• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

sakthipuram-8

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

snehasree

SM Exclusive
Joined
Mar 31, 2018
Messages
3,416
Reaction score
7,755
Location
comibatore
சந்தோஷியின் கையில் இருந்த குச்சியிலிருந்த வந்த வெளிச்சம் மற்றும் பூமி அதிர்வால் அந்த ஏழு பேரும் கண்களை மூடி கொண்டு விட்டார்கள்.

ஏழு பேரும் கண் விழித்து பார்த்த பொழுது அவர்கள் ஒரு அழகிய நந்தவனத்தின் நடுவில் இருந்தார்கள்.

பழைய கோட்டை மறைந்து புதிய இடத்தில் இருப்பதை உணர்ந்த அவர்கள் தங்கள் கண்களை விரித்து சுற்றிலும் அதிசயமாக பார்த்தார்கள்.

வண்ண வண்ண மலர்கள் பூத்து குலுங்கும் பலவித பூச்செடிகள், பசுமையான மரங்கள், வண்டின் ரீங்காரம், பறவைகள் சப்தம், இயற்கையான ரம்மியமான சூழல் என்று அனைத்தும் கண்களை கொள்ளையடித்தன.

தாங்கள் எங்கே இருக்கிறோம்? இங்கு எப்படி வந்தோம் என்று புரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்தார்கள்.

தாங்கள் காண்பது கனவா அல்லது நிஜமா என்று சந்தேகம் கொண்டு தங்களை கிள்ளி பார்த்து வலி எடுக்க நிஜம்தான் என்று உணர்ந்தார்கள்.

சந்தோஷியின் கையில் இருந்த மின்னும் குச்சி வெறும் குச்சி அல்ல மந்திரகோல் என்பதை உணர்ந்தாள் சந்தியா.

"மிஸ்... இங்கே பாருங்க மிஸ்... எவ்வளவு அழகு அழகான பூக்கள் எல்லாம் இருக்கிறது." என்றாள் ஹரிணி.

"மிஸ்... இந்த இடம் ரொம்ப சூப்பராக இருக்குது" என்றாள் காவ்யா.

"மிஸ்... நாம் பழைய காலத்து கோட்டைக்கு வந்து விட்டோம். இனி நாம் ஆசை தர இங்கே சுற்றி பார்க்க வேண்டும். என்ன சரிதானே மிஸ்" என்றாள் ஜெயலட்சுமி.

"ஏய் தோஷி... உன் கையில் இருக்கிறது மேஜிக் வாண்ட்டி" என்றாள் பிரதீபா.

"தோஷி... அதை மிஸ்கிட்ட தந்துடி" என்றாள் ஹரிணி.

சந்தியாவும், திவ்யாவும் தங்கள் இயல்பு நிலைக்கு வந்ததால் குழந்தைகளின் பேச்சால் சிரிக்க ஆரம்பித்தார்கள்.

"இந்தாங்க மிஸ்" என்று அந்த மேஜிக் வாண்டை நீட்டினாள் சந்தோஷி.

சந்தியா அதன் அருமை அறிந்து வாங்கி கொண்டாள்.

"வாங்க மிஸ்... இந்த இடத்தை நாம் எல்லாம் நன்றாக சுற்றி பார்க்கலாம்." என்றாள் பிரதீபா.

"செல்லம்ஸ்... நாம் இருப்பது அந்த கால கோட்டை. நம்மை அவர்களுக்கு தெரியாது. நம் எல்லோரையும் பார்த்தால் நமக்கு பிரச்சனை வரும்" என்றாள் திவ்யா.

"மிஸ்... மந்திரகோல்தான் நம்மிடம் இருக்கிறதே. நாம் அதை வைத்து எளிதாக தப்பி விடலாம். அப்புறம் என்ன பிராபளம் மிஸ்" என்றாள் ஜெயலட்சுமி.

"தங்கம்ஸ்... நாம் எளிதாக தப்பித்து விடலாம் ஆனால் அவர்களுக்குள் வீண் குழப்பம் வந்துவிடும் அல்லவா?" என்றாள் சந்தியா.

"மிஸ்... வந்தால் வரட்டும். நாம் அதை பார்த்து ரசிக்கலாம். அது ரொம்ப ஜாலியாக இருக்கும் மிஸ்" என்றாள் ஜெயலட்சுமி.

"ஜெய்... திஸ் இஸ் பேட்... நம்மால் மற்றவர்களுக்கு எந்த பிராபளமும் என்றும் வரவே கூடாது. நாம் அடுத்தவர்கள் துன்பபடுவதை பார்த்து மகிழ்ச்சி அடைய கூடாது. நாம் அவர்கள் துன்பம் தீர வழி உதவிதான் செய்ய வேண்டும்" என்று கோபமாக கூறினாள் சந்தியா.

"சாரி மிஸ்" என்று முகத்தை சோகமாக்கி ஜெயலட்சுமி கூற
"என் தங்கம்ஸ் எல்லாம் குட் கேர்ள்ஸ் என்று மிஸ்க்கு தெரியும்" என்றாள் சந்தியா.

"எங்க மிஸ்களும் குட் மிஸ் என்று எங்களுக்கும் தெரியும்" என்று கூறி ஜெயலட்சுமி சிரிக்க மற்றவர்களும் சிரித்தார்கள்.

"மிஸ்... நாம் என்ஜாய் செய்ய வேண்டும் அதே சமயம் மாட்ட கூடாது. நீங்கள் அதற்கு ஒரு வழி சொல்லுங்க" என்று கேட்டாள் காவ்யா.

"மிஸ்... எனக்கு ஒரு ஐடியா... மற்றவர்கள் கண்களுக்கு நாம் தெரிந்தால்தானே பிராபளம். மேஜிக் வாண்ட் மூலம் அவர்கள் கண்களுக்கு தெரியாமல் நாம் மறைந்து கொள்வோம்" என்றாள் ஹரிணி.

"ஹரிணி... சூப்பர் ஐடியாடி." என்ற காவ்யா உடனே சந்தியா மிஸ் பக்கம் திரும்பி "மிஸ்... ஹரிணி சொல்கிற மாதிரி நாம் மறைந்து கொள்வோம்" என்று காவ்யா சொல்ல மற்றவர்கள் அதை ஆமோதித்தார்கள்.

"எனக்கு அதுதான் சரி என்று படுகிறது" என்று திவ்யாவும் ஆமோதிக்க சந்தியா உடனே மேஜிக் வாண்டின் மூலம் அவர்கள் எல்லோரையும் மற்றவர் கண்களுக்கு தெரியாத மாதிரி மறைய வைத்தாள்.

"வாங்க மிஸ்... இனி நாம் கோட்டையை சுற்றி பார்க்க ஆரம்பிக்கலாம். நம்மை யாரும் எதுவும் செய்ய முடியாது" என்றாள் பிரதீபா.

"சரி செல்லம்ஸ். வாங்க சுற்றி பார்க்கலாம். இதற்கு பெயர் நந்தவனம். இங்கேதான் அரச குடும்பத்தை பெண்கள் எல்லாம் தன் தோழிகளுடன் விளையாடி மகிழ்வார்கள்" என்று சந்தியா கூற நந்தவனத்தை சுற்றி பார்க்க ஆரம்பித்தார்கள்.

ஐவர் அணி முதலில் தங்களுக்கு பிடித்த பூக்களை எல்லாம் பறித்து தலையில் வைத்து கொண்டார்கள்.

"நீங்களும் பூவை பறித்து வைங்க மிஸ்" என்று காவ்யா சொல்ல சந்தியாவும் திவ்யாவும் பூக்களை பறித்து வைத்து கொண்டார்கள்.

பஞ்ச பாண்டவிகளுடன் சந்தியா திவ்யா இருவரும் பூக்களை எல்லாம் தொட்டு வாசம் பிடித்து மகிழ்ந்தார்கள்.

Message…
 




snehasree

SM Exclusive
Joined
Mar 31, 2018
Messages
3,416
Reaction score
7,755
Location
comibatore
பூச்செடிகளோடு செல்பி எடுக்க தங்கள் போன்களை இருவரும் தேட அவைகள் தங்களின் காலத்தோடு மறைந்ததை உணர்ந்தார்கள்.

"சந்தியா... நம் போன் இங்கே வந்ததும் மறைந்து விட்டது" என்றாள் திவ்யா.

"அப்பொழுதெல்லாம் போன் கண்டு பிடிக்கபடவில்லை மிஸ். இனி நாம் எல்லாம் நம் காலத்திற்கு சென்றால்தான் போன் நம் கைக்கு வரும்" என்றாள் சந்தியா

"போன் இல்லை என்றால் நாம் எப்படி டைம் தெரிந்து கொள்வது மிஸ்" என்றாள் சந்தோஷி.

"அந்த காலத்தில் சூரியனை வைத்து டைம் சொல்வாங்க தங்கம்ஸ். நமக்கு அதெல்லாம் தெரிய வாய்ப்பில்லை. நாம் மேஜிக் வாண்ட் மூலமாக கேட்டு தெரிந்து கொள்வோம்" என்றாள் திவ்யா.

"சரிங்க மிஸ்." என்றவள் கூற அவர்களுக்கு பசி எடுக்க ஆரம்பித்து விட்டது.

"மிஸ்... பசிக்குது மிஸ் வாங்க ஏதாவது சாப்பிட்டு விட்டு பின்னர் சுற்றி பார்க்கலாம்" என்று பிரதீபா கூற மற்ற நால்வரும் அதை ஏற்று தலை அசைத்தார்கள்.

ஏழு பேரும் யாரும் வராத ஒரு தனி இடம் சென்று சகல வசதிகள் கொண்ட அவர்கள் கண்களுக்கு மட்டும் தெரியும் மாய மாளிகை உண்டாக்கி அங்கே அறுசுவை விருந்தை வரவழைத்து சாப்பிட்டு மகிழ்ந்தார்கள்.

"இந்த மாதிரி சாப்பாட்டை நாங்கள் எங்கள் வாழ்க்கையில் இன்றுதான் சாப்பிடுகிறோம்" என்று ஜெயலட்சுமி கூற மற்றவர்கள் ஆமோதித்தார்கள்.

அவர்கள் தூங்க அற்புதமான கட்டில் அமைந்த படுக்கை அறை அமைக்க சந்தியா அமைத்தாள்.

கட்டிலை பார்த்து வியந்த அவர்கள் ஏறி படுத்தவர்கள் ஒருவரை மற்றவர் பார்த்து சிரித்தார்கள். தங்கள் கட்டிலை பற்றி பெருமையாக பேசி மகிழ்ந்தார்கள். ஏழு பேரும் சிறிது நேரம் தூங்கினார்கள்.

நல்ல தூக்கத்திற்கு பின்னர் கோட்டை திரும்பி நந்தவன மரங்களில் இருந்த அழகான பழங்களை பறித்து தின்று மகிழ்ந்தார்கள்.

நந்தவன குளத்தில் இறங்கி குளிர்ந்த தண்ணீரில் இறங்கி உடல் சிலிர்த்தார்கள். அல்லி, தாமரை மலர்களை தொட்டு மகிழ்ந்தார்கள். மீன்கள். வாத்து போன்றவற்றை பார்த்து குதுகலித்தார்கள்.

"ஹரிணி... மீன் எல்லாம் சூப்பராக இருக்கு இல்லை" என்றாள் காவ்யா.

"வாத்து எவ்வளவு அழகாக இருக்கிறது பாரு ஹரிணி" என்றாள் ஜெயலட்சுமி.

ஐவரும் ஒருவர் மேல் ஒருவர் தண்ணீர் அடித்து விளையாடிய பின்னர் குளித்த பின்னர் புது ஆடைகள் நகைகள் அணிந்து ஒருவரை ஒருவர் பார்த்து பாராட்டி கமெண்ட் அடித்து மகிழ்ந்தார்கள்.

அழகிய ஊஞ்சல்கள் அமைத்து ஏழு பேரும் அதில் அமர்ந்து ஆடி மகிழ்ந்தார்கள்.

"செல்லம்ஸ் இதற்கு பெயர் கன்னிகாவனம். கல்யாணம் ஆகாத இளம்பெண்கள் விரதம், பூஜை எல்லாம் செய்து அம்மன் அருளை பெற அமைக்கபட்ட பகுதி" என்றாள் சந்தியா.

கன்னிகாவனத்திற்குள் சென்று அங்கு இருந்த அம்மனை வழிபட்ட பின்னர் அங்கே சிறிது நேரம் சுற்றி மகிழ்ந்தார்கள்.

"மிஸ்... இந்த அம்மன் சிலை இருக்கும் இடம் இப்பொழுது எவ்வளவு அழகாக இருக்கிறது" என்றாள் ஹரிணி.

"ஆமாப்பா. ரொம்ப அழகாக இருக்கிறது" என்றாள் திவ்யா.

"மிஸ்... இந்த கோட்டையில் எவ்வளவு அழகான கார்டன் இருக்கிறது. இதுவரைக்கு நாம் இரண்டு கார்டன்களை பார்த்து விட்டோம்" என்றாள் காவ்யா.

"தங்கம்ஸ்... வாங்க அடுத்த இடம் பார்ப்போம்" என்ற திவ்யா அவர்களை வசந்த மண்டபம் அழைத்து சென்றாள்.

"இதுதான் வசந்த மண்டபம் தங்கம்ஸ். ஒவியம், நடனம், பாட்டு, சிற்பம் போன்ற கலைகளில் அரச குடும்பத்தினர் ஈடுபடவும், ஒய்வு எடுக்கவும், சில சமயங்களில் ரகசியமான ஆலோசனை கூட்டம் நடத்தவும் இந்த இடத்தை பயன்படுத்தி கொள்வார்கள்."என்றாள் திவ்யா.

அழகாகவும், நேர்த்தியாகவும் வடிவமைக்கபட்டு கண்களை கவரும் வசந்த மண்டபத்திற்குள் ஏழு பேரும் நுழைந்தார்கள்.
 




Riha

SM Exclusive
Author
Joined
Feb 8, 2018
Messages
12,391
Reaction score
32,389
Location
Tamilnadu
Sooper ellarum magic wand vechu yaaru kannukkum theriyaama kuthaattam podraangala...semma jolly ah irukku
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top