• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Reviews Review by Murugesan Lakshmi

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

anisiva

SM Exclusive
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,578
Reaction score
7,649
Location
Tvl
Source-fb

சகோதரி அனிசிவா அவர்களுக்கு,
உங்களின் “இப்படிக்கு மயூரவள்ளி” நாவலை பற்றி சில வார்த்தைகள். உரிமைக்கும், உரிமை போராட்டத்துக்கும் நடக்கும் நிகழ்வை சொல்லிய நாவல் சகோ இது. இறந்து போன உயிர் நண்பனின் மகளை வளர்த்து, அவளுக்கு திருமணம் செய்ய நினைக்கிறார்கள் அமுதா – கனகவேல் தம்பதியினர். அவர்களின் மூத்த மகன் அவளை விரும்ப, அவர்களின் இளையமகனுக்கும், அவளுக்கும் அழகிய சகோதரத்துவம் கலந்த நட்பு நிலவுகிறது. இது மூத்தமகனின் மனதை நெருட, அதுவே அவனின் தன் உரிமை என்ற உணர்வை தூண்ட, பிரிவுக்கு வழி வகுக்கிறது. மீண்டும் சேர்ந்தார்களா? என்பதை மலர் பொக்கையுடன் நாவலை முடித்துயிருக்கிறீர்கள் சகோ.

எதையும் மிகைப்படுத்தி எழுதாமல், அதன் போக்கிலே நாவல் போகிறது சகோதரி. எங்கேயும் விளக்கம் இல்லை, ஆனால் புரிதலை, உண்டாக்கி கொண்டே போகிறது நாவல். அவளை ஏன் உறவுகள் வளர்க்கவில்லை என்று கேள்வி எழும்புதா? இந்தா பிடி குருமாவின் (குரு மாமா) பணத்தாசை,மற்றும் சுயநல பேச்சு / விஷ்ணுவுக்கும் அவளுக்கும் என்ன உறவு என்று கேள்வி வருதா? இந்தா பிடி. காதலையும் தாண்டி உயிரோட்ட நட்பு / விவேக் ஏன் விரும்பினான், ஏன் அவளை முன்னர் வெறுத்தான் என்று கேள்வி எழும்புதா? அவனின் மூலமே பதில் தந்தது. காயமும் நானே, மருந்தும் நானே. காரணமும் நானே, காரியமும் நானே. {இருப்பினும் அவன் வெறுப்புக்கு நண்பர்களின் கேலி என்று காரணம் சொன்ன நீங்கள், அவனின் விருப்புக்கு இன்னும் அழுத்தமான காரணம் சொல்லி இருக்கலாம் சகோதரி} / அமுதா – கனகவேல் தம்பதிகள் நல்லவர்களா? என்று கேள்வி வருதா? தன் சொந்த மகனின் வாழ்வை விட நண்பனின் மகள் வாழ்வே பெரிது என நினைப்பவர்கள் என்று பதில் / மயூரி, சுயமரியாதை அற்றவளா?, செய்நன்றிக்கு செவி சாய்ப்பவளா? என்று கேள்வி வந்த போது, இல்லை அவள் சுயம் உள்ளவள் என்று சொன்ன பதில்கள் அருமை சகோதரி. எங்கேயும் விளக்கம் இல்லை சகோதரி. அதேநேரம் உங்கள் எழுத்து விளங்க வைக்காமலும் போகவில்லை. அருமை சகோதரி.
9௦”kits போல் விஷ்ணுவின் கல்யாண அலப்பறைகளும், கல்யாணத்துக்கு பின் “ஆலாய்” பறப்பதும், மற்றும் அமுதா அத்தையின் கல்யாண கண்டிஷன்கள்,வெண்டக்காய் புலம்பல்களும் கிளாஸ் நகைச்சுவையின் அம்சம். அமுதா – கனகவேல் தம்பதிகள் நல்லவர்களின் மிச்சம். ஹீரோ தகுதியை இழந்து கொண்டு இருந்த விவேக், பசும்பொன் பிரபு போல் “என் தம்பியை நான் அடிப்பேன், எவனும் கேட்க கூடாது, என் தம்பியை எவனும் அடிக்க கூடாது, நான் கேட்பேன் டா” என்ற ஒரே டைலாக் மூலம் ஹீரோ அந்தஸ்தின் உச்சம். முழுக்க, முழுக்க மயூரியின் பார்வையில் நகரும் நாவல். அவளின் உள்ளம், உணர்வு, உறுதி என நாவல் நெடுக்கிலும் அவளின் விலாசங்கள். அவள் மூலம் டாக்டர்களின் சிரமங்களை சொல்லியது அருமை. இம்முறை அங்கங்கு மட்டுமே சில கருத்துக்கள் சகோ. எப்போதும் காலையில் வரும் பிரச்சனைகள் தனியே வருவது இல்லை என்பதும், எத்தனை சண்டைகளை மீறியும் உண்மை நட்பு, உயிர்ப்புடன் இருக்கும் என்பதும் உண்மை. மற்றும் மாமியார் – மருமகள் பிரச்சினைகளுக்கு மகன்களே காரணம் என்பது உண்மையின் நிதர்சனம்.

மொத்தத்தில் ஒரு அழகிய குடும்ப நாவலை படித்த மகிழ்வு. “மிஸ்” செய்ய கூடாத நாவல், “மிஸ்” செய்ய கூடாத எழுத்து. வாழ்த்துக்கள் சகோதரி.
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
வழக்கம் போல அருமையான விமர்சனம், முருகேசன்லக்ஷ்மி சகோதரரே
நல்லதொரு அழகான நாவலைப் படைத்ததற்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள், அனிசிவா டியர்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top