• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Review - என் இதயம் திருடிச் சென்றவனே (சந்தியா ஶ்ரீ)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

MaryMadras

இணை அமைச்சர்
Joined
Jun 13, 2019
Messages
879
Reaction score
2,970
Location
India
மிகவும் அருமையான கதை சந்தியா????.ஆதி, அபூர்வா மேல் கொண்ட காதல்.சந்தர்ப்பவசத்தால் அபூர்வை தவறாக எண்ணி அவளை விட்டு பிரிவதும், தன் விடாமுயற்ச்சியால் உழைத்து உயர்ந்த நிலையை அடைவதும்,அபூர்வாவுடன் சேர்வது தான் கதை????.

அபூர்வா ,மேனகாவின் சதியால் அவள் கொடுத்த துன்பங்களையும் தாங்கிக்கொண்டு,ஆதியிடம் துரோகி பட்டத்தையும் பெற்றுக்கொண்டு , ஐந்து வருடங்கள் பிரிந்து இருந்தவள் ஆதியை தேடி கொல்கத்தா செல்கிறாள்.
உண்மை தெரிந்த ஆதி,அபூர்வாவை திருமணம் செய்து கொண்ட பின்பும்,மேனகா தங்களை பிரித்து விடுவாள் என பயப்படுவதை தெரிந்து கொண்டு ஆதி,அபூர்வாவுக்காக எடுக்கும் முயற்ச்சிகள் அருமை.

தங்கள் பிரிவுக்கு மேனகா தான் காரணம் என்று தெரிந்து கொண்ட ஆதி,சாரு,சிந்துவின் உதவியுடன் எந்த பணம் தங்கள் பிரிவுக்கு காரணமாக இருந்ததோ,அந்த பணமே மேனகாவிடம் இல்லாமல்,செய்வதுடன், தனது தங்கைகளுக்கு திருமணமும் செய்கிறான்.மேனகாவை போன்றவர்கள் திருந்தவே மாட்டார்கள்??

ரேவதி ஆரம்பத்தில் ஆதியிடம் நடந்து கொள்ளும் விதமும்,அபூர்வாவின் காதலை தெரிந்து கொண்டு கார்த்திக்கை திருமணம் செய்வது,கார்த்திக்கின் காதலினால் ஏற்படும் மாற்றம் பாராட்டதக்கது???.

மஞ்சுளாவுடன் தனியே வளர்ந்த ஆதிக்கு,சக்தி,ரக்சிதா,ராகவ்,சஞ்சனா அவர்கள் பெற்றவர்களுடன் மகிழ்ச்சியான,கலகலப்பான வாழ்க்கை கிடைத்தது????.

ஆதி குறிஞ்சி மலர் கொடுத்து தன் காதலை சொல்வதும் ,எத்தனை மழை வந்தாலும் என் நெஞ்சில் எரியும் உன் மீதான காதல் தீ அணையாது பெண்ணே,என் காதலை அப்படியே பிரதிபலிக்கும் இந்த செங்கொன்றை மலர்கள் என கூறுவது கவிதை????.
அழகான காதல் கதை.எளிமையான நடை.இனிமையான முடிவு.வாழ்த்துக்கள் சந்தியா?????.
 




Sukinathan

புதிய முகம்
Joined
May 20, 2020
Messages
1
Reaction score
3
Location
Uk
நல்ல கதை . அனல் பதிவு 1-21 அவரை அதன் படித்தேன். மத பதிவுகளைக் காணல. Pls let me know. எப்படி முழுக்கதையையும் வாசிக்கலாம்.
 




MaryMadras

இணை அமைச்சர்
Joined
Jun 13, 2019
Messages
879
Reaction score
2,970
Location
India
நல்ல கதை . அனல் பதிவு 1-21 அவரை அதன் படித்தேன். மத பதிவுகளைக் காணல. Pls let me know. எப்படி முழுக்கதையையும் வாசிக்கலாம்.
முழு நாவல் போஸ்ட் செஞ்சிருக்காங்க அதுலே படிங்க☺☺.
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top