• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Regarding thedal novels

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Status
Not open for further replies.

Thendral

Moderator
Staff member
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
4,900
Reaction score
23,832
Location
Phoenix
என்னைப் பொறுத்த வரை, பிரியா அக்கா , எல்லோருடைய இடத்திலிருந்தும் யோசித்து தான் இந்த போட்டியின் ஒவ்வொரு கட்டத்திலும் நடந்துகிட்டாங்க...

போட்டி முடிய சரியாக ஒரே வாரம் இருந்த நேரத்தில் நிறைய எழுத்தாளர்கள் கதையை முடிக்கமுடியவில்லை என்று கேட்டுக் கொண்டதற்காக மட்டுமே கால அவகாசம் நீட்டிக்கப் பட்டது.

இத்தனை நாள் கஷ்டப்பட்டு எழுதியவர்கள் வருத்தப் படக் கூடாது என்பதற்காக மட்டுமே அவ்வாறு நேரம் கொடுக்கப் பட்டது. அதன் பிறகு நடுவர்களுக்குக் கொடுக்க அவர்களது கதையை சரி பார்த்து , பிரிண்ட் செய்து கொடுத்து என அனைத்தும் செய்தார்கள்.

இப்போது அதுவும் அவர்கள் தவறு என்று சொல்வது ஏற்க முடியவில்லை.

அதன் பிறகு நடுவர்கள் எடுத்துக் கொண்ட நேரம் வேறு .
இதில் வேண்டுமென்றே காலதாமதம் செய்ய என்ன இருக்கிறது?
 




Madhumathi Bharath

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
2,225
Reaction score
55
நான் சொன்னதை நீங்க ஏற்காவிடிலும் அது உங்கள் விருப்பம் மது. உங்கள் கருத்துக்கான ஒரு Clarification மட்டுமே நான் கொடுத்தது.

Ofcourse என் பதில் ரொம்ப ஸ்டிராங்கா இருந்தததுதான்.

அதற்கு காரணம் எனக்கு பரிசு வேண்டாம்னு சொல்லி நீங்கள் இன்றளவில் தோழமையோடு மதிக்கும் சஷி அக்காவின் போஸ்ட்டிற்கு அதே அளவுக்காய் ஒரு டபுள் ஸ்டிரங்கா பதிலடி கொடுத்திருந்தீங்க..அந்த வார்த்தையை பார்த்த பின்னே இந்த ரிப்ளை.
அதை நீங்க கொஞ்சம் பின்னோக்கி பார்க்கனும்.

கடைசியாய் ஒரு சின்ன ரிக்வ்ஸட். கீழே நீங்க கொடுத்த அந்த வார்த்தைகளுக்கான அர்த்தம் என்னன்னு நான் தெரிஞ்சிக்கலாமா மது. உண்மையிலேயே எனக்கு புரியல. இது யாரை தாக்கியவை. விவாதத்திற்கு அஞ்சாத நீங்க கொஞ்சம் தெளிவா பதிலளிக்கனும்.

//போட்டி முடிப்பதாக சொன்ன நாட்களைத் தாண்டியும் அதிக காலம் நீங்கள் எடுத்துக் கொண்டதற்கு பழி என் பேரில் ஏனோ...அப்படி நடந்து இருந்தால் பரிசளிப்பு இதற்கு முன் நடந்த புக் பேரில் கொடுக்கப்பட்டு இருக்கும்.நல்லவேளை பரிசை வாங்கிய பின் எனக்கு அப்படி ஒரு இக்கட்டான சூழல் வரவில்லை.//
இதில் நான் யாரையும் தாக்கி பேசவில்லை மோனிஷா அவர்களே...என்னுடைய மனநிலையை சொன்னேன்.இப்பொழுது நான் மகிழ்ச்சி அடைகிறேன் கால தாமதம் ஆனதால் தான் என்னுடைய கதையை நான் இழக்கவில்லை என்று...ஒருவேளை நீங்கள் சொன்னபடி சொன்ன தேதியில் கதை முடிந்து பரிசளிப்பும் நடந்து இருந்தால் இந்நேரம் நான் பணத்தை வாங்கி இருப்பேன்.அதன்பிறகு இதே கேள்வியை நான் கேட்டு இருந்தால்...பணத்தையும் வாங்கிக் கொண்டு இப்படி பேசலாமா ஒரு சிலர் கிளம்பி இருக்கக் கூடும்...அந்த அவப்பெயர் எனக்கு ஏற்படாமல் தப்பித்த சந்தோசம் எனக்கு...

நீங்கள் அறிவித்த இருந்த நேரத்தில் எல்லாவற்றையும் செய்து இருந்தால் இந்நேரம் என்னுடைய கதை புத்தகமாக வெளிவந்து இருக்கும்.ஆனால் தாங்கள் கால தாமதம் செய்தீர்கள்...அதனால் தான் இப்பொழுது என்னால் என்னுடைய கதையை amazon போட்டிக்கு கொடுக்க முடியாத நிலை...என்ற எண்ணம் எனக்கு...
(தாங்கள் கேட்ட கேள்விக்கு மட்டுமே இந்த விளக்கம் மோனிஷா அவர்களே...இதுவும் என்னுடைய மனதில் தோன்றியது தான்...இது தவறாகக்கூட இருக்கலாம்)

நான் பிரியா அக்காவை ஒரு காலத்திலும் தாக்கிப் பேசலை ...அதற்கு எனக்கு என்ன அவசியம்? நான் தான் தவறாக புரிந்து கொண்டேன் என்று ஏற்கனவே விளக்கம் சொல்லி இருக்கிறேனே..

இங்கே மற்றவர்கள் தான் சம்பந்தம் இல்லாமல் எல்லாரும் தொடர்ந்து பேசி என்னைத் தான் காயப்படுத்திக் கொண்டு இருக்கீங்க...

தேடல் போட்டி நடந்து முடிந்த இத்தனை நாட்களில் அதை குறித்து எந்த தவறான வார்த்தையும் எந்த இடத்திலும் நான் பதிவு செய்யவில்லை.இருந்தும் என்னை ஏன் இப்படி பேச வேண்டும்?

உங்களுக்கு எப்படி இந்த தேடல் போட்டி முதல் முறையோ...அதே போல எனக்கும் இது தான் முதல் முறை...இங்கே என்ன செய்யலாம்? செய்யக் கூடாது என்பது பற்றி தெரியாத ஒருத்தி கேட்கும் கேள்விக்கு சாதாரணமாக பதில் சொல்லாமல் தோற்றுப் போன காரணத்தினால் தான் இப்படி நடந்து கொண்டேன் என்று சொல்வதை எந்த விதத்தில் நியாயப்படுத்த நினைக்கறீங்க?நீங்களும் போட்டியில் ஒரு வெற்றியாளர் தானே மோனிஷா...தெரியாமல் கேட்ட கேள்விக்கு எனக்கு கொடுத்ததைப் போலவே உங்களுக்கு பதில் அளித்து இருந்தால் உங்கள் மனதில் துளியளவு கூட வருத்தமே இருந்து இருக்காதா?

வேண்டாம் மோனிஷா அவர்களே ...என் மனது படும்பாடு உங்களுக்கு புரியாவிட்டால் பரவாயில்லை.வீண் விவாதம் புரியாதீர்கள்.இதற்கு மேலும் வாதத்தை வளர்க்க நான் விரும்பவில்லை...
 




Last edited:

Aruna Kathir

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,030
Reaction score
4,650
Location
Palani
@Monisha @Thendral @*********** @Madhumathi Bharath
Hi.
I think the authors are worried about pdf and piracy problems. We can't assure them that the stories will be safe here. Ppl may combine PDFs and publish it elsewhere. அதனால தானோ என்னவோ கதையை எடுக்க சொல்லறாங்கன்னு நினைக்கிறேன்.
I'm not supporting or opposing anyone. Just my thought. இப்படியும் இருக்கலாமோன்னு ஒரு கோணம். அவ்வளவே...
உடனே சண்டைக்கெல்லாம் வந்தாராதீங்க....நான் அதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டேன்.
 




bhagyalakshmi

அமைச்சர்
Joined
Jan 29, 2018
Messages
2,225
Reaction score
11,752
Location
Chennai
@Madhumathi Bharath ..
தங்கள் கதையை வாசித்து அன்டு வாக்களித்த ..
ஒரு வாசகராக...உங்களோட நிலைப்பாடை ஏற்றுக்கொள்ள முடியவில்லை...
தேடல் போட்டியின் விதிமுறைகளை படித்துவிட்டு தான் எனது கருத்தை முன்வைக்கின்றேன்...
மதுமதி அவர்களே..
எல்லா நிபந்தனைகளுக்கு உட்பட்டுதான் இப்போட்டியில் பங்கு கொண்டீர்கள்.
தேடலின் விதிமுறையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது..
வெற்றிப்பெற்ற கதைகளின் உரிமை...MS பதிப்பகத்திற்கு உரித்தானது என்று...!!!
அவ்வாறு இருக்கையில்...நீங்கள் எவ்வாறு அக்கதையை மற்றொரு போட்டிக்கு அனுப்ப முடியும்...???
உங்களின் வேண்டுகோளே அபத்தமாக இருக்கின்றது...

எவ்வளோ எழுத்தாளர்கள் சரியான ஃபிளாட்ஃபார்ம் கிடைக்காமல்..சரியான வாசகர் வட்டம் கிடைக்கப்பெறாமல்...
அவர்களுடைய திறமையெல்லாம் இனம் காண முடியாமல் அழிந்திருக்கின்றது..
அவ்வாறு இருக்கையில் இப்படி ஒரு போட்டியை ஆரம்பித்து அதை திறம்பட வெற்றிகரமாக நடத்தி..முடிவுகளும் அறிவிக்கப்பட்ட நிலையில்
தங்களின் செயல்...நிச்சயமாக வருத்தத்தை அளிப்பதாகவே உள்ளது...

அதுவும் தங்களுக்கு அளித்த பரிசை நிராகரித்தது என்பது...காத்திருந்து ஒவ்வொரு அப்டேட்டையும் படித்து ...விமர்சித்து வாக்களித்த என்னை மாதிரியான வாசகர்களை உதாசீனப்படுத்துவதாகவே எண்ணத்தோன்றுகிறது..
சில நொடிகளில்....அனைத்தையும் ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட்டீர்கள்...
தங்களின் கதையை வாசித்து வாக்களித்தற்காக வருந்துகிறேன்....
 




Madhumathi Bharath

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
2,225
Reaction score
55
@Madhumathi Bharath ..
தங்கள் கதையை வாசித்து அன்டு வாக்களித்த ..
ஒரு வாசகராக...உங்களோட நிலைப்பாடை ஏற்றுக்கொள்ள முடியவில்லை...
தேடல் போட்டியின் விதிமுறைகளை படித்துவிட்டு தான் எனது கருத்தை முன்வைக்கின்றேன்...
மதுமதி அவர்களே..
எல்லா நிபந்தனைகளுக்கு உட்பட்டுதான் இப்போட்டியில் பங்கு கொண்டீர்கள்.
தேடலின் விதிமுறையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது..
வெற்றிப்பெற்ற கதைகளின் உரிமை...MS பதிப்பகத்திற்கு உரித்தானது என்று...!!!
அவ்வாறு இருக்கையில்...நீங்கள் எவ்வாறு அக்கதையை மற்றொரு போட்டிக்கு அனுப்ப முடியும்...???
உங்களின் வேண்டுகோளே அபத்தமாக இருக்கின்றது...

எவ்வளோ எழுத்தாளர்கள் சரியான ஃபிளாட்ஃபார்ம் கிடைக்காமல்..சரியான வாசகர் வட்டம் கிடைக்கப்பெறாமல்...
அவர்களுடைய திறமையெல்லாம் இனம் காண முடியாமல் அழிந்திருக்கின்றது..
அவ்வாறு இருக்கையில் இப்படி ஒரு போட்டியை ஆரம்பித்து அதை திறம்பட வெற்றிகரமாக நடத்தி..முடிவுகளும் அறிவிக்கப்பட்ட நிலையில்
தங்களின் செயல்...நிச்சயமாக வருத்தத்தை அளிப்பதாகவே உள்ளது...

அதுவும் தங்களுக்கு அளித்த பரிசளிப்பை நிராகரித்தது என்பது...காத்திருந்து ஒவ்வொரு அப்டேட்டையும் படித்து ...விமர்சித்து வாக்களித்த என்னை மாதிரியான வாசகர்களை உதாசீனப்படுத்துவதாகவே எண்ணத்தோன்றுகிறது..
சில நொடிகளில்....அனைத்தையும் ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட்டீர்கள்...
தங்களின் கதையை வாசித்து வாக்களித்தற்காக வருந்துகிறேன்....
எல்லாருக்கும் சொன்னது தான் உங்களுக்கும் சகோதரி...வார்த்தைகளை விடாதீர்கள்...என்னுடைய கதையைப் படித்து எனக்கு வாக்களித்த ரசிகர்களை வருத்தம் அடைய செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்கு துளியும் இல்லை...முதலில் ஒரு விஷயம் தெரிந்து கொள்ளுங்கள்...புத்தக உரிமை வேறு...ஆன்லைன் உரிமை வேறு...

இங்கே பிரச்சினை அது தான்...நான் புத்தக உரிமை மட்டுமே என்று நினைத்துக் கொண்டு இருக்க..இங்கே ஆன்லைன் உரிமையும் சேர்த்து சொல்லபட்டதாக கூறுகிறார்கள்.அது என்னுடைய தவறாகவே இருந்தாலும்...என்னுடைய கதையை நான் சொந்தம் கொண்டாடக் கூடாது என்று சொல்லும் உங்களைப் பார்த்தால் எனக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை.

தேடலுக்கு கொடுத்த கதைகள் வெளியே pdf உலா வருகின்றன...அதைக் காக்க அல்லது அப்படி வெளியான சமயத்தில் தோள் கொடுக்க யார் தயாராக இருக்குறீர்கள்...

ஒன்றை நன்றாக புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள் சகோதரி...நான் மற்ற கதைகளுக்கு கொடுத்த உழைப்பைக் காட்டிலும் இந்த கதைக்கு அதிக உழைப்பைக் கொடுத்து இருக்கிறேன்.அதன் மூலம் நல்ல பெயரை சம்பாதித்து விட்டேன்.அதுவே போதும்...பணம் தேவை இல்லை...என்று நான் சொன்னது அதனால் தான்.

என்னிடம் சொந்தமாக தனித்தளம் இருக்கிறது சிஸ்...இருந்தாலும் பிரியா அக்கா சொன்ன வார்த்தைக்கு மதிப்பளித்து தான் நான் இந்த போட்டியில் பங்கெடுத்தது.தயவு செய்து உங்கள் பேச்சுகளால் ஏன் இங்கே வந்தோம் என்று நினைக்கும்படி செய்து விடாதீர்கள்...
 




A

Anna Sweety

Guest
@***********

பரிசு வேண்டாமென நீங்கள் சொன்னதால் தான் தகுதி நீக்கம் செய்யப்பட்டது.
அதோடு ஜட்ஜ் நினைச்சப்பெல்லாம் தீர்ப்பு சொல்ல முடியாது என்று நீங்கள் ஏன் சொல்ல வேண்டும்? ஜட்ஜ் என்ன சொல்ல வேண்டும், என்ன சொல்ல கூடாது என்று உத்தரவிட நீங்கள் யார்? காழ்ப்புணர்வை வெளிப்படுத்துகின்றது உங்களது வார்த்தைகள்.

முடிவு அறிவிக்கப்பட்ட போதே நீங்கள் இன்னொரு ஐடியில் வந்து பேசியதனைத்திற்கும் ஆதாரம் இருக்கிறது. போட்டியின் முடிவு எப்படியாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் இருந்தால் மட்டுமே போட்டியில் கலந்து கொள்ள வேண்டும். பரிசு கிடைக்க வேண்டும் என்று உழைக்கலாம். ஆனால் இன்னொருவருக்கு எப்படி பரிசு கிடைத்தது என்று காழ்ப்புணர்வை வெளிப்படுத்தியது எந்த வகை நாகரிகம் என்பது எங்களுக்கு தெரியவில்லை. ஒரு வேளை இது உங்களது நாகரிகம் போல.

திறமை எல்லோருக்கும் உண்டு. அந்த திறமையோடு வாசகர்களை சென்றடைந்த எழுத்தாளர்கள் வெற்றி பெற்று இருக்கிறார்கள். அதை ஏற்பதில் உங்களுக்குள்ள தடையுணர்வு எங்களுக்கு புரிகிறது. இங்கு போட்டி மனப்பான்மை இருக்கலாம். ஆனால் இதுபோன்ற விஷமமான பேச்சுக்களுக்கு இடமில்லை.
Very Good Priyanga,

First things first
நான் வேற id யில் வந்து பேசிய ஆதாரங்கள் இருக்கின்றனதானே...பத்திரமாக எடுத்து வையுங்கள். பொதுவெளியில் character assault செய்கிறீர்கள். லீகல் ஆக்க்ஷன் செல்கிறேன், அங்கு சமர்பிக்கவும்.

இது க்ளரிஃபிகேஷன்... வாசிக்கும் சக மனிதர்களுக்காக...

நான் ஜட்ஜ்மென்டை எதிர்த்து பேசியது இல்லை. ஆனால் கதைகள் எல்லாம் பெட்ரூம்குள் முடிந்துது போனது என்ற விளக்கத்திற்கும் வாக்கு அடிப்படையில் முடிவு என்பதையும் குறித்து என் மன தாங்கலை குறிப்பிட்டிருந்தேன்.

அதுவும் போட்டி துவக்கம் முதல், வாக்கு பதிவு அடிப்படையில் முடிவு கிடையாது என பலமுறை என்னிடம் பேசி இருக்கிறார் ப்ரியங்கா, அப்போதே நான் வாக்கு பதிவின் சாதக பாதகங்களை அவரிடம் குறிப்பிட்டதும் உண்டு. இது எல்லாம் நார்மல் போன் உரையாடல். அதோடு போட்டி முடிந்த போது FB யில் அவர் வோட்டு அடிப்படையில் முடிவு என்பது இயலாது, ஏனெனில் தளத்தில் எழுதாத கதைகளும் கூட பங்கு பெறுகின்றன என்று அதையும் குறிப்பிட்டு இருந்தார் ப்ரியங்காவே.



இறுதியில் வோட்டு அடிப்படையிலேயே முடிவு எனும் போது வந்த மனத்தாங்கலை பகிர்ந்திருந்தேன். That is not against judgement. It was also about breaching their own words.
அந்தப் பதிவுகள் இப்போது வரை இதே தளத்தில் தான் இருக்கின்றன.

அங்கு நான் மட்டுமல்ல சில பலர் ரிசலட் பற்றி தங்கள் திருப்தியின்மையை வினாக்களை பகிர்ந்திருந்தனர். ஆனால் அவர்கள் யாருக்கும் தளத்தில் இருந்து பதில் இல்லை. என் பதிவுக்கு மட்டும் தள மாடரேட்டர் வந்து சர்கசமாக வாக்குவாதமாக பதில் கொடுத்திருந்தார்.
அதிலேயே புரிந்து கொள்ள வேண்டியது யாருக்கு காழ்புணர்வு என்று. தளத்திற்கா இல்லை எனக்கா என. பலர் பேசிய இடத்தில் எனக்கு மட்டும் விதமான ட்ரீட்மென்ட்.


இதில் கவனிக்கப்பட வேண்டிய முக்கிய விஷயம்...இங்கே நான் பேசினால் அதாவது தளத்துக்கு எதிராக பேசினால், தள அட்மின் முதல் தள அபிமானிகள் வரை எனக்கு எதிராக கோபம் மற்றும் வார்த்தைகள் வீசுவர் என தெரியும்.
இருந்தும் நான் என் ஐடியில்தான் வந்து பேசி இருக்கிறேன்.
அப்படி இருக்க நான் ஏன் எதையோ சொல்ல இன்னொரு ஐடிக்கு செல்ல வேண்டும்?

இப்போதும் இங்கேயேதான் எனக்கு பிடிக்காததை பிடிக்கவில்லை என சொல்கிறேன். என் ஐ டியில்தான் சொல்கிறேன். நான் வேறு ஐடியில் வந்து பேசுவதாக இருந்தால் இந்த ஐடியில் ஏன் உங்களுக்கு பிடிக்காது என தெரிந்தும் பதிவிடுகிறேன்?

இப்படி பதிவிடாதீர்கள் உங்கள் இமேஜ் ஃஸ்பாயில் ஆகும் என போன அந்த குறிப்பிட்ட பதிவிற்கு அங்கேயே வாசகர் வந்து சொல்லி இருந்தார். நான் அப்போதும் அங்கேயே இதே ஐடியில் பேசி இருந்தேன், இப்போதும் இதே என் பெயரோடு என் ஐடியில்தான் வந்து என் மனதாங்கலை பகிர்கிறேன்.

அப்படி இருக்க இன்னொரு ஐடியில் வந்துதான் உங்களை பழி பேச வேண்டும் என என்ன அவசியம் எனக்கு?

போட்டி முடிவுகளை விரும்பாத எந்த வாசகரும் என்னமும் பேச முடியும். அதற்கெல்லாம் எழுத்தாளரா பொறுப்பாக முடியும்?

இறுதியாக...

இந்த என் பதிவுக்கு முந்திய பதிவு தளத்தில் லிங்க் வைப்பதை அல்லது டெலிட் செய்வது பற்றியது. டெலிட் செய்வதற்கு முன்பு ஒத்துக் கொண்டீர்கள். லிங்கை சில வார காலம் டெலிட்டும் செய்திருந்தீர்கள். இப்போது எங்கள் ஆரம்ப நிபந்தனையே அதற்கு எதிரானது என்கிறீர்கள் என்பதை பற்றியது.
அதற்கு பதில் ஏன் சம்பந்தமில்லாமல் என் கேரக்டரை பற்றி போகிறது?

தன் பக்கம் உண்மை இருக்கவன் டாபிக்கை டைவர்ட் செய்ய மாட்டானே?

ஆரம்ப நிபந்தனை என இங்கு காண்பிக்கப்படும் இது என்றைய தேதியுள்ளது? சரி இப்படிதான் அவர்கள் நிபந்தனை இருந்தது என்றால் ஏன் இடையில் லிங்கை எடுக்க ஒத்துக் கொண்டார்கள்? அதை எடுக்கவும் செய்தார்கள்?

அப்போது எங்க போச்சு அந்த நிபந்தனை?

இதையெல்லாம் வாசிக்கிறவர்கள்தான் யோசித்துக் கொள்ள வேண்டும்

இங்க பேசுகிற நண்பர்களுக்கு...

என்னை பொது இடத்தில் கேரக்டர் அசால்ட் செய்கிறார்கள். நீங்களும் அதே செய்தீங்கன்னா ஆதாரம் வச்சுகோங்க... நான் லீகல் ஆக்க்ஷன் போவேன். அதையும் நீங்க எதிர் கொள்ள வேண்டி இருக்கும். என்ன ஏதுன்னு தெரியாம வந்து பேசாதீங்க.

1.png
22.png

33.png

44.png
55.png



tyiiii.png
 




Last edited:

smteam

Admin
Staff member
SM Exclusive
Joined
Jan 16, 2018
Messages
1,209
Reaction score
26,567
Location
India
தாரளமாக நீங்கள் லீகலாக போகலாம். உங்களை யாரும் கேரக்டர் அசால்ட் செய்யவில்லை. ஆனால் நீங்கள் செய்தீர்கள். அதற்கான ஆதாரங்கள், அந்த ஐடி எந்த ஐபியில் இருந்து இயங்கியது என்பது முதற்கொண்டு அத்தனை ஆதாரங்களும் உள்ளன. அதில் நீங்கள் யாருடைய கேரக்டரை அசாசினேஷன் செய்தீர்கள்?
இப்போது நீங்கள் எங்களுடைய தளத்தின் reputation ஐ கெடுக்க பார்க்கிறீர்கள். இதற்கு நாங்கள் லீகல் ஆக்ஷன் எடுக்க முடியும். உங்களுக்கு மட்டும் தான் அனைத்தும் தெரிந்தது போல பேச வேண்டாம். இது வரை நான் கடுமையாக பேச முயலவில்லை. ஆனால் இது உங்களுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை. உங்களது கதையை எடுத்தாகி விட்டது. உங்களையும் இந்த போட்டி முடிவிலிருந்து விலக்கியாகி விட்டது. இனியும் உங்களுக்கும் இந்த தளத்திற்கும் சம்பந்தம் இல்லை. இனியும் இந்த தளத்தை பற்றியும் தளத்தின் எழுத்தாளர்கள், மாடரேட்டர்கள், வாசகர்கள் என யாரை பற்றி தரக் குறைவாக விமர்சனம் செய்தாலும் லீகல் ஆக்ஷன் எடுக்கப்படும். இது தளத்தின் அட்மினாக என்னுடைய கடுமையான எச்சரிக்கை.
 




Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
@Madhumathi Bharath @*********** பொது தளத்தில் பொதுப்படையாக உங்கள் கருத்துக்களும் எதிர்ப்புகளும் தெரிவிக்கப்படும் போது எல்லோருமே கருத்து சொல்லுவாங்க. அவங்க அவங்க எண்ணங்களை பகிர்வாங்க. அதை நீங்க விரும்பவில்லை விவாதம் வேண்டாமெனில் இன்பாக்ஸில் பேசியிருக்கலாம். என் மனதிற்கு தவறென்று பட்டதையே சொன்னேன்.பகிர்ந்தேன். அப்படிதான் பலரும் பகிர்ந்து கொள்கின்றனர் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
 




Thendral

Moderator
Staff member
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
4,900
Reaction score
23,832
Location
Phoenix
முதலில் நான் உங்கள் லிங்கை நீக்கியது உண்மை தான். அதன் பிறகு நான் கவனிக்காமல் செய்துவிட்டேன் என்பதையும் உங்களிடம் தெரிவித்தேன் @*********** ...

ப்ரியா அக்கா வும் பிசியாக இருந்ததால் அதை என்னிடம் அப்போது கேட்கவில்லை.
அவர்கள் சொன்ன பிறகே நான் மீண்டும் உங்களிடம் ரூல்ஸ் பற்றி சொன்னேன்.

பிறகு பரிசு கொடுக்கும் வரை கதை நீக்க மாட்டோம் என்று நாங்கள் சொன்னதற்கு கடைசியாக நீங்கள் ஒப்புக்கொண்டதாக ஞாபகம். பிறகு எதற்காக மீண்டும் இந்த கேள்விகள் . புரியவில்லை.
 




Madhumathi Bharath

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
2,225
Reaction score
55
@Madhumathi Bharath @*********** பொது தளத்தில் பொதுப்படையாக உங்கள் கருத்துக்களும் எதிர்ப்புகளும் தெரிவிக்கப்படும் போது எல்லோருமே கருத்து சொல்லுவாங்க. அவங்க அவங்க எண்ணங்களை பகிர்வாங்க. அதை நீங்க விரும்பவில்லை விவாதம் வேண்டாமெனில் இன்பாக்ஸில் பேசியிருக்கலாம். என் மனதிற்கு தவறென்று பட்டதையே சொன்னேன்.பகிர்ந்தேன். அப்படிதான் பலரும் பகிர்ந்து கொள்கின்றனர் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
எனக்கு இது இவ்வளவு பெரிய விஷயம் என்று தோன்றவில்லை மோனிஷா அவர்களே....சாதாரண விஷயம் என்று நினைத்து விட்டேன்.கதையை ஏதாவது ஒரு தளத்தில் எழுதுவதும் பின் எழுத்தாளர் சொல்லும் பொழுது அதை நீக்குவதும் இயல்பான ஒன்று தானே...அப்படி எண்ணிதான் நான் போஸ்ட் போட்டது.கதையை முடிக்காத வாசகர்களுக்கு தெரிவித்த பின்னரே லிங்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் வாசகர்கள் தவிக்க நேருமே என்று எண்ணியும் தான் பொதுவில் போட்டது.
 




Status
Not open for further replies.

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top