• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

sakthipuram-11

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

snehasree

SM Exclusive
Joined
Mar 31, 2018
Messages
3,416
Reaction score
7,755
Location
comibatore
"மிஸ்... இந்த மதில் சுவர் ரொம்ப பெரிதாக, அழகாக, நீளமாக இருக்கிறது. இதில் நாங்கள் நடக்க போகிறோம்" என்று குட்டிஸ் கூறிவிட்டு அதில் நடந்து பார்த்தார்கள்.

" இதில் நடப்பது சீனாவில் இருக்கும் சீன பெருஞ்சுவரில் நடப்பது மாதிரி இருக்கிறது" என்றாள் ஹரிணி.

"நாங்கள் இங்கே வந்து எவ்வளவு பெரிய கோட்டை சுவரில் நடப்போம் என்று கனவில் கூட நினைக்கவில்லை மிஸ்" என்றாள் ஜெயலட்சுமி.

"ஹரிணி... இப்படி நடப்பது ரொம்ப சூப்பராக, திரில்லாக இருக்கிறதுதானேடி" என்றாள் காவ்யா.

"மிஸ் இது என்ன?" என்று அவர்கள் பாதையில் இருந்த அறையை காட்டி கேட்டாள் பிரதீபா.

"இதுதான் கோட்டை காவல் கண்காணிப்பு கோபுரம். இதன் வழியாக எதிரிகள் உள்ளே நுழைவதை காண முடியும். எதிரிகள் மட்டும் அல்ல கோட்டைக்கு உள்ளே யார் நுழைந்தாலும் தெரியும். கோட்டைக்கு அப்பால் எது நடந்தாலும் அறிந்து உடனே ராணிக்கு தகவல் தெரிவிக்க இதை பயன்படுத்துகிறார்கள். நாட்டின் பாதுகாப்பிற்கு இது தேவை தங்கம்ஸ்" என்று விளக்கம் தந்தாள் சந்தியா.

"இங்கே இருந்து கோட்டைக்கு வெளியே, உள்ளே எல்லா இடங்களையும் தெளிவாக பார்க்க முடியும். எதிரிகள் தாக்க வந்தால் அவர்களை தாக்கி அழிக்கவும் இதை பயன்படுத்தி கொள்கிறார்கள். இதில் ஒரு நபர் ஆயுதம் ஏந்தி எப்பொழுதும் இருப்பார்" என்றாள் திவ்யா.

அவர்கள் பார்க்கும்பொழுது ஒரு நபர் ஈட்டியை பிடித்தபடி நின்று கவனித்து கொண்டிருந்தார்.

"ஆமாம் மிஸ்" என்று குட்டிஸ் கூற ஏழு பேரும் அவரை கடந்து சென்று சிறிது தூரம் நடந்த பின் சிறிது நேரம் அமர்ந்து வேடிக்கை பார்த்தார்கள்.

"சரி தங்கம்ஸ்... வாங்க அங்கே இருக்கும் கோயிலுக்கு சென்று சாமி கும்பிட்டு பாரஸ்ட்டுக்குள் செல்வோம்" என்றாள் திவ்யா.

ஏழுபேரும் கோயிலுக்கு சென்று மகாசக்தி அம்மனை கும்பிட்டு முடித்தனர்.

"மிஸ்... அங்கே பாருங்க. இந்த கோட்டை சுவர் எவ்வளவு பெரியதாக இருக்கிறது பாருங்க." என்றாள் ஹரிணி.

"மிஸ்... கேட்டை பாருங்க. அம்மாடி! எவ்வளவு பெரிய இரும்பு கேட் மிஸ்... எனக்கு பார்க்கவே கழுத்து வலிக்குது" என்றாள் காவ்யா.

"கேட்டில் எவ்வளவு பெரிய அம்மன் சாமி உருவமும், திரிசூலமும் தங்கத்தில் செய்து பதித்து வைத்து உள்ளார்கள்" என்றாள் பிரதீபா.

"நம் ஊரில் இப்பொழுது இந்த சுவர் இருந்திருந்தால் எவ்வளவு நல்லா இருக்கும். இந்தியாவின் பெருமை உலகளவில் பேசபட்டு இருக்கும்" என்றாள் சந்தோஷி.

கோட்டை வாசலை வியந்து பார்த்தபின் அங்கிருந்து நேராக மண்டபம் நோக்கி சென்று அமர்ந்து கோட்டை வாசலை பார்த்தபடி ஒய்வெடுத்த பின்னர் காட்டை நோக்கி சென்றார்கள்.

பசுமையான இலைகள் கொண்ட அழகிய பழங்கள் உடைய மரங்கள், செடிகள், கொடிகள் அங்காங்கே வழி நெடுக புல்கள் அமைந்த தரைகள் இடையே பாதையும் அமைந்து இருந்தன.

அழகிய பறவைகள் மரங்களில் வசிப்பதை கண்டபடியும், பறவைகள் சப்தங்களை கேட்டு ரசித்தபடியும் சென்றனர்.

முயல்கள், குரங்குகள், மான்கள், முள்ளம் பன்றி என்று சாதுவான விலங்குகளை கண்டு ரசித்து கொண்டு சென்றனர்.
நரி, கரடி, சிறுத்தை, சிங்கம்,புலி, ஒநாய், காட்டு நாய்கள்,யானை போன்ற கொடிய விலங்குகளை கண்டு சற்று பயந்தபடியும் சென்றார்கள்.

அவர்கள் அனைத்து மிருகம், பறவைகளை வியப்பு கலந்த சந்தோஷத்துடன் பார்த்து அதை பற்றி தங்களுக்குள் மகிழ்ச்சியாக பேசியபடி சென்றார்கள்.

காட்டில் எந்த மிருகத்தையும் தொந்தரவு செய்யவில்லை என்றாலும் அருகில் சென்று பார்த்தும், சில மிருகங்களை தொட்டு தடவி பார்த்தும், தூக்கி பார்த்தபடி சென்றார்கள்.

காட்டில் முனிவர்கள் தவம் செய்வதை பார்த்து அவர்களை வணங்கி சென்றார்கள்.

காட்டில் கிடைத்த தீமை தராத பழங்களை உண்டு பசியாறியபடி நடந்து செல்ல ஆரம்பித்தார்கள்.

ஆகஸ்யரின் ஆசிரமத்தை அடைந்தவர்கள் அங்கே இருந்த குடில்களை ஆச்சரியமாக பார்த்து ரசித்தார்கள்.

பல கதைகளிலும், டிவிகளிலும் அந்த காலம் ஆசிரமங்களை படித்திருந்த அவர்கள் ஏழு பேரும் நிஜமாக கண்களால் கண்டு பரவசமானார்கள்.

வனத்தின் ஒரு பகுதியில் இயற்கை எழில் கொஞ்சும் அந்த ஆசிரமம், குடில்கள், ஆசிரம ஆண்கள், பெண்கள் என்று அனைத்தையும் கண்டு ரசித்து மகிழ்ந்தார்கள்.

குடிலுக்குள் சென்று பார்த்து வந்தவர்கள் சிவலிங்கத்தை பார்த்து வணங்கினார்கள்.

தவம் செய்து கொண்டிருந்த ரிஷி ஆகஸ்யாரை பார்த்து அவரின் அருகில் சென்று சற்று தொலைவில் நின்று தரையில் விழுந்து வணங்கி சென்றார்கள்.

ஆகஸ்யர் தியானம் முடித்து விழித்தபொழுது யாரோ ஆசிரமத்திற்குள் பிரவேசித்த உணர்வு ஏற்பட்டது.
Message…
 




snehasree

SM Exclusive
Joined
Mar 31, 2018
Messages
3,416
Reaction score
7,755
Location
comibatore
ஏழு பெண்கள் ஆசிரமத்திற்குள் நுழைந்து உலா வந்து பின்னர் தன்னை வணங்கி சென்றதை ஞானதிருஷ்டியில் அறிந்தார்.

அவர்கள் யார் என அறிய முற்பட எதிர்காலத்தை சார்ந்த நபர்கள் என்பது மட்டும் தெரிய அவர்கள் நோக்கத்தை அறிய முயற்சி செய்தார்.

அவர்கள் மாயகோல் மூலம் பிரவேசித்தது முதல் இந்த நிமிடம் வரை அனைத்து காட்சிகளை கண்டார்.

ஐந்து சிறுமியர் மற்றும் இரண்டு இளம்பெண்கள் என்பதாலும், அவர்கள் பிரவேசித்தது முதல் எந்த தீமையும் செய்யாமல் இருப்பதை வைத்து அவர்கள் தீய நோக்கமற்ற நல்லவர்கள் என கருதி அவர்களை பற்றிய கவலை நீங்கி தன் தியானத்தை தொடர ஆரம்பித்தார்.

ஏழு பேரும் ஆசிரமத்தில் சில மணி நேரம் பொழுதை கழித்து விட்டு அங்கிருந்து ஆற்றை நோக்கி நடக்க ஆரம்பித்து விட்டார்கள்.

சில நிமிடங்களில் ஆற்றை மிக அருகில் நெருங்கியவர்களுக்கு மதிய வேளை வந்ததும் பசி எடுக்க ஆரம்பித்தது.

சந்தியா உடனே ஆற்றின் அருகில் ஒரு வீடு அமைத்து அறுசுவை உணவுகளை வரவழைத்தாள்.

ஏழு பேரும் உண்டு முடித்த பின்னர் காட்டில் நடந்த களைப்பு தீர அங்கே சற்று ஒய்வெடுக்க முடிவெடுத்து கட்டில்களை வரவழைத்து அதில் படுத்த உறங்க ஆரம்பித்தார்கள்.
Write your reply...
 




snehasree

SM Exclusive
Joined
Mar 31, 2018
Messages
3,416
Reaction score
7,755
Location
comibatore
வாசகர்களே மன்னிச்சுபை இப்போதைக்கு குட்டி அப்டேட்தான் தர முடிந்தது அடுத்த முறை பெரிய அப்டேட் தருகிறேன்
 




Riha

SM Exclusive
Author
Joined
Feb 8, 2018
Messages
12,391
Reaction score
32,389
Location
Tamilnadu
வாசகர்களே மன்னிச்சுபை இப்போதைக்கு குட்டி அப்டேட்தான் தர முடிந்தது அடுத்த முறை பெரிய அப்டேட் தருகிறேன்
Seri ok ka...will wait
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top