• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Exclusive Short Stories (site day) Exclusive

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Status
Not open for further replies.

Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
பின்குறிப்பு : இதுவரைக்கும் சிறு கதை எழுதியதே இல்லை. முதல் முயற்சி. கதை மாறி இல்லன்னா கண்டுக்காதீங்க... உட்ருங்க...

என் கடவுள்

மூச்சு முட்டியது அவளுக்கு. எங்கும் ஒரே நிசப்தம்

. “எங்கே இருக்கிறேன் நான்?” நின்றபடியே அந்த இடத்தைச் சுற்றி பார்த்தாள் அவள். அழகாய் விசாலமாய் இருந்தது அந்த இடம். வரிசையாய் மேன்னாட்டு மக்களின் அணிவகுப்பு... மீண்டும், ‘எங்கே இருக்கிறேன் நான்?’ அவள் தன்னைத்தானே கேட்டுக் கொண்டாள். அப்போது அங்கிருந்த எல்லோரின் பார்வையும் அவளைத்தான் சுற்றி வந்தன... ஸ்தம்பித்து... அதே நேரம் சிலாகித்து...

அவர்கள் யாவரும் தன்னைத்தான் ரசிக்கிறார்கள் என்பதை உணர்தவளுக்கு உள்ளம் கொதித்தது. அவர்கள் எல்லோரையும் சுட்டெரிக்க எண்ணினாள். ஆனால் அது சாத்தியப்படவில்லை. அவள் கண்ணாடி பேழைக்குள் இருந்தாள். மீண்டும் மூச்சு முட்டியது.

அப்போது அவளைப் பார்த்து கொண்டிருந்தவர்கள் சிலர் தன் கரத்திலிருந்த கேமராவால் அவளைப் படம் எடுத்தனர். தோன்றி மறைந்த மின்னல் போன்ற ஒளியில் அதிர்ந்தவளுக்கு அப்போதே விளங்கியது. தான் நின்று கொண்டிருப்பது ஓர் அருங்காட்சியகம்.

அப்படியெனில் இனி எனக்கு அபிஷேகங்கள் இல்லையா? பிரசாதங்கள் இல்லையா? ஊதுபத்தியும் பூக்களும் கமழ மாலை சூட்டப்பட்டு மங்கலமாய் மணியோசை ஒலிக்க தீப ஆராதனைகள் இல்லையா?

அவளை எள்ளிநகையாடியது அவள் மனம்

‘அடியே! இது உன் தேசம் இல்லை. இவர்கள் யாரும் உன் பக்தர்கள் இல்லை. நீ நிற்கும் இடம் கோவிலும் இல்லை. இங்கே உனக்கு வழிபாடுகளும் இல்லை. அவர்களுக்கு நீ கடவுளும் இல்லை... வெறும் காட்சி பொருள்’ என்று

அப்படியே சிலையாய் நின்று விட்டாள். பதினோராம் நூற்றாண்டில் எம் சோழர் கால சிற்பியின் உளியில் உயிர் பெற்ற உமாதேவி.

கடவுளுக்காகப் பக்தன் காத்திருந்த காலம் போய் பக்தனின் வருகைக்காகக் கடவுள் காத்திருக்க... அவள் காத்திருப்பு வீண் போகவில்லை. ஓர் பக்தனின் பார்வை பட்டு சிங்கப்பூர் அருங்காட்சியகத்திலிருந்து அவள் இன்று மீட்டெடுக்கப்பட்டுவிட்டாள்..

ஆனால் இன்றும் நம்முடைய பல கடவுள்கள் வேற்றுத் தேசங்களில் உள்ள கண்ணாடி பேழைக்குள் மூச்சு முட்டிக் கொண்டிருக்கின்றனர். அவர்களை எல்லாம் யார்... எப்போது மீட்பது?

எங்கள் கடவுள்களை கடத்திச் சென்று உங்கள் நாட்டு அருங்காட்சியகளில் வைத்து ரசிப்பதற்குப் பெயர் கலை நயம் அல்ல. களவாணித்தனமாகும்.

click this link?To view
உமா தேவி சிலை வடிவம்


To comment. Click on this
 




Last edited:

karthika manoharan

அமைச்சர்
SM Exclusive
Joined
May 5, 2018
Messages
2,013
Reaction score
7,730
Location
namakkal
உயிர்​

ஆயிற்று இன்றோடு அவன் சென்று ஐந்து மாதம் பதினான்கு நாள்.......
ப்ரியா அன்று பேசியவள்தான் இதுவரை யாரிடமும் பேசவில்லை.....ஏன் அழக்கூட இல்லை....

அவன் கௌதம்....ஆணழகன், வீரன்...இதைவிட மரியாதைக்குரிய அடையாளம் பட்டாளத்தான்..... அதைச்சொல்லும்போது அவன் கண்களில் தெரியும் பெருமிதம் அளவிடமுடியாது....தன் தாயை எவ்வளவு நேசித்தானோ அதைவிட தாய்நாட்டின் மேல் அளவிடமுடியாத பற்று கொண்டவன்.....


ஆனால் தாய்நாட்டிற்கு இணையாக நேசித்த ஜீவனும் உண்டு...அவள்தான் ப்ரியா...அவன் உயிராக மாறியவள்.....பெற்றோர் பார்த்து முடித்துவைத்த திருமணம்...இருவருக்கும் பார்த்ததும் பிடித்தது....ஈருடல் ஓருயிராய் வாழ்ந்தனர்......ஒருமாதகால கல்யாண வாழ்க்கை போர் அறிவிப்பில் முடிவுக்கு வந்தது.....


அன்று பிரியாவிடை கொடுத்து செல்லும்போது.... கலங்கிய அவள் கண்களை பார்த்து.....ப்ரியா நீ உயிர் என்றால் தாய்நாடு என் மூச்சு...என்னால் பிரித்து பார்க்க முடியாது.....நீ வேறு நான் வேறல்ல.....உன் உயிரை என்னுடன் எடுத்து செல்கிறேன்... என்னுயிரை பத்திரமாக பார்த்துக்கொள்....போர் முடிந்து வரும் வரை காத்திரு....என்று அழுத்தமான இதழ்முத்தம் பதித்து சென்றவன்தான்.....


அவன் சென்ற இருபது நாளில் ப்ரியா கர்பமாக இருப்பதை அறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைந்தான்....ஆணோ, பெண்ணோ நம் குழந்தையையும் ராணுவத்தில் சேர்க்க வேண்டும்..என உறுதி கேட்டான்.... போர் முடிந்தால் குழந்தை பிறக்கும் சமயம் வருவதாக கூறினான்.....நான்கு மாதத்தில் போரும் முடிந்தது..அவனும் வந்தான் வெறும் உடலாக.!!!!!!!!!!!


இன்று ப்ரியாவிற்கு பிரசவ வலி வந்து மருத்துவமணையில் சேர்க்கப்பட்டிருந்தாள்.....வெளியில் உறவினர் கூட்டம் ஆவலாக காத்திருந்தனர்....அழகான ஆண்குழந்தை பிறந்தது......ப்ரியா இந்த ஐந்து மாதத்தில் இப்போதுதான் பேசினாள்....

தன் மைந்தனை பார்த்தவாறு....
"டாக்டர் என் குழந்தை எந்தவித ஊனமும் இல்லாமல் இருக்கிறானல்லவா?????....

ஏனம்மா ??? எல்லோரும் குழந்தை ஆணா, பெண்ணா என்று கேட்பார்கள்...நீ ஊனமாக இருக்கிறதா என்று கேட்கிறாய்.....என்று வினவினார்.

குழந்தையை மருத்துவரிடம் இருந்து வாங்கி.... மெல்ல அவனின் கை, கால்களை தடவிபார்த்து ...கண்களில் நீர் நிரம்ப தீர்க்கமாக மருத்துவரை பார்த்து...
போரில் என் கணவரின் உயிர் பிரிந்திருக்கலாம்....
என் கணவரின் உடல் வேண்டுமானால் இங்கு புதைக்கப்பட்டிருக்கலாம்....ஆனால் உயிர்!!!!!என் மகனை வளர்த்து ராணுவத்தில் சேர்ப்பேன்.......அவ்வாறு சேர்த்தால் அங்கு சுற்றிக்கொண்டிருக்கும் "என்னுயிர் அவரது உயிரை அங்கு கண்டால் பேருவகை கொள்ளும்"......அதுதான் என் லட்சியம்.....என்று கூறிய வீரமங்கையை பார்த்து மருத்துவர்க்கு மெய்சிலித்தது.....



வெயில், மழை,குளிர் இவற்றை பொருட்படுத்தாது எல்லையில் போர்புரிந்து நாட்டையும், நம்மையும் எதிரிகளிடமிருந்து காக்கும் வீரபுதல்வர்களுக்கும்..... அவர்களை வாழ்த்தி அனுப்பிவைக்கும் வீரத்தாய்மார்களுக்கும் வீரவணக்கம்....

- ஜெய்ஹிந்த்-
 




Last edited:

vanisha

Moderator
SM Exclusive
Joined
Feb 6, 2018
Messages
965
Reaction score
112,202
Location
anywhre
சக்களத்தி

“அப்பா!”

“என்னம்மா?” கைதொலைப்பேசியிலிருந்து பார்வையை நிமிர்த்தி மகளைப் பார்த்தான் சரவணன்.

“அம்மா இன்னும் சாப்படலப்பா”

“இன்னும் நான் என்ன செய்யட்டும்?”

“சாப்பிட வான்னு கூப்பிடுங்கப்பா! நேத்துல இருந்து அழுதுட்டே இருக்காங்க. நீங்க ஏன் அவங்கள ஏசுனீங்க?” தகப்பனை கேள்வி கேட்டாள் ஏழு வயது திவ்யா.

கணவன் மனைவி சண்டையை என்னவென்று மகளிடம் விளக்குவான் இவன். சின்னப்பிள்ளை மாதிரி அடம்பிடித்து சாப்பிடாமல் அழிச்சாட்டியம் செய்யும் மனைவி மேல் இன்னும் கோபம் வந்தது இவனுக்கு.

காலையில் இருந்து ரூமில் அடைந்துக் கிடக்கிறாள் மாதவி. சரி தானாகவே சமாதானம் ஆகட்டும் என இவனே காலை, மதியம் என இரு வேலையும் உணவு வாங்கி மகளையும் கவனித்துக் கொண்டான். தட்டில் உணவை இட்டு மகளை சமாதானப் புறாவாக்கி மனைவிக்கு கொடுத்து அனுப்பினான்.மாலை ஆகிவிட்டது இன்னும் அவளின் வனவாசம் முடிந்தப்பாட்டைக் காணோம்.

“மாது!”

அழுது ஓய்ந்திருந்தவளின் கண்கள் மீண்டும் கலங்கி வழிந்தது.
“நான் என்ன பண்ணிட்டேன்னு இப்படி விடாம அழறடி?”


அமைதிக்கெல்லாம் அமைதி.

“இப்ப வாயத் திறந்து பேசப் போறியா இல்லையா?”

“நான் எதுக்குப் பேசனும்? அதெல்லாம் உங்க கள்ளப் பொண்டாட்டிப் பேசுவா, காது குளிர கேளுங்க, கை குளிர தடவுங்க, கண் குளிர பாருங்க”

“மத்த பொண்டாட்டிங்களாம் அட்ஜஸ்ட் பண்ணிப் போகலையா? நீ மட்டும் ஏண்டி?”

“ஒன்னு அவ இந்த வீட்டுல இருக்கனும் இல்ல நான் இருக்கனும்! முடிவு பண்ணுங்க”

“படிப்படியா குறைச்சிக்கிறேன்டி மாது”

“அதெல்லாம் முடியாது. அவளால நமக்குள்ள எப்பவும் சண்டை. அவளை தடவுறதுல என்னைக் கண்டுக்கவே மாட்டறீங்க.”

“சரிடி இனிமே வீட்டுக்கு வந்தா உன்ன மட்டும் பார்க்கறேன், பேசறேன், தடவறேன் . இப்ப சிரி, அப்படியே வந்து சாப்பிடு பீச்சுக்குப் போலாம்.”
சமாதானமாகி சிரித்தாள் மாதவி. அவளின் சக்களத்தி, சரவணனின் கைத்தொலைபேசி பாவமாக கட்டிலில் விழுந்து கிடந்தது.


‘அடப்பாவி மக்கா! நான் என்னடா பண்ணேன்? என்னை நோண்டறது எல்லாம் நீங்க, கடைசில கெட்ட பெயர் எனக்கா?’


கமேண்ட் செய்ய

https://forum.smtamilnovels.com/index.php?threads/short-stories-site-day-discussion.5159/#post-221609
 




Last edited:

vidya narayanan

மண்டலாதிபதி
Joined
Apr 29, 2018
Messages
289
Reaction score
1,360
Location
Pondicherry
பொட்டில் அடித்தது:

ராகவன் சர் , சர்.......
வண்டியில் செல்லும்போது எதிர் புறத்தில் இருந்து சத்தம் வந்தது.
திரும்பினால் அங்கே விக்ரம் என்னை நோக்கி வந்து கொண்டு இருந்தார்.
அவர் எங்கள் முன்னாடி இருந்த பிளாட் யில் வேரா ப்ளாக் யில் இருந்தவர்.
சர் எப்படி இருக்கீங்க. விக்ரம் என் கையை பிடித்து கொண்டு கேட்டார்.
நன்னா இருக்கேன் விக்ரம் சர்.
எப்போ வந்தேள் துபாய் யில் இருந்து.ஒரு வருஷம் ஆச்சே உங்களை பார்த்து.
4 நாள் ஆகுது சர் வந்து. அப்புறம் அம்மா எப்படி இருக்காங்க ராகவன் சர்.
ஒரு நிமிடம் அமைதிக்கு பிறகு "ம்" என்றேன்.
அவங்களுக்கு ரொம்ப கடமை பட்டு இருக்கேன். உங்க அட்ரஸ் தெரியாம இருந்தது
ஊரில் இருந்து வந்தவுடன் பார்க்கணும் நினைத்தேன். நல்ல வேளை இப்போ பார்த்தேன் சர்.

ஏதாவது முக்கியமான விஷயமா விக்ரம்.
உங்களுக்கு தெரியாதா சர்.- என் மனைவி வேளையில் இருந்து வரும் போது 7.30 pm ஆகிடும்.அதுவரை என் குழந்தை நம்ம garden ல தான் விளையாடுவள்.
உங்கள் அம்மாவும் சாயங்காலம் அங்கே பெஞ்ச் இல் உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டே ஜபம் பண்ணுவாங்க போல.
ஒரு நாள் என் பொண்ணை அந்த ப்ளாக்கில் ஒரு காலேஜ் பையன் எதையோ கட்டுறேன் னு பின்னாடி கூட்டிண்டு போய் எப்படி சொல்லுவேன்
10 வயது பிஞ்சு குழந்தையை பாலிய ல்ல்கொடுமை பண்ணி இருக்கான்.
உங்கள் அம்மா தான் ஏதோ தப்பா தோன பொண்ணை தேடி போய் இருக்கா. பார்த்தவுடன் விட்டாங்க பாருங்க சர் ஒரு அடி கன்னத்தில்.
குழந்தை யை வீட்டில் விட்டுட்டு அவனுக்கும் புத்திமதி சொல்லி புரிய வைத்து இருக்காங்க.
அவனும் என் மனைவியிடம் அடுத்த நாள் மன்னிப்பும் கேட்டான்.
அதற்கு பிறகு தினம் எல்லா குழந்தைகளுக்கும் பாட்டு,ஸ்லோகம், கதை ,மூலமா நிறைய விஷயம், பாதுகாப்பா இருக்கறது பற்றி சொல்லி கொடுத்து இருக்காங்க.
என் மனைவியும் இந்த சம்பவத்திற்கு பிறகு இங்கு இருந்தா தொந்தரவு வா இருப்பாங்க னு இருந்த என்னுடைய அம்மா அப்பாவை ஊரில் இருந்து கூட்டி வந்துட்டா.
இப்போ நிம்மதியா இருக்கோம் சர்.பெண் பற்றியும், அம்மா அப்பா கவலையும் போயே போச்சு.
இதற்கு தான் உங்க வீட்டுக்கு என் குடும்பமா வரோம் சர் அம்மாவை பார்க்க.
"அம்மா " மனம் உத்திரம் சிந்தியது எனக்கு......
சரி விக்ரம் சர். வாங்கோ எப்போ வேணா ஆத்துக்கு. அட்ரஸ் msg அனுபறேன் னு விடை பெற்றேன்.
ஆனால் என் வண்டியோ நகர்ந்தது
விஷ்ராந்தி முதியோர் இல்லம் நோக்கி...
 




Jaa sha

மண்டலாதிபதி
Joined
Jul 28, 2018
Messages
301
Reaction score
1,103
Location
Karaikudi
தொல்லையான பேசி...

"அம்மா கண்டிப்பா என்னையும் கூட்டிட்டு போகனும் சரியா...

"அடியேய் சும்மா இருடி நீ வேர ...போ சொன்ன வேலைய பாரு மொதல்ல...

" அம்மோய் ய்ய் அடிச்சிருச்சு அடிச்சிருச்சு.....ஓடியா ஓடியா ...நான் முன்னால போறேன் சுந்தரியக்கா கூப்பிடுறாக...என்று பரந்து விரைந்து போகும் மகளோடு செல்லும் தனலட்சுமி முதல் முதல் தடவா தொலைபேசியில் தன் தம்பியோட பேசுவதற்கு செல்ல...
வந்த சேதி துக்கமாக அழுது புரண்டு உருண்டு குடும்ப மொத்தமா கிளம்பி போறாங்க அந்த கிராமத்துக்கு....

பஸ்ஸவிட்டு கூட இறங்கல ஆச்சர்யம்னாலும் ஆச்சர்யம் அடிச்சி புடிச்சு இறங்கி ஓடும் தனலட்சுமி...

காரணம் ..தனத்தோடு ஒன்னுவிட்ட அண்ணன் துரை இறந்துபோனதா வந்த சேதி கேட்டு அழுது கலங்கி தவிச்சு வந்து சேர ....

வரவேற்பா வந்து நிக்கிறாரு துரையே...

அவர் கையை பிடிச்சிகிட்டே அண்ணே உங்களுக்கு ஒன்னுமில்லயேனு தடவி தடவி பார்க்க...

அவரோ...அது எனக்கு ஆகாதவன் பார்த்த வேல ..தாயி..அம்புட்டு சனத்துக்கும் சொல்லி சொல்லி ஓய்ந்து போய் நிக்கிறேன் ...

...எனக்கு ஒன்னும் ஆகல ...அது சொல்லி கூப்பிட்டு போகதான் வந்தேனு சொல்ல...

அதோட விட்டுபோச்சு தனலட்சுமிக்கு ஆசையும் ...
தொல்லையா போன தொலைபேசியும்...
 




Soundarya Krish

முதலமைச்சர்
Joined
Sep 17, 2018
Messages
10,587
Reaction score
27,628
Location
Home Town
உழைப்பாளி
என்னோட பேரு மணி. தினமும் ஆறு மணிக்கு தொடங்கும் என் வேலை. நான் வேலை பார்க்கும் முதலாளி தான் அங்கிருக்கும் மக்களுக்கு நாட்டாமை. தினம்தினம் நூறுபேர் ஆயிரம் பிரச்சினைகளை கொண்டுவருவர். சில விசயங்கள் சிரிப்பளிக்கும். பல விசயங்கள் கோபமளிக்கும். சில விசயங்கள் வருந்தவைக்கும்.
இதில் நான் வெறுக்கும் விசயம் என்னன்னா ஒரு பத்துபேர் இருக்காங்க.. என் முதலாளிய பார்க்க வரும்பொழுதெல்லாம் என்னய முறைச்சு முறைச்சுபார்பாங்க. என்ன பன்றது நம்ம வேலை பார்க்கிற இடம் அப்புடி. அதிலயும் இரண்டு தில்லாலங்கடிங்க இருக்காங்க பாருங்க.. ஒற்றே அடிதாங்க என் முதலாளிக்கே கொ..ய்..ங்..குனு கேட்கும். ஆனாலும் அவர் கண்டுக்கமாட்டார். அதுனால நானும் அமைதியா வாங்கிகுவேன். (தலை இருக்கும்போது வால் ஆடலாமா) அதாங்க. இப்புடி சுமாரா போயிட்டு இருந்த என் வாழ்க்கையில ஒரு சூப்பர் விசயம் நடந்ததுங்க. அதாங்க என்னோட தேவதைய நான் பார்த்தேன். அவகிட்ட நான் என்ன பத்தி சொன்னதும் அவ அத கதையா எழுத அனுமதி கேட்டா. நானும் உனக்கில்லாத உரிமையானு ஓகே பன்னிட்டேன் அப்புடி வந்தது தான் இந்த கதை...... இது கதையல்ல என் ஓசை.. (மணியோசை)

இப்படிக்கு,
மணி@ கோவில்மணி,
பிள்ளையார் கோவில்,
அரசமரத்தடி,
உங்க ஊர்தாங்க.
பி.கு,
இந்த கதைய நான் என்னோட பாசைல தான் சொன்னேன். அந்த நல்ல உள்ளம் கொண்ட என் தேவதை தான் மொழிபெயர்ப்பு செஞ்சது... உனக்கெல்லாம் என்ன பாசைனு நீங்க திட்றது எனக்கு கேட்குது... வேறென்ன நம்ம பாசைதான்... டிங்....டாங்ங்ங்......

இது என்னோட முதல் முயற்சி... கதையா இதுனு நீங்க கேக்குறது புரியுது... மன்னிச்சு... இத படிச்சுட்டு கோபம் வந்தா என்ன ஏதும் பன்னாதீங்க.. உங்க வீட்டுகிட்ட இருக்குற பிள்ளையார் கோவிலோ பெருமாள் கோவிலோ.. அங்க இருக்கிற மணி ஓங்கி ஒரு அடி அடிச்சிறுங்க...(வேணுனா எனக்கும் சேத்து ரெண்டடி அடிங்க)
 




Last edited:

Aparna

அமைச்சர்
Joined
Jan 18, 2018
Messages
2,605
Reaction score
9,892
Location
Queen city
சீமந்தம்
"டிங் டிங் டிங்" அந்த கோவில் மணியின் சத்ததுக்கு இணையாக இதயம் மத்தளம் தட்டியது அவளுக்கு..

"ஆண்டவா, எத்தனை நாள் இந்த பேச்சை கேட்டுண்டு இருக்கிறது , எனக்கு விமோசனமே இல்லையா?"
கற்பூற ஜோதியில் இறைவனிடம் கரைந்து கொண்டிருந்தாள் அவள் ஜோதி...


கண்முன்னே வளையல் அலங்காரத்துடன் காட்சியளிக்கும் அம்பாளை ஒரு‌முறை கண்டு.. உவபில்லா புன்னகை சிந்தி,
"பார்போம் நீயா, நானான்னு"..என்று‌ தன் நித்தம் வேண்டுதலை சமர்பித்து..
பிரகாரத்தில் அமர்ந்தாள்...

கண்மூடி அமர்ந்தவளின் மடியில் ஒரு பிஞ்சு கை தட்டிக்கொண்டு பொக்கைவாயை காட்டி சிரித்தது..
சப்தநாடியும் அடங்கியது ஒருமுறை அவளுக்கு..

மேலும் அவள் மீது தவழ , ஒன்றும் புரியவில்லை.." ஆண்டவா ,யார் குழந்தை?தூக்கவா, தூக்கினா ஏதாவது சொல்லுவாங்களா" என்ற கலக்கம் சிந்தைக்கு மட்டுமே..

கண்களோ அப்பிஞ்சை இதமாக வருடி அனிச்சையாக கரங்கள் அள்ளியது அப்பொக்கிஷத்தை..

ஜொள்ளோடு அவள் கன்னத்தை முத்தமிடுகிறேன் என தேய்த்து.. கூறினாள் " ம்ம்மா"

சுமக்காமல் சுரக்குமா? இது சுறக்கிறதே.. மார்பிலோ விழியிலோ சுரக்க வைப்பது மனதன்றோ...

அம்மா கேட்காமலே கடைசேருவனோ என்ற தவித்த வார்த்தை அம்மா.. அழைப்பாரின்றி பலரின் அவல, அமில பேச்சையில் துவண்ட இதயத்துக்கு மயிலிறகாய் வருடிய வார்த்தை...

"ம்மா", என்ற மறு அழைப்பில் மறுதலித்த வாய் பூட்டு தன்னாலே அவிழ்ந்து கேட்டது.." என்னடா செல்லம்.."..

"ம்ம்மா" என்று மார்பில் முட்டினாள் கன்றென.., அடடா என்ன சுகம்.. குதுகலித்தாள் ஜோதி...

அடைமழையில் திடிர் காற்றென திசை திருப்பியது அக்குரல்.

"கண்ணம்மா இங்க இருக்கியா, தவழ்ந்து வந்துட்டாம்மா. என்னம்மா அப்படி பாக்குற,அவ பாட்டி நான்..என்ன தினமும் பார்பியே மறந்துட்டியா.சாமிக்கு கொண்டு வந்தேன் பரவாயில்லை இந்தா நீ போட்டுக்கோ,என ஒரு டஜன் கண்ணாடி வளையலை அடுக்கினார் அப்பெண்மணி "குழந்தை ஜோதியின் மடியில்..

மடி சுமக்க தாமதமானவளுக்கு சுகமானதொரு சீமந்தம்..வெளியே குழந்தையாய் உள்ளேயும் அதே கற்பூர ஜோதியுடன் சிரிக்கிறாள்..

"தெய்வம் மனித வடிவில்" , யாரோ கூறி சென்றனர்
 




KPN

அமைச்சர்
Joined
Mar 31, 2018
Messages
2,741
Reaction score
12,639
Location
Chennai
நாயின் பின்னால் ஒரு நாள்...

அதிகாலை எழுந்து... பால் காய்ச்ச அடுக்களைக்குள் நுழைந்த ஸ்வேதா... அடுப்பைப் பற்ற வைப்பதற்கு முன்... ஜன்னலைத் திறக்க... காற்றில் கலந்து அந்தத் துர்நாற்றம் அவளது முகத்தில் மோதி... வயிற்றைப் புரட்டியது...

"ஐயோ... எலியோ எதோ... கார் ஷெட்டில் செத்துப் போயிருக்கும் போல இருக்கே..." என்று எண்ணியவள்... கார் ஷெட் விளக்கைப் போட்டுவிட்டு அங்கே சென்று பார்க்க... அங்கே இருந்த தார் பாயில் அலங்கோலமாகப் படுத்திருந்தது ஒரு தெரு நாய்... அதன் மேல்தான் அப்படி ஒரு நாற்றம் அடித்துக்கொண்டிருந்தது...

முந்தைய தினம் மலையில் அந்த நாயைப் பார்த்ததும் அவளது நினைவில் வந்தது...
அதன் கழுத்து பகுதியில் எதோ காயம் பட்டு... அதன் எலும்பு வெளியில் தெரியும் அளவிற்குப் புரையோடிப்போய்.. அதிலிருந்து ரத்தமும் சீழுமாக கசிந்துகொண்டிருந்து...

தெருவில் இருக்கும் மற்ற நாய்களெல்லாம் அதை விரட்ட... அவர்கள் வீட்டு காம்பவுண்டுக்குள் நுழைய முற்பட்ட அந்த நாயை... அவர்களுடைய காவலாளி விரட்டிக்கொண்டிருந்தார்...

"மாணிக்கம்... அது பாட்டுக்கு ஒரு மூலைல படுத்துக்கட்டும்... விட்டுடுங்க..." என்று ஸ்வேதா சொல்ல...

"இல்ல மா... சார் திட்டுவாரு!" என்று மாணிக்கம் தயங்கவும்...
"பரவாயில்ல... நான்தான் சொன்னேன்னு சொல்லிடுங்க..." என்றுவிட்டு வேலையில் மூழ்கியவள் அதைப்பற்றி மறந்தே போனாள்...

அதை நினைத்துக்கொண்டே வீட்டிற்குள் வந்தவள்... வரவேற்பறையில் அமர்ந்திருந்த மாமனாரிடம் அதைப் பற்றி சொன்னவள்... "பாவமா இருக்குப்பா... எதாவது பண்ணனும்..." என்க...

அவர் அந்த நாயைப் பார்க்கவென அங்கிருந்து சென்றார்...

அதன் பின் வீட்டு வேலைகளில் மூழ்கியவள்... பிள்ளைகள் பள்ளிக்கூடம் சென்றதும்... தனது கைப்பேசியில் விலங்குகளைப் பராமரிக்கும் ஒரு தோண்டு நிறுவனத்தை... தொடர்பு கொண்டு விவரத்தைச் சொல்ல...

அவர்கள் இருப்பது... சென்னையின் புறநகர் பகுதி என்பதால்... அவர்களுடைய மீட்பு வாகனம் அங்கே வரத் தாமதம் ஆகும் எனவும்... அதுவரை... அந்த நாய் எங்கேயும் போகாமல் பார்த்துக்கொள்ளுமாறும் தெரிவித்தனர்...

அதன் பிறகுதான்... சோதனை ஆரம்பித்தது...

அவள் கிண்ணத்தில் வாய்த்த பாலைக்கூட அந்த நாயினால் சாப்பிட இயலவில்லை...

வலியில் துடித்துக் கொண்டிருந்த போதும்... அந்த நாய் ஒரு இடத்தில் நிற்காமல் அலைந்துகொண்டே இருந்தது... அந்தத் தொண்டு நிறுவன வாகனமும் வந்த பாடில்லை...

கையில் குச்சியுடன்...(மற்ற தெரு நாய்களிடமிருந்து தப்பிக்க) அன்று முழுதும் அதைக் கண்காணிப்பதே வேலையாகிப்போனது... ஸ்வேதாவிற்கு...
அவளுக்கு வேலை இருப்பின் அவளது மாமனார் அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்...

காத்திருந்து காத்திருந்து... இரவு ஒன்பது மணி ஆனது...
பிள்ளைகளெல்லாம் உறங்கிவிட... அவளைக் கிண்டல் செய்து ஓட்டி எடுத்தார் அவளுடைய கணவர்...

"அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா" என்று அதை எடுத்துக்கொண்டாள் ஸ்வேதா...

ஒன்பது மணிக்குப் பிறகு... அந்தத் தொண்டு நிறுவன (ஆம்புலன்ஸ்) வாகன ஓட்டுநர் கைப்பேசியில் அழைத்து... அங்கே வருவதாகவும்... அவர்கள் ஏரியா வர வழியையும் கேட்டுக்கொண்டார்...

மாமனாரும்... மருமகளும் வீதியிலே நின்றுகொண்டிருந்தனர்... பின்பு அவர்களுடன் ஸ்வேதாவின் அப்பாவும் சேர்ந்துகொண்டார்...

அந்த வாகனம் அங்கே வந்து சேரும்போது மணி பத்தரை...

அப்பொழுதுதான் ஆரம்பித்தது உண்மையான சோதனையே... சரியாக அந்த வாகனம் அங்கே வரும் நேரம்... எஸ் ஆகியிருந்தார் அந்த நாயார்...

இருட்டில்... டார்ச் லைட் உதவியுடன் அந்த நாயைத் தேடும் பணி தொடங்கியது...
ஒருவாறாக... அரைமணி நேரத் தேடுதல் வேட்டைக்குப் பிறகு... அடுத்த தெருவில்... அவர்களுக்குத் தெரிந்தவர் வீட்டில்... அந்த நாய் படுத்திருந்தது...

பின்பு அந்த நாயைக் கைப்பற்றி... அவர்கள் எடுத்துச் சென்றார்கள்...
பல நன்றிகளைச் சொல்லி... ஒரு சிறு தொகையை அவர்களுக்கு நன்கொடையாகக் கொடுத்தார் ஸ்வேதாவின் மாமனார்...

"அப்பாடி... இன்னைக்கு கார்த்தால அந்த நாயோட முகத்துலதான் முழிச்சேன்... இன்னைக்கு முழுக்க... அது பின்னாடியே அலைய வெச்சுடுத்து... இல்ல பா?" என்று ஸ்வேதா மாமனாரைக் கேட்க...

"ஆனா... அந்த நாயோட நல்ல நேரம்... அதுவும் உன் முகத்துலதான் முழிச்சுது... ஸ்வேதம்மா... அதுக்கு ஒரு போக்கிடம் கிடைச்சுடுத்து" என்று மெச்சுதலாகச் சொன்னார் பெரியவர்...

அனைத்தும் முடிந்து... ஒரு வழியாக வீட்டிற்குப் போய் உண்டு உறங்கினர்...
இரு தினங்கள் கடந்த நிலையில்... ஸ்வேதாவை அந்தத் தொண்டு நிறுவனத்திலிருந்து... கைப்பேசியில் அழைத்து... அந்த நாய் இறந்து போன தகவலைத் தெரிவித்தனர்...

இவ்வளவு பொறுப்புணர்வுடன் செயல்படும் அவர்கள் நிறுவனத்தின் மேல் ஒரு மரியாதையை ஏற்பட்டது அவளுக்கு...

அந்த நாயைக் காப்பாற்ற இயலாது என்பது... அவள் முன்பே அறிந்ததுதான்...
ஆனாலும்... உயிர் போகும் தருவாயில்... வலியுடன் அந்த நாய் பட்ட துன்பம்... அவள் மனதை வருத்தியது...

அங்கே இருந்த அந்த இரண்டு நாட்களும்... கண்டிப்பாக அதற்கு வலி நிவாரணி கொடுக்கப்பட்டிருக்கும்... ஒரே இடத்தில் அமைதியுடன் அதன் உயிர் பிரிந்திருக்கும்...

அதற்காகவே அவள் அந்த ஒரு நாள் முழுதும் மெனக்கெடலுடன் செயல்பட்டது...
ஒரு உயிர் அமைதியுடன் பிரிய தானும் எதோ செய்தோம் என்ற எண்ணத்தில் அவள் மனம் நிறைந்தது...

{பி.கு:
எல்லோரும் எழுதும்போது... நம்ம மட்டும் சும்மா இருந்தால் எப்படி... என்ற எண்ணத்தில்... கைகள் துருதுருக்க... வள வள (வள் வள்) என்று இந்த சிறு சம்பவத்தை... சிறு கதையாக எழுதியிருக்கிறேன்...
மொக்கையாக இருந்தால்... யாரும் என்னைத் திட்ட வேண்டாம்...
இத்துடன்... அந்த நாயை rescue செய்த காணொளி}

DOG Rescue video

Comments போட

https://forum.smtamilnovels.com/index.php?threads/short-stories-site-day-discussion.5159/page-4#post-227328
 




Last edited:

Venba

SM Exclusive
Author
Joined
Mar 25, 2018
Messages
1,217
Reaction score
3,967
Location
Coimbatore
கல்வி

“என்ன சார் நீங்க பையன் இப்ப டென்த் படிக்குறான்னு சொல்லறிங்க ஆனால் இன்னும் பிளஸ் ஒன்னுக்கு அட்மிசன் வாங்காம இருக்கீங்க?” என்று தன்னுடன் வேலை பார்க்கும் பழனியை சிங்காரவேலன் கடிந்து கொண்டிருந்தார்.
“இல்லை சார் அவன் இன்னும் பப்ளிக் எக்ஸாமே எழுதுல..ரிசல்ட் வந்ததுக்கு அப்புறம் தான அட்மிசன் வாங்கணும்..” என்று பழனி ஒன்றும் தெரியாதவராய் கேட்க “நீங்க எந்த காலத்துல இருக்கீங்க?இப்ப எல்லாம் டென்த் ஸ்டார்ட் ஆனா உடனே பிளஸ் ஒன்னுக்கு எல்லாரும் ஸ்கூல் தேட ஸ்டார்ட் பண்ணிருறாங்க...எந்த கோர்ஸ் படிக்கணுமோ அதுக்கு தகுந்த என்டரன்ஸ் கோச்சிங் எந்த ஸ்கூல்ல நல்லா தராங்களோ அந்த ஸ்கூல் செலெக்ட் பண்ணி அட்மிசன் போடறாங்க” என்று சொல்ல பழனிக்கு பக்கேன்றானது.
உடனடியாக JEE கோச்சிங் கொடுக்கும் ஒரு நல்ல பள்ளியை தேர்ந்தெடுத்தவர் இரண்டு ஆண்டுகளுக்கு 12 லட்சம் என்று அந்த பள்ளியில் சொன்னதும் சற்று யோசித்தார்.ஆனால் சிங்கராவேலனோ “ஏன் சார் அவன் நாளைக்கு ஐஐடில படிச்சான மாசம் சம்பளமே பல லட்சங்கள்ல வாங்குவான்...கம்மியா பீஸ் வாங்குற ஸ்கூல்ல எல்லாம் கோச்சிங் அவ்வளவு நல்லா இருக்காது...நீங்க காசைப் பத்தி யோசிச்சுட்டு இருந்திங்கான கடைசில ஒன்னுமே இல்லாத கவர்ன்மென்ட் ஸ்கூல்ல தான் சேர்த்தனும்.யோசிக்கமா பணத்தை கட்டி சேர்த்திவிடுங்க” என்று சொல்ல அவரும் தன் மகனை அங்கு சேர்த்து விட்டார்.
2 வருடங்களில் அவனுக்கு மொத்தமாக இருந்த விடுமுறைகளே வெறும் இருபது நாட்கள் தான்.எப்பொழுதும் படிப்பு எந்நேரமும் படிப்பு என்பதே அவனின் இரண்டு வருட வாழ்க்கையாக இருந்தது.போதக்குறைக்கு பழனி வேறு “தம்பி உன்ன நம்பி தான் பா 12 லட்சம் கட்டிருக்க..நல்லா படிச்சு எப்படியாவது ஐஐடி ல சீட் வாங்கிறனும்.அப்ப தான் வாழ்க்கை நல்லா இருக்கும்.இல்லன லைப்வே போச்சு” என்று அனுதினமும் சொல்ல அவனும் பயந்து கொண்டே படித்தான்.போதாக்குறைக்கு உற்றார் உறவினர் அக்கம் பக்கத்தினர் அனைவரும் “எப்படி தம்பி படிக்குற?நல்ல மார்க் வாங்கிருவியா?உங்க அப்பா உன்னை நம்பித் தான் அவ்வளவு காசு கட்டி படிக்க வைக்குறாரு” என்று அட்வைசை வாரி வழங்கினர்.
எண்டரன்ஸ் எக்ஸாம் ரிசல்ட் வந்ததும் தொலைக்காட்சியில் செய்தி ஒளிபரப்பானது “JEE எண்டரன்ஸ் எக்ஸாமில் தேர்ச்சி பெறாததால் கண்ணன் என்ற மாணவன் தூக்கிட்டு தற்கொலை” என்று.

அங்கே பழனி மகன் கடைசியாக எழுதி வைத்துச் சென்ற கடிதத்தை கட்டிக் கொண்டு அழுது கொண்டிருந்தார்.
“அன்புள்ள அப்பா,
என்னால முடிஞ்ச அளவுக்கு நானும் ஹார்ட் வொர்க் பண்ணி படிச்சா..பட் பெயில் ஆய்ட்ட...உங்க 12 லட்சத்தை வேஸ்ட் பண்ணதுக்கு சாரி..நீங்க பீஸ் கட்ட எவ்வளவு கஷ்டப்பட்டிங்கனு எனக்கு தெரியும்.ரிசல்ட் பார்த்த உடனே எனக்கு புரிஞ்சுருச்சு நான் எல்லாத்துலையும் அன்பிட்னு (UNFIT).எனக்கு லைப்வ பேஸ் பண்ணவே பயமா இருக்கு.சாரி ப்பா..
இப்படிக்கு,
கண்ணன்.

“அவன் தற்கொலைக்கு காரணம் அவனின் கோழைத்தனமா?
இல்லை படிப்பு மட்டும் தான் வாழ்க்கை என்று சொன்ன அவனின் பெற்றோரா?
இல்லை நிறைய பணம் கட்டிப் படித்தால் தான் நல்ல படிப்பு என்றும் சொல்லும் கல்வி நிலையங்களா?
இல்லை மதிப்பெண்ணை வைத்து அறிவை தீர்மானிக்கும் நம் சமூகமா?
இல்லை கல்வியை தனியார் மயமாக்கிய அரசாங்கமா?
யாம் அறியோம்”
 




Status
Not open for further replies.

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top