக்கும் மனிதர்களின் திறமைகளைவிட நம்மை விட்டு தூரத்தில் இருப்பவர்களின் திறமைகளைத்தான் நம்மால் வியந்து ரசிக்க முடிகிறது.

அங்கே முகிலனின் மானேஜர் ஷ்யாம் வருணின் விசிறி என்றால் இவன் முகிலனின் அபிமானி. அது வருணுக்கும் தெரியும்.

தனாவின் முகத்தை படித்தபடியே கேட்டான் வருண் ‘அப்போ நான் நினைச்சா முகிலனை தோற்கடிக்க முடியும்ங்கிற’

‘அதெல்லாம் உங்களாலே முடியாது’ பட்டென வந்துவிட்டிருந்தன தனாவின் வார்த்தைகள்.

தனா சொன்ன வித்ததில் வருணின் விழிகளும் உதடுகளும் சேர்ந்து சிரித்தன. ‘அப்படியா? பார்த்துடலாமா?’

‘அய்யோ.. வேண்டாம் சார். யாரோ தூண்டி விட்டதுக்காக நீங்க ரெண்டு பேரும் எதுக்கு மோதிக்கணும்’ முகிலன் மீதிருந்த அபிமானத்தில் கொஞ்சம் படபடத்தான் தான் தனா.

‘பச்,..பச்...பச்’ புன்னகையுடன் இடம் வலமாக தலை அசைத்தான் வருண்.

‘எனக்கும் முகிலனுக்கும் நடுவில் ஆயிரம் இருக்கும் மிஸ்டர் தனா. தட்ஸ் நன் ஆஃப் யுவர் பிசினஸ்’ திறந்திருந்த தனாவின் சட்டையின் மேல் பட்டனை மாட்டியபடியே சொல்லிவிட்டு சின்ன கண்சிமிட்டலுடன் அவன் முதுகில் தட்டிவிட்டு செல்லும் வருணையே குழப்பத்துடன் பார்த்திருந்தான் தனா.

மூன்று நாட்கள் கடந்திருந்தன.

முகிலனின் வீட்டுக்கு சென்று அவனது தந்தைக்கு பத்திரிக்கை கொடுத்தாக வேண்டும். எப்போது போகலாம் என யோசித்தபடியே வருண் அமர்ந்திருக்க ஒலித்தது அவனது கைப்பேசி

‘டைரக்டர் சார்’ என ஒளிர்ந்தது அவன் திரை. அவனை பொறுத்தவரை டைரக்டர் என்றால் அவர்தான். \சட்டென எழுந்தேவிட்டான் இருக்கையை விட்டு. அது அனிச்சை செயல்.

அவர் அமுதன்! இயக்குனர் அமுதன்!

முகிலனுக்கு அவர் ஒரு நல்ல தந்தையா? அதற்கான பதில் அவருக்கே தெரிந்ததில்லை. ஆனால் வருணை பொறுத்தவரை அவனுக்கு எல்லாமுமாகவே இருந்திருக்கிறார். இருந்துக்கொண்டும் இருக்கிறார். இந்த திருமணத்தை கூட அவரிடம் அனுமதி பெற்றுத்தான் நடத்திக்கொண்டிருக்கிறான் வருண்.

அழைப்பை ஏற்று ‘எப்படி இருக்கீங்க சார்?’ என்றான் மரியாதை கலந்த குரலில்.

‘நல்லா இருக்கேன்பா. சொல்லு கூப்பிட்டிருந்தியா?’ என்றார் அவர். அவரது குரலில் நிறையவே வாஞ்சை கலந்திருந்தது.

‘ஆமாம் சார் கூப்பிட்டிருந்தேன்.. உங்களுக்கு பத்திரிக்கை கொடுக்க வீட்டுக்கு வரணும். எப்போ வரட்டும் சொல்லுங்க. முதல் பத்திரிக்கை உங்களுக்கு கொடுத்திட்டுத்தான் மத்தவங்களுக்கு’

‘அட முதல் பத்திரிக்கை கோவிலிலே கொண்டு வைப்பா, நீ பத்திரிக்கை கொடுத்தாதான் நான் வருவேனா என்ன?’ என்றார் அவர் சட்டென.

‘நீங்க சொல்றது சரிதான் சார். முதல் பத்திரிக்கை கோவிலிலேதான் வைக்கணும். அதுக்குதான் என் கோவிலுக்குத்தான் வரேன்ங்கிறேன்’ என்றான் அவன் அழுத்தம் திருத்தமாய்.

அவை வெறும் வார்த்தைகள் இல்லைதான். அவர் மீது அவன் வைத்திருக்கும் அபிமானமும், மரியாதையும் ரொம்பவும் அதிகம். அது என்றும் குறையவும் போவதில்லை.

சிரித்தே விட்டார் அமுதன். ‘சரி வாப்பா. முகிலன் பாண்டிச்சேரி வரைக்கும் போயிருக்கான் போலிருக்கு. நீ வா இப்போ’ இருவரையும் ஒரே இடத்தில சேர்த்து மோதிக்கொள்ள வைக்க அவரும் என்றும் விரும்பியதில்லைதான்.

‘இதோ சார் அரை மணி நேரத்திலே வரேன்’ கிளம்பி விட்டிருந்தான் வருண்.

பிரச்னைகளை தவிர்ப்பதற்காகவே இதுவரை முகிலன் வீட்டுக்கு வந்ததில்லைதான் வருண். வீட்டுக்குள் வந்ததும் கூடத்தில் அவனை புன்னகையுடன் வரவேற்றது முகிலனின் ஆளுயர புகைப்படம்.

நின்று விட்டான்! ஏனென்றே புரியாமல் அதை பார்த்துக்கொண்டே இரண்டு நிமிடங்கள் நின்றே விட்டான்தான் வருண். அவனை கலைத்தவன் ஓடி வந்து மனமும் முகமும் மலர அவனை வரவேற்ற ஷ்யாம்.

‘நான் ஷ்யாம். முகிலன் சாரோட மானேஜர்’ அவன் சொல்ல புன்னகைத்து கைகுலுக்கினான் வருண்

‘உங்களை பார்க்கணும் எத்தனை நாள் ஆசை தலைவா எனக்கு. நீங்களே வந்துட்டீங்க. வாங்க தலைவா வாங்க வாங்க ’ மகிழ்ந்து போய் பரபரத்தான் ஷ்யாம்.

‘தலைவனா? ஹேய்.. இது உங்க பாஸுக்கு தெரியுமாயா?’ மலர்ந்து சிரித்தான் வருண்.

‘தெரியுமே நல்லாவே தெரியுமே’ பதிலுக்கு புன்னகைத்தான் ஷ்யாம்.

‘என்கிட்டேயும் ஒருத்தன் இருக்கான். ஜஸ்ட் லைக் யூ. அவன் முகிலனுக்கு ஜால்ரா’ வருண் மலர்ந்து சிரிக்க அவனது சிரிப்பை ரசிக்காமல் இருக்கவே முடியவில்லை ஷ்யாமால்.

முதனின் அறைக்கு சென்று இவன் பாதம் அவர் தொட்டு வணங்க அவனை நெஞ்சோடு அணைத்துக்கொண்டார் அமுதன். அதே நேரத்தில் வருணின் மனதில் ஏனோ முகிலனின் ஊர்வலம் நடந்துக்கொண்டே இருந்தது.

‘இப்படி என்றாவது முகிலனை இவர் தோளோடு அணைத்துக்கொண்டிருப்பாரா?’ சில நொடிகள் மின்னலென கேள்வி ஒன்று ஓடி மறைந்தது வருணின் மனதில். ‘இல்லையோ? ஒரு வேளை இல்லை என்பதுதான் பதிலோ?

பத்திரிக்கையை கொடுத்து பேசிக்கொண்டு இருந்துவிட்டு இவன் கிளம்ப மாலை ஆகி இருந்தது. அடுத்த சில நிமிடங்களில் இவனை தாக்க வந்துக்கொண்டிருந்த அந்த புயலை பற்றி அறியாமல் கிளம்பினான் வருண்.

இவர்களிடம் விடைப்பெற்றுக்கொண்டு அவன் காரை திருப்பிக்கொண்டு வீட்டின் கேட்டை அடைந்த நேரத்தில் முழு வேகத்தில் அவன் காருக்கு முன்னால் வந்து சரேலென பிரேக்கடித்து நின்றது அந்த கார். அது முகிலனின் கார், கொஞ்சம் தடுமாறி பிரேக்கை அழுத்தினான் வருண்.
 




Vathsala Raghavan

மண்டலாதிபதி
Joined
Jan 17, 2018
Messages
239
Reaction score
3,372
‘முகிலனா? முகிலனா அது?’ சில நொடி குழப்பத்திற்கு பிறகு ‘ஆம்’ என உறுதி செய்துக்கொண்டது வருணின் மனது.

ஆம்! அங்கே எதிர்புரத்தில் காருக்குள் இருந்தது எப்போதும் கொதி நிலையிலேயே இருக்கும் நம் எரிமலை. முகிலன்!

ஏற்கனவே கோபத்தில் சிவந்து கிடந்த கண்கள் சற்றே பெரிதாக விரிந்தன. ‘வருணா? வருணா அது?

அவன் அறிந்திருந்த வருணின் கார் எண்ணை வைத்து ‘ஆம்’ என்ற பதில் உடனேயே கிடைத்திருந்தது முகிலனுக்கு. இரண்டு கார்களும் எதிரெதிரே நின்றிருக்க, இரு துருவங்களும் எதிரெதிரே அமர்ந்திருக்க சட்டென்று இருவருக்குளும் ஏதோ ஒரு படபடப்பு.

இதுவரையில் இப்படி ஒன்று நிகழ்ந்ததே இல்லையே? இதுவரை இருவரும் நேருக்கு நேர் சந்தித்ததே இல்லையே நேருக்கு நேர் வருவதை தவிர்த்து விடுவதே வழக்கம் ஆயிற்றே. இன்று? இன்று ஏன் இப்படி?

வார்த்தையில் வடித்துவிட முடியாத ஏதேதோ உணர்வுகள் இருவரையும் ஆட்கொண்டிருந்தது, அதில் மனதின் மறைவான பிரதேசத்தில் ஒளிந்திருந்த சின்ன மகிழ்ச்சியும் அடக்கம்தான்.

எதையும் வெளிக்காட்டிக்கொள்ளவில்லை இருவரும். ஒருவர் முகத்தை கூட ஒருவர் பார்த்துக்கொள்ளாத விதமாக ஜன்னல் வழியே வெளியே பதிந்திருந்தது இருவர் பார்வையும்.

‘என்ன வேண்டுமாம் அவனுக்கு? எதற்கு இப்படி எனது முன்னால் வந்து நிற்கிறானாம் இந்த அறிவு கெட்டவன்? ஸ்டியரிங்கை இறுக்கமாக பற்றி இருந்தது முகிலனின் கரம். எதை எதையோ நினைக்க நினைக்க மெல்ல மெல்ல ஏறத்தான் செய்தது அவன் கோபம்.

சில நொடிகள் கண்களை மூடித்திறந்தான் வருண். பெரிதாக கோபமெல்லாம் வந்துவிடவில்லை அவனுக்கு. அவன் இதழோரத்தில் சின்னதாய் ஒரு புன்னகை கூட தோன்றியதும் நிஜம். இருப்பினும் திரும்பி முகிலன் முகம் பார்க்கவில்லை அவன்.

இப்போது யாரேனும் ஒருவர் வண்டியை பின்னால் எடுத்தால்தான் இருவரும் நகரவே முடியும்.

‘பெரிய மகாராஜனா இவன்? இவனுக்கு நான் பின்னால் நகர்ந்து வழி விட வேண்டுமா? வாய்ப்பே இல்லை. அது மட்டும் நடக்க போவதில்லை’ சட்டென ஹாரனை அழுத்தியது வருணின் கட்டை விரல். அந்த ஒலியில் மொத்தமாய் ஏறியது முகிலனின் உடல் வெப்பநிலை.

‘என்னவாம்? என்னவாம் இவனுக்கு? நான் பின்னால் போக வேண்டுமா? யார் முகிலனா? பின்னால் போவதா? அது இந்த பிறவியில் இல்லை.’ அப்படியே அவனது கார் ஹாரனின் மீது மொத்தமாய் அழுந்தியது அவன் உள்ளங்கை.

அங்கே தொடங்கியது ஒரு ஹாரன் யுத்தம். காதை கிழிக்கும் அந்த ஹாரன் ஒலியில் வீதியில் செல்லும் சிலர் நின்று பார்த்துவிட்டு சென்றனர். இது முகிலனின் வீடு என அனைவருக்கும் தெரியும். அதில் எவனாவது இதை படமெடுத்து சமூக வலைதளங்களில் கூட போடக்கூடும்

இது எதைபற்றியும் கவலைப்படுவதாக இல்லை முகிலன். ஹாரனின் மீது அழுந்திக்கொண்டே இருந்தது அவன் கரம். அதில் வெளிப்பட்டது அவனது மொத்த கோபமும். ஒரு வகையில் சிரிப்புக்கூட வந்தது வருணுக்கு. விளையாட்டை சுவாரஸ்யமாக ரசித்துக்கொண்டிருந்தான் அவன்.

‘அறிவுகெட்டவன். அறிவுகெட்டவன். அப்படியே காரை விட்டு வெளியே இழுத்து நான்கு அறை அறைந்தால் என்ன அவனை?’ முகிலனுக்குள் பொங்கி பொங்கி வழிந்தது.

இதுவரையிலும் இருவரும் ஒருவர் முகம் ஒருவர் பார்த்துக்கொள்ளாத போதிலும் ஹாரன் யுத்தம் மட்டும் தொடர்ந்து நடந்துக்கொண்டிருக்க வீட்டின் வேலைக்காரர்கள் எல்லாருமே அங்கு வந்து விட்டிருந்தனர்

இருவருமே விட்டுக்கொடுக்க விரும்பாத நிலையில் வெளியே வந்தார் முகிலனின் அப்பா அமுதன். சூழ்நிலையை புரிந்துக்கொள்ளவே அவருக்கு சில நொடிகள் பிடித்தன.

சற்றே யோசித்தவர் வருணின் ஜன்னலருகே வந்து நின்றார். வருணை பார்த்து சின்ன புன்னகையுடன் அவர் இடம்வலமாக தலை அசைத்ததுதான் தாமதம் சட்டென நின்றது வருணின் ஹாரன் சத்தம்.

விருட்டென பின்னால் நகர்ந்தது அவன் கார். மெதுவாய் தணிந்தது முகிலனின் கோபம். வருணின் முகத்தை நிமிர்ந்து கூட பார்க்காமல் காரை சரேலென நகர்த்தி திருப்பி பார்கிங்கில் கொண்டு நிறுத்தினான் முகிலன். வருணின் கார் கேட்டை கடந்து நகர்ந்தது.

சில நிமிடங்கள் கடந்தும், அங்கே நின்றிருந்த அனைவரும் கலைந்து சென்று விட்ட பிறகும் காருக்குள்ளேயே அமர்ந்திருந்தான் முகிலன். ‘அறிவு கெட்டவன். ஆம். அறிவு கெட்டவனேதான் இந்த வருண்’ கூப்பாடு போட்டுக்கொண்டே இருந்தது அவன் மனம்.

அதன் பிறகு பெரிதாக ஒரு பூகம்பம் வருமென எதிர்பார்த்திருந்தனர் அப்பாவும், ஷ்யாமும். உடனடியாக எதுவும் வந்து விடவில்லை. தனது அறைக்குள் சென்று புகுந்துக்கொண்டவன் வெளியே வரவேயில்லை.

நேரம் இரவு ஒன்பதை தொட்டிருக்க ஷ்யாமும் அப்பாவும் சாப்பாட்டு மேஜையில் அமர்ந்திருக்க ஏதோ ஒரு உந்துதலில் சட்டென திரும்பிய ஷ்யாமின் உடல் கொஞ்சம் திடுக்கிட்டு குலுங்கியது. பின்னால் சுவற்றில் சாய்ந்து நின்றபடியே இருவரையும் மாறி மாறி பார்த்துக்கொண்டிருந்தான் முகிலன்.

பொதுவாக அப்பா சாப்பாட்டு மேஜையில் இருக்கும் போது முகிலன் சாப்பிட வருவதில்லை. அப்படி அவன் அந்த நேரத்தில் வந்தால் அதில் நிச்சயமாக ஏதோ ஒரு விஷயம் இருக்கிறது என்று அர்த்தம்.

மெதுவாக நடந்து ஷ்யாமின் அருகில் வந்தான் முகிலன். வந்தவன் ஷ்யாம் அந்த நேரத்தில் கையில் வைத்து பார்த்துக்கொண்டிருந்த வருணின் திருமண பத்திரிக்கையை சட்டென பிடுங்கினான்.

தங்கமென பளபளத்துக்கொண்டிருந்த அந்த பத்திரிக்கையின் முகப்பில் சிரித்துக்கொண்டிருந்தனர் வருணும் அனுபமாவும். அந்த புகைப்படத்தை ஒரு நொடி கூட பார்க்காமல் விருட்டென திருப்பி இருந்தான் அதை. அவனுக்குள் என்ன நிகழ்கிறது என்பது புரியவேயில்லை மற்ற இருவருக்கும்.

பத்திரிக்கையை படித்துக்கொண்டிருந்தவன் திடீரென ‘ஷ்யாம்’ என்றான் நிதானமாக ‘நீ இப்போ என்ன பண்றே உன் தலைவனுக்கு போன் பண்ணி இந்த கல்யாணம் நடக்கப்போறதில்லைன்னு சொல்றே’.

‘ஒரு காபி குடிப்போமா?’ என்ற ரீதியில் அவன் இதை படு இயல்பாக சொல்ல அதிர்ந்து போயினர் அப்பாவும் ஷ்யாமும்.

‘என்னடா உளறுரே..’ அப்பா பாய அவர் பக்கமே திரும்பாமல் ஷ்யாமை பார்த்தான் முகிலன்.

‘போன் பண்ணுடா. இந்த கல்யாணத்தை இந்த முகிலன் நிறுத்தப்போறேன்னு சொல்லு அவன்கிட்டே’. உறுமியது அவன் குரல். மொத்தமாய் பேச்சிழந்து போனான் ஷ்யாம்.

‘டேய்... ஏன்டா உன் புத்தி இப்படி போகுது? எதுக்குடா? அவன் உனக்கு தெரியாம வீட்டுக்கு வந்து எனக்கு பத்திரிக்கை கொடுத்திட்டான்னு கோபமாடா உனக்கு. அவனை பார்த்தியா. நான் சும்மா தலையைத்தான் ஆட்டினேன். பேசாம காரை எடுத்துகிட்டு எந்த பிரச்னையும் பண்ணாம கிளம்பிட்டான். தங்கம்டா அவன். சொக்கத்தங்கம் அவன் வாழ்க்கையோட ஏன்டா விளையாடுறே?’ அப்பா படபடக்க இன்னமும் அவர் பக்கம் திரும்பவில்லை முகிலன்.

‘எதையும் சொல்லிட்டு செய்யறதுதான் முகிலன் ஸ்டைல். அவனுக்கு ரெண்டு நாள் டைம். அதுக்குள்ளே இந்த கல்யாணத்தை அவனையே நிறுத்திட சொல்லு. இல்லைனா நான் நிறுத்திடுவேன்னு சொன்னேன்னு சொல்லு. புரிஞ்சதா? ஷ்யாமின் கண்களுக்குள் பார்த்து சொன்னான் முகிலன். சொன்னவனின் கண்களில் அப்படி ஒரு தீவிரம். ‘இந்த கல்யாணத்தை நிறுத்துன்னு முகிலன் சொன்னேன்னு சொல்லு அவன்கிட்டே. என்றான் அழுத்தமாக.

‘ஏன்டா? ஏன்டா எனக்கு பிள்ளையா பிறந்துட்டு இப்படி பண்றே? பேசாம வருண் எனக்கு பிள்ளையா பிறந்திருக்கலாம்’ அப்பா பட்டென சொல்ல இப்போது திரும்பினான் அப்பாவின் பக்கம்

‘அஹான்...’ என்றான் புருவங்கள் உயர ‘இப்போ மட்டும் என்ன கெட்டுப்போச்சு. அவனையே சட்டப்படி பிள்ளையா தத்தெடுத்துக்கோங்க. அவனையே மடியிலே போட்டு தாலாட்டுங்க, எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. எனக்கு வேண்டாம். எனக்கு நீங்க யாரும் வேண்டாம்’ டைனிங் டேபிளின் மீது கைகளை ஊன்றிக்கொண்டு அழுத்தம் திருத்தமாக சொன்னவனின் பார்வை அப்பாவின் கண்களை குடைந்தது.

பின்னர் சட்டென திரும்பியவன் ‘அவன்கிட்டே பேசிட்டு என்ன சொன்னான்னு என்கிட்டே சொல்றே’ ஷ்யாமை பார்த்து ஆணையிட்டுவிட்டு விறுவிறுவென மாடிப்படிகளில் ஏறி தனது அறைக்கு சென்றுவிட்டிருந்தான். செய்வதறியாது நின்றிருந்தான் ஷ்யாம்.

வன் சொல்வதை செய்யாவிட்டால் முகிலனுடைய கோபம் பன்மடங்காக உயர்ந்து வெடிக்கும் என்பதை அறியாதவன் இல்லை ஷ்யாம். ஒரு வழியாக மனதை தேற்றிக்கொண்டு வருணை அழைத்தான் அவன்.

‘நான் ஷ்யாம் பேசறேன் தலைவா’

‘சொல்லுங்க ஷ்யாம்’ என்றது மறுமுனை. தயங்கித்தயங்கி இவன் விஷயத்தை சொல்ல மறுமுனையில் அப்படி ஒரு மௌனம்.

‘என்ன தலைவா? எதுவுமே பேச மாட்டேங்கறீங்க?’ இது ஷ்யாம்

‘ம்?’ என்றான் வருண் கொஞ்சம் கூட பதற்றமே இல்லாமல்..

‘இல்ல தலைவா நீங்க என்ன சொல்றீங்கன்னு கேட்டு சொல்லச்சொன்னார். அதான்....’ ஷ்யாம் இழுக்க.

‘நானும் முகிலனும் எதிரிங்கதான். ஆனா என் வாழ்கையை அழிக்குற அளவுக்கு முகிலன் போக மாட்டாங்கிற நம்பிக்கை எனக்கு இருக்குனு சொல்லுங்க ஷ்யாம்’ என்றான் கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல்.

‘அது சரி தலைவா. இருந்தாலும் நீங்க கொஞ்சம் பார்த்துக்கோங்க. முகிலன் சார் சொன்னா செஞ்சு முடிச்சிட்டுத்தான் விடுவார். எனக்கே கொஞ்சம் பயமாதான் இருக்கு’

மெல்ல சிரித்தான் வருண் ‘டோன்ட் வொர்ரி. நான் பார்த்துக்கறேன்’ சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்தான் வருண்.

‘இந்த கல்யாணத்தை நிறுத்துன்னு முகிலன் சொன்னேன்னு சொல்லு அவன்கிட்டே’ என முகிலன் சொன்னதாக சொன்ன வார்த்தைகள் மட்டும் வருணுக்குள்ளே புரண்டது.

‘இல்லை தப்பு செய்ய மாட்டான்!!! முகிலன் அத்தனை கீழிறங்க மாட்டான்’ சொல்லிக்கொண்டான் அவன் தனக்குள்ளே.
 




Vathsala Raghavan

மண்டலாதிபதி
Joined
Jan 17, 2018
Messages
239
Reaction score
3,372
‘என்னடா சொன்னான் அவன்?’ அறைக்குள் வந்த ஷ்யாமை பார்த்து உறுமினான் முகிலன்.

‘நானும் முகிலனும் எதிரிங்கதான். ஆனா என் வாழ்கையை அழிக்குற அளவுக்கு முகிலன் போக மாட்டாங்கிற நம்பிக்கை எனக்கு இருக்குனு சொன்னார்.’ ஷ்யாம் சொல்ல

‘ஆஹான்......’ கலகலகலவென சிரித்தான் முகிலன்.

சில நொடிகள் சிரித்து முடித்து கேசத்தை கைவிரல்களால் அழுந்த கோதிக்கொண்டவன் திரும்பி ஷ்யாமின் முகம் பார்த்தான்.

‘ஸோ... சாருக்கு... என் மேலே அவ்...வ...ளவு நம்பிக்கை, ம்?’ கேட்டவனின் தொனியில் கொஞ்சமாக மகிழ்ச்சி ரேகைகள் ஓடியதைப்போல் தோன்றியது ஷ்யாமுக்கு.

‘ஆமாம் சார். அவர் உங்க மேலே நிறைய நம்பிக்கை வெச்சிருக்கார். உங்க அப்பா சொன்னா மாதிரி தலைவர் ரொம்ப நல்லவர் சார். உங்களை விட நல்லவர்’ மனம் தாளாமல் சொல்லியே விட்டான் ஷ்யாம்.

‘இருக்கட்டுமேடா. நல்லவனாவே இருக்கட்டும். நீங்க எல்லாரும் அவனுக்கு கோவில் கட்டி பூஜை பண்ணுங்க’ ‘பட்......’ என்று பேச்சை நிறுத்தியவன்

சின்ன புன்னகையுடன் ஷ்யாமை பார்த்து தனது ஆள்காட்டி விரலை இடம் வலமாக ஆட்டினான் ‘அவன் என்ன சொன்னாலும் சரி, யார் என்ன சொன்னாலும் சரி, நான் இந்த கல்யாணத்தை நிறுத்தத்தான் போறேன். டூ யூ அண்டர்ஸ்டான்ட்?

‘சார்... ஏன் சார்? உங்களை அவர்..’ ஷ்யாம் ஏதோ சொல்ல வர

‘ஷ்யாம்..’ என்றான் சூடாக ‘அடுத்தவனை கண் மூடித்தனமா நம்புறது பெருமை இல்லை ஷ்யாம். முட்டாள்த்தனம். அப்படி நம்பிட்டு அப்புறம் என் நம்பிக்கை பாழயிடுச்சுன்னு புலம்பிட்டு திரிஞ்சா அதுக்கு நான் கண்டிப்பா பொறுப்பு இல்லை. அடுத்த தடவை அவன் லைன்லே வந்தா இதையும் தெளிவா சொல்லிடு சரியா? இப்போ நான் தூங்கணும். குட் நைட் ஷ்யாம்’ பேச்சை அங்கேயே முடித்துவிட்டிருந்தான் முகிலன்.

‘வருண் எனக்கு என்னவோ முகிலன் ஏதோ தப்பா பண்ண போறான்னு தோணுது. அனுபமாகிட்டேயும் சொல்லி வை.’ கொஞ்சம் கவலை தோய்ந்த குரலில்தான் பேசிக்கொண்டிருந்தார் அமுதன்.

அப்பொழுதும் முகிலன் அப்படி இல்லை, முகிலன் அப்படி இல்லை என உள்மனதில் ஏதோ ஒரு நம்பிக்கை உறுதி சொல்லிக்கொண்டே இருந்தது வருணுக்கு.

அதே நேரத்தில் அமுதன் சொன்ன வார்த்தைகளை மீறியும் பழக்கம் இல்லை அவனுக்கு. சரியென ஒரு முடிவுக்கு வந்தவனாக அனுபமாவை அழைத்தான் வருண்.

‘பேபி ஃப்ரீயா இருக்கியா? ஒரு முக்கியமான விஷயம் பேசணும்’

‘அது வந்து... நான் வந்து கொஞ்சம்... வருண்... வந்து...... நாம ரெண்டு நாள் கழிச்சு பேசலாமா?’ துண்டித்துவிட்டாள் அழைப்பை.

‘என்னவாயிற்று இவளுக்கு’ சுருக்கென ஏதோ ஒன்று தைத்தது வருணுக்குள்ளே ‘சரியில்லையே! அனுபமா எப்போதும் போல் இல்லையே!

இரண்டு நாட்கள் கடந்திருந்தன.

திருமண வேலைகள் எதையும் நிறுத்தவில்லை வருண். அவை அதன் போக்கில் சென்றுக்கொண்டிருக்க அன்று காலையில் அனுபமா வீட்டை அடைந்திருந்தான் வருண்.

‘ஹாய்... பேபி...’ என்றபடியே அவளை எப்போதும் போல் அவன் இழுத்து முத்தமிட முயல மெல்ல அவனை விலக்கி விலகினாள் அவள்.

‘பேபி.... என்னாச்சு உனக்கு? யூ ஆர் நாட் ஆல் ரைட். என்ன நடக்குது இங்கே?’ கேட்டபடியே சோபாவில் சென்று அமர்ந்தான் வருண்.

‘அதெல்லாம் ஒண்ணுமில்லை. நான் கொஞ்சம் வெளியே போகணும். கல்யாணத்துக்கு பர்சேஸ் பண்ணத்தான். நாம.. நாம அப்புறமா மீட் பண்ணலாமா?’ அவள் அவனை அனுப்பவதிலேயே குறியாய் இருக்க அவனுடைய கூர்மையான பார்வை அவளை குடைந்தது.

‘முகிலன் உன்கிட்டே எதுவும் பேசினானா? முக்கியமா நம்ம கல்யாணத்தை பத்தி?’

‘இல்லையே. இல்லையே. அதெல்லாம் இல்லையே’ உச்சக்கட்ட பதற்றம் அவளிடம் . ‘வருண் ப்ளீஸ்,,, நீ வீட்டுக்கு கிளம்பேன். நான் வெளியே கிளம்பணும்’ அவள் இன்னுமாய் படபடக்க

ஒரு பெருமூச்சுடன் எழுந்தான் வருண். அவளை ஏற இறங்க பார்த்தான் அவன். பின்னர் பதில் பேசாமல் அங்கிருந்து நடந்தான்.

அவனது உள்ளுணர்வு அவனுக்கு எதையோ உணர்த்திக்கொண்டே இருக்க அன்று மாலையில் வெடித்தது அந்த வெடி. சில பத்திரிக்கையாளர்களை அழைத்து பேச ஆரம்பித்தாள் அனுபமா.

‘சரியா சொல்லணும்னா வருணை கல்யாணம் பண்ணிக்கிற தகுதி எனக்கில்லை. அதனாலே இந்த கல்யாணம் வேண்டாம்னு நான் முடிவு பண்ணி இருக்கேன். தயவு செய்து இதுக்கு மேலே என்னை எதுவும் கேட்காதீங்க’

அவள் அப்படி பேசிய செய்தி வருணை எட்டியது. கண்டிப்பாய் அதிர்ந்து போகவில்லை அவன். தனா பதறிய அளவு கூட இவன் பதறவில்லைதான். ஒரு இறுகிய சிலையாய் அமர்ந்திருந்தான் அவன்,.

அவனது கைப்பேசி விடாமல் ஒலித்துக்கொண்டிருந்தது. யாருடைய அழைப்பையும் ஏற்கவில்லை அவன்.

டிவிகளிலும், வலைதளங்களிலும் வருணே அன்றைய தலைப்பு செய்தியாகி இருந்தான் எதையும் பார்க்க விரும்பவில்லை வருண். தனாவிடம் கூட எதையும் பேச விரும்பவில்லை அவன். இரவு உணவு கூட உள்ளிறங்கவில்லை அவனுக்கு

அமுதன் பதறிப்போய் அழைக்க ‘ஒண்ணுமில்லை சார்.. ஐ.யாம் ஃபைன் நாளைக்கு பேசறேன் உங்ககிட்டே’ சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்திருந்தான்

அறைக்குள் வந்து இரவு உடைக்கு மாறிக்கொண்டு மொட்டை மாடியை அடைந்தான் வருண். அப்படியே தரையில் சாய்ந்தான்.

சில மாத காதல். உயிரில் அவளை உறைய வைத்து உருகிக்களித்த காதல். இரண்டு மூன்று நாட்களுக்குள் பொலபொலவென உதிர்ந்து போய் விட்ட வலி கூட அவனுக்கு பெரிதாக தெரியவில்லை.

மனதிற்குள் முகிலன் மட்டுமே வந்து அமர்ந்திருந்தான். அவன் இப்படி செய்வான் என கொஞ்சமும் நினைக்கவில்லையே?

‘ஏன்டா முகிலா? ஏன்டா இப்படி பண்ணே?’ வானில் சிரித்துக்கொண்டிருந்த நிலவை பார்த்து வாய் விட்டுக்கேட்டான் அவன்.

அதே நேரத்தில் தனது வீட்டு மொட்டை மாடியில், யாருமில்லாத தனிமையில் தரையில் படுத்துக்கிடந்தான் முகிலன். அவன் கேட்ட கேள்வியை முகிலனிடம் சொன்னதோ அந்த நிலவு?

பதிலேதும் சொல்லாமல் நிலவை பார்த்து அழகாய் புன்னகைத்தான் முகிலன்.

தொடரும் .....​
(போன அத்தியாயத்தின் கதாபாத்திரங்களையும், இந்த அத்தியாயத்தின் கதாபாத்திரங்களையும் இணைக்கும் ஒரு புள்ளி . ஒரு க்ளூ இந்த அத்தியாயத்தில் இருக்கிறது. யார் கண்டுப்பிடிக்கறீங்கனு பார்க்கலாம் ;););))
 




Last edited:

sridevi

அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
4,750
Reaction score
7,120
Location
madurai
anupama love panna varuen thirumanam seiya maruthu vittal:unsure::unsure::unsure:
பதிலேதும் சொல்லாமல் நிலவை பார்த்து அழகாய் புன்னகைத்தான் முகிலன்.
karanam ennavo:unsure::unsure::unsure::unsure: interesting epi sis(y)(y)(y)(y)varunin PA mugilan fan& vice versava nice(y)(y)(y)
 




Vathsala Raghavan

மண்டலாதிபதி
Joined
Jan 17, 2018
Messages
239
Reaction score
3,372
May be anupama nijamave varunuku poruthamillathavala irukkalam mugilan varunuku nallathuthan senjiruppan
Ahaan... appadiyaa? ungalukku mugilan mele avvalvu nambikkaiyaa Deepi. Let us see. Hahaha Thanks a lot Deepi. Ungalodathu first cmnt. Feeling so happy. Thanks Thanks
 




Vathsala Raghavan

மண்டலாதிபதி
Joined
Jan 17, 2018
Messages
239
Reaction score
3,372
anupama love panna varuen thirumanam seiya maruthu vittal:unsure::unsure::unsure:

karanam ennavo:unsure::unsure::unsure::unsure: interesting epi sis(y)(y)(y)(y)varunin PA mugilan fan& vice versava nice(y)(y)(y)
Thanks a lot Sridevi. Feeling very very happy to read your comment. Karanam ennavo? Seekiram solliduvom. Thanks so much
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top