Sangeetha’s Briyani

Sanshiv

Author
Author
SM Exclusive Author
#1
எப்பேற்பட்ட மன சஞ்சலத்தில் இருந்தாலும், என் புன்னகையால் அதைத் தீர்த்துவிடுவேன் என்று புன்னகை முகமாக கோவிலில் அழகாக காட்சி கொடுத்தான் அழகன் முருகன். கதிருக்கு தான் அந்த புன்னகையிலும் மனம் லயிக்கவில்லை.. தங்கை ஞாபகம் மனதிற்குள் இருந்து நீங்க மாட்டேன் என்று அடம் பிடித்தது. எத்தனை யோசித்தும் அவனால் அதிலிருந்து வெளிவர முடியவில்லை. தாய் இறந்தபொழுது தன் சட்டையைப் பிடித்துக் கொண்டு கதறிய சிறுமியின் முகமே நினைவிலாடியது. ‘எப்படி அந்த குடும்பத்துக்குள் வாழ அவள் ஒத்துக் கொண்டாள்?’ இந்த கேள்வியே திரும்ப திரும்ப மனதை அரித்தது. தூணில் தலை சாய்த்து, கண்களை மூடி அமர்ந்து கொண்டான். நேற்று மித்ரன் வீட்டிற்கே வந்து ராஜினாமா கடிதத்தை கிழித்தெறிந்தது மூடிய கண்களுக்குள் காட்சியாய் ஓடியது.

பிடிவாதக்காரன், எப்படியும் தன்னை விட மாட்டான் என்று நினைத்துக் கொண்டான். ஏனோ மித்ரனைவிட தங்கையின் மீதே கோபமும் வருத்தமும் அதிகமாக இருந்தது. “கதிரண்ணா” என்று அழைத்தபடியே அருகில் அமர்ந்தாள் கீதாஞ்சலி. அவள் அருகிலேயே இறுகிய முகத்தோடு அபியும் நின்றிருந்தான். இவர்களை இங்கு சற்றும் எதிர்பார்க்காத கதிர் சட்டென்று எழுந்துவிட்டான்.

“எப்படி இருக்கீங்க சார்?” தயக்கத்துடனே அபியிடம் விசாரித்தான். “ஹ்ம்ம்” என்ற உறுமல் மட்டுமே பதிலாக வந்தது அபியிடமிருந்து. எந்தவித கட்டுக்களுமில்லாமல் இருந்த அபியை தலை முதல் பாதம் வரை ஒரு நொடி பார்வையாலேயே குசலம் விசாரித்துக் கொண்டான் கதிர். “நல்லாயிருக்கீங்களா கீதாம்மா” கீதாஞ்சலியிடம் வினவ, “நாங்க நல்லாயிருக்கோம் அண்ணா” அபிக்கும் சேர்த்தே பதிலளித்தாள் பெண்.

“நீங்க ஏன்ணா என்னவோ மாதிரி இருக்கீங்க? என்கிட்ட சொல்லலாம்னா சொல்லுங்க…” தன் கரம் பிடித்து வாஞ்சையுடன் விசாரிக்கும் பெண்ணவளிடமிருந்து எதையும் மறைக்க முடியவில்லை கதிரால். மித்ரனுக்கும் தன் தங்கைக்கும் நடந்த திடீர் திருமணம், தான் வேலையை ராஜினாமா செய்தது அனைத்தையும் கூறி முடித்தான்.

என்ன சொல்வதென்றே தெரியவில்லை அபிக்கும் அஞ்சலிக்கும்… ஏனோ மித்ரனுக்கு திருமணம் முடிந்தது ஒரு சிறு ஆறுதலையே தந்தது அவர்கள் இருவருக்கும். ஆனால் இதை சொல்லி கதிரின் மனதை மேலும் புண்படுத்த விரும்பாமல், “உங்களுக்கு என்னிக்குமே தங்கைன்னு நான் ஒருத்தி இருக்கேன் அண்ணா” என்று மட்டும் கூறிவிட்டு கீதாஞ்சலி கிளம்ப, அபியும் அவன் தோளில் ஆறுதலாக தட்டிக் கொடுத்துவிட்டு கிளம்பினான்.

ப்ளாக் ஆடி கார் கதவை டிரைவர் திறந்து வைக்க இருவரும் ஏறியவுடன் கார் அபியின் அலுவலகம் நோக்கி பறந்தது. மனம் சற்று லேசானது போல் தோன்றியது கீதாஞ்சலிக்கு. மித்ரனுடைய தொலைபேசி உரையாடலுக்கு பின் மித்ரன் என்ற பெயரைக் கூட வெறுத்திருந்தாள் பெண். ஆனாலும் அவனை நல்ல தோழனாக நினைத்த மனம், இன்று அவனுக்கு ஒரு நல்ல பெண்ணுடன் திருமணம் முடிந்துவிட்டது என்றதும் சிறிது ஆசுவாசப்பட்டது. அந்த பெண்ணை எந்த விதத்திலும் மித்ரன் காயப்படுத்திவிடக் கூடாதே என்று தாமரைக்காகவும் மனம் துடித்தது.

அதுவரை சன்னல் பக்கம் பார்வையைப் பதித்திருந்தவள் பக்கவாட்டில் திரும்பி, அபியின் கையோடு மெல்ல தன் கையைக் கோர்த்துக் கொண்டு புன்னகைத்தாள். அருகில் வருமாறு அபி தலையசைக்க கண்களால் டிரைவரை சுட்டிக் காட்டி மறுத்தாள். அபி கோபமாக அந்த பக்கம் திரும்புவது போல் முகத்தை திருப்பிக் கொண்டு, இந்த பக்கம் இவளருகில் நெருங்கி அமர்ந்தான்.

சிரித்துக் கொண்டே தானும் நெருங்கி அமர்ந்தவள், அவன் கை வளைவில் தன் கையைக் கோர்த்துக் கொண்டு அவன் தோளில் பட்டும் படாமல் சாய்ந்துக் கொண்டாள். நேற்று கட்டு பிரித்ததும் குடிலுக்கு அழைத்து சென்று அஞ்சலி என்று வாய்மொழியாக தன் பெயரைக் கூறி சந்தோஷத்தில் திக்கு முக்காடச் செய்தவன், உடனே பேக்டரிக்கு போயாக வேண்டும் என்று ஒற்றைக் காலில் நின்றான்.

கீதாஞ்சலி பிடிவாதமாக வீட்டிற்கு சென்று பெரியவர்களை பார்த்துவிட்டு, மறு நாள் கோவிலுக்கும் சென்றுவிட்டு பிறகு தான் அலுவலகத்திற்கு என்று திட்டவட்டமாக மறுக்கவும் வேறு வழியில்லாமல் சம்மதித்திருந்தான். அன்று முழுவதும் பெற்றோர், தாத்தா, பாட்டி, தங்கை என்று அவர்களுடன் பொழுது போனது. இரவு சீமா எவ்வளவோ மறுத்தும் பிடிவாதமாக மாடியேறி தன்னறைக்குச் சென்றிருந்தான்.

அபிக்கு பாலெடுத்துக் கொண்டு மாடிக்கு சென்றவள், அவன் கட்டிலில் அமர்ந்திருக்கவும் அவனிடம் பாலைக் கொடுத்துவிட்டு அடிபடாத கால் பக்கம் அமர்ந்தவள் அப்படியே அவன் மடியில் தலை சாய்த்துக் கொண்டாள். அவள் தலைக் கோதிக் கொண்டிருந்தவன் தன் உடை தாண்டி ஈரம் உணரவும் பதறிப் போய் அவள் முகம் நிமிர்த்தினான்.

கண்களில் கண்ணீர் ஊற்றெடுக்க விசும்பிக் கொண்டிருந்தாள். “அம்மாடி… என்னடா…. வேண்டாம்டா” என்று அவள் கண்ணீரைத் துடைத்தான். “ரொம்ப பயந்துட்டேன் அபி… நான் அழுதா எல்லாரும் ரொம்ப உடைஞ்சிடுவாங்கன்னு, என்னை நானே கட்டுபடுத்திக்கிட்டு இருந்தேன் அபி… என்னால முடியல… இதுக்கும் மேல என்னால மனசுக்குள்ள அடக்க முடியாது” என்று வெடித்தழுதாள். இப்படி இவள் கண்ணீர் விட்டு கதறுவதைப் பார்க்கவா அவ்வளவு ஆசையாக திருமணம் செய்து கொண்டோம், நினைக்க நினைக்க மித்ரன் மீது கொலைவெறி உண்டானது.

“எனக்கு வேற எதுவுமே வேண்டாம் அபி… நீங்க இப்படியே என் பக்கத்துலயே இருந்தா போதும்” சொல்லிவிட்டு அவன் தலை முதல் கால் வரை பரிதவிப்புடன் தடவிப் பார்த்தாள். “வேற எதுவுமே வேண்டாமா” அவள் மனதை மாற்றவே விஷமப் புன்னகையுடன் கேட்டான். அவன் பார்வையின் வேறுபாட்டை உணர்ந்தவள், “ம்ஹூம் வேண்டவே வேண்டாம்” என்றாள் வெட்கப் புன்னகையுடன். கண்களில் லேசான கண்ணீர் தடம், வெட்கத்தால் சிவந்த கன்னங்கள், உதட்டில் குறும்புப் புன்னகை என்று எழிலோவியமாய் இருந்தாள்.

ஒற்றை விரலால் அவள் முக வடிவை அளந்தவன், “ஆனா எனக்கு வேணுமே” என்றான் கிறக்கமாக. அவள் ஏதோ மறுத்துப் பேசும் முன் அவள் இதழை முற்றுகையிட்டிருந்தான். மெல்ல கைகளும் இதழும் அவள் உடலில் அத்துமீற தொடங்க, அஞ்சலி அபியின் உடல் நலம் கருதி மறுக்க, “அம்மாடி ப்ளீஸ்டா” என்று கொஞ்சிக் கொஞ்சியே அவளை சரிகட்டி தனக்கு தேவையான சிலவற்றையாவது நடத்தியபிறகே அவளை விட்டான்.

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
 

Sanshiv

Author
Author
SM Exclusive Author
#2
காலையில் கண் விழித்த தாமரை தன் அருகில் உறங்கும் மித்ரனின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். நேற்று இரவு கட்டிலில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தவன் அப்படியே இங்கேயே உறங்கியிருந்தான். அவன் அருகில் தன்னாலும் வெகு இயல்பாக உறங்க முடிந்ததே எப்படி!! என்று யோசித்துக் கொண்டிருந்தாள். அந்நிய ஆடவனுடன் இருக்கும் உணர்வே இல்லயே, இது தான் மஞ்சள் கயிறு மேஜிக்கோ என்று யோசித்து சிரித்துக் கொண்டாள்.

“பார்த்து முடிச்சாச்சுன்னா எனக்கு கொஞ்சம் காபி கொண்டு வர்றியா தாமரை” திடீரென்று கேட்ட மித்ரனின் குரலில் பதறிப் போனாள் தாமரை. “ஹான் நீங்க… நீங்க… தூங்கலையா?” விழி விரித்து கேட்டாள்.

“உனக்கு முன்னாடியே முழிச்சுட்டேன். நீ தூங்கிட்டிருந்த, அதான் நீ இப்ப பண்ண வேலையை நான் அப்போ பண்ணிகிட்டிருந்தேன்” அடக்கப்பட்ட சிரிப்புடனே கூறினான். ‘அப்படின்னா… அப்படின்னா… என்னை தான் நான் தூங்கும் போது பார்த்துகிட்டு இருந்தேன்னு சொல்றாங்களா’ என்று எண்ணியவள் வேகமாக குனிந்து தன் ஆடையை சரிபார்த்தாள். “ஹா..ஹா..ஹா..” என்று மித்ரன் வெடிச் சிரிப்பு சிரித்தான். வெட்கம் பிடுங்கித் திங்க, “நான் போய் ப்ரெஷ் ஆகிட்டு காபி கொண்டு வரேன்” என்று ஓடியே போனாள் தாமரை.

இவளிடம் தன் உணர்வுகளை கட்டி வைப்பது மிகவும் கடினம் என்று உணர்ந்தான் மித்ரன். அவளின் குழந்தைத்தனத்தில் தான் கொஞ்சம் கொஞ்சமாக தன்னைத் தொலைக்க ஆரம்பித்துவிட்டோம் என்று தெள்ளத் தெளிவாக புரிந்த து. தன் வாழ்க்கையில் இதுவரையில் இருந்த வெற்றிடம் நிரம்பிய உணர்வு.

‘இன்று அலுவலகத்திற்கு வருவதாக வேறு சொல்லியிருக்கிறாளே, கதிர் வரவில்லையென்றால் தாங்குவாளா!!! வாடிப் போவாளே’ என்று நெஞ்சம் அவளுக்காக துடித்தது. ‘இந்த கதிர் பய என்ன செய்ய காத்திருக்கான்னு தெரியலையே… நேத்து வீட்டுக்கே போய் ராஜினாமா கடிதத்தை கிழிச்சு போட்டாச்சு… இதுக்கு மேல என்ன செய்யன்னு தெரியலையே… உனக்கு எவ்வளவு கோவம்னாலும் அதை என்கிட்ட காமி கதிர், தாமரை பாவம்’ மனதோடு கதிரிடம் கெஞ்சிக் கொண்டான்.

மித்ரனுக்கு காபியைக் கொடுத்துவிட்டு அவனை நிமிர்ந்தும் பார்க்காமல் பாத்ரூமிற்குள் புகுந்து கொண்டாள் தாமரை. பின் மித்ரன் தன்னுடைய ரூமிற்கு சென்ற பிறகே குளித்து வெளியே வந்தாள். மித்ரன் கிளம்பி வருவதற்குள் இவள் கிளம்பி கீழே சென்றிருந்தாள்.

தாத்தாவிடமும் பாட்டியிடமும் எந்த வித தயக்கமுமில்லாமல் பழக முடிந்தது தாமரையால். யாரும் எதுவும் சொல்லாமலே குளித்து முடித்து பூஜையறையில் விளக்கேற்றி புடவையில் மங்களகரமாக இருந்த பெண்ணை அவர்களுக்கு மிகவும் பிடித்து போனதில் வியப்பொன்றும் இல்லையே. ராஜேந்திரனின் மனைவிக்கு பூஜையறை என்ற ஒன்று அவர்கள் வீட்டில் இருப்பதே தெரியுமோ தெரியாதோ… நொந்து போயிருந்தவர்களின் மனதிற்கு ஆறுதலாய் அமைந்தது தாமரையின் செய்கைகள்.

வேலைக்கென்று அத்தனை பேர் இருந்த போதும் இந்த வயதிலும் தானே சமையல் செய்யும் பாட்டியை ஆச்சர்யத்துடன் பார்த்திருந்தாள். “உனக்கு சமைக்க தெரியுமா தாமரை” என்று மெல்ல பேச்சு கொடுத்து, அவள் கூச்சத்தையும் தயக்கத்தையும் போக்கி அவளைத் தன்னுடன் இயல்பாக்கிக் கொண்டார் பாட்டி.

மித்ரன் கீழே இறங்கி வரும்போது டைனிங் ஹால் முழுக்க பேச்சும் சிரிப்புமாக இருந்தது. இளம் பச்சை நிறத்தில் மெரூன் கலர் பார்டர் வைத்த சில்க் காட்டன் புடவையில் தேவதையாக மிளிர்ந்த தாமரையை கண்களால் பருகிக் கொண்டே வந்தமர்ந்தான் மித்ரன். “மித்ரனுக்கும் போட்டுட்டு நீயும் சாப்பிடும்மா” என்று தாத்தாவும் பாட்டியும் நகர்ந்து விட்டனர்.

தாமரையையும் அலுவலகம் அழைத்து போவதாக பெரியவர்களிடம் கூறிவிட்டு இருவரும் கிளம்பினர். காரில் அமைதியாக வந்தவளிடம், “கதிர் அங்க இல்லைன்னாலோ, இல்ல எதாவது பேசினாலோ நீ அப்செட் ஆகாத தாமரை. மச்சானை நான் டீல் பண்ணிக்கிறேன்” என்றான். மச்சானா என்று விழி விரித்தவளிடம், “ஆமா உன் அண்ணன் எனக்கு மச்சான் தானே, நீ வேணா பாரு இன்னும் கொஞ்ச நாள்ல மாப்ள மாப்ளன்னு உங்க அண்ணனை என் பின்னாடி சுத்த வைக்கல என் பேர் மித்ரன் இல்லயாக்கும்” என்று அவன் சொன்ன பாவனையில் குபீரென்று சிரித்துவிட்டாள் தாமரை.

இருவரும் சற்று லகுவான மன நிலையிலேயே அலுவலகம் வந்து சேர, அங்கு கதிர் வந்திருக்கவில்லை. அணிச்சம் மலரென முகம் வாடிப் போனாள் பெண். அவள் முக வாட்டத்தை உணர்ந்து, அன்று முழுவதும் அவளை பிசியாகவே வைத்திருந்தான் மித்ரன். என்னவோ மறு நாளே அவள் கம்பெனியின் முழு பொறுப்பையும் ஏற்றுக் கொள்வது போல் ஒரே நாளில் அத்தனையும் சுத்திக் காட்டியும், விளக்கிக் கூறியும் முடித்தான். சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் அவளை வேறு எதுவும், எதைப் பற்றியும் சிந்திக்க விடாமல் செய்திருந்தான்.

தாமரை சீக்கிரமே சோர்ந்து போக மாலை சற்று விரைவாகவே வீடு திரும்பியிருந்தனர் இருவரும். “என்னடா ஒரே நாள்ல என் பேத்தியை ரொம்ப வேலை வாங்கிட்டியா? புள்ள சோர்ந்து போய்ட்டா” வாசலிலேயே மடக்கினர் தாத்தாவும் பாட்டியும். “பாட்டி அவங்கதான் இனிமே முதலாளியம்மா… ஒருவேளை எனக்கு வேலை சொல்லிக் களைச்சுப் போயிட்டாங்களோ என்னவோ” அலட்டிக் கொள்ளாமல் பதிலளித்தான். “ஆங் இல்ல பாட்டி ஒரே நாள்ல எல்லாத்தையும் சொல்லிக் குடுக்குறாங்க… எனக்கு இப்போ தலையெல்லாம் சுத்து து” பாவமாக சொன்னாள் தாமரை.

“அவன் கிடக்கான்மா, அவனுக்கும் நாந்தான் பிசினஸ் கத்துக் கொடுத்தேன், அவங்கப்பனுக்கும் நாந்தான் கத்துக் கொடுத்தென். உனக்கும் கொஞ்சம் கொஞ்சமா நான் சொல்லித் தரேன்” மதுராந்தகன் தாமரைக்கு பரிந்து கொண்டு வந்தார். மித்ரன் சிரித்துக் கொண்டே தாத்தா பாட்டி இருவரிடமும் கண் காட்டி விட்டு மாடிக்கு சென்று விட்டான்.

அவர்களும் கொஞ்ச நேரம் பேசி அவள் மனதை மாற்றி “போய் குளிச்சுட்டு வாம்மா, சாப்பிடலாம்” என்று அனுப்பி வைத்தார்கள். குளித்து முடித்து மித்ரனும் தாமரையும் ஒன்றாகவே த த்தம் அறைகளிலிருந்து வெளியே வந்தார்கள். மீண்டும் வேறு புடவையிலேயே வந்தவளைப் பார்த்து கேள்வியாய் புருவம் உயர்த்த, “இல்ல கீழே தாத்தா பாட்டி எல்லாரும் இருக்காங்க… அதான்….. ரூமுக்கு வந்துட்டு நைட் டிரஸ் மாத்திப்பேன்” என்று தயங்கி தயங்கி கூறினாள்.

பட்டென்று அவள் கைகளைப் பிடித்துக் கொண்டான் மித்ரன். “இந்த கல்யாணம் வேணா கடமைக்காக பண்ணதா இருக்கலாம், ஆனா நான் உன்னை கல்யாணம் பண்ணாம இருந்திருந்தா வாழ்க்கையில் பெருசா எதையோ இழந்திருப்பேன் தாமரை… இதை நான் வெறும் வாய் வார்த்தையா சொல்லலை…. மனசார உணர்ந்து சொல்றேன்… இவ்வளவு சீக்கிரம் என்னை இதை உணர வைச்சது கள்ளங்கபடமில்லாத உன் குணம் தான் தாமரை” கண்ணோடு கண் நோக்கி கூறியவன் அவள் விரல்களை தன் விரல்களோடு கோர்த்துக் கொண்டு கீழே சென்றான்.

இருவரும் கை கோர்த்து ஜோடியாக வருவதைக் காண காண திகட்டவில்லை பெரியவர்களுக்கு. இருவரையும் ஒன்றாக அமர வைத்து திருஷ்டி கழித்த பாட்டி, தாமரை தலையில் “நம்ம தோட்டத்து நித்யமல்லி மா வாசனையா இருக்கும் வைச்சுக்கோ” என்று கூறியபடி பூவை சூட்டினார்.

“இப்ப எதுக்கு பாட்டி இவ்வளவு பூ!! தூங்கும்போது வீணா கசங்கிப் போகும்… நான் காலையில வைச்சுக்கவா?” தாமரை கேட்கவும் சாப்பிட்டுக் கொண்டிருந்த மித்ரனுக்கு சட்டென்று புரை ஏறியது. அவனின் முதுகை நீவி விட்டுக் கொண்டே பாட்டியும், அவருடன் இணைந்து தாத்தாவும் சிரிக்க ஆரம்பிக்க, அப்பொழுதுதான் தாமரைக்கு தான் கூறிய வார்த்தையின் அர்த்தம் மெல்ல புரிவது போல் இருந்தது.

“இல்ல இல்ல நான் அப்படி சொல்லலை” வேகமாக எதையோ கூறவந்து பின் குரல் தேய்ந்து உள்ளே சென்றுவிட்டது. “இங்க யாரும் ஒண்ணும் சொல்லலை… சீக்கிரம் சாப்பிட்டு ரெண்டு பேரும் போய் படுங்க போங்க” தாத்தாவை கிளப்பிக் கொண்டு பாட்டி சென்றுவிட்டார்.

தாமரைக்கு தான் மெல்லவும் முழுங்கவும் முடியாத நிலை. மித்ரனின் பார்வையே மாறி இருந்தது. ஒட்டுமொத்த தாபத்தையும் கண்களில் வழியவிட்டு பார்த்திருந்தான். ‘என்ன இப்படி பாத்க்குறாங்க’ தாமரைக்கு வயிற்றுக்குள் பட்டாம்பூச்சி பறக்கும் உணர்வு. பேருக்கு ஏதோ கொறித்துவிட்டு எழுந்துவிட்டாள்.

இவள் படியேற பின்னோடு மித்ரனும் வந்தான். “நான் ரூமுக்கு போகட்டா” என்று கேட்டவுடன் ம்ம்ம் என்று தலையசைத்துவிட்டு அவன் அறைக்குள் சென்றுவிட்டான். இவள்தான் தயங்கி தயங்கி பார்த்துவிட்டு இவளின் அறைக்குள் நுழைந்தாள். இவள் திரும்பி கதவை சாற்றவும் மித்ரன் இவளைப் பின்னோடு சேர்த்து அணைக்கவும் சரியாக இருந்தது.

பயந்து கத்த போக “ஷ் தாமரை நாந்தான்” காது மடலில் உதடு உரசப் பேசினான். வெளிப்படையாகவே உடல் மொத்தமும் நடுங்க ஆரம்பிக்க, கால்கள் தொய்ந்து அவன் மேலேயே மொத்தமாக சாய்ந்தாள். “ஐ லவ் யூ தாமரை” அவள் முகத்தை நிமிர்த்தி கண்ணோடு கண் கலக்க விட்டு கூறினான். பெண்ணவளிடமிருந்து பதிலில்லை. “என்னைப் பிடிக்கலையா தாமரை?? நான் உன்ன எந்த விதத்திலாவது கட்டாயப் படுத்திட்டேனா??” கண்களில் உயிரைத் தேக்கி வினவினான்.

தாமரைக்கும் ஐ லவ் யூ சொல்ல ஆசைதான். ஆனால் வாயைத். திறந்தால் வெறும் காற்று தான் வந்தது. இவன் இத்தனைக் கேள்விகளையும் தன் கைவளைவுக்குள்ளே வைத்துக் கொண்டே கேட்டால், முதன் முறையாக ஒரு ஆணின் ஸ்பரிசம் அனுபவிப்பவளுக்கு என்னென்னவோ செய்தது. வாயிலிருந்து வார்த்தை வர மறுத்தது. இவளிடமிருந்து பதிலில்லாமல் போகவும், “சரி நீ தூங்கும்மா காலையில பார்க்கலாம்” என்று கூறிவிட்டு ஒரு பெருமூச்சுடன் நகர்ந்தான்.

அவன் விலகியது தாங்காமல் ஒட்டு மொத்த தெம்பையும் திரட்டி “மிரு அத்தான்” அழைத்தே விட்டாள் ஒருவழியாக. அவளின் அத்தான் என்ற அழைப்பிற்கே கிறங்கியவன், மிரு அத்தான் என்று செல்லப் பெயரிட்டு அழைக்கவும் மொத்தமாக மனம் மயங்கிப் போனது அவளிடம். “என்ன சொன்ன” காது மடலை நீவி விட்டுக் கொண்டே அருகில் வர, “இல்ல.. அது… வந்து…” திக்கி திணறியவளை இம்முறை மொத்தமாக கைகளில் அள்ளிக் கொண்டான்.

கண்களை இறுக மூடியிருந்தவளின் இமைகளில் ஆரம்பித்து நெற்றி, கன்னம் என்று மாறி மாறி முத்த ஊர்வலம் நடத்த, கடைசியாக இதழ்களை அடைந்ததும் அவள் சம்மதம் வேண்டி அவள் முகம் பார்த்தான்.

“தாமரை கண்ணை திறந்து என்னை பாரு”, “ம்ஹூம்” மறுப்பாக தலையசைத்தாள். “அப்போ நான் போகட்டா” என்று விலகப் பார்க்க, “மிரு த்தான்” என்று கூப்பிட்டுக் கொண்டே அவன் சட்டையை பிடித்து இழுத்து அவனை இறுக கட்டிக் கொண்டாள்.

மித்ரனைக் கட்டிக் கொண்டு அவன் நெஞ்சில் வாகாக முகம் புதைத்துக் கொண்டு தன் முதல் முத்தத்தையும் அவன் நெஞ்சிலேயே பதித்தாள் தாமரை. அந்த முத்தத்திலும், அவள் சூடியிருந்த நித்யமல்லி பூவின் வாசத்திலும், அவளின் மீரு த்தான் என்ற அழைப்பிலும் உண்டான போதையில் சுகமாக பயணிக்க ஆரம்பித்தான் மித்ரன். இனி தன் ஆயுள் முழுக்க மித்ரனின் மனம் தாமரையிடம் மயங்கி தான் இருக்கும்.
 

Sanshiv

Author
Author
SM Exclusive Author
#3
நானும் பிரியாணி எபி எழுதிட்டேன் @Zainab .... எழுத்து பிழை எல்லாம் பார்க்கல... தூக்கம் கண்ணை சொக்குது... எதுவாயிருந்தாலும் குணமா வாயில சொல்லுங்க, காலையில திருத்திக்கலாம்...
 

Sara saravanan

SM Exclusive
Author
SM Exclusive Author
#9
Super Sangeet.. romba கிளு kiluppaa இருக்க போகுதுன்னு கண்ணை மூடிக்கிட்டு படிச்சேன்.... But வெட்கம் வந்தது.... MMM அடுத்tha author ready..... 🤗
 

Advertisements

Latest updates

Top