• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

General Audience Real heroine not a reel

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
இவ்வரிகளை படித்தவுடன்..
எனக்கு நானே சொல்லிக்கொண்டது..
ரௌத்திரம் பழகு..என்று..
Thanks for sharing Monimma
We both are thinking alike da. நான் அவள் இல்லை கதையில் கடைசியாய் அதில் பெண்மைக்கு சொன்ன வார்த்தை.
ரௌத்திரம் பழகு
 




Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
ஏன் பாரதியை தவிர எந்த ஆணும்.. கற்பு என்றால் அதை இரு கட்சிக்கும் பொதுவில் வைப்போம் என்று சொல்லலை...

ரோட்டில் கூட ஆணும் பெண்ணும் சேர்ந்து போனால்... அந்த பையன் தான் இப்படி இருக்கான்.. அந்த பெண்ணுக்கு எங்க போச்சு புத்தி என்ற வார்த்தை கேட்கிறார்கள் (எல்லோரும் இல்லை.. ஆனால் அநேகம் பேர் )... ஏன் பையனுக்கு புத்தி எப்படி என்றாலும் இருக்கலாம்.. பொண்ணு தான் பார்த்து நடந்துகனும்...

ஆண்.. எது செய்தாலும் என்ன செய்தாலும் கேள்வி கேட்காத சமூகம் இருக்கும் வரை.. பெண்களுக்கு உரிமையோ.. உணர்வையோ பரிசளிக்க முடியாது..
 




Gomathi

மண்டலாதிபதி
Joined
Jan 28, 2018
Messages
272
Reaction score
866
Location
Chennai
வெறும் சதைபிண்டங்களா
பெண்கள்?

அந்த உடலில் உணர்வில்லையா?

கண்ணில் அகப்படாமல் மறைந்துள்ள
உயிரில்லையா?


எங்களின் அங்கங்கள்தானே வேறு
ஆசைகள் அவைதாமே...


தொலைகாட்சியிலும்
நாயகனாய் வரும் ஆண்கள்...
கவர்ச்சிக்காக கலையப்பட்ட பெண்கள்...


சுகங்களில் பங்கெடுக்க நீங்கள்
சுமைகள் மட்டும் எங்களின் சுழற்ச்சியில்தான்..


இலக்கியவாதிகள் கூட வானத்தை ஆண்மை என்றும்
மிதிப்படும் பூமியை பெண்மை என்றும் பறைசாற்றியது ஏன்?


பேருந்தில் ஊசாலாடும் ஆண்களுக்கு
கருவினை சுமந்து ஈன்றெடுக்கும் வலியை உணர வைத்திருந்தால்
அந்த உயிரின் மதிப்பை உணர்ந்திருப்பார்கள்...


தர்மனும் துரியோதனனும் ஆடிய
விளையாட்டில்
பாஞ்சாலி பணையமாக்கப்பட்டது ஏன்?


இராமனும் இராவணணும் எதிரிகளாய் மோத
சீதை சிறையிலிடப்பட்டது ஏன்?


காலங்கள் கடந்துவிட்டன
காட்சிகள் மாறவில்லை...


கனவுகள் வளர்ந்துவிட்டன
இருப்பினும் கட்டுபாடுகள் தளரவில்லை...


அறநெறி போதித்த திருவள்ளுவனும்
கற்பினை கன்னிகளுக்கு மட்டுமே விட்டுச்சென்றான்...


பயணத்திற்காக தேரில் பூட்டிய குதிரையும் சரி...
மணமகளாய் மாங்கல்யம் பூட்டிய
பெண்களும் சரி...
வேறு வேறு அல்ல
கடிவாளம் கட்டி காண்பிக்கும் திசையில் ஓடவேண்டியதுதான்..


திருமணத்திற்கு முன்பு தந்தையின் கைப்பிடியில்...

பின்னர் கணவனின் காலடியில்..

அறுபது வயது நிரம்பிய முதுமையில் உன் கால ஏட்டை புரட்டிப் பார்த்தால்
அவை வெள்ளை காகிதங்களாகவே இருக்கும்...


நீ எழுதியவை மொத்தமும் பிறரின் ஏட்டிலே அல்லவா!

சிறகுகள் இருந்தும் பறக்காத பெண்மை
அதனை உணர்ந்து சிறகுகள் விரித்து
வானில் பறக்க நினைக்கும் பறவைகளை கடிந்து கொள்ளத்தானே செய்யும்..


வழக்கங்கள் மாறினால் வழக்குகள் தோன்றும்...

வானை நோக்கிய பறவைகளுக்கு
வேடனின் வருகை தெரியுமோ...
பலநேரங்களில் அவை தின்பண்டங்களாய் மாறிவிடவும் கூடும்...


ஆபரணங்களும் ஆடை அலங்காரங்களும் பெண்மையின் அடையாமாய் மாறிப் போயின...

அழிந்துவிடும் அழகிற்கு அவளை இலக்கணமாக்கிவிட்டு
அழியாத அறிவிற்கு அவனே ஆதாரமாகிவிட்டான்...


மையிட்டு கொண்டு கருக்க செய்தது
உங்கள் விழிகளை மட்டுமல்ல
உங்கள் வழிகளையும்தான்...


சாயம் பூசியது உங்கள் இதழ்களுக்கென்றோ நினைத்தீர்களோ!
உங்கள் வார்த்தைகளுக்கு...


கழுத்தை இறுக்கும் ஆபரணங்களை உனக்கு கொடுத்துவிட்டு
கீரடத்தை அவன்தானே சூட்டிக் கொண்டான்...


பலியாடாய் உனக்கு மாலை சூட்டிவிட்டு
புகழ் மாலையை அவனே சூட்டிக் கொள்வான்...
.
புரிந்து கொள்ளடி பெண்மையே!

பாராட்டுக்காகவோ புகழ்ச்சிக்காக எழுதப்படல.

பெண்மையில் வலி சமூகத்தின் மீதான சீற்றம்..........
Rightly said.....
 




Divya suge

மண்டலாதிபதி
Joined
Jun 19, 2018
Messages
291
Reaction score
864
Location
Tindivanam
ஏன் ஏன் ஏன் னு யோசிக்க தோணுது....மங்கையராய் பிறப்பதற்கு மா தவம் செய்ய வேண்டும் என்று சொல்லிி இருக்காங்க. ஆனா இன்னிக்கி அந்த பெண்மையை கொச்ச படுத்துதான் செய்றாங்க.... சுனிதா கிருஷ்ணன்்்் போல இன்னும் நிறைய பேர் இருக்கிறார்கள்... ஒருுு சுனிதா கிருஷ்ணே கிட்டத்தட்ட 3000 பேரை காப்பாத்தி இருக்காங்க. இன்னும் தெரியாமல் எவ்ளோ பேரு இருக்காங்களோ. கடவுளே ஏன்்்்்்்் இப்படிப்பட்ட மிருகங்களுக்கு நடுவுல எங்களை வாழ விடுறேே..
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
உடலாய் மட்டுமே பெண்ணை பார்க்கும்.
இந்த சமூகத்தை என்ன செய்யலாம் பானுமா?
கண்ணகி மாறி எரிச்சிட்டா என்ன? நாமும் கருகி அவர்களும் கருகி தொலையட்டும். இப்படிதான் தோணுது. பாதிக்கப்பட்டு மீட்கப்பட்டவர்களே மூவாயிரம்னா. மீட்கப்படாதவர்கள் நிலைமை.
போற போக்கைப் பார்த்தால்
அப்படித்தான் நடக்கும் போல,
மோனிஷா டியர்
அக்கிரமங்களைப் பார்த்து
பார்த்து பூமித்தாயின்
பொறுமையின் எல்லை
மீறும் பொழுது எந்த
கண்ணகி வந்து எரிச்சு
பாரதம் அழியப் போகுதோ?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
வெறும் சதைபிண்டங்களா
பெண்கள்?

அந்த உடலில் உணர்வில்லையா?

கண்ணில் அகப்படாமல் மறைந்துள்ள
உயிரில்லையா?


எங்களின் அங்கங்கள்தானே வேறு
ஆசைகள் அவைதாமே...


தொலைகாட்சியிலும்
நாயகனாய் வரும் ஆண்கள்...
கவர்ச்சிக்காக கலையப்பட்ட பெண்கள்...


சுகங்களில் பங்கெடுக்க நீங்கள்
சுமைகள் மட்டும் எங்களின் சுழற்ச்சியில்தான்..


இலக்கியவாதிகள் கூட வானத்தை ஆண்மை என்றும்
மிதிப்படும் பூமியை பெண்மை என்றும் பறைசாற்றியது ஏன்?


பேருந்தில் ஊசாலாடும் ஆண்களுக்கு
கருவினை சுமந்து ஈன்றெடுக்கும் வலியை உணர வைத்திருந்தால்
அந்த உயிரின் மதிப்பை உணர்ந்திருப்பார்கள்...


தர்மனும் துரியோதனனும் ஆடிய
விளையாட்டில்
பாஞ்சாலி பணையமாக்கப்பட்டது ஏன்?


இராமனும் இராவணணும் எதிரிகளாய் மோத
சீதை சிறையிலிடப்பட்டது ஏன்?


காலங்கள் கடந்துவிட்டன
காட்சிகள் மாறவில்லை...


கனவுகள் வளர்ந்துவிட்டன
இருப்பினும் கட்டுபாடுகள் தளரவில்லை...


அறநெறி போதித்த திருவள்ளுவனும்
கற்பினை கன்னிகளுக்கு மட்டுமே விட்டுச்சென்றான்...


பயணத்திற்காக தேரில் பூட்டிய குதிரையும் சரி...
மணமகளாய் மாங்கல்யம் பூட்டிய
பெண்களும் சரி...
வேறு வேறு அல்ல
கடிவாளம் கட்டி காண்பிக்கும் திசையில் ஓடவேண்டியதுதான்..


திருமணத்திற்கு முன்பு தந்தையின் கைப்பிடியில்...

பின்னர் கணவனின் காலடியில்..

அறுபது வயது நிரம்பிய முதுமையில் உன் கால ஏட்டை புரட்டிப் பார்த்தால்
அவை வெள்ளை காகிதங்களாகவே இருக்கும்...


நீ எழுதியவை மொத்தமும் பிறரின் ஏட்டிலே அல்லவா!

சிறகுகள் இருந்தும் பறக்காத பெண்மை
அதனை உணர்ந்து சிறகுகள் விரித்து
வானில் பறக்க நினைக்கும் பறவைகளை கடிந்து கொள்ளத்தானே செய்யும்..


வழக்கங்கள் மாறினால் வழக்குகள் தோன்றும்...

வானை நோக்கிய பறவைகளுக்கு
வேடனின் வருகை தெரியுமோ...
பலநேரங்களில் அவை தின்பண்டங்களாய் மாறிவிடவும் கூடும்...


ஆபரணங்களும் ஆடை அலங்காரங்களும் பெண்மையின் அடையாமாய் மாறிப் போயின...

அழிந்துவிடும் அழகிற்கு அவளை இலக்கணமாக்கிவிட்டு
அழியாத அறிவிற்கு அவனே ஆதாரமாகிவிட்டான்...


மையிட்டு கொண்டு கருக்க செய்தது
உங்கள் விழிகளை மட்டுமல்ல
உங்கள் வழிகளையும்தான்...


சாயம் பூசியது உங்கள் இதழ்களுக்கென்றோ நினைத்தீர்களோ!
உங்கள் வார்த்தைகளுக்கு...


கழுத்தை இறுக்கும் ஆபரணங்களை உனக்கு கொடுத்துவிட்டு
கீரடத்தை அவன்தானே சூட்டிக் கொண்டான்...


பலியாடாய் உனக்கு மாலை சூட்டிவிட்டு
புகழ் மாலையை அவனே சூட்டிக் கொள்வான்...
.
புரிந்து கொள்ளடி பெண்மையே!

பாராட்டுக்காகவோ புகழ்ச்சிக்காக எழுதப்படல.

பெண்மையில் வலி சமூகத்தின் மீதான சீற்றம்..........
ரொம்பவே கஷ்டமாயிருக்கு
பெண்ணாய் பிறந்ததற்கு
இத்தனை நாளாய் கர்வப்பட்ட
மனது, இப்பொழுது ஏன்
பெண்ணாய் பிறந்தோம்-னு
அலறுது, மோனிஷா டியர்
 




Chittijayaraman

அமைச்சர்
Joined
Oct 16, 2018
Messages
2,202
Reaction score
4,376
Location
Chennai
Manasuku kashtama eruku Moni mam, hats off sunitha Krishnan, 3000 kuzhandai na sadarna vishyama, innum evlo pengal kashta padaramgalo, ninaika ve manasu barama eruku, chinna kuzhandaigalu ku inda madiri nadakum bodu kelvipatta yuir pogudu, iduku Enna dan solution teriyala, Ella pengalum kannagi ya maaranum,.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top