RESULT FOR ZAINAB DEAR'S MAYANGATHAE MANAME PIRIYANI பிரியாணி முடிவு

#1
முதலில் என் இனிய தோழர் தோழிகள் மக்களுக்கு
என்னுடைய அன்பான வணக்கங்களை தெரிவித்துக்
கொள்கிறேன்
ஏதோ நான் பாட்டுக்கு பிரியங்கா முரளி டியரின்
இந்த அழகிய சைட்டுக்கு வந்தேனா?
இரண்டு கதையை படிச்சேனா?
(இரண்டு கதைதான் பட்ச்சியா?
புளுவாதே, பானுஊஊஊ)
கமெண்ட்ஸ்-ங்கிற பேர்ல ஏதோ இரண்டு வார்த்தை
உளறினேனான்னு போய்க்கிட்டிருந்தேன்

நம்ம ஜைனப் டியர் அழகியின் அழகிய "மயங்காதே
மனமே" நாவலுக்கு பிரியாணிக்கு நான் ஜட்ஜ்ஜா
இருந்து ஒரு நல்ல பிரியாணியை செலக்ட்டு
செய்யோணுமுன்னு (அழுது அடம் புடிச்சு உருண்டு
பெரண்டு கேட்டாங்க
(மை மைண்ட் வாய்ஸ் இதெல்லாம் உனிக்கே
ஓவராத் தெர்லயா, பானு?=ன்னிச்சி
அத்த போ அக்கட்டால=ன்னு தொரத்தி
வுட்டுப்புட்டோமில்ல?)
ஹீ... ஹீ... ஹீ...............
தௌசண்டு-தான் இருந்தாலும் நமக்கு
சோறுதாங்கோ மிக்கியம்
பிரியாணிய வோணாமுன்னு நாம சொல்லுவோமா?
அத்னால, நானு ஜட்ஜ்ஜா ஆனதுக்காண்டி
அல்லாரும் ஏதோ அவிங்களால மிடிஞ்ச
ஆப்பிளு, ஆரஞ்சு=ன்னு வாங்கியாங்கோ
நொம்ப கஷ்டமான எயுமிச்சம் பயமெல்லாம்
வாங்கி கயட்டப்பட வோணாமுங்கோ
ஹா... ஹா... ஹா.........

ஹரிணி டியர்’S பிரியாணி
‘’தாமரை இலையில் நீர் ஒட்டாததைப் போல
தாமரையின் கண்களிலும் நீர் தங்காது மெல்ல
வடிந்தது’’
ஆஹா, என்ன ஒரு அழகான உவமை,
ஹரிணி டியர்?
‘’அவளை அமைதிப்படுத்துவது போல தன்னையும்
சமன்ப்படுத்திக் கொண்டான்’’
ஆஹா, இதுதான் பக்கத்துக்கு இலைக்கு பாயாசமோ?
‘’மித்ரனோட பொண்டாட்டியை யாரும் எதுவும் சொன்னா
அவங்க மித்ரனுக்கு சத்ரு’’
ஹரிணியோட பிரியாணியில் வஜனம்=லாம்
செமையா இருக்குப்பா
ஜூப்பருங்கோ, ஹரிணி டியர்

சங்கீதா டியர்’S பிரியாணி
‘’ நித்ய மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான
மலரல்லவோ’’-ன்னு பாடி மிரு மச்சானை, இல்லை
மிரு அத்தானை சாய்ச்சுப்புட்டாளே, சங்கீதா டியர்
தாமரை சாய்ச்சுப்புட்டாளே?
சங்கீதா டியரின் பிரியாணியும் கிளுகிளுப்பாகவே இருக்கு
புதுசா வந்த மருமகள் எப்படி நடந்துப்பாளோ
அப்படி நடந்துக்கிறாள், தாமரை
மருமகளைப் போல இல்லாமல் பேரனின் மனைவி
தாமரை பதவிசாக, பாந்தமாக குடும்ப குத்துவிளக்காக
நடந்து கொள்வதைப் பார்த்து ஜெயந்தி பாட்டிக்கு
மட்டுமில்லே, எங்களுக்கும் சந்தோசம்=தான்,
சங்கீதா டியர்
மித்து and தாமரை ரொமான்ஸ் மட்டுமில்லாமல்
அபி and கீத்து ரொமான்ஸையும் சங்கீதா டியர்
கொடுத்திருக்காங்க
ஒரே பிரியாணியில் இரண்டு ஜோடிக்கும்
ரொமான்ஸா?
இதெல்லாம் ரொம்பவே அநியாயம், சங்கீதா டியர்

எல்லோருமே தங்கை தாமரையிடம் கதிர் முகம்
திருப்புவதை சொல்லியிருக்காங்க
தனக்கு-ன்னு இருக்கும், தான் எல்லாமுமாக நினைக்கும்
ஒரே சொந்தம், தன்னை ஒரு வார்த்தை கேட்காமல்
கல்யாணம் செய்து கொண்டால் எந்த அண்ணனுக்கும்
கோபம் வரத்தான் செய்யும்
கோபத்தை விட வருத்தம்=தான் கதிருக்கு அதிகம்-ப்பா
ஆயிரம் சமாதானங்கள் தாமரை சொல்லட்டுமே
அவள் செய்தது தவறு=தான், ஜைனப் டியர்
ஆனாலும் ஒய்ப்பு, பைப்பு முன்னாடி உங்க பேரன்
மித்ரனை நீங்க இப்படி டேமேஜ் பண்ணக்கூடாது,
மதுராந்தகன் தாத்தா

அபர்ணா டியர்’S பிரியாணி
‘’வா நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா
தேன் நிலா எனும் நிலா மித்ரனின் தேவியின் நிலா’’
‘’பூக்குவியலை முகர முகாந்திரம் தேவையில்லை’’
‘’போதை உண்டவனால் மட்டுமே போதையை
உணர முடியும்’’
ஆஹா, என்ன அழகான வரிகள், அபர்ணா டியர்?
கவிஞரல்லவா?
அதான் பிரியாணியை அபர்ணா டியர் கவிதையாக
பின்னிப் பெடலெடுத்துட்டாங்க
சாரி, சமைச்சிருக்காங்க
அபர்ணா டியரின் பிரியாணியில் பெண்ணின்
இன்னொரு பரிமாணம் மிளிர்கிறது
கணவனிடம் தாசியாக இருக்க வேண்டிய நேரத்தில்
தாசியின் கடமையை தாமரை செவ்வனே செய்கிறாள்
‘’நிலாக் காயுது நேரம் நல்ல நேரம்’’ அபர்ணா டியரின்
பிரியாணிக்கு பொருத்தமான பாடல்
‘’ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ’’
‘’பால் தமிழ்ப்பால் எனும் நினைப்பால் இதழ் குடிப்பாள்
அதன் சிரிப்பால் சுவை அறிந்தேன்’’
அந்தரங்கம் புனிதமானது=ன்னு கவிஞர் அபர்ணா மேடம்
சொல்லிட்டாங்கப்பா
ஹா... ஹா... ஹா............
பாலைக் குடிக்கும் பூனைக்கு இத்தனை விதமான
விளக்கங்கள் இன்றுதான் கேட்டேன்ப்பா

வித்யா நாராயணன் டியர்’S பிரியாணி
அபிமன்யுவுக்கு ஒரு ஆடி கார்=ன்னா
மிதரனுக்கு ஒரு மசாரேட்டி காரா?
சூப்பர்ப், வித்யா நாராயணன் டியர்
‘’அவர் கெட்டவர்தான் ஆனாலும் ரொம்ப நல்லவர்’’
இதுதான் முரண்பாடு=ங்கிறதோ, தாமரைப் பெண்ணே?
உன்னைய நொம்ப நல்லவன்-னு சொல்லி தாமரைப்
புள்ள சாய்ச்சுப்புட்டாளே, மித்ரன் மச்சான
சாய்ச்சுப்புட்டாளே
தங்க தாமரை மகள் மொத்தமா முத்தம் வேற
கொடுத்துட்டாளே
வித்யா நாராயணன் டியரின் பிரியாணியும்
செம கிளுகிளுப்பு=ப்பா, ஜைனப் டியர்

எல்லாப் பிரியாணியுமே சூடாக, சுவையாக
அசத்தலாக இருக்கே
ஐயோ, எனக்கு எந்த பிரியாணி சிறந்தது=ன்னு
தேர்ந்தெடுக்க ஒரே குழப்பமாக இருக்கே?
நான் எப்படி கண்டுபிடிப்பேன்?
யாரைப் போய் கேட்பேன்
சொக்கா, நீதேன் இங்கிட்டு வந்து என்னைய
காப்பாத்தனும், சொக்கா, சோமசுந்தரா

ஈஸ்வரி காசிராஜன் டியர்’S பிரியாணி
கிளுகிளுப்பான பிரியாணியை எதிர்பார்த்தால்
நம்ம ஈஸ்வரி காசிராஜன் டியர் வில்லங்கத்தை
அந்த சோனா வினையை மித்ரனின் வேட்டியில்
கட்டிக்கொண்டு வந்துட்டாரேப்பா
ஹா... ஹா... ஹா..............
புதுப் பொஞ்சாதியை குஷிப்படுத்த கடைக்குக்
கூட்டிட்டுப்போய் துணிமணி, நகைநட்டு
(ஸ்க்ரூ டிரைவர்ரோடதான்-ப்பா) தாமரைக்கு,
மித்ரன் வாங்கிக் கொடுத்தால் இலவச இணைப்பாக
சோனா டிராகுலா வந்துட்டாளே?
வந்தவள் தாமரையோட ஓன் பிராபர்ட்டியை,
சொத்தை மித்துவை களவாடப் பார்க்கிறாளே=ப்பா,
ஈஸ்வரி டியர்?
உன்னை தாமரை முறைத்தால் "மொறைக்காதே
சும்மா மொறைக்காதே''ன்னு நீ பாடிடு, மித்ரன் டியர்
ஹா... ஹா... ஹா.............
தாமரைக்கு தலைவலி=ன்னு ஒரு பொய்யைச் சொல்லி
பாட்டியோட பேச்சைக் கேட்டு சூடான டீ வாங்கிட்டு
வந்ததுக்கு நல்லா குளுகுளு=ன்னு ஐஸ் கிரீம் கொண்டு போயிருக்கலாமில்லே, மித்ரன் தம்பி?
உனக்கு சேதாரம் கொஞ்சம் கம்மியாகியிருக்குமில்லே-ன்னு
நினைச்சா நல்லவேளையா இறுக்கி அணைச்சு உம்மா
கொடுத்து மித்ரன் அய்யா தப்பிச்சுட்டாரு
ஆனாலும், அந்த சோனாவோட ஆடாத ஆட்டமெல்லாம்
ஆடிப்புட்டு மித்ரனோட மைண்ட் வாய்ஸ்=லாம் ரொம்பவே
அநியாயம், ஈஸ்வரி டியர்

ஷாந்தினிதாஸ் டியர்’S பிரியாணி
‘’அந்த நிலவினை நீ பார்த்தால் அது உனக்கென வந்தது
போலிருக்கும்’’ இல்லையா, தாமரை டியர்?
''கண்ணும் கண்ணும் நோக்கியா''-வா, மித்ரன் டியர்?
அம்மாவைப் போல ஒரு பெண்ணைக் கேட்ட விநாயகர்
பெருமானுக்கு பெண் கிடைத்தாளோ இல்லையோ
பாட்டியைப் போல ஒரு மனைவியைக் கேட்ட
நம்ம மித்ரனுக்கு தங்கத் தாமரை கிடைத்து விட்டாள்,
ஷாந்தினிதாஸ் டியர்
தன்னை விட தாமரையை மித்ரன் நன்கு கவனித்துக்
கொள்வான்=னு கதிரை சொல்ல வைத்து கதிருக்கு
மிகப் பெரிய அவார்டு கொடுத்து விட்டீர்கள், ஷாந்தினி டியர்
மனைவியிடம் தோற்றுப் போக விரும்பும்
விருப்பமுடனே தோற்கும், தோற்று ஜெயிக்கும், மித்ரன்
அருமை, வெகு அருமைப்பா
''விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த
உறவே இரவும் பகலும் உரசி கொள்ளும் அந்திப் பொழுதில்
வந்து விடு அலைகள் உரசும் கரையில் இருப்பேன்
உயிரை திருப்பி தந்து விடு..........''
வாவ், தாமரை, மித்ரனுக்கு ரொம்பவும் பொருத்தமான
பாடல், ஷாந்தினிதாஸ் டியர்

சுவிதா டியர்’S பிரியாணி
வாவ், நம்ம சுவிதா டியர் செமையாக பிரியாணி
செஞ்சிருக்காங்கப்பா
‘’எங்கே அவள் என்றே மனம் தேடுதே ஆவலாய்
ஓடி வா’’=ன்னு ஆசையாசையாய் பாடிட்டு எங்கள்
மித்ரன் செல்லம் வந்தால், இப்பிடிக்கா பொசுக்குன்னு
ரூம்புக்குள்ளாறயே இருந்துக்கிட்டயே, தங்கத்
தாமரைப் பெண்ணே?
உன்னோட தங்காச்சி செஞ்சது நொம்பவும் தப்புத்தேன்
அதுக்காண்டி இப்பிடிக்கா நெற்றிக்கண்ணை நீயி
திறக்கக்கூடாது, கதிர் தம்பிரி
(ஒருவேளை, அந்த நக்கீரருக்கு தங்கச்சி இல்லையோ?
என்னவோ தெரியலையே, சுவிதா டியர்?)
ஏன்மா, தாமரை?
உங்க நொண்ணனை மீறி தன்னை கல்யாணம்
செய்யச் சொல்லியா எங்கள் மித்ரன் கேட்டான்?
உனக்கெங்கே புத்தி புல் மேயப் போனதா?
இது நல்லாயிருக்கே கதை?
நீ தப்பு செஞ்சுப்போட்டு எங்கள் மித்ரனை குற்றம்
சொல்வாயா?
"வந்தாள் மஹாலக்ஷ்மியே............" தாமரைக்கு
மிகவும் பொருத்தமான பாடல், சுவிதா டியர்

பிரேமலதா டியர்'S பிரியாணி
நம்ம பிரேமலதா டியர் ஒருத்தர் மட்டும்=தான்ப்பா
தாமரையை கதிர் மன்னித்து ''அண்ணன் ஒரு
கோவிலென்றால் தங்கையொரு தீபமன்றோ"-ன்னு
தாமரையை பாட வைச்சுட்டாங்க
"தங்காச்சிய நாய் கட்ச்சிருச்சி" ரேஞ்சுக்கு கதிர் பாசம்
பொழிஞ்சு அந்த பாசத்துல நானு வயுக்கி வுயுந்து
கால் முட்டி பேந்துக்கிட்ச்சிப்பா
அண்ணன், தங்கை இரண்டு பாசமலர்களும் பாசத்தை
மழையாய்க் கொட்டி அந்த பாச மழையில் நனைஞ்சு
என்க்கு ஜல்ப்பு பிட்ச்சிக்கிச்சு, பிரேம்ஸ் டியர்
‘’மச்சான் மச்சான் உன் மேல ஆசை வச்சான்
வச்சு தச்சான் தச்சான் உசுரோடு உன்னை தச்சான்’’
யம்மா, நம்ம பிரேமலதா டியர் கொடுத்த பிரியாணி
செம செம ஹாட் அண்ட் ஸ்பைசி பிரியாணி=ப்பா
அம்மாடி, பிரேம்ஸு செல்லம்
கல்யாணமான அடுத்த நாளே பொஞ்சாதியை ஆப்பீஸ்
கூட்டிட்டுப் போப்படாது=ன்னு ஜெயந்தி பாட்டிக்கும்
நேக்கும் தெரியறது
நோக்குத் தெரியலையோ, மித்ரன் தம்பி?
ஐயோ பிரேமலதா டியரோட பிரியாணி படிக்கும் பொழுது
எனக்கு ஒரே வெக்கம் வெக்கம்ஸ்=தான் கமிங்கு=ப்பா
''ஜல்லு ஜல்லு-ன்னு வந்து என்னை கொல்லாமல்
கொல்லுறியே, ஜில்லு"
"அத்தான் என்னத்தான் அவர் என்னைத்தான்
எப்படி சொல்வேனடி.............."
இப்பிடிக்கா நீயி குளிச்சுப்போட்டு சும்மா ஜல்லு ஜல்லு-ன்னு
இப்பிடிக்கா ஜில்லு=னு வந்தா உன்னோட லவ்வான லவ்வு
அயித்தான் மித்ரனோட பிஞ்சு நெஞ்சு பஞ்சராயி உன்
பின்னாலேயே வந்து கம் போடாமலே கம்முனு ஒட்டிக்கிச்சே,
ஜில்லுப்பெண் தாமரைப்பெண்ணே

மஹாலக்ஷ்மி டியர்'S பிரியாணி
மித்ரன், அவனோட பொஞ்சாதிய புஜ்ஜிம்மா=ன்னு
கூப்பிட்டாலும் சரி
பஜ்ஜிமாவு, போண்டா மாவு=ன்னு கூப்பிட்டாலும்
எங்களிக்கி நோ நோ அப்புஜெக்க்ஷன், மஹாலக்ஷ்மி டியர்
நம்ம மஹா செல்லமும் கதிர் தம்பியை ''அண்ணன் ஒரு
கோவில்'' ரேஞ்சுக்குத்தான் சொல்லியிருக்காங்க-ப்பா
இவங்களோட பிரியாணியும் ஒரே ஹாட்டு and ஸ்பைஸியா
ஜூப்பரா கீதுங்கோ
போறாக்குறைக்கு மித்ரனும், தாமரையும் பண்ணை
வூட்டுக்குலாம் போயி, நீச்சலடிச்சு செம அஜால் குஜாலா
இவிங்கோ பிரியாணி கீதுங்கோ

ஆரோட பிரியாணி சூப்பரு=ன்னு சொல்லங்காட்டி
நாக்கு (எனிக்கு) நாக்கு தள்ளுதுங்கோ
இருந்தாலும் என்னோட சிற்றறிவுக்கு எட்டின வரையில
நம்ம சைட்டோட அல்டிமேட் ஸ்டார் செல்லக்குட்டி
பிரேமலதா டியரோட பிரியாணி சூப்பரா இருக்கு=ன்னு சொல்லிக்கிறேனுங்கோ
என்னோட ஜட்ஜ்மெண்ட் தப்பா இருந்தால், குணமா வந்து
நாட்டாமை தீர்ப்பை மாத்து-ன்னு சொல்லிக்கோங்கோ
நோ கட்டை தூக்கிப்பையிங்
ஓகேவா
LASTLY, நேத்தே BEST பிரியாணி ரெடி பண்ணிட்டேன்
சில பல நகாசு வேலைகள் இருந்தது
SORRY FOR THE DELAY என் இனியத் தோழிகளே
வணக்கம்
வந்தனம்
நமஸ்காரம்
நமோஸ்கார்
கோடி நன்றிகள் சொல்லிக்கிறேனுங்கோ,
ALL MY DEAR ஸ்வீட்டீஸ்
 
Last edited:

Sponsored

Latest Episodes

Advertisements

Top