• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Rudrangi - 14

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Aadhiraa

SM Exclusive
Author
Joined
Jan 17, 2018
Messages
1,073
Reaction score
7,772
Location
Tirunelveli
~14~

விளக்கை அணைத்துவிட்டுப் படுக்கும் ரவியை முறைத்துப் பார்த்து அப்ஷரா அமர்ந்திருக்க, அவனும் அவளைக் கண்டு கொள்ளவில்லை.

சில மணி நேரம் விழித்திருந்து முறைத்தவளிடம், “எனக்கு டையர்டா இருக்கு டி..நாளைக்கு காலையில முறைக்கலாம் இப்போ தூங்கு..” என்றவன் அவளை இழுத்துப் படுக்கையில் சரித்தவன், மறுபுறம் படுத்துவிட்டான்.

சில குழப்பங்களுக்கு பின் இருவரும் தூங்கும் நேரம் சூரியன் தனது கரங்களை பரப்பத் துவங்கியிருந்தது.

நேரம் கடந்த தூங்கியதால் அப்ஷரா அலாரம் அடிக்கும் சத்தம் கூடக் கேட்காமல் ஆழ்ந்த துயில் கொள்ள, எப்போது எழும் நேரத்திற்கு எழுந்தவன் அவளது நெற்றில் தனது இதழை மெல்லப் பதித்து உடற்பயிற்சி அறைக்குள் நுழைந்தான்.

உடற்பயிற்சியை முடித்து பேப்பர் படிக்கும் போது சத்து கஞ்சியுடன் அவனை எதிர் கொண்ட ருத்ரா,அப்ஷரா பற்றி வினவ அவளிடம், “தூங்கிட்டு இருக்கா” என்றுரைத்தவன் அவளது கேலி பார்வையை எதிர்கொள்ளப் பயந்து பேப்பரில் தனது பார்வையைப் பதித்தான்.

ரவி அலுவலகம் செல்லும் வரையிலும் கூட அவள் எழவில்லை அவளது கன்னத்தில் தனது இதழைப் புதைத்து, “சாரி ஃபார் எவ்ரிதிங் டி..” என்றவனின் குரலில் உண்மையான வருத்தம் எட்டிப் பார்த்தது.

அலுவலகம் வந்துவிட்டான் தான் ஆனால் வேலை மட்டும் செய்ய முடியவில்லை..நேற்றே அவள் உண்ணாமல் இருந்தது வருத்தத்தைக் கொடுக்க எப்போதும் மதிய உணவிற்கு வீட்டிற்கு வராதவன் இன்று நேரத்தோடு வந்து சேர்ந்தான்.

மதிய உணவிற்கு எழுந்தவள் குளித்து முடித்து மணி பார்க்க அது ஒன்று எனக் காட்டியது. ‘அய்யய்யோ இவ்வளவு நேரம் தூங்கிட்டோமா?’ மனதிற்குள் அதிர்ந்தவள், கீழே சென்றாள் ருத்ராவும் ஞானவேலும் கிண்டல் செய்வார்களே எனப் பயந்து அறையில் அமர்ந்து நேற்று நடந்தவற்றை அசைபோட துவங்கினாள்.

அவள் அமர்ந்த பத்து நிமிடங்களில் ரவியின் கார் வீட்டினுள் நுழைய, அவனது வருகையை ஆச்சர்யமாய் பார்த்தாள் ருத்ரா.

வந்தவன் எதிரில் நின்றருத்ராவை கண்டு கொள்ளாமல் மாடி ஏறி அறைக்குள் நுழைய,

“என்ன டா..கார் சத்தம் கேட்டுச்சு இந்த நேரத்துல யார் வந்தது..?” என்றார் கண்ணாடி கண்ணில் மாட்டிக் கொண்டு.

“எல்லாம் அண்ணன் தான் அப்பா..” அதிசயம் போல் ருத்ரா சொல்வதைக் கேட்டவர் சிரிக்க

“எதிர்ல நிக்கிற என்னைக் கூட கவனிக்காம அவன் ரூமுக்கு போயிட்டான் பா..” என்றாள் அதே வியப்புடன்

“விடு விடு இப்போ தான் பையன் வாழ ஆரம்பிச்சிருக்கான்..” என்றார் சிரிப்பினூடே.

“சரி டா..வா சாப்பிடலாம்..மேல போன் பண்ணி வரச் சொல்லு..” என்றவர் உணவு மேஜை நோக்கிச் செல்ல, ருத்ரா ரவிக்கு போன் செய்தாள்.

இரண்டு இரண்டு படிகளாய் தாவி மேலேறிய ரவி, அவனது அறையின் கதவைத் தட்ட நினைவலைகளில் மூழ்கியிருந்தவளுக்குக் கதவு தட்டும் ஓசை நிகழ்வுக்கு இழுத்து வந்தது.

ருத்ரா என நினைத்து தயக்கத்துடன் கதவைத் திறந்தவளுக்கு விடையை ரவி நின்றிருக்க, இந்நேரத்தில் அவனது வருகை அவளுக்கு வியப்பளித்தது.

கதவைத் திறந்து வழிவிடாமல் தன்னை வியப்புடன் பார்க்கும் அப்ஷராவின் தோள் தொட்டு உள்ளே தள்ளியவன் அவள் பின்னோடு நுழைய, இன்னும் அவளது வியப்பு கூடியது.

“ஹலோ மேடம்..” அவள் முன் சொடக்கிட்டு அழைத்தவன் வினவ

“என்ன….ஹாங்…” என்றாள் அவனிடம்

“ஒண்ணுமில்லை...சரி வா சாப்பிட போகலாம்..” என்றான் இலகுவாய்.

நேற்றிலிருந்து அவனது செய்கை அவளுக்கு வியப்பையும் குழப்பத்தையும் மாறி மாறி வழங்க, ‘இவனை நம்பலாமா வேணாமா’ மனதிற்குள் ஓடியதை முகம் கண்ணாடியை பிரதிபலிக்க

“என்னை நம்புறது தவிர உனக்கு வேற வழியில்லைங்க மேடம்” என்றவனின் கை அவளை இழுத்துக் கொண்டு கீழே செல்ல முயன்றது.

“இல்லை நான் வரமாட்டேன்..” என்றவள் கட்டிலின் விளிம்பைப் பிடித்து கொண்டு நிற்க

“எதுக்கு டி..?” என்றான் கேள்வியாய்

“டி யாம் டி இதுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை” மனதிற்குள் திட்டுவதாய் நினைத்து வெளியே சத்தமாய் திட்டி வைத்தாள் அப்ஷரா

“வேற எதுக்கு டி குறைச்சல்..?” அவளது கையை தன்னோக்கி இழுக்க

தன்மேல் மோதி நின்றவளின் இருக்கரங்களையும் பிடித்துக் கொண்டவன், “வா டி சாப்பிட போகலாம்..” என்றான் நயமாய்.

அவனிடம் இருந்து திமிரி விலக முயற்சித்தவாறே, “நான் வரமாட்டேன் நீங்க போய் சாப்பிடுங்க…” என்றாள்.

“நேத்து வரைக்கும் நல்லா தானே இருந்தா..?” என நினைத்தவன்

“எதுக்கு வரமாட்ட..?”

“நான் வரமாட்டேன்..இப்போ போன ருத் அக்காவும், அங்கிளும் கிண்டல் பண்ணுவாங்க..” முணுமுணுப்பாய் அவள் சொல்ல

‘இவ்வளவு தானா..?’ என்பது போல் பார்த்தவன்

“என்கூட வா..யாரும் உன்னை ஒண்ணும் கிண்டல் பண்ண மாட்டாங்க..” என்றவனின் பேச்சை நம்பியவள்

அவனுடனே சென்று அவனுடனே உண்டுவிட்டு மேலே வர நினைக்க அவளது செய்கையில் ஞானவேலும் ருத்ராவும் சிரித்துக் கொண்டனர்.

அவர்களது முகத்தில் தெரிந்த நக்கலை அடிக் கண்ணால் அவள் கண்டும் காணாதது போல் அமர்ந்து கொண்டாள்.

ரவியின் முன் அப்ஷராவை கிண்டல் பண்ணாமல் அமைதியாய் இருந்திட அறையினுள் நுழையப் போனவளை கீழிருந்து அழைத்தாள் ருத்ரா..

ருத்ரா அழைப்பில் அப்ஷரா ரவியைப் பார்த்து ஙே என விழிக்க, நக்கல் சிரிப்பு சிரித்தவன் குளியலறைக்குச் சென்றுவிட்டான்.

மறுபடியும் கீழிருந்த படியே ருத்ரா அழைக்க, இம்முறை வேறு வழியில்லாமல் படியில் இறங்கினாள் அப்ஷரா..

ருத்ராவும் ஞானவேலும் அப்ஷராவை கழுவி ஊத்த காத்திருக்க ஆபத்பாந்தவனாய் வீட்டின் வாயிலில் வந்து நின்றது ருத்ரனின் கார்.

காரை வைத்தே யார் என ருத்ரா அறிந்து கொள்ள, அப்ஷராவும் ஞானவேலும் யார் எனக் கேள்வியாய் பார்த்தனர்.

கார் நின்ற வேகத்தில் ருத்ரன் இறங்கி வீட்டினுள் நுழைய, மறக்கக் கூடிய முகமா அவனுடையது என்பது போல் ஞானவேல் அதிர்ச்சியாய் பார்க்க, ருத்ராவும் தந்தையைத் தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“வாங்க ப்ரோ வாங்க வாங்க..” வாய் நிறைய அப்ஷரா வரவேற்க அவளின் சத்தத்தில் மேலறையில் இருந்து எட்டிப் பார்த்த ரவியின் முகம் கோபத்தில் சிவந்திருந்தது.

********

சிவாவை இறக்கிவிட்டு ராக்கி பைக்கை எடுக்கும் போது ஓரமாய் ஒழிந்து நின்று அதைக் கண்ட ராக்கியின் தாய் கோமுவிற்கு ப்ரெஷர் எக்குத்தப்பாய் எகிறியது.

தாயைக் கவனிக்காத ராக்கியும், “சரி சிவா பார்த்து போ..” என்க

“சரி..” என்ற சிவாவும் சிரிப்பினூடே நகர்வது மேலும் அவளுக்கு எரிச்சலை வாரி இறைத்தது.

வீட்டின் வாசலிலே சிவாவிற்காக காத்திருந்த ராதைக்குச் சிவா நடந்து வருவது அதிர்ச்சியைக் கொடுக்க,

“எதுக்கு நடந்து வர..?” என்றார்

“இல்ல மா சும்மா தான்..” என்ற சிவாவிடம்

“ஆட்டோவில வரலையா..?” கேள்வி கேட்கும் தாயிடம் தனக்கு நேர்ந்த கொடுமையை சொல்லத் தயங்கியவள்

“இல்ல அம்மா ஆட்டோவில தான் வந்தேன்..அங்க குழி தோண்டி போட்டிருக்காங்க அதான்..” திக்கித் திணறி பொய்யுரைத்தாள் சிவா.

அவளது பேச்சை நம்பியவர், “இவனுங்களுக்கு இதே வேலையா போச்சு..சரி வா டா..” என்றவர் சிவாவை அழைத்துக் கொண்டு வீட்டிற்குள் சென்றுவிட்டாள்.

கோமுவிற்கு தனது மகன் சிவாவிடம் பேசுவது எரிச்சலைக் கொடுக்க, அதே வேகத்தில் வீட்டிற்கு வந்தவர் சேரில் அமர்ந்து டிவி பார்த்து கொண்டிருந்த ராக்கியிடம்

“எங்க டா போயிட்டு வர..?” என்றார் சாதாரணமாய்

“ப்ரெண்ட்ஸ் கூட வெளியே போயிட்டு வரேன்..சாப்பாடு எடுத்து வைங்க..” என்றவன் டிவியில் பார்வையைப் பதிக்க

இப்போது ராக்கியின் மீது விழுந்த சந்தேக விதை வலுப்பெற்றது.

சிவாவிற்கு பரீட்சை முடிந்து விடுமுறை வந்திவிட நாலு சுவருக்குள் அவளது நடமாட்டம் முடங்கிப் போனது..அன்றைய நிகழ்ச்சிக்குப் பின் ராக்கியும் சிவாவை விடுத்து தனது நண்பர்களுடன் கொட்டம் அடிக்க அவ்வப்போது சிவாவின் வீட்டை அவன் கடக்கும் போதெல்லாம்

“பாவம் என்ன பண்ணுவாளோ?” என்ற இரக்கம் சுரந்தது.
 




Aadhiraa

SM Exclusive
Author
Joined
Jan 17, 2018
Messages
1,073
Reaction score
7,772
Location
Tirunelveli

இருவருக்குமே நட்பு என்னும் எண்ணம் தான் முதலாய் முடிவாய் இழையோடி நின்றது. நாலு வீடு தள்ளியிருக்கும் கார்த்திக் சார் மீது நான் கொண்டுள்ள அதே நட்பு தான் ராக்கிக்கும் அவள் மீது.

ஆண்-பெண் பழக்கம் காதல் நட்பு என வகைப்படுத்தும் நாம், ஆண்-பெண்-மூன்றாம் பாலினத்தாரின் பழக்கத்தை எவ்வாறு வகைப்படுத்துவோம்..?

நட்பு காதல் என்ற இரண்டுமே மனித மனங்களின் மனித மனதிற்கு மட்டுமே சொந்தமான உணர்வு தான்..இங்கே ஆணும் பெண்ணும் மனிதர்கள் என்றால் ஆணாய் பிறந்து பெண்ணாய் வளர்ந்தவர்களும் மனிதர்கள் தான்..பெண்ணாய் பிறந்து ஆணாய் வளர்ந்தவர்களும் மனிதர்கள் தான்.

அவர்களுடன் நட்பாய் நாம் பழகினால் என்ன குறைந்துவிடப் போகிறது?

இது இப்படி தான் இருக்கும்..இவர்களின் குணம் இப்படி தான்.. என மனதிற்குள் பதிய வைத்துள்ளோம் அல்லது இச்சமூகம் நமக்குப் பதிய வைத்து விட்டது.

காலம் மாறி நாகரீகம் ஆயிரம் வளர்ந்தாலும் நமது மனநிலை மாறுவது சிரமம் தான் போலும்.

ராக்கியின் மீதும் சிவாவின் மீதும் கோபத்தில் இருந்த ஆட்டோகாரர் தினமும் கோமுவிற்கு போன் செய்து தவறாய் போட்டுக் கொடுக்க.. அவனையும் அவனது பொய்யையும் முழுமையாக நம்பியவரும் சிவாவின் மீது வன்மம் வளர்த்து வந்தார்.

தனது வேலையின் பதவி உயர்வுக்காகத் தேர்வு எழுதச் சென்ற கிருஷ்ணாவும் அந்த வாரத்தில் திரும்பி வந்திருக்க அவருடன் சிரித்த முகமாய் சர்வாவும் வந்து சேர்ந்தான்.

பத்து நாள் கழித்து தந்தையைப் பார்த்ததும் ஓடிச் சென்று கட்டிக் கொண்ட சிவா அவனுக்குப் பின்னே நின்ற சர்வாவைப் பார்த்துத் தயங்கி நின்றான்..

இதுநாள் வரையிலும் தன்னுடன் ஒட்டித் திரிந்த தனது தம்பியான சிவா தன்னைக் கண்டு தயங்கி நிற்பதைப் பார்த்தவன், “டேய் சிவா..” கைகளை விரித்து சர்வா அழைக்க

கொஞ்சம் தயங்கிய சிவா சர்வாவின் அருகே சென்று, “என் மேல கோபம் இல்லையா சர்..” ஆர்வமாய் கேட்டாள்.

அவளிடம் இல்லை என்பது போல் தலையசைத்தவன், “டேய்..சாரி டா..” என்றான் தன்னிலை உணர்ந்து.

அண்ணனின் தோளில் சாய்ந்த சிவாவும், “எனக்குப் புரியுது சர்..விடு”

பெரியவளாய் பேசும் சிவாவின் முதிர்ச்சியைப் பிரமித்து பார்த்தவன், “உன்னை என் தம்பியா பார்த்தத விட இப்போ தான்டா அழ்கா இருக்க..” கண்ணடித்து சர்வா சொல்லவும் அழகாய் வெட்கப்பட்ட சிவா அணிந்திருந்த பாவாடையை ஒரு சுற்று சுற்றி

“அழகா இருக்கேனா சர்..” என்றாள்

ஆமோதிப்பாய் விழி மூடித் திறந்தவனை சிவா கட்டிக் கொள்ள, பிள்ளைகள் இருவரையும் கண்டு பெற்றவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

வெகுநாள் கழித்து வந்த அவர்களின் மகிழ்ச்சிக்கு ஆயுள் குறைவு என்பதைப் போல ராக்கியின் தாய் கோமு சிவாவின் வீடு நோக்கி புயலாய் வந்தார்.

ருத்ராங்கி வருவாள்.................
 




sakthipriya

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,855
Reaction score
5,222
Age
40
Location
coimbatore
அருமை மூன்றாம் பாலினத்தவரை ஏற்பது மற்றவர்களுக்கு சற்று கடினம்தான் ஆனால் அவர்களை இழிவுபடுத்தக் கூடாது
 




Aadhiraa

SM Exclusive
Author
Joined
Jan 17, 2018
Messages
1,073
Reaction score
7,772
Location
Tirunelveli
அருமை மூன்றாம் பாலினத்தவரை ஏற்பது மற்றவர்களுக்கு சற்று கடினம்தான் ஆனால் அவர்களை இழிவுபடுத்தக் கூடாது
Thanks mam
 




Gashini

மண்டலாதிபதி
Joined
Mar 14, 2018
Messages
281
Reaction score
230
Location
Srilanka
Nice ud mam, shiva antha autokarara paththi sollieruntha perashuna vathe erukathu, but eppa rakiyoda seththu shuvava avan sethuvashu pesi thannoda thappamarikuran,
Ruthrathaan shivava? Ravithaan sharvawa?
Past and present konjam kulaputhu mam. Next ud sekiram thanga mam.
 




Saranya

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
1,524
Reaction score
1,341
Location
Coimbatore
Nice update.. Rakhi Amma oru aatokarana nambaranga than maganai nambavillai.. Shiva aatokarana pathi veetula sollirukalam.. Sarva ippa than Shiva kita nalla pesaran rakhi oda Amma vanthu prachanai pannina avanoda mananilai epadi marumo..
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top