Latest Episode Shanthini Doss 's Biriyani ??

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

shanthinidoss

SM Exclusive
Author
SM Exclusive Author
Joined
Jan 29, 2018
Messages
7,862
Reaction score
20,874
Points
113
Location
Thirunelveli
?❤ மனமே மயங்காதே..! ❤??

“ அபி பால் “ அவன் கையில் கொடுத்து பால்கனியில் போய் நின்றாள் அஞ்சலி..

போகும் அவளையே பார்த்திருந்தவன், “ அம்மணி கோபம் இன்னும் போகலை போலவே “ கையில் வைத்திருந்த பைலை மூடி வைத்து மெதுவாக அவளை நோக்கி சென்றான் அபி.

தொலைதூரத்தில் தெரிந்த தொடுவானத்தை பார்த்திருந்தாள் அவள்,

அவளுக்கு அபி பேசியதே நினைவில் வந்து இம்சித்தது,

“ கொஞ்சம் கணக்கு வழக்கு பார்க்கணும் அஞ்சலி “ இதை கூறும் பொழுது அவன் கண்களில் தெரிந்த கோபம், அவளுக்கே சிறு பயத்தை கொடுத்திருந்தது,

அப்பொழுது கூட அபி, அவளை முழு பெயரிட்டு அழைத்த சந்தோசம் அவள் முகத்தை விட்டு போயிருந்தது,

அப்படியே அபியின் முகத்தையே பார்த்திருந்தவள், அவனிடம் எதுவும் பேசாமல் நேராக காரில் சென்று அமர்ந்தாள்.

சிறிது நேரம் அந்த குடிலில் நின்றவன் காரை நோக்கி சென்றான். இவன் வரவும் முகத்தை வெளி பக்கமாக திருப்பிக் கொண்டாள் மனையாள்.

அவளின் கோபம் அவன் முகத்தில் புன்னகையை வரவழைப்பதாய், அவன் முகம் பார்ப்பதும், பின் திருப்புவதுமாக இருந்தாள்...

தன்னை சுற்றி மட்டுமே அவள் உலகம் என வாழ்பவளை தான் கஷ்டப்படுத்துவதாக இருந்தது, அவளுக்காக இரண்டு நாள் கழித்து பாக்டரி செல்வோம் என எண்ணியவன்,

மெதுவாக அவள் அருகில் நெருங்கி அமர்ந்தான், அவனை திரும்பி பார்த்தவள் மேலும் முகத்தை முழுதாக மேலும் திருப்பிக் கொள்ள, அவள் அருகில் மேலும் நெருங்கி அமர்ந்தவன் அவளின் இடையோடு கைகோர்த்து கொண்டான்,

இப்பொழுது அவன் முகத்தை முழுவதுமாக திரும்பிப் பார்த்தவள், முன்னால் டிரைவர் இருப்பதை பார்வையால் சுட்டிக்காட்டி, இடையில் இருந்து கையை எடுக்க கூற,

அவளை ஒரு பார்வை பார்த்தவன் மேலும் நெருங்கி அமர்ந்துகொண்டான்...

வெட்கத்தில் முகம் சிவக்க, வெளிப்புறம் பார்வையை திருப்பிக் கொண்டாள் வீடு வரும் வரைக்கும்,

வீட்டுக்கு வந்தவுடன் பாட்டி, தாத்தா, அம்மா என்று எல்லாரிடமும் பேசியவனை அப்படியே பார்த்திருந்தாள், பேச்சு கொஞ்சம் கொஞ்சமாக வெளியில் வந்துகொண்டிருந்தது,

இதனை நாள் பட்ட கஷ்டம் எல்லாம் ஒரே நொடியில் சரியானதைப் போல் உணர்ந்தாள்.

எத்தனை நேரம் அப்படியே தொடுவானத்தை பார்த்திருந்தாளோ தெரியாது,

“ அஞ்சலி “

மயிலிறகு போல் மென்மையாய் வருடிய அவனது குரலில் மெல்ல கண்களை அவனை நோக்கி திருப்பினாள்,

அவன் அவளையே தான் பார்த்திருந்தான்.

“ என்ன பண்ணுற அஞ்சலி “

“ அந்த நிலாவை என்ன பண்ணலாம்னு பார்த்திட்டு இருக்கேன் “ என்றபடி வானில் தோன்றிய நிலாவை மீண்டும் பார்த்தாள்.

“ அந்த நிலாவுகென்ன அழகாதானே இருக்கு “ என்றபடி தலையை கோதிக் கொண்டான்.

அவனை ஒரு நொடி திரும்பிப் பார்த்தவள், மீண்டும் வானையே பார்த்தாள்.

அவளையே ரசனையுடன் பார்த்துக் கொண்டிருந்தவன், “ இந்த நிலாவும் ரொம்ப அழகு தான் “ அவளது காதுக்கருகில் ஒலித்த குரலில், அவனை நோக்கி திரும்பியவள் அவன் முகத்தையே பார்க்க,

“ இப்போ இந்த நிலா இன்னும் அழகா இருக்கு “ குறும்பு குரலில் கூறியவனின் பார்வையில் ரசனையையும் தாண்டிய வேறு ஏதோ ஒரு உணர்வு இருந்தது.

அவனின் பார்வையை பார்த்தவள், “ அபி “ என்றழைக்க,

“ ம்ம் “ என்றபடி அங்கிருந்த கூடை ஊஞ்சலில் அமர்ந்துக் கொண்டான்,

“ உங்க கணக்கு வழக்கை கொஞ்சம் பொறுத்து பார்க்கலாமே..?” சிறு பயத்துடனேயே கூறினாள்.

அவள் முகத்தை பார்த்தவன் “ ம்ம், இங்க வா “ என அவளை நோக்கி கையை நீட்ட,

அவன் கையோடு, தன் கையை பிணைத்தவளை தன்னை நோக்கி இழுத்தவன் தன் மடியில் அமரவைத்து, அவளை தன் நெஞ்சோடு சேர்த்தணைத்து கொண்டான்,

அவளின் வலதுக் கையை தனது நெஞ்சில் வைத்து “ இங்க இப்போ முழுசும் நிறைந்து இருக்கிறது நீ தான், உன் மனசில் இருக்கிறது எனக்கு நல்லா தெரியும், எனக்காக நீ அத்தனையும் செய்யும் பொழுது உனக்காக இதை கூட செய்யமாட்டேனா.? “

உருக்கமான அவன் பேச்சில், பாவையவள் மயங்கி, உருகி தான் போனாள்.

அவன் நெஞ்சில் தன் தலையை சாய்த்தவள் “ ரொம்ப பயந்துட்டேன் அபி “ இறுக்க அணைத்துக் கொண்டாள்.

அவளை மேலும் தன்னோடு அணைத்தவன் “ அந்த நிலாவை ஏதோ செய்ய போறதா சொன்னியே “ என்றபடி வலதுக் கையை வானத்தை நோக்கி குறும்பு கண்ணனாய் கேட்டான்..

அவன் கையை தொடர்ந்து அவளும் பார்க்க, அந்த நிலவு இவர்களை பார்த்து கண்சிமிட்டிக் கொண்டிருந்தது,

அந்த நிலவையே பார்திருந்தவளை, இவன் ஒட்டுமொத்த காதலையும் கண்களில் தேக்கி ரசனையுடன் பார்க்க,

அவன் கண்களில் தோன்றிய காதலை கண்டவள் அதில் மயங்கி, அவளையும் அறியாமல் அவன் கன்னத்தில் தன் முத்திரையை பதித்திருந்தாள்.....

@@@@@@@@@@@@@@@

கடற்கரை சாலையில் தனது வண்டியை நிறுத்திய மித்ரன் காரில் இருந்து இறங்க, அவனை தொடர்ந்து தாமரை இறங்கினாள். பாக்டரியில் இருந்து நேராக இங்கு தான் வருகிறார்கள்.

ரொம்ப நாட்களுக்கு பிறகு கடற்கரைக்கு வருகிறாள் தாமரை, சில்லென்ற மாலை நேர கடற்காற்று அவளை ஓடி வந்து தழுவிக் கொள்ள, கைகளை மார்புக்கு நேராக கட்டிக் கொண்டு அந்த
 
shanthinidoss

SM Exclusive
Author
SM Exclusive Author
Joined
Jan 29, 2018
Messages
7,862
Reaction score
20,874
Points
113
Location
Thirunelveli
நேராக கட்டிக் கொண்டு அந்த மணலில் கால் புதைய நடந்தாள்,

அவளை புன்னகையுடன் பார்த்துக் கொண்டே, அந்த மணலில் அமர்ந்தான் மித்ரன். அவன் அருகில் வந்த இரண்டு நாட்களிலையே அவள் அவனுள் செய்த மாயங்கள் ஏராளம்,

அவள் கடல் அலையில் காலை நனைத்துக் கொண்டு நின்றிருந்தாள், அவளை பார்த்த அவனுள் ஏதோ ஓன்று எட்டிப் பார்த்தது, ( வண்ண பட்டாம்பூச்சி எட்டி பார்த்தது என்று வச்சுகோங்க.)

அழகாக புடவை கட்டி, தலையில் சூடியிருந்த ஜாதி மல்லி தன் நிறத்தை இழந்திருந்தாலும், அதன் வாசத்தை இன்னும் பரப்பிக் கொண்டிருந்தது, அவளின் அந்த அமைதியான அழகு அவனை அவள் பின்னே இழுத்துக் கொண்டிருந்தது...

முன்னால் எப்படி இருந்தானோ தெரியாது ஆனால், இன்று அவளுகென்று அவன், நினைக்கவே அத்தனை சந்தோசமாக இருந்தது,

இதுவரை அவள் அவனிடம் ஏதும் கூறவில்லை, அவனும் ஏதும் கேட்டுக் கொள்ளவில்லை,

அலையில் மனம் கொஞ்சம் சமாதானமடைய மித்ரனை நோக்கி அவள் வர, அவளுடன் அவனும் எழுந்து நடந்தான்...

தனது பாட்டியுடன் பேசிக் கொண்டிருந்த மித்ரன் மனதை புரிந்துக் கொண்ட ஜெயந்திக்கு அத்தனை சந்தோசமாக இருந்தது, பாட்டியை போல் மனைவியாக தாமரை அமைந்திருந்தாள்.

தன் அறைக்கு வந்தவன் யோசனையுடன் சுற்றிக்கொண்டிருந்தான், பாக்டரியில் நடந்தது அவனுக்கு தெரியவில்லை, அவளும் கூறவில்லை.. கதிர் என்ன கூறினான் என்றும் தெரியவில்லை...

அங்கிருந்து நேராக கடற்கரைக்கு தான் சென்றனர்... அங்கிருந்து வந்து தன் அறைக்கு சென்று உடை மாற்றியவள் ஹாலில் இருந்து பேசிக் கொண்டிருந்து நேராக தன் அறைக்கு சென்றிருந்தாள்...

நேற்று அவளிடம் பேசிக் கொண்டிருந்து அங்கயே தூங்கிய நினைவு வர, இப்பொழுது அவள் அறை வாசலில் நின்று கதவை தட்டினான்.

அவள் கதவை திறக்க, வெளியில் யாரும் இல்லாமல் போக, வாசலை விட்டு வெளியில் வந்து பார்த்தாள்.
யாரும் இல்லை எனவும் யோசனையுடன் கதவை பூட்டி உள் வர கட்டிலில் அவன் அமர்ந்திருந்தான் மித்ரன். அவள் வெளியே சென்ற கேப்பில் உள்ளே நுழைந்திருந்தான்,

அவனைப் பார்த்து அதிசயித்தவள் மெதுவாக அவனை நோக்கி வந்தாள், அவளை பார்த்தவன் மனம் வெகுவாக அவள் பின்னே சாய்ந்தது, இந்த பெண் ஏதோ மாயம் செய்கிறாள் என்றே அவனுக்கு தோன்றியது,

அவன் அருகில் வந்து அமர, அவளின் கையை பிடித்துக் கொண்டான் மித்ரன். மெதுவாக அவன் முகம் பார்க்க,

“ கதிர் என்ன சொன்னான் என்று தெரியாது, ஆனா இப்போ சொல்லுறேன், உன்னை பிடித்து சத்தியமா கல்யாணம் பண்ணல, ஆனால் இப்போ ஒவ்வொரு நொடியும் உன்னை பிடித்து உன் கூட வாழ ஆசைபடுறேன், உன் அண்ணன் ஏதாவது சொன்னான் என்று என்னை விட்டு போயிடமாட்டியே “ சிறு தவிப்புடன் கேட்டான்...

“ என்னாச்சு, என்ன பேச்சு இது “ அவன் நேற்று கூறியபடி கொஞ்சம் அதட்டலாகவே கேட்டாள்.. அவள் முகத்தையே பார்த்தான், அவன் முகத்தின் கேள்வியை கண்டவள் மனதில் பாக்டரியில் நடந்தது ஓடியது,

காலையில் இருவரும் பாக்டரி செல்ல, தாமரை மனதோ “ அண்ணன் வருவானா “ என்ற சிந்தனையில் இருந்தது, மித்ரனும் அதை பற்றி தான் சிந்தித்து கொண்டிருந்தான்.

“ அவன் வரவில்லை என்றால் பாவம் ஏமாந்து விடுவாளே..? “ அவனுக்கு தான் கஷ்டமாக இருந்தது.

மித்ரனுக்கு முன்னமே கதிர் பாக்டரி வந்திருந்தான், ஆனால் யாரையும் அவன் பார்க்கவில்லை எப்பொழுதும் போல் வந்து தன் வேலையை பார்த்திருந்தான்,

அங்கு வந்த மித்ரன் கதிர் வந்ததை அறிந்து, தாமரையை அழைத்துக் கொண்டு அவன் முன் விட்டு சென்றான்.. அண்ணனும், தங்கையும் பேசிக்கொள்ளட்டும் என்று,

“ அண்ணா “ மெதுவாக தாமரை அழைக்க,

அவளை ஏறெடுத்துப் பார்க்கவே இல்லை கதிர்...

“ அண்ணா அவர் ரொம்ப மோசமானவரா, அது தான் என்கிட்ட பேசாம இருக்கியா..? “ சிறுபிள்ளையாக கேட்டாள் அவள்..

உடனே விலுக்கென்று தலையை தூக்கியவன் “ என்னை விட அவர் கூட இருந்தா மட்டுமே நீ ரொம்ப சந்தோசமா இருப்ப “ மித்ரனை பற்றி நன்கு தெரியும் அவனுக்கு, மித்ரன் தனகென்று வந்தவளை அவனை விட நன்றாக பார்த்துக் கொள்வான் என்று தெரியும், ஏனோ சில காலம் தடம்மாறிவிட்டான் அவ்வளவே..

“ அப்போ எதுக்குண்ணா என்கிட்ட பேசாமலே இருக்க “

“ உன்கிட்ட பேசாமல் எல்லாம் இல்ல, கொஞ்சம் வருத்தம் மட்டும் தான், அதுவும் கூடிய சீக்கிரம் போயிரும் “ என்றவன் அதன் பிறகு அவளிடம் ஏதும் பேசாமல் வெளியில் சென்று விட்டான்..

மித்ரனிடம் கூறி முடிக்க அவன் அவள் முகத்தையே பார்த்திருந்தான் கொஞ்சம் சந்தோசமாய்... அப்படியே அவள் உள்ளங்கையில் அழுத்தமாய் இதழ்பதித்தான்...

மொத்தமாய் சிலிர்த்து போய் நிமிர்ந்தாள் அவள் “ மரக்கட்டை கண்ணம்மா நான், வாழ்கையிலே எல்லாம் இருந்தும் எதையே தேடி அலைந்தேன், சந்தோசம், துக்கம், வெற்றி, ஏமாற்றம் எல்லாத்தையும் அனுபவித்தேன், ஆனா எதுவும் என்னை பெரிசா பாதித்ததில்லை, நான் யார் கிட்டையும் தோத்து போக விரும்பினதில்லை, ஆனா முதல் முறையா உன்கிட்ட தோற்று போக விரும்புகிறேன், தோற்று போகிறேன் வாழ்கையில்
 
Suvitha

Well-known member
Joined
Jan 28, 2018
Messages
4,108
Reaction score
19,576
Points
113
Location
Tirunelveli
அந்த நிலாவைத்தான் நான் கையில புடிச்சேன் என் ராசாவுக்காக..
மூவ்மொண்ட் தான் போ:p
அபி-கீத்து part அருமை சாந்தினி செல்லம் :)
 
shanthinidoss

SM Exclusive
Author
SM Exclusive Author
Joined
Jan 29, 2018
Messages
7,862
Reaction score
20,874
Points
113
Location
Thirunelveli
பஸ்ட் டைம் "

இமைக்க மறந்திருந்தாள் அவள் “ குழந்தை மனம், அமைதியான அழகு, இப்படி உன் பின்னாலையே சுற்றி என்னை மீண்டும் காதலிக்க வச்சுட்டியே கண்ணம்மா “ அவள் கையை தனது இதயத்தின் மீது வைத்து சொன்னான் “ ஐ லவ் யூ கண்ணம்மா, என் இதயம் முழுவதும் நீயே நிறைந்து இருக்க கண்ணம்மா “

அவள் கண்களில் நீர் வழிந்தது, அவளுக்கு வார்த்தையே வரவில்லை,

“ அழறியா.. என்னாச்சு, என்னோட ப்ரோபோசல் அவ்வளவு கேவலமாகவா இருந்திச்சு “ கண்சிமிட்டலுடன் கேட்டான்.

“ போங்கத்தான் “ கண்ணீருடனே சிரித்தாள் “ நான் ரொம்ப சந்தோசமா இருக்கேன், இதையே தான் அண்ணனும் சொன்னான் “ அந்த நொடி அவளின் அத்தான் விளிப்பில் அவன் கண்கள் மயக்கத்தை காட்டின,

அவளை அப்படியே மடியில் சாய்த்துக் கொண்டான் அவன், அவளை இடையோடு அணைத்து கைகளில் அள்ளிக் கொண்டவன் அப்படியே அவள் கன்னத்தில் தன் இதழை பதித்தான், “ நான் இன்னைக்கு ரொம்ப சந்தோசமா இருக்கேன் கண்ணம்மா “ அவளிடம் மயங்கினான் அவன்,

அவன் கையில் என்ன இருக்கிறது, அதில் எப்படி, எங்கிருந்து இப்படி ஒரு நிம்மதி பிறக்கிறது அவளுக்கு புரியவே இல்லை, ஆனால் இரவு முழுவதும் அப்படியே இருந்து விட துடித்தது மனம்,

“ உனக்கு மட்டும் சொந்தம் என் இதழ் கொடுக்கும் முத்தம் ?

எனக்கு மட்டும் கேட்கும் உன் உயிர் உருகும் சத்தம் ?

உனக்கு மட்டும் கொடுப்பேன் என் ஆயுள் முழுக்க காதல் யுத்தம்? “

அவன் இதழ்கள் மெதுவாக முணுமுணுத்து கொண்டது.

@@@@@@@@@@@@@@@ மீதி உங்கள் கற்பனைக்கே @@@@@@@@@@@@

எப்படி இருந்தது என்று சொல்லுங்க.. பஸ்ட் ஹீரோ எனக்கு அபி தான்.. போன கதையில் மனதில் வில்லனாக வந்து அறிமுகமானவன், அடுத்து தான் மித்ரன், இவனும் வில்லனாக வந்து அறிமுகமானவன் தான்... ( ஹி..ஹி... வில்லனும் எனக்கு ஹீரோவே...)

என்னால் முடிந்த பிரியாணி.. இது என்னோட பிரியாணி கைப்பக்குவம் ( பொங்கலாக இருந்தாலும் பிரியாணியாக நினைத்து சுவைக்கவும் ) நன்றி..???
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top